Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபி கொலைக்கும்பலின் வெறியாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி கொலைக் கும்பல் வவுனியாவில் செய்த வெறியாட்டத்தில் ஒரு இளைஞரை (வவுனியா நகரில் வர்த்தம் செய்து வந்தவர்) காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது. தேர்தல் பிரச்சார நிலைப்பாடு மற்றும் ஈபிடிபி தொடர்பாக எழுந்த மாற்றுக் கருத்து காரணமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது.

கொல்லப்பட்ட நபர் தங்கராசா கிருஷ்ணகோபால் (வயது 24) என்று இனங்காணப்பட்டுள்ளார்.

பேச்சுக்கு ஜனநாயகம் மாற்றுக் கருத்து அரசியல் என்று சொல்லி கொண்டு சிங்கள எதிரிகளோடு சேர்ந்து நின்று தமிழினத்தை கருவறுத்து வரும் இந்த கும்பல்கள் இவ்வளவு காலமும் புலிகளை வைத்து போலி அரசியல் செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி ஆதாரமும் மேலதிக செய்திகளும்..

Young man beaten to death in Vavuniyaa

[TamilNet, Monday, 29 March 2010, 05:00 GMT]

Persons connected to Eelam People’s Democratic Party (EPDP) assaulted Thangarasa Krishnagoapal Saturday night at a liquor bar in Vavuniyaa who died of excessive bleeding Sunday due to injuries in Vavuniyaa government hospital where he was admitted by persons who were at the liquor shop at the time of the incident, sources in Vavuniyaa said. The victim was attacked by EPDP member Jeyaraj and EPDP student organization members, according to the statement given to police by the Krishnagopal at the hospital before he died.

Opposing interests in the matters of election campaign meeting and supporters had been the cause of the assault on Krishnagopal, sources in Vavuniyaa said.

Krishnagopal who was 24 years of age on the day he died was a trader in Vavuniyaa town.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31454

Edited by nedukkalapoovan

புலிகள் தான் சகோதரபடுகொலை செய்யுறவை எண்டுதானே சொல்லுறவை...?? இப்ப என்ன புதுசா...???

  • கருத்துக்கள உறவுகள்

.

உந்தக் கட்சியிலை இருக்கிறவன் முழுக்க...... கிரிமினல்களும், அல்லக்கைகளும் தான்.

உதுகளுக்கு என்ன கொள்கை. மற்றவனை கொன்று கொள்ளையடிக்கிறது தான் முக்கியமான கொள்கை.

சரியான விசுக்கோத்து கூட்டம்.

.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் அவர்களுடன் சேர்த்ததற்கு நன்றி

இப்ப அதுதான் வழி பிழைக்க..

கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்டாலும்..

இப்பவாவது சேர்த்தீர்களே...

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் அவர்களுடன் சேர்த்ததற்கு நன்றி

இப்ப அதுதான் வழி பிழைக்க..

கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்டாலும்..

இப்பவாவது சேர்த்தீர்களே...

ஐயோ விசுகு,

நீங்கள் விசுவாசமான விசுகு.

அதுகள் சரியான விசுக்கோத்துகள். மண்டையுக்கை களி மண்ணை தவிர வேறு ஒரு இழவும் இல்லாத சடங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் அவர்கட்கு, அடாவடியாக அடித்துக் கொல்லப்பட்ட அவரது பிணத்தைச் சமர்ப்பியங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் சரியான விசுக்கோத்துகள். மண்டையுக்கை களி மண்ணை தவிர வேறு ஒரு இழவும் இல்லாத சடங்கள்.

இந்தக்கருத்தை நான் ஆட்சேபிக்கின்றேன்

அதெப்படி களி மண்களுக்கு தொடர்ந்து வரவேற்பு

தொடர்ந்து வெற்றி

தொடர்ந்து வளர்ச்சி......????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்தை நான் ஆட்சேபிக்கின்றேன்

அதெப்படி களி மண்களுக்கு தொடர்ந்து வரவேற்பு

தொடர்ந்து வெற்றி

தொடர்ந்து வளர்ச்சி......????

