Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் தமிழ்க் காங்கிரஸ் எதனைச் சாதிக்க முற்படுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் கால் பங்கு நிலம், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மட்டுமே திருமலை வாழ் தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ளது. இரா.சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்கிற போட்டி அரசியலால் இருப்பதையும் கெடுத்து விடும் நிலை ஏற்படப் போகிறது.

அவ்வாறு அவர் வீழ்த்தப்பட்டாலும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அவருக்குண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் நிகழ்த்தும் அதிகார மோதலால் திருமலையின் தமிழ்த் தேசிய அடையாளமும் இனப் பிரதிநிதித்துவமும் நிச்சயம் இல்லாதொழிக்கப்படும். ஏற்கனவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் திருமலை மண் கூறு போடப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது.

மடத்தடிச் சந்திக்கும் பெரிய கடைக்கும் இடைப்பட்ட நகரப் பகுதியில்தான் தமிழ் மக்கள் இன்று செறிந்து வாழ்கின்றார்கள். வேற்றுக் கிரகவாசிகள் போன்றதொரு வாழ்வினையே அம் மக்கள் அனுபவிக்கின்றார்கள். இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், மூதூர் கிழக்கு பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டது.அநுராதபுர மாவட்டத்திற்கு கடலை இணைக்கும் நிலத் தொடர்பு இல்லாத படியால் திருமலையின் ஒரு பகுதியை காவு கொண்டு அகண்ட அநுராதபுர இராஜதானியை அமைக்கத் தீட்டப்படும் சதியை பலரும் இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லை. இனி மணலாறும் ஒரு மாவட்டமாகும். அதற்கான திட்டங்கள் மிக நேர்த்தியான முறையில் வகுக்கப்படுகின்றன.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 14,090 வாக்குகளும் அ.இ. தமிழ் காங்கிரஸிற்கு 3,748 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஒரு நபர் கூட அன்று தெரிவு செய்யப்படவில்லை. 2001ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தும் ஒருவரே நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 68,955 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களை 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பெற்றுக் கொண்டது.

அதேவேளை இம் மாவட்டத்தில் சிதறிப் போயுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை வருகிற தேர்தலில் பயன்படுத்தப்படுமா என்கிற கேள்வியும் எழுகிறது. வடக்கு கிழக்கிலுள்ள இடம் பெயர்ந்தோரின் வாக்களிக்கும் உரிமை குறித்து நீதிமன்றில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார் பாக்கியசோதி சரவணமுத்து. இந்நிலையில் இரா.சம்பந்தன் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கிற வகையில் காய்களை நகர்த்தும் எதிரணியினரும் தீவிர தமிழ் தேசியவாதிகளும் தாம் தோற்கடிக்கப்படக் கூடாது என்கிற உணர்வோடு நிற்கும் திருமலை வாழ் தமிழ் மக்களின் மன உறுதியை கருத்தில் கொள்ளவில்லை.

அதேவேளை யுத்தத்திலும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறாயினும் பெற்று விட வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இவை தவிர வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் பலமிக்க தமிழ்த் தேசிய சக்திகள் உருவாகக் கூடாதென்கிற திட்டத்தில் பல சுயேச்சைக் குழுக்களும் அரச ஆதரவு தமிழ்க் குழுக்களை தனித்தனியாக களமிறக்கியுள்ளது. காசு கொடுத்து, சுயேச்சைக் குழுக்களை அரசு போட்டியிட வைக்கிறதென யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ். நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் பல ஏக்கர் நிலப் பரப்பில் அங்கு ஒரு கடற்படைத் தளமொன்றினை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். யாழ்., திருமலையில் கூட்டமைப்பின் தலைமைகள் அகற்றப்பட வேண்டுமென தமது புதிய தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஊடாக வலியுறுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் குறித்து கவலை கொள்ளவில்லை போல் தெரிகிறது.

புவிசார் அரசியலின் அடிப்படைகள் பற்றியும் அதன் அம்சங்கள், வெளிப்பாடுகள், நடைமுறைகள், அது தொடர்பான விளக்கங்களை ஆழமாகப் புரிந்துள்ள கஜேந்திரகுமார் பேரினவாதச் சக்திகள் எதனைச் சாதிக்க முற்படுகிறார்கள் என்பது பற்றி உணர்ந்து கொள்ளவில்லையா? ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல், இற்றைவரை இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே தமிழ்த் தேசிய சக்திகளைத் தம்வசம் ஈர்ப்பது தொடர்பான பனிப்போர் ஒன்று நிகழ்ந்து வருவதைப் பார்க்கலாம். பிராந்திய கேந்திர முக்கியத்துவத்தில் இந்தியாவின் காத்திரமான பங்கினை விடுதலைப் புலிகளும் மறுக்கவில்லை. புலிசார் அரசியலோடு பிராந்திய அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதை புறந்தள்ளி விட முடியாது.

நோர்வே ஊடாக மேற்குலகம் தலையிடும் வரை ஈழ விடுதலைப் போராட்டமானது இந்தியா, இலங்கையைச் சுற்றியே நகர்ந்து வந்தது. அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கான பின் தளமாக இந்தியாவின் அனுசரணையோடு அங்கு நிலை கொண்ட விடுதலைப் புலிகள் 87ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின் பிரேமதாசாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவோடு இந்தியப் படைகளுடன் போரிட்டனர். அன்றிலிருந்து ரணில், பிரபா ஒப்பந்தம் வரையான காலப் பகுதியில் தான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்புகள் விரிந்து படை பலமும் அதிகரித்தது. பிராந்திய அரசியல் ஆளுமைக்குள் இருந்து வெளியேறி புவிசார் அரசியலில் தேசிய விடுதலைப் போராட்டம் காலடி வைத்த பொழுது இந்திய சமுத்திரப் பிராந்திய அரசியல், ஆசிய பிராந்திய வல்லரசுகளின் ஆடுகளமாக மாறத் தொடங்கியது.

தன்னிடம் மட்டுமே ஆயுத உதவிகளைப் பெற வேண்டுமென இந்தியா வற்புறுத்தினாலும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கிய படைக்கல பொருளாதார பங்களிப்பினை ஓர் எல்லைவரை அனுமதித்திருந்தது. மேற்குலகின் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட உலகளாவிய சேதாரங்கள், ஆசிய அரசியலில் சீனா, இந்தியாவின் வகிபாகத்தை நிலை நிறுத்தும் இவ் வேளையில் ஆயுதப் போராட்டமும் அழிக்கப்பட்டுள்ளது. புதிய உலகக் கோட்பாட்டுச் சமன்பாட்டில் ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொரு நிலை நோக்கி நகர்வதால் உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளும் நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது.

மறுபுறமாக உள் நுழைந்த சீனாவின் கால்கள், வீதிப் புனரமைப்பின் ஊடாக வடக்கு வரை விரிந்து செல்வதால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு வியூகம் பலவீனமடையும் நிலை நோக்கி நகர்கிறது.இங்குதான் இந்திய இலங்கை, இந்திய சீன, பிராந்திய அரசியல் பனிப் போர்கள் எத்தகைய புதிய வடிவங்களைப் பிரசவிக்கப் போகின்றதென்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.இந்திய இலங்கை மத்தியில் நிலவும் முரண்பாடுகளைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிராந்திய அரசியல் நிலைப்பாடும் சீனாவின் ஆதிக்க நகர்வுகளுமே பெரும் பங்கு வகிக்கிறதெனலாம். கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் யாவும் அரசிற்கு சார்பான நிலையில் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதன் ஊடாக பனிப்போரில் ஈடுபடும் மறுதரப்பான இந்தியாவின் வகி பாகத்தை இல்லாதொழிக்கலாமென்று பேரினவாதம் கணிப்பிடுகிறது. பிளவுபடுத்துதல், சிதைத்தல் என்பதற்கப்பால் தமிழ்த் தேசிய சக்திகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டுமென்கிற நீண்ட கால நிகழ்ச்சி நிரலொன்றும் சிங்களத்திடம் உண்டு.தமிழ்த் தேசியச் சக்திகளிடையே எழும் தீவிர மிதவாத கொள்கைப் பிரகடன மோதல்கள், பேரினவாதத்தின் இலக்கினை சாத்தியமாக்கி விடும் என்கிற யதார்த்தமும் உணரப்படல் வேண்டும். இந்தியாவின் ஊடாகவே ஆசிய அரசியலை நகர்த்த மேற்குலகம் முயற்சிக்கிறது என்ற உண்மையை புலம் பெயர் தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே தலைமையை அழித்தல் என்கிற கோட்பாடு இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பலத்தையே அழித்து விடும். குடியேற்றங்களால் குதறப்பட்டு சேடமிழக்கும் திருமலை மண்ணும் முற்றாக அழிக்கப்பட்டு விடும். மேற்குலகம் மற்றும் இந்தியா போன்றவை, சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் இவ்வேளையில் பலமான தமிழ் தேசியத் தலைமையொன்று தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும். இப்போது ஏற்படுத்தப்படும் சிதைவுகள் இறுதியில் மீள முடியாத நிலையை நோக்கியே தமிழ் மக்களை இட்டுச் செல்லும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய ஆதரவும் அனுசரணையும் அரச சார்பு தமிழ்க் கட்சிகளை தாயக மண்ணில் காலூன்ற விடாமல் தடுத்தது.

ஆனால் அந்த தந்திரோபாயத்தை புரிந்து கொள்ளாமல் தீவிர தேசிய வாதம் பேசி தாயக வாசல்களை பேரினவாதத்திற்குத் துணை போகும் சக்திகளுக்குத் திறந்து விடப் போகிறோமாவென்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். சம்பந்தனின் இந்திய ஆதரவு நிலைப்பாடுதான் இம் முரண்பாடுகளுக்கு காரணியென்றால் இந்தியாவா அல்லது பேரினவாதமாவென்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். இவை தவிர கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்னி, மட்டக்களப்பு, அம்பாறையில் போட்டி இடவில்லை.

அங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென்கிற நிலைப்பாட்டை மேற்கொள்வார்களா? அம் மக்களுக்கு இம் முன்னணி சொல்லும் செய்தி என்ன? அதேவேளை த.தே.வி.மு. வின் தேசியம், இறைமை என்பன யாழ். குடாவிலும், திருமலையிலும் முடக்கப்பட்டு விட்டதா என்கிற கேள்வி எழுவதிலும் நியாயமுண்டு. ஆகவே தேசியத்திற்கு அப்பால் இதனை ஒரு தலைமைத்துவப் போட்டியாகவே கருத இடமுண்டு. இரா.சம்பந்தனை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் தமிழ்த் தேசியத்தை சிதைத்து விட்டதாக பேரினவாதம் மகிழ்ச்சியடையும். மறுதலையாக சம்பந்தனின் தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டால் தேசியம் காப்பாற்றப்பட்டு விட்டதாக கஜேந்திரகுமார் மகிழ்ச்சி கொள்வார். இதைத்தான் நகைப்பிற்கிடமான முரண்பாடுகள் என்று சொல்வார்களோ புரியவில்லை.

இதயச்சந்திரன்

நன்றி்:வீரகேசரி

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply

தலைவரால் எமக்காக ஒழுங்கமைக்கப்பட்டது மாற்றமில்லாமல் இருந்திருந்தால் நாங்கள் விமர்சிக்க மாட்டோம். மாறாக அந்தத் தலைவரையே விமர்சித்ததும் அவரால் உள்வாங்கப்பட்டவர்களையும் வெளியேற்றியவர்கள், தலைவரின் கொள்கைக்கு ஏற்ப நடப்பார்களா? கூட்டமைப்பு உடைவதற்குக் காரணம் கூட்டமைப்பின் தலைமைப்பீடமே. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லைஇனியாவது அவர்கள் ஒற்றுமைப்பட்டால் எமக்குச் சந்தோசமே. அதற்கும் தேர்தல் மூலம் மக்கள் தங்கள் விருப்பத்தைக் காட்டவேண்டிய நிலைக்கு வந்துள்ளது கவலைக்குரிய விடயமேயாயினும் தவிர்க்க முடியாததே.

யாருக்குத்தான் ஆசை திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பதற்கு?

ஆனால் இங்கிருக்கும் பிரச்சினை சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைக்க எண்டமாதிரி சம்பந்தன் ஐயாவைத்தான் ஆதரிக்க வேணுமெண்டு பினாத்திறது. துரைரத்தினம் ஒரு அஜண்டாவோடதான் எழுதிறார். நிராஜ் டேவிட்டும் அப்படியேதான். ஒற்றுமை எண்டால் அது கட்டாயம் சம்பந்தனை வெல்லவைப்பது தான் எண்டு ஆளாளுக்கு மூளைச்சலவை செய்ய வெளிக்கிடுறதுதான் எரிச்சலைத் தருது.

ஏன் கெளரிமுகுந்தன் அணியைப் பலப்படுத்தி திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைப்பதைப் பற்றி யோசிக்க மாட்டீர்கள். அதுதன் இலகுவானதும்கூட. சும்மா இஞ்ச குந்தியிருந்து தட்டெழுதாமல் திருமலை மக்களிட்டயும் கதையுங்கோ. சம்பந்தனையும் மற்ற அணியையும் பற்றிக் கேளுங்கோ. யார் மக்களுக்காகச் சேவையாற்றினவை எண்டு அவையள் சொல்லுவினம். சம்பந்தருக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பலமும் த.தே. கூ. என்ற அமைப்பால்தான் வந்தது. இதுக்குள்ள மற்ற அணிமீது சேறு பூசும் வேலையை சம்பந்தன் அணி தொடங்கீட்டுது. தாங்களே கெளரிமுகுந்தனை வலிய இழுத்துப்போய் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்க வைச்சிட்டு, வலிய மேடையில ஏத்தி சரத்தின்ர கையைப் பிடிச்சு உயர்த்திக் காட்ட வைச்சிட்டு இண்டைக்கு அவர் ஜனாதிபதி தேர்தலில மகிந்தவுக்குப் பிரச்சாரம் செய்தார் எண்டுறாங்கள். அண்டைக்கு சரத்தின்ர கையப் பிடிச்சிட்டு கூட்டத்தால வீட்ட வரேக்கயே கெளரிமுகுந்தனுக்கிருந்த பொலிஸ் பாதுகாப்பை மகிந்த நிப்பாட்டிப் போட்டார். ஆனால் பாருங்கோ மகிந்தவே தலையிட்டு மூண்டுபேரா இருந்த சம்பந்தன்ர பொலிஸ் பாதுகாப்பை இப்ப ஏழு பேராக்கியிருக்கிறார்.

திருமலைச் சிங்கம் எண்டு தனக்குத்தானே பேர் வைச்சுக்கொண்டு அந்தாள் ஆடின, ஆடுற கூத்தை வாக்களிக்கப் போற திருமலை மக்களிட்ட கேட்போம்.

இப்ப செய்ய வேண்டியது சைக்கிள் சின்னத்தில போட்டியிடுற அணியைத் திருமலையில பலப்படுத்தி தமிழர் பிரதிநிதித்துவதைக் காப்பாற்ற வேண்டியதுதானே ஒழிய, ஒருத்தருக்கும் உது விளங்கேல தங்களுக்குத்தான் உது விளங்கியிருக்கு எண்டு நினைச்சு மற்றாக்களுக்கு தமிழர் பிரதிநிதித்துவம் காப்பற்றிறதைப் பற்றி ஓதிக்கொண்டிருக்கிறதில்லை.

