Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி

Recommended Posts

இறைவன்,

நான் எழுதியவற்றைக் கவனமாகப் படிக்கவும், நான் தனி நாடு பற்றியோ தமிழீழம் பற்றியோ எழுதவில்லை.தமிழருக்கென வட கிழக்கில் இருக்கும் தாயகம் பற்றியே பேசுகிறேன்.தாயகக் கோட்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்துவ சமூகத்துக்கு அதன் பரம்பரையான வாழ்விடம் ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வது.தமிழருக்கான தீர்வுகள் என்று பேசும் போது தாயகம் ஒன்று இருக்கிறது என்று சொல்வதன் மூலம் வடகிழக்குக்கு தமிழர்களது பூர்வீக பூமி என்பதுவும் அதில் ஆழுகை செய்வதற்க்கு அவர்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன என்பதுவும் அதில் இருந்து பிறக்கும் முடிவுகள்.இதன் அடிப்படியிலையே த தே ம முன்னணி இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை முன் வைக்கிறது.இங்கே இரண்டு தேசங்களும் அதன் அதன் பூர்வீக நிலங்களில் இறமை கொண்டவையாகவும் சம உரிமைகளை உடையனவாகவும் இருக்கும்.த தே கூட்டமைவு ஏற்றுக் கொண்ட வரபை ஆளமாக வாசித்துப் பாருங்கள்.அதில் சிறிலங்கா அதிபருக்கு விசேட அதிகாரங்களும் மத்திய அரசுக்கு விசேட அதிகாரங்களும் இருக்கும்.இதில் சட்டவாக்க அதிகாரம் பிரதேச சபையை கலைக்கும் அதிகாராம் என பல விசேட அதிகாரங்கள் இருக்கின்றன.இதில் இருந்து தெரியவருவது என்ன.தமிழருக்கு என விசேடமான உரிதுரிமைகள் அவர்களின் பூர்வீக பூமியில் அவர்களுக்குக் கிடையாது.தமிழர்களுக்கு சிறிலங்கா பாராளுமன்றத்தின் இறமையின் கீழ் சில அதிகாரங்கள் பரவலாக்கல் மூலம் வழங்க்கப்படுகின்றன என்பதே.இது நிச்ச்யமாகா தமிழர்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது என்பதையோ அதில் அவர்களுக்கு இறமை இருக்கிறது என்பதன் அடிப்படையிலோ அமையப் பற்ற வரைபு அல்ல.

அடுததாக இந்த வரைபு சிறிலங்கா அரசால் ஏற்றுக் கொள்ளபடுகிறது என்று வைதுக் கொள்வோம். நடைமுறையில் அது எவ்வாறு செயற்படும்.அதி உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் ஏற்படுதப்படிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் நிரந்தரமாக்கடும்.தமிழரின் தாயக பூமியின் தொடர்பை அறுக்கும் வண்ணம் முகியமான கேந்திர இடங்களில் இவை அமைக்கப்படும்.

நாரதர்,

தமிழரின் தாயகம் வடகிழக்குத்தான். அந்தப் பிரதேசங்கள் இன்றுவரை பறிபோய்க் கொண்டுதானிருக்கிறது. அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. எந்த தமிழ்க் கட்சியினர் தமிழரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றாலும் தடுத்து நிறுத்த முடியாது.

நீங்கள் ஒரு நல்ல விடயத்தைதான் தொட்டுள்ளீர்கள். நான்தான் கொஞ்சம் வெளியில் சென்றுவிட்டேன். கொள்கையளவில் மட்டும் செயற்பட்டு எந்தப் பிரயோசனமும் இல்லை. விடுதலைப்புலிகள் போன்று தமிழருக்கான போராட்ட சக்தியொன்று இப்போது தமிழர்வசமில்லை. அப்படியொனறு இனிமேல் தோற்றுவிக்கப்படுமா? என்பது எல்லோர் மனதிலுமுள்ள கேள்விக்குறி.

இப்படிப்பட்ட நிலையில் தமிழர் தாயகத்தை சிறிலங்காவின் அதிகார மட்டத்தினர் மட்டுமல்ல, தீர்வை ஏற்படுத்த முயலும் இந்திய மேற்குலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளமாட்டாது. தமிழர் மீதான வலிந்த தீர்வைத்தான் இவர்களால் ஏற்படுத்த முடியும். இப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் விடுதலைப்புலிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தம் அடிப்படையிலான வடகிழக்கு மாகாணசபை என்ற தீர்வை ஏற்றார்கள். அது தீர்வாக அமையாததினால் அவர்கள் மீண்டும் போராடினார்கள். அது விடுதலைப்புலிகளால் முடிந்தது. இப்போது அது முடியாத காரியம்.

போராடக் கூடிய வலிமை தமிழரிடம் இல்லை. அதேபோன்றதொரு அதிகார நிலைதான் இப்போதும்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெடித்தவர்கள் நாமா? நாமெல்லாம் இங்கு சுகமாக அல்லவா இருக்கிறோம். நேரத்திற்கு நேரம் போட்டுக் கொள்கிறோம். கூடுமிடங்களில் அரசியல் பேசிக் கொள்கிறோம். இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு மானம்பற்றியும் பேசுகிறோம். வருந்தும் தாயகத்தில் வாழும் தமிழனைவிடவும், அவர்களை அதிலிருந்து மீட்பதைவிடவும் வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

தாயகத்தில் வாழும் தமிழர்கள் தங்களைத்தாங்களே இந்தத் துன்பத்திலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தாயகக் கோட்பாட்டை கொஞ்சம் தூரத்தில் வைத்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேள். நீங்களும் உங்கள் குடும்பமும் சொகுசாகப் போராடுங்கள்.

இப்போது இனமானம் காக்கத் துணிந்த நீங்கள் அன்று களத்தில் நின்றிருக்க வேண்டும். அங்கே வாழ்ந்த மக்களோடு துயரைப் பகிர்ந்திருக்க வேண்டும். மானமழிந்த பெண்களின் அவலக் குரல்களைக் காதில் வாங்கியிருக்க வேண்டும். இதில் எதுவுமில்லையே. நாமெல்லாம் சொகுசு போராட்ட வீரர்களில்லையா?

இன்றும் கூட கதியிழந்த தமிழரைப்பார்த்து கொள்கைப்படி நட, போராடு, மடிந்துபோ என்கிறோமே எவ்வளவு சுயநலம் நமக்கு. என்னோடு ஒட்டிய சோகத்திற்கு நாமல்லவா போராடியிருக்கவேண்டும். இங்குவந்ததே நாம் தாயகத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கென்றுதான் நினைக்கின்றேன்.

வெடியாய் வெடித்தவர்கள் நாமில்லை. வெடிசுமந்தவர்களின் ஏழைக் குடும்பங்கள் நாமில்லையே. அவர்கள் வாழும் நிலையும் நமது மண்டு மூளைக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் நாமில்லை. அவர்கள் போராட வேண்டும். மானத்தை இழக்க வேண்டும். வேறுவழிகள் பற்றிச் சிந்திக்கவே கூடாது. இவையெல்லாவற்றையும் இங்கிருந்து நாங்களே தீர்மானிப்போம்.

ஏனென்றால் 83 ஆம் சோகங்கள் ஒட்டிக் கொண்டதால் நாமிங்கு வந்துவிட்டோம்.

எனக்கு புரியவில்லை என்று எழுதுங்கள்! அதில் உண்மையிருக்கும். நாம் என்று எல்லோரையும் உள்ளடக்காதீர்கள்.

தற்போதைய நிலையில் ஆயுதபோராட்டம் என்பது அங்கே சாத்தியம் இல்லை என்பதை இன்னொரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு விளங்கபடுத்தும் நிலையில் இல்லை. அதையேன் கஸ்ரபட்டு செய்கின்றீர்கள் என்பது புரியவில்லை. அதுவும் இராஜதந்திரமோ தெரியவில்லை?

தமிழன் செத்துகொண்டுதான் இருக்கிறான்...................

இது புதிதில்லை நேற்றும் செத்துகொண்டுதான் இருந்தான்.

நாளையும் சாகத்தான் போகிறான்.................