களிமண்ணுக்குள்ளை, மண்புழுவும் இருக்கிறதாலை வளர்ச்சி போலை தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் அவர்கட்கு, அடாவடியாக அடித்துக் கொல்லப்பட்ட அவரது பிணத்தைச் சமர்ப்பியங்கோ

மதிவதனங் என்பவர் தமிழ் மக்களுக்கு என்றான ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை கொள்கையை ஆதரிக்கும் நபர் அல்ல. அவர் ஒரு குழப்பவாதி. யாழ் களம் அவரை மாற்றுக் கருத்து மாணிக்கமாக கருதி வளர்த்து வருகிறது. ஆனால் அவருடைய கருத்துக்கள் எவையும் தமிழ் மக்களுக்கு உபயோகமான விடயங்களைச் சொல்வதில்லை. மாறாக சிங்கள பேரினவாதத்தின் நிலைப்பாடுகளை அங்கீகரிகத்தலே தமிழர்களிற்கு உள்ள ஒரே தீர்வு என்பது போல் சொல்லுவார். அதுமட்டுமன்றி தமிழ் ஆயுதக் கும்பல்கள் செய்வதெல்லாம் சரி என்பார். புலி செய்ததெல்லாம் பிழை என்று சொல்லும்.. ஒரு வகை கோமாளி அவர். அப்படிப்பட்ட நபரை அடிப்படையாக வைத்து இச்செய்தியை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

1988 இல் இந்தியப் படைகள் தோற்றுவித்த அதே பழைய பயங்கர சூழல் மீண்டும் எழுகிறது. அப்போது சிங்களவர்கள் புலிகளோடு இணைந்து நின்று தமிழ் மக்களை துன்புறுத்துவதை தவிர்த்தார்கள். இப்போ அவர்களும் சேர்ந்து தமிழர்களை துன்புறுத்தப் போகின்றனர் அவ்வளவும் தான்..!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்தப்பட்ட மாணவனின் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை நாட்டைவிட்டு வெளியேறத் தடை உத்தரவு

குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் படுகொலை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.யின்) நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமானநிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத்திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப்புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார். ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தக் கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 14 ஆம் திகதி மேற்படி கபில்நாத்தை, அவரது பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரும், ஜீவன் என்பவரும் மேற்படி உயர்தர வகுப்பு மாணவனின் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றார்கள். அச்சமயம் அந்த வீட்டில் அந்த மாணவனின் உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அங்கு வைத்து கபில்நாத்தைத் தாக்கிய அவர்கள் இருவரும், பின்னர் அன்றிரவே கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்து, வீட்டின் பின்வளவில் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்திருக்கின்றனர்.

அந்த உயர்தர வகுப்பு மாணவன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமையை அடுத்து அவர் எல்லா விவரங்களையும் விசாரணையாளர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் அதனையடுத்தே கபில்நாத்தின் சடலம் மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

கொலையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட உயர்வகுப்பு மாணவர் வெளியிட்டமையை அடுத்து, இந்தக் கொலையில் அவரது சகாவாக செயற்பட்டவரும், ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமைச் சேர்ந்தவருமான ஜீவன் என்பவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை சாவகச்சேரி நீதிவான் பிறப்பித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் இடம்பெற்ற மரண விசாரணையை அடுத்து உறவினர்களிடம் நேற்றுக் காலை ஒப்படைக்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைகள் நேற்றுக் காலை இடம்பெற்றன.

இதனையடுத்து சடலம் சாவகச்சேரி பெரியரசடியிலுள்ள அவரது வீட்டுக்கு நண்பகல் 12.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.பெற்றோர், உறவினர்கள், கொலையுண்டவரின் சக மாணவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனுதாபிகள் அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் கொளுத்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உற்றார், உடன்பிறப்புகள் கதறியழ எடுத்துச்செல்லப்பட்ட கபிலநாத்தின் சடலம் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் நேற்றுப் பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.மாணவனின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதோ, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்ட போதோ பேழை திறக்கப் படவில்லை. வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டவாறே அடக்கம்செய் யப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் மாணவர்களும் அந்த ஊரைச்சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றினர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன் உட்படப் பலர் பங்கேற்றனர்.சமூகசேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

globaltamilnews

Edited by நிழலி
செய்தியின் மூலத்தைக் குறிப்பிடவும்

"சமூகசேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். "

பேய்க்காய் போலத்தான் கிடக்குது.

"சமூகசேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். "

பேய்க்காய் போலத்தான் கிடக்குது.

சில பேர் சொல்லுகினம் வருங்கால உப ஜனாதிபதியின் வேலை என்று

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் என்பவர் தமிழ் மக்களுக்கு என்றான ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை கொள்கையை ஆதரிக்கும் நபர் அல்ல. அவர் ஒரு குழப்பவாதி. யாழ் களம் அவரை மாற்றுக் கருத்து மாணிக்கமாக கருதி வளர்த்து வருகிறது. ஆனால் அவருடைய கருத்துக்கள் எவையும் தமிழ் மக்களுக்கு உபயோகமான விடயங்களைச் சொல்வதில்லை. மாறாக சிங்கள பேரினவாதத்தின் நிலைப்பாடுகளை அங்கீகரிகத்தலே தமிழர்களிற்கு உள்ள ஒரே தீர்வு என்பது போல் சொல்லுவார். அதுமட்டுமன்றி தமிழ் ஆயுதக் கும்பல்கள் செய்வதெல்லாம் சரி என்பார். புலி செய்ததெல்லாம் பிழை என்று சொல்லும்.. ஒரு வகை கோமாளி அவர். அப்படிப்பட்ட நபரை அடிப்படையாக வைத்து இச்செய்தியை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

1988 இல் இந்தியப் படைகள் தோற்றுவித்த அதே பழைய பயங்கர சூழல் மீண்டும் எழுகிறது. அப்போது சிங்களவர்கள் புலிகளோடு இணைந்து நின்று தமிழ் மக்களை துன்புறுத்துவதை தவிர்த்தார்கள். இப்போ அவர்களும் சேர்ந்து தமிழர்களை துன்புறுத்தப் போகின்றனர் அவ்வளவும் தான்..!

நீங்கள் சொல்வது ஏற்புடையதாக இருந்தாலும்................

அவருடைய நிலமைக்கும் போராட்டமே காரணமாயிருக்கின்றது என்ற மற்ற பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

யாழ்களத்தில் நிற்பதால் ஒரு மதிவறண்டனாங்'களை தான் எமக்கு தெரிகின்றது. ஆனால் நாட்டுக்குபோய் மிக அவதானமாக அவதானித்தால் ஆயிர கணக்கில் மதிவறண்டவர்கள் உள்ளார்கள்.

போராட்டத்தின் பாதிப்பு நேரடியாக அவர்களது மூளையை பாதித்துள்ளது. ஒரு மன நோய் என்றுதான் அல்ஜீரிய போராட்டத்திற்கு பின்பு பல மனநோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் புத்தகம் எழுதியுள்ளார்கள். அவர்களுடன் பேசி தைரியத்தை உண்டு பண்ணினால் நிஜ உலகத்தை அவர்கள் காணகூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

" புலிகளை பற்றி ஏதாவது அவதுறு ஒன்றை எங்காவது எழுதினால்" தற்காலிகமாக அவரது மூளையில் உள்ள பகுதியான டொபோமின் சந்தோசம் காண்கிறது. ஒருவராக மட்டுமே இருந்தது இப்போது அந்த கருத்துகளை வாசித்து சுகம் கண்டு வானத்து விடிவெள்ளிகளாகவும் குறிதவறாது அம்பெய்துபவர்களாகவும் பலபேர் கிளம்பிவிட்டார்கள். சைகோலாஜிஸ்ட்களின் கருத்துபடி நாம் அவர்களின் பாதையில் அவர்களோடு சில தூரம் என்றாலும் பயணித்தாலே அவர்களுக்கு எம்மீதும் வாழ்வு மீதும் ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியும் என்கிறார்கள்.

அவர்களோடு பயணிப்பது என்பதே சிலதூரமே என்றாலும் கடினமானது.............. அது சைகோலாஜிஸ்ட்களாலேயே முடியும்.

