Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது

Featured Replies

சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது

தமிழீழ நிருபர்

திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010

Sampanthan

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார்.

முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார்.

இவரது முதலாவது கருத்தான அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்று எதனை கூறுகின்றார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? மா நில சுய ஆட்சியா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ தாயக நாட்டினையா?

இவருக்கு எதிலுமே தெளிவு இல்லை அல்லது தேர்தலிற்காக எதனையும் கூறி நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஏற்றால் போல் கதைத்து தேர்தலில் வெல்லவேண்டும் என்பதே நோக்கம். அதாவது இலங்கை அரசாங்கமோ அன்றி இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது 13 வது சீர்திருத்தத்திற்கு மேலாக எதனையும் வழங்கவோ தயாராக இல்லை. இதனை மஹிந்த உறுதியாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு மேல் இலங்கை பாராளுமன்றில் எதனையாவது பெற முடியும் என மக்களுக்கு உறுதி மொழி கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.

ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுடன் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறுவது ஒரு நியாயப்பாடாக இருந்தாலும் அதனை கூட கூட்டமைப்பினால் தீர்க்கமுடியாது மாறாக அரசாங்கத்திடம் தம்மை காப்பாற்றி கொள்வதற்காக எதனையாவது செய்ய வேண்டும். நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை.

இதில் இருந்து அவரது அரசியல் சாணக்கியம் எப்படி இருக்கின்றது என கூறமுடியும். ஆகவே மக்களை வைத்து தனக்கு விருப்பம் இல்லாதவர்களை வெளியேற்றுவதும் மக்களின் துன்பங்களை வைத்து தேர்தலில் எவ்வாறு வெல்லலாம் என திட்டமிடுவதும் அரசியல் சாணக்கியம் அல்ல அரசியல் போலித்தனம் என்றே கூற வேண்டும்.

2004 ஆம் ஆண்டில் இவர் மக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான ஒற்றுமையினை வலியுறுத்தி , விடுதலைக்கான போராட்டத்திற்கு ஜன நாயக ரீதியான ஆதரவு திரட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிட வைத்தனர். 1000 மேற்பட்ட அரசியல் போராளிகளும் மக்களும் தமிழர் தாயகத்தில் வீடு வீடாக சென்றுதான் கூட்டமைப்புக்கு வாக்கு கேட்டார்கள்.

வாக்கு கேட்கும் போது எந்த ஒரு போராளியும் கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்புவதுஇலங்கை அரசாங்கம் எதுவும் தரும் என்பதற்காக அல்ல. அபிவிருத்திக்காக அல்ல எமது உரிமைகளுக்கான நியாயங்களை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் ஜன நாயக ரீதியில் எடுத்து உரைப்பதற்காகவே என தெளிவாக கூறி வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்தார்கள்.

ஆனால் சம்பந்தன் வானொலியில் கூறும்போது என்ன சொல்கின்றார். கடந்த வருட தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள் அதே மக்கள் தாம் ஏமாந்து போனதாகவும் தாம் தெரிவு செய்த பிரதி நிதிகள் வெறும் சுலோகங்களை சொன்னார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என கூறியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக கஜன் மற்றும் பத்மினி அவர்களின் நீக்கத்தினை நியாயப்படுத்தினார்.

இங்கு கேள்வி என்னவெனில் யாழ் உதயன் நிர்வாகமும் ஒரு சில யாழ் புத்திஜீவிகளும் மக்களின் ஒட்டுமொத்த கருத்தினை கூறமுடியாது. தவிர கடந்த தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆலோசனைப்படி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. அவர்களின் கருத்தின் படியே அனைவரும் நடந்தனர். தவிர யதார்த்தம் என்னவெனில் கோசங்களைத்தான் போடலாமே தவிர கூட்டமைப்பு எதனையும் செய்ய முடியாது.

சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும். அவ்வாறு எனின் யாழ்ப்பாணம் சொலமன் சிறில் அவர்களும் கோசம் மட்டும் தான் போட்டார். ஏன் அவரை புதிய பட்டியலில் இருந்து நீக்கவில்லை.

சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? சுலோகம் போடுகின்றவர்களை விடுத்து இராஜ தந்திரமாக கருமம் ஆற்றும் தலைவர் என உங்களை புகழ்பவர்களும் நீங்களும் இதுவரை முள்ளீவாய்க்காலிற்கு பின்னர் என்ன செய்தீர்கள்?

ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள்.

தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட கிசோர், சிவாஜி ஆக்யோரின் முயற்சியே. இதற்காக அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் சிவாஜி, கிசோர் ஆகியோரின் முயற்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தாமே எல்லாம் செய்ததாக வெள்ளை வேட்டியுடன் முன்னுக்கு நின்றார்கள். படம் பிடித்து பத்திரிகைகளிலும் போட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மஹிந்தவுடன் சேர்ந்தார்கள் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ வேறு விடயம் ஆனால் அதனை சம்பந்தன் கூறுவதற்கு அருகதை இல்லை.

ஏனெனில் அவரும் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது.

ஆகவே சம்பந்தன் நிலைமைக்கேற்ப ஆள் மாறாட்டம் செய்வதனை நிறுத்தவேண்டும். ஒப்பீட்டு ரீதியாக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களே பல தடவை மக்களை ஏமாற்றியுள்ளனர். வெறும் சுலோகங்கள் என்று கூறும் சம்பந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தினையும் அதனை கொண்டுவந்த அரசியல் தலைவர்களையும் எதிர்த்தோ அல்லது தூக்கி வீசியோ பேசுவாரா? அதுவும் மக்களால் வாக்கு மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே.

