Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்டுக்கால் சூப்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆட்டுக்கால் சூப்.

pernil.jpgrasam2.jpg

தேவையான பொருட்கள்;

ஆட்டின் பின் கால்கள் இரண்டு.

மூன்று பெரிய வெங்காயம்.

6 செத்தல் மிளகாய்.

பதினைந்து உள்ளி.

50 கிராம் மல்லி.

இஞ்சி .

மிளகு.

பெருஞ்சீரகம்.

தக்காளிப் பழம் ஒன்று.

எலும்பிச்சம் பழம் ஒன்று.

சிறிது மஞ்சள் தூள்.

உப்பு.

செய் முறை;

ஆட்டின் கால்களில் உள்ள இறைச்சியை நீக்கி விட்டு, அதன் கால்களை சிறு துண்டுகளாக பெரிய கத்தியால் வெட்டவும்.

அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லீற்றர் தண்ணீரும் , உப்பும் போட்டு நன்கு அவிய விடவும்.

வெங்காயத்தை நீளமாக சிறு துண்டுகளாக வெட்டவும்.

செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

மல்லி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை கிறைண்டரில் சாதுவாக அரைக்கவும்.

உள்ளி, இஞ்சியை ஒரு பலகையில் வைத்து சிறிது நசிக்கவும்.

இப்போ கொதித்த ஆட்டுக்காலுக்குள், நீங்கள் மேற்கூறிய பொருட்களை போட்டு அரை மணித்தியாலம் மெதுவான சூட்டில் கொதிக்க விட்டு..... மிதமான சூட்டுடன் இந்த ஆட்டுக்கால் சூப்பை குடிக்கவும்.பரிமாறும் போது புளி விட்டு பரிமாறவும்.

இந்த சூப் தடிமன், தலைப்பாரம் போன்றவற்றிற்கு அருமையான மருந்து.

முக்கிய குறிப்பு: இதனை லீவு நாட்களில் செய்து குடிப்பது நல்லது.

ஏனென்றால் உள்ளி போடுவதால், வேலை இடங்களில் உள்ளியின் வாசனை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

.

தேவையான பொருட்கள்;

ஆட்டின் பின் கால்கள் இரண்டு.

:)

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்காலில் ஏதாவது பிரச்சினை இருக்குமோ? :)

சூப்புதந்த அண்ணனுக்கு சூப்பர் வணக்கமும் நன்றியும்.

Edited by சித்தன்

முக்கிய குறிப்பு: இதனை லீவு நாட்களில் செய்து குடிப்பது நல்லது.

ஏனென்றால் உள்ளி போடுவதால், வேலை இடங்களில் உள்ளியின் வாசனை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

உள்ளியின் மகிமை அப்படி. உள்ளியின் வாசனை பிடிக்காமல் விவாகரத்து வரை போன ஹாலிவுட் தம்பதிகளும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சூப் செய்யும் போது எலும்பு அவிந்தவுடன் கரட்,கோவா இலை[மற்றக் கோவா],உருக்கிழங்கு என்பன சேர்ப்பேன்...இறக்கும் முன் கிறீம் அல்லது சோள மாவு கரைத்து விட்டால் உருண்டு திரண்டு வரும்...குடிக்க அந்த மாதிரி இருக்கும்...அதென்ன காலில் செய்வது நான் எலும்பில் தான் செய்து குடிப்பது...ஆட்டு எலும்பை விட கோழியில் செய்தால் என்னும் சுவையாக இருக்கும்.

.

ஆட்டுக்கால் சூப்.

...

இந்த சூப் தடிமன், தலைப்பாரம் போன்றவற்றிற்கு அருமையான மருந்து.

முக்கிய குறிப்பு: இதனை லீவு நாட்களில் செய்து குடிப்பது நல்லது.

ஏனென்றால் உள்ளி போடுவதால், வேலை இடங்களில் உள்ளியின் வாசனை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

.

