Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தியவர்கள் அரைகுறையில் விடுதலை செய்தது பிழை என்றுதான் கூறினாரம்: கொலை மிரட்டல் விடுக்கவில்லையாம்! கிஷோர் எம்.பி. தன்னிலை விளக்கம் .

Featured Replies

உதயன்", "சுடரொளி" ஆசிரியர் வித்தியாதரனுக்கு கூட்டமைப்பு எம்.பி. கிஷோர் கொலை அச்சுறுத்தல்!

."உதயன்", "சுடரொளி" ஆசிரியர் ந.வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை "சுடரொளி" பத்திரிகை அலுவலக தொலைபேசிக்கு வவுனியாவிலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி. இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு கொழும்பிலுள்ள "சுடரொளி" அலுவலகத்திற்கு வவுனியாவிலிருந்து 024 - 2222 068 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி., "சுடரொளி" பத்திரிகைக்கு தன்னை பற்றி செய்தி தருபவர் யார் என்றும் அதனை பிரசுரிப்பதற்கு அதிகாரம் தந்தவர் யார் என்றும் கடிந்துள்ளார். தொலைபேசியில் பதிலளித்த ஆசிரியர் பீட் உத்தியோகத்தர், பத்திரிகை ஆசிரியர் ந.வித்தியாதரன் தற்போது அலுவலகத்தில் இல்லை என்றும் இது விடயம் சம்பந்தமாக பேசுவதாயின் அவர் அலுகலகத்துக்கு வந்த பின்னர் அவருடன் பேசும்படியும் கூறியுள்ளார்.

மாலை 5.15 மணியளவில் ஆசிரியர் பீட தொலைபேசிக்கு 024 - 2222 706 என்ற இலக்கத்திலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி. ஆசிரியர் வித்தியாதரனுடன் பேசவேண்டும் என்று கோரினார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப்போது அங்கிருந்த ஆசிரியர் ந.வித்தியாதரனிடம் தொலைபேசி்க்கு இணைப்பு வழங்கப்பட்டது.

முதலில் பேசியது போலவே, தொலைபேசியில் சீறிவிழுந்த கிஷோர் எம்.பி. தன்னை பற்றி சுடரொளிக்கு செய்தி தருபவர் யார் என்றும் அதனை முன் பின் விசாரிக்காமல் வெளியிடுவதற்கு அதிகாரம் தந்தது யார் என்றும் தன்னை பற்றி இப்படி செய்தி வெளியிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று வினவிய அவர், தான் மற்றவர்களை போல மறைந்திருந்து காரியம் பார்ப்பவன் அல்லன் என்றும் பகிரங்கமாகவே பத்திரிகைக்கு எதிராக என்னவும் செய்யக்கூடியவன் என்றும் தன்னை பற்றி கூறியுள்ளார்.

பதிலை எதிர்பாரமலே பேசிக்கொண்டிருந்த கிஷோர் எம்.பியை இடைநிறுத்திய ஆசிரியர் ந.வித்தியாதரன், "மக்கள் பிரதிநிதியாகிய உங்களை பற்றிய செய்தியை பிரசுரிப்பதற்கு நாங்கள் யாருடைய அனுமதியையும் பெறவேண்டியதில்லை. அவ்வாறு நீங்கள் கூறுவது போல நாம் வெளியிட்ட செய்தியில் ஏதாவது பிழையிருப்பின், அது தொடர்பாக உங்கள் தரப்பு கருத்தினை முறையாக அனுப்பிவைத்தால், அதனை பத்திரிகையில் பிரசுரிப்பது பற்றி நிச்சயம் பரிசீலிப்போம்" - என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் வழங்கிய பதிலை அடுத்து மேலும் சினமடைந்த கிஷோர் எம்.பி. - "உன்னை கொண்டுபோனவர்கள் கொலை செய்திருக்கவேண்டும். விட்டுவிட்டார்கள். ஆனால், நான் அப்படியில்லை" - என்று சீறிவிழுந்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆசிரியர் ந.வித்தியாதரன், "நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இந்த உரையாடல் தற்போது பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உங்களுக்கு அறியத்தருகிறேன்." - என்று கூறிய மறு விநாடியே தொலைபேசியை வைத்துவிட்டார் கிஷோர் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தமது பத்திரிகையின் ஆசிரியருக்கு விடுத்துள்ள இந்த கொலை அச்சுறுத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முறைப்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்திரிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி

ஈழநேசன்

  • Replies 63
  • Views 5.3k
  • Created
  • Last Reply

சிங்ள ஆட்சியாளர்களை ஏன் குறைகூறுவான்.?