தமிழ் மக்களின் தலைமை என்பது மக்களுக்கு தெளிவான கருத்துக்களை கூறி சரியான தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களை வழி நடாத்தி செல்வதாகும். சுயாதீனமாக மக்கள் வாக்களிப்பது வேறு, அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், தனி நபர்களின் செல்வாக்கு, அரச செல்வாக்கு ஆகியனவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையினை சொல்லி அரசியலை நடாத்தவேண்டும். அதனை விடுத்து இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கு எதனை சொன்னால் மக்கள் ஏற்பார்கள் எதனை சொன்னால் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று திட்டம் போட்டு தனது வெற்றியினையும், தனது இருப்பிற்காக மற்றவர்களை புறம் தள்ளுவது ஜன நாயகம் அல்ல.

இந்தியா ஒரு வருடத்திற்கு தீர்வு தரும், இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து தரும் என கூறுவதும் அதனை கஜேந்திரன், கஜன், பத்மினி ஆகியோர் எதிர்க்கின்றனர் என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள்.

ஆனால் உண்மை அப்படி அல்ல இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா? தவிர சிங்களவன் இலங்கை முழுவதும் சிங்கள பெளத்த நாடு என்று கூறும்போது ஒரு சில தமிழ் எம்.பிக்கள் அதனை மறுத்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. அது வெறும் கோசம் என்றால் சம்பந்தனின் உண்மையான கோசம் என்ன?

டக்ளசின் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுய ஆட்சியா? அப்படி எனில் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது

http://www.eelanatham.net/story/sampanthan%20politics

Edited by தயா

நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை.

சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும்.

சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்?

ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள்.

தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட சிவாஜி முயற்சியே. சம்பந்தன் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது.

இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஸ்ரீ லங்கா அரசியவல்வாதிகளும் தமிழ் ஈழத்திற்கு ஒரு தடையாக இருப்பவர்கள். இவர்கள் தாம் ஐந்து லட்சம் ஸ்ரீ லங்கா ஆயுத தாரிகளின் கையில் அகப்பட்டிருக்கும் தமிழர், உலகத்திற்கு தமக்கு நடக்கும் அநியாயங்களை சொல்ல விடாமால் தடுப்பவர்கள்.

இவர்கள் இல்லாமல் இருந்தாலே, உலகிற்கு ஸ்ரீ லங்காவின் இன அழிப்பை இலகுவாக தெரியப்படுத்தலாம். இவர்களை பெரிது படுத்தும் வெளிநாடு தமிழ் ஊடகங்களும் வேறு எதவாது பிரயோசனமான செய்திகளை போடலாம்.

சம்பந்தர் என்ன டங்கி என்ன ஏன் என்னும் எவன் வந்து நாங்கள் தமிழ்த் தேசியத்துக்காக தேர்தலில் நிக்கிறம் தமிழ் ஈழம் தான் எங்கள் முடிவென்றால் அதை எவனும் நம்புறமாதிரி இல்லை.

தனி ஈழம்தான் முடிவென்றால் அதுக்கு பாராளுமன்றம் போகமுடியாது சிறிலங்கா வின் ஒற்றையாட்சிக்கு விரோதமாக யாரும் பாராளுமன்ருக்குச் செல்லமுடியாது. பாராளுமன்றம் போகின்றவர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுதான் போகிறார்கள். இதுதான் இலங்கை அரசியல்.

இதை தெரிந்தும் தான் புலிகள் இவர்களை பாராளுமன்றம் அனுப்பினார்கள்

காரணம் இவர்கள் போய் தமிழ் ஈழம் பெற்றுத்தருவார்கள் என்றில்லை இவர்களால் சில அரசியல் எட்டப்பர்களை தடுக்கமுடியுமேன்பதாலும் வெறும் சில அரசியல் காய் நகர்த்தளுக்காக்கவும்தான்.

கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பு பற்றி அறியாதவர்கள் இல்லை மகிந்தக்கள்.. அதனால் தான் என்னவோ கூட்டமைப்பைக் கூட ஒரு பொருட்டாக கூட அவர்க எடுக்கவில்லை.

இப்போ சொல்லுங்கள் புலிகள் இல்லாத ஒரு இடத்தில் எவனால் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்கமுடியும்? தனிநாடு கோருவது இலங்கை அரசிலுக்கு விரோதமானது என்றபின் யார் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பது? அல்லது அவர்கள் புலிகள் போல் போராடவேண்டுமா?

தனிநாட்டுக்கோரிக்கை இனி புலத்தில்தான் முன்னெடுக்கமுடியும்... தாயகத்தில் வெறும் அரசியல்தான் நடத்தமுடியும்.

எப்படிப் பார்த்தாலும் யார் வென்றாலும் தோற்கப்போவது தமிழ் மக்கள் தான்... அனையவிருக்கும் நெருப்புக்கு இப்படியான கட்டுரைகளை எழுதி என்னும் எரியவைக்கவும்.. சாம்பல் ஆனபின் எரியாதுதானே.

  • தொடங்கியவர்

ஆக மொத்தம் தாயகத்திலை இருந்து என்ன தான் செய்ய முடியும் என்கிறீர்கள்...??? இந்தியனுக்கும் சொறிலங்கனுக்கும் கழுவி துடைக்கிறது மட்டும் தானே...??

