Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய கள்ளு, அரைத்த மாவு, உடைக்கப்படவேண்டிய மொந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செயல் என்பதை, குறித்த வடிவங்களில் (கூட்டம், மேடைப்பேச்சு, பேரணி, கடிதம் எழுதல், அரசியல் சந்திப்புக்கள், காசு கொடுத்தல், காசு சேர்த்தல், நிகழ்ச்சி நடத்தல், கட்டமைப்பு நிறுவுதல், யாப்பு வரைதல் போன்று புலத்திலும் போராளியாகக் களத்திலும்) மட்டும் கண்டு பழகிய சமூகம் அதே வடிவில் மட்மே இப்போதும் செயலை அடையாளம் காண்கிறது அங்கீகரிக்கின்றது. அதனால்;, செயலைத் தேடுவதும் கூட மிகமுக்கியமான ஒரு செயல் தான் செயற்பாடுதான் என்ற புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. சுமூகம் சார் கருத்துப் பகிர்வுகள், விவாதங்கள் எல்லாம் வெட்டிப்பேச்சாக மட்டும் விளங்கிக் கொள்ளப்படுகிறது. இதனால் தான் எமது கண்முன் தற்போதும் புதுப்புது அமைப்புக்களும் கட்டமைப்புக்களும் திட்டங்களும் காளான்கள் போல் முளைத்துக் கொண்டிருக்கின்றன. சிவில் சொசையிற்றி (மக்கள்) என்று சொல்லப்படும் மட்டத்திலான கருத்துப் பகிர்வுகள் எம்மக்களால் வெட்டிப்பேச்சாய்ப்பார்க்கப்பட்டுக் கொண்டு மணிகட்டிய மாடுகள் தேடப்பட்டுக்கொண்டிருப்பதால், பல புதிய மணிகட்டிய மாடுகள் வந்துகொண்டிருக்கின்ற. இது ஒரு பரிதாபகரமான நிலை. எனவே சமூகப்பெறுமதிகள் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது.

நல்ல உதாரணம் யாழ் ...

ஒருபக்கமாக செய்திகளைதரும் இணையங்கள் ஓகோ என விளம்பரங்களுடன் கொடிகட்டி பறக்க..யாழ் மட்டும் ..மார்ச் மட்டும் இலவசம், ஏப்ரல் மட்டும் இலவசம் என்பதன் சுட்சுமமே அதுதான்..

உண்மையில் நான் யோசித்திருக்கிறேன் நான் எழுதுவதால் என்ன வரப்போகுது...யாழுக்கு ஒரு கொட்ட பெயர் ..குலபங்காசிகளும் எழுதலாம் என்று..நான் விலத்தி விலத்தி செல்வது போல மற்றவர்களும் ..என்பார்வையில் ஒருபக்கமாக சார்ந்து எழுதுபவர்கள்..விலத்தி ஓடலாம் தானே..இதனால் ஒருரிடத்தில் 'மதிவனங்" சொன்னமாதிரி மாகாண சபை எலக்சன் முடிய யாழ் பூட்டிறதோ தெரியாது என்று..

இங்கே ஒன்றுதான் எடுபடும் சரி/பிழை ...காரண காரியம் அல்ல...அதற்காகன தேடல் இல்லை...சாந்தி எழுதியிருந்த ஒரு கவிதைக்கு பதில் எழுதாதன் காரணமும் அதுதான்..அவர் வருவாரோ என்றமாதிரியான கவிதை ..நான் எழுதப்போக தேவையில்லாமல் எங்கேயோ போய் முடியும்...இங்கே யாழில் கூட நான் நினைக்கிறேன் (?)மச்சான் சொன்னமாதிரி..ஒருவரின் கருத்தை நாகரிகமாக எதிர்க்க அல்லது மறுத்து சொல்ல தெரியாத சமுகமாய் உள்ளோம்...ஏனெனில் சிந்தித்து விவாதித்த சமுதாயம் அல்ல நாங்கள்..

பலரும் பலவாறாக நொந்து போய் உள்ளோம் சந்தேகமும் , அவநம்பிக்கையும் எல்லா இடத்திலும் உள்ளது...புரட்சிகர தமிழன் குறை நினைக்க கூடாது..அவர் இந்தியா என்று சொல்லுவதால் அவர் என மற்ற ஆளாகக் கூட இருக்க கூடாது என்று கூட நினைத்திருக்கிறேன்...எல்லா இடமும் அவநம்பிக்கை ...இங்கே ஒருவர் எழுதியிருந்தார்..."இதற்கு பின்னூட்டம் இடுபவர்களை பார்த்தாலே தெரியும் இதன் தரம் என்று " உண்மையிலே அதும் என்னை கட்டிப்போட்டது தான்..நானும் எழுதி அவருக்கு அவல் கொடுக்க விருப்பமில்லை..ஆனால் எதோ இன்று போலுதுள்லாதால் எழுதுகிறேன்...

எங்களுக்கு பரந்த தேடல்கள் தேவை..கிடைத்த வெற்றி ஒவ்வொன்றிற்கும் கிடைத்த தோல்வி ஒவ்வொன்றிற்கும்..."மெய் பொருள் காண்பது அறிவு என" பல்கலைகழக(யாழ்) சின்னத்தில் பொறித்தால் மட்டும் காணாது...அதை எல்லா சமூக செயலிலும் செயற்படுத்த வேண்டும்.........

நாங்கள் வீழ்ந்து கிடப்பது அகல பாதாளத்தில் என்று உணராதவரை ...இந்த வழமையான சலசலப்புகள் தொடரத்தான் செய்யும் ...எப்பாவது மாறுவோமா என காலம் தான் சொல்ல வேண்டும்...

எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ள...

  • Replies 63
  • Views 6k
  • Created
  • Last Reply

நல்ல உதாரணம் யாழ் ...

ஒருபக்கமாக செய்திகளைதரும் இணையங்கள் ஓகோ என விளம்பரங்களுடன் கொடிகட்டி பறக்க..யாழ் மட்டும் ..மார்ச் மட்டும் இலவசம், ஏப்ரல் மட்டும் இலவசம் என்பதன் சுட்சுமமே அதுதான்..

உண்மையில் நான் யோசித்திருக்கிறேன் நான் எழுதுவதால் என்ன வரப்போகுது...யாழுக்கு ஒரு கொட்ட பெயர் ..குலபங்காசிகளும் எழுதலாம் என்று..நான் விலத்தி விலத்தி செல்வது போல மற்றவர்களும் ..என்பார்வையில் ஒருபக்கமாக சார்ந்து எழுதுபவர்கள்..விலத்தி ஓடலாம் தானே..இதனால் ஒருரிடத்தில் 'மதிவனங்" சொன்னமாதிரி மாகாண சபை எலக்சன் முடிய யாழ் பூட்டிறதோ தெரியாது என்று..

இங்கே ஒன்றுதான் எடுபடும் சரி/பிழை ...காரண காரியம் அல்ல...அதற்காகன தேடல் இல்லை...சாந்தி எழுதியிருந்த ஒரு கவிதைக்கு பதில் எழுதாதன் காரணமும் அதுதான்..அவர் வருவாரோ என்றமாதிரியான கவிதை ..நான் எழுதப்போக தேவையில்லாமல் எங்கேயோ போய் முடியும்...இங்கே யாழில் கூட நான் நினைக்கிறேன் (?)மச்சான் சொன்னமாதிரி..ஒருவரின் கருத்தை நாகரிகமாக எதிர்க்க அல்லது மறுத்து சொல்ல தெரியாத சமுகமாய் உள்ளோம்...ஏனெனில் சிந்தித்து விவாதித்த சமுதாயம் அல்ல நாங்கள்..

பலரும் பலவாறாக நொந்து போய் உள்ளோம் சந்தேகமும் , அவநம்பிக்கையும் எல்லா இடத்திலும் உள்ளது...புரட்சிகர தமிழன் குறை நினைக்க கூடாது..அவர் இந்தியா என்று சொல்லுவதால் அவர் என மற்ற ஆளாகக் கூட இருக்க கூடாது என்று கூட நினைத்திருக்கிறேன்...எல்லா இடமும் அவநம்பிக்கை ...இங்கே ஒருவர் எழுதியிருந்தார்..."இதற்கு பின்னூட்டம் இடுபவர்களை பார்த்தாலே தெரியும் இதன் தரம் என்று " உண்மையிலே அதும் என்னை கட்டிப்போட்டது தான்..நானும் எழுதி அவருக்கு அவல் கொடுக்க விருப்பமில்லை..ஆனால் எதோ இன்று போலுதுள்லாதால் எழுதுகிறேன்...

எங்களுக்கு பரந்த தேடல்கள் தேவை..கிடைத்த வெற்றி ஒவ்வொன்றிற்கும் கிடைத்த தோல்வி ஒவ்வொன்றிற்கும்..."மெய் பொருள் காண்பது அறிவு என" பல்கலைகழக(யாழ்) சின்னத்தில் பொறித்தால் மட்டும் காணாது...அதை எல்லா சமூக செயலிலும் செயற்படுத்த வேண்டும்.........

நாங்கள் வீழ்ந்து கிடப்பது அகல பாதாளத்தில் என்று உணராதவரை ...இந்த வழமையான சலசலப்புகள் தொடரத்தான் செய்யும் ...எப்பாவது மாறுவோமா என காலம் தான் சொல்ல வேண்டும்...

எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ள...

இதுவும் ஒருவகையாக சுய தம்பட்டம். அதுக்கு நல்லதொரு உதாரணம்.!

