Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் கூட்டமைப்பை சிதைத்து தமிழரின் தேசிய பலத்தை உடைக்க திரைமறைவில் சதி: உள், வெளி சக்திகளுடன் தமிழர்களும் கூட்டு

Featured Replies

இலங்கைத் தீவில் தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை என எதுவும் இல்லையென நிறுவுவதையே தங்கள் உடனடி அரசியல் திட்டமாக ராஜபக்ச சகோதரர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார் கொழும்பில் இருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர்.

"கோவணமும் களவு போய்விட்டதை உணராமல், பட்டாடை பற்றிய கனவில் மிதக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் புதினப்பலகை-யிடம் தெரிவித்தார்.

கடந்த குடியரசு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் - தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் தான் என்றே ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகி்ன்றது.

ஆதலால் - தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திச் சிதைப்பதற்கான இரகசிய வேலைத் திட்டங்களை அவர்கள் தயாரித்துச் செயல்படுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

அதாவது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்ச் சமூகத்தில் மதிப்பு மிக்கோரைத் தமது வேட்பாளர்களாகத் தெரிவு செய்ய வாய்ப்பளிக்காமல், அப்படியானவர்களை அடையாளம் கண்டு - அவர்களுடன் முன்னரே தொடர்பு கொண்டு அவர்களத் தமது பக்கம் இழுக்கும் வேலைகளில் ராஜபக்ச சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைத் தீவினுள் மட்டும் அல்லாமல், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழ் சமூகப் 'பெரியோர்'களைக் கூட இவ்வாறாகப் பதவி ஆசை ஊட்டி தமக்குச் சார்பாக அரசியலில் இறங்கச் செய்வதே ராஜபக்ச சகோதரர்களின் உத்தி.

இதன் வழி - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சிதறடித்து - தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பலம் வாய்ந்த தேசியச் சக்தியாக கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதே நோக்கம்.

இந்த இரகசிய வேலைத் திட்டத்தின் பிதாமகனாக பசில் ராஜபக்ச செயற்படுகின்றார் என்று சொல்லப்படுகி்ன்றது.

யாழ்ப்பாணத்தில் வாழும் இன்னொரு பொது ஆர்வலர் புதினப்பலகை-யிடம் பேசும் போது - "இலங்கைத் தீவில் வாழும் எந்த ஒரு 'தமிழ்ப் புள்ளி'யை நீங்கள் அடையாளம் கண்டு, அவரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அரசியலில் ஈடுபட வைக்க நீங்கள் தொடர்பு கொண்டாலும், அவரை ஏற்கெனவே ராஜபக்ச தரப்பு தொடர்பு கொண்டு பேசியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்" என்றார்.

ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அரச நீதி நிர்வாகத் துறை அதிகாரிகள், முன்னணி வணிகர்கள், பிரபல்யம் மிக்க சட்டவாளர்கள் என பலரும் இந்த வலைக்குள் வீழ்ந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்னொரு பக்கத்தில் - இனத்தின் நலனிற்காக அல்லாது தமது சுய இலாபத்திற்காக அரசியல் ஆசைகள் கொண்டிருக்கும் தமிழர்கள் சிலர் கூட ராஜபக்ச குடும்பத்திற்குச் சாமரம் வீசும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பில் வாழும் இன்னொரு தமிழ் கல்விமான் தெரிவித்தார்.

அவர் இதற்கு வெளிப்படையான ஒரு உதாரணத்தையும் புதினப்பலகை-க்குக் கூறினார்.

தமிழ்ப் பிரமுகர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரனைத் தலைவராகக் கொண்டு கொழும்பில் தேசிய ஒற்றுமைப்பாட்டுச் சம்மேளனம் என்ற அமைப்பு இயங்குகிறது.

முற்றிலும் தமிழ்ப் பிரமுகர்களைக் கொண்ட இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் "ஐக்கிய இலங்கை"யை வலுவாக ஆதரித்து நிற்பவர்கள்.

இவர்கள் கடந்த குடியரசு அதிபர் தேர்தலில் பெருவெற்றியீட்டிய ராஜபக்சவை பல்லாண்டு, பல்லாண்டு நோயற்ற வாழ்வு வாழ்க என வாழ்த்தி தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களைக் கூட கொடுத்திருக்கின்றார்கள்.