அடக்குமுறைக்குள் அகபட்டவன் நிலை எதுவாக இருக்குமோ? அதே நிலையை தவிர வேறு நிலையை அடிமைகளாக இருந்துகொண்டு எதிர்பார்க்க முடியாது. இப்போதும் எப்போதும் ஆக்கபூர்வமான சிந்தனையாக இருக்க கூடியது அடிமை விலங்உடைப்பதுதான். மாறாக எப்படி விலங்கடன் வாழ்வது என்ற தத்துவமும் சிலேடைகளும் அங்கே எந்த தமிழனையும் காப்பாற்றபோவதில்லை.

சம்ந்தன் ஐயா அவர்கள் நிருமாவிடம் தமிழர் நிலையை இரஜதந்திரரீதியாக எடுத்துசொல்வார் அதை அவர் சோனியாவிடம் போய் கூறஇருக்கிறார் என்று பம்மாத்து எழுதுவது. அடிமைக்கும் அடிமையாகுங்கள் என்று அங்குள்வர்களை நீங்கள் மறைமுகமாக சொல்கின்றீர்கள் என்பதை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்.

ஆயுதபோராட்டம்தான் ஓரே வழி...........

இந்த ஊலகத்திற்கு புரியகூடிய ஓரே மொழி அதுதான். ஆனால் கடந்தகால ஆயுதபோராட்டம் பல அனுபவங்களை எமக்கு தந்திருக்கின்றது. கரும்புலிகள் அனுராதபுரம் விமான நிலையத்தை தகர்க்கபோகிறார்கள்............. தலவைனால் அவர்களுக்கு கூறபடுகின்றது. அங்கே இருக்கும் இராணுவத்தின் குடும்பங்கள் தங்கியிருக்கும் விடுதிகள் பக்கம் தவறியும் தாக்குதல் செய்யாதீர்கள். எமது முந்தைய ஆயுதபோர் இப்படிதான் இருந்தது. அதாவது எதிரிக்கு புரியாத மொழியாகவே இருந்தது. தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை ஒன்றுதான் ஓங்கி நின்றது. போராட்டத்தை எமது நிலப்பரப்புக்குள் வைத்துகொண்டிருந்தோம் அதலால் அழிவுகள் எமக்கானதாகவும் ஆக்கங்கள் எதிரிக்கு அனதாகவும் இருந்தது. இவற்றில் இருந்து சில மாறுதல்களை நாம் செய்ய வேண்டும். இதெற்கெல்லாம் காலம் கனியாது நாம்தான் கனிய வைக்கவேண்டும்.

இங்கே சொகுசு வாழ்வு சொகுசுவாழ்வு என்று திரும்ப திரும்ப நீங்கள்தான் அதை கண்டுபிடித்ததாக எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொகுசாக அரண்மனைகளில் படுத்துகிடப்பவர்கள்தான் இப்போது உலகை ஆட்டிகொண்டு இருக்கின்றார்கள். ஆகவே களத்திற்கு வெளியே என்பது போராட்டத்திற்கு வெயியே என்ற சிந்தனையை கொஞ்சம் தூக்கியெறிய துணிந்தாலே ஒற்றுமை என்பது சாத்தியம் ஆகும். பணத்தின் பலத்தினால் நாம் சாதிக்க கூடியது எவ்வளவோ இருக்கின்றது............... தமிழர்களுடைய பணங்கள் சிறுவெள்ளங்களாக் சிதறிகிடக்கின்றது. கொஞ்சம் போராடினால் பெருவெள்ளமாக்கலாம் அதில் தனிட்ட வாழ்கையென்பதிலும் நிறையவே முன்னேற்றம் உண்டு.

ஏதாவது ஆக்கபூர்வமானது பற்றி கதைக்கலாம் வாருங்கள். அதைவிடுத்து புலம்பெயர் பூசாரிகள் தாயகம் பற்றி பேச அவர்களுக்கு உரிமைகிடையாது என்று யாரோ ஒரு தலையங்கம் தீட்டி பத்திரிகையில் எழுதினார்கள். இதை புலம்பெயாரமல் இடம்பெயராமல் எதிரியோடு ஒட்டிகொண்டிருக்கும் ஒரு துரோகியால்தான் எழுதமுடியும்............. ஆனால் அதற்கும் இதே யாழ்களத்தில் கைதட்டுகின்றார்கள். ஏன் என்றால் அங்குள்ள மக்களின் நிலையைபற்றி அவர் கவலைபட்டு எழுதிவிட்டாராம். இடம்பெயராது புலம்பெயராது போராட்டத்தை சுமந்தவன் ஈழத்தில் எங்கே இருக்கிறான்? அங்குள்ள மக்களின் நிலைமைபற்றி எழுதுவதால் எந்த நற்காரியமும் கூடுவதற்கில்லை

இப்போது உங்கள் எழுத்துகளில் கொஞ்சம் மாற்றம் தெரிகின்றது................... ஆம் இராஜதந்திரம் என்ற பம்மாத்தால் ஆவதற்கு ஒன்றுமில்லை. எரிந்த வீடுகளில் இருந்தே அரைகுறையா எரிந்த கட்டைகளை கொண்டு இப்போதைக்கு போதுமான ஒரு வீட்டை கட்டுங்கள் என்பதில் பல அர்த்தம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கேஸ கனகரத்தினத்தார கேக்கவேணும்.....என்னத்த கைவிட்டியளெண்டு!

இருப்பதைத் திருத்திக் கொள்வதற்கு முதலில் தயாராகுங்கள். அதுதான் முதலில் செய்யப்பட வேண்டியது. எதிர்க்கும் சக்தி முழுதாக அழிக்கப்பட்டிருக்கும் இந்தவேளையில் எதைப்பற்றிப் பிடித்து ஆறுதல் அடைவது என்பதைப்பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

இன்றைக்குப் பிரிந்து நின்று இரு குழுக்களாக அடிபடுகிறார்களே தாயகத்திலும் புலத்திலும், அது மட்டுமல்ல, நாடு கடந்த அரசு ஒன்று, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு ஒன்று, எல்லாப் பகுதியினரும் அறிக்கைப் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் யாருக்காக? தமிழர்களுக்காகத்தானே? இந்தத் தமிழர்கள் இருக்கும் நிலையைக் கவனிக்காமல், அவர்களை கைகொடுத்து தூக்கிவிடாமல் இருப்பது தகுமோ?

நாம் வாதிடுவது ஒன்றும் உதவாத விடயமல்ல. தற்போதைய நிலையில் கையிலெடுக்க வேண்டியது எது என்பதுதான் நமக்குள் இருக்கும் பிரச்சனை.

முஸ்லிம்களின் நிலைப்பாடு பிழையானதல்ல. அவர்கள் தமது இனத்தை, அந்த இனத்தின் இருப்பை எவ்வாறு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பாருங்கள். ஒன்றைக் கையிலெடுப்பார்கள், அது முடியாமல் போனால் கைவிடுவார்கள். தேவையேற்படும்போது அதையே மீண்டும் கையிலெடுப்பார்கள்.

உங்களுக்குஉதாரணம் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தியா பிரிந்த போது, பாகிஸ்தானாகப் பிந்தார்கள். ஏன் தமிழருக்கான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம், இழப்புக்களைக் குறுக்கிக் கொண்டு எவ்வளவு சாதிக்க முற்பட்டார்கள். அந்த நேரத்தில் தமிழருக்கு தீர்வு என்ற ஒன்று நடைமுறைக்கு வந்திருந்தால் அவர்கள் இழப்பைத் தவிர ஆதாயத்தையே மேலதிக ஆதாயத்தையே பெற்றிருப்பார்கள்.

இதனை அரசியல் விபச்சாரம் என்றோ, அக்கா, தங்கைகளின் மானத்தை விற்பதென்றோ பொருள் கொள்ளக் கூடாது. அதுவும் அரசியல் சாணக்கியம்தான். முள்ளிவாய்க்காலோடு முடிந்த தமிழரின் கதையை இனி எங்கேயிருந்து தொடர்வது. இன்னும் பலர் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். நானும் படித்தேன். அது முற்றுப் புள்ளியல்ல, இன்னொன்றின் தொடக்கமென்று. ஆனால் எங்கிருந்து என்று எழுதவில்லை. ஏனெனில் அவர்களுக்கும் அது கேள்விக் குறிதான்.