ஒரு வேளை 70 பதுகளில் தலைவர் பிரபாகரன் வேறு ஒரு அமைப்பில் இருந்து பிரிந்து வருவதை நீங்கள் விரும்பி இருக்க மாட்டீர்கள் போலுள்ளது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

1. முள்ளிவாய்க்கால் இடிபாடுகளில் இருந்து மக்களை வெளியில் கொண்டு வருவதும் 2. வடக்கு கிழக்கு மக்களை ஒருங்கிணைப்பதும் 3. முஸ்லிம் தலைமையோடு நல்லுறவை ஏற்படுத்துவதும்தான் இப்போது செய்ய வேண்டிய பணி. இதை சம்பந்தர் சரியாகவே ஆரம்பித்திருக்கிறார். கடந்த தேர்தலைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களையும் அவர்களது அரசியல்ரீதியான எதிர்ப்பையும் அவர் ஒருங்கிணைத்தமையும் முஸ்லிம் தலைமைகளோடு இணக்கப் பாட்டுக்கு வந்தமையும் சரியான ஆரம்பம். கிழக்கு மாகாணத்து தலைவர் என்கிறதால்தான் இது அவருக்குச் சாத்தியமாகி உள்ளது. இதை கஜேந்திரகுமார் உணரவில்லை. பென்ஸ்கார் சேகரிப்பவர்களது சேவையும் எமது விடுதலைக்கு அவசியமானதே. ஆனாலும் இன்று தோற்றுப் போயிருக்கிற எங்கள் மக்களின் கையறு நிலையை புரியாமல் கஜேந்திரகுமார் சம்பந்தரை துரோகி ஆக்கிற யாப்பாண மையவாத விழையாட்டை ஆரம்பிக்கக்கூடாது.

மக்களுக்கு மேல் அதிகாரம் செய்வதுபோல “என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள்.” என்று ககொழும்பில் இருந்துகொண்டு ஜேந்திரகுமார் கூறுவது தவறு. யாழுக்கு வெளியிலும் மக்கள் இருக்கிறார்கள் க்ஜேந்திரகுமார். யாழ் மக்கள் என்று சொல்லாமல் ஒரு பேச்சுக்காவது ஈழத்து மக்கள் என்று சொல்லுங்கள். தோற்றுப்போன மக்கள் இடிபாடுகளுக்குள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது பற்றி அவர்களை தீர்ப்பளிக்க விடுங்கள். புது அணி அமைத்துப் போட்டிபோடுவதோ அல்லது சம்பந்தரின் அணியை ஆதரிப்பதோ உங்கள் விருப்பம் கஜேந்திரகுமார். ஆனால் என்னோடு நின்றால் தமிழ் தியாகிகள் என்னை எதிர்த்தால் தமிழ் இனத் துரோகிகள் என்கிற யாழ் மைய விழையாட்டை ஆரம்பித்து எங்கள் மக்களைப் பிரித்து விடாதீர்கள்.

Edited by poet

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் இடிபாடுகளில் இருந்து மக்கலை வெளியில் கொண்டு வருவதும் வடக்கு கிழக்கு மக்களை ஒருங்கிணைப்பதும் முஸ்லிம் தலைமையோடு நல்லுறவை ஏற்படுத்துவதும்தான் இப்போது செய்ய வேண்டிய பணி. இதை சம்பந்தர் ஆரம்பித்திருக்கிறார். கிழக்கு மாகாணத்து தலைவர் என்கிறதால் இது அவருக்குச் சாத்தியமாக உள்ளது. இதை கஜேந்திரகுமார் உணரவில்லை. பென்ஸ்கார் சேகரிப்பவர்களது சேவையும் எமது விடுதலைக்கு அவசியமானதே. ஆனாலும் இன்று தோற்றுப் போயிருக்கிற எங்கள் மக்களின் கையறு நிலையை புரியாமல் கஜேந்திரகுமார் சம்பந்தரை துரோகி ஆக்கிற யாப்பாண மையவாத விழையாட்டை ஆரம்பிக்கக்கூடாது.

மக்களுக்கு மேல் அதிகாரம் செய்வதுபோல “என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள்.” என்று கஜேந்திரகுமார் கூறுவது தவறு. தோற்றுப்போன மக்கள் இடிபாடுகளுக்குள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது பற்றி அவர்களை தீர்ப்பளிக்க விடுங்கள். புது அணி அமைத்துப் போட்டிபோடுவதும் அல்லது சம்பந்தரின் அணியை ஆதரிப்பதும் உங்கள் விருப்பம் கஜேந்திரகுமார். ஆனால் என்னோடு நின்றால் தமிழ் தியாகிகள் என்னை எதிர்த்தால் தமிழ் இனத் துரோகிகள் என்கிற யாழ் மைய விழையாட்டு இனியும் வேண்டாம் கஜெந்திரகுமார்.

முள்ளி வாய்கால் சனத்தை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர கூட்டமைப்பு இது வரைக்கும் ஒருவருடம் ஆக போகிறது என்ன செய்தது எண்டதையும் சொல்வீர்களா....??? இது வரை கிளிக்காத எதை இனிமேல் கிளிக்க போகினம்... ???

இல்லை அந்த மக்களுக்கு இப்போது விலக்க பட்டவர்கள் தான் தடையாக இருந்தார்களோ...??? 22 சம்பந்தனுக்கு ஆதரவான பொம்மைகள் எதையும் செய்வார்கள் எண்று நம்புறவர்கள் ஒருவேளை உங்களை ஆதரிக்கலாம்...

ஆக மொத்தம் தாயகத்திலை இருந்து என்ன தான் செய்ய முடியும் என்கிறீர்கள்...??? இந்தியனுக்கும் சொறிலங்கனுக்கும் கழுவி துடைக்கிறது மட்டும் தானே...??

ஒரு வேளை 70 பதுகளில் தலைவர் பிரபாகரன் வேறு ஒரு அமைப்பில் இருந்து பிரிந்து வருவதை நீங்கள் விரும்பி இருக்க மாட்டீர்கள் போலுள்ளது...

தயா

இந்தியனுக்கும் சொரியங்களுக்கும் குண்டி கழுவும் நிலையிதான் இன்று வந்து நிக்கிறோம்... கொஞ்சமாவது நாம் பலமா இல்லாவிட்டால் குண்டிதான் வேறென்ன. அதுக்கு குறைஞ்சபட்சம் ஒற்றுமையா எண்டாலும் இருக்கவேண்டாமா?