ராஜபக்ச குடும்பத்தின் இந்த சதி முயற்சியின் இன்னொரு அங்கமாக - தம்மால் இனங்காணப்பட்ட - ஒற்றையாட்சிக்கு ஊதுகுழலாய் இருக்கும் ஆட்களை, தமிழ் தேசிய கூட்மைப்பிற்குள் சேர்த்துவிடும் திட்டமும் இருக்கின்றது.

இதன் மூலமாகவும் - தமிழர் கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாடான தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளே நடைபெறுகின்றன என்றார் அந்த கொழும்பு வாழ் தமிழ் கல்விமான்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தமது ஆட்களை நுழைத்து அதன் அடிப்படைக் கோட்பாடுகளை உடைக்கும் முயற்சியில் ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமே ஈடுபடுகின்றார்கள் என்றில்லை.

அப்படிச் செய்வதன் மூலமாக இந்தியாவும் இலாபமடைய முடியும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழர்களின் ஒரே தேசியச் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வலுப்படுத்ததாது விடின் - தமிழ்சமூகத்திற்கு வெளியில் இருந்தும், உள்ளிருந்தும் பின்னப்படும் இவ்வாறான சதிகளுக்குள் சிக்கி தமிழரின் அரசியல் வேட்கைகள் சிதைந்து போய்விடும் எனவும் குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.com/view.php?20100216100520

தமிழர் கூட்டமைப்பை வலுப்படுத்தவே வேண்டும். அதற்காக முக்கியஸ்தர்களெல்லாம் பக்ஷ சகோதரர்களுக்குப் பின்னால் போவார்களா? அப்படிப் போனாலும் மக்களுக் கென்று ஒரு தீர்மானம் இருக்கும். அது அந்த முக்கியஸ்தர்களுக்கும் புரியும்.

தமிழர் கூட்டமைப்பு இன்றுவரை மக்கள் ஆதரவுடன்தான் இருக்கிறது. அரசுடன் இணைந்துள்ள முக்கியஸ்தர் பலரின் நிலை அறியப்பட்டதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலுக்கு பிறகு இவ்வளவு குழப்பத்துக்குள்ளும் மனம்விட்டு சிரிக்கவைத்த பெரிய ஜோக் இதுதான்.

தமிழர்களின் தேசியபலம் தமிழர்கூட்டமைப்பு-----ஆனந்தவிகடனுக்கு அனுப்பவேண்டிய 'ஜோக்' இது. :D:blink:

சம்பந்தர் அடிக்கடிவிடும் அறிக்கைகளை பார்த்தாலே அவர்நிற்கும்(கிடக்கும்) இடம் எதுவென்று தெரியும்.

பாராளுமன்றஅரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா...

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துக்கு வாக்களிக்காதே என்று கூறியோரை "தமிழருக்கெதிராக சதி செய்யும் கூட்டம்" என்று முத்திரை குத்திய அதே கூட்டம் இப்ப த.தே.கூ வை விமர்சித்தால் அதே "சதி" பல்லவி பாடிக் கொண்டு திரும்ப வருகுது. இதையெல்லாம் ஆய்வு செய்யும் எழுதும் ஆட்களிடம் பல கேள்விகள் கேட்கலாம், ஆனால் இரண்டு கேள்விகள் இப்போதைக்கு: த.தே.கூ தான் ஒரே தெரிவு எண்டால் இந்திய அடிவருடித் தனம் தான் எங்களுக்குள்ள ஒரே ஒரு தீர்வா? தமிழ் மக்கள் படு கொலையில் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாத போது இந்தியாவின் காலடியில் கிடக்கும் சம்பந்தன் குழு எப்படி தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை பிரதினிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ள முடியும்?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை, சிதைப்பதற்கு வெளியில் இருந்து யாரும் முயற்சிக்கவேண்டியதில்லை.

இந்தியா கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்புகளின் போது சிலரை தெரிவு செய்தே சந்தித்துத்து வந்துள்ளது.

