Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரில் பிச்சை எடுக்கும் சிறார்கள்

Featured Replies

யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது.

இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, கொப்பி, பேனா போன்றவற்றை இவர்கள் பிச்சையாகக் கேட்பதைக் காணமுடிகிறது. யாழ். பேரூந்து தரிப்பிடத்திலேயே இவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

http://www.thinamurasam.com/

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, ஈழத்தின் சகல பகுதிகளிலும் சிறார்களின் நிலை இதுதான். ஏழைகள் என்ற காரணத்திற்காக மட்டுமல்ல, தமிழ்சி சிறார்கள் என்பதற்காகக் கண்டுகொள்ளப்படுகிறார்களில்லை.

30 வருட போராட்டம் வேலை செய்திருக்கின்றது என்கின்றீர்கள்.இஞ்ச கன பேர் கம்மர் ஓடுகினம் அது காணாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட போராட்டம் வேலை செய்திருக்கின்றது என்கின்றீர்கள்.இஞ்ச கன பேர் கம்மர் ஓடுகினம் அது காணாதோ?

சகோதரர் அர்ஜுன், ஏன் எடுத்தவுடன் வெளிநாட்டில் உள்ள தமிழர் மீது ஸ்ரீ லங்காவில் பிச்சை எடுப்பவர்களின் விதியை பழியாக போடுகிறீர்கள்? யாழ்பாணத்தில் புதிய பென்ஸ், லேக்சஸ், பி.எம்.டபிள்யு எண்டு ஒரு அமைச்சரே சுத்துறாரே? அவருக்கு வேறு முன்னுக்கு 10 வாகனம், பின்னுக்கு 10 வாகனம்.

அதிலுள்ள கைக்கூலிகளினதும், ஆயுத, தண்ணி, கிராக் செலவுகளே கோடிக்கணக்கில். தியேட்டரின் கீழ் பங்கர் கட்டி "தலைமையகம்" வைத்து அவர் எ 9 இல் ஓட்டும் பேருந்துகளின் எண்ணிக்கை 50 . அந்த வருமானங்கள் மற்றும் கடந்த இருபது வருடங்களாக தமிழரிடம் சுரண்டிய சொத்துக்களோடு ஒப்பிட்டால் வெளிநாட்டு காரரிண்ட ஹம்மர் கால் தூசுக்கு சமம்.

இந்த தமிழ் "அமைச்சர்" மட்டும் நினைத்தால் ஒரு இலட்சம் அனாதைகளுக்கு பத்து தலைமுறைகளுக்கு சாப்பாடு போட சொத்திருக்கு, ஆனால் நினைக்கமாட்டார். நீங்கள் எங்கள பேசுங்கோ!

நான் பிச்சைகார சிறுவர்களுடன் கமரை கொண்டுவந்தமாதிரி நீங்கள் அமைச்சரை கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

புலம்பெயர் சமூகத்தில் அந்த அமைச்சர் எப்பவும் கையேந்தினாரா எனக்கு தெரியவில்லை.ஆனால் புலம் பெயர்தவர்களிடம் சேர்த்த அசையும் சொத்து,அசையா சொத்து அமைச்சரிடம் உள்ளதைவிட ஆயிரம் மடங்கு அதிகம்.அதைத்தான் எங்கே என்று கேட்கின்றேன்.

