Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும்:கீதாஞ்சலி

Featured Replies

வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும்:கீதாஞ்சலி

வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது என வடக்கு மக்கள் முன்னணியின் தலைவியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளரும் வேட்பாளருமான என்.கீதாஞ்சலி தெரிவித்தார்.

விரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு,

நீங்கள் அரசியலுக்கு புதிதாக நுழைந்துள்ளவர் என்ற வகையில், உங்களது அரசியல் நோக்கு எவ்வாறு உள்ளது?

சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்களாக அகிம்சை போராட்டம் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் என வன்னி மண் தொடர்ச்சியான அவலங்களையே சந்தித்தது.நான் கையிலெடுத்திருப்பது அபிவிருத்தி போராட்டம்.இதனை சுயநலன்களுக்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது.

இன்று வடக்கு கிழக்கில் என்றுமில்லாத வகையில் தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.இது தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்குமா?

நிச்சயமாக இல்லை.எமது மக்கள் மிகவும் புத்திசாலிகள். எத்தனையோ சங்குகள் உருவாகினாலும் அவை எல்லாவற்றிலும் முத்து இருப்பதில்லையே.முத்துள்ள சங்கை நிச்சயம் இனம் காண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வடக்கு மக்களின் முன்னனி என்ற கட்சியின் உருவாக்கம் மற்றும் செயற்பாட்டு தன்மை தொடர்பாக கூறமுடியுமா?

நிச்சயமாக.எமது கட்சியின் சின்னம் திசைகாட்டி.சிதறி வாழ்கின்ற தமிழ் இனத்தை ஒரு குடையின் கீழ் சேர்த்தலே எனது இலக்கு.

நீங்கள் எவ்வகையான கொள்கைத் திட்டங்களை முன்வைத்து மக்களிடம் செல்கிறீர்கள்?

பசியால் அழுகின்ற பிள்ளைக்கு பாலூட்டுவதே தாயின் முதற் கடமை.இந்த தாயின் கடமையும் அதுவே.

இன்று அவசரமான மனிதாபிமான தேவைகளான மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தல், அவர்களது கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளின் விடுதலையினை துரிதப்படுத்தல்,மறுவாழ்வு, வேலை வாய்பினை பெற்றுக் கொடுத்தல், சகல பீடங்களும் கொண்ட வன்னிக்கான தனிப் பல்கலைக்கழகம், பாடசாலைக்கான அபிவிருத்தி, விதவைகளுக்கான விசேட செயற்திட்டம், காணாமல் போனோர்களின் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தல், கைத்தொழில் பேட்டைகளின் உருவாக்கம் வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் போன்றவற்றை இம்மண்ணில் உடனடியாக செயற்படுத்துவேன்.

இன்று சர்வதேச ரீதியாக பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.இது எமது நாட்டுக்கும் பொருத்தமானதா?

ஆம். பெண்களது உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும். ஒரு பெண்ணுடைய பிரச்சினையை இன்னொரு பெண்ணாலேயே புரிந்து கொள்ள முடியும். இன்று பல துறைகளில் பெண் தலைமைத்துவம் காணப்பட்டாலும் அரசியலில் அவர்கள் ஈடுபடுவது குறைவாகவே உள்ளது.

ஆனாலும் எதிர்காலத்தில் இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.இதன் மூலமே பெண்களினுடைய நாடாளுமன்ற பிரதிநித்துவம் அதிகரிக்க முடியும்.இதற்கு முன்னுதாரணமாக நான் செயற்படுவேன்.

புனர் வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடினீர்களா?

ஆம். அவர்கள் அனைவரும் நன்னடத்தை அடிப்படையில் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள்.இதனை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதற்காகவும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஊடனமுற்றோர் பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனது தனிப்பட்ட அடிப்படையில் இவர்கள் புனர் வாழ்வுக்குப் பின் கருணை மனு ஊடாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.

இறுதியாக மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

யுத்தத்தின் கோரத்தால் சின்னாபின்னமான வன்னி மண்ணை ஆளும் கட்சியுடனும் ,மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க்ளது பலமான கரங்களை பற்றியவாறு வசந்த பூமியாக மாற்றுவோம்.

20 பிள்ளைகளோடும் பாழடைந்த வீட்டோடும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் பொறுப்பேற்ற வவுனியா சர்வதேச பாடசாலை இன்று 1500 மாணவர்களோடும் பல மாடி கட்டிடங்களோடும் நிமிர்ந்து நிற்பதை நிஜமாக இன்று மக்கள் பார்க்கின்றார்கள்.