அப்ப அடுத்த குழு ரெடி... :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பழையகாலம் திரும்புது.பழையபடி தாதாக்களுக்கு பஞ்சமில்லாமல் வரப்போகுது.மின் கம்பத்தண்டனையால கொஞ்சம் குறைந்து இருந்தது.இப்ப பழையபடிவேதாளம் முரங்கை மரத்தில ஏறப்போகுது.

பரமசிவன் கழுத்தில் இருந்துகொண்டு பேசுவதாக நினைப்போ கிஷோருக்கு? ......மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குபவன் கதை தெரியும் தானே!

Edited by Aasaan

உதயன்", "சுடரொளி" ஆசிரியர் வித்தியாதரனுக்கு கூட்டமைப்பு எம்.பி. கிஷோர் கொலை அச்சுறுத்தல்!

இதற்கு பதிலளித்த ஆசிரியர் ந.வித்தியாதரன், "நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இந்த உரையாடல் தற்போது பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உங்களுக்கு அறியத்தருகிறேன்." - என்று கூறிய மறு விநாடியே தொலைபேசியை வைத்துவிட்டார் கிஷோர் எம்.பி.

பரவாயில்லையே! சிறியதோர் பயமும் இந்த தொடை நடுங்கி பயலுக்கு இருக்குது போல,

தமிழிலும் ஒரு மேர்வின் டி சில்வா,இல்லாவிட்டல் மகிந்த பொஸ் திட்டுவார்..ம்..ம் நடத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்தில் இருந்துகொண்டு பேசுவதாக நினைப்போ கிஷோருக்கு? ......மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குபவன் கதை தெரியும் தானே!

ஆசான், நான் இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் போது.......

நீங்கள் கூறிய பதிலைத்தான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே பதிந்து விட்டீர்கள்.

சிவநாதன் கிஷோர் இப்போ..... மகிந்தவின் தோளிலிருக்கும் நாகபாம்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக உதயன் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இச்சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், முன்னதாக நேற்றுக்காலை 11 மணியளவில் 024 2222068 என்ற வவுனியா தொலைபேசி இலக்கத்திலிருந்து "சுடர் ஒளி" கொழும்பு அலுவலகத்துடன் தொடர்புகொண்ட சிவநாதன் கிஷோர், ஆசிரியர் வித்தியாதரனை விசாரித்துள்ளார் என்றும், அச்சமயம் அவர் ஆசிரிய பீடத்தில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தமக்கு எதிராக "உதயன்", "சுடர் ஒளி"யில் விமர்சனச் செய்திகள் பிரசுரிக்கக்கூடாது என்ற தொனியில் ஆசிரிய பீட உறுப்பினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கின்றார். தாம் எதையும் பகிரங்கமாகவே செய்பவர் என்றும், மற்றவர்களைப் போல எதையும் ஒளித்துக்கொண்டு போய் அரசுடன் சேர்ந்து செய்பவரல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் பற்றிச் செய்தி வெளியிடுவதை நிறுத்தும்படியும் இறுக்கமான தொனியில் அவர் கூறினார். இந்த விடயம் குறித்து ஆசிரியர் அலுவலகத்துக்கு வந்த பின்னர் அவரிடம் கூறும்படி ஆசிரிய பீட பணியாளர் அவருக்குத் தெரிவித்தார் என உதயன் தெரிவித்துள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மீண்டும் மாலை 5.13 மணியளவில் 024 2222706 இலக்கத் தொலைபேசியில் இருந்து அவர் தொடர்புகொண்டார். அவரது கோரிக்கையின்படி ஆசிரியர் வித்தியாதரனுக்கு அவரது இணைப்பு கொடுக்கப்பட்டது. தம்மைப்பற்றிய செய்திகள் தருபவர் யார், தன்னைப்பற்றி செய்திகளை தனது முன் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற கடுந்தொனிப் பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார் கிஷோர்.