ஆகா... :o அருமையான ஆட்டுக் கால் சூப். பதிவுக்கு நன்றி சிறி அண்ணா. பச்சைப் புள்ளி இலவசம் :lol:

உள்ளி என்றால் என்ன? இருக்கிறதே இருக்கு :Daquafresh.jpg

தமிழ்ல பிறமொழிச் செபற்கள் கலக்கிறமாரி தக்காளி இப்ப கலந்தீட்டுது எண்டு நினைகஇகிறன்.. :o சூப்பு திக்காக இருக்கக் கூடர்து பாருங்கோ.. திக்காக குடிக்குறதுக்கு எங்கடை உணவு வகையள்ள கூழ் எண்டொரு சாமான் இருக்கு.. இங்க கஞ்சி, கூழ், இரசம் எல்லாம் சூப்தான்..:D

ஆட்டு எலும்புகளிலதான் ஊரில சூப் வைக்குறவை.. மேல சொன்ன சரக்கு வகைகளை ஒரு வெள்ளை துணீல பொட்டளியாக கட்டி எலும்புகளோட தண்ணீர்விட்டு அவிச்சு, குறைந்தது 2 நாளைக்காவது பாவிப்பார்கள்.. ரண்டாம்நாள் இன்னும் ருசியாய் இருக்கும்.. :lol:

குறிப்பிற்கு நன்றி!! :D

தக்காளிப்பழத்தில ஒரு ருசி இருக்கித்தானே மாமா. உப்பு போடுறமாதிரி எதுக்கையும் ஒரு தக்காளி பழத்துண்டை போட்டால் நல்லாய் இருக்காதோ? இதை வெள்ளைக்காரன் எங்களுக்கு சொல்லித்தரவேணுமாக்கும். :o

தக்காளிப்பழத்தில ஒரு ருசி இருக்கித்தானே மாமா. உப்பு போடுறமாதிரி எதுக்கையும் ஒரு தக்காளி பழத்துண்டை போட்டால் நல்லாய் இருக்காதோ? இதை வெள்ளைக்காரன் எங்களுக்கு சொல்லித்தரவேணுமாக்கும். :D

தக்காளிப் பழம் போடலாமே! தக்காளிக்கு புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என்ன.. தக்காளி ஒருவகைப் புளிப்புத் தன்மை கொண்டது.. எலும்பிச்சம்புளி இன்னொரு வகை புளிப்புத் தன்மை கொண்டது.. ஆட்டுச் சூப்பிற்கு எலும்பிச்சம்புளி விட்டுக் குடிப்பது தனி ருசி.. அதை இந்த தக்காளி கெடுக்காதோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான் சோழியன் முதல் நாள் நான் சொன்ன மாதிரி செய்து குடிப்பது அடுத்த நாள் தான் தண்ணீராய் குடிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான் சோழியன் முதல் நாள் நான் சொன்ன மாதிரி செய்து குடிப்பது அடுத்த நாள் தான் தண்ணீராய் குடிப்பது.

ரதி அன்ரி சமையலிலை அல்லது சாப்பிடுறதிலை பாண்டித்தியம் பெற்றனீங்களோ? கலக்குங்கோ, பாராட்டுக்கள்!!!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளிப் பழம் போடலாமே! தக்காளிக்கு புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என்ன.. தக்காளி ஒருவகைப் புளிப்புத் தன்மை கொண்டது.. எலும்பிச்சம்புளி இன்னொரு வகை புளிப்புத் தன்மை கொண்டது.. ஆட்டுச் சூப்பிற்கு எலும்பிச்சம்புளி விட்டுக் குடிப்பது தனி ருசி.. அதை இந்த தக்காளி கெடுக்காதோ? :)

சோலி சாப்பிடுறதுக்கு ஒரு ரசனை இருந்தால்தான் தான் சமையல் கலையில் பிரகாசிக்கலாம்.

தக்காளிப் பழம் போடலாமே! தக்காளிக்கு புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என்ன.. தக்காளி ஒருவகைப் புளிப்புத் தன்மை கொண்டது.. எலும்பிச்சம்புளி இன்னொரு வகை புளிப்புத் தன்மை கொண்டது.. ஆட்டுச் சூப்பிற்கு எலும்பிச்சம்புளி விட்டுக் குடிப்பது தனி ருசி.. அதை இந்த தக்காளி கெடுக்காதோ? :D

எனக்கு சாப்பிடுறதை தவிர சமைக்கிறது பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. நீங்கள் சொல்லிறதும் சரிதான் மாமா. உதாரணத்துக்கு, கொத்துரொட்டிக்கு எலுமிச்சம்புளி கலந்து அடிச்சால் அந்தமாதிரி இருக்கும். ஆனால் கொத்துரொட்டிக்கு தக்காளிபழத்தை கலந்து சாப்பிட்டால் ருசி இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை.. ஆட்டைக் கொன்று அதில் சூப்பு வேறையா. பாவம் ஆட்டுக்குட்டிகள்.. மறி ஆடுகள்..! கடாவை தான் வெட்டுவார்களாமே. அதுக்கு வாழ உரிமை இல்லையா..??! :D