எவன எப்படி இருந்தாலும் இயக்கம் சேர்த்துவைத்த கூட்டமைப்பை உடைப்பது இயக்கத்துக்கு செய்யும் துரோகம். தலைமை சரியிலாவிட்டால் அதை மாற்றி எண்டாலும் ஒரு ஒத்த கருத்துக்கு வந்திருக்கவேண்டும். எல்லாருக்கும் ஒரு முடிவெடுத்து போனால் சனாயாக சாக்கடையில் மூள்கவேண்டிவரும்.

போனவருசம் நடந்ததுகளே இந்த வருடம் மாறிவரும் போது 70 ம் ஆண்டளவில் தலைவர் பிரிந்து சென்ற சூழலை நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள். நீங்கள் தலைவரை இவர்களில் தேடுகிறீர்களா அல்லது ஒப்பிடுகிறீர்களா?

Edited by Sooravali

முள்ளி வாய்கால் சனத்தை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர கூட்டமைப்பு இது வரைக்கும் ஒருவருடம் ஆக போகிறது என்ன செய்தது எண்டதையும் சொல்வீர்களா....??? இது வரை கிளிக்காத எதை இனிமேல் கிளிக்க போகினம்... ???

என்னய்யா

இடிபாடுகளுக்குள் இருந்த சனத்தை கூட்டமைப்பு எப்பிடி தனிய விடுவிக்கும்? விடுவிக்கவேன்று அரசாங்கத்தோட சேர்ந்தால் துரோகி என்பார்கள்.. விடுவிகத்தான் சனாதிபதித் தேர்தலின் பொது ராசபக்சவோடு பேரம் பேசினார்கள் முடியாமல் போக சரத்துடன் பேசினார்கள் அதுக்கும் வாங்கிகட்டினார்கள்...

நிலமைஎன்று வந்தால் அதில் இருந்து பாதுகப்பா வெளியில் வருவதை முன்னர் பார்க்கவேண்டும்... அதுக்குப்பிறகு தான் மற்றயதை யோசிக்கலாம். இந்திய இராணுவம் இருக்கும்போது தலைவரும் பிரேமதாசாவோட இதைத்தான் செய்தார். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகந்து ஒரு இக்கட்டான நிலையிலும் தலைவர் சமாதான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

ஒஸ்லோவில் அன்ரன் அண்ணா பெடரல் முறைக்கு ஒத்துக்கொண்டார்...

இந்த நிலையில் சம்பந்தர் இப்படி ஒரு நீண்ட காலத்திட்டம் தீட்டி செயல்ப்படமாட்டார் ஆனாலும் இப்போது இருக்கும் நிலையில் இருந்து கொண்டு ஒருபடி மேலே போனபின் இறுதி இலக்கை தேடிப் பயணிக்கலாம்.

தமிழீழ தாகம் என்றும் தணியாத ஒன்று அதுக்கு சம்பந்தரினால் அது அழிந்து விடுமென்று நினைப்பது தவறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதார்தத்தை பேச வேண்டும், அடிப்படையில் இருந்து யாரும் தடம் மாறகூடாது. தமிழீம் நோக்கிய பயனத்தையும், அதன் அங்கிகாரத்துக்காகவும் புலம்பெயர் தமிழர் தம்போராட்டதை தொடரட்டும், அடைபட்டு இருக்கும் போராளிகளையும், மக்களையும் விடுவிக்கும் பணியிலும் அவர்களது இயல்பு வாழ்கையை மீட்கும் பணியிலும் அங்கிருக்கும் அரசியல் கட்சிகள் போராடட்டும், அவர்களால் தற்போது முடிந்தது அதுதான், அதுதான் தற்போதை தேள்வையும் கூட. :D

  • கருத்துக்கள உறவுகள்

பணம் மற்றும் வெளி நாட்டு உள் நாட்டு அரசியல்

நெருக்கடிகளுக்கும் மத்தியில் லட்ச்சக்கணக்கான மக்களை

அடைத்து வைத்திருப்பது சும்மா அல்ல.

தமிழ் மக்களிடமும் அதன் தலைவர்களிடமும் பேரம் பேசுவதற்காகவே.

வேறுஎந்த நோக்கமும் அல்ல வரும் தேர்தல்களும் விடுவிக்கப்படும் மக்களின் வாக்குகளுமே.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டம் கட்டமாக மக்கள் விடுவிக்கப்பட்டால் அது எவ்வாறு முடியும்

யார் என்ன கூறினாலும் அரசாங்கம் தங்கள் நிகழ்ச்சி நிரலிற்கேற்பவே

நடக்கும்.

இருந்தாலும் கூட்டமைப்பு எந்த ஓரிடத்திலும் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

வாத்தியார்

..............

அவர்ள் குரல் கொடுக்கவில்லை என்பதை விட அவர்களை ஒரு பொருட்டாகவே அரசு மதிக்கவில்லை என்பதுதான் சரியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல காலமாக கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எழுதி போராடி வருகின்றேன்

ஒரு உண்மையை சொல்லவா...?

இன்றைய கூட்டமைப்பின் பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் அடித்தளம் போட்டவர்களில் முக்கியமானவர்கள் யாழ். களத்தில் உள்ளனர்

  • தொடங்கியவர்

போனவருசம் நடந்ததுகளே இந்த வருடம் மாறிவரும் போது 70 ம் ஆண்டளவில் தலைவர் பிரிந்து சென்ற சூழலை நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள். நீங்கள் தலைவரை இவர்களில் தேடுகிறீர்களா அல்லது ஒப்பிடுகிறீர்களா?

நான் உங்களிட்டை கேக்க விரும்புவதே 70 களில் தேவை பட்டாத ஒற்றுமை கோசம் இப்ப மட்டும் எப்படி வந்தது...

  • தொடங்கியவர்

என்னய்யா

இடிபாடுகளுக்குள் இருந்த சனத்தை கூட்டமைப்பு எப்பிடி தனிய விடுவிக்கும்? விடுவிக்கவேன்று அரசாங்கத்தோட சேர்ந்தால் துரோகி என்பார்கள்.. விடுவிகத்தான் சனாதிபதித் தேர்தலின் பொது ராசபக்சவோடு பேரம் பேசினார்கள் முடியாமல் போக சரத்துடன் பேசினார்கள் அதுக்கும் வாங்கிகட்டினார்கள்...

அப்போ இனியும் எதையும் செய்ய போவதில்லை என்கிறீர்கள்... சிங்கள ஜனாதிபதிகளோடும் சிங்களவரோடும் பேச கூடாது எண்றால் எதுக்காக சிங்களவரின் பாராளுமண்றுக்கு போகிறார்கள்...

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கையில் ஆட்ச்சியில் இருப்பவர்களோடு பேசாமல் யாருடன் புலிகள் பேசினார்கள்...?? கூட்டமைப்புக்கு மட்டும் வானத்திலை இருந்து யாரும் இறங்கி வரப்போகினமே...??

உண்மையில் தமிழரின் அடிப்படை பிரச்சினையில் இருந்து எதை தீர்க்க வேண்டுமானாலும் இனியும் கூட்டமைப்பு மகிந்தவுடன் தான் பேச வேண்டும்...

நிலமைஎன்று வந்தால் அதில் இருந்து பாதுகப்பா வெளியில் வருவதை முன்னர் பார்க்கவேண்டும்... அதுக்குப்பிறகு தான் மற்றயதை யோசிக்கலாம். இந்திய இராணுவம் இருக்கும்போது தலைவரும் பிரேமதாசாவோட இதைத்தான் செய்தார். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகந்து ஒரு இக்கட்டான நிலையிலும் தலைவர் சமாதான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

ஒஸ்லோவில் அன்ரன் அண்ணா பெடரல் முறைக்கு ஒத்துக்கொண்டார்...

தலைவர் போர் நிறுத்ததுக்கு போனதுக்கு காரணம் இரட்டை கோபுரம் தகர்ப்பு அல்ல...

அங்கே நடைமுறையில் இருந்த தமிழீழ அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டி தமிழீழமாக மாற்றுவதுக்கும்.. தமிழர்களுக்கு தீர்வு எண்று சிங்களம் எதையும் தர மாட்டாது என்பதை சரவதேசத்துக்கு தெளிவு படுத்தவுமே...

இவை எல்லாவற்றியும் தனது செல்வாக்கால் கெடுத்தது இந்தியா... அந்த இந்தியாவுடன் தான் கூட்டமைப்பு குலாவுகிறது...

இந்த நிலையில் சம்பந்தர் இப்படி ஒரு நீண்ட காலத்திட்டம் தீட்டி செயல்ப்படமாட்டார் ஆனாலும் இப்போது இருக்கும் நிலையில் இருந்து கொண்டு ஒருபடி மேலே போனபின் இறுதி இலக்கை தேடிப் பயணிக்கலாம்.

தமிழீழ தாகம் என்றும் தணியாத ஒன்று அதுக்கு சம்பந்தரினால் அது அழிந்து விடுமென்று நினைப்பது தவறு.

கலைஞர் கருணாநிதி என்பவர் அதிகாரத்துக்கு வந்ததினால் தான் தமிழகத்தில் தமிழன் இன உணர்வு அற்று போய் இருக்கிறான்... !

அப்போ இனியும் எதையும் செய்ய போவதில்லை என்கிறீர்கள்... சிங்கள ஜனாதிபதிகளோடும் சிங்களவரோடும் பேச கூடாது எண்றால் எதுக்காக சிங்களவரின் பாராளுமண்றுக்கு போகிறார்கள்...

சிங்கள சனாதிபதியோடும் சிங்களததொடும்தான் பேசவேண்டும்... அனால் தமிழ் ஈழத்தைப்றி பேசமுடியாது..

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கையில் ஆட்ச்சியில் இருப்பவர்களோடு பேசாமல் யாருடன் புலிகள் பேசினார்கள்...?? கூட்டமைப்புக்கு மட்டும் வானத்திலை இருந்து யாரும் இறங்கி வரப்போகினமே...??

ஒருநாளும் புலிகள் தமிழ் ஈழம் பற்றி அவர்களுடன் பேசவில்லை... சிங்களத்துடன் பேசுவதாக இருந்தாலும் ஒரேநாடு என்ற ஒரு நிலைப்பட்டுடந்தான் பேசவேண்டும். அப்படி ஒரு முடிவெடுத்தால் தானே வில்லங்கம். எல்லாரும் எம்பிக்குதுவம். இப்பவும் அதைத்தான் எடுத்தினம் விளைவு.....................................!

உண்மையில் தமிழரின் அடிப்படை பிரச்சினையில் இருந்து எதை தீர்க்க வேண்டுமானாலும் இனியும் கூட்டமைப்பு மகிந்தவுடன் தான் பேச வேண்டும்...

மகிந்தவிடம் பேசவேண்டுமென்றால் சில அடிப்படைகளை கைவிடத்தான் வேண்டும்..

தலைவர் போர் நிறுத்ததுக்கு போனதுக்கு காரணம் இரட்டை கோபுரம் தகர்ப்பு அல்ல...

அங்கே நடைமுறையில் இருந்த தமிழீழ அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டி தமிழீழமாக மாற்றுவதுக்கும்.. தமிழர்களுக்கு தீர்வு எண்று சிங்களம் எதையும் தர மாட்டாது என்பதை சரவதேசத்துக்கு தெளிவு படுத்தவுமே...

இவை எல்லாவற்றியும் தனது செல்வாக்கால் கெடுத்தது இந்தியா... அந்த இந்தியாவுடன் தான் கூட்டமைப்பு குலாவுகிறது...

கலைஞர் கருணாநிதி என்பவர் அதிகாரத்துக்கு வந்ததினால் தான் தமிழகத்தில் தமிழன் இன உணர்வு அற்று போய் இருக்கிறான்... !

இரட்டை கோபுரம் சாய்ந்தபினர்தான் உலக ஒழுக்கில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அதற்கேற்றால்போல் தமது அரசியல் இராணுவ அணுகுமுறையை மாற்றி அமக்கவேண்டியதாக இருந்ததாகவும் தலைவரே சொல்லியிருந்தார். அந்த சூழலைப் பயன்படுத்தி தமிழ் தரப்பின் அரசியல் அங்கிகாரத்தையும் பெரமுயன்றார்கள்.

ஆனால் இரட்டைக்கோபுரத்தின் முடிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையெண்டு சொல்வது எங்களை நாங்களே ஏமாற்றுவது போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் பொன்னானது சூறாவளி அவர்களே

  • தொடங்கியவர்

சிங்கள சனாதிபதியோடும் சிங்களததொடும்தான் பேசவேண்டும்... அனால் தமிழ் ஈழத்தைப்றி பேசமுடியாது..

ஒருநாளும் புலிகள் தமிழ் ஈழம் பற்றி அவர்களுடன் பேசவில்லை... சிங்களத்துடன் பேசுவதாக இருந்தாலும் ஒரேநாடு என்ற ஒரு நிலைப்பட்டுடந்தான் பேசவேண்டும். அப்படி ஒரு முடிவெடுத்தால் தானே வில்லங்கம். எல்லாரும் எம்பிக்குதுவம். இப்பவும் அதைத்தான் எடுத்தினம் விளைவு.....................................!

மகிந்தவிடம் பேசவேண்டுமென்றால் சில அடிப்படைகளை கைவிடத்தான் வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

பொயெட்,

முள்ளிவாய்க்காலுக்குள் சிதறுண்ட எம் மக்களை தூக்கி எழுப்புவதும், தெந்தமிழீழ மக்களை சேர்த்துக்கொள்வதும், முஸ்லீம்களுடன் நல்லுறவைப் பேணுவதும் தேவையானதுதான்.புலிகளும் இதைத்தான் இதுவரையும் செய்தார்கள். முள்ளிவாய்க்காளில் தமது உயிர் உள்லவரைப் போராடிப் பார்த்ததும் அந்த மக்கலைக் காப்பாற்றத்தான். அதை இல்லையென்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்தது தெந்தமிழீழ மக்கள் பற்றியது. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் தெந்தமிழீழ மக்களின் பங்களிப்பென்பது வட தமிழீழ மக்களின் பங்களிப்பிற்கு நிகரானது.இயக்கத்தின் துணைத்தளபதியாகக்கூட இருந்தவர் ஒரு தெந்தமீழ தமிழர். ஆகவே தெந்தமிழீழ மக்களுக்கான சம அந்தஸ்த்டு என்பதில் புலிகள் கவனமாகவே இருந்தனர். மூன்றாவது முஸ்லீம்கள் பற்றியது. தமிழர்களுடன் அவர்கள் முரண்பட்டதற்கு பல காரனங்கள் உண்டு, அதில் முக்கியமானது பிரித்தாளும் சிங்களத் தந்திரத்திற்கு அவர்கள் அள்ளுப்பட்டுப் போனது. அதேவேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதும் வரலாறு. ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுடன் சேர்ந்து முஸ்லீம் ஊர்காவல் படை செய்த தமிழர் இனவழிப்புகளும் எமது விரிசலுக்குக் காரனம். புலிகள் முடிந்த போதெல்லாம் முஸ்ல்லிம்களுடன் சமரசம் செய்தே வந்துள்ளனர்.

ஆக, சம்பந்தன் தான் இதைச் செய்ய துணிந்திருக்கிறார் என்று நினைக்கவில்லை.

இங்கு எதிர்க்கப்படுவது சம்பந்தன் செய்யப்போவதாகக் கூறிக்கொள்ளும் நடவடிக்கைகள் அல்ல. மாறாக அவர் யாரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப செயல்ப்படுகிறார் என்பதுதான்.

தமிழ்த் தேசியத்தை முற்றாக சிதைக்கும் நோக்குடன் நடத்தப்படும் காய் நகர்த்தல்களில் சம்பந்தன் ஐய்யாவும் எடுபடப் போகிறாரே என்கிற ஆதங்கம் தான்.அவர் தேசியத்தின்பால் நின்று தமிழரின் தாயகக் கோரிக்கையையும், சுய நிர்ணய உரிமையையும் ஆதரித்தால் தவறேதுமில்லை. ஆனால் அவரை ஆட்டுவிக்க விரும்புபவர்கள் அதைச் செய்ய விடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இன்னொரு விடயம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்ச ஒருவர் தான் தெந்தமிழீழ மக்கலையும் முஸ்லீம்கலையும் இணைக்க முடியும் என்பது, வட தமிழீழத்தைச் சேர்ந்த எவருக்கும் தெந்தமிழீழ மக்கள் செவி சாய்க்கப்போவதில்லை என்று கூறுமாட்போல் உள்ளது. இதைத்தானே தனது சுக போக வாழ்க்கைக்காக இனத்தையும், தேசியத்தையும் விற்றுக்கொண்டே சிங்களத்திடம் ஓடிப்போய் ஒட்டிக்கொண்ட கருணாவும் சொன்னான். அவனது போலிப் பிரதேச வாதத்தி நீங்களும் இன்று ஆமோதிப்பது அசவுகரியமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் பேசுவதால் எந்தப்பயனுமில்லை. அவன் எமக்கு எந்தவொரு தீர்வையும் தரப்போவதில்லை. அவன் இப்போது இருக்கிற நிலையில் எமாகுத் தரவேன்டிய தேவையுமில்லை. புலிகள் இருக்கும்வரை பேரம் பேசும் சக்தியாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருப்பது வெறும் செல்லாக்கசுகளே.