எல்லாரும் ஒண்டுசேர்ந்து சம்பந்தனைத் தோற்கடிப்போம், சைக்கிள் சின்னத்தை வெல்ல வைப்போம் எண்டு இறங்குங்கோ. ‘ஒழுங்கான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை’ திருமலையில் தக்க வைக்கச் செய்ய வேண்டியது அதுதான்.

அதைவிட்டு தமிழர் வாக்கு சிதையுது, ஒற்றுமைப்படுங்கோ எண்டு ஓதிக்கொண்டு நசுக்கிடாமல் சம்பந்தனுக்குப் பிரச்சாரம் செய்யிற கூத்தை நிப்பாட்டுங்கோ.

துரைரத்தினம், .... வரிசையில் இதயச்சந்திரனும் இணைந்துள்ளா ரோ?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு திருமலையில் வென்றால் தமிழர்களின் நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்களா? மூதூர் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழாமல் தடுப்பார்களா? தமிழர்களின் கையாலாகத நிலையினால்தான் தற்போது வன்னிப் பகுதியில்கூட தமிழர்களைக் குடியேற்றாமல், சிங்களவர்களைக் குடியேற்ற மகிந்த அரசு திட்டமிட்டு செயலாற்றுகின்றது. குடியேற்றங்களைப் பற்றிக் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிடுவதைத் தவிர குடியேற்றங்களைத் தடுக்கவும், தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமரப் பண்ணவும் கூட்டணியால் முடியாது என்பதைத்தான் கடந்த காலச் செயற்பாடுகள் காட்டுகின்றன.

அதற்காக காங்கிரஸ்காரர் வென்று தமிழ் மக்களின் தாயகத்தையும், தேசியத்தையும் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாப்பார்கள் என்று சொல்லவரவில்லை. குறைந்தபட்சம் பிறசக்திகளால் ஆட்டுவிக்கப்படாமல் நேர்மையான முறையில் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவர்களை மக்கள் அடையாளம் காண்பார்கள்.

மேலும் இம்முறை தேசியப்பட்டியல் மூலம் கூட்டமைப்புக்கு ஓர் இடம் கிடைப்பது கேள்விக்குறியே! எனவே சம்பந்தன் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டிவரலாம்.

கடந்த முறை வாக்களித்த தமிழ் மக்களில் 50வீதமானோர் கூட இந்த முறை வாக்களிக்கப்போவதில்லை. இதிலை கிடைக்கிற வாக்குகளையும் கூட்டமைப்பு - தமிழ் காங்கிரஸ் என்பன பிரித்தால் வெற்றி வாய்ப்பு முஸ்லீம் காங்கிரசிற்கும், அரச கட்சிக்கும் அதிமாக இருக்கப்போகிறது. முஸ்லீம் காங்கிரசின் இருவர் நாடாளுமன்றம் செல்வது உறுதி. மற்றைய இருவரில் ஒருவர் சிங்களவர் என்பதும் உறுதி. நான்காமவர் சிங்களவரா? தமிழரா? என்பதே கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இதயச் சந்திரன். உங்கள் கருத்தை கட்டுரையை நானும் வழி மொழிகிறேன். தலைவர் சம்பந்தரை லண்டன் ஊடக பேட்டியில் அவமதித்ததிலும் திருமலை பறிபோனாலும் பறுவாயில்லை சம்பந்தரை தோற்க்கடிப்போம் என்கிற அடிப்படையிலு கஜேந்திரகுமாரை தூண்டிவிட்டதிலும் ஒருசில புலக்குடி தமிழஎ அமைப்புகள் உள்ளதாக பேசப் படுகிறது. இனியேனும் புலம் பெயர்ந்த தமிழர்கள் இத்தகைய யாழ்ப்பாண மையவாத வதந்திகளை தின்ன வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

2 முற்பதிவில் இருந்து

நெடு நாளைக்குப் பின்னர் வாசித்த மிக முக்கியமான கட்டுரை. இந்தக் கட்டுரையுடன் சேர்த்து கிழக்கு மாகாண பத்திரிகையாளர் துரைரட்ணம் மனம் நொந்து எழுதிய கட்டுரையையும் வாசிக்க வேண்டுகிறேன். வெளிநாடுகளில் வாழ்கிற நம்மில் பெரும்பகுதியினர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பலருக்கு கிழக்கு மாகாணம் பற்றி அதிகம் தெரியாது. அவர்கள் தங்கள் தங்கள் நாடுகளில் வாழும் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மக்களிடம் இருந்துதான் கிழக்கை பற்றியும் கிழக்கு மக்களின் அபிலாசைகள் பற்றியும் கற்றுக் கொள்ள முடியும். புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழது அரசியல் கலாச்சார வாழ்வில் கிழக்கு மாகாண குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மக்களின் பங்களிப்புக்கு அமைந்திருக்கிற இடம் குறிப்பிடக் கூடியதாக இல்லை. அதனால் ஈழம்சார் அமைப்புகள் கிழக்குமாகான மக்களுடன் கலந்துரையாடி அவர்களை உள்ளே கொண்டுவருவதன் மூலம்தான் ஈழ விடுதலை பற்றி பொது நிலையில் இருந்து பேச முடியும். அல்லாத பேச்சு யாழ் மைய நிலை பேச்சுக்கள்தான்.

நாடுகடந்த அரசும் ஏனைய அமைப்புகளும் ஏறக் குறைய பாதி கிழக்குமாகாண பிரதிநிதித்துவம் இல்லாமல் ஈழ அமைப்பாக உரிமை கோர முடியாது. இந்த வகையில் பல புலம் பெயர்ந்த அமைப்புகள் பொது நிலையில் இருந்தல்ல யாழ் மைய நிலையில் இருந்துதான் தேர்தல் பற்றியும் சம்பந்தர் பற்றியும் கருத்து தெரிவிக்கின்றார்கள். சம்பந்தர் களத்தில் உள்ள தமிழர்களின் தலைவர் என்கிற வகையில் எங்களது தலைவருமாவார். லண்டன் வானொலியில்/ஒளியில் அவரை அவமானப் படுத்தியதும் சம்பந்தர் தங்களை வந்து பார்க்க வேண்டும் என்று சில புலம்பெயர்ந்த பிரமுகர்கள் எதிர்பார்க்கிறதும் நம் அரசியலில் இன்னும் எங்சியுள்ள யாழ்ப்பாண மைய வாத நிலைபாட்டைத்தான் காட்டுகிறது. திரு உருத்திரகுமார் போன்றவர்கள் சம்பந்தரை ஏன் சந்திக்கவில்லை என்பது பற்றியும் திருகோணமலையில் தேர்தல் பற்றியும் தங்கள் நிலைபாட்டை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ஈழ மக்களின் இறமை புலம் பெயர்ந்தவர்களது கையில் இல்லை என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும். அது களத்தில் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் கையில்தான் எப்பவும் உள்ளது.

புலம் பெயர்ந்த யாழ்நிலை அமைப்புகள் சில கஜேந்திரகுமார் கோஸ்டியின் உதவியுடன் மீண்டும் இணைகிற வடகிழக்கு ஈழத் தமிழரை தோற்க்கடிக்க முயலுவது கவலை தருகிறது. இதை கிழக்குமாகாணத்து கருணா செய்தால் துரோகம் யாழைச் சேர்ந்த கஜேந்திரகுமார் கும்பல் செய்தால் தியாகமா? இதுதான் யாழ்மைய வாதிகளின் தீர்ப்பா.

திருமலையை மகிந்தவுக்கு பறித்துக் கொடுக்கும் முயற்ச்சியில் ஈடுபடும் மூலம் கஜெந்திரகுமார் கும்பலையும் அவர்களது பின்னணியில் இருக்கும் சில புலம் பெயர்ந்தவர்களையும் “இறைவா அறியாமல் செய்கிறார்கள் மன்னித்து விடுங்கள்” என விட்டுவிட முடியாது. தமிழ் மக்கள் அவர்கலை நிராகரித்து வடகிழக்கு இணைப்பை அங்கீகரிக்க வேண்டும்.

3

மதிப்புக்குரிய நல்லவனுக்கு,

எனது ஆய்வுகளின் முக்கிய குவி மையம் கிழக்கும் தமிழர் முஸ்லிம்கள் உறவும்தான். 1996ல் இருந்து 2006 வரைக்கும் வருடா வருடம் 8 மாதத்துக்குமேல் வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும்தான் இருந்திருக்கிறேன். அதன் முன்னம் 1988, 19989ம் வருடங்களில் மடும்தான் துப்பரவாக கிழக்குமாகாணம் செல்லாத காலம். இருந்தும் நான் கிழக்கு மாகாண மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளாமல் தீர்மானங்களுக்கு வருவதில்லை. எனது கணிப்பின்படி தமிழர் பிரதி நிதித்துவத்தை இழக்கும் ஆபத்து உள்ளது. அது ஆபத்தானது. எந்த நிலையிலும் கஜேந்திரகுமாரின் போட்டி வேட்பாளரைவிட சம்பந்தர் பல்லாயிரம் வாக்குகள் அதிகமாக எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. முடிவுகள் யார் தமிழர்களது பிரதிநிதித்துவத்தின் காலை வாரிவிட்டது என்பதை புலப்படுத்தும்.

தமிழர் பிரதி நிதித்துவம் இழக்கப் பட்டால் தமிழரது ஆயுதப் போராட்டத்தைக் கருணாவும் அரசியல் போராட்டத்தை கஜேந்திரகுமாரும் பதவி ஆசையால் அழித்தார்கள் என்று வரலாறு பதிவுசெய்யும்.

Edited by poet

நன்றி இதயச் சந்திரன். உங்கள் கருத்தை கட்டுரையை நானும் வழி மொழிகிறேன். தலைவர் சம்பந்தரை லண்டன் ஊடக பேட்டியில் அவமதித்ததிலும் திருமலை பறிபோனாலும் பறுவாயில்லை சம்பந்தரை தோற்க்கடிப்போம் என்கிற அடிப்படையிலு கஜேந்திரகுமாரை தூண்டிவிட்டதிலும் ஒருசில புலக்குடி தமிழஎ அமைப்புகள் உள்ளதாக பேசப் படுகிறது. இனியேனும் புலம் பெயர்ந்த தமிழர்கள் இத்தகைய யாழ்ப்பாண மையவாத வதந்திகளை தின்ன வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தலைவரால் எமக்காக ஒழுங்கமைக்கப்பட்டது மாற்றமில்லாமல் இருந்திருந்தால் நாங்கள் விமர்சிக்க மாட்டோம். மாறாக அந்தத் தலைவரையே விமர்சித்ததும் அவரால் உள்வாங்கப்பட்டவர்களையும் வெளியேற்றியவர்கள், தலைவரின் கொள்கைக்கு ஏற்ப நடப்பார்களா? கூட்டமைப்பு உடைவதற்குக் காரணம் கூட்டமைப்பின் தலைமைப்பீடமே. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லைஇனியாவது அவர்கள் ஒற்றுமைப்பட்டால் எமக்குச் சந்தோசமே. அதற்கும் தேர்தல் மூலம் மக்கள் தங்கள் விருப்பத்தைக் காட்டவேண்டிய நிலைக்கு வந்துள்ளது கவலைக்குரிய விடயமேயாயினும் தவிர்க்க முடியாததே.

Edited by Aasaan

வணக்கம் கவிஞர் அவர்களே!

தூண்டுவதும், தூண்டப்படுவதாலும் நிகழ்ந்ததாக உணரமுடியாதுள்ளது.

காலம் மாறி, காட்சிகளும் மாறிவிட்டன

உங்கள் வார்த்தைகள் மாறவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெண்டு நாளைக்கு முன்னம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னத்த சாதிக்கப்போறாரெண்டு சொன்னாரே நான் பாத்தேன் நீங்க பாக்கலயா?

Edited by Mathivathanang

இதை தலமைத்துவப் பிரச்சினையாக பிரச்சினையாக யாழ்மையவாதப்பிரச்சினையாக புலம் பெயர்ந்த வர்களின் பிரச்சினையாகக் காட்ட பலர் விசமத்தனமாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.பிரச்சினையின் மையம் எதுவென்பதை கஜேந்திரகுமார் வெகு தெளிவாகக் கூறி விட்டார்.எவ்வாறு வேறு எவருக்கும் தெரியாமால் சம்பந்தரும்,பிரேமச்சந்திரனும் தீடீரென ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை திணிக்க முற்பட்டனர் என.தமது சொல்லைத் தட்டாதா தலையாட்டக் கூடிய எம்பீப் பதிவுகளுக்கு ஆசைப்படுபவர்களை வேட்பாளாராக்கி தமது தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த முனைந்துள்ளனர்.மக்களுக்கு இவை தெரியாத வண்ணம் இருக்க பதிரிகை முதளாளிகளுக்கு எம்பீப் பதவிகளை வழங்கி மக்களை ஏமாற்ற நினைக்கிறனர்.சம்பந்தர் வெளிப்படையாகவே ஒஸ்லோ ஒப்பந்ததின் படியே தீர்வுத் திட்டம் தயாரிதுஇருப்பதாக்க் கூறி உள்ளார்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்பது இறமை தன்னாட்ச்சி சுய நிர்ணயம் என்பதன் அடிப்படையில் அன்றி ஒற்றை ஆட்ச்சியின் அடிப்படையில் அமைந்தது.இதனை ஏற்றுக் கொண்டதன் அடிப்படியிலையே தேசியத் தலைவருக்கும் ஆலசிங்கமவர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன.அதன் பின்னரே இடைக்கால தன்னட்ச்சி அதிகாரசபை என்னும் திட்டவரைபு புலிகளால் முன்வைக்கப்பட்டது.

எந்தச் சக்திகள் புலிகளை அடக்கி ஒடுக்கினவோ அதே சக்திகளின் தீர்வுத் திட்டமே தற்போது சம்பந்தர் தயாரித்து உள்ள தீர்வுத் திட்டம்.இதன் அடிப்படையில் தமிழர்கள் வாக்கழித்தால் களத்தில் உள்ள தமிழர்கள் நிரந்திரமாகவே தமது அடிமைச் சாசனத்தை அரசியல் ரீதியாக எழுதிக் கொடுப்பதற்குச் சமனாகும்.எவ்வாரு சிறிலங்கா சுதந்திரம் அடைத போது இராமனாதான் போன்றோர் தவறு இழைத்தனரோ,அதே தவற்றை சம்பந்தன் இழைக்கிறார்.ஈற்றில் பாதிக்கப்படப் போவது ஈழத்து மக்களே.இந்தியா தனது காலனியாக ஈழத்தை ஆக்குவடிலயே இது முடியப்போகிறது.

சம்பந்தன் முதலானோரின் இந்தச் சூழ்ச்சிகரமான திட்டத்தால் பலியாகாப்போவது அவர்களை நம்பி வாக்கழிக்கப் போகும் மக்களே.இவர்கள் நேர்மையனவர்கள் என்றால் தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்தி மக்களை வாக்கழிக்கக்கோரி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மையவாதம் என்று நியாயமான கேளிவிகளை இலகுவாகத் தட்டிக் கழித்துவிடமுடியாது. சம்பந்தன் தலைவராக இருந்தாலும், மாவை சேனாதிராஜா போன்ற "மூத்த" தலைவர்கள் யாழ்ப்பாணத்தையே சேர்ந்தவர்கள். இவர்களை மீறி சம்பந்தன் தனியாக ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றிவிடமுடியாது, எனவே யாழ்மையவாதக் கருத்தை விட்டுவிட்டு, வெளிப்படையான தமிழர் நலன்சார்ந்த அரசியல் செயற்பாடுகளைப் பற்றிக் கருத்து வைப்பது நல்லது.

கூட்டமைப்பு எப்போதுமே உறுதியான அமைப்பாக இருந்ததில்லை. உட்கட்சி ஜனநாயகம் பேணப்பட்டிருந்தால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் சிலவிடயங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கமாட்டா. எனவே கூட்டமைப்பு என்பது சில கட்சிகளினதும், சில பொதுநோக்குள்ளவர்களினதும் இறுக்கமில்லாத ஒரு அமைப்பாகவே இருந்தது. இந்தப் பலமில்லாத கூட்டமைப்பு தற்போது உடைந்துபோயுள்ளது. அதை வெளியில் இருந்து யாரும் உடைக்கவில்லை என்பதும், அதன் உடைவுக்குக் காரணமானவர்கள் உள்ளேயே இருந்தார்கள் என்பதும், எடுக்கப்பட்ட முடிவுகள் உடைவைத் தூண்டும் என்பதும் தலைமைக்கு நன்கு தெரிந்து உள்ளவைதான்.

இப்படி ஒற்றுமையைப் பேணமுடியாத தலைவர்களால் தமிழர்களுக்கு விமோசனம் கிட்டும் என்ற நம்பிக்கையை விதைப்பது நகைப்புக்கிடமானது.

சம்பந்தருக்கு ஆதரவாக எழுதுபவர்கள் எவருமே முரண்பாட்டின் மையத்தைத் தவிர்த்து, இதனை தலமைத்துவப் பிரச்சினை என்றும் யாழ்மையவாதப் பிரச்சினையென்றும் பொய்களையே எழுதுகின்றனர்.முரண்பாட்டின் மையத்தைப் பற்றிப் பேசினால் தாங்கள் அம்பலபடுவோம் என்பதை அறிந்தே இவ்வாறு பொய்களை எழுதுகின்றனர். இதே பொய்கள் இந்திய ரோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் வீரகேசரியிலும், சம்பந்தரின் புதிய வேட்பாளரான சரவணபவனின் பத்திரிகைகளான சுடரொளியிலும்,உதயனிலும் வருகின்றன.சம்பந்தர் தயாரிததாக் கூறப்படும் ஒப்பந்தம் இந்தியா தயாரித்த ஒப்பந்தம்.ஒஸ்லோ ஒப்பந்ததின் பின்னணியில் நோர்வேயின் பின்னால் அமெரிக்காவின் பின்னால் இருந்து இயக்கியது இந்தியா.இந்த ஒப்பந்தம் சிறிலன்க்காவின் இறமை ஒற்றையாட்சியின் அடிப்படையில் எழுதப்பட்டது.

மக்களையும் ஏமாற்றி தம்மையும் ஏமாற்றி கடைசியில் இவர்கள் அம்பலப்படுவது நிச்சயம்.தேர்தல்களில் இவர்கள் பொய்களைச் சொல்லி வென்றாலும் ஈற்றில் தோற்கப்போவது தமிழீழ மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையைச் சேர்ந்த ஜான் மாஸ்ரரின் கட்டுரையில் இருந்து ஒரு மேற்கோள்..

இப்போது இந்த கூட்டமைப்பை கட்டுப்படுத்தும் சம்பந்தன்-சுரேஸ் பிரேமச்சந்திரன் கோஷ்டியினர் அமைப்பினுள் கடுமையான எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்டதாக அதன் பா.உ க்கள் புறுபுறுப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. திட்டவட்டமான அமைப்பு வடிவமோ, அல்லது கொள்கை நிலைப்பாடுகளோ இன்று வெறுமனே புலிகளால் பொறுக்கி எடுக்கப்பட்ட தனிநபர்களைக் கொண்ட இந்த அமைப்பானது புலிகளின் மறைவை அடுத்து அதன் இருப்பிற்கான காரணங்களை ஏற்கனவே இழந்து விட்டது. ஆயினும் அடுத்த தேர்தல்கள் தமது ஆசனங்களை கைப்பற்றுவது எனும் ஒரே காரணம் மட்டுமே இவர்களை இணைத்து வைக்க மட்டுமல்லாது, அவர்களை கட்டுப்படுத்தவும் போதியதாக இருப்பது வேடிக்கையானதுதான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69785&pid=572865&st=0&#entry572865

Edited by கிருபன்

பிரச்சனையின் மையத்தைத் திசை திருப்புவதாக இருக்கின்றது இந்த வாதகங்கள்.

வாதங்களை விதைப்பவர்கள் இந்த வாத நோய்க்கு உற்பட்ட வலது குறைந்தவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் குழப்பம்

காரணங்கள்.

1.சம்பந்தரின் இந்திய நட்புறவு

2.தனது சொந்தக்கருத்தை? மற்றய உறுப்பினர்களிடம் திணிப்பது

3.கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர்களின் கருத்தை அவமதித்தல்.

4.இளையவர்களை முன் வரவிடாமல் அடக்குமுறை செய்தல்

5.ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாமை

ஒற்றுமைக்கான வழிகள்

1.இரட்டை ஆட்சி வலியுறுத்தல்

2.கூட்டமைப்பிற்கு ஒரு மத்திய குழு

3.இளையோருக்கு முன்னுரிமை

4.சம்பந்தர் இவற்றை ஏற்காவிட்டல் தலைமைப்பதவியிலிருந்து அவரை அகற்றல்

வாத்தியர்

Edited by vathiyar

கஜேந்திரகுமாரை தூண்டிவிட்டதிலும் ஒருசில புலக்குடி தமிழஎ அமைப்புகள் உள்ளதாக பேசப் படுகிறது.

தூண்டாமணி விளக்கு தூண்டாமல் நின்று எரியும்.

உங்களை தூண்டுவது யார்?

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் வைத்து நடத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையில் சிறிலங்கா என்ன பங்கை வகித்ததோ அதற்கு நிகரான பங்கை இந்தியாவும் வகித்திருக்கிறது. மகிந்தகூட ஒரு கட்டத்தில், "புலிகள் ரஜீவைக்கொன்றதுதான் அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாகி விட்டது, உண்மையிலேயே இந்தியாவினது யுத்தத்தைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்" என்று பகிரங்கமாக ஒரு வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.அந்தளவிற்கு இந்தியா எமது தாயக விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இந்தியாவின் செயற்பாடுகள் கூட அது தமிழர் நலனில் எந்தவொரு தயவுப் போக்கையும் கொண்டிருக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. உதாரணத்திற்கு, இந்தியாவால் தமிழர் மீது திணிக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பேரினவாதத்தால் பிரிக்கப்பட்ட போது இந்தியா கண்டும் காணாது போலிருந்தது. போர்க்குற்றங்களுக்காக சிறிலங்கா ஐ.நா மன்றத்தின் மனிதவுரிமைக் கவுன்சிலில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சில நாடுகள் முன்வைத்தபோது அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து அத்தீர்மானம் தோல்வியடைய முன்னின்று உழைத்ததும் இந்தியாதான். இவ்வாறு இருதடவைகள் அது நடந்துகொண்டிருக்கிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தமிழர் தொடர்பான நிலைப்பாடென்பது அவர்களது சமவுரிமையை எதிர்க்கும் நிலையில் இருக்கிற போது "இந்தியாவிற்கும் பேரினவாதத்திற்கும் இடையில் ஒன்றைத் தமிழர் தெரிவு செய்வது" என்பது அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை.ஏனென்றால் இந்தவிரு பேய்களுக்குள்ளும் எந்தப்பேய் நல்ல பேயென்றால், இரண்டுமே ஒன்றுதான்.

சம்பந்தரும், பிரேமச்சந்திரனும் அடிக்கொருதரம், " இந்தியா எமது நட்பு நாடு, அதனுடன் அன்னியொன்னியத்தைப் பேணவே விரும்புகிறோம், அதற்காக அதன் நிகழ்ச்சி நிரலுக்கேற்பத்தான் நான் செயல்ப்படுகிறோம் என்றெல்லாம் சொல்ல முடியாது" என்று சொல்வதன் மர்மம் தான் என்னவோ?? இந்தியா தமிழர் தொடர்பான தனது நிலைப்ப்ட்டாஇத் திருத்திக்கோன்டுள்ளதென்றால், அது தமக்குத் தெரிந்திருக்கிறதென்றால், கூட்டமைப்பு அதை மக்களிடம் வெளிப்படையாகவே சொல்லலாமே?!"இந்தியா எமக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத்தரப்போகிறது, அந்தத் தீர்வென்பது தமிழரின் தாயகம், சுய நிர்ணயம், இறமை என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்கப்போகிறது" என்று மக்கள் முன் சொல்லவேன்டியதுதானே? வெளிப்படையாக மக்கள் முன் இதை முன்வைத்து, " ஆம் நாம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகத்தான் செயல்படுகிறோம், அவ்வாறு செயல்படுவதனூடாக நாம் இந்த உரிமைகள் எல்லாவற்றையும் இந்தியாவினூடாகப் பெற்றுக்கொள்ளப் போகிறோம், அதனால் தமிழ்க்கூட்டமைப்புக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள்" என்று பகிரங்கமாகக் கேட்கலாமே??ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது.இந்தியாவின் பெயர்சி சொல்லி வாக்குக் கேட்பதென்பது தமிழரை அவர்களிடமிருந்து தள்ளி நிக்கவே வழி வகுக்கும் என்பதும், இந்தியாவிடம் தமிழர் அக்கறையுள்ள எந்தவொரு தீர்வும் இல்லையென்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்த்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள், அல்லது பிரிந்து சென்றவர்கள் பற்றியது.இதில் கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களை விலக்கியது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் " அவர்கள் இருவரும் எந்த அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றார்களென்பது எல்லோருக்கும் தெரியும், அவர்கள் தெரிவுசெய்யப்பட்டபின்னர் மக்களுக்காகச் செய்த எந்த சேவைகளுமே திருப்தியளிக்கக்கூடிய வகையில் இருக்கவில்லை. வெளிநாடுகளில் நெடுநாள் இருந்துவிட்டு இறுதியா கொழும்பில் நிலமை சுமூகம் என்று அறிந்தவுடன் திரும்பி வந்தவர்கள். ஆகவேதான் அவர்களுக்கு இம்முறை தேர்தலில் நிற்பதற்கு நாம் இடம் கொடுக்கவில்லை" என்று கூறியிருந்தார். அவர்கள் நெடுநாள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததற்கான காரணம் என்ன? தீவிர தமிழ் தேசியத்தை ஆதரித்து நியாயப்படுத்தியதுதான் அதன் காரனம். அதன் நிமித்தம் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுருத்தல் காரணமாகத்தான் அவர்கள் நாட்டை விட்டே வெளியேறினார்கள். ஆனால், வெளிநாடுகளில் அவர்கள் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டுதானிருந்தார்கள். அதுசரி, அவர்கள் யாழ் மாவட்டத்தில திகூடிய வாக்குகள் பெற்றதன் அடிப்படை என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்பதன் அர்த்தம் என்ன? தீவிர தமிழ்த்தேசிய ஆதரவும், அன்றிருந்த தமித்தேசியத்தலமையின் மீதான தொடர்ச்சியான ஆதரவும் தான் அதுவென்பதை பிரேமச்சந்திரன் அவர்கள் கூறாமக் கூறியிருக்கிறார். அதாவது அதைத் தவறு என்று கூறுகிறார். அதாவது அவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றது ஒரு தவறான வழியில் என்று கூறுகிறார். அதாவது தமிழ்த்தேசியத் தலமை மீதான ஆதரவென்பது தவறு என்று சொல்ல வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனது நண்பர் திரு இதயச்சந்திரன் அவர்கள் ஒரு இடத்தில், "பேரினவாதமா, இந்தியாவா என்று வரும் போது, நாம் இந்தியாவை ஆதரிப்பதே சரி" என்று பொருள்படக் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியா என்பது எந்தவகையில் பேரின வாதத்திலும் நல்லது என்பதைக் கூறவில்லை. அதாவது இந்தியாவை ஆதரிப்பதன்மூலம் நாம் அடையவிரும்புவதோ அல்லது அடையவிருப்பதோ என்னவென்பதைக் கூறவேண்டும்.அதன் பின்னர் மக்களிடம் பேயா அல்லது பிசாசா என்று முடிவு கேட்கலாம்.இந்தியா என்ன செய்யவுள்ளது, அது எந்தவகையான தீர்வொன்றை தமிழர்க்குத்தர எண்ணியுள்ளது என்கின்ற எந்தவொரு அடிப்படையுமில்லாமல் வெறும் கண்ணை மூடிக்கொண்டு, " நாம் இந்தியாவை ஆதரிக்க வேண்டும்" என்பதை விளங்கிக் கொள்வது சிறிது கடிணமாகத்தான் இருக்கிறது.ஆனால் அப்படி உண்மையிலேயே இந்தியா தனது போக்கை மாற்றிக்கொண்டுள்ளதென்றால் அதை தெரிந்தவர்கள் வெளிப்படையாகவே சொல்லலாமே?? ஏன் எவரும் இதுபற்றி வாயே திறக்கிறார்களில்லை?

சரி, அடுத்தது தமிழ்க் காங்கிரஸ் திருமலையில் சம்பந்தருக்குப் போட்டியாக களம் இறங்குவது பற்றியது.வெறும் சம்பந்தர்ப் பழிவாங்கல் என்பதற்காக திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல்ப் போகச் செய்வதென்பது பேரினவாததிற்கு உதவி செய்வதுபோலத்தான் இருக்கிறது.அதை எந்தவொரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட எமது தேசத்து தலைநகரம் இனி முற்று முழுதான சிங்கள ஆக்கிரமிற்குள் வரவே இவர்களது செயற்பாடு வழிவகுக்குமென்பது உண்மை.இவர்கள் உண்மையிலேயே தமிழர் நலனில் அக்கறை கொண்டிருந்தால் தமக்குள் உட்போட்டிகளை நிறுத்தவேண்டும். சம்பந்தரைப் பழிவாங்குவதென்பது எம்மை பாதாளத்திற்குள் தள்ளிவிடுமென்றால் அதைச் செய்யாமலிருப்பதே நல்லது.நாம் என்ன சிறுபிள்ளைகளா போட்டி போட்டுக்கொண்டு பழிவாங்க??