விழுந்து கிடப்பவனை தூக்கிவிடாது போராடு என்பது நமக்கெல்லாம் ( இந்த நமக்கெல்லாம் என்பது உங்களுக்கும் எனக்கும்) இலகுவானது. வீழ்ந்து கிடப்பவனுக்கு அது இயலாத காரியம்.

எதை அடைய முடிகிறதோ அதை முதலில் அடைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்பவன் ஒருவன் கொடுப்பவன் ஒருவன்.கொடுப்பவன் ஒரு போதுமே கேட்பவனின் விரும்பியதைக் கொடுப்பதில்லை.கேட்பவனும் தான் விரும்பியது கிடைக்கும் என்று அதிகமாகக் கேட்பதில்லை.அதிகமாகக் கேட்டால் கேட்பவன் குறைத்துத் தரும் பொழுது கேட்பவன் திருப்தி அடையக் கூடிய அளவாவது கிடைக்கும்.கேட்பதையையே குறைத்துக் கேட்டால் கொடுப்பவன் அதிலும் குறைத்துக் கொண்டு தரும்பொழுது என்ன மிஞ்சும்?????????????(ஆனால் குரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரிதான் இது முடியப்போகிறது.கொடுப்பவனுக்கும் இல்லாமல் கேட்பவனுக்கும் இல்லாமல் நடுநிலை என்ற பெயரில் எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விட ஒரு குரங்கல்ல பல குரங்குகள் காவலிருக்கின்றன.)

Link to comment
Share on other sites

தங்கேஸ கனகரத்தினத்தார கேக்கவேணும்.....என்னத்த கைவிட்டியளெண்டு!

கனகரத்தினத்தார் தான் உள்ளை இருந்து சித்திரவதை படும் போது தன்னை பற்றி கவலை படாத உங்களை பற்றி தான் இனி கவலை படபோவதில்லை எண்டு ஒதுங்கீட்டார்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வாதிடுவது ஒன்றும் உதவாத விடயமல்ல. தற்போதைய நிலையில் கையிலெடுக்க வேண்டியது எது என்பதுதான் நமக்குள் இருக்கும் பிரச்சனை.

விழுந்து கிடப்பவனை தூக்கிவிடாது போராடு என்பது நமக்கெல்லாம் ( இந்த நமக்கெல்லாம் என்பது உங்களுக்கும் எனக்கும்) இலகுவானது. வீழ்ந்து கிடப்பவனுக்கு அது இயலாத காரியம்.

எதை அடைய முடிகிறதோ அதை முதலில் அடைவோம்.

நன்றி இறைவா

எல்லோரும் எட்டாததற்கு ஆசைப்படுகின்றோம்

அல்லது அது புளிக்கும் என்கிறோம்

கிடைப்பதை எடுத்து ...

அதிலிருந்து துளிர்க்க எப்போ முயல்வோம்]

Link to comment
Share on other sites

நாம் வாதிடுவது ஒன்றும் உதவாத விடயமல்ல. தற்போதைய நிலையில் கையிலெடுக்க வேண்டியது எது என்பதுதான் நமக்குள் இருக்கும் பிரச்சனை.

முஸ்லிம்களின் நிலைப்பாடு பிழையானதல்ல. அவர்கள் தமது இனத்தை, அந்த இனத்தின் இருப்பை எவ்வாறு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பாருங்கள். ஒன்றைக் கையிலெடுப்பார்கள், அது முடியாமல் போனால் கைவிடுவார்கள். தேவையேற்படும்போது அதையே மீண்டும் கையிலெடுப்பார்கள்.

எதை அடைய முடிகிறதோ அதை முதலில் அடைவோம்.

எந்த அடிப்படையில் தமிழர்களை தூக்கி விடுதல், எழுப்பி விடுதல் எண்று சொல்லி கொள்கிறீர்கள். ?

மற்றவர்கள் வீரவசனம் பேசுகிறார்கள் எண்று சொல்லும் உங்களின் சொற்களில் இருக்கும் நம்பிக்கை எந்த அடிப்படையில் கட்டி எழுப்ப பட்டு இருக்கிறது.? சம்பந்தன் குழுமீதான நம்பிக்கையா.? அப்படியானால் யாருடன் பேசி இந்த தீர்வை வாங்கி தரப்போகிறார்கள்.? இந்தியாவுடனா.? அல்லது மகிந்தவுடனா.?

மகிந்தவிடன் எண்றால் அதை இண்று அவர்களால் ஏன் செய்து இன்னலில் இருக்கும் தமிழ் மக்களின் முகாம் வாழ்க்கையையும், இன்னபிற இனல்களையும் தீர்க்க முடியவில்லை.?

உள்ளூரிலை கோழி பிடிக்க முடியாதவை வெளியூரிலை என்னத்தை பிடிக்க போகினம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூரிலை கோழி பிடிக்க முடியாதவை வெளியூரிலை என்னத்தை பிடிக்க போகினம்.?

கோழி பிடிக்கப்போவதற்கே கனக்க விடயம் தெரியவேணும்

முக்கியமாக பெரிதாக கதைக்கக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதைத் திருத்திக் கொள்வதற்கு முதலில் தயாராகுங்கள். அதுதான் முதலில் செய்யப்பட வேண்டியது. எதிர்க்கும் சக்தி முழுதாக அழிக்கப்பட்டிருக்கும் இந்தவேளையில் எதைப்பற்றிப் பிடித்து ஆறுதல் அடைவது என்பதைப்பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

இன்றைக்குப் பிரிந்து நின்று இரு குழுக்களாக அடிபடுகிறார்களே தாயகத்திலும் புலத்திலும், அது மட்டுமல்ல, நாடு கடந்த அரசு ஒன்று, வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு ஒன்று, எல்லாப் பகுதியினரும் அறிக்கைப் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகளெல்லாம் யாருக்காக? தமிழர்களுக்காகத்தானே? இந்தத் தமிழர்கள் இருக்கும் நிலையைக் கவனிக்காமல், அவர்களை கைகொடுத்து தூக்கிவிடாமல் இருப்பது தகுமோ?

நாம் வாதிடுவது ஒன்றும் உதவாத விடயமல்ல. தற்போதைய நிலையில் கையிலெடுக்க வேண்டியது எது என்பதுதான் நமக்குள் இருக்கும் பிரச்சனை.

முஸ்லிம்களின் நிலைப்பாடு பிழையானதல்ல. அவர்கள் தமது இனத்தை, அந்த இனத்தின் இருப்பை எவ்வாறு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பாருங்கள். ஒன்றைக் கையிலெடுப்பார்கள், அது முடியாமல் போனால் கைவிடுவார்கள். தேவையேற்படும்போது அதையே மீண்டும் கையிலெடுப்பார்கள்.

உங்களுக்குஉதாரணம் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தியா பிரிந்த போது, பாகிஸ்தானாகப் பிந்தார்கள். ஏன் தமிழருக்கான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம், இழப்புக்களைக் குறுக்கிக் கொண்டு எவ்வளவு சாதிக்க முற்பட்டார்கள். அந்த நேரத்தில் தமிழருக்கு தீர்வு என்ற ஒன்று நடைமுறைக்கு வந்திருந்தால் அவர்கள் இழப்பைத் தவிர ஆதாயத்தையே மேலதிக ஆதாயத்தையே பெற்றிருப்பார்கள்.

இதனை அரசியல் விபச்சாரம் என்றோ, அக்கா, தங்கைகளின் மானத்தை விற்பதென்றோ பொருள் கொள்ளக் கூடாது. அதுவும் அரசியல் சாணக்கியம்தான். முள்ளிவாய்க்காலோடு முடிந்த தமிழரின் கதையை இனி எங்கேயிருந்து தொடர்வது. இன்னும் பலர் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். நானும் படித்தேன். அது முற்றுப் புள்ளியல்ல, இன்னொன்றின் தொடக்கமென்று. ஆனால் எங்கிருந்து என்று எழுதவில்லை. ஏனெனில் அவர்களுக்கும் அது கேள்விக் குறிதான்.