"பகிரங்கப் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் செயற்படுவோர் பற்றிய செய்திகள், தகவல்கள்வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவது அவசியமல்ல. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை; உரிமையுமில்லை. செய்திகள் தவறாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் ஆசிரியர்.

அதற்கு "உன்னைக் கொலை செய்யச் செய்திருக்க வேண்டும். கொல்லுவதற்கு ........"என்று அவர் மிரட்டும் தொனியில் பேச்சைத் தொடர்ந்தும், "தொலைபேசி உரையாடல் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றது. உங்களுக்கு விரும்பிய மிரட்டலை எல்லாம் கூறுங்கள்" என்றார் ஆசிரியர். அவ்வளவுதான். தொலைபேசி இணைப்பு உடனே சட் என்று துண்டிக்கப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து உரிய தரப்புகளிடம் முறைப்பாடு செய்ய "உதயன்", "சுடர் ஒளி" நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=301:qq-q-q------&catid=34:ceylonnews&Itemid=71

  • தொடங்கியவர்

கடத்தியவர்கள் அரைகுறையில் விடுதலை செய்தது பிழை என்றுதான் கூறினாரம்: கொலை மிரட்டல் விடுக்கவில்லையாம்! கிஷோர் எம்.பி. தன்னிலை விளக்கம் .

."உதயன், சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியல் வித்தியாதரனுக்கு தான் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. உம்மை கடத்தி சென்றவர்கள் அரைகுறையில் விடுதலை செய்ததுதான் பிழை என்றுதான் கூறினேன்" - என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

''லங்காசிறி'' இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். உதயன் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:-

'உதயன்', 'சுடரொளி' பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரனுக்கு நான் கொலை மிரட்டல் விடுத்தேன் என்ற வெளிவந்த செய்தி முற்றிலும் பொய்யானதாகும். அந்த செய்தியை நான் வன்மையாக மறுக்கிறேன். கடந்த சில வாரங்களாகவே - இந்த தேர்தல் காலத்தில் - என்னைப்பற்றியும் கூட்டமைப்பை பற்றியும் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன.

நேற்றைய தினமும் என்னை பற்றி விமர்சனம் என்ற ரீதியில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. இது சம்பந்தமாக சுடரொளி அலுவலகத்தை தொடர்புகொண்டபோது, "ஆசிரியருடன் பேசவேண்டும்" - என்று கேட்டபோது அவர் அங்கு இருக்கவில்லை. அவர் அலுவலகத்துக்கு வந்த பின்னர் என்னை தொடர்புகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் என்னை தொடர்புகொள்ளவில்லை.

பிற்பகல் 3.30 மணியளவில் நான் மீண்டும் தொடர்புகொண்டு "ஆசிரியர் வித்தியாதரனுடன் பேச வேண்டும்" - என்று கேட்டுக்கொண்டடேன். வித்தியாதரன் தொலைபேசி தொடர்புக்கு வந்தபோது, "எதற்காக என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறீர்கள்" - என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "அரசியல் என்று மேடைக்கு வந்தால் நாங்கள் விமர்சனம் செய்வோம். அதற்கு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது" - என்றார். அதற்கு நான், "என்னை தனிப்பட்டமுறையில் விமர்சிப்பதற்கு அருகதை இல்லை" - என்று கூறினேன். "நாங்கள் எல்லா அரசியல்வாதிகளை பற்றியும் செய்தி போடுவோம். அதேபோல் உங்களை பற்றியும் செய்திபோடுவோம். நீங்கள் நினைத்ததை செய்யுங்கள்" - என்று அதற்கு அவர் பதிலளித்தார்.

அதற்கு நான் பதிலளிக்கையில், "உம்மை கைது செய்துவிட்டு அரைகுறையில் விடுதலை செய்ததுதான் பிழை போல இருக்கிறது" - என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டேன். இவ்வாளவுதான் நடந்தது. நான் அவரை நான் அச்சுறுத்தவும் இல்லை. கொலை அச்சுறுத்தல் விடுப்பதற்கு நான் ஆயுதக்குழுவும் இல்லை இல்லை என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அரசியல் வாழ்வில் - இந்த தேர்தல் காலத்தில் - சேறும் பூசும் நடவடிக்கையாகவே நான் இதனை கருதுகிறேன் - என்று அவர் கூறினார்.