எனவே வன்னி மண்ணின் நம்பிக்கை மிக்க எதிர்காலத்திற்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள். அத்தோடு நான் ஒரு வியாபாரியோ, ஆயுததாரியோ அல்ல உங்களில் ஒருத்தி.போரின் கோரப்பிடியினால் எனது இரத்த உறவுகளை இழந்து எனது அன்பான கணவனை இழந்து நிர்கதியான நிலையிலும் உங்களுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

http://www.alaikal.com/

"வன்னி டெக்" உம் மீள ஆரம்பிக்கப்படப்போவதாக கேள்வி.

"வன்னி டெக்" உம் மீள ஆரம்பிக்கப்படப்போவதாக கேள்வி.

இப்படி தமிழன் மேல் அரசியல் நடாத்துவதை விட பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில் போய் நின்று வேலை பார்க்கலாம்.

நாலு வாடிக்கையாளராவது சந்தோசமாக போவார்கள்.

ஜயோ பாவம் தமிழர் நாங்கள். யார் யார் எல்லாம் கதை சொல்கிறார்கள்

யாரிந்த கீதாஞ்சலி, படத்தையை ஒருக்கா போடுங்கோவன். ஜனாதிபதியின்ரை பலமான கரங்களை பிடிக்கப்போறாவாம். களியாணம் கட்டேல்லையோ இன்னும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னவர் எவராயினும்

சொன்ன விடயம் அல்லது இந்த தலைப்பு ஏற்கக்கூடியதே.

இதை நாம் செய்யவேண்டும்

வன்னியில் எந்தவித மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அது உடன் உலகத்துக்கு தெரியுமாப்போல் தொழில் நுட்பத்தை அங்கு வளர்க்கவேண்டும்

இதன்மூலம் எமது மக்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்கமுடியும்

சர்வதேச மாணவர் அமைப்பும் இதுபோல் கணணி கல்லூரிகளை வன்னியில் ஆரம்பிக்க இருப்பதாக அறிந்தேன்

முடிந்தவர்கள் உதவலாமே....

அக்காவிற்கு, பொன் விளையும் பூமியும்/மக்களும் ... 60+ வருடங்களாக எத்தனை அழிவுகளை/அழிப்புக்களை சந்தித்தவர்கள் என்பது தெரியாதா????? .... இம்முறையும் பொன்னை விளைப்பது .... எவ்வளவு காலத்திற்கு???? .... இலக்ஸனோடு அறுவடை தொடங்குமா?????

..... இங்கு புலத்தில் குடும்பிச்சண்டையில் தமிழ்த்தேசியவாதிகள்!!!!!!!!! .... அங்கு கொன்றவன்/வெட்டியவன்/அழித்தவன்/கெடுததவன்/மானபங்கப்படுத்தவனென்றாலும் ....கட்டிப்பிடித்து ..... கதிரைக்காக வேட்டியை/சேலையை உரியும் கூட்டம்!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்

யாரிந்த கீதாஞ்சலி, படத்தையை ஒருக்கா போடுங்கோவன். ஜனாதிபதியின்ரை பலமான கரங்களை பிடிக்கப்போறாவாம். களியாணம் கட்டேல்லையோ இன்னும்.

geeta.jpg

geeta.jpg

நன்றி இறைவன்

மகிந்தாவின்ரை கையை பிடிக்கட்டும். எல்லாத்தையும் பிடிச்சா, பொன்னென்ன, வைரமாவே வன்னியை மாத்தலாம்.

Edited by yarlkavi

என்ன இருந்தாலும் இவவுக்கு, எங்கட சிவகீத்தா அளவுக்கு செக்ஸி லுக்கில்லை... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மண்ணில் பொன் விளையுதோ இல்லையோ, கீதாஞ்சலி வீட்டில் பொன் விளையும்.

நன்றி இறைவன்

பொட்டு கிட்டு ஒன்றும் போடாடல் சிங்களம் மாதிரிதான் இருக்கிறா

விதவைகள், கிறிஸ்தவ தமிழ் பெண்களும் பொட்டு வைப்பதில்லை.

கீதாஞ்சலியின் குறிக்கோள் மக்களின் அவலங்களை முன்வைத்திருக்கின்றது. சிறையில் இருக்கும் பிள்ளைகளை விடுவிப்பது குறித்து இருக்கின்றது. இவ்வாறனவர்களே வன்னி மக்களுக்கு அவசியமானவர்கள். சிங்களவனுக்கு கீழே வாழ்வதென்று முடிவான பிறகு மகிந்தனுடன் கூட்டு சேர்ந்தால் என்ன ரணில் பொன்சேகா அல்லது கெல உறுமய எவனுடன் சேர்ந்தால் என்ன வித்தியாசம் ஒன்றும் இல்லை எவனுடன் சேர்ந்தாலும் மக்களின் வாழ்வை நெளிவு சுழிவுகள் ஊடாக முடிந்தவரை முன்னேற்றுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கின்றது. இது நல்ல சிந்தனையே. இதைவிட வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.

என்ன இருந்தாலும் இவவுக்கு, எங்கட சிவகீத்தா அளவுக்கு செக்ஸி லுக்கில்லை...

இப்படி தமிழன் மேல் அரசியல் நடாத்துவதை விட பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில் போய் நின்று வேலை பார்க்கலாம்.

நாலு வாடிக்கையாளராவது சந்தோசமாக போவார்கள்.

ஜயோ பாவம் தமிழர் நாங்கள். யார் யார் எல்லாம் கதை சொல்கிறார்கள்

யாரிந்த கீதாஞ்சலி, படத்தையை ஒருக்கா போடுங்கோவன். ஜனாதிபதியின்ரை பலமான கரங்களை பிடிக்கப்போறாவாம். களியாணம் கட்டேல்லையோ இன்னும்.

உங்களின் தமிழ்த்தேசியப் பற்றுக்கு முன்னால் யாரும் நிற்க முடியாது. இருந்தாலும் உங்களின் சில கேள்விகளுக்கு இந்தச் செவ்வியில் பதில் இருக்கின்றது.

போரின் கோரப்பிடியினால் எனது இரத்த உறவுகளை இழந்து எனது அன்பான கணவனை இழந்து நிர்கதியான நிலையிலும் உங்களுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

உங்களின் கேவலம்கெட்ட கருத்துக்களை யாழ்களம் அனுமதிக்கலாம் ஆனால் அவலப்பட்ட வன்னிமக்கள் தாங்கள் அவலத்தில் இருந்து மீள்வதற்கு சாதகமாக யாரைத் தெரிவுசெய்ய வேண்டுமோ அவர்களை தெரிவுசெய்வார்கள். இவராக இருக்கலாம் அல்லது யாராகவும் இருக்கலாம். உங்கள் மையவாதக் கோவணத்தேசியத்தின் பிரதான சொத்தான் நொட்டை சொட்டைகளை இனியும் வன்னி மக்கள் மேல் திணிக்காதீர்கள். வேண்டுமானால் புளிச்சல் எவறைக் கருத்துக்களை நாடுகடந்த கோவணம் வட்டுக்கோட்டை கோவணம் போன்ற யாழ் மையவாதக் கோவணத்துடன் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கேவலம்கெட்ட கருத்துக்களை யாழ்களம் அனுமதிக்கலாம் ஆனால் அவலப்பட்ட வன்னிமக்கள் தாங்கள் அவலத்தில் இருந்து மீள்வதற்கு சாதகமாக யாரைத் தெரிவுசெய்ய வேண்டுமோ அவர்களை தெரிவுசெய்வார்கள்.

என்ன சொல்கின்றீர்கள் சுகன், நேர்மையான உணர்வு கொள்ளாத உறுப்பினர்களுக்காக தீக்குளித்து யாழை பூட்டச் சொல்கின்றீர்களா? பாராளுமன்ற தேர்தல் முடிவுகளாவது பலரின் கண்ணை திறக்கட்டும்

உங்களின் கேவலம்கெட்ட கருத்துக்களை யாழ்களம் அனுமதிக்கலாம் ஆனால் அவலப்பட்ட வன்னிமக்கள் தாங்கள் அவலத்தில் இருந்து மீள்வதற்கு சாதகமாக யாரைத் தெரிவுசெய்ய வேண்டுமோ அவர்களை தெரிவுசெய்வார்கள். இவராக இருக்கலாம் அல்லது யாராகவும் இருக்கலாம். உங்கள் மையவாதக் கோவணத்தேசியத்தின் பிரதான சொத்தான் நொட்டை சொட்டைகளை இனியும் வன்னி மக்கள் மேல் திணிக்காதீர்கள். வேண்டுமானால் புளிச்சல் எவறைக் கருத்துக்களை நாடுகடந்த கோவணம் வட்டுக்கோட்டை கோவணம் போன்ற யாழ் மையவாதக் கோவணத்துடன் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கெல்லாம் ஆத்திரப்பட்டு, உங்கள் இரத்த அழுத்ததை ஏன் கூட்டி கொள்கிறீர்கள். யதார்த்தை உணராத/ உணர்ந்து கொள்ள பிரியப்படாத வரட்டு பிடிவாதத்தில் இருப்பவர்களுடன் பேசி பயன் இருக்காது.

என்ன சொல்கின்றீர்கள் சுகன், நேர்மையான உணர்வு கொள்ளாத உறுப்பினர்களுக்காக தீக்குளித்து யாழை பூட்டச் சொல்கின்றீர்களா? பாராளுமன்ற தேர்தல் முடிவுகளாவது பலரின் கண்ணை திறக்கட்டும்

முன்பு யாழில் தரக்குறைவாக கருத்துக்களை எழுதினால் நீக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அது யாராக இருக்கலாம்/ யாரை பற்றியாகவும் இருக்கலாம்.

உதாரணத்துக்கு என்னால் எனது சகோதரங்களை பற்றி எப்படியான கருத்துக்களை சபை நடுவே வைக்க முடியாது / அவை நாகரீக குறைவாக இருக்கும் என நினைக்கிறேனோ, அப்படி பட்ட நாகரீகமற்ற கருத்தை மற்றவர்கள் பற்றி யாழ் களத்தில் என்னால் சொல்ல முடியாது.

இல்லை நான் எனது சகோதர்களை தூசணம் சொல்லி தான் கதைக்கிறனான் யாரும் சொன்னால்...... எனக்கு பதில் சொல்ல எதுகும் இல்லை.

Edited by KULAKADDAN

உங்களின் கேவலம்கெட்ட கருத்துக்களை யாழ்களம் அனுமதிக்கலாம் ஆனால் அவலப்பட்ட வன்னிமக்கள் தாங்கள் அவலத்தில் இருந்து மீள்வதற்கு சாதகமாக யாரைத் தெரிவுசெய்ய வேண்டுமோ அவர்களை தெரிவுசெய்வார்கள். இவராக இருக்கலாம் அல்லது யாராகவும் இருக்கலாம். உங்கள் மையவாதக் கோவணத்தேசியத்தின் பிரதான சொத்தான் நொட்டை சொட்டைகளை இனியும் வன்னி மக்கள் மேல் திணிக்காதீர்கள். வேண்டுமானால் புளிச்சல் எவறைக் கருத்துக்களை நாடுகடந்த கோவணம் வட்டுக்கோட்டை கோவணம் போன்ற யாழ் மையவாதக் கோவணத்துடன் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்

உங்களின் கருத்து எங்களை விழிப்படைய செய்து விட்டது நன்றி ..........சின்ன சந்தேகம் கோவணம் என்று கச்சையைதானே சொன்னீங்க?????? இந்த சொல்லை 4 தரத்துக்கு மேல் பாவித்தபடியால் உங்களின் கருத்து பாமர மக்களையும் சென்றடைய வாய்ப்புள்ளது.

மன்னிக்கவும்,

ஓ கீதாஞ்சலி போரில் கணவரை இழந்தவாவோ. நான் கடைசி வரியை வடிவா வாசிக்கவில்லை. மன்னிப்பு அதற்கு மட்டும் தான். பார்ப்பம் தேர்தலில் வெற்றியடைந்தால் வன்னி மக்களுக்கு என்ன செய்யப்போறா என்று. மகிந்தாவின் கையில் இருக்கும் தமிழரின் இரத்தம் காயவேயில்லை...

இறைவன்

வடக்கு மக்கள் முன்னணியின் தலைவியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளரும் வேட்பாளருமான என்.கீதாஞ்சலி தெரிவித்தார்.

கீதாஞ்சலிக்கு இலவச விளம்பரம்

இறைவன் இவர் கயேந்திரனை விட இந்த கீதாஞ்சலி உயர்வான இலட்சியம் உடையவரா ?

இது வரை கயேந்திரனை எதிர்த்து எழுதினீர்கள் ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் என்றால் மகிந்தாவுடன் சேருவதையா குறிப்பிட்டீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் கயேந்திரனை விட இந்த கீதாஞ்சலி உயர்வான இலட்சியம் உடையவரா ?