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளிப் பழம் போடலாமே! தக்காளிக்கு புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என்ன.. தக்காளி ஒருவகைப் புளிப்புத் தன்மை கொண்டது.. எலும்பிச்சம்புளி இன்னொரு வகை புளிப்புத் தன்மை கொண்டது.. ஆட்டுச் சூப்பிற்கு எலும்பிச்சம்புளி விட்டுக் குடிப்பது தனி ருசி.. அதை இந்த தக்காளி கெடுக்காதோ? :D

தக்காளியில் உள்ளவற்றில் அஸ்கோபிக் அசிட் (விற்றமின் சி க்கு உரிய அமிலம்) பெருமளவில் உண்டு. எலுமிச்சையில் சிற்றிங் அசிட் உண்டு. இரண்டும் வெவ்வேறு புளிக்கும் இயல்புடையன..! ஆனால் இரண்டும். மென்னமிலங்கள் ஆகும். இவற்றை விட பலமான அசிட் எமது வயிற்றில் சுரக்கப்படுவதால்.. அசிட் உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பது நல்லது. ஆனால் விற்றமின் அடங்கும் அசிட்கள் கட்டாயம் உண்டாகப்பட வேண்டும். :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை.. ஆட்டைக் கொன்று அதில் சூப்பு வேறையா. பாவம் ஆட்டுக்குட்டிகள்.. மறி ஆடுகள்..! கடாவை தான் வெட்டுவார்களாமே. அதுக்கு வாழ உரிமை இல்லையா..??! :blink:

நெடுக்ஸ் அண்ணா,

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா??

ஆயிரக்கணக்கிலை அப்பாவி மக்கள் சாவதை வேடிக்கை பார்க்கிற உலகத்திலை ஆட்டைப்பற்றி கதைக்கிறிங்க???

கொல்லுறாங்கப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா??

ஆயிரக்கணக்கிலை அப்பாவி மக்கள் சாவதை வேடிக்கை பார்க்கிற உலகத்திலை ஆட்டைப்பற்றி கதைக்கிறிங்க???

கொல்லுறாங்கப்பா :D

மனிதன் ஒருவனை ஒருவன் அடிச்சு செத்துத் தொலையட்டும். அவனால் தான் இந்தப் பூமிக்கே ஆபத்து. எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. ஆடும் ஆடும் அடிபட்டு சுடுபட்டு இறந்தன என்று. ஆனால் மனிதன் என்ற கேவலமான விலங்கு மட்டும் சொந்த இனத்தை மட்டுமன்றி பிற இனங்களையும் கொன்று அழிக்கிறது. சிங்கம் புலி கூட உணவுக்காகத்தான் கொல்கின்றன. மனிதன் மட்டும் தனது இனத்தை தானே அழிக்கிறான்.. பொழுதுபோக்கிற்குக் கூட வேட்டை ஆடுதல் என்று உயிர்களை அழிக்கிறான்.. இயற்கைக்கு மாறான வேகத்தின் ஆடம்பர உணவுத் தேவைக்காக பிற உயிர்களைக் கொல்கிறான். அதுமட்டுமன்றி தனது செளகரியத்திற்காக பிற உயிரினங்களின் இருப்பை அழிக்கிறான். அவற்றை வாழவிடாது அழிக்கிறான். இது வேடிக்கையான விசயமா..??! இப்படியே போனால் இந்தப் பூமிப்பந்தில் மனிதனை மட்டுமல்ல.. எல்லா உயிரினங்களையும் மனிதனே அழித்துவிடுவான் போலிருக்கிறது.