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அர்சுன் அவர்களே, அங்கு பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் உதவிசெய்யமுடியுமாகில் செய்யவும், அன்றேல் விலத்தியிருக்கவும் அதைவிடுத்து புலம்பெயர் தேசத்தில் கம்மர் ஓட்டுறான் அது இது எண்டு தேவையில்லாத விடையத்தை எழுதவோண்டாம். அப்படித் தேவையெண்டால், புதிதாக ஒரு இடுகையில் யார், யார் எந்த நாட்டில் புலம்பெயர் தேசத்து மக்களிடம் காசுசுத்தி சொத்துக்கள் சேர்த்துள்ளார்கள் என விபரிக்கவும் அதனை வரவேற்கலாம். மற்றும்படி புலம்பெயர் தெசத்தில் வாழபவர்கள் அனைவரும் கஸ்டப்பட்டுச் சமபாதித்தே தமது வாழகையைத் தங்களுக்காக அமைத்துள்ளார்கள். அதைவிட சில போக்கிலிகள் ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு ஏப்பம் விட்டிருந்தால் அப்படியானவர்களிடம் யாரும் உதவியை எதிர்பார்க்க முடியாது. ஆகவே எதர்காலத்தில் இப்படியான விடையத்தில் அந்தப்போக்கிலிகளைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வதைத் தவிர்க்க முயலவும். மேலும் புலம்பெயர்தேசத்தில் (வளர்ச்சியடைந்த நாடுகளில்) அளவிற்கதிகமாகச் சொத்துக்கள் சேர்த்தால் அரசு கண்காணிக்கும் அன்றேல் யாராவது போட்டுக்கொடுத்தால் அவர்களை விசாரிக்கும் தாராளமாக நீங்கள் அவர்களைப் பொட்டுக் கொடுக்கலாம் ஆனால் ஒருவிடையம் அவர்கள் ஊர்ப்பணத்தைச் சத்தினார்கள் என தங்களுக்கு ஆணித்தரமான தகவல்கள் இருந்தால் அன்றேல் அப்பாவிகளும் மாட்டுப்பட வாய்ப்பிருக்கின்றது

நடமுறைக்கு சாத்தியமானதை செயற்படுத்துவதே சாலச்சிறந்தது. அதை விட்டிட்டு சுருட்டிக்கொண்டு போனதைப் பேசி எதுவும்

நடக்கப்போவதில்லை,ஐந்து இலட்சம்பேர் இருக்கின்றோமே ஆளுக்கு ஓரு டொலரோ இரண்டு டொலரோ கொடுத்தால் சிறார்களின் எதிர்காலம்

சுபீட்சமடையாதா.தமிழ்ப் பிள்ளைகள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனை? வடக்கின் வசந்தம். எப்படி இருந்த தமிழர்கள் இப்படி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி அர்சுன் அவர்களே, அங்கு பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் உதவிசெய்யமுடியுமாகில் செய்யவும், அன்றேல் விலத்தியிருக்கவும் அதைவிடுத்து புலம்பெயர் தேசத்தில் கம்மர் ஓட்டுறான் அது இது எண்டு தேவையில்லாத விடையத்தை எழுதவோண்டாம். அப்படித் தேவையெண்டால், புதிதாக ஒரு இடுகையில் யார், யார் எந்த நாட்டில் புலம்பெயர் தேசத்து மக்களிடம் காசுசுத்தி சொத்துக்கள் சேர்த்துள்ளார்கள் என விபரிக்கவும் அதனை வரவேற்கலாம். மற்றும்படி புலம்பெயர் தெசத்தில் வாழபவர்கள் அனைவரும் கஸ்டப்பட்டுச் சமபாதித்தே தமது வாழகையைத் தங்களுக்காக அமைத்துள்ளார்கள். அதைவிட சில போக்கிலிகள் ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு ஏப்பம் விட்டிருந்தால் அப்படியானவர்களிடம் யாரும் உதவியை எதிர்பார்க்க முடியாது. ஆகவே எதர்காலத்தில் இப்படியான விடையத்தில் அந்தப்போக்கிலிகளைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வதைத் தவிர்க்க முயலவும். மேலும் புலம்பெயர்தேசத்தில் (வளர்ச்சியடைந்த நாடுகளில்) அளவிற்கதிகமாகச் சொத்துக்கள் சேர்த்தால் அரசு கண்காணிக்கும் அன்றேல் யாராவது போட்டுக்கொடுத்தால் அவர்களை விசாரிக்கும் தாராளமாக நீங்கள் அவர்களைப் பொட்டுக் கொடுக்கலாம் ஆனால் ஒருவிடையம் அவர்கள் ஊர்ப்பணத்தைச் சத்தினார்கள் என தங்களுக்கு ஆணித்தரமான தகவல்கள் இருந்தால் அன்றேல் அப்பாவிகளும் மாட்டுப்பட வாய்ப்பிருக்கின்றது

உண்மை. இதுவே எனது கருத்துமாகும். எங்கோ ஒன்றிரண்டு தப்பிலிகள் செயதவற்றுக்காக ஒட்மொத்தமே தவறானது எனச் சுட்டுவது ஏற்புடையதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நடமுறைக்கு சாத்தியமானதை செயற்படுத்துவதே சாலச்சிறந்தது. ,ஐந்து இலட்சம்பேர் இருக்கின்றோமே ஆளுக்கு ஓரு டொலரோ இரண்டு டொலரோ கொடுத்தால் சிறார்களின் எதிர்காலம் சுபீட்சமடையாதா.தமிழ்ப் பிள்ளைகள்தானே.

எப்படி ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள்

நான் 100 ஈரோக்கள் போடுகின்றேன்

30 வருட போராட்டம் வேலை செய்திருக்கின்றது என்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003இல் ஊருக்கு போயிருந்தபோது எனது மகள் என்னிடம் கேட்டது

அங்காலயும் நிற்கினம் (தாண்டிக்குளம்)

இங்காலயும் நிற்கினம் (முகமாலை)

நடுவில் இவர்கள் இல்லையே என்று....

அதற்கு நான் சொன்னது எல்லோரும் தலைவரின் பராமரிப்பில் என்று..

எப்படி ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள்

நான் 100 ஈரோக்கள் போடுகின்றேன்

ஏன் இதை யாழ் இணயத்தினூடாகவே செய்யலாம். நிர்வாகத்தினர் யாழ் ஆயர் சௌந்தர அடிகளாருடன் தொடர்புகொண்டு இதற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கலாம். நிர்வாகத்தினர் சம்மதிக்கவேண்டுமே.வெளி நாட்டில் இந்தமாதிரி விடயங்களில் இறங்குவதற்குத் தயங்குவார்கள்.காரணம் கடந்தகால கசப்பான சம்பவங்கள்.அல்லது நாங்கள் ஊருக்குப் போய்வரும்போதாவது நேரடியாகவே நம்மால் இயன்றதை செய்யலாம்.அண்மையில் இரண்டு கைகளையிழந்த சிறுவனுக்கு 15 மணித்தியாலத்தில் பல ஆயிரம் பவுண்ஸ் சேர்க்கப்பட்டதை அறிந்திருப்பீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிற்பி

யாழ். களநிர்வாகம் இது சம்பந்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்று பலகாலமாக கேட்டுவருகின்றேன்

சிலவேளை இங்கு கருத்து எழுதுபவர்கள் காணாமல் போகக்கூடும் என்பதானாலேயோ என்னவோ நிர்வாகம் பதில் சொல்வதில்லை

ஆனால் நிச்சயமாக ஏதாவது ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கவேண்டும்

அதற்கு என்னால் ஆனதை செய்வேன் என்று மட்டும் என்னால் சொல்லமுடியும்

தாயக மக்களுக்கான உதவித் திட்டமாக யாழ் களத்தினூடாக கள உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நேசக்கர அமைப்பு ஆரம்பத்தில் உற்சாகமாக செயற்படத் தொடங்கி, நாளடைவில் படிப்படியாக உறுப்பினர்களின் பங்களிப்புகள் இன்றி கைவிடப்பட்டு யாழிலிருந்து விலகி தனியாக இயங்குகின்றது. முடிந்தால் அதன் மூலமோ வேறு அமைப்புகள் மூலமோ உதவி செய்யலாம்.

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

ITSO அமைப்பினூடாக இதை செய்ய முடியும்(international tamil student organization);

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களுக்கான உதவித் திட்டமாக யாழ் களத்தினூடாக கள உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நேசக்கர அமைப்பு ஆரம்பத்தில் உற்சாகமாக செயற்படத் தொடங்கி, நாளடைவில் படிப்படியாக உறுப்பினர்களின் பங்களிப்புகள் இன்றி கைவிடப்பட்டு யாழிலிருந்து விலகி தனியாக இயங்குகின்றது. முடிந்தால் அதன் மூலமோ வேறு அமைப்புகள் மூலமோ உதவி செய்யலாம்.

இது புதிய செய்தி எனக்கு

ITSO அமைப்பினூடாக இதை செய்ய முடியும்(international tamil student organization);

இவர்களுடன் தொடர்பிலுள்ளேன்

Edited by விசுகு

தமிழ மக்களின் அது உன்னத பிரதிநிதிகளுக்கு இந்த விடயம் ஒண்றும் தெரியாதோ. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கும் தமிழ் மாணவர்கள்

தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவும் பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் வீதியோரங்களில் பிச்சைஎடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது ௧௪௨ பிச்சை ஏந்தும் மாணவர்களின் விபரங்களை எமது அமைப்பினர் சேகரித்து உள்ளனர். வடக்கில் பல மாணவர்கள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் பிச்சை எடுக்கும் தொழிலுக்கும் செல்கின்றனர் . அதிகரித்த பசி மற்றும் குடும்ப வறுமை என்பனவே எமது மாணவர்களை இந்தளவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது . எமது சமுதாயத்தின் எதிர்கால தூண்களின் நிலைமை எங்கே சென்று கொண்டிருக்கின்றது ? இதை இப்படியே வேடிக்கை பார்க்கப் போகிறோமா ?

நலன்புாி முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பபட்ட பின்னா் யாழ்ப்பாணத்தில் பிச்சை கேட்போாின் எண்ணிக்கை பெருமளவில் அதிகாித்து காணப்படுகிறது..முக்கியமாக பாடசாலை செல்லும் வயதுடைய பெண் பிள்ளைகளே அதிகமாக பிச்சை கேட்டு அலைகின்றனா. எமது அமைப்பினர் இவ்வாறான சிறாா்களை சந்தித்து அவா்களின் நிலைமையை அறிவதற்காக இன்று பி.ப3.30 மணிக்கு யாழ் பஸ் நிலையத்திற்கு சென்றபோது இந்த சிறுவர் சிறுமியர் எம் அமைப்பினிரிடமும் கையேந்திக்கொண்டு வந்து நின்றனர். அதில் ஒரு மாணவியின் விபரத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். அந்த சிறுமி பெயா் மோி செல்வம்,வயது 13, தற்போதைய முகவாி -மூத்தவிநாயகா் கோவிலடி, ஆனைக்கோட்டை.சிறுமியின் கதை இதுதான்-

" என்ர பெயா் மோி, எனக்கு ஒரு தங்கையும், (பெயா் கஸ்துாாி, ஆண்டு-07)தம்பியும்(ரூபன் -ஆண்டு-06),அம்மா பெயா் செல்வராணி, அம்மாக்கு காலில் ஊனம் நடக்கமாட்டா.அப்பா வேறு கல்யாணம் பண்ணி போயிட்டாா்...சாப்பிடுவற்கே கஸ்டமான நிலை.. சாப்பிட ஒன்றுமில்லை எனும் போது இப்படி பிச்சை எடுப்பதற்கு வருவேன் இங்கு கிடைக்கும் பணத்தை கொண்டு போய் பொருட்கள் வாங்கி சமைத்து அம்மாக்கும் தம்பி, தங்கைக்கும் சாப்பாடு கொடுப்பேன்". பாடசாலைக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு- ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில்ஆண்டு-08 படிக்கிறேன்..பாடசாலைக்கு போவேன் ஆனால் வீட்டில் கஸ்டமாக இருக்கும் போது இப்படி பிச்சையெடுக்க வருவேன்......... இன்று காலையிலே இங்கு வந்திட்டேன்.ஆனால் ் காலையிலிருந்து சாப்பிடல்ல நான் சாப்பிட்டா வீட்டில அம்மாவும், தம்பி, தங்கை பாவம்". இப்படி எத்தனை பிஞ்சுகள் எம் மத்தியில் ......... எத்தனை நாட்களுக்கு இவா்கள் பிச்சை எடுப்பது.? பெற்றவா்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் சிறாா்கள் இன்றைய நிலை... உதவிகள் எதுவுமற்ற நிலையில் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி ஏது என்று சிந்திக்கிறாா்கள். நாம் இச்சிறாா்களை இப்படியே விடலாமா? நாம் ஒவ்வொருவரும் முன்வந்து எம் சகோதரா்களை பிச்சை ஏந்துதுவதிலிருந்து காப்பாற்றுங்கள்..

புகைப்படங்களுக்கு : http://tamilstu.blog.../blog-post.html

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது இந்த மாணவர்களுக்கு உடனடியாக உதவி செய்யும் பணியில் இறங்கியுள்ளது . நீங்களும் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் எங்களை உடனே தொடர்பு கொள்ளவும் . தொலைபேசி எண் : +447551449606

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.