நான் ஒரு சிறந்த சிந்தனையாளன். நான் சொல்லி நீங்கள் கேட்க வேணும் எனும் ஒருவரின் பக்கம். மற்றும் படி யாழுக்கு வருபவர்களை கீழ் தரமாக விமர்ச்சிக்க முயலும் ஒரு தோல்வி உற்றவரின் மனநிலை. இவைகளை மாற்றி சமூகத்தோடை ஒருங்கிணைவது மட்டுமே உங்களின் வேதனைகளை போதனைகளையும் மக்களை செவி மடுக்க உதவும்.

உங்கட தோல்விகள் மற்றவர்களை திட்டி தீர்ப்பதுக்கு பதிலாக உங்களை புடம் போட உதவினாலே வெற்றிதான்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட தோல்விகள் மற்றவர்களை திட்டி தீர்ப்பதுக்கு பதிலாக உங்களை புடம் போட உதவினாலே வெற்றிதான்.

இந்த திரி தனது இலக்கை தொடர்ந்து கொண்டு செல்லுமா என இதை தொடங்கியவரும், தொடர்ந்து கருத்து எழுதபவர்களும்தான் (என்னையும் சேர்த்துதான் ) முடிவு செய்ய வேண்டும்..

இங்கே பொய்கை கேட்ட கேள்விகள் என்னை நோக்கியிருந்தால்..அதை எனக்கு தெரிந்த வகையில் சொல்ல முயற்சிக்கிறேன்..

"ஒருவகையாக சுய தம்பட்டம்" /"சிறந்த சிந்தனையாளன்" : இது எல்லோருக்கும் இருக்கு / எல்லாக்கருத்துக்கும் இருக்கு ..இதை சொல்லும் பொய்கைக்கும் இருக்கு ..இதற்கு சரி பிழை போடுகிற (சிவப்பு/ பச்சை) எல்லாருக்கும் உண்டு..ஒரு கருத்து சரி என்று சொல்லும் போதே எனக்கு (கூட)தெரியும் கருதிதான் சிவப்பு/ பச்சை இடுகிறோம்..ஆனால் மறுதலையாக அது மட்டும்தான் என்று சொல்ல வரவில்லை..புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்...

"எனது தோல்வி பற்றி" ... நான் முதலேயே சொல்லியிருந்தேன்..எங்களுக்கு எங்களது இனம் சார்ந்தே தோல்விகளே உண்டென...இந்த இடத்தில் நான் பிழைவிட்டிருக்கமாட்டேன் என்று எண்ணுபவனாக இருப்பேனா? என்னை பொறுத்தவரையில் அவ்வாறு சிந்திக்க மாட்டேன் என்று சொல்லுபவர்களைத்தான் "பதர்கள்" என்று ஓரிடத்தில் சொல்லியிருப்பேனோ தெரியவில்லை...மற்றது அந்த இடத்தில் பதர் என்னும் சொல் பிழையானது...அதை நீட்ட விரும்பவில்லை.....

மற்றது

இந்த திரி எங்கே போகிறது..என்னால் தனித்தனியாக கருத்து சொல்ல முடியவில்லை/ கிரகிக்க முடியவில்லை.. ஒன்று தெரிகிறது மாற்றம் வேணும் என்று..சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்று.( நான் மட்டும் சொல்லவில்லை..பலரும் சொல்லியிருக்கிறார்கள்..பொய்கைகள் /குளங்கள் வரக்கூடாது நான் மட்டும்தான் தலை வீங்கி சொல்லுகிறேன் என்று) இதிலிருந்து எங்கே செல்லப் போகிறோம்??

இந்த இடத்தில்தான் "?சிந்தனையாளர்கள்" விலத்தி செல்லும் இடம் என நான் கருதுவேன்.. தனியே சிந்தித்து கொண்டு இருந்தால்...இந்த செயற்பட்டாளர்கள் "பழையபடி பழைய குருடி கதவை திறவடி மாதிரி" ....காசு சேர்க்கிறது, கூட்டம் போடுகிறது...விதமான தேர்தல்கள், .........இங்கே ஒன்று சொல்லவேண்டும்..ஒரு கட்டத்தில் என்னைபோன்றவர்களும்/இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ...இதற்குள் இழுபடவேண்டிய நிலையில் உள்ளோம்...ஏன் சொல்லுகிறேன் என்றால் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் அழைத்தார் இன்னாருக்கு வோட் பண்ண சொல்லியும்... தங்களுக்காய் பிரச்சாரம் செய்யவும் சொன்னார் ஓம் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டேன் ...அது முடிய நேற்று எனது உறவினர் ஒருவர் தான் விரும்பும் ஒருவருக்காய் எழுதிய விளம்பரத்தில் எழுத்து பிழைகளை பார்க்க சொன்னார் இப்படி செல்லும் போது ஒரு கட்டத்தில் இந்த ஓட்டத்தில் நானும் இந்த ஓட்டத்துடன் சொல்லவும் கூடும்...இதுதான் இன்றைய (பரிதாப) நிலை.....

இதிலே இன்னும் ஒன்று சொல்லவிரும்புகிறேன்..கடைசியாக பேச்சுவார்த்தை "ஒரு நிலையில்" நின்ற போது ...யாரது மூன்றவது ஒருவர் வரவேண்டும்... என்று சொன்னவர் .ஆனால் இன்று அவரும் இந்த கூட்டங்களுடன் இணைந்துள்ளார். இதுதான் இன்றைய நிலை.. இப்படி சொல்லும்போதே நான் இன்னாருக்கு எதிர்ப்பு / இன்னாருக்கு சார்பானவர் என்று சொல்லவருபார்கள்...எனவே நாங்கள் இந்த முறைமையை விமர்சிப்பவர்கள் ..ஒரு சத்தியமான வழிகளில் முன்னோக்கி சொல்ல வேண்டும்...அகக் குறைந்தது எழுத்திலாவது பிரேரித்து எங்களுக்குள் சரி/பிழை விமர்சித்து முன்னோக்கி செல்வதே என்னால் இங்கே சொல்ல முடியும்...

இந்த திரி எங்கே போகிறது..என்னால் தனித்தனியாக கருத்து சொல்ல முடியவில்லை/ கிரகிக்க முடியவில்லை.. ஒன்று தெரிகிறது மாற்றம் வேணும் என்று..சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்று.( நான் மட்டும் சொல்லவில்லை..பலரும் சொல்லியிருக்கிறார்கள்..பொய்கைகள் /குளங்கள் வரக்கூடாது நான் மட்டும்தான் தலை வீங்கி சொல்லுகிறேன் என்று) இதிலிருந்து எங்கே செல்லப் போகிறோம்??

எல்லாரும் எண்டு (இங்கை சிலர்) சொல்லும் விடயங்களை தான் நீங்கள் மாத்தி யோசி எண்டு சொல்கிறீர்கள். அதுவே பெரும்பான்மையானவர்களின் வாதமும் அல்ல.

நான் சொன்ன சிறுவிடயத்தில் உள்ள நியாய தன்மையை கூட புரிந்து கொள்ள முடியாதவை அறிவுரை சொல்வதுக்கு வரப்படாது. மற்றவை எல்லாம் நீங்கள் சொல்வதை கேக்க வேணும். ஆனால் நாங்கள் சரி பிழை சொல்ல கூடாது எண்ட உங்களுக்கு இல்லாத வீக்கமா எங்களுக்கு. ?

நீங்கள் சொல்லும் மாத்தி யோசி விடயத்தில் எவ்வளவு அர்ப்பணிப்போடு உங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்.? இல்லை கருத்து சொல்லுறதோடை காணாமல் போய் விடுவியளோ.?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் எண்டு (இங்கை சிலர்) சொல்லும் விடயங்களை தான் நீங்கள் மாத்தி யோசி எண்டு சொல்கிறீர்கள். அதுவே பெரும்பான்மையானவர்களின் வாதமும் அல்ல.

நான் சொன்ன சிறுவிடயத்தில் உள்ள நியாய தன்மையை கூட புரிந்து கொள்ள முடியாதவை அறிவுரை சொல்வதுக்கு வரப்படாது. மற்றவை எல்லாம் நீங்கள் சொல்வதை கேக்க வேணும். ஆனால் நாங்கள் சரி பிழை சொல்ல கூடாது எண்ட உங்களுக்கு இல்லாத வீக்கமா எங்களுக்கு. ?

நீங்கள் சொல்லும் மாத்தி யோசி விடயத்தில் எவ்வளவு அர்ப்பணிப்போடு உங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்.? இல்லை கருத்து சொல்லுறதோடை காணாமல் போய் விடுவியளோ.?

இதில் எனக்கு ஒரு குறையும் இல்லை ...அது சிலராகவோ பலராகவோ இருக்கட்டும்..."யோசியுங்கள் " என்பதுதான் எனது கருத்தும் சிலது பலதாகட்டும் என்பது எனது விருப்பம்

மற்றது உங்களுக்கு நான், நீங்கள் அல்லது யாரவது ஒருவர் பிரேரிக்கும் செயலில் ஈடுபடுவேன என்ற சந்தேகம் இயல்பானது..என்னால் முடிந்ததை செய்வேன்...அது எந்தளவு என்று யாருக்கு தெரியும்....அது ஒவ்வொருவருக்கும், அவர் உள்ள நிலை, வசதி சார்ந்தது...இதுபற்றியே நாங்கள் நிறைய பேசலாம்...அந்த காலத்தில் சொல்லியபடி ....நிதி மிகுந்தவை பொற்குடம் தாரீர், குறைந்தவர் பொற்குடம் தாரீர், ஆண்மையாளர் வீரம் தாரீர், அதுவும் அற்றோர் வாய்சொல் தாரீர்...அதைப்போல எது எனக்கு இயலுமோ அதை நான் செய்வேன்..பயம் வேண்டாம் நண்பரே...நாங்கள் இங்கே இப்படி பேசுவது திரியை விலத்தி பலரும் ஓடவைக்குதோ தெரியவில்லை..மற்றவர்களையும் அழைப்போம் ....