அவர்கள் புலிகளை பற்றி தவறாக கட்டுகதைகளை கட்டவிள்த்துவிடவதே அவர்களின் வெளிதோற்றம் என்றால். அவர்களுடைய உள்தோற்றம் புலிகள் எந்த தவறையும் செய்யவில்லை என்று 100வீதம் நம்புகிறார்கள் அதனாலேயே அவர்கள் அச்சமடைந்து மனம் தொய்ந்து இந்த நிலைக்கு செல்கின்றார்கள். தவறான வழிகாட்டலினால் தம்மை அறியாமலேயே புலிகளை வெறுக்க பழகியவர்கள் ஒரு காலகட்டத்தில் "ஏன் புலிகளை வெறுக்கிறோம்?' என்ற கேள்விக்கு விடைதெரியாது தவிக்கும்போது கடந்தகால மன இச்சைகளினதும் மூளைசலவையினதும் கரணமாக தம்மில் இருந்தே அவர்கள் அன்னியம் ஆகிறார்கள். தனிபோராளிகளின் தவறுகளால் புலிகள் பல தவறுகளை விட நேர்ந்தது தவறான தகவல்களின் அடிப்படையில் சில தவறான தண்டனைகள் புலிகளால் நிறைவேற்றபட்டன என்பது உலகறிந்த உண்மை என்றாலும். அதை அவர்கள் மனம் ஏற்பதில்லை புலிகள் மீதான மக்களின் அரவணைப்பு என்பது அவர்களை மேலும் அச்சமடைய செய்கின்றது.

இவர்களெல்லாம் தற்போதைய காலத்தில் மனநோய்பட்டவர்கள் அல்லது அதிகம் பாதிக்கபட்டவர்கள் என்பதை அவர்களின் எழுத்துக்கள் ஊடாக அறியமுடிகின்றது. புலம்பெயர் தேசங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக புலிகொடியுடன் ஆர்பாட்டங்கள் செய்த காட்சிகள் அவர்களது மனதை பாரிய அளவில் பாதித்திருக்கின்றது.

அவர்களின்பால் எமக்கு வெறுப்பு வருவதற்கு........... நாம் மனநோய் குறியியல். மனநோய் வகையியல். மனநோய் நீக்கு முறை குறித்த எல்லா விவாதங்களையும் தவிர்க்கிறோம்.ஒரு சில கலைசொற்கள் ஆதாரங்கள் எனும் அளவில்தான் பயன்படுத்த படுகின்றன. மனக்கோளாறுக்கு காரணமாக நிகழ்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரபடுகின்றது.......... அவர்களது பின்புலம் புறகணிக்கபடுகின்றது. வேதாந்த சித்தார்த்தங்களால் இளமைக்கு கிடைக்க கூடிய சில சிற்றின்பங்களும் கிடைத்துவிட்தால். என்ன செய்கிறோம் என்பதில் தெளிவிருக்கவில்லை சொந்தங்களை காட்டிகொடுத்தல் கார்ப்புணர்தல் பாலியல் வல்லுறவு என்று தொடங்கி வாழ்வையே சொந்த இனத்திற்கு எதிராக வாழதொடங்கிவிட்டார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி ஒரு நாளில் எழும்போது புத்தி பேதலிக்கின்றது. இவற்றுக்கு ஏதேனும்மொரு முத்திரையைக் குத்திவட நாம் விரும்பினால் பிற்போக்கு மனநோய்கள் என்று கூறிவிடலாம். ஆனால் இங்கு போருக்கு குறிபிட்டதொரு முன்னுரிமையை நாம் அளிக்க வேண்டும். அது முழுமையாகவும் சரி பகுதியளவிலும் சரி ஒரு விடுதலை போராகும்.

ஈபிடிபி என்பது ஒரு அமைப்பு. பொழுதுபோக்கு இல்லாதவர்களும், கள்ளர்களும், காடையரும், சிங்களவரிடம் இருந்து உயிர்ருக்கு உத்தரவாதம் வேண்டுவோரும் உறுப்பினரக கொண்ட ஒரு அமைப்பு. இதற்கு தலமை இல்லை.. கட்டகாலி தறுதலைகளாக நினைத்ததை செய்ய்துகொண்டு திரியும் இந்த அமைப்பை றோவில் இருக்கும் 10க்கும் குறைந்த பேனா தள்ளுவோர் கட்டுப்படுத்துகிறார்கள். ஈபிடிபியினால் செய்யப்படும் (தமிழர் மட்டும்) கொலை கொள்ளை கடத்தல்களுக்கு பின்னல் அல்ல, முன்னல்.. அதாவது 100% காரணமே இந்தியாதான்.

