Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது மரணம்: முதலாவது அறிக்கை: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கவிதை என்றுதான் எழுத முயற்சித்தேன்

என்ன எழுதுவது

மரண மயம் கிடையாது எனக்கு

எல்லாவற்றையும் உணர்ந்த படியால்தானே இத்தனை யூரோக்கள் இன்சுரன்காறனுக்கு மாதமாதம் கட்டுகிறோம்.........

எம்மை தயாராக்காமல் எப்படி எமது சாவுக்கு பணம் கட்டுவது...

அதற்குமுன் கருத்துக்களை பார்க்கபோனேன்

அகல மறுத்தவரிகள் இதுதான்.

கடைசிவரை நான் இருப்பேன்

உன் கை பற்றி நான் நடப்பேன் என்று

உறுதிமொழி தந்தவரின் அந்த இறுதி நிமிடத்தில்

அவர் கரங்களை இறுகப் பற்றியபடி

இறைவனைப் பிராத்தித்த அந்த பொல்லாத நிமிடத்திலும் சோகத்தை எனதாக்கி

சந்தோசமாய் போய் வாருங்கள்....... என்று விடை கொடுத்தனுப்பஎன்னால் எப்படி முடிந்தது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வோல்கனா பெண் வாசனை முகர்வது சிறுமையா :lol:

ஒரு சிறுமை என்று சொல்லவில்லை..ஆனால் அதை சொன்ன விதம் அதை சிறுமையாக காட்டினது போல்தான் எனக்கு இருந்தது. மற்றது அதைபற்றி அதிகம் இங்கே பேசுவது திரியை வேறுதிசைக்கு இழுத்து சொல்லும் என நினைத்து நானும் அதை நீக்கிவிட்டேன். மரணத்தை பற்றி பேசும் போது ஏது சிறுமை/பெருமை என்று யாருக்கு தெரியும்.....

இங்கே மரணம் ....

எனது அயல் வீடு பாட்டிக்கு வந்தது..தொண்டையில் கான்சர் என்று ஒரு 6 மாததிற்கு( 90 களில்) முன்புதான் கண்டு பிடித்து மகரகம சிகிச்சை எல்லாம் கொடுத்து கொண்டு வந்தார்கள்..ICRC கப்பல் ஓடின காலம். ஒருநாள் இரவு எல்லாரும் கத்தினார்கள்-அயலவர்கள். நானும் போய்பார்த்தேன் ..வாட்டர் பம் ஆல் தண்ணி வரது மாதிரி இரத்த வாந்தி..அருகில் உள்ள டோக்ரரிட்ட ஒபினியன் கேட்க என்னையும் அந்த பாட்டியினது மருமகனையும் அவருடைய வீட்டுக்கு அனுப்பினார்கள். "சார் சார் "... (அந்த மருமகன் அந்த டாக் ஆபீசில் வேலை செய்பவர்...எல்லாம் தெரியும் ) "இப்ப நான் ஒன்று செய்ய இல்லை ...ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ" என்றார் வீட்ட திரும்பி வர எல்லாம் முடிந்து விட்டது ஒரு 20 / 30 நிமிடத்தில்...

பிறகு ..ஸீன் முடியவில்லை ..பக்கத்தில் உள்ள அவரது மகனுக்கு சொல்ல போனோம். தாய்க்கும்/அந்த குடும்பத்திர்ற்கும் சண்டை ..ஒரு 6 மாதம்/ ஒரு வருடமாய்....அவர் சண்டைக்கு வந்தார் எங்களுடன்...நாங்கள் தான் அவவை கொன்றது/கொலை செய்தது என்று...எல்லாம் தங்கட எண்ணப்படி செய்கிறது இப்ப என்னத்து இங்கே வருகிறீர்கள் ..செத்த வீடு சொல்ல என்றார்...

4 மகன், 2 மகள் பெற்ற பாட்டியின் இறுதி ஊர்வலம் 3 மகன் 2 மகளுடன் நடந்தது...வந்த 3 மகன்மாரும் பெண்சாதி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வரவில்லை...எல்லாரும் யாழில் இருந்தவை...

இது முடிந்து..நான் நினைக்கிறேன்...ஒருமாதற்குள்...அந்த தாத்தா ...அலரி விதை சாப்பிட்டார்....எனது A /L டெஸ்ட்க்கு முதல் நாள்...என்ன செய்வது என்று தெரியவில்லை...பக்கத்தில் இருந்த பாடசாலை அதிபர் ..தனது வீட்டுக்கு கூட்டிச்சென்று அங்கு தனது வீட்டில் படிக்க சொன்னார் ..எனோ மனம் ஒன்றி படிக்க முடியாமல் வீட்டுக்கு திரும்ப வர யாரோ அவரை வைத்தியசாலை கூட்டி சொன்றார்கள் . (?)படித்தேன் பாஸ் பண்ணினேன்..அந்த தாத்தாவும் தப்பினார்...பிறகு 1995 இடப்பெயர்வுக்கு பின்னர் வருத்தம்/ முதுமை காரணமாக இறந்து போனார்...