நன்றி

ஈழநேசன்

முது பெரும் அரசியல்வாதியான கிசோர் .......... இவரின் அரசியல் பிரவேசம் வெறும் சமாதான காலத்திற்கு பிந்திய காலமே.

மக்களின் செல்வாக்கில்லாததால், இவர் இப்படி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது விழுந்த செல்(லா) வாக்கை நிலை நிறுத்த முயற்சிக்கிறார் என கள தகவல்கள் கூறுகின்றன

Edited by சுனாமி

எப்படியாவது பிழைத்துகொள்ளப் பார்க்கின்றார்கள்,தமிழை என்ன மாதிரியெல்லாம் புரட்டி புரட்டி பேசலாம் தெரியும்தானே .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன மொக்கு மாதிரி நடந்திருக்கிறார்..பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி எடுத்தவர் அவர்கள் குரலை ஒலிப்பதிவு செய்வார்கள் என ஏன் யோசிக்கவில்லை...அதுவும் இரண்டாவது தடவை எடுத்து மிரட்டியிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்தியவர்கள் அரைகுறையில் விடுதலை செய்தது பிழை என்றுதான் கூறினாரம்: கொலை மிரட்டல் விடுக்கவில்லையாம்! கிஷோர் எம்.பி. தன்னிலை விளக்கம் .

."உதயன், சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியல் வித்தியாதரனுக்கு தான் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. உம்மை கடத்தி சென்றவர்கள் அரைகுறையில் விடுதலை செய்ததுதான் பிழை என்றுதான் கூறினேன்" - என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அதற்கு நான் பதிலளிக்கையில், "உம்மை கைது செய்துவிட்டு அரைகுறையில் விடுதலை செய்ததுதான் பிழை போல இருக்கிறது" -

அப்ப எது சரி?

பேச்சு பதிவு செய்யப்படுவதை தெரிந்தவுடன் உரையாடலை நிறுத்திய நோக்கம்?

சென்ற வருடம் இறம்பைக்குளம் மகளிர் பாடசாலைக்கு அடாவடித்தனமாக புகுந்து தனது மகள் மட்டக்களப்பிற்கு ஓடுவதற்கு உதவியவர் என்று குற்றம் சாட்டி மாணவர்கள் முன்னிலையில் பெண் ஆசிரியை ஒருவரை அடித்த உத்தமர் இவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம்... இவர் தமிழருக்கு எவ்வளவோ செய்து சாதனை படச்சவர்.... அது என்ன எண்டு மட்டும் அவரை கேட்டு போடாதீங்கோ.... ஏனென்டால் அவருக்கே தெரியாது.... குடும்பத்துக்கு அரசாங்க வேலை எடுத்து கொடுப்பதும்... லஞ்சம் வாங்கி தாய் லாந்தில வீடு வாங்கி போடுரதுமா இருக்கிறார் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாரும் சம்பந்தர் பற்றி பேசுவார்கள் என்று நினைத்து ஏமாந்து விட்டேன். பறவாயில்லை. நேரமா வராமல் போய்விடும்?? :lol:

நீங்கள் விமர்சிக்கும் உந்த எம்.பீ மாரெல்லாம் உங்களின் ஆசீர்வாதத்துடன் தானே எம்,பீ யாக வந்தார்கள்.அவர்களை அந்த நேரமே இனம் காண முடியாவிட்டால் உங்களுக்கு ஏனையா அரசியல்.உதே மாதிரித்தான் இன்னும் 4,5 வருடம் போக உந்த புலம்பெயர் அரசு கூட்டத்தையும் வையப்போகின்றீர்கள்.

அந்தந்த நேரத்தில் அவனவனை அளவிடுவதுதான் கெட்டித்தனம் அதுக்கு கொஞ்சம் மேல இருக்க வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

சில கருத்துக்களை வைப்பதன் ஊடாக பலரின் விமர்சனத்தை நான் பெறுவேன் என்று நினைக்கின்றேன். கிசோர் என்பவர் தான் விரும்பி அரசியலுக்குள் வந்தர் அல்லர். தமிழீழ விடுதலைப்புலிகளினால் இணைக்கப்பட்டவர். அது மட்டுமன்றி அதற்க்கு முன்னர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மக்களுக்கு நிறையவே செய்துள்ளார். முகம் தெரியாதா நீங்களும் நானும் அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீச முடியும். துரோகியாக்கி நடு ரோட்டில் விட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நாளை அவருக்கு போட்டியிடும் சந்தர்பத்தை வழங்க மறுத்தாலும் கிசோரின் தேர்தல் வெற்றி என்பது வவுனியா வாழ் மக்களின் வாக்குகளால் நிச்சயிக்கப்படும். அதற்காக அவர் நிறையவே செய்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஓரளவுக்காவது மக்களோடு வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர், அவர்களது பிரச்சினைகளுக்குள் தன்னை உள்வாங்கி கொண்டவர். அது மட்டுமன்றி அவரது பேச்சை மக்களுக்கு நன்றாகவே தெரியும். சம்பந்தர் ஐயாவை போற்றும் உதயன் கிசோர் பற்றிய விமர்சனங்களை ஏன் முன்வைக்கின்றது என்பதையும் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். கிசோர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்ப்படுகின்றார் என்று சொல்லும் வித்தியாதரன் போன்றோர் இப்போது யாரின் நிழலில் இருக்கின்றனர் என்பதையும் வெளிச்சத்துக்கு கெண்டு வருதல் நன்று.

இது கிசோருக்கான வக்காலத்து அல்ல. குறிப்பிட்ட கால பகுதில் நானும் அந்த பிரதேசத்தில் வாழ்ந்தவன் என்ற வகையிலும், மக்களுக்கான, தேசியத்துக்கான பணிக்காக கிசோர் சிறை சென்றதையறிந்தவன் என்ற முறையிலும் எழுதுகின்றேன்.

தமது விருப்பு வெறுப்புக்களுக்குள் ஊடகங்கள் தனிநபர்களை இழுத்து வசைபாடுவதே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் காரணமாகின்றது. இத்தனை தமிழ் இணையங்கள், ஊடகங்கள் கிசோரின் மிரட்டல் தொடர்பான செய்தியை வெளியிட்ட போது அவர் சார்ந்த விளக்கங்களை கேட்காமையிலிருந்தே நாம் எங்கிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

இனம் கண்டு தண்டனை கொடுத்தவர்கள் இல்லாத படியால் தான் உந்த விளையாட்டு.

இப்ப எல்லாரும் பேசுகினம். சுதந்திரம் பற்றி.

உங்க வெளிநாட்டில இருந்து போய் வந்த நாலு பேர் சொல்லுகினம். அதுகள் சந்தோசமாக இருக்குதுகள். இனியாவது அதுகளை சும்மா இருக்க விடுங்கோவாம்.

சுதந்திரம் கிடைத்தது என்று கூடி பாடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களை கொன்று அழித்தவனைக் கட்டிப் பிடித்து வாழ்த்துச் சொன்னதுதான் தமிழ் மக்களுக்குச் செய்த சேவையோ?பத்திரிகையாளரை மிரட்டியிருக்கிறார் அல்லது மிரட்ட நினைத்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.பேச்சு பதிவு செய்யப்படுகின்றது என்றவுடன் தொலைபேசி அழைப்பை துண்டித்ததில் இருந்து என்ன பேசியிருப்பார் என்பது புரிகிறது.

வணக்கம்,

சில கருத்துக்களை வைப்பதன் ஊடாக பலரின் விமர்சனத்தை நான் பெறுவேன் என்று நினைக்கின்றேன். கிசோர் என்பவர் தான் விரும்பி அரசியலுக்குள் வந்தர் அல்லர். தமிழீழ விடுதலைப்புலிகளினால் இணைக்கப்பட்டவர். அது மட்டுமன்றி அதற்க்கு முன்னர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மக்களுக்கு நிறையவே செய்துள்ளார். முகம் தெரியாதா நீங்களும் நானும் அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீச முடியும். துரோகியாக்கி நடு ரோட்டில் விட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நாளை அவருக்கு போட்டியிடும் சந்தர்பத்தை வழங்க மறுத்தாலும் கிசோரின் தேர்தல் வெற்றி என்பது வவுனியா வாழ் மக்களின் வாக்குகளால் நிச்சயிக்கப்படும். அதற்காக அவர் நிறையவே செய்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஓரளவுக்காவது மக்களோடு வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர், அவர்களது பிரச்சினைகளுக்குள் தன்னை உள்வாங்கி கொண்டவர். அது மட்டுமன்றி அவரது பேச்சை மக்களுக்கு நன்றாகவே தெரியும். சம்பந்தர் ஐயாவை போற்றும் உதயன் கிசோர் பற்றிய விமர்சனங்களை ஏன் முன்வைக்கின்றது என்பதையும் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். கிசோர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்ப்படுகின்றார் என்று சொல்லும் வித்தியாதரன் போன்றோர் இப்போது யாரின் நிழலில் இருக்கின்றனர் என்பதையும் வெளிச்சத்துக்கு கெண்டு வருதல் நன்று.

இது கிசோருக்கான வக்காலத்து அல்ல. குறிப்பிட்ட கால பகுதில் நானும் அந்த பிரதேசத்தில் வாழ்ந்தவன் என்ற வகையிலும், மக்களுக்கான, தேசியத்துக்கான பணிக்காக கிசோர் சிறை சென்றதையறிந்தவன் என்ற முறையிலும் எழுதுகின்றேன்.

தமது விருப்பு வெறுப்புக்களுக்குள் ஊடகங்கள் தனிநபர்களை இழுத்து வசைபாடுவதே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் காரணமாகின்றது. இத்தனை தமிழ் இணையங்கள், ஊடகங்கள் கிசோரின் மிரட்டல் தொடர்பான செய்தியை வெளியிட்ட போது அவர் சார்ந்த விளக்கங்களை கேட்காமையிலிருந்தே நாம் எங்கிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

கிசோர் செய்தது எல்லாம் பிராட்டு வேலை. போராட்டத்தின் போது தேவைப்பட்ட கள்ளவேலைகளை செய்தவர். அதன் நன்றி கடனாக தான் வவுனியா அரசியல் பிரவால் சந்தர்ப்பம் கொடுத்து தமிழீழ அரசியல் பிரிவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்தேசீய கூட்டமைப்பில் சந்தர்ப்பம் வாங்கி கொடுக்கபட்டது.

இப்ப அவர்கள் இல்லை என்றவுடன் தனது மமதையை காட்டுவது தவறு.

வணக்கம்,

சில கருத்துக்களை வைப்பதன் ஊடாக பலரின் விமர்சனத்தை நான் பெறுவேன் என்று நினைக்கின்றேன். கிசோர் என்பவர் தான் விரும்பி அரசியலுக்குள் வந்தர் அல்லர். தமிழீழ விடுதலைப்புலிகளினால் இணைக்கப்பட்டவர். அது மட்டுமன்றி அதற்க்கு முன்னர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மக்களுக்கு நிறையவே செய்துள்ளார். முகம் தெரியாதா நீங்களும் நானும் அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீச முடியும். துரோகியாக்கி நடு ரோட்டில் விட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நாளை அவருக்கு போட்டியிடும் சந்தர்பத்தை வழங்க மறுத்தாலும் கிசோரின் தேர்தல் வெற்றி என்பது வவுனியா வாழ் மக்களின் வாக்குகளால் நிச்சயிக்கப்படும். அதற்காக அவர் நிறையவே செய்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஓரளவுக்காவது மக்களோடு வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர், அவர்களது பிரச்சினைகளுக்குள் தன்னை உள்வாங்கி கொண்டவர். அது மட்டுமன்றி அவரது பேச்சை மக்களுக்கு நன்றாகவே தெரியும். சம்பந்தர் ஐயாவை போற்றும் உதயன் கிசோர் பற்றிய விமர்சனங்களை ஏன் முன்வைக்கின்றது என்பதையும் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். கிசோர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்ப்படுகின்றார் என்று சொல்லும் வித்தியாதரன் போன்றோர் இப்போது யாரின் நிழலில் இருக்கின்றனர் என்பதையும் வெளிச்சத்துக்கு கெண்டு வருதல் நன்று.

இது கிசோருக்கான வக்காலத்து அல்ல. குறிப்பிட்ட கால பகுதில் நானும் அந்த பிரதேசத்தில் வாழ்ந்தவன் என்ற வகையிலும், மக்களுக்கான, தேசியத்துக்கான பணிக்காக கிசோர் சிறை சென்றதையறிந்தவன் என்ற முறையிலும் எழுதுகின்றேன்.

தமது விருப்பு வெறுப்புக்களுக்குள் ஊடகங்கள் தனிநபர்களை இழுத்து வசைபாடுவதே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் காரணமாகின்றது. இத்தனை தமிழ் இணையங்கள், ஊடகங்கள் கிசோரின் மிரட்டல் தொடர்பான செய்தியை வெளியிட்ட போது அவர் சார்ந்த விளக்கங்களை கேட்காமையிலிருந்தே நாம் எங்கிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

உங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்... கைது செய்யப்பட்ட போராளிகளின் குடும்பங்களுக்கு முகம் சுளிக்காமல் உதவும் ஒரே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியும் கிசோர் மட்டுமே... எல்லா விடயங்களையும் அவரால் செய்து கொடுக்க முடிந்தது எண்று சொல்ல வரவில்லை... ஆனால் முயற்சி செய்கிறார்... இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார் அதனால் சிங்கள இராணுவத்தோடு விட்டுக்கொடுப்புடனும் செயற்படுகிறார்...

தமிழ்மக்களை கொன்று அழித்தவனைக் கட்டிப் பிடித்து வாழ்த்துச் சொன்னதுதான் தமிழ் மக்களுக்குச் செய்த சேவையோ?பத்திரிகையாளரை மிரட்டியிருக்கிறார் அல்லது மிரட்ட நினைத்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.பேச்சு பதிவு செய்யப்படுகின்றது என்றவுடன் தொலைபேசி அழைப்பை துண்டித்ததில் இருந்து என்ன பேசியிருப்பார் என்பது புரிகிறது.

போனதடவை தேர்தலின் போது ( கைது செய்யப்பட்ட) போராளிகளின் முகாமில் டெங்கு காய்ச்சல் பரவி இருந்தது... இராணுவத்தினர் தேர்தல் முடியும் வரையும் போராளிகளை வைத்திய சாலைக்கு அழைத்து செல்வது முடியாதது எண்று பெற்றோருக்கு சொன்னனர்... அந்த பெற்றோர் போய் நிண்றது கிசோரின் அலுவலக/ வீட்டு வாசலில் தான்... அதன் பின்னர் தான் வைத்தியர்கள் முகாம்களுக்கு செண்று பார்வை இட வசதி செய்து கொடுக்க பட்டது...

இதுகளை செய்ய வேண்டும் எண்டால் மகிந்தவையோ இராணுவத்தையோ முறைத்து கொண்டு நிற்பதினால் ஆகப்போவது இல்லை...

அப்பிடி என்றால் சம்பந்தர் செல்கின்ற வழியும் சரியானதே?மகிந்தரோடு சேரந்து நின்று மக்களுக்கு உதவட்டுமே! டக்ளஸ் செய்ததும் சரியே 1குரணா பிள்ளையான் செய்வதும் சரியே!

அப்பிடி என்றால் சம்பந்தர் செல்கின்ற வழியும் சரியானதே?மகிந்தரோடு சேரந்து நின்று மக்களுக்கு உதவட்டுமே! டக்ளஸ் செய்ததும் சரியே 1குரணா பிள்ளையான் செய்வதும் சரியே!

இதிலையும் இரண்டு விதம் இருக்கிறது ஒண்டு பதவிக்காக விட்டு கொடுத்து போவது... மற்றது எதையாவது வாங்கி கொடுக்க விட்டுக்கொடுப்பது... கிசோர் இரண்டு வகையிலும் அடக்கமாக கூட இருக்கலாம்...

மக்களுக்கு இந்த நாள் வரைக்கு அவரசாங்கத்திட்டை இருந்து வாங்கி கொடுக்க நினைக்காத சம்பந்தருக்கும், கிசோருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.