இது வரை கயேந்திரனை எதிர்த்து எழுதினீர்கள் ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் என்றால் மகிந்தாவுடன் சேருவதையா குறிப்பிட்டீர்கள்

கஜேந்திரன் என்ன தேசியத்தலைவரா???????? :unsure:

உதாரணத்துக்கு என்னால் எனது சகோதரங்களை பற்றி எப்படியான கருத்துக்களை சபை நடுவே வைக்க முடியாது / அவை நாகரீக குறைவாக இருக்கும் என நினைக்கிறேனோ, அப்படி பட்ட நாகரீகமற்ற கருத்தை மற்றவர்கள் பற்றி யாழ் களத்தில் என்னால் சொல்ல முடியாது.

எங்கட மக்களின் கடைசிகட்ட அழிவில் கொல்லப்பட்டதும் துன்புறுத்த பட்டதும் எங்கட சகோதரர்கள் தானே....??? அப்படியானால் அந்த அழிவை தந்தவர்களுடன் சேர்ந்து நிண்று அதை நியாய படுத்துபவனும் அதுக்கு பிராயிச்சித்தம் செய்வதாக காட்டி தனது செல்வாக்கை உலக அரங்கில் தூக்கி நிறுத்த உதவியாக இருப்பவர் உண்மையில் எமது சகோதரர்கள் கிடையாது...

இங்கை யாரும் ஜேசு கிறிஸ்துக்கள் கிடையாது இரண்டு கன்னத்திலையும் அறைஞ்சு போட்டு போங்கோ எண்டு சொல்லி கனிவாக இருப்பதுக்கு... இரத்தமும் சதையும் எல்லாருக்கும் உண்டு...

Edited by தயா

ஜீவா கஜேந்திரன் என்ன தேசியத்தலைவரா????????

அப்ப சம்பந்தர் என்ன தேசியத்தலைவரா? உவமை சரியில்லை தேசியத்தலைமைக்கு ஈடாக யாரும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சம்பந்தர் என்ன தேசியத்தலைவரா? உவமை சரியில்லை தேசியத்தலைமைக்கு ஈடாக யாரும் இல்லை

கஜேந்திரன் என்றாலும் சரி,சம்பந்தர் என்றாலும் சரி மக்களுக்காக‌ ஒன்றும் பெரிதாக கிழித்துவிடவில்லை

எல்லாரும் தமது சுயநலனுக்காக தான் அரசியல் செய்கிறார்களே தவிர மக்களின் நலன் கருதி அல்ல‌

  • தொடங்கியவர்

கீதாஞ்சலிக்கு இலவச விளம்பரம்

இறைவன் இவர் கயேந்திரனை விட இந்த கீதாஞ்சலி உயர்வான இலட்சியம் உடையவரா ?

இது வரை கயேந்திரனை எதிர்த்து எழுதினீர்கள் ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் என்றால் மகிந்தாவுடன் சேருவதையா குறிப்பிட்டீர்கள்

அதை http://www.alaikal.com/

இடம் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள் மீது யாரும் எந்த சுமையையும் சுமத்தாதீர்கள் தயவுசெய்து!

மகிந்தவுடன் கூடுங்கள் வன்னி மண்ணை பொன்விழையும் பூமியாக மாற்றுவோம்...............?????

வன்னி மக்களுக்கு இப்போது பொன் விளையும் பூமி வேண்டும் என்று யாருக்காவது சொன்னார்களா? அவர்கள் விதை;த நெல் விளையும் பூமியை திருப்பி கொடுங்கள் அதுவே அவர்களுக்கு போதும் என்றால். அதிலும் அங்க போகத இங்கே போகதே என்று சட்டங்களை போட்டு அடைத்து வைத்துகொண்டு. வாய்திறக்க சிங்களவனே பயப்பிடுகிறான்............ இராணுவ அதிகாரி சிறையிருக்கிறார்.................

இதில இனி பொன்விழைந்து நாங்கள் எல்லோரும் ஆபரணம் செய்து அணிந்து........?

விட்டுகொடுப்பு என்பது அரசியலில் ஒரு தந்திரோபாயமே தவிர........ அது அரசியல் என்றாகிபோனால்?

எஞ்சிய உயிர்களையும் வன்னி மக்கள் தாமாகவே விடுவதே அவர்கள் துன்பமில்லா சாவிற்காவது உத்தரவாதத்தை கொடுக்கும்.

அக்காவுக்கு பெரிய மனசு....தாராள மனப்பான்மை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.