Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஒருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டந்த வாரம் கல்வியங்காடு மைதானத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மைதானத்தில் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்கள் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒருவர் மரணமடைந்தார்.

சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

sankthai.com

இன்னொருத்தரை கொல்லுற அளவுக்கு அப்பிடி என்ன உலகக்கோப்பையோ விளையாடினவேள்..? :rolleyes:

இயக்கங்கள் தொடங்கிய பிறகு கொல்வதும் ஒரு விளயாட்டுத்தான்.அதற்கு விசில் அடிக்கதான் பல பேர் இருந்தார்கள்.வேடிக்கை என்னவென்றால் நாகரீகமடைந்த நாடுகளுக்குள் புலம் பெயர்ந்தும் விசிலை தொடர்ந்துகொண்டதுதான் வேடிக்கை.அங்கு கொலை விழும் போது இங்கிருந்து "அப்படிப்போடு அப்படிப்போடு" பாட்டை விரும்பிக்கேட்ட விண்ணர்களும் இருந்தார்கள்.

நல்ல ஒரு இனமப்பா,இதற்குள் விடுதலை வேறு வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசில் முன்பு அங்கிருக்கவில்லை...........

உங்களைபோன்றவர்கள்தான் 1980களில் வெளிநாடுகளில் இருந்து மண்ணுக்கு புல்லுபுடுங்க வரைக்க கொண்டுவந்தனீங்கள்.

இப்போ உதுறது பிழை எண்டுறீங்கள்....

எங்கட இனம் இப்படிதான்.

ஆனால் உங்கட இனத்தின பெயரை நீங்கள் சொல்றீங்களே இல்லை. (பெயர் இருந்தாதானே சொல்றதுக்கு?)

விசில் முன்பு அங்கிருக்கவில்லை...........

உங்களைபோன்றவர்கள்தான் 1980களில் வெளிநாடுகளில் இருந்து மண்ணுக்கு புல்லுபுடுங்க வரைக்க கொண்டுவந்தனீங்கள்.

அப்போ நீங்கள் அதை வாயைப் பிளந்துகொண்டு நின்று இஞ்சைபாரடா இது தானாம் விசில் என்று சொல்லிச் சொல்லி பார்த்தீர்களா? :rolleyes::unsure::D இல்லை தெரியாமல் கேட்கின்றேன் உங்கள் ஊரில் புல் பிடுங்கும் போது விசில் ஊதி ஊதியா புல் பிடுங்குகின்றீகள்? USA வரும் போது தான் நீளக்காற்சட்டையும் செருப்பும் போட்டதா கேள்விப்பட்டேன். ^_^:o:(:D

எங்கள் ஊர் மணலும் மணல் சார்ந்த இடமும்

இந்த புல்லுபுடுங்குற வேலை எமக்கிருக்கவில்லை............. அப்படியிருந்தும் இரண்டொருவர் படம் காட்ட வெளிக்கிட்டைவைதான்

வேருடன் சேர்த்து அப்பவே புடுங்கி எறிஞ்சிட்டம்.

நான் போராட்டத்திற்கு போனதுதான் இங்கு ஒருவருக்கு அடிகடி கண்ணில் குத்துது போல கிடக்கு,குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.மழைக்கு கூட அந்தப்பக்கம் ஒதுங்காதவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு கனக்க பவ்லா காட்டுகினம்.இங்கு எழுதும் பல பேரை பார்த்தாலே அது விளங்கும்.புல்லு,மாடு என்று எனக்கு ஒன்றுமாக விளங்கவில்லை.

விட்டால் வாய் நீளக் கதைப்பார்கள் நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேட்டால் புலத்தில் இருந்து புடுங்கினதென்பார்கள்.உங்கள்மாதிரி ஆட்களை நம்பிய படியால்தான் அவ்வளவு பேரும் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனார்கள்

நாங்கள் சுயநலவாதிகளே............. தாய்மண்ணுக்கு வாயிருப்பின் நாங்கள் துரோகிகளே!

அதை எப்போதும் மறுத்ததில்லை............. மறுத்தாற்போல் அது மாறிடவும்போவதில்லை.

எங்களை நம்பியதால்தான் முள்ளிவாய்க்காலிலே எல்லாம் முடிந்துபோனார்கள்............

உங்களை நம்பியிருந்தா ....................... தமிழ் சினிமாவையும் தாண்டி கிந்தியில எல்லோ ஈழத்து பெண்களை கரை சேர்த்திருப்பீர்கள். அதுக்கு அவங்கள் விடவில்லை என்ற கோபத்திலைதானே இன்னமும் ஆறவில்லை. அதுதான் அழுதுகொண்டு திரியிறீங்களாக்கும்????

ஏதோ ஒரு கருத்து வாழ இன்றைக்கு ஒரு கதையளப்பது நாளை வேறொரு கருத்து வாழ புதிய கதை புனையும் தேவையெல்லாம் எமக்கில்லை. மாவீரரின் போராளிகளின் முன்னால் நாங்கள் அவர்களின் கால் தூசுக்கு கூட இல்லை.

ஆனால் இனத்தை காட்டி கொடுத்து குலைக்கும் நாய்களுக்கு நாங்கள் அடிபணிய போவதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்கங்கள் தொடங்கிய பிறகு கொல்வதும் ஒரு விளயாட்டுத்தான்.அதற்கு விசில் அடிக்கதான் பல பேர் இருந்தார்கள்.வேடிக்கை என்னவென்றால் நாகரீகமடைந்த நாடுகளுக்குள் புலம் பெயர்ந்தும் விசிலை தொடர்ந்துகொண்டதுதான் வேடிக்கை.அங்கு கொலை விழும் போது இங்கிருந்து "அப்படிப்போடு அப்படிப்போடு" பாட்டை விரும்பிக்கேட்ட விண்ணர்களும் இருந்தார்கள்.

நல்ல ஒரு இனமப்பா,இதற்குள் விடுதலை வேறு வேண்டுமாம்.

விசில் முன்பு அங்கிருக்கவில்லை...........

உங்களைபோன்றவர்கள்தான் 1980களில் வெளிநாடுகளில் இருந்து மண்ணுக்கு புல்லுபுடுங்க வரைக்க கொண்டுவந்தனீங்கள்.

இப்போ உதுறது பிழை எண்டுறீங்கள்....

எங்கட இனம் இப்படிதான்.

ஆனால் உங்கட இனத்தின பெயரை நீங்கள் சொல்றீங்களே இல்லை. (பெயர் இருந்தாதானே சொல்றதுக்கு?)

தமிழ் மாணவர்கள் விளையாட்டில் ஒருவரோடுஒருவர் மோதிக்கொள்ளும் நிகழ்வு இயக்கங்கள் வந்த பிறகுதான் வந்ததல்ல .அதற்கு முன்பும்

விளையாட்டு நிகழ்சியில் மோதல் தொடக்கி பிறகு சாதிசண்டையாக மாறியதுமுண்டு. அனால் இப்போது மரணம் வரை போவதுதான் மிகவும்

வேதனையான விடையம் ....இவை எல்லாம் பொதுவாக நடக்கும் சம்பவங்கள் என்று சொல்லமுடியாது இதற்கு பின்னால் வேறுசில காரணங்களும்

இருக்கலாம் .யாருக்கு தெரியும் . நாங்கள் எங்களுக்குள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து மோதிக்கொள்வதில் என்னைருக்கிறது மனத்தாங்கல்

வருவதுதான் மிஞ்சும் .!

விளையாட்டுக்களில் மோதிக் கொள்வது சகஜம். ஆனால் கொல்லப்படும் நிலைக்கு அது மாறக் கூடாது. இந்த விடயத்தோடு சம்பந்தமில்லாத மாறுபட்ட கருத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளுதல் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுக்களில் மோதிக் கொள்வது சகஜம். ஆனால் கொல்லப்படும் நிலைக்கு அது மாறக் கூடாது. இந்த விடயத்தோடு சம்பந்தமில்லாத மாறுபட்ட கருத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளுதல் நன்று.

சரியா சொன்னீங்கள் இறைவன் அண்னை

உங்களின் கருத்துக்கு நான் ஒரு பச்சை புள்ளி குத்தி இருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று இயக்கங்கள் அல்லது தமிழ் ஆயுதக் கும்பல்கள் மற்றும் சிறீலங்கா சிங்கள மற்றும் இந்திய அரசாங்கப்படைகள் இருக்கும் போது மட்டும் தான் இப்படியான நிகழ்வுகள் நிகழ்கின்றன. இந்தியப் படைகள் நிலை கொண்டிருந்த போதும் நாவாந்துறையில் இப்படி நடந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடா நாடு உட்பட பல பிரதேசங்கள் இருந்த போது இவ்வாறான வன்முறைகள் படுகொலைகள் நிகழ்ந்ததாக இல்லை. போட்டிகள் மிக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. வன்முறைகள் எழக் கூடிய சூழல்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் சிலருக்கு பலமான எச்சரிக்கைகள் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டும் இருந்தன.

விளையாட்டு நிகழ்வுகள் அரசியல் மயமாக்கப்படுவதை.. அண்மையில் வடக்கின் போர் கிரிக்கெட்டில் மகிந்த அரசாங்க அமைச்சர்கள் மற்றும் டக்கிளஸ் தேவானந்தா போன்றோரின் பிரசன்னம் தெளிவாக எடுத்துக்காட்டியது. டக்கிளஸ் தேவானந்தா விளையாட்டுத்துறை அமைச்சர் அல்ல. அப்படி இருக்கும் போது அவர் ஏன் இவ்வாறான நிகழ்வுகளுக்கு வலிந்து போகிறார். விளையாட்டை அரசியல் மயப்படுத்தி தமிழ் இளைஞர்களிடையே அரசியல் பேதத்தை விதைத்து அவர்களை வன்முறைக்குள் அடக்கி வைத்திருக்க சிங்கள தேசமும் டக்கிளஸ் தேவானந்தா போன்ற தேசவிரோத சக்திகளும் எப்போதுமே விரும்பிச் செயற்படுகின்றனர்.

இந்த நிலையின் விளைவே இந்த மோதல்களும் உயிர்ப்பலிகளும். கொழும்பிலும் இதேபோன்ற அரசியல் பின்னணியுடன் கூடிய விளையாட்டுக்குழுக்களுக்கிடையேயான மோதல்கள் நடப்பது வழமை. ஆனால் வடக்குக் கிழக்கில் விடுதலைப்புலிகளின் நிர்வாக மையம் செயற்பட்ட காலங்களில் இவை அருகிப் போயிருந்ததுடன் குழு வன்முறைகள் முற்றாக களையப்பட்டிருந்தன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

thanks neduks

ஏன் புலத்தில் மாத்திரம் என்ன வாழுது... இவங்களாச்சும் விளையாடி சண்டை பிடிச்சாங்கள்.. அல்லது இவங்களை ஆமியும் இபிடிபியும் சண்டை பிடிக்க வைச்சுதேன்று சொல்லலாம்.

அனால் இங்க புலத்துக்கு லண்டனிலும் கனடாவிலும் வந்து அடிபட்டு சாவதை என்னவென்று சொல்லுவது?

ஒருகாலத்தில படிச்ச மனுசருக்கு மாத்திரம் லண்டன் போகக்கூடிய நிலைமை இருந்தது அனால் காலத்தின் கோலத்தாலும் யுத்தத்தின் கோரத்தாலும் பலருக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தனது அறிவை வளர்த்து தனக்கும் தன்னை சார்ந்த வர்களுக்கும் பெருமையும் நன்மையையும் தேடாமல் இதுகள் இப்படி மறுவளமா போச்சுதுகள்.

படிக்காட்டாலும் பரவா இல்லை கஷ்டப்பட்டு உளைச்சென்டாலும் முன்னேறலாம் தானே.. கள்ளக் கிரடிட் காட் அது இது என்று எங்களை தலை குனிய வைச்சுதுகள்.

இதே பழக்கத்தை இப்ப ஊரில உள்ளவங்களுக்கும் பரபுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஒருவர் பலி

இந்தச் செய்தியை கேட்க, கவலையாக உள்ளது.

ஒரே ஊர் பிள்ளைகள் விளையாடி, கொலை வரை போவதை ஏற்க முடியாது.

இப்படியான விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் போது...... ஊர் பெரியவர்களோ, சன சமூக நிலையம் போன்ற அமைப்புக்களில் உள்ளவர்களோ உடனிருந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் எங்கேயோ போகுது

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைக்குரிய சம்பவம் இது

இதனை நாம் எமது தாபங்களை தீர்த்துக்கொள்ள இங்கு முற்படக்கூடாது

இதன் மூலம் அவர்களது செயலுக்கு நாமும் தயாராக இருக்கின்றோம் என்பது மட்டுமே புலப்படுகிறது

அப்படியாயின் இதை எழுத எமக்கென்ன தகுதியுண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.