இதன் ஊடாக அக்குழுவிற்கு ஒரு அங்கீகாரத்தை அளிப்பதாக வெளிக்காட்டி, கூட்டமைப்பிற்குள் குழு நிலை வாதத்தை உருவாக்கியே வந்துள்ளது.

இந்தியாவின் இச்செயற்பாடு, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சம்பந்தர் ஐயா குழுமம் உரிமை கொண்டாடுவதற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உரிமையாளர்களாகத் தம்மைக் கருதும் சம்பந்தர் ஐயா குழுமம்தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சிதைவிற்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பல முன்னாள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டி, ஒரு பெரு விருந்து காத்திருக்கு என்பது மட்டும் தெளிவாகத்தெரிகின்றது.

விருந்துக்கு முந்தின சிற்றுண்டியைப் புதினப்பலகை பரிமாறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா!

இதில் பதியப்பட்டுள்ள செய்தியை ஒருமுறை படித்தாலே பல விடயங்கள் தெளிவாகின்றன, முக்கியமாக தமிழ்க் கூட்டமைப்பினரை முன்னிலைப் படுத்தியும், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் செயல்களை கொச்சைப் படுத்தும் நோக்கங்கொண்டும் அமைந்துள்ளன.

இந்த செய்தியாளர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிரமுகர், ஒரு பிரமுகர் என்று குறிப்பிட்டு பலபொய்களை உண்மையாக்கவும், உண்மைகளை பொய்யாக்கவும் முனைகின்றார்.

நான் ஏன்கெனவே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்ததுபோல் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை நம்பினாலும் இதைப்போன்ற செய்தியாளர்கள் அதாவது ஊடகவியலாளர்கள் மிகவும் பயங்கரமானவர்கள். இவர்கள் விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

தமிழ்க் கூட்டமைப்பினரின் தற்போதைய தேவை வெளிநாடுகளில் தமிழ் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை முறியடிக்கவேண்டியது தான்.

அதற்காக துணைபோகும் ஊடகங்கள் பல நரி வேலைகளில் செயல்படுகின்றார்கள் இந்த விடயத்தில் முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் விழிப்பாகவும், உறுதியாகவும் இருக்கவேண்டும்.

இதில் முக்கியமாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும், அதாவது முன்னொரு காலத்தில் உண்மையான உறுதியான செய்தியை அறிய வேண்டுமாயின் புதினத்திற்கு தான் செல்வோம், ஆனால் இன்று எங்களை அதிகமாக குழப்புவதும், குழம்புவதும் புதினமாகவே இருக்கின்றது. அதுதான் மிகவும் வேதனையாக இருக்குதப்பா.

இந்த கருத்தை நான் எழுதுவதினால் இங்கிருந்து அகற்றுவதிற்கு நிறையவே சந்தர்ப்பம் உள்ளதையும் நானறிவேன்.

Edited by Valvai Mainthan

தமிழர் கூட்டமைப்பை வலுப்படுத்தவே வேண்டும். அதற்காக முக்கியஸ்தர்களெல்லாம் பக்ஷ சகோதரர்களுக்குப் பின்னால் போவார்களா? அப்படிப் போனாலும் மக்களுக் கென்று ஒரு தீர்மானம் இருக்கும். அது அந்த முக்கியஸ்தர்களுக்கும் புரியும்.

தமிழர் கூட்டமைப்பு இன்றுவரை மக்கள் ஆதரவுடன்தான் இருக்கிறது. அரசுடன் இணைந்துள்ள முக்கியஸ்தர் பலரின் நிலை அறியப்பட்டதுதானே.

மக்கள் இல்லாத முகியஸ்தர்களும் முக்கியஸ்தர்கள் இல்லாத மக்களும் கிட்டத்தட்ட ஒரு வகையானா கையறு நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டுகதை!

3 மாணவர்களின் எதிர்கால இலட்சியம் என்ன என்று கேட்டதற்கு

முதலாமவன் கூறினான் நான் ஒரு அரசியல்வாதியாகி ஏழை மக்களைக்காப்பாற்ற வேண்டும் என்று கூறினான்

இரண்டாமவன் நான் மருத்துவனாகி எழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றான்,

மூன்ழ்றாமவனோ எல்லாரும் ஏழை மக்களில் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் ஆகவே நான் ஏழை மக்களில் ஒருவனாகிறேன் என்றானாம்.