மற்றது அந்த வீக்க பகுதி ..நான் சொல்லவருவது இதுதான் அது உங்களுக்கும் இருக்கு எனக்கும் இருக்கு..இதில் பெரிது/சிறிது என்பதற்கு இடமில்லை...தயவு செய்து இதை விட்டு விடுவோம்...

இதில் எனக்கு ஒரு குறையும் இல்லை ...அது சிலராகவோ பலராகவோ இருக்கட்டும்..."யோசியுங்கள் " என்பதுதான் எனது கருத்தும் சிலது பலதாகட்டும் என்பது எனது விருப்பம்

மற்றது உங்களுக்கு நான், நீங்கள் அல்லது யாரவது ஒருவர் பிரேரிக்கும் செயலில் ஈடுபடுவேன என்ற சந்தேகம் இயல்பானது..என்னால் முடிந்ததை செய்வேன்...அது எந்தளவு என்று யாருக்கு தெரியும்....அது ஒவ்வொருவருக்கும், அவர் உள்ள நிலை, வசதி சார்ந்தது...இதுபற்றியே நாங்கள் நிறைய பேசலாம்...அந்த காலத்தில் சொல்லியபடி ....நிதி மிகுந்தவை பொற்குடம் தாரீர், குறைந்தவர் பொற்குடம் தாரீர், ஆண்மையாளர் வீரம் தாரீர், அதுவும் அற்றோர் வாய்சொல் தாரீர்...அதைப்போல எது எனக்கு இயலுமோ அதை நான் செய்வேன்..பயம் வேண்டாம் நண்பரே...நாங்கள் இங்கே இப்படி பேசுவது திரியை விலத்தி பலரும் ஓடவைக்குதோ தெரியவில்லை..மற்றவர்களையும் அழைப்போம் ....

மற்றது அந்த வீக்க பகுதி ..நான் சொல்லவருவது இதுதான் அது உங்களுக்கும் இருக்கு எனக்கும் இருக்கு..இதில் பெரிது/சிறிது என்பதற்கு இடமில்லை...தயவு செய்து இதை விட்டு விடுவோம்...

சிந்தனையே இல்லாத மனிதன் எண்று யாரும் உலகத்தில் உண்டா.? ஒருவேளை மனநிலை பிழைத்தவர்களாக இருக்கலாம்.

மற்றும் படி சிந்தியுங்கள் எண்று நீங்கள் சொல்வது உங்களை போல அர்ப்பணிப்பு இல்லாதவைக்கு பின்னாலை பயணப்படுவதை போல இல்லை.

மனிதர்களின் அறிவாளியான ஒருவன் அர்ப்பணிப்பு மிக்கவனாக வெளிப்படும் போது அவனது ஆழுமை அவனை தலைவன் ஆக்குகிறது. அவன் பின்னால் பலர் போகின்றனர். அவனது செயற்பாடுகளுக்கும் சிந்தனைகளுக்கும் செயல் வடிவம் கொடுக்கின்றனர். அவனது அடியை ஒற்றி போக வேண்டும் எண்று பலர் விரும்புகின்றனர்.

பின்னாலை போகும் மக்கள் சிந்தனை உள்ளவர்களாக இருப்பதால் தங்களின் பாதையை தெரிவும் செய்கின்றனர். கூட்டம் போகின்றது எண்று செம்மறிகள் போல சிலரும் போக கூடும். ஆனால் அவர்களையும் வைத்து தாக்கு பிடிக்க முடிந்தவன் பெரும் தலைவன் ஆகின்றான்.

பின்னால் போகும் மக்களை எல்லாம் முழுமையாக நம்பி பின்னால் வரும் பெருச்சாளிகளையும் முழுமையாக நம்பி வைத்து இருக்கும் போது அந்த தலைவன் பின்னடைவை சந்திக்கிறான். இது அகலக்கால் வைப்பதால் வரும் பின் விளைவுகள்.

தன்னை விரிவாக்காமல் அந்த தலைவன் அப்படியே இருப்பான் எண்றால் பின்னடைவுகளும் தோல்விகளும் கூட அவனை அண்டுவதில்லை. ஆனால் செயல் திறன் மிக்க தலைவர்கள் பின்னடைவை பற்றி யோசிப்பது இல்லை.

Edited by பொய்கை

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்

இப்படிக்கு

பாண்டிய மன்னன்

கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் பின்னோட்டங்கள் வழக்கம்போல் தொடருகின்றன.

பகுதி இரண்டாக எழுதப்பட்டதும் மிகவும் தேவையான ஒரு ஆக்கம். ஜயரின் ஆக்கம் பொன்னியின் செல்வனல்ல.சம்பந்ததே இல்லாத ஒருவருக்கு இரண்டும் ஒன்றுதான்(இளையவர்களுக்கு கூட அப்படித்தான் இருக்கும்}. ஆனால் அந்த நேரம் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக என்ன நடக்கின்றதென்று, யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்ற அறிய மக்கள் காட்டிய ஆர்வம் பெரியது.இப்போது உண்மையில் அவர்களுக்குள் இருந்த ஒருவர் பெயர்களுடன் சம்பவங்களயும் எழுத எனது வயதை ஒத்தபலர் எப்ப அடுத்த அத்தியாயம் வரும் என்ற ஆவலில் தான் உள்ளார்கள்.

70,80 களில் நடந்தவற்றை இப்போது திருத்தி எழுதிமுடியாது.{மாட்டுவண்டிலில் போன மனிதன் தான் இன்று ரொக்கெட்டில் போகின்றான். 2009 இலும் எமது போராட்டம் ஏறக்குறைய அதே நிலையில் இருந்ததற்கு பெரியதொரு கட்டுரையே எழுதலாம்.

  • தொடங்கியவர்

யாழ்களத்தில் எழுதுபவர்கள் மற்றும் வாசகர்களில் பலர் போராட்டத்தின் ஆறாத வடுக்களை இன்னமும் சுமந்தபடி உள்ளவர்கள். ஒத்த கருத்துடைய ஈழ ஆதரவாழர்களோடு பேசுவதும் கருத்துப் பகிர்வதும் ஓரளவிற்கேனும் தமது வடுக்களை ஆசுவாசப்படுத்தும் கழிம்பாக உணர்ந்து தான் பலர் யாழிற்கு வருகிறார்கள். அந்த வகையில் வழமையோடு ஒத்திசையாத கருத்துக்கள் சில சமயம் யாழ் களத்தில் வன்முறையோடு தான் எதிர்கொள்ளப்படும். இது கருத்துக் கூறுபவர்களிற்கு சங்கடத்தை ஏற்படுத்தத் தான் செய்யும். ஆனால்;, இத்தகைய கருத்துப்பகிர்வுகள் யாழ் களத்தில் தான் நடைபெறவேண்டும் என்பதற்கு அந்த வன்முறையே போதுமான ஆதாரம். எமது சமூகத்தின் வடு ஆறுவதற்கு இது அவசியம்.

வகுப்பில் முதல் மாணவனாக அல்லது மாணவியாக இருந்த பலர் போராளியாகி இறந்து போயுள்ளனர். அவ்வாறு இறந்தவர்களைக் காட்டிலும் கொடுமை, அத்தகைய முதல் வகுப்பு மாணவர்கள் போராட்டத்தில் இணைந்து போராடி, பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் இடையில் போராட்டத்தை விட்டுப் புலம்பெயர வேண்டி ஏற்பட்டமை. அதைப்போன்றதே இன்று உயிரோடிருக்கும் முன்னைநாள் போராளிகளிற் பலரது நிலையும். முள்ளிவாய்க்கால் வரை, போராட்டத்தை விட்டுவிலகியவர்களிற்குக் குற்ற உணர்வு தான் இருந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்காலின் பின்னர் இனம்பிரிக்கமுடியா வண்ணம் உணர்வுகள் கோர்வையாகிச் சிக்கலாகிப்போயுள்ளன. இந்தநிலையில், இத்தலைப்பில் தமிழீழம் பொதுமையா இல்லையா என்று புதிதாக அறியவேண்டும் என்று சொல்லப்படுவதைப் பார்க்கையில், ஓங்கி அறையத் தான் தோன்றும். இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு வரும் கோபங்கள் முற்றாகப் புரிகின்றன.