விழுந்து கிடப்பவனை தூக்கிவிடாது போராடு என்பது நமக்கெல்லாம் ( இந்த நமக்கெல்லாம் என்பது உங்களுக்கும் எனக்கும்) இலகுவானது. வீழ்ந்து கிடப்பவனுக்கு அது இயலாத காரியம்.

எதை அடைய முடிகிறதோ அதை முதலில் அடைவோம்.

பதில் எழுத நீங்கள் ஒதுக்கிய நேரத்திற்கும் பதிலுக்கும் நன்றி.

நாங்கள் கிட்டதட்ட ஒருவரோடு ஒருவர் நெருங்கிவிட்டோம்.

இப்போதைக்கு எதையாவது பிடிப்போம் ( என்று நீங்களும்)

ஒரு மனிதனை சோம்பேறியாக்க கூடிய எதையும் பேச முற்படாதீர்கள் ( என்று நானும்)

ஒட்டாதிருக்கின்றோமே தவிர எமது நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கின்றது.

உங்களால் ஏற்றுகொள்ள முடிந்தால் ஏற்றுகொள்ளுங்கள் இல்லாவிட்டால் புறம்தள்ளி விடுங்கள்!

எதிரியின் நிகழ்சி நிரலே அதுதான். இதுஒன்றும் புதிதாக வரவில்லை பாலஸ்தீனம் அர்ஜென்டீனா தற்போது ஈராக் ஆப்கானிஸ்தான் என்று ஒரு முறை சுற்றிபாருங்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி (பய்ங்கரவாதம் தற்போதைய லேட்டஸ்) போர் என்ற போர்வையில் மக்களையும் இவிரக்கமின்றி கொன்று குவிப்பது. பின்பு ஏதும் அறியாது ஒடிதிரியும் மக்களை அடக்கி வைத்துகொண்டு யாராவது ஒரு பொறுக்கியை வைத்துகொண்டு பாசாங்கு செய்து எல்லாம் சுமூகமாக இருப்பதாக ஒரு நிலையை தோற்றுவது. அவ்வப்போது மீடியாவின் துணையோடு மக்கள் நலமாக உள்ளார்கள் என்று மக்களையே நம்ப வைப்பது. ஏதோ ஜனநாயகம் பூத்துகுலுங்குவதாக அவர்களின் அருவருடிகளையும் பொறுக்கிகளையும் அழைத்து பேசுவது. மற்றையபடி முன்கதவால் தமது சொந்த உற்பத்திகளை விற்பனை செய்வது பின்கதவால் உள்ளுர் வளங்களை அள்ளுவது.

இப்போதைக்கு எதையாவது பிடிப்போம் என்ற வார்த்தை வசப்பு எதிரிகளின் திட்மிட்ட செயற்பாட்டினால்தான் உங்களிடம் வந்து ஒட்டிகொண்டுள்ளது. இப்போதைக்கு................. என்று உங்களால் எழுத முடியுமே தவிர எதுவரைக்கும் என்று உங்களால் ஒரு கால எல்லையை எழுத முடியாது. ஏனென்றால் அப்படியொரு காலஎல்லை இல்லை மாறுதல் எனறோ மாற்றம் என்றோ ஒன்றும் தோன்றபோவதில்லை காரணம் எதிரியின் நிகழ்சி நிரலில் நாம் தங்கிநிற்கிறோம்.............. எதிரியின் நிகழ்ச்சி நிரலில் அது இல்லை.

அம்மா குண்டடிபட்டிருக்க... தம்மி சிறையிருக்க......... அக்காவை கடைசியாக நடந்துவரும்போது கண்டார்களாம் என்பது கடைசி கதையாக இருக்க. இங்கே சொகுசாக இருந்து கொண்டு என்று உங்களால் எப்படி எழுத முடிகின்றது என்று என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை. கிட்டதட்ட பலருடைய கதைகள் இப்படிதான் இருக்கின்றது அப்படியில்லை தப்பி வந்திருந்தால் கூட இராணுவ வேலியின் ஓரத்தில் குமர்பெண்களை வைத்துகொண்டிருக்கும் தாய்தந்தையரின் இதயதுடிப்பு அவர்களுக்கு பிள்ளைகளாக பிற்ந்திருந்தால் நிற்சயம் இங்கும் இருக்கும். வலிகளை அங்கு இங்கு என்று தயவு செய்துபிரிக்காதீர்கள் மறைமுகமாக நீங்கள் துரோகநாய்கள் எதை பரப்ப நினைக்கின்றார்களோ அதை செய்கின்றீர்கள் என்பதை புரியுங்கள்.

நாம் வாழவேண்டும் என்று நினைத்தால் ஓரே வழி வலிகளை பொறுப்புதுதான். எதிரியின் நிகழ்சிநிரலை எதிர்த்து போராடாதுபோனால் பரவாயில்லை............... நிருபாமா வருகிறார் என்றால் த.தே கூ அவருடன் போய் பேச என்ன இருக்கிறது? இந்தியாவிற்கு தெரியாது என்ன நடந்தது இனி புதிதாகபோய் சொல்வதற்கு? அடுத்தடுத்து எல்லாநாடுகளிலும் ஒரே நிகழ்சிநிரலை ஆதிக்ககாரர்கள் செய்துவருகிறார்கள்.......... அவர்கள் ஒருவரையொருவர் பின்பற்றுகிறார்கள் ஒருவரோடு ஒத்துழைக்கிறார்கள். நாம் அதற்குள் அகபடாது இருக்க வேண்டும் என்றால் அது இன்றிலிருந்தே தொடங்கவேண்டும். பின்பு அதற்கு என்று ஒரு நாள் வரப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

நானும் இதைத்தான் சொல்கின்றேன்

நாம் இருவரும் ஒன்றைத்தான் சிந்திக்கின்றோம்

ஆனால்

எனது அக்காளும் தங்கையும் அம்மாவும் ஒரு நேரச்சாப்பாட்டுக்காக எதிரியிடம்

எதையும் எடுத்துக்கோ என்று சொல்கிறார்கள்

நான் இதைத்தடுப்போம் முதலில் என்கிறேன்

தாங்கள் பாலும் பழமும் கொண்டு வாறேன்

அதுவரை நீங்கள் எப்படியாவது சாப்பிடுங்கள் என்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

இத் தலைப்பு தொடர்பாக இன்னொரு ஊடகத்தில் வந்த செய்தி.

Sri Lanka's Tamils drops demand for separate state

In Sri Lanka, the political party closest to the defeated Tamil Tiger rebels has dropped its demand for a separate state. The Tamil National Alliance or TNA was generally seen as a proxy for the now-defeated Tamil Tiger separatists. But 10 months after the rebels' defeat, the TNA is changing its outlook saying it wants power-sharing with a federal structure. The TNA's also called for two Tamil majority provinces to be merged back into one with significant devolution of powers on issues like land and taxes.

Presenter: David Chen

Speakers: Dr Pakiasothy Saravanamuttu, Executive Director, Sri Lanka's Centre for Policy Alternatives; Dr Sam Pari, Australian Tamil Congress

http://www.radioaustralia.net.au/asiapac/stories/201003/s2847750.htm

Link to comment
Share on other sites

இறைவைன்,

தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன அதற்கான அவர்கள் தீர்வு என்ன என்பதன் அடிப்படையிலையே,தமிழ் மக்களைப் பிரதினிதுவப்படுத்தும் ஒரு தலமை அல்லது ஒரு கட்ச்சி இயங்க முடியும்.எந்தக் கொள்கைகளும் அற்று இந்தியா சொல்கிறது என்பதால் நாங்கள் இதனைச் செய்வோம் என்போர் தமிழ் மக்களை எவ்வாறு பிரதினிதுவம்செய்ய முடியும்?கொள்கைகள் அற்ற கட்ச்சிகளுக்கு ஈற்றில் என்ன நடந்தது என்பதை நாங்கள் குமாரசூரியர் முதல் கருணாவரை பார்த்து விட்டோம்.அடிப்படைக் கொள்கைகளை இந்தியாவிடம் தாரை வார்த்துவிட்டு நாம் எதைப் பெறப் போகிறோம்.?