நான் தேவையின்றி உயிர்களைக் கொல்வதில்லை. கொல்லவும் சம்பதிப்பதில்லை. அதற்கும் எங்களைப் போல வாழ ஆசை இருக்கும் என்றே நம்புகிறேன். போரிலோ எங்கோ உயிர்கள் அழிக்கப்படுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. மனிதன் மனிதனுக்கு சட்டம் இயற்றி வைத்து கொலைகள் செய்வதை இயற்கையின் நீதியின் கீழ் பாரதூரமாகப் பார்கிறேன். ஆனால் இந்த உலகம் அதை ஏற்றுக் கொண்டு இயற்கையின் நீதிக்கு தலை வணங்கி வாழும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி கேடுகெட்டு விட்டது மனித உலகம். :blink::wub:

நெடுக்ஸ்.. விசயந் தெரியாம கதைக்கப்படாது.. ஆட்டுக்கு விரல் இருந்தால்தானே விசையை அழுத்திச் சுட முடியும்.. அது கொம்பிருக்கு.. குத்துப்படூது.. எங்களுக்கு விரலிருக்கு.. சுடுபடுறம்.. :(:(

நெடுக்ஸ்.. விசயந் தெரியாம கதைக்கப்படாது.. ஆட்டுக்கு விரல் இருந்தால்தானே விசையை அழுத்திச் சுட முடியும்.. அது கொம்பிருக்கு.. குத்துப்படூது.. எங்களுக்கு விரலிருக்கு.. சுடுபடுறம்.. :(:(

ஆஹா அருமை...ஆட்டுக்கால் சூப்பை போல இந்தப் பதிலும் அருமை :) (முடியல...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:)

ஏன்.... மச்சான், ஆட்டுக்கால் சூப்பை பாத்து கொடுப்புக்குள்ளை சிரிக்கிறீங்கள். :)

முன்காலில் ஏதாவது பிரச்சினை இருக்குமோ? :wub:

சூப்புதந்த அண்ணனுக்கு சூப்பர் வணக்கமும் நன்றியும்.

ஆட்டின் முன்காலில் ஒரு பிரச்சினையும் இல்லை . அது கொஞ்சம் மெல்லீசு, பின் கால். தான் மொத்தமான கால் சூப்புக்கு நல்லது. :)

உங்கள் பாராட்டுக்கு நன்றி சித்தன். :(

உள்ளியின் மகிமை அப்படி. உள்ளியின் வாசனை பிடிக்காமல் விவாகரத்து வரை போன ஹாலிவுட் தம்பதிகளும் உண்டு.

garlic%2Bcloves.JPG

சிலருக்கு உள்ளி, வெங்காயம் போன்றவற்றின் வாசனை பிடிப்பதில்லை கிஸான். அதற்காக விவாகரத்து எடுப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சூப் செய்யும் போது எலும்பு அவிந்தவுடன் கரட்,கோவா இலை[மற்றக் கோவா],உருக்கிழங்கு என்பன சேர்ப்பேன்...இறக்கும் முன் கிறீம் அல்லது சோள மாவு கரைத்து விட்டால் உருண்டு திரண்டு வரும்...குடிக்க அந்த மாதிரி இருக்கும்...அதென்ன காலில் செய்வது நான் எலும்பில் தான் செய்து குடிப்பது...ஆட்டு எலும்பை விட கோழியில் செய்தால் என்னும் சுவையாக இருக்கும்.

ரதி, ஒரு குடும்பத்துக்கு சூப் வைக்க ஆட்டின் கால் என்றால், இரண்டு போட்டால் காணும்.

கோழியின் கால் என்றால், கனக்க கால்கள் போட வேண்டி வருமே.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தழிழ் சிறி எல்லாத்தின்ர காலும் பாவம்

ம் ..

எல்லாரும் ஆட்டுக்கால் சூப் நல்லா ரசிச்சு தான் சாப்பிடுறீங்கள். :lol: :lol:

என்னை போன்ற தாவர பட்சணிகளுக்காக யாராவது மரக்கறி சூப் பற்றி எழுதுங்களேன். :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... :rolleyes: அருமையான ஆட்டுக் கால் சூப். பதிவுக்கு நன்றி சிறி அண்ணா. பச்சைப் புள்ளி இலவசம் :o

உள்ளி என்றால் என்ன? இருக்கிறதே இருக்கு :blink:aquafresh.jpg

குட்டி உள்ளி சாப்பிட்டபின் , எந்த ஸ்ப்ரே பாவிச்சாலும் அதன் வாசனையையும் மீறி உள்ளியின் வாசனை தெரிந்து விடும்.

காரணம் உள்ளியின் வாசனை இரத்ததுடன் கலந்து , நமது தோலின் நுண்ணிய துவாரங்கள் மூலமாக வியர்வையாக வரும் போதும் அதில் அந்த வாசனை இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணை ஆட்டுக்கால் சூப் நல்லாவே இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.