இன்றைய வன்னி மக்களின் அவசியத்தேவை சாதாரண அன்றாட வாழ்வே என்று வாய் கிழிய கத்தும் ஊடகங்கள்,அரசியல்வாதிகள் தமது சொகுசு வாழ்க்கையே அடிப்படையாகக்கொண்டு சித்திக்கிறார்கள் (பட்டாடை கனவு என்று அந்த குறிப்பிட்ட ஊடகம் குறிப்பிட்டது இதைத்தானோ?) வன்னி மக்கள் முள்ளுக்கம்பி சிறையிலிருக்கும் போது இவர்க்ள் தமது ஆசனங்களுக்காக அடிபட்டனரே ஒழிய மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை

சிங்களவர்கள் த.தே.கூ வை ஒரு பிரிவினை சக்தியாகவே பார்க்கிறார்கள் என்பதற்காக தாம் எந்த சந்தர்ப்பத்திலிலும் தனி நாட்டு கோரிக்கையை ஆதரிகவில்லை என்று கூக்குரல் இடுபவர்களுக்கு சிங்களவர்களா வாக்கு போடுவார்கள்? கட்சியின் கொள்கைதான் என்ன என்பது பலருக்கு தெரியாது (சம்பந்தர் உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை எப்பொது போய் சந்திக்கப்போகிறார்கள் பொது தேர்தல் பிரச்சாரத்திலா?

இவர்கள் தான் அவர்களுக்கு சேவையாற்ற முடியாவிட்டால் சமூகத்தொண்டு அமைப்புகளை அனுமதிப்பதற்கு பாராளுமன்றா உறுப்பினர் என்ற பதவியை பயன்படுத்தி அந்த பதவியை பிச்சை போட்ட அந்த மக்களைக்காப்பாற்ற வேண்டாமா?

முற்று முளுதாக இளையோரைக்கொண்ட ஒரு மாற்றுக்கட்சியே இன்றைய நிலையில் எம்மக்களுக்குத்தேவையேயன்றி பிராந்திய வல்லரசுகளின் நலன்களை பேணும் கட்சியல்ல

பிலிப்பைன்ஸ் நாட்டுகதை!

3 மாணவர்களின் எதிர்கால இலட்சியம் என்ன என்று கேட்டதற்கு

முதலாமவன் கூறினான் நான் ஒரு அரசியல்வாதியாகி ஏழை மக்களைக்காப்பாற்ற வேண்டும் என்று கூறினான்

இரண்டாமவன் நான் மருத்துவனாகி எழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றான்,

மூன்ழ்றாமவனோ எல்லாரும் ஏழை மக்களில் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் ஆகவே நான் ஏழை மக்களில் ஒருவனாகிறேன் என்றானாம்.

இன்றைய வன்னி மக்களின் அவசியத்தேவை சாதாரண அன்றாட வாழ்வே என்று வாய் கிழிய கத்தும் ஊடகங்கள்,அரசியல்வாதிகள் தமது சொகுசு வாழ்க்கையே அடிப்படையாகக்கொண்டு சித்திக்கிறார்கள் (பட்டாடை கனவு என்று அந்த குறிப்பிட்ட ஊடகம் குறிப்பிட்டது இதைத்தானோ?) வன்னி மக்கள் முள்ளுக்கம்பி சிறையிலிருக்கும் போது இவர்க்ள் தமது ஆசனங்களுக்காக அடிபட்டனரே ஒழிய மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை

சிங்களவர்கள் த.தே.கூ வை ஒரு பிரிவினை சக்தியாகவே பார்க்கிறார்கள் என்பதற்காக தாம் எந்த சந்தர்ப்பத்திலிலும் தனி நாட்டு கோரிக்கையை ஆதரிகவில்லை என்று கூக்குரல் இடுபவர்களுக்கு சிங்களவர்களா வாக்கு போடுவார்கள்? கட்சியின் கொள்கைதான் என்ன என்பது பலருக்கு தெரியாது (சம்பந்தர் உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை எப்பொது போய் சந்திக்கப்போகிறார்கள் பொது தேர்தல் பிரச்சாரத்திலா?

இவர்கள் தான் அவர்களுக்கு சேவையாற்ற முடியாவிட்டால் சமூகத்தொண்டு அமைப்புகளை அனுமதிப்பதற்கு பாராளுமன்றா உறுப்பினர் என்ற பதவியை பயன்படுத்தி அந்த பதவியை பிச்சை போட்ட அந்த மக்களைக்காப்பாற்ற வேண்டாமா?

முற்று முளுதாக இளையோரைக்கொண்ட ஒரு மாற்றுக்கட்சியே இன்றைய நிலையில் எம்மக்களுக்குத்தேவையேயன்றி பிராந்திய வல்லரசுகளின் நலன்களை பேணும் கட்சியல்ல

உங்கட கருத்துதான் எனதும்...

ஆகா!

என்ன அற்புதமான கருத்து வசீ.

Edited by விதுஷா

சனம் இடி பட்டு நசிங்கின போதும் பிச்சை எடுக்கும் நிலையிலை தள்ளப்பட்ட போதும் அந்த மக்களுக்காக கூட்டமைப்பு மகிந்தவின் கால்கலை பிடிச்சு கெஞ்சி இருக்க வேண்டும்... புலிகளாலை தான் இந்த நிலை அவர்களோடை இருந்ததாலை தான் இந்த நிலை எண்று நினைத்தார்களோ என்னவோ யாரும் அந்த மக்களை சீண்டக்கூட இல்லை...

இண்டைக்கு கைது செய்யப்பட்டு இருக்கும் போராளிகளில் பலரை கொண்டு போய் தமிழர் எல்லையோரகிராமங்களில் உள்ள காடுகளை வெட்டுகிறான் சிங்களவனை குடியேற்றுவதுக்காக... ஆனால் அவைகளை பற்றி எல்லாம் யாருக்கு கவலை... நாங்கள் நிரந்தர தீர்வும், தலைமைக்கு ஆள் எல்லோ பிடிச்சு கொண்டு திரியுறம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய புலத்துத்தமிழர் நிலையைப்பற்றி நான் அறிந்தவரையில் சில விடையங்களைக் கூறுகின்றேன். அங்கு மக்கள் குளப்பத்துடன் இருக்கின்றார்கள் யார் உண்மையானவர், யாரை ஆதரிப்பது என்பதில் ஒருவித புரிதலற்ற நிலையே காணப்படுகின்றது. இதைச்சாக்காக வைத்து குளம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க அனேகமான கட்சிகள் முற்படுகின்றன தமிழர் கூட்டமைப்பு உட்பட. அவர்களது எண்ணம் என்னவென்றால் இப்படித் தமிழர்கள் குழம்பியிருப்பதையே விரும்புகிறார்கள் காரணம் ஏற்கனவே திடமான முடிவெடுக்காதிருக்கும் வாக்களர்கள் இறுதிவேளையில் எதுவுமே செய்யமுடியாதபட்சத்தில் கூட்டமைப்பினிற்கே வாக்களிப்பார்கள் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. தமிழர்களும் ஏதாவது வரலாற்றுத்தவறை செய்துவிட்டார்கள் என பின்பு யாரும் கூறக்கூடாது எனும் பயத்திலோ அன்றேல் பொறுப்பை தம்மிடமிருந்து தட்டிக்கழிப்பதற்காகவோ இதையாவது சொய்hது விடமாட்டார்களா என்ன? ஆக இந்தியாவின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைய தம்மை நிறம்மாற்றியிருக்கும் தமிழர்கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் குறைந்த அளவு ஆசனங்கள் கிடைத்தாலும் கொழுத்த அறுவடைவாடைதான். இன்னுமெரு விடையம் புள்ளடிக்கடவுள் இருக்குமட்டும் எங்களுக்கும் திருவிழா என்பது போல் பதவிநாற்காலி சுகத்திற்கு அலையும் இந்த நாயிற்கடையாரை துரத்தவோண்டுமாகவிருந்தால் இந்தத் தேர்தலில் உண்மையானவர்கள் களமிறங்கவேண்டும் அல்லது உண்மையானவர்களை நாம் களமிறக்கவேண்டும். அதுகூட இத்தேர்த்தலில் சாத்தியமே ஆனால் சற்றும் தாமதிக்காது நாம் விழிப்படைவோமாகவிருந்தால். தமிழர் கூட்டமைப்பு இப்போதைக்கு முட்கம்பிவேலிகட்குள் வாடும் தமிழர்களை மீடபதற்காக ஒரு துரும்பத்தன்னும் தூக்கிப்போராடப் போவதில்லை காரணம் பாராளுமன்றம் போய் என்ன கிழிக்கப்போகிறீர்கள் என யாராவது கேட்டல் அதைத்தானே சொல்ல வேண்டும் அதைவிட காகமிருக்கப் பனம்பழம் விழுந்தகதையாக அவர்களை விடுவித்துப்போட்டால் அதுக்குப்பிறகு சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கக் குரல் கொடுக்கவோண்டும் சிலவேளை அவர்களும் வெளியாலை வந்திட்டால் எங்களுக்கு ஆப்பு எண்டு இந்திய துதிபாடியே காலத்தைக் கடத்தப்போகிறார்கள். தறபோதைய தெரிவு விக்கிரமநாயக்க கருனாரத்தினாவின் தலைமையிலான இடதுசாரி முண்ணணியுடன் தரமானவர்களை இணைப்பதனூடாக தமிழர்க்கான ஒரு தளத்தினை நாம் உருகாக்கலாம் அதன்பின்பு அத்தளத்திலிருந்தே காலப்போக்கில் எங்களுக்கான முழுமையாக உரிமைகளை வென்றடையக்கூடிய அரசியல் சக்தியை நாம் உருவாக்குவோம். எதையோ எல்லாம் செய்யாது விட்டிட்டம் இதையும் நாம் செய்யவாபோறம்?