அடுத்ததாக தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள், அல்லது பிரிந்து சென்றவர்கள் பற்றியது.இதில் கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களை விலக்கியது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் " அவர்கள் இருவரும் எந்த அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றார்களென்பது எல்லோருக்கும் தெரியும், அவர்கள் தெரிவுசெய்யப்பட்டபின்னர் மக்களுக்காகச் செய்த எந்த சேவைகளுமே திருப்தியளிக்கக்கூடிய வகையில் இருக்கவில்லை. வெளிநாடுகளில் நெடுநாள் இருந்துவிட்டு இறுதியா கொழும்பில் நிலமை சுமூகம் என்று அறிந்தவுடன் திரும்பி வந்தவர்கள். ஆகவேதான் அவர்களுக்கு இம்முறை தேர்தலில் நிற்பதற்கு நாம் இடம் கொடுக்கவில்லை" என்று கூறியிருந்தார். அவர்கள் நெடுநாள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததற்கான காரணம் என்ன? தீவிர தமிழ் தேசியத்தை ஆதரித்து நியாயப்படுத்தியதுதான் அதன் காரனம். அதன் நிமித்தம் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுருத்தல் காரணமாகத்தான் அவர்கள் நாட்டை விட்டே வெளியேறினார்கள். ஆனால், வெளிநாடுகளில் அவர்கள் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டுதானிருந்தார்கள். அதுசரி, அவர்கள் யாழ் மாவட்டத்தில திகூடிய வாக்குகள் பெற்றதன் அடிப்படை என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்பதன் அர்த்தம் என்ன? தீவிர தமிழ்த்தேசிய ஆதரவும், அன்றிருந்த தமித்தேசியத்தலமையின் மீதான தொடர்ச்சியான ஆதரவும் தான் அதுவென்பதை பிரேமச்சந்திரன் அவர்கள் கூறாமக் கூறியிருக்கிறார். அதாவது அதைத் தவறு என்று கூறுகிறார். அதாவது அவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றது ஒரு தவறான வழியில் என்று கூறுகிறார். அதாவது தமிழ்த்தேசியத் தலமை மீதான ஆதரவென்பது தவறு என்று சொல்ல வருகிறார்.

இதை சொன்னால் நீங்கள் கூட தமிழின விரோதியாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இந்திய அனுசரனையும் வேண்டாம், சிங்களப் பேரினவாதத்தின் தூண்டுதலும் வேன்டாம்.ஏனெறால் இந்தியாவோ அல்லது சிங்களப் பேரினவாதமோ ஒன்றில் நேரடியாக எம்மை அழித்தவர்கள் அல்லது அழிக்கப்படக் காரனமாக இருந்தவர்கள். இவர்களிடம் எமக்கான நியாயமான எந்தத் தீர்வுமே இருக்கப்போவதில்லை. அப்படி எதிர்பார்த்திருந்தால் இன்னுமொரு 30 வருடங்களை நாம் எண்னிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

தமிழ்க்கூட்டமைப்பிலுப்பவர்களும் சரி அதிலிருந்து பிரிந்து போய் தனிக்கட்சி ஆரம்பித்திருப்பவர்களும் சரி, ஒன்றைப் புரிந்துகொள்ள வேன்டும். அவர்கள் இன்றைக்கு விளையாடிக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பில்த்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேன்டும். நட்பு நாடு, அன்னியோன்னியக் காவடிகளும், அர்த்தமற்ற பழிவாங்கல்களும் உடனேயே நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் தாயகம், சுய நிர்ணய உரிமை, இறமை போன்ற இலக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட வேண்டும். இதை சம்பந்தர் மட்டுமில்லாமல் கஜேந்திரன் உற்பட அனைவரும் செய்யவேண்டும்.

எந்தவொரு அந்நியத் தலையீடுமில்லாத ஒன்றுபட்ட தமிழரின் சக்தியாக தமிழ்க்கூட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். இந்தக் கூட்டமைப்பில் அப்புக்காத்துக்கள் இருந்தாலும் சரி, பல்கலைக்கழக மாணவர்கள் இருந்தாலும் சரி, எல்லோரும் இணைய வேன்டும். எமக்குள் மோதுப்பட்டு அழிந்தது போதும். இன்றே இணைவோம் அல்லது அழிக்கப்படுவோம் என்பதற்கிணங்க செயல்ப்படத் தொடங்கவேண்டும். இல்லையென்றால், எமது தேசியத்தையும், தாயக மக்களையும் ஆளப்போவது கூலிப்பட்டாளக் குழுக்களும் அதன் தலைமையான சிங்களப் பேரினவாதமும்தான் என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் அரசியலில் மிதவாத தீவிரவாத அமைப்புக்கள் இரண்டும் இருந்தாலும் மக்களின் ஓகோபித்த பெரும்பான்மையப்பெற்ற தீவிரவாத அமைப்பாகிய விடுதலைப்புலிகளின் செல்வாக்கின் வீரியம் இன்னும் பல தலைமுறை சென்றாலும் மாறாது.

அதன் விடாப்பிடியான கொள்கைகளினால் பல தியாகங்களின் பின்னர் கூட அவர்கள் எட்ட வேண்டிய இலக்கை அடைய முடியாமல் போய் விட அந்த இடத்தை நிரப்ப முற்படும் மித வாத அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளின் அடிப்படையே விடாப்பிடியான கொள்கை என்ற நிலையில் இருந்து எதிர் மறையாக முற்று முழுதான விட்டுக்கோடுப்பு(கொள்கைகளற்ற) நிலையாகும்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை (புலம்பெயர் தமிழர்களையும் ஈழத்தில் வாழ்வோருக்கிடையுமிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க கூறும் காரணங்கள்

1.வன்னி மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்கும் புலம்பெயர் தமிழரின் தீவிர தேசிய வாதம் என்பதே மிதவாத தமிழ்கட்சிகள் அவர்களது ஆதரவாளர்களது கருத்துமாகும்

ஆனால் அந்த மக்களின் நிலை இன்னமும் முள்ளுக்கம்பிச்சிறைதான் என்றாகிவிட்டது)

இந்திய விடுதலைப்போராட்ட காலத்தில் மிதவாத அமைப்பும் தீவிரவாத அமைப்பும் ஈடுபட்ட போதும் மக்களிடையே மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்திய இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி தலமையில் இடம்பெற்ற மிதவாத அமைப்பே செல்வாக்கு செலுத்தியது அத்துடன் அவர்களது போராட்டமே விடுதலையைப்பெற்றுத்தந்தது என்று நம்பும் பெரும்பான்மையினர் உள்ளனர்

இந்தியாவில் ஆக்கிரமிப்பில் இருந்த இந்தவின் அகிம்சா போராட்டத்திற்கு பயந்து இந்தியாவுக்கு விடுதலையை வழங்கிய பிரித்தானிய அரசு தானது நாட்டில் ஐரிஸ் போராளியான பொபி சாண்டஸின் உண்ணாவிரதத்தை மாதியாது உயிரை எடுத்தது.

சுபாஸ் சந்திரபோஸினால் ஆரம்பிக்கப்பட்ட தீவிர வாத அமைப்பு மக்க்ளிடையே செல்வாக்கு பெறாமல் இருக்க பிரித்தானியவின் நாடக்த்தில் சில கதா பாத்திரங்களாக இருந்த காந்தி பகத் சிங்கை தூக்கிலிடுமாறு பிரித்தானியவை கேட்டதன் மூலம் தனது சுய கெள்ரவத்த்ற்கு தானே தீனி போட்ட உண்மை 90 க்ளில் வெளிச்சத்திற்கு வந்தது

ஈழத்தமிழர்கள் இன்றுள்ள சுய நல வாத அரசியல்வாதிகளை முன்னிறுத்தி தீவிரவாத செயற்பாட்டில் இறங்கினாலே தமிழருக்கு விடிவுண்டாகும்.

எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாமல் தமிழருக்கு விடிவில்லை. மேற்குலக ஆதரவுகள் வெளிப்படையாகவே இலங்கைக்கு எதிரான கோஷங்களோடு தமிழர் ஆதரவு மாயை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.

இது தோன்றுவதற்குக் காரணமுண்டு. ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீன ஆதிக்கம் முதற் காரணம். இந்தியா தற்போது சிறிலங்காவின் நாய்க்குட்டியாக மாறியுள்ளது. இழுத்த இழுப்பிற்கெல்லாம் இழுபட வேண்டியுமுள்ளது.

இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது பக்கம் சார்ந்து செயற்பட வைத்துள்ளது. இந்த அடிப்படையில்தான் விடுதலைப் புலிகள் பற்றிய சொற்பிரயோகங்களைத் தவிர்த்து கூட்டமைப்பு காரியங்களில் இறங்கியுள்ளது. விடுதலைப்புலிகள் பற்றி கருத்துத் தேர்தல் காலங்களிலோ அதற்குப் பின்னரோ கதைக்கப்படும் பொழுது, அவர்கள் மீதிருக்கும் பயங்கரவாத அமைப்பு என்னும் முத்திரையால் இந்தியா தமிழர் பக்கம் சார்ந்து நின்று தனது காரியத்தைச் சாதிக்க முடியாது போய்விடும்.

ஆகவேதான் , சம்பந்தர் உட்படக் கூட்டணி முக்கியஸ்தர்கள் இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு நிலைப்பாட்டடை ஒத்துக்கொள்ளாத சிலரைவெளியேற்றியிருக்கலாமென எனக்குத் தோன்றுகிறது.

ஆனாலும் திருகோணமலைப் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் தமிழர் பிரதிநிதித்துவம் உதிரிகளாக்கப்படும். கூட்டமைப்பினால் முடியாது எனக் கொண்டால் மாற்றுத் தமிழ்க் கட்சிகளாலும் அது முடியாதவைதான்.

டக்ளஸ், பிள்ளையான், கருணா ஆகியோரின் நிலைப்பாட்டைத் தமிழர்கள் அறிவார்கள். ஆனால் சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் ஆகியோர் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து நிற்பது தமிழருக்கும் நன்மை பயக்காது.இவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தாலும் வெளியாதரவற்ற நிலையில் தமிழருக்கான தற்போதைய மனிதாபிமான உதவிகளைக் கூடப் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாயிருப்பார்கள்.

சம்பந்தர் தோற்கடிக்கப்படுவது பிரதானமல்ல, தமிழர்களுக்கு சிறு உதவியேனும் கிடைக்காமல் செய்துவிடுவார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையின் மையத்தைத் திசை திருப்புவதாக இருக்கின்றது இந்த வாதகங்கள்.

வாதங்களை விதைப்பவர்கள் இந்த வாத நோய்க்கு உற்பட்ட வலது குறைந்தவர்களே!

தூண்டாமணி விளக்கு தூண்டாமல் நின்று எரியும்.

உங்களை தூண்டுவது யார்?- ஆதிரை

ஆதிரை விவாதத்தை முன்வையுங்கள். விவாதங்களில் இயலாமையிலும் பொய்மையிலும் இருந்துதான் தூற்றுதல் ஆரம்பிக்கிறது. தோழன் இதயச் சந்திரனும் நானும் எங்கள் ஆய்வுகலையே முன்வைக்கிறோம். நீங்கள் விரும்பியதை திரும்ப சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? பேனாவை வைத்துக்கொண்டு இப்படி பேசுகிற உங்களிடம் துப்பாக்கி இருந்தால்? இலங்கை இராணுவத்தரப்பிலோ போராளிகளிடமோ இந்திய காவல் துறையிடமோ கேட்டுப்பாருங்கள். துப்பாக்கிகளை எப்பவும் எதிர்நோக்குகிறேன். துப்பாக்க்களுக்கே எப்பவும் பணிந்ததில்லை ஆதிரை. உங்கள் வசவுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தை முன்வையுங்கள்.

தேர்தல் களம் இறைய வைவாதமாக தொடருமாதலால் தேர்தல் சம்பந்தப்பட்ட விவாதங்களை தனி பத்தியாக்கினால் நல்லது.

களத்தில் பணிபுரிகிறவர்களுக்கு மட்டுமே தீவாக புரியக்கூடிய மக்கள் மத்தியில் நிகழ்கிற, புலம்பெயர்ந்தோர் பலருக்குத் தெரியாத, சான்றோர் மத்தியில் பேசப்படாத பொருள் ஒன்று உண்டு. அது முள்ளிவாய்க்காள் நிகழ்வுகள் பற்றிய மக்களது விமர்சனங்களாகும். இவற்றை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவது அரச தரப்பின் வெற்றிக்கே வழிவகுக்கும். இந்த பேசாப் பொருளை பேசியதற்க்காக என்மீது பாயவேண்டாம். கூட்டமைப்பின் தலைமை உணர்ந்துள்ளதையே அவர்களது வேட்ப்பாளர் தெரிவு உணர்த்துகிறது.

தமிழரின் இறுதி ஆயுதங்களாக இருக்கும் இறையாண்மை,தன்னாட்ச்சி,சுய நிர்ணயமென்பவற்றைத் தாரைவார்ப்பதன் மூலம் சம்பந்தர் எங்கனம் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கப் போகிறார்? ஒற்றை ஆட்ச்சி என்பதை ஏற்றுக் கொள்வதன்மூலம் சிரிலங்கா பவுத்த பேரின்வாத அரசையும் அதன் நிறுவங்களையும் தமிழர் தரப்பு அரசியல் ரீதியாக அங்கீகரிக்கிறது.இதன் அடிப்படியில் நிகழப் போவது அரசியல் அதிகாராப் பரவலாக்கமே.கொடுக்கப்படும் அதிகாரக்லை மீள எடுக்கவும் எடுக்கப்படும் முடிவுகளை விடோ செய்யும் அதிகாரமும் சிறிலங்கா அரசிடமே இருக்கும்.இதன் மூலம் இன்று அமைக்கப்பட்டு இருக்கும் அதி பாதுகாப்பு வலயங்கள் நிரந்தரமாக்கப்படும், தமிழரின் காணிகளை அரச உடமையாக்கி அவற்றை மத்திய அரசால் குடியேற்றங்களுக்கு வழங்க முடியும்.இவற்றைப் பற்றி மூச்சுவிடக் கூட மாகாண/மாவட்ட/கிராம சபைக்கு அதிகாராம் இருக்காது.சுயாட்ச்சி என்பது ஒரு கோசமல்ல.அது அரசியல் ரீதியாகப்பொருள் பொதிந்த ஒரு சொல்.அதனை வெறும் உணர்ச்சிக்கோசமகாப்பார்க்கும் சம்பந்தர் தமிழரின் அரசியல் சரணகதியை முழுமைப்படுதுகிறார்.

மேலும் இந்தியா சொல்வதற்கெல்லாம் சிறிலங்கா அரசு இனித் தலையாட்டப் போவதில்லை.அதற்க்கு சீனா,ரசியா,இரான் என்னும் பலமான ஒரு அணியை அது ஏற்கனவே த்யார் செய்து விட்டது.இந்தியாவின் தமிழர் சுயனிர்ணயதுக்கு எதிரான நிலைப்பாடு அதனை இனி சிறிலங்காவைப் பொறுத்தவரை செல்லாக்காசாக்கி விட்டது.இந்தியா சொல்வதை நம்பி சம்பந்தர் தமிழரின் எதிர்காலாத்தை நிரந்தரமாகைல்லாது செய்யப்போகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.