இந்தப் போரை நடாத்தியது இந்தியா அது எதற்காக? ஈழத்தில் தமிழர்கள் தன்னாத்சியுடைய ஒரு அரசை நடத்தக் கூடாது என்பதற்காக.ஆனால் ஈழத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு தன்னாட்ச்சி உடைய அரசால் மட்டுமே தீர்க்கப் பட முடியும் என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் எமக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து நாம் வந்து அடைந்த முடிவு.

சிறிலாங்கா இந்திய ஒப்பந்தம் பற்றிக் கூறீனீர்கள், நல்லது அந்த ஒப்பந்ததின் அடிப்படையில் யாருடைய நலன்கள் பாதுகாக்கப்பட்டன?வடகிழக்கின் முதல்வர் கடைசியில் என்ன சொல்லி விட்டு ஓடினார்?இந்திய சிறிலங்க ஒப்பந்ததின் மூலம் தமிழர் அடைந்த இன்னல்கள் எவ்வளவு?இன்றைய சூழலிலும் தன்னாட்ச்சி தாயகம் சுயனிர்ணயம் என்பதன் அடிப்படையில் இயங்க ஒரு அணி தயாராக் இருக்கிறது,இன்னொரு புறம் எம்மை அழித்த இந்தியாவின் துணையுடன் தமிழரின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்ட ஒரு அணி இருக்கிறது. நீங்கள் இதி ல் யாரை ஆதரிபீர்கள்? கொள்கைகளுடன் நேர்மையாக அரசியல் செய்பவர்களையா அல்லது எம்மை அழித்தவர்களின் சொற்படி நடப்பவர்களையா?

Link to comment
Share on other sites

கோழி பிடிக்கப்போவதற்கே கனக்க விடயம் தெரியவேணும்

முக்கியமாக பெரிதாக கதைக்கக்கூடாது

அப்ப உங்களுக்கு கோழியும் பிடிக்க தெரியாது எண்டுறீயளோ.? கோழி பிடிப்பவர்கள் கோழிக்கு தீனி போட்டபடி வாயாலை எதையாவது சொல்லி கூப்பிடுறதை நீங்கள் பார்த்தது கூடவா இல்லை. :D

Link to comment
Share on other sites

எந்த அடிப்படையில் தமிழர்களை தூக்கி விடுதல், எழுப்பி விடுதல் எண்று சொல்லி கொள்கிறீர்கள். ?

மற்றவர்கள் வீரவசனம் பேசுகிறார்கள் எண்று சொல்லும் உங்களின் சொற்களில் இருக்கும் நம்பிக்கை எந்த அடிப்படையில் கட்டி எழுப்ப பட்டு இருக்கிறது.? சம்பந்தன் குழுமீதான நம்பிக்கையா.? அப்படியானால் யாருடன் பேசி இந்த தீர்வை வாங்கி தரப்போகிறார்கள்.? இந்தியாவுடனா.? அல்லது மகிந்தவுடனா.?

மகிந்தவிடன் எண்றால் அதை இண்று அவர்களால் ஏன் செய்து இன்னலில் இருக்கும் தமிழ் மக்களின் முகாம் வாழ்க்கையையும், இன்னபிற இனல்களையும் தீர்க்க முடியவில்லை.?

உள்ளூரிலை கோழி பிடிக்க முடியாதவை வெளியூரிலை என்னத்தை பிடிக்க போகினம்.?

பொய்கை அவர்களே,

அடிப்படையில் இப்போது எம்மிடம் எதுவுமில்லை. "புலவர் குரங்கு அப்பம் பிரித்த ஒரு கதையை உதாரணத்திற்குச் சொன்னார்" அது ஒரு நல்ல உதாரணம். மூன்றாவது ஆளினால் இந்த விடயம் தீர்க்கப்படும், என்றெல்லாம் நம்பி ஏமாந்தத உண்மைதான். ஏமாற்றம் அடைந்தவையெல்லாம் நமது வரலாற்றில் உண்டு. அதற்குக் காரணம் எம்மிடமிருந்த பலமே. அந்தப்பலத்துடன் நின்று பேசியபோதிலும் எதுவும் கிடைக்கவில்லைஎயன்றால், மாற்று வழிகளைக் கைக்கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் நானெழுதினால், எனக்கு எல்லாம் தெரியும் என்று அர்த்தமில்லை. எப்படி? அல்லது யார் மூலம் ஒரு தீர்வை தமிழர்கள் அடையலாம் என்பது எனக்குத் தெரியாது. எமது ஒற்றுமை பிரிபடக் கூடாது என்பதுதான் இனிமேல் இருக்கப்போகும் ஒரேபலம். கூட்மைப்பினர் வென்றாலென்ன? தமிழ்த் தேசிய முன்னணி தோற்றாலென்ன? அல்லது மறுபக்கமாக இது மாறி நடந்தாலும் தமிழரைத் தமிழர் தோற்கடிப்பதும், வெற்றிபெறுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எனக்குப்படவில்லை. இது நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவழி.

யாரும் வீர வசனம் பேசுகிறார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. அப்படிப் பேசியிருப்பது வீரவசனமுமல்ல. எமது ஒற்றுமையின் மீது இருந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அப்படி எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் யாரும் நம்பிக்கையின் அடிப்படையில் கூட எதையும் எழுதமுடியாத நிலையில் இன்று நாம் பிளவுபட்டிருக்கிறோம். இந்தப் பிரிவுகளுக்கிடையே புலவர் அவர்கள் சொல்லியது போல் குரங்குகள் வந்து புகுந்துவிடும் வாய்ப்புகள்தான் அதிகம்.

Link to comment
Share on other sites

இப்படியெல்லாம் நானெழுதினால், எனக்கு எல்லாம் தெரியும் என்று அர்த்தமில்லை. எப்படி? அல்லது யார் மூலம் ஒரு தீர்வை தமிழர்கள் அடையலாம் என்பது எனக்குத் தெரியாது. எமது ஒற்றுமை பிரிபடக் கூடாது என்பதுதான் இனிமேல் இருக்கப்போகும் ஒரேபலம். கூட்மைப்பினர் வென்றாலென்ன? தமிழ்த் தேசிய முன்னணி தோற்றாலென்ன? அல்லது மறுபக்கமாக இது மாறி நடந்தாலும் தமிழரைத் தமிழர் தோற்கடிப்பதும், வெற்றிபெறுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எனக்குப்படவில்லை. இது நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவழி.

ஒற்றுமையை பற்றி பேசும் நீங்கள் முன்னர் எப்போதாவது உங்களை ஒரு புலிகளின் உறுப்பினராக சிந்தித்தாவது இருக்கிறீர்களா...??? அப்போது எல்லாம் வெறும் ஆதரவாளராக தானே இருந்தீர்கள்.... 2001 ஆண்டுக்கு முன் நீலந்திருச்செல்வம் காலம் முதல் ஆனந்தசங்கரி காலம் வரைக்கும் தமிழினத்துக்கு செய்த அனீதிக்கு பின் நிண்று பலமாக இருந்தவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் பலவான்களா இப்போது...??

பிரபாகரன் எனும் தன்னிகரில்லாத போராளியால் கட்டி எழுப்ப பட்ட பலத்துக்கு எதிராக வேலை செய்த கூட்டம் புலிகள் முழுமையான பலம் பெற்று இருக்கிறார்கள் எண்றதும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டதுக்கு காரணம் புலிகள் பலமாக இருக்கிறார்கள் என்பதுதான்...

இண்று அதே புலிகளை எதிர்த்து நிற்பதோடு பிரித்தும் வைக்க முயலும் கயமையை நீங்கள் ஆதரிக்கலாம்... காரணம் நீங்கள் உங்களை ஒரு நடுநிலையாளராக இவளவு காலமும் வைத்து இருந்தமையாலாக இருக்கலாம்... நாளை புலிகள் எண்று யார் வந்தாலும் கூட்டமைப்புக்கு இருக்கும் ஆதரவு குலைந்து போய்விடும், கூட்டமைப்பு தீட்டிய திட்டங்கள் , தீர்வுகள் எல்லாம் வீணாக போய்விடும் என்பதுக்காக அவர்களை காட்டி கொடுக்கவும் தயங்க மாடீர்கள்...

எது நடுநிலை. நாங்கள் முட்டிக்கொண்டு இருப்பதில் நாமே அதற்குள் நடுவில் நிற்பதா? நடு நிலை என்ற ஒன்றே இல்லை. நாளை புலிகள் வருவார்கள், அவர்களும் இதையே செய்வார்கள். சம்பந்தர் அணியைத் தலையில் தூக்கி வைக்க வேண்டும், கஜேந்திரன் அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல. இந்த மனப்பான்மைகளால்தான் இதுவரை எம்மால் எதையும் அடைய முடியவில்லை.

புலிகளின் உறுப்பினர்கள் யாரப்பா, எல்லோரும் வெளிப்படையாகவும், மறைந்தும் ஆதரவாளர்களாகத்தானே செயற்பட்டுள்ளோம். உறுப்பினராக இருக்கும் எவரும் தம்மை வெளிப்படுத்த மாட்டார்கள். யாரையும் காட்டிக்கொடுக்கும் எண்ணம் எனக்குக்கிடையாது. கட்டிக்காக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இதைவிடுவோம் இது சம்பந்தமில்லாத விடயம்.

அரசியலுக்கு சூழ்நிலை என்ற ஒன்று இருக்கிறது. அதை சந்தர்ப்பம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். புலிகள் தோன்றியதும் அவர்கள் பலம்பெற்று வளர்சியடைந்ததும் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தினால்தான். அது தற்போது வரலாறாகத்தான் பார்க்கப்படவேண்டுமே தவிர சூழ்நிலையாகப் பார்க்க முடியாது. இன்று புலிகளில்லாத சூழ்நிலையலை; செய்யப்பட வேண்டிய அரசியல் எதுவெனத்தான் நான் விவாதிக்கிறேன்.

விடுதலைப்புலிகளை இதற்குள் தயவுசெய்து கொண்டுவராதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்றால் ததேகூ தெரிவுசெய்வதிலும் பார்க்க வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கடசிக்கு வாக்களித்தால் மகிந்த நன்றிக் கடனாக கொஞ்சம் நிவாரணமாவது தருவார்.அவ்வளவுதான் மக்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் வராது. ஆனால் தாயகக் கொள்கையைக் கைவிடுவதன் மூலம் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளமே காணாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

எது நடுநிலை. நாங்கள் முட்டிக்கொண்டு இருப்பதில் நாமே அதற்குள் நடுவில் நிற்பதா? நடு நிலை என்ற ஒன்றே இல்லை. நாளை புலிகள் வருவார்கள், அவர்களும் இதையே செய்வார்கள். சம்பந்தர் அணியைத் தலையில் தூக்கி வைக்க வேண்டும், கஜேந்திரன் அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல. இந்த மனப்பான்மைகளால்தான் இதுவரை எம்மால் எதையும் அடைய முடியவில்லை.

புலிகளின் உறுப்பினர்கள் யாரப்பா, எல்லோரும் வெளிப்படையாகவும், மறைந்தும் ஆதரவாளர்களாகத்தானே செயற்பட்டுள்ளோம். உறுப்பினராக இருக்கும் எவரும் தம்மை வெளிப்படுத்த மாட்டார்கள். யாரையும் காட்டிக்கொடுக்கும் எண்ணம் எனக்குக்கிடையாது. கட்டிக்காக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இதைவிடுவோம் இது சம்பந்தமில்லாத விடயம்.

இண்று தமிழ் மக்களின் நலக்காக எண்று சொல்லிக்கொண்டு பச்சோந்திதனமாக சார்பு நிலை கொண்டு செயற்படுபவர்களை நீங்கள் ஒரே தராசில் வைத்து மற்ற தமிழர்களோடு பார்க்கும் உங்கள் பார்வையே பிரச்சினையானது...

இந்தியா தமிழர்களுக்காக இதுவரை காலமும் என்ன நன்மை செய்து விட்டது...??? அதன் அடிவருடிகளாக போபவர்கள் தமிழர்களுக்காக என்ன நன்மையை செய்து விட போகிறார்கள்...?? அவர்களை நாங்கள் ஒற்றுமை எனும் பெயரால் மற்றய தமிழர்களுக்கு சமனாக நடத்த வேண்டும் எண்று எந்த அடிப்படையில் சொல்லி திரிகிறீர்கள்...???

சரி இந்தியாவின் அனுசரனையுடன் செழிப்பாக வளர்ந்த ஒரு நாட்டை.. அல்லது ஒரு இனத்தை நீங்கள் காட்டி விடுங்கள் நான் யாழில் கருத்து எழுதுவதையே விட்டுவிடுகிறேன்...

அரசியலுக்கு சூழ்நிலை என்ற ஒன்று இருக்கிறது. அதை சந்தர்ப்பம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். புலிகள் தோன்றியதும் அவர்கள் பலம்பெற்று வளர்சியடைந்ததும் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தினால்தான். அது தற்போது வரலாறாகத்தான் பார்க்கப்படவேண்டுமே தவிர சூழ்நிலையாகப் பார்க்க முடியாது. இன்று புலிகளில்லாத சூழ்நிலையலை; செய்யப்பட வேண்டிய அரசியல் எதுவெனத்தான் நான் விவாதிக்கிறேன்.

விடுதலைப்புலிகளை இதற்குள் தயவுசெய்து கொண்டுவராதீர்கள்.

விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்....! உறுதியாக என்னால் சொல்லவும் முடியும்... அவர்களை தாண்டி ஒரு சக்தியாலும் தமிழர்களுக்கு விடிவை பெற்று தர முடியாது...! அவர்களை தாண்டி யாராலும் தமிழர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பெறவும் முடியாது...

தமிழர்களுக்கு எதுவும் புலிகளை ஒதுக்கி விட்டு இல்லை... யாரும் எதையும் தரப்போவதும் இல்லை... அப்படி தருவர்கள் எண்று நீங்கள் சொல்வது ஏமாற்று வேலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் எதைக் கைவிட்டாலும் எமது தாயக உணர்வும் விடுதலைத் தீயும் எம்மை விட்டு அகளாது. எமது உயிரினும் மேலான விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும், தாயக விடுதலை வீரர்கள் வீழ்த்தப்பட்டாலும் எமது பயணம் தொடரும். இடையில் வரும் கூப்பாடுகளும், கோழைத்தன விட்டுக்கொடுப்புகளும், இழிவான சமரசங்களும் கடந்து எமது விடுதலைப் பயணம் தொடரும்.

இதை முன்னோக்கிக் கொண்டு செல்ல எமது தேசியத் தலைவர் மீதும், சுதந்திரத் தீயில் வெந்து தாயகக் கனவுகளுடனேயே வித்தாகிப்பொன ஆயிரமாயிரம் மாவீரர்கள் மேலும், துணைசென்றே விடுதைத் தீயில் சங்கமித்த லட்சக்கணக்கான தாயக உறவுகள் மீது சபதமெடுத்துக் கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !

Link to comment
Share on other sites

இண்று தமிழ் மக்களின் நலக்காக எண்று சொல்லிக்கொண்டு பச்சோந்திதனமாக சார்பு நிலை கொண்டு செயற்படுபவர்களை நீங்கள் ஒரே தராசில் வைத்து மற்ற தமிழர்களோடு பார்க்கும் உங்கள் பார்வையே பிரச்சினையானது...

தொட வேண்டியதைத் தொட்டிருக்கின்றீர்கள்

இதைத்தான் நானும் சொன்னேன்

சம்பந்தர் கயேந்திரனை விலத்தியதை தடுக்க முடியாதவர்கள் ? இந்த புலம் பெயர்ந்த ஆய்வாளர்களும் ஆர்வலர்களும்

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

சரி பிரிந்து போய்விட்டார்கள் என்று இருவரையும் ஒண்றினைக்கவும் முயற்சிக்கவில்லை

ஒரு தாய் தனது பிள்ளைகள் அடித்துக் கொண்டால் என்ன செய்வாள் ? ஒரு பிள்ளையை மட்டும் கொஞ்சிக் கொண்டு மற்றயதை தூற்றுவாளா ?

அதைத் தான் சம்பந்த விசுவாசிகள் செய்கின்றார்கள் டேவிட் பூபாலப்பிள்ளை முதல் நக்கீரன் வரை ஒரு பக்கச் சார்பாக செயற்படுவது தான் சந்தேகம் ???

இதில் தான் பிரச்சனையே

Link to comment
Share on other sites

இண்று தமிழ் மக்களின் நலக்காக எண்று சொல்லிக்கொண்டு பச்சோந்திதனமாக சார்பு நிலை கொண்டு செயற்படுபவர்களை நீங்கள் ஒரே தராசில் வைத்து மற்ற தமிழர்களோடு பார்க்கும் உங்கள் பார்வையே பிரச்சினையானது...

இந்தியா தமிழர்களுக்காக இதுவரை காலமும் என்ன நன்மை செய்து விட்டது...??? அதன் அடிவருடிகளாக போபவர்கள் தமிழர்களுக்காக என்ன நன்மையை செய்து விட போகிறார்கள்...?? அவர்களை நாங்கள் ஒற்றுமை எனும் பெயரால் மற்றய தமிழர்களுக்கு சமனாக நடத்த வேண்டும் எண்று எந்த அடிப்படையில் சொல்லி திரிகிறீர்கள்...???

சரி இந்தியாவின் அனுசரனையுடன் செழிப்பாக வளர்ந்த ஒரு நாட்டை.. அல்லது ஒரு இனத்தை நீங்கள் காட்டி விடுங்கள் நான் யாழில் கருத்து எழுதுவதையே விட்டுவிடுகிறேன்...

விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்....! உறுதியாக என்னால் சொல்லவும் முடியும்... அவர்களை தாண்டி ஒரு சக்தியாலும் தமிழர்களுக்கு விடிவை பெற்று தர முடியாது...! அவர்களை தாண்டி யாராலும் தமிழர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பெறவும் முடியாது...

தமிழர்களுக்கு எதுவும் புலிகளை ஒதுக்கி விட்டு இல்லை... யாரும் எதையும் தரப்போவதும் இல்லை... அப்படி தருவர்கள் எண்று நீங்கள் சொல்வது ஏமாற்று வேலை..

விடுதலைப்புலிகள் மீளவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் இல்லை என்ற வாதத்திற்குள் நான் வரவில்லை. இந்த விடயத்திற்கு அது அப்பாற்பட்டது.

அரசியலில் சார்பு நிலை இருக்கும். அதைத் தவறென்று சொல்லிவிட முடியாது. ஒரு சிறுபான்மையினம் ஆதரவின்றி நிற்கும் நிலையில் சார்பு நிலையெடுத்திருப்பது தவறல்ல. நோக்கம் தவறில்லாதிருப்பின் அதை ஏற்றுக் கொள்ளலாம். யாரையும் இலகுவில் ஏமாற்றிவிடமுடியாது. இது புலிகளுக்குப் பின்னான காலத்து அரசியல்.

எந்தப் பலத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் சார்புநிலையெடுக்காமல் இருப்பது. இந்தியாதான் எமது பிரச்சனைக்குத் தீர்வைத் தராமல் தடுக்கிறது என்று தெரிந்த பின்பும் தமிழரது போராட்ட பலத்தினை அழிப்பதற்கு முன்வரை புலிகள் இந்தியாவை நம்பியிருந்தார்கள். அதேநிலைதான் இப்போதும். தமிழர் பிரச்சனையின் தீர்விற்கு தமிழ்நாடு வடிகாலாக இருக்க வேண்டுமென்று முன்பொருமுறை திருநாவுக்கரசு தனது ஆய்வில் கூறியிருந்தார். ஆகவே சார்பு அரசியல் பிழையானதல்ல.

நான் கஜேந்திரனுக்கு எதிரானவனல்ல. தமிழருக்கு ஒரு விடிவுகிடைத்தால் மகிழ்பவரில் நானும் ஒருவன். அப்படியிருக்க நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கின்றேன். அதற்கு யதார்த்தமாகப் பதில் சொல்லுங்கள். " இந்தியாவை மீறி தமிழருக்கான ஏதேனும் தீர்வை அடைய முடியுமா? அப்படியென்றால் அது யாரால்? "

இதற்கு முடியாது என்பதுதான் எனது பதில். அதற்கு பெரியளவில் விளக்கம் தேவையில்லை. இலங்கையின் கேந்திரத்தன்மை அத்தகையது. 30 வருட விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளால் பெற்றுத்தர முடியாத ஒரு தீர்வை, தாயக அரசியலில் இனியொருவராலும் பெற்றுத்தர முடியாது.

எதைக்கையில் எடுக்கவேண்டும் என்ற தேவைதான் இப்போது. கஜேந்திரன் அணி வென்றாலென்ன, சம்பந்தரணி வென்றாலென்ன சாரபு நிலையற்றிருந்தால் தமிழருக்கு மீண்டும் அவல வாழ்வுதான். ஏன் இவ்வளவும், எனக்குப் புரிந்ததை வெளிப்படையாகவே இவ்விடத்தில் சொல்கிறேன்.

பலமற்றதாய் தாயகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் தற்போதைய தேவைக்காக ஒரு சந்தர்ப்பவாத அரசியலைக் கையில் எடுப்பதுதான் சிறந்தது.

எந்த விடயமும் மாற்றத்திற்குட்பட்டது.

எந்த மாற்றமும் மறுபரிசீலனைக்குட்பட்டது.

Link to comment
Share on other sites

இந்தியாவை மீறி தமிழருக்கான ஏதேனும் தீர்வை அடைய முடியுமா? அப்படியென்றால் அது யாரால்? "

இதற்கு முடியாது என்பதுதான் எனது பதில். அதற்கு பெரியளவில் விளக்கம் தேவையில்லை. இலங்கையின் கேந்திரத்தன்மை அத்தகையது. 30 வருட விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளால் பெற்றுத்தர முடியாத ஒரு தீர்வை, தாயக அரசியலில் இனியொருவராலும் பெற்றுத்தர முடியாது.

இந்தியாவை மீறி ஒன்றும் செய்யமுடியாது என்பது உண்மை தான் அதே நேரத்தில் இந்தியா தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவும் போவதில்லை அது இப்படியே தனது வால்களை வைத்து சின்னா பின்னமாக்கிக் கொண்டு தானிருக்கப் போகின்றது

இந்தியா தமிழர்களை ஒரு போதும் நிம்மதியாக இருக்கவிடாது அப்படி பார்த்தால் இந்தியாவைச் சார்வதில், சாரமல் விடுவதில் எந்த வித நன்மையும் இல்லைத் தானே

நிலவன் இப்படித்தான் கூறுகின்றார் "இந்தியாவை நம்பவேண்டாம் ஆனால் நம்புவது போல் இடக்கையை கொடுப்போம்"

எனது கேள்வி என்ன என்றால்

சரி இப்படி எல்லாம் பகிரங்கமாகச் சொல்லிவிட்டு இந்தியா நம்ப நடக்கப்போவதாக சொல்வது இந்தியாவிற்கு தெரியாதா என்ன ? இது எம்மை நாமே முட்டாளாக்குவது போல் உள்ளது

எதைக்கையில் எடுக்கவேண்டும் என்ற தேவைதான் இப்போது. கஜேந்திரன் அணி வென்றாலென்ன, சம்பந்தரணி வென்றாலென்ன சாரபு நிலையற்றிருந்தால் தமிழருக்கு மீண்டும் அவல வாழ்வுதான். ஏன் இவ்வளவும், எனக்குப் புரிந்ததை வெளிப்படையாகவே இவ்விடத்தில் சொல்கிறேன்.

சம்பந்தர் வந்தாலென்ன கயேந்திரன் வந்தாலென்ன வன்னி மக்களுக்கு சகய வாழ்வு கிடைக்குமா ? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்

பலமற்றதாய் தாயகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் தற்போதைய தேவைக்காக ஒரு சந்தர்ப்பவாத அரசியலைக் கையில் எடுப்பதுதான் சிறந்தது.

புலிகளை எடுத்துக்கொண்டால் பலமுறை சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்திருந்தார்கள் ஆனால் அவர்கள் தமது கொள்கைபிடிப்பில் உறுதியாக இருந்தார்கள் ஆனால் அதற்கு சம்பந்தர் நம்பத் தகுந்தவர் இல்லை என்பதே பலரதும் வெளிப்பாடு?

எல்லா இராஜ தந்திரங்களையும் பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் செய்வதே இராஜ தந்திரம் இல்லையே

Link to comment
Share on other sites

புலிகளை எடுத்துக்கொண்டால் பலமுறை சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்திருந்தார்கள் ஆனால் அவர்கள் தமது கொள்கைபிடிப்பில் உறுதியாக இருந்தார்கள் ஆனால் அதற்கு சம்பந்தர் நம்பத் தகுந்தவர் இல்லை என்பதே பலரதும் வெளிப்பாடு?

எல்லா இராஜ தந்திரங்களையும் பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் செய்வதே இராஜ தந்திரம் இல்லையே

புலிகள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்யவில்லை. அவர்கள் சில சந்தர்ப்பங்களை பாவிக்கக் முயன்றார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க இல்லை உண்மைதான். புலிகள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால் புலிகளுக்கு போகக்கூடிய சந்தர்ப்பங்களை மற்றைய பகுதியினர் தடுத்தார்கள்.

மாறமாட்டார்கள் என்று அறிந்த பின் மாறுவார்கள் என்று எவர் எதிபார்ப்பார்?

இப்போது எந்தக் கட்சியும் அறிவிப்பதெல்லாம் உண்மையாகுமா? இவர்கள் போட்டிக்குத்தான் அறிவிக்கிறார்களே தவிர ராசா தந்திரத்தோடு அல்ல.

இந்தியாவை சார்வதில் அல்லது சாராமல் விடுவதில் அர்த்தமில்லை என்ற பின்னர் சம்பந்தரை திட்டுவதி என்ன பயன்? கூட்டமைப்புக்கு பதிலாக மற்றயவர்கள் எந்த விதத்தில் உன்னதமானவர்கள்? அவர்கள் வென்றால் என்ன மாற்றங்கள் கிடைக்கும்?

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகள் மீளவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் இல்லை என்ற வாதத்திற்குள் நான் வரவில்லை. இந்த விடயத்திற்கு அது அப்பாற்பட்டது.

அரசியலில் சார்பு நிலை இருக்கும். அதைத் தவறென்று சொல்லிவிட முடியாது. ஒரு சிறுபான்மையினம் ஆதரவின்றி நிற்கும் நிலையில் சார்பு நிலையெடுத்திருப்பது தவறல்ல. நோக்கம் தவறில்லாதிருப்பின் அதை ஏற்றுக் கொள்ளலாம். யாரையும் இலகுவில் ஏமாற்றிவிடமுடியாது. இது புலிகளுக்குப் பின்னான காலத்து அரசியல்.

எந்தப் பலத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் சார்புநிலையெடுக்காமல் இருப்பது. இந்தியாதான் எமது பிரச்சனைக்குத் தீர்வைத் தராமல் தடுக்கிறது என்று தெரிந்த பின்பும் தமிழரது போராட்ட பலத்தினை அழிப்பதற்கு முன்வரை புலிகள் இந்தியாவை நம்பியிருந்தார்கள். அதேநிலைதான் இப்போதும். தமிழர் பிரச்சனையின் தீர்விற்கு தமிழ்நாடு வடிகாலாக இருக்க வேண்டுமென்று முன்பொருமுறை திருநாவுக்கரசு தனது ஆய்வில் கூறியிருந்தார். ஆகவே சார்பு அரசியல் பிழையானதல்ல.

நான் கஜேந்திரனுக்கு எதிரானவனல்ல. தமிழருக்கு ஒரு விடிவுகிடைத்தால் மகிழ்பவரில் நானும் ஒருவன். அப்படியிருக்க நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கின்றேன். அதற்கு யதார்த்தமாகப் பதில் சொல்லுங்கள். " இந்தியாவை மீறி தமிழருக்கான ஏதேனும் தீர்வை அடைய முடியுமா? அப்படியென்றால் அது யாரால்? "

நிச்சயமாக நாங்கள் இந்தியாவை விலத்தி விட்டால் மட்டுமே நிம்மதியாக வாழ ஒரு தீர்வு கிட்டும்... அதுக்கு நல்ல உதாரணம் இந்தியாவை விட்டு விலகி நிக்கும் வங்காளிகள், நேபாளிகளை சொல்ல முடியும்.

இந்தியா சிங்களவரை பொறுத்தவரைக்கும் வேண்டாத ஒரு சக்தி... அதனால் தான் சீனர்கள் சிங்களவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்... சிங்களவர்கள் இந்தியர்களை படிய வைத்த கூறு இந்த இந்தியாவை விலத்தி சீனாவுடனான நெருக்கம் தான்...

சிங்களவர்கள் இந்தியாவை கிட்ட இப்போதும் வைத்து இருப்பதுகான கூறு, பெரியதொரு ஜனநாயக நாட்டின் நெருக்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கையை பாதுகாக்க உதவும் என்பதினால் தான்... இந்தியா இலங்கைக்கு அப்படியான சேவைகள் பலதையும் செய்தும் இருக்கிறது...

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இதற்கு முடியாது என்பதுதான் எனது பதில். அதற்கு பெரியளவில் விளக்கம் தேவையில்லை. இலங்கையின் கேந்திரத்தன்மை அத்தகையது. 30 வருட விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளால் பெற்றுத்தர முடியாத ஒரு தீர்வை, தாயக அரசியலில் இனியொருவராலும் பெற்றுத்தர முடியாது.

விடுதலைப்புலிகளால் உங்களுக்கு தீர்வை பெற்று தரமுடியவில்லை என்பது அப்பட்டமான பொய்... புலிகள் உங்களுக்கான தீர்வாக தனிநாட்டை சுட்டி காட்டி இருந்தனர்... அந்த நாட்டை 2001 ம் ஆண்டே அமைத்தும் இருந்தனர்...

அங்கே நீங்கள் அந்த நாட்டுக்கு அங்கீகாரம் வாங்கிக்கொடுக்கவில்லை என்பதுதான் உண்மையே தவிர... தன் சொல் கேட்க்காவிட்டால் அடித்து கொல்லும் சிங்களவனுடன் வாழ உணமையான அமைதியை கொண்ட ஒரு தீர்வை புலிகளால் மட்டும் அல்ல வேறு யாராலும் வாங்கிக்கொள்ள முடியாது...

எதைக்கையில் எடுக்கவேண்டும் என்ற தேவைதான் இப்போது. கஜேந்திரன் அணி வென்றாலென்ன, சம்பந்தரணி வென்றாலென்ன சாரபு நிலையற்றிருந்தால் தமிழருக்கு மீண்டும் அவல வாழ்வுதான். ஏன் இவ்வளவும், எனக்குப் புரிந்ததை வெளிப்படையாகவே இவ்விடத்தில் சொல்கிறேன்.

பலமற்றதாய் தாயகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் தற்போதைய தேவைக்காக ஒரு சந்தர்ப்பவாத அரசியலைக் கையில் எடுப்பதுதான் சிறந்தது.

எந்த விடயமும் மாற்றத்திற்குட்பட்டது.

எந்த மாற்றமும் மறுபரிசீலனைக்குட்பட்டது.

இந்திய கடலின் மத்தியில் இலங்கை இருக்கும் அவைக்கும் அங்கு இருக்கும் தமிழர்களும் தவிர்க்க முடியாத சக்திகள்... இது உலகுக்கும் தெரியும்.... இந்தியனிடம் அடிமையாக போய் எமது சக்திகளை அடைமானம் வைப்பதை விட எங்களிங்களின் பிரச்சினைகளை புரிய முனைபவர்கள். அங்கீகரிக்க கூடியவர்களுடன் இணைந்து எமது அரசியலை முன் எடுக்கலாம்...

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.