துரோகி டக்லஸ் கொல்லப்பட்டு பலகாலம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மர்மக் கொலைகள் தொடர்வது தமிழருக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்று ஒரு உளவியல் ரீதியான அச்சத்துள் வாழ வழியமைக்கிறது.இதிலிருந்து மீள்வதாயின் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கப் போகிறது.அது எப்போது என்பது யாருக்கும் தெரியாது. சிங்களவனுக்கு தமிழர் மீது கை வைக்க பயம் ஏற்படும் நிலை வந்தால் ஒழிய இலங்கைத் தீவில் தமிழன் அச்சமின்றி வாழ முடியாது.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை அரசியல் கொலைகளல்ல.....அரசியலுக்காக கொலைகள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலில் ஈபிடிபி சாவகச்சேரி அலுவலகம்!

யாழ்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ஈபிடிபியின் அலுவலகம் கடத்தி காணமல் பொய் சடலமாக மீட்க்கப்பட்பட்ட கபில்நாத்தின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இம்மாணவனை ஈபிடிபியினரே கடத்தி கொலை செய்ததாக உறுதியான தகவல்கள் வெளியானதை. அடுத்து கோபம் கொண்ட மக்கள் அலுவலகத்தை சூழ்ந்து அடித்து நொருக்கியதாகவும் மக்கள் வருவதை அவதானித்த அலுவலக ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பி ஓடியதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக தெரியவருகிறது

http://www.pathivu.com/index.php/news/6138/54//d,view/

  • கருத்துக்கள உறவுகள்

புலி செய்ததெல்லாம் பிழை என்று சொல்லும்.. ஒரு வகை கோமாளி அவர்.

யாழ்கள சுப்பிரமண்யம் சுவாமி என்று சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவராக மட்டுமே இருந்தது இப்போது அந்த கருத்துகளை வாசித்து சுகம் கண்டு வானத்து விடிவெள்ளிகளாகவும் குறிதவறாது அம்பெய்துபவர்களாகவும் பலபேர் கிளம்பிவிட்டார்கள். புலம்பெயர் தேசங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக புலிகொடியுடன் ஆர்பாட்டங்கள் செய்த காட்சிகள் அவர்களது மனதை பாரிய அளவில் பாதித்திருக்கின்றது.

நன்றி ஐயா தங்களது நேரத்திற்கும் கருத்துக்கும்

இதைத் தான் நானும் நினைத்து ஒதுங்கிக்கொண்டேன்

ஆனால் இவர்களின் தம்மிடமுள்ளதை பங்கிடும் அல்லது இப்படி கிடைப்பதை வாங்கி வாந்தியெடுக்கும் நிலை ஆரோக்கியமானதா.....???

அல்லது இப்படி நாம் எழுதுவதால் இதன் வளச்சிப்பாதைக்கு பசளை இட்டுவிடுவோமா....???

என்பதும் சிந்திக்கவேண்டியதே.....

இங்கு யாரையும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை

பொதுவாக யாழில் மட்டுமல்ல தமிழரது உரிமைகளை கொச்சைப்படுத்துவோர் சம்பந்தமானதே எனது கருத்து.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதுபோக்கு இல்லாதவர்களும், கள்ளர்களும், காடையரும், சிங்களவரிடம் இருந்து உயிர்ருக்கு உத்தரவாதம் வேண்டுவோரும் உறுப்பினரக கொண்ட ஒரு அமைப்பு. இதற்கு தலமை இல்லை.. கட்டகாலி தறுதலைகளாக நினைத்ததை செய்ய்துகொண்டு திரியும் இந்த அமைப்பை றோவில் இருக்கும் 10க்கும் குறைந்த பேனா தள்ளுவோர் கட்டுப்படுத்துகிறார்கள்.

துரோகி டக்லஸ் கொல்லப்பட்டு பலகாலம்.

தங்களது கருத்து சரி

ஆனால் தங்களைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.