-அந்த அதிபரை பற்றி..சுத்த சைவன்...அவர் வேலைசெய்த இடத்தில் சைவத்துக்கு..( இலங்கையில் /தமிழ் பிரதேசத்தில் ) துளியும் மரியாதை இல்லையாம்..இன்று வேலையை விட்டு விட்டு வெளிநாடொன்றில் வேலைசெய்கிறார்.....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...நானும் என் கருத்தை சொல்லலாம் என்று நினைக்கிறன்.நான் எழுதும் விடயங்களை வாசித்து விட்டு என்னை யாரும் பாட்டி வந்துட்டா கருத்து எழுத எண்டு எல்லாம் சொல்லக் கூடாது.யாரும் பேசாதீங்கோ ஏன் எனில் எல்லோரும் ஒரு நாள் எதிர் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு தானே மரணம்.காலதேவன் வயது,ஆண்,பெண்,நிறம்,குலம் இது எல்லாம் பாத்து அளைக்க மாட்டார்.அவரவர்களுக்கு உரிய திகதி வந்ததும் ஆண்டவா இதுவரை நீ தந்த இன்ப,துன்பங்கள் எல்லாவற்றும் நன்றி என்று சொல்லிக் கொண்டு விசாவை பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி பண்ணிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.

நி.அ இந்த கவிதையை எழுதி விட்டுப்போனவுடன் நான் வந்து பார்த்துட்டு உண்மையாக நினைத்தேன் எழுதிறதுக்கு ஒண்டும் கிடைக்காமல் மரணம் பற்றி எழுதி இருக்கிறார் எண்டு.ஏன் எனில் இரண்டு பச்ச குழந்தைக்கு அப்பாவாக இருப்பவர் எழுதும் விடயமா இது எண்டு தான் சலித்துக் கொண்டேன்.பின் நானும் சில விடயங்களை புரிந்து கொண்டேன் நி.அ எழுதியதில் எந்த விதமான தப்பும் இல்லை.தினமும் நாம் காலையில் எழும்பும் போதே அது எங்களுக்கு ஒரு புதிய நாளாகத் தான் இருக்கிறது இல்லையா?அதற்கு நாம் கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

கண்தாசன் சொல்லி இருப்பது போல்..........

சாவு சாவல்ல

சாவுக்குமுன் நிகழும்

போராட்டமே சாவு.ஆமாம் முற்றிலும் உண்மையான வரிகள் காரணம் நான் சில வேளைகளில் மருத்துமனையில் படும் பாட்டை பார்த்துட்டு நினைப்பேன் இந்த மெசினுக்குள்ளை போய்ட்டு வரக்குள்ளயே நான் இறந்துட்டால் என்ன...?அல்லது சிலசமயங்களில் மருத்துவமனையில் பாக்க வைச்சுட்டே செய்யும் சில வெட்டுக் கொத்துக் களால் கூட ரொம்ப மனம் நொந்து அழும் பொழுதுகளும் உண்டு.வைத்தியம் செய்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கும் அதை அனுபவிப்பர்கள் அணுஇஅணுவாக இறந்து கொண்டு தான் இருப்பார்கள் ஒவ்வொரு கணமும்.இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை ஆண் வைத்தியர்கள் வைத்தியம் பார்க்க வருவது.மனதுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய பொழுதுகளாக அமைந்து விடுவதும் உண்டு அந்த ஒவ்வொரு கணங்களும்.ஏன் எனில் நான் சில பல தவிர்க்க முடியாத சுமைகளை உடல் ரீதியாக அனுபவித்துக் கொண்டு இருந்தாலும். எனக்கு எண்டு சில விருப்புஇவெறுப்புக்கள் எண்டு இருக்கவே செய்கிறது அவற்றுக்கும் நான் கட்டுப் பட்டு வாழவே என்னால் முடிந்வரைக்கு முயற்சிக்கிறேன்.வாழ்வே மாயம்...இந்த வாழ்வே மாயம் என்று கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்...நன்றி.

இது தான் நிஜம்:

http://www.youtube.com/watch?v=N7AYVCBQMsM

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இந்த திரியை பார்க்கக்கூடாது என்று நான் நினைத்தேன் யாயினி....

மரணம் எமக்கு ஒரு எட்டாப்பொருள்

ஆனால் அதற்குள் வாழ்பவர்களுக்கு......

யாழ் இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகின்றேன்,ஆனால் இப்படியொரு இடுகையை கொடுத்த நிழலிக்கும் மற்றும் இதற்கு துணிந்து கருத்தெழுதிய அனவருக்கும் பாராட்டுக்கள்.பலரால் தொட விரும்பாத அல்லது நினைக்கவே தயங்கும் விடயமிது.மரணம் எம்முடன் சேர்ந்தே வாழ்கின்றதென்பதை எத்தனைபேர்தான் ஏற்றுக்கொள்வார்கள்.வாழ்த்துக்கள் நிழலி.