இங்கு பலர் கூறியதுபோல இலங்கை அரசியல் சட்டத்தை ஏற்று பாராளுமன்ரம் போகிறவர்களால் எமக்கு எந்தச் சமவுரிமையையும் பெற்றுத்தர முடியாது என்பதுதான் உண்மை. ஒற்றை நாடு என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட தனிச் சிங்கள பவுத்த பாராளுமன்ற மற்றும் அரசியல் சட்டத்திற்கூடாக தெரிவு செய்யப்படும் எவராக இருந்தாலும் தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றியோ அல்லது இறமை பற்றியோ பேச முடியாது. ஆகவே இந்தப் பாராளுமன்ற கதிரைப் போட்டிகளில் ஈடுபடுவதால் நாம் ஒரு துரும்பையுமே பெற முடியாது.

என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலையுமே தமிழர்கள் அனைவரும் புறக்கணித்து "இது எமக்கான தேர்தல் அல்ல, மாறாக சிங்களத்துத் தேர்தல், இதனால் எமக்கு எந்த உரிமையையும் பெற்றுக்கொடுக்க முடியாது, ஆகவே இத்தேர்தல்களில் பங்கு கொள்வதில்லை என்று தமிழராகிய நாம் முடிவெடுத்திருக்கிறோம்" என்று உலகறிய அறிவித்துப் புறக்கணிப்பதுதான் சரி.

அண்ணை தகவல்களை சரியா பாத்து கொள்ளுங்கோ.... புலிகள் தன்னிச்சை போ நிறுத்தம் செய்து கொண்டது 2000 ம் ஆண்டின் இறுதியில்... இரணில் புலிகள் புரிந்துணர்வு உடன் படிக்கை கைச்சாத்தானது 2001 சித்திரை யில்... இரட்டை கோபுரம் தகர்க்க பட்டது 2001 ம் ஆண்டு (9/11) புரட்டாதியில்... புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஐந்து மாதங்கள் களித்து...

தவறென்று நீங்கள் சுட்டிக்காட்டியதை நான் தாழ்மையுடன் ஏற்றுகொள்கிறேன்.

தவற்றிற்கு மன்னிப்பும் கோருகிறேன்..

ஆனால் அந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பின்னர் புலிகளால் புலிகளுக்கும் சூழ்ந்து கொண்ட ஆபத்தை அவர்கள் அறிந்தே வைத்திருந்தார்கள். தலைவர் முதல் அன்ரன் அண்ணா வரை எல்லோரும் இதை வேறுவேறு இடங்களில் சொல்லியும் இருக்கிறார்கள்.

சரி சிங்களம் பெரும் தாக்குதல் ஒன்றுக்கும் இறுதிப்போர் ஒன்றுக்கும் தயாராவதை புலிகள் அறியவில்லையா? அப்படி அறிந்திருந்தாலும் தாமாகவே அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறி இருக்கலாமே.

மீறமுடியாத ஒரு நிலை அன்று இருந்ததை நீங்கள் ஏற்பீர்கள் தானே?

ஓ... அடுத்த பாராளுமண்ற தேர்தல் வரைக்கும் பொருத்து இருந்தவையோ...??? செய்ய வேண்டின நேரம் ஒண்டும் செய்ய மாட்டினமாம், கூரை ஏறி கோழி பிடிச்சு குடுப்பினமாம் எண்டு சொல்லி கொண்டே திரியுங்கோ...

அப்போ ஆழிப் பேரலை நடந்து முடிந்து எத்தனை காலம் கடந்த பின்னரும் எந்த ஒரு மீள் கட்டுமானமோ நிவாரணமோ கிடைக்க இல்லையெண்டு சூசை அன்னாமுதல் புலிகளின் முக்கியஸ்தர்கள் சொன்னதெல்லாம் என்ன?

அன்று புலிகள் இன்று கூட்டமைப்பு இருக்கும் ஒரு நிலையிலும் பார்க்க ஒரு நல்ல செல்வாக்கான நிலையிலேயே இருந்தார்கள் சமாதன ஒப்பந்தம் முதல் சர்வதேச முக்கியஸ்தர்களின் தொடர்புகள் என்று எவ்வளவோ இருந்தது.

ஆனால் இன்று யுத்தம் முடிந்த முறையும் அதற்குப்பிறகு நடந்த அனைத்தையும் நீங்கள் அறியாததா?

சரத்துக்கே இந்த நிலை என்றால் ஏனையவருக்கு எந்த நிலை? இவ்வளவு காலம் கூட இருந்த டக்கிளஸ் கேட்டும் கொடுக்காத மகிந்த இவ்வளவு நாளும் புலிகளின் பின்னால் இருந்து மகிந்த பேச்சுக்கு கூப்பிட்டாலும் போகாமல் இருந்த சம்பந்தர் போய் கேட்டால் குடுத்துடுவானாக்கும்.

சரியண்ணை சம்பந்தர் ஒண்டும் செய்யேல்லை என்று வைப்பம்... போனால் போகட்டும் விடுவம்..

தேர்தலுக்குப் பின் பார்ப்போம் எங்கு போய் முடியுதேண்டு... நாங்கள் என்னத்தை குத்தி முறிஞ்சாலும் இனி நடக்கபோவதை யாராலும் மற்ற முடியாது.

நடப்பதைப் பார்ப்போம்...

நன்றிகள்...

  • தொடங்கியவர்

சரி சிங்களம் பெரும் தாக்குதல் ஒன்றுக்கும் இறுதிப்போர் ஒன்றுக்கும் தயாராவதை புலிகள் அறியவில்லையா? அப்படி அறிந்திருந்தாலும் தாமாகவே அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறி இருக்கலாமே.

மீறமுடியாத ஒரு நிலை அன்று இருந்ததை நீங்கள் ஏற்பீர்கள் தானே?