கூட்டமிப்புப் பற்றி இன்னொரு செய்தி பதிவு இணையத்தில் இருந்து :http://www.pathivu.com/news/5568/54//d,view.அச்ப்க்ஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்வதற்கு வேண்டிய நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு காரணமாக இருந்த இந்தியா பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய கொள்கை வகுப்பாள் ஒரவரை மேற்கோள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடானது தமக்கு மிகவும் பரீட்சையமான மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதும் அவருக்கு வேண்டிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுப்பதுமேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்தியாவிற்கு எதிரான நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர் என்பதால் அவர் இலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகாவுடன் கூட்டணி அமைத்து பொது எதிர் கட்சி கூட்டமைப்பாக போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் எதிர் காலம் இல்லாத போய்விடும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் எச்சரிக்கையினை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவம் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவிற்கு சார்பான அரசியல் கட்சியாக மாற்றப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் தமக்கு சார்பான வைகயில் தமது முடிவுகளை ஏற்று நடக்கக் கூடிய கட்சியாக கூட்டமைப்பை மாற்ற இந்தியா முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டமைப்பைச் சிதைக்க யாரும் வெளியில் இருந்து சதி செய்யத் தேவையில்லை. அவர்கள் தாங்களாகவே தங்கள் ஒற்றுமையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முற்று முளுதாக இளையோரைக்கொண்ட ஒரு மாற்றுக்கட்சியே இன்றைய நிலையில் எம்மக்களுக்குத்தேவையேயன்றி பிராந்திய வல்லரசுகளின் நலன்களை பேணும் கட்சியல்ல

இளைஞரிடம் கொடுத்தால் பிறகு அவையள் ஆயுதம் தூக்கி பிரிவினை கேட்டால் பிராந்திய வல்லரசு பாவம் தானே.

பிராந்திய வல்லரசின் ஆசையை நிறைவேற்றாமல் விட்டால் தமிழனுக்கு மிச்சம்மிருக்கும் கோவணமும் இல்லாமல் போகும். அப்புமாரே

ஆனாபடியால்தான் சம்பந்தன் வல்லரசுபக்கம் நிக்கிறார்.