நிழலி!

தீராத நோய்கள்,

முதுமை,

தனிமை,

எதிர்காலம் சூன்யமாக தோன்றும் போது,

அளவுக்கு மீறின எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தை தரும்போது,

(விருப்பமில்லாத) சூழ்நிலைகளை அனுசரிக்க முடியாதபோது,

யதார்த்தத்துக்கு பொருத்தமில்லாத தத்துவங்களில் கொண்ட அதீத நம்பிக்கை தகரும் போது,

அளவுக்கு அதிகமான பொய்மைகளால் பின்னப்பட்ட வாழ்க்கை பின்னடைவுகளை சந்திக்கும் போது,

.............

.............

போன்ற,

ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளால்,

என்னால்,

பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை தகரும் போது,

மரண பயம் அருகில் வந்து போக ஆரம்பிக்கும்.

இத் தருணங்களில், இதுவரை நாம் வென்றிருந்த, மறந்திருந்த கடந்தகால சோகங்களும் எம்மை ஆட்டிப்படைக்க இடம் கொடுத்தால்,

மரண பயம் அருகில் குடியிருக்கத் தொடங்கிவிடும்.

யதார்த்தத்தை உணர்ந்து,

மாற்ற முடியாத பிரச்சனைகளை, சவால்களை ஏற்றுக்கொண்டு,

அதுக்கேற்ப வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்து,

எதிர்பார்ப்புக்களை அறவே அகற்றி,

இலட்சியங்களை மனதில் இருத்தி,

கடமைகளை மனநிறைவுடன் செய்துகொண்டு,

இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறும்போது,

மரணம் வரும்வரை,

மரண பயம் முற்றிலும் அகன்றிருக்கும்!!!

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா சாகும் நாளின்

முன்னிரவில்

அந்த வாசனையை

அவரில் கண்டேன்

அவரின் அறை முழுதும்

அது நிரம்பியிருந்தது

இந்த மனநிலையில் நானும் தவித்திருக்கிறேன் நிழலி. 2008 மார்ச்மாதத்து ஒரு அதிகாலையில் அப்பாவின் மரணச்செய்தி தொலைபேசிக்கால் அழைத்தது. அந்தச் செய்தி கிடைப்பதற்குச் சிலநாட்கள் முன்னிருந்து மனசு அந்தரித்துக் கொண்டேயிருந்தது. மரணத்தின் வாசனை நமக்குள் எப்போதும் தங்கியே உள்ளது.

மரணம் எல்லாராலும் உணரப்படுகின்ற ஒரு அந்தகாரவெளி.

கவிதைக்குள் வாசகரை இழுத்து வைத்திருக்கும் அத்தனையும் வளமைபோல இக்கவிதைக்குள்ளும் நிறைத்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

மு.வ உரை:

ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

Translation:

Save as the 'sharer' shares to each in due degree,

To those who millions store enjoyment scarce can be.

Explanation:

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

நல்ல கவிதை.

விளங்க கஷ்டமான விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்.

போர் சூழலில், 1988 - 96 வரை, சின்னவயதில், பெரியவர்களின் தவிப்பை பார்த்து, மனதில் வந்துபோன பயம்கள் மீண்டும் மனதில் ஓடியது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா சாகும் நாளின்

முன்னிரவில்

அந்த வாசனையை

அவரில் கண்டேன்

அவரின் அறை முழுதும்

அது நிரம்பியிருந்தது

நிழலி நல்ல கவிதை.

இந்தக் கவிதையை நான் எழுதியிருந்தால் என்ன செய்திருப்பேன் என நினைத்துப் பார்த்தேன். ஆங்கில வார்த்தையை தவிர்த்திருப்பேன். காணாத கேட்ட முள்ளிவாய்க்கலின் மணம் இணையங்களில் இருந்து நினைவுக்குள் ஊடுருவுதாய் ஒரு வார்த்தை மட்டும் எழுதியிருப்பேன். கொஞ்சம் எடிற் பண்ணியிருப்பேன்.

கவிதைக்கு பாராட்டுக்கள் நிழலி.

  • 7 months later...
  • தொடங்கியவர்

மீண்டும் இந்தக் கவிதையை தூசி தட்டிப் பார்க்கும் தேவை இருக்கு... இந்த கவிதையை தாண்டி செல்ல முடிகின்றது இல்லை..இதை எழுதிய பின் ஒரு கவிதையைத் தானும் எழுத முடிகின்றது இல்லை.. ஒரு static நிலைமை உணர்வுகளில் வந்த மாதிரி இருக்கு. புதிதாக் கவிதையை ஒன்றை எழுதுவதும் பின் இது மாதிரி என் உணர்வுகளை அது சொல்லவில்லயே என இடையில் நிப்பாடுவதுமாக இருக்கு

என் மரணத்தின் முதல் வேர் என் கவிதையில் பதிந்து விட்டது

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.