சண்டை...?? சண்டையை எதுக்காக பிடிக்க வேண்டும்...?? இல்லை எதுக்காக சண்டையை பிடித்தார்கள் எண்டதையாவது தெரிந்து வைத்து இருக்கிறீர்களா...??

2000 ம் ஆண்டு எங்களிடம் 70 விகிதமான நிலப்பரபும் முழுமையான தனி நாட்டுக்கான கட்டமைப்புக்களும் இருந்தன... இல்லாமல் இருந்தது சர்வதேச நல்லெண்ணமும் அங்கீகரிக்க ஆக்களும் தான்... தனி நாடு ஒண்டை கண்டு அதுக்கு அங்கீகாரம் இல்லாது கடல் வளியால் தன்னும் ஒரு பரல் மண்ணெண்ணையை கொண்டு வந்து இறக்க முடியாது... கடத்தி வேண்டுமானால் கொண்டு வரலாம்... இந்த அங்கீகாரம் இல்லாது எவ்வளவு காலம் புலிகள் போராடி இருக்க வேண்டும் எண்டு எண்ணுகிறீர்கள்...?? அதன் முடிவு தான் என்ன...?? போராடி கொண்டே இருப்பதா...??

  • தொடங்கியவர்

அப்போ ஆழிப் பேரலை நடந்து முடிந்து எத்தனை காலம் கடந்த பின்னரும் எந்த ஒரு மீள் கட்டுமானமோ நிவாரணமோ கிடைக்க இல்லையெண்டு சூசை அன்னாமுதல் புலிகளின் முக்கியஸ்தர்கள் சொன்னதெல்லாம் என்ன?

அன்று புலிகள் இன்று கூட்டமைப்பு இருக்கும் ஒரு நிலையிலும் பார்க்க ஒரு நல்ல செல்வாக்கான நிலையிலேயே இருந்தார்கள் சமாதன ஒப்பந்தம் முதல் சர்வதேச முக்கியஸ்தர்களின் தொடர்புகள் என்று எவ்வளவோ இருந்தது.

ஆனால் இன்று யுத்தம் முடிந்த முறையும் அதற்குப்பிறகு நடந்த அனைத்தையும் நீங்கள் அறியாததா?

சரத்துக்கே இந்த நிலை என்றால் ஏனையவருக்கு எந்த நிலை? இவ்வளவு காலம் கூட இருந்த டக்கிளஸ் கேட்டும் கொடுக்காத மகிந்த இவ்வளவு நாளும் புலிகளின் பின்னால் இருந்து மகிந்த பேச்சுக்கு கூப்பிட்டாலும் போகாமல் இருந்த சம்பந்தர் போய் கேட்டால் குடுத்துடுவானாக்கும்.

சரியண்ணை சம்பந்தர் ஒண்டும் செய்யேல்லை என்று வைப்பம்... போனால் போகட்டும் விடுவம்..

தேர்தலுக்குப் பின் பார்ப்போம் எங்கு போய் முடியுதேண்டு... நாங்கள் என்னத்தை குத்தி முறிஞ்சாலும் இனி நடக்கபோவதை யாராலும் மற்ற முடியாது.

நடப்பதைப் பார்ப்போம்...

நன்றிகள்...

நிவாரணங்களை சிங்களம் தருவது இல்லை எண்டு புலிகளை விட வேறு யார் சொன்னார்கள்... முக்கியமாக சம்பந்தரின் கூட்டமைப்பினர் யாராவது சொன்னதுண்டா...?? இந்த கேள்வியை முன்னம் கேட்டு வைத்து விடுகிறேன்...??

இப்ப சூசை அண்ணை முதல் புலிகள் , புலம்பெயந்தவை எல்லாம் ஏன் சிங்களவர்கள் தமிழர்களுக்கு நிவாரணம் அனுப்ப வில்லை எண்டு சொன்னார்கள்...??

நாங்கள் இப்போது சிங்களத்தின் கவனிப்புக்களில் இல்லை சிங்களம் எங்களுக்கு வஞ்சனை செய்கிறது, அரசு சாரா நிறுவனங்களும், TROவினரும் தான் தமிழர்களுக்கான நலன்களை கவனிக்கிறார்கள் நாங்கள் ஒரு தனி நாட்டுக்கான அலகுடனேயே நடக்க வேண்டிய தேவையில் உள்ளோம்... ஆகவே எங்களுக்கு நேரடியாக உதவுங்கள் எண்று சர்வதேசத்தை கேட்க்கும் செயல் ஆகும்...

ஆனால் கூட்டமைப்பு இதில் தலையிடவே இல்லை... ஒருவேளை புலிகளை சர்வதேசம் அங்கிகரித்து விட்டால் தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாகும் எண்டு பயந்திச்சினமோ என்னவோ...???

உங்களுக்கு இருக்கும் சம்பந்த பாசமும் கூட்டமப்பின் மேல் இருக்கும் பக்தியும் அவர்கள் செய்த இரண்டகங்களின் வீரியத்தை புரிய காலம் செல்ல வைக்கலாம்... எனிவே நண்றி..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE[அண்ணை தகவல்களை சரியா பாத்து கொள்ளுங்கோ.... புலிகள் தன்னிச்சை போ நிறுத்தம் செய்து கொண்டது 2000 ம் ஆண்டின் இறுதியில்... இரணில் புலிகள் புரிந்துணர்வு உடன் படிக்கை கைச்சாத்தானது 2001 சித்திரை யில்... இரட்டை கோபுரம் தகர்க்க பட்டது 2001 ம் ஆண்டு (9/11) புரட்டாதியில்... புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஐந்து மாதங்கள் களித்து...]

அண்ணை எனக்கு தெரிஞ்சு 2001 ம் ஆண்டு கடைசியிலை தான் புலிகள் தன்னிச்சை போர்நிறுத்தம் 2002ம் ஆண்டு சித்திரை மாதம் தான் புரிந்துணர்வு உடன்படிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.