இளைஞோரிடம் கொடுத்து எம்மவருக்கு என்ன நடந்தது என்பது அவர் அறியாதவர் அல்ல.

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டமைப்பைச் சிதைக்க யாரும் வெளியில் இருந்து சதி செய்யத் தேவையில்லை. அவர்கள் தாங்களாகவே தங்கள் ஒற்றுமையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புலவர்

எமது நாற்றங்களை இங்கு கொட்டும் முன்...

அவர்களுடன் ஏதாவது தொடர்புகளை ஏற்படுத்தி விளக்கம் கேட்டீர்களா..

அவர்கள் யார்...?

எமது அண்ணனும் தம்பி சகோதரர்கள் தானே....

புலவர்

எமது நாற்றங்களை இங்கு கொட்டும் முன்...

அவர்களுடன் ஏதாவது தொடர்புகளை ஏற்படுத்தி விளக்கம் கேட்டீர்களா..

அவர்கள் யார்...?

எமது அண்ணனும் தம்பி சகோதரர்கள் தானே....

டக்லஸும் சங்கரியும் என்ன பக்கத்து வீட்டு சரக்குகளா? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சொல்வார்கள்

அதுக்கு அதுதான் ஞாபகம் வருமாம்

கருணாவும் லிள்ளையானும் என்ன பரம்பரையாக வந்த வில்லன்களா?

நீங்கள் தமிழர்களை மிக மிக பிழையாக விளங்கிவைத்திருக்கிறீங்கள்.. தெரியாமல் கையை நீட்டி கொண்டு திரியிறீங்கள்.. இழுத்து விழுத்திவிடுவார்கள் கவனம்..

ஏதோ சொல்வார்கள்

அதுக்கு அதுதான் ஞாபகம் வருமாம்

ஒண்டும் விளங்கவில்லை..

எதற்க்கு இப்படி ஒரு இலகுவில் விளங்கமுடியாத.... பதில்?

புலிகளும்/தலைவரும் இதே பிழையைதானே விட்டார்கள்.....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டும் விளங்கவில்லை..

எதற்க்கு இப்படி ஒரு இலகுவில் விளங்கமுடியாத.... பதில்?

புலிகளும்/தலைவரும் இதே பிழையைதானே விட்டார்கள்.....?

விளங்காத மாதிரி நடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்கலிடம் நிறயவே இருக்கு, தெளிவாக விளக்கலாம் நிர்வாகம் தூக்கிவிடும், :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா!

சம்பந்தருக்கு முன்னாள் பா.உ.க்களையே நேரில் அழைத்து விளக்கம் கொடுக்கவே நேரமில்லை.

ஏன் ஓரிரு மக்கள் பிரதி நிதிகளைக்கூடச்சந்திக்க நேரமில்லை.

எங்களுக்கு நேரமொதுக்கி...

விளக்கம் கொடுத்து....

நாங்கள் தெளிந்து.....

வாக்குப்போட்டு.....

இதுக்குள்ளை மகிந்த நாமலை பிரதமராக்கிப்போடுவான்.

வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும் லிள்ளையானும் என்ன பரம்பரையாக வந்த வில்லன்களா?

நீங்கள் தமிழர்களை மிக மிக பிழையாக விளங்கிவைத்திருக்கிறீங்கள்.. தெரியாமல் கையை நீட்டி கொண்டு திரியிறீங்கள்.. இழுத்து விழுத்திவிடுவார்கள் கவனம்..

கருணாவும் லிள்ளையானும் என்ன பரம்பரையாக வந்த வில்லன்களா?

நான் எப்போ இப்படி எழுதினேன்

கருணாவும் லிள்ளையானும் என்ன பரம்பரையாக வந்த வில்லன்களா?

நான் எப்போ இப்படி எழுதினேன்

இல்லை.. நீங்கள்.. அசடு மூஞ்ச கொண்டவர நிரந்தர கீரோவா நெக்கிறீங்கள்.. அதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத குழுக்களை வைத்திருக்கும் வரை அவர்கள் நிரந்தர வில்லன்கள்தான் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத குழுக்களை வைத்திருக்கும் வரை அவர்கள் நிரந்தர வில்லன்கள்தான் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.