எண்பதுகளின் முன் அல்லது நடுப்பகுதியி என்று நினைக்கின்றேன். யாழ் சம்பத்தரிசியார் பாடசாலையில் ஒரு மாபெரும் கல்விக் கண்காட்சி நடந்தது. தனியாக பேருந்தில் செல்லமுடியாத சிறுவனாக எனது அன்னையின் கையைப் பற்றியபடி இந்நிகழ்வி;ற்கு நானும் சென்றிருந்தேன். அங்கு ஒரு எலும்புக்கூடு சைக்கிள் ஓட்டிய கண்காட்சி சனத்திரள் நிறைந்து காணப்பட்டது. சிரமப்பட்டு சனத்தை விலக்கி எனது தாயாருடன் எலும்புக்கூட்டைப் பாhக்கக் கூடிய அளவு அருகில் சென்று பார்த்துக் கொண்டு நின்றேன். ஒரு மெல்லிய உடலுடைய இனிய சிரிப்புடனான ஒரு இளைஞர் எலும்புக்கூடு பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் சலசலப்பு. கடல்பிரிந்த கதைபோல, கூட்டம் விலகி யாரிற்கோ வழி விட்டது. நான்கு பேர் சிரமமின்றி முன்வந்தனர். இரு இளைஞர் இரு யுவதிகள். நாகரிக உடை அணிந்திருந்தனர். எலும்புக்கூடு பற்றி விளக்கம் தந்து கொண்டு நின்ற இளைஞனின் பதில்களைச் சற்று நேரம் செவிமடுத்து நின்று விட்டு, தாம் கேள்வி கேட்கத் தொடங்கினர். கூட்டம் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டு தங்களிற்குள் இரகசிய தொனியில் கூறியது எனது காதிலும் பட்டது: “மருத்துவ பீட மாணவர்கள்”. சற்று நேரம் கேள்விக்கணைகளைத் தாக்குப் பிடித்த மெல்லிய இளைஞன், சற்று நேரத்தின் பின் தான் நின்று கொண்டிருந்த மேடையில் இருந்து தனது முகத்தை மருத்துவ மாணவர்க்கு அருகில் தாழ்த்திக் கூறியது, இரு தசாப்த்தங்களின் பின்னர் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது: “அண்ணை, போராட்டத்திற்குப் போகமுன்னை நானும் நல்லாத் தான் அண்ணை படிச்சுக் கொண்டிருந்தனான். படிச்சிருந்தால் நானும் உங்களைப் போல கட்டாயம் யூனிவேசிற்றிக்குப் போயிருப்பன் அண்ண. ஆனால்…வெளிக்கிட்டிட்டன். அதால உங்கட கேள்வியள் அளவுக்கு நானின்னும் படிக்கேல்லையண்ணை”.

எப்போ எங்கே என்றில்லாமல் அந்த இளைஞனும் அவன்போன்ற நானறிந்த பலரது நினைவுகளும் அப்பப்போ வரும். அதுவும், முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து அடிக்கடி வருகிறது. அப்போதெல்லாம் ஒரு கோணத்தில் மட்டும் போராட்டம் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. மேற்படி நிலை ஒரு சிலரிற்கு மட்டும் இனிமேல் வரக்கூடாது என்று மனம் ஆர்ப்பரிக்கின்றது. காஞ்சமாடு கம்பில விழுந்ததைப் போல மனம் விடைதேடி தெரிஞ்சவழியிலெல்லாம் தேடத் தொடங்கும். தெரியாத வழிகள் பற்றி அறியத் துடிக்கும். அப்பிடியான சில நேரங்களில் தான் தோன்றும் சில எண்ணங்களை யாழிலும் பதிவிடுகின்றேன். ஆனால், புரிந்து கொள்ள முடிகிறது, யாழில் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முன்னை நாள் போராளிக்கு மேற்கின் சிந்தனையாளர்களைப் புகழ்வதாகத் தொனிப்படும் எழுத்துக்கள், அறிந்தோ அறியாமலோ உள் நுழையும் ஆங்கில வார்த்தைகள், கல்வி மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த உரையாடல்கள், தாம் இழந்து போன சந்தர்ப்பங்களை நினைவு படுத்தும். அதுவும் இன்று இலக்கின்றி நிற்கையில், இவ்வாறான தலைப்புக்கள் அருவருப்பும் ஆத்திரமும் சேர்ந்து வரப்பண்ணும்.

ஆனால் துரதிஸ்ரவசமாக, எதிர்காலத்திலும் எம்மவரில் சொற்பம் பேர் மட்டும் மற்றையவர்க்காகச் சந்தர்ப்பங்களைத் தொலைக்காது இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் இவர்களிற்கும் நிச்சயம் உடன்பாடிருக்கும். அந்தவகையில் சில கருத்துக்களை சில சமயங்களில் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அளவிற்கு இல்லையெனினும் ஏதோ ஒரு சொட்டு இதயசுத்தியான அக்கறையில் மட்டும் தான் எழுதுகிறேன்.

ஐயரின் பதிவுகள் பற்றிய எனது விமரிசனம் இந்தவகையில் தான் அமைகிறது. நடந்த விடயங்களை, கிருபன் கூறியதைப் போன்று சம்பவக் கோர்வைகளாக, அர்யுன் கூறியதைப் போன்று எப்போ அடுத்த அத்தியாயம் வரும் என்ற பொழுதுபோக்கம்சத்தோடு எழுதுவதால் தான் அது பொன்னியின் செல்வனைப் போலாகிறது. சம்பவக் கோர்வைகளிற்கு இடமில்லை என்று நான் கூறவரவில்லை, இத்தலைப்பு வக்காலத்துவாங்குகின்ற சிந்தனை மாற்றத்திற்கான தளம் அங்கு காணப்படவில்லை என்று மட்டும் தான் கூறுகின்றேன். பொன்னியின் செல்வனையும் இரண்டு தடவை வாசித்துத் தான் இரசித்தேன். இரசனையோடு இங்கு எனக்கு முரண்பாடு இல்லை.

“சமூகத்தோடு ஒருங்கிணைவது மட்டுமே உங்களின் வேதனைகளையும் போதனைகளையும் மக்கள் செவிமடுக்க உதவும்” என்ற கருத்துப் பற்றி நான் கூறக் கூடியது, எனது பார்வையில் சில நூறு பேர் வாசிக்க சில பத்துப் பேர் கருத்துப் பகிர்வதும் மக்களிற்குள் நிற்பது தான். நாலு பேர் தங்களிற்குள் கருத்துப் பகிர்வதும் மக்களின் கருத்துப் பகிர்வுதான். மக்களிற்குள் நின்றபடி மக்கள் எங்கே என்று தேடத்தேவை இல்லை என்றே படுகிறது. இது பற்றித் தான் முதலிலும் கூறியிருந்தேன், செயலை குறிப்பிட்ட வடிவங்களில் மட்டும் பார்க்கும் நிலை மாறவேண்டும். மக்களோடு ஒருங்கிணைவது என்பது எல்லோரும் தேர்தல் நடத்த மட்டுமே செய்யவேண்டும் என்பது போல் இருக்கத்தேவையில்லை. மக்கள் என்ற பதத்தை எண்ணிக்கை கொண்டு நிருணயிக்கத் தேவை இல்லை. மக்களோடு கதைப்பதற்காகத் தான் யாழ் களத்தில் பதிவுகள் தேவைப்படுகின்றன. பொழுது போக்குவதற்கு எத்தனையோ இலகு வழிகள் உள்ளன, யாழ்களத்தில் எழுதத் தேவையில்லை.

இறுதியாக, அடிப்படை மனிதத் தன்மைகள் மற்றும் வெளிப்படையான விடயங்களை திருப்பத்திருப்பக் கூறுவதால் எவரிற்கும் எந்தப் பலனுமில்லை. அங்கீகாரம் தேடாத மனிதரே இல்லை--இது பற்றி முதலில் நான்கு பந்தி அதிகம் எழுதியிருந்தேன் ஆனால் நீட்சி கருதி நீக்கிவிட்டேன். எனவே அவர் அவரை உசத்துறார் இவரைத் தாழ்த்துறார் என்ற வெளிப்படைகளைத் தாண்டி, என்ன விடயங்களை உயர்த்துவதற்கான உத்தியாய் ஒருத்தர் பாவிக்கிறார் என்ன விடயங்களை தாழ்த்தும் கருவியாக்கிறார் என்று பார்;ப்கத் தொடங்கினோம் என்றால், ஏதோ ஒரு சில கருத்துக்களாவது தங்கி நிற்கும்.

வல்க்கேனோவின் அங்கீகாரத் தேடல் பற்றிய கருத்தோடு எனக்கும் பூரண உடன்பாடு. விமர்சனம் என்பதே ஒருவர் தனது கருத்தில் கொண்டிருக்கும் உயர் தன் மதிப்பின் அடிப்படையில் தான் வெளிப்படுகின்றது என்ற உங்களி;ன் பார்வையோடு எனக்குப் பூரண உடன்பாடு

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by Volcano

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் நடந்த கண்காட்சி பற்றிக் குறிப்பிட்ட பந்தியில் கூறவந்த கருத்து வெளிப்படையாக வரவில்லை என்று படுகிறது. ஆதனால் இந்தப் பின்னூட்டம். ஒரு நன்றாய்ப் படித்துக்கொண்டிருந்த மாணவனிற்கு, தமிழீழம் என்ற அபிலாசை பற்றிக் கூறி. அவ்வபிலாசை அனைவரதும் உயர்வான பொதுவான ஆசை என்றும் அது பிரச்சினைகளிற்குத் தீர்வைக் காணும் என்றும் அவனை நம்பப்பண்ணி, செயலை ஊக்குவித்து, அம்மாணவனைச் சமூகம் போராளியாக்கியது. ஆனால், கண்காட்சியில், சமூகம் தனது முகமூடியைத் தன்னையும் அறியாது சிலநேரம் தளவரவிட்டபோது, சமூகத்தின் உண்மையான அபிலாசை அங்கு வெளிப்பட்டது. சுமூகம் பொருளாதார உயர்வையும் கல்வி அங்காரத்தையும் குறியிட்டு நின்ற மருத்துவ பீட மாணவர்களைத் தான் இரசித்துக் கொண்டிருந்தது. தான் தனது உயர் அபிலாசை என்று வெளியில் கூறுகின்ற தமிழீழ முயற்சியைக் குறியிட்டு நின்ற போராளி அங்கு மருத்துவபீட மாணவர்க்கு மேலாய் அன்று இரசிக்கப்படவில்லை. இந்த ஒரு சிறு வெளிப்பாடு கூட மக்களின் உண்மையான அபிலாசை பற்றிச் சிந்திக்கத் தான் வைக்கிறது.

ஏந்தவித ஏற்றத் தாழ்வுகளும் அற்ற அனைவரும் சமத்துவமான சமூகம் என்பது சாத்தியமற்றது. சமூகத்திற்குள் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டே இருக்கும். அங்கீகாரம் நோக்கிய தேடலில் ஏற்ற இறக்கங்கள் எந்த சமூகத்திற்குள்ளும் விரைவில் நுழைக்கப்படும். இதை கமியூனிசம் புரிந்து கொண்டது. யப்பானில் ஐம்பதுகளில் ஆன்மீக அல்லது வாழ்வியல் ரீதியான சமத்துவம் தோன்றியதாகத் தென்பட்டபோது அங்கு மலரலங்காரம் முதலிய சிறிய விடயங்களில் ஏற்றத்தாழ்வுகள் நுழைக்கப்பட்டன. எனவே சர்வதேச சமத்துவம் என்பது சாத்தியமில்லை. எப்போதும் ஒரு சுதந்திர சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அந்தவகையில் இளையோரை உசுப்பிவிடுதல் போன்றன நடக்கத் தான் செய்யும். இருப்பினும், கருத்தாடல் தொடர்ந்து நடக்கையில் சிந்தனை மாற்றம் நிகழ்ந்து, குறைந்தது வெற்றி பெற்ற சமூகங்களைப் போன்றதொரு நிலைக்கேனும் எமது சமூகம் வளரக்கூடியது சாத்தியம். இன்று எங்களால் வெற்றி பெற்ற சமூகங்களில் ஊரைக்காட்டிலும் கூடிய வாய்ப்புக்களோடும் சுதந்திரத்தோடும் வாழ முடிகிறது என்று நம்புபவர்கள், மற்றும் இச்சமூகங்களில் சமூகச் சமநிலை ஊரைக்காட்டிலும் அதிகம் உள்ளது என்று கருதுபவர்கள், அத்தோடு தனது சமூகம் என்று ஈழத்தமிழ் சமூகத்தை நினைப்பவர்கள், இந்தநிலைக்கேனும் எமது சமூகத்தை இட்டுவர முயலத் தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏந்தவித ஏற்றத் தாழ்வுகளும் அற்ற அனைவரும் சமத்துவமான சமூகம் என்பது சாத்தியமற்றது. சமூகத்திற்குள் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டே இருக்கும்.

"ஏந்தவித ஏற்றத் தாழ்வுகளும் அற்ற அனைவரும் சமத்துவமான சமூகம் என்பது சாத்தியமற்றது"

இதற்கு என்ன மாதிரி ஆமா, ஆமா என்று சொல்லுவது என்று தெரியவில்லை...இதுதான் நியம். எங்கேயும் ஒரு தலைவனும் கொஞ்சம் சீடர்களும் என்பது தவிக்கமுடியாத அமைப்பாக, மனித குலத்தில் அல்லது விலங்கு இராச்சியத்திலே ஏற்ருக்கொள்ளப்படுள்ளது. ஏன் எங்கள் உடம்பிலே, தனி ஒரு விலங்கிலே கூட அதுதான் நிலை. சின்ன விலங்கியல் உதாரணம்..உடம்பில் 3 இடங்களுக்கு மட்டும்தான் ஆட்டோ ரேகுலதியன் (Auto regulation ) என்கின்ற விசேட குருதி வழங்கல் முறை உள்ளது, முளை, இதயம், சிறுநீரகம். ஒரு சந்தர்பத்தில் மற்ற இடங்களுக்கு குருதி செலுத்த இதயத்தால் இயலாத நிலை அல்லது உடம்பில் குருதி இல்லாத நிலை, போன்ற நிலைகள் ஏற்பட்டால் அவை மூன்றிற்கும் பாதிப்பு வராமல் தாமே சரி பார்த்து கொள்ளுவினம்.மாறி அவைகளுக்கு இரத்தம் இருக்கும் மட்டும் தான் அந்த விலங்கிற்கே உயிர் உள்ளாதாக கருதப்படும்.(இது மனிதனுக்கு..வேறு விளங்க்குலளுக்கு மாறுபடலாம்..எனக்கு தெரியாது...)

எனவே ஏற்ற தாழ்வு என்பது எங்கும் இருக்கும். அது எந்த வழியில் என்பதுதான் இங்கே கேள்வி? இந்த ஏற்றத்தாழ்வு என்பது எவ்வாறு பேணப்படுகிறது என்பதில் தான் அதன் உறுதிப்பாடும் இருக்கும்..நல்ல உதாரணம், சுதந்திரத்துக்கு (இலங்கையில்)முன்பு பெரிய விடயம் படித்தவர்/உயர் சாதி...படிக்காதவர்/தாழ்ந்த சாதி...அது தமிழ்/சிங்கள வேறுபாட்டை விட வலிமையானது..படித்த சிங்களவர் கூட படித்த தமிழருடன் கலக்க விருப்பம் ஆனால் படிக்காத சிங்களவருடன் அல்ல. இதே போல்.படித்த தமிழரும். நல்ல உதாரணம் இந்திய தமிழர்களுக்கு பிரஜா உரிமை மறுத்த போது அங்கே பாராளுமன்றத்தில் இருந்த தமிழர் எவரும் குரல் கொடுக்க வில்லை..ஏனெனில் அவர்களும் இவர்களும் வேறு வேறு...அங்கே தமிழ் என்பதர்ற்கு மேல் வேறு காரணம் இருந்தது...கண்டி ராசதனணியை தமிழன் ஒருவன் பெற்றதும் இப்படியாகத்தான் இருக்கும்..ஆனால் காலப் போக்கில் ..அந்த ஏற்றத்தாழ்வு போன முடியாமல் போனபோது..தமிழர்கள் (தமிழ் தலைவர்கள்)தமிழ், தமிழ் எனவும்..சிங்களவர்கள் சிங்களம்,சிங்களம் எனவும் பிரிந்து சண்டை போட்டார்கள்..

எங்களால் எல்லா ஏறத்தாழ்வுகளையும் களைய முடியாது என்ற உண்மை விளங்கும் மட்டும் ...நாங்கள் இந்த காலச் சுழற்ற்சிக்குள் சுழல்வது இயலாத காரியம்...

முன்பு பொய்கைக்கு சொன்ன மாதிரி. எல்லோராலும் எல்லாம் முடியாது...இங்கே (யாழில்) இப்பவே ஆஸ்திரேலியா 99 % fun அடிக்க தொடங்கி விட்டார்கள்..உண்மை ..எனக்கு ஆஸ்திரேலியா பெரிதாக தெரியாது, ஆனால் எனது நண்பன் ஒருவன் சொன்னான்...தனக்கு கிட்ட 2 பேர்தான் இருப்பதாகவும், இன்னும் கொஞ்சம் தூர போனால் இன்னும் 4 பேரை சந்திக்க முடயுமென (400 / 500 km fly பண்ணினால்) அவர்களினது high way சிஸ்டம் எங்களை (கனடா) போன்றதல்ல எனவும் அறிந்தேன்..ஆனால் கனடாவில் நாங்கள் பெரும்பாலானோர் இருப்பது கிட்ட கிட்ட...இங்கே எங்களுக்கு "401 highway " என்பது சிம்பிள் ஆனால் அது உலகத்தில் உள்ள ஒரு பிசியான ஹை வே என்று நாங்கள் எந்தனை பேர் உணர்திருக்கிறோம். இன்னுமொன்று கனடாவிலேயே நாங்கள் வெட்டி விழுத்தவில்லை..ஆனால் அவர்கள் குறைவாக வோட் பண்ணினதிர்ற்கு வெறும் காரணங்கள் இருக்கலாம்..

இந்த ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு பேனப்போகிறோம் என்பதில் தான் எங்களுது அடுத்த பயணம் தொடங்கும்..இங்கே ஏற்றத்தாழ்வு என்பது யார் எமது அடுத்த தலைவர்கள் யார்,யார் தொண்டர்கள்...இங்கே நான் அடுத்த தலைவர் என்றவுடனேயே கொடி பிடிக்க வருபவர்களுக்காய் சொல்லக்கூடியது ஒன்றுதான்.இந்த போராட்டம் இன்னும் ஒரு கிடப்பில் வீழ்ந்து கிடக்கிறது என்று உணராதவரை...யாரும் யாருக்கும் ஏதும் சொல்ல முடியாது.அதேநேரத்தில் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதற்காக நானும் இதே மாதிரி சிந்திக்கின்ற இன்னுமொருவனும்(இந்த கடுரையாளர் அல்ல :lol:) போசாமல் இருக்க முடியாது...

சின்ன உதாரணம், மன்னிப்பு சபை சொல்லுகிறது "அவசர கால சட்டம் தேவையற்றது நீக்குங்கள்" என்று..ஆனால் தமிழ் மக்களில் விடிவிற்காக தேர்தல் நடத்துகிறோம் என்பவர்கள் சொல்லுகிறார்கள் " நாங்கள் சொல்லவில்லை ஆயுத போராட்டம் இனிமேல் இல்லை என" இங்கே ஆயுத போராட்டத்தை நிறுத்தி/ நிறுத்திவிட்டோம் என்று சொல்லியாவது மற்றவர்களுடன் சேர்ந்து அங்குள்ள நிலைமைகளை முன்னேர்ருவதர்ற்கு நாங்கள் தயாராக இல்லை..ஏனெனில் அப்படி சொன்னவரையே பிழையானவர் என்று சொல்ல இங்கு பலர் உள்ளார்கள். முதலில் எமக்கு தேவை இங்குள்ள குழுநிலை போட்டிகளை நிறுத்தி, அல்லது அவை எல்லாவற்றையும் புறந்தள்ளி முன்னே சொல்லக்கூடிய ஒரு பொறிமுறை. இன்னுமொன்று யாரும் கேட்கலாம், எவ்வாறு இவ்வாறான குழுநிலை போட்டிகளை உருவாவதை தவிப்பது என்று.சின்ன விடை..அவற்றை தவிர்க்க முடியாது...அது இந்த வடிவத்தில் இல்லாவிடில் என்னுமொரு வடிவத்தில் வரும்... உதாரணம்.அமெரிக்க-பிரித்தானிய போரின் போதும் எல்லா அமெரிக்கர்களும் கூட ஒருபக்த்தில் நிற்கவில்லை..எட்டப்பனும், காக்கைவன்னியனும், ................................. எங்களுக்கு மட்டும்தான் என்று சொல்லி/ நினைத்து நாங்கள் அவர்களுடன் எங்கள் வீரத்தை காட்டுவதால் ஏதும் நிகழ போவதில்லை.

யாழில் இது எந்தளவு தூரம் முன்செல்லுமோ தெரியாது...ஆனால் (நீண்டு) நிலைத்திருக்க கூடிய தலைமைத்துவம் தாயகத்திலும், புலத்திலும் தேவை..சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிற..கூட்டங்கள், இங்கே ஒன்று அங்கே ஒன்று சொல்லுகிற நிலை மாறவேண்டும்...தனியே மக்களை கவருவதுதான் என்ற நிலை மாறி உண்மை சொல்ல வரவேண்டும்...எனக்கு தெரிய .....83 கலவரத்துக்கு பிறகு எவ்வாறு ஆள், ஆள் இணைத்து செயற்பட்டோமோ..அந்த நிலை வேண்டும்...இருப்பை கட்டிக்கொள்ளுவதர்ற்கான செயற்பாடுகளை மட்டும் செய்துகொண்டு இருக்க முடியாது....

இன்னுமொன்று ..அடிக்கடி வருவது..இந்தியாவினுடனான உறவு பற்றி...நாங்கள் விரும்பியோ , விரும்பாமலோ அவர்களுக்கு பக்கத்தில் வந்துவிட்டோம் அதனுடனான உறவு பற்றி தெளிவில்லாத நிலை மாற வேண்டும்...நாடுகளுகிடையிலான உறவுகள் நீண்ட காலத்தில் மாறும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இதே போக்கில் இன்னும் 10 / 20 வருடம் இருந்தால் ஈழத்தமிழர் என்றால் ஒருவரும் இல்லை என்ற நிலைதான் வரும்...

எங்களது பலம் பற்றி எங்களுக்கு தெரிய வேண்டும்...இப்ப எங்களிடம் உள்ளது பல நாடுகளிலும் உள்ள வாக்கு பலம் தான்..இதை இப்போதே ஒழுங்கமைக்க வேண்டும்...கனடாவில் 1 அல்லது 2 MP அனுப்புவதர்ற்கு வேலை செய்ய வேண்டும்...அங்கே MP அனுப்புவது என்பது அடுத்த நாள் போய் கனடா பாராளுமன்றத்தில் தமிழீழ பிரகனடம் செய்வதரற்கு அல்ல என்ற உண்மையை பிறக்க விருக்கிற குழந்தைக்கும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும்...

எங்கே நான் இருக்கிற எல்லா கட்டமைப்புகளையும் குறை சொல்லுவதாக யாரும் (இதை வாசிப்பவர்கள்) கருத தேவையில்லை.. எங்களுக்கு தேவையான மற்றம் மிகப்பெரியது...பொய் சொல்லி சொல்லியே உண்மை என்பதே தெரியாத பிறவிகளாக வந்துள்ளோம்...யதார்தத்திர்ற்கும் கற்பனைக்கும் மைல் தொலைவில் உள்ளவர்களாய் உள்ளோம்...

யாரையும் தனிப்பட்ட ரீதியிலோ/குழு நிலையிலோ குறைத்து சொல்ல எழுதியல்ல ....மனதில் பட்டத்தை எழுதினேன்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது பலம் பற்றி எங்களுக்கு தெரிய வேண்டும்...இப்ப எங்களிடம் உள்ளது பல நாடுகளிலும் உள்ள வாக்கு பலம் தான்..இதை இப்போதே ஒழுங்கமைக்க வேண்டும்...கனடாவில் 1 அல்லது 2 MP அனுப்புவதர்ற்கு வேலை செய்ய வேண்டும்...அங்கே MP அனுப்புவது என்பது அடுத்த நாள் போய் கனடா பாராளுமன்றத்தில் தமிழீழ பிரகனடம் செய்வதரற்கு அல்ல என்ற உண்மையை பிறக்க விருக்கிற குழந்தைக்கும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும்...

சீக்கியரில் இருந்து ஆர்மேனியர் வரை இதை தான் செய்தார்கள். உலகில் தமிழர்களின் அரசியல் பலம் என்பது மிக பெரிய சக்தி.சிங்களவனால் நினைத்தாலும் பெற முடியாது.நாம் இவற்றை பெற்றேயாகவேண்டும். அரசியல் முடிவுகள் எடுக்கும் இடத்தில் எமது குரல் இருக்க வேண்டும்.இது பத்தாயிரம் பேர் குளிரில் நடாத்தும் ஊர்வலத்தை விட பலமானது.

தமிழ் வானொலிகள், தொலை காட்சிகள், பத்திரிக்கைகள் குறிப்பாக தமிழில் நிகழ்ச்சிகளை நடாத்தி எமது இளையோரை வசப்படுத்தவில்லை என்பது எனது குறை.50% ற்கு மேற்பட்டோர் தமிழ் மொழி அறவே பேசாவெ மாட்டார்கள். இவர்கள் தனிமை படுத்த படுகிறார்கள்.அவர்கள் தமிழ் பேசாத குறையை இரண்டாவது காரணமாக எடுத்து கொண்டு முதலாவதாக ஒரு ஆங்கில நிகழ்ச்சி மூலம் அவர்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

ஒற்றுமையே பலம். எனது குறை குறிப்பாக கனடா, லண்டன் வாழ் தமிழ் இளையோருக்கு பொருந்தும்.அத்தோடு தமிழ் மக்கள் கூடுதலாக வாழும் பகுதிகள் என்பதும் கூட.

பல இளைஞர்கள் ஏனோ தானொ என திரிகிறார்கள். இவர்கள் தான் எமது எதிர்கால சந்ததி:ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ வரக்கூடியவர்கள் எமது தாயகம் பற்றி எந்த அறிவும் அற்று தமது சுயத்தை இழக்கிறார்கள் என்பது துரதிஸ்டமானது.

ஏற்ற தாழ்வுகள் பரஸ்பரம் எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றது என்பதை எமது சமூகத்துடன் பெருத்துவதில் சற்று சிந்திக்கவேண்டியுள்ளது. எமது தோல்விகளின் சூட்சுமமும் எமது இருப்பு அளிந்துகொண்டிருப்பதின் சூட்சுமமும் இந்த ஏற்றதாழ்வுடனேயே பிணைந்துள்ளது. இந்த ஏற்றதாழ்வுகள் குறித்த ஒரு பரந்துபட்ட சிந்தனையும் பன்முகச் செயற்பாடும் அவசியமாகின்றது. அதன்பிறகே அடுத்தஒரு கட்டத்துள் எம்மால் நகர முடியும்.

எமது சமூகம் தமக்குரிய அங்கீகாரத்தையும் அடயாளத்தையும் அதிகாரத்தையும் தனக்குள்ளாகவே தேடப் பழக்கப்பட்டுவிட்டது. சுமூகத்துக்கு புறநிலையில் அதற்கான அடயாளங்கள் குறித்து அது சிந்திக்கும் திறனை இழந்து நிற்கின்றது. பல நாடுகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் போட்டிகள் வேற்றுமைகள் பல இனக்குழுமத்துக்குள் இருக்கும் வேற்றுமைகளுக்கு நிகரான செயற்பாடும் முரண்பாடும் எமக்குள்ளாக நாம் கொண்டிருக்கின்றோம். அதற்கான பரிபூரணமான மனோநிலையை நாம் கொண்டிருக்கின்றோம். இதன் அடிப்படையில் நாம் எம்மை எப்போதும் சிதைத்து அழித்து அடயாளமற்றவர்களக மாறும் விழிம்பு நிலையில் நிற்கின்றோம். இவ்வாறான அமைப்பால் உலகின் பல்வேறு நாடுகளின் புரட்சி குறித்த அனுபவங்கள் படிப்பினைகள் சித்தாந்தங்கள் அனைத்தும் எமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தத் திரணியற்றவைகளாக உள்ளன.

கனடாவில் பேராசிரியராக இருக்கும் ஒருவரின் குருவான பேராசிரியர் இலங்கையில் இருக்கின்றார். சமூகவியல் பண்பாடு இலக்கியம் போன்ற பல்வேறு துறைசார் அனுபமும் பல்வேறு இனக்குழுமங்களி்ன் வரலாறு சார் அனுபவமும் இருக்கும் இவர்களில் சந்திப்பு நிகழும் போது இலங்கையில் இருப்பவர் வீட்டில் கனடாவில் இருந்து சென்றவர் தேனீர் அருந்த மாட்டார். இந்த நிகழ்வு இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவுசார் விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இந்தச் சம்பவத்தின் அனுபவம் எமது சமூகம் சார்ந்து பல புரிதல்களை கற்றுத்தருகின்றது.

அனைவரும் அறிவில் சிறந்தவர்கள் ஆகிவிடின் ஏற்றதாழ்வில் பாரிய மாற்றங்கள் வரும் என்பது எமது சமூகத்தில் எதிர்மறையான ஒன்றாக இருக்கின்றது. புத்திஜீவிதம் என்பதே சமூகத்துள் அதிகாரத்தை தேடவும் அடயாளத்தை தேடவுமான ஒன்றாக அமைந்து விடுகின்றது. அதுவொரு பெரும் தவறு என்பதை கடக்க முடியாது காரணம் தமது புத்திஜீவிதத்தால் தனது சமூகத்தை வழிநடத்துவதற்குப்பதிலாக சீரளித்து சிதைத்து அதிகாரம் தக்கவைக்கப்படுகின்றது. உலகின் பல பாகங்களிலும் அனுபங்களை தேடி அவற்றை கொண்டுவந்து எமது சமூகத்தின் நிலுவையில் உள்ள பிரச்சனைகள் முரண்பாடுகளை தக்கவைப்பதே நடந்து வருகின்றது.

இரண்டுபேர் மார்க்சியம் படித்தனர் இரண்டுபேர் வேறு இசங்கள் படித்தனர் இலக்கியம் படித்தனர் வைத்தியர் பொறியிலாளர் என படித்தனர் இது பிழைப்பிற்கான படிப்பு மட்டுமல்ல அடயாளம் அங்கீகரத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சிக்கான படிப்பாகின்றது. தேடலாகின்றது. இவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதுவே நீண்டகாலம் நடந்து வருகின்றது.

அடிப்படையில் சாதியமும் மத ஈடுபாடும் பிரதேசவாதமும் அடயாத்தையும் அதிகாரத்தையும் சமூகத்தில் தக்கவைப்பதற்கான காரணிகளாக இருந்ததன் என்னுமொரு வடிவமாகவும் போட்டிநிலையாகவும் அறிதல் கற்றல் புத்திஜீவியாகுதல் என்பன சேர்ந்த கொள்கின்றது. இந்தப்போட்டிநிலையின் பிரதானமானது ஒருவனை தாழ்த்தியே மற்றவன் உயரமுடிகின்றது.

ஏற்றுக்கொள்ளாமையும் வேற்றுமையும் அதிகளவு உச்சமாக இருக்கின்ற ஒரு நிலையல் அதிகாரங்கள் கிடைக்கின்ற பட்சத்தில் யாரை வேண்டுமானாலும் கொல்லமுடீயும் கடத்த முடியும் வேறு இனங்களுடன் சேர்ந்து சித்திரவதை செய்ய முடியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியும். சிறு சிறு குழுக்களாக பிரிதல் ஒருவர் முயற்சியை மற்றவர் நிராகரித்தல் என எதுவேண்டுமானலும் நடக்கின்றது. எந்த ஒரு கணமும் இவ்வாறான காரியத்தை செய்யும் போது நாம் ஒரு இனம் என்ற உணர்தலை ஒரு நிமிடம் பெறமுடியாதவர்களாக ஏற்றதாழ்வுகள் எம்மை ஆக்கிரமித்துள்ளது. அது காலத்துக்கு காலம் வேறு வடிவம் பெறுகின்ற போதும் அடிப்படையில் மாற்றம் இன்றி தொடர்கின்றது. ஏற்றதாழ்வுகளுன் நாம் இனமாக வடிவம் பெற முயன்று தோற்றுவருகின்றோம். ஏற்றதாழ்வுகளை கணிசமானளவேனும் குறைப்பது குறித்த சிந்தனை அவசியமாகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன் உங்கள் கருத்துக்களுடன் நானும் ஒத்து போகிறேன்..

அப்படி சொன்னாலும் கூட எனக்கு எப்படி மற்ற சமூகங்கள் தங்களது ஏற்றத்தாழ்வுகளை இனம் என்னும் வட்டத்துக்குள் வைத்திருந்தார்கள் என்று குறிப்பாக தெரியவில்லை..மறுதலையாக, நீங்கள் சொல்லும் எங்களுக்கும் மற்றைய சமூகங்களுக்கும் இடையில் உள்ள "தமக்கிடையே ஆன ஏறத்தாழ்வுகளை" பேணிய விதம் வேறு வேறானது என்பது விளங்கவில்லை....எனக்கு சில சிங்கள நண்பர்கள் இருந்தவர்கள்..அவர்களிலும் நீங்கள் குறிப்பிடும் சாதி, மதம், பிரதேச வேறுபாடுகள் உண்டு..படித்த, படிக்காத வேறுபாடு உண்டு. எனக்கு தெரிய பெரியளவில் பிரதேச வேறுபாடு உண்டு. எங்களைப்போல "இந்த ஆபீஸ் முழுக்க "புளியடி""குளத்தடி" ஆட்கள்தான் என வெளிப்படையாக சொல்லுபவர்கள் உண்டு...அவ்வாறு உள்ள போது, ஏன் இவ்வாறான வேறுபாடுகள் எங்களை கூடுதலாக (எங்கே) பாதிக்கிறது என்று சொல்ல முடிமா? பிரதானமாக புலம் பெயர்ந்த தேசத்தில் -எனக்கு இங்கே தாயகத்தையும் சேர்ந்து வைத்து கதைப்பது கடினம் போல் தெரிகிறது ...முதலில் நாங்கள் இங்கே என்ன செய்யலாம் என்று பார்ப்போம்...

இத்தகைய பதிப்புக்கள்/வேறுபாடுகள் இனம் என்ற ரீரிதில் இயங்க இங்கே புலத்தில் என்ன என்ன வகையில் பாதிக்கிறது என்றும், அவற்றை தவிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல முடியுமா?

பல பின்னோட்டங்கள் அரோக்கியமாகப் போவதால் இதை எழுதுகின்றேன்.

ஜயரின் பதிவிலேயே பார்த்திருப்பீர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்களுகிடையிலெயே பல கருத்து முரண்பாடுகள் சிந்தனையில் வேறுபாடுகள் இருந்திருக்கின்றன.ஒரு சே குவாரா மாதிரியோ,கோ சி மின் மாதிரியோ எமது போராட்டத்தை முன் நடத்தியிருக்க முடியாது என்பதே உண்மை ஏனேனில் போராட்ட நிலைமைகள் வேறு பட்டதுடன் மாத்திரமல்லாமல் எமது மக்களை என்றும் நம்பும் சூழலில் எந்த இயக்கமும் இருக்கவில்லை.இயக்கங்களில் பிழை சொல்ல முடியாது தமிழனின் குணம் அப்படி{அதை இன்று வடிவாகப் பார்க்கலாம்) இந்த விசயத்தில் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே எமது போராட்டம் நடாத்தப் பட்டது என்பது உண்மை.

ஆனால் இன்று நீங்கள் எழுதுவதுபோல் இந்த தத்துவங்கள் எல்லாம் தெரிந்த பலர் இயக்கங்களில் இருந்தார்கள்.(ரட்னா போன்றவர்கள்) ஆனால் எமது போராட்டம் சிங்களவனை பழிவாங்கும் {ஒரு தமிழ்பட கதைபோல்}நோக்கிலேயே வளர்த்தெடுக்கப்பட்டதால் அரசியல் தெளிவு(வர்க்கப் போராட்டமா அல்லது தேசிய இன போராட்டமா) சர்வதேச அரசியலில் எமது நிலைப்பாடு என்பன பற்றி எல்லாம் சிந்தித்தவர்கள் துரோகிகளாக்கப்பட்டு இல்லாமலே போனார்கள் எஞ்சியிருந்தவர்களும் உயிருக்கு பயந்து வேறுவழியின்றி நடப்பதெல்லாம் சரியென்று அதை நியாயப் படுத்த தொடங்கிவிட்டார்கள்.இருந்தும் இவைகளுக்கெல்லாம் முள்ளிவாய்க்கால் போல் ஒரு முடிவு வருமென பலருக்கு தெரியும். என்னநடக்கின்றதென்று தெரியாமல் தமிழ்படம் எடுக்க தொடர்ந்து காசை அள்ளி வழங்கியவர்கள்தான் இன்று நடந்த பிழைகளை ஏற்கமுடியாமல் இன்று ஏதோதோ செய்கின்றார்கள்,எழுதுகின்றார்கள்.

போராட்டத்திற்கு வந்த எத்தனையோ மிகபடித்த அரசியல் தெரிந்த போராளிகளை நான் சந்தித்திருக்கின்றேன் எல்லோர் கனவும் யாழ்ப்பாணிகளின் சுயநலத்தாலும் போலியான முகத்தாலும் அழிந்துவிட்டது

  • தொடங்கியவர்

இந்தப்பின்னூட்டத்திற்;குள் செல்லுமுன், ஜில் ரதி மற்றும் நுணாவிலானின் பின்னூட்டத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.

மூன்று விடயங்கள் பற்றி இப்பின்னூட்டத்தில் எனது கருத்துக்களைச் சுருக்கமாக முன்வைக்க முயலுகின்றேன்:

1. எமது வாக்குப்பலம் மற்றும் புலத்தில் எம்மவர்களை எம்.பி ஆக்குவது.

2. ஏற்றத்தாள்வுகள் இருக்கும் என்று கூறுவதால் சாதியத்தைக் கவனிக்கத் தவறுவது.

3. மீண்டும் ஐயர்

கனடாவில் எம்மவரைப் பாராளுமன்று அனுப்புவது என்ற கருத்துத் தொடர்பில் ஏகப்பட்ட கருத்துக்கள் எனக்கும் உண்டு. ஆனால் அது வேறு ஒரு தலைப்பிற்கானது என்பதால் இப்போதைக்கு ஒன்றை மட்டும் கூறுகின்றேன். தாராளவாத சனநாயகம் என்பதனை உண்மையில் நாங்கள் ஒரு சமூகவியல் நோக்கில்;, எமது குழுமத்தின் உயர்ச்சி, முரண்பாடுகளிற்குள்ளாலான சிக்கல்களைச் சமாளிக்கும் சமநிலை நோக்கி ஏற்றுக்கொள்ளுகின்றோமா விரும்புகின்றோமா அல்லது இதுவும் எமது பொய்களில் ஒன்று தானா என்பதை நாம் முதலில் எம்மை நோக்கிக் கேட்கவேண்டும். பொய் என்றால் அதை வேறு முனனயில் பார்க்கவேண்டும்--அது பொருளாதார சலுகைகளை சிலரிற்கு வென்று கொடுக்கலாம், அதில் தவறில்லை, ஆனால் ஏன் பாராளுமன்று நம்மவரின் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று வாதிடப்படுகிறதோ விரும்பப் படுகிறதோ, அதந்த விரும்பம் அங்கு நிறைவேறாது. ஒருவேளை உண்மையாகவே நாங்கள் சனநாயகத்தை சமூகவியல் நோக்கில் ஆழமாகப் பாhக்க்pன்றோம் விரும்புகின்றோம் என்றால், சனநாயகம் என்பது எப்போதும் கீழீருந்து மேலாக எழவேண்டும், மேலிருந்து திணிக்கப்பட முடியாது. குடும்பத்தில் தொடங்கி சமூகம் சனநாயகத்த்திற்கான நிறுவனங்களை குணாம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்றால் மேல்நிலை பாராளுமன்று உறுப்பினர் நிலை தானாக வரும். உள்ளுக்குள் அடிப்படைகள் ஓட்டையாய் இருக்கையில் முடி பற்றி மட்டும் கதைப்பது எனது ஆர்வத்தைத் தக்கவைக்கத் தவறுகிறது. சனநாயகம் என்றால் வெள்ளையனும் சர்வதேசமும் எங்களை ஏய்கப் பாவிக்கும் ஒரு சொல் மட்டும் தான் என்ற அளவிற்கு மட்டுமே எமக்கு அது புரியின், அந்த அஸ்திரத்தை நாம் எம் கைகளில் பெற்றால் கூட அதைப் பாவிக்கத் தெரியாதவர்களாவே நாங்கள் இருப்போம்.

அடுத்து ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துவதால் சாதியத்தை நியாயப்படுத்துவது என்ற சிந்தனை. ஏற்கனவே பலமுறை பல தலைப்புக்களில் விவாதிக்கப்பட்டதைப் போல சாதியத்தைத் தமிழனின் தனிப் பண்பாகவோ மற்றைய குணங்களில் இருந்து முற்றாக மாறுபட்டதாகவோ பார்க்கும் வரை விவாதங்கள் இலக்கை அடையா. சாதியம் என்ற பிரச்சினை கூட அடிப்படைகளில் இருந்து தான் அணுகப்பட முடியும். எங்களைப் புரிந்து, வெற்றி பெற்ற சமூகங்களைப் புரிந்து, அதிகாரங்களைப் புரிந்து எமது சிந்தனை கிரமப் படும் போது இதர பிரச்சினைகளைப் போன்றே சாதியமும் எதிர்கொள்ளப்படும். சுமூகத்தின் சிந்தனை மாற்றம் என்பது திட்டுத்திட்டாய் நடந்தாலும் ஒட்டுமொத்தத்தை நோக்கித் தான் நகரும். உலகின் அனைத்து “ஆண்டான் அடிமை” பிரச்சினைகளும் “அடிமை” என்ற பிரிவின் சிந்தனையால் தான் மாற்றப்பட்டுள்ளன. உலகில் விஞ்ஞானம் தொழில் நுட்பம் முதற்கொண்டு இயற்கையை வென்ற கடினங்களை வென்ற முன்னேற்றங்கள் அனைத்துமே “அடிமை” பிரிவால் தான் உருவாக்கப்பட்டது. சாதியம் என்ற பிரச்சினையும் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பவர்களின் சிந்தனை மாற்றத்தால் தான் மாற்றப்படும். சாதியத்தின் பல பரிமாணங்கள் இன்னமும் பேசப்படாதிருப்பதாகவே உணருகின்றேன். ஆனால் இதுவும் இன்னுமொரு தலைப்பிற்கானது.

ஐயரோடு எனக்கு எந்தத் தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. அவர் பதிவெழுதும் வரை அவரைப் பற்றி நான் கேழ்விப்பட்டதே இல்லை. ஐயர் தன் பதிவுகளில் தங்களிற்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் பற்றிக் கதைக்கவில்லை என்று நான் கூறவில்லை—ஆனால் அவர் சுட்டிக்காட்டும் கருத்து வேறுபாடுகளில் மிகப்பெரும்பான்மையானவை கொலை செய்வதாக இல்லையா என்ற பாணியில் தான் அமைகின்றன (அவ்ரோ குண்டில் சிங்களப் பயணிகளையும் சாகடிப்பதா இல்லையா, துரொகிககள் சுடப்படுவதா விடப்படுவதா, ஒருவர் துரொகியா இல்லையா முதலியன). நீங்கள் மலரவன் என்ற போராளி எழுதிய “போர் உலா” என்ற சிறு நூலை நிச்சயம் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை மலரவனின் நூல் ஐயரைக் காட்டிலும் பல மடங்கு ஆழகமாகச் சம்பவங்களை உள்வாங்கிப் பிரதிபலிக்கின்றது. எங்களைப் புரிதல் என்ற முனையில் ஐயரிடம் அதிகம் எதிர்பார்த்தது ஒருவேளை என்தப்பாய் இருக்கலாம். ஐயர் தனக்கு உலகைப் புரிகிறது அதிகாரத்தைப் புரிகிறது என்று காட்டப் பிரயத்தனப்படும் அளவிற்கு எங்களைப் பற்றிய புரிதல்களை முன்வைக்கவில்லை. மலரவன் இம்முனையில் தேவையான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஐயர் மத்தியகுழு உறுப்பினராக இருந்தகாலம் வியட்நாம் காலம். றியலிசம் என்ற கருத்துநிலை கொள்கை வகுப்பில் பலம் பெற்றிருந்த நிலை. அந்நிலையில் தலைவர் கொண்டிருந்த கருத்துநிலையும் ஹென்றி கிசிஞ்சர் கொண்டிருந்த கருத்து நிலையிலும் அதிகம் வேறுபாடில்லை (வெளிப்பாட்டிற்கு ஹென்றி என்ன மாதிரி நடந்தவர் என்று நான் கூறவில்லை) எம்மவர் ஹென்றி கிசிஞ்சர் என்றால் தமது பால்ய நண்பன் போன்று காட்டிக் கொள்ள விழையும் அளவிற்குப் பிரபாகரனைப் புரிய மறுக்கிறார்கள். நோக்கம் (இன்ரென்ற்) என்பதைக் காட்டிலும் இயலுமை (கப்பாசிற்றி) என்பதைக் கவனித்தது றியலிசம். அதாவது இன்று நீங்கள் எனது நண்பன் எனவே நீங்கள் என்னை நோக்கி உங்கள் பலத்தைத் திருப்பமாட்டீர்கள் என்று கருதுவதற்குப் பதிலாக, நீங்கள் நண்பனோ எதிரியோ உங்களின் பலமென்ன, ஒருவேளை நீங்கள் உங்கள் பலத்தை என்னை நோக்கித் திருப்பின் நான் அதை எதிர்கொள்ள முடியுமா என்று சிந்தித்து அதன் பிரகாரம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது றியலிசம். இராணுவ பலம் மட்டுமே பாதுகாப்பு என்று நம்பி அப்பலத்தைக் கூட்டுவதே தேவை என்று வெற்றி பெற்ற சமூகங்கள் செயற்பட்ட காலம் அது. ஐநாவை உருவாக்கி விட்டு நேட்டோ உருவாக்கப்பட்டதில் இச்சிந்தனைக்கும் பங்குண்டு. கிட்டு அவர்கள் பயிற்சி கொடுத்த இந்தியச் சிப்பாயை ஆரத்தழுவி பிரியாவிடை நேரத்தில் தளதளத்தது தொடர்பில் தலைவர்; அவர்களின் எதிர்வினை றியலிசத்தைப் பிரதிபலிக்கின்றது.

இதைச் சொன்னதும், அமெரிக்கா சிந்திச்சது எண்டிட்டு பிரபாகரனும் சிந்திச்சாராம் என்று நக்கல் பண்ண சிலரிற்குத் தோன்றும். பிரபஞ்சம் எத்தனை பெரியது அதன் இயங்குவிதி பற்றி நான் நினைத்துப் பார்க்கமுடியுமா என்று நியூட்டனோ ஐன்ஸ்ரைனோ நினைத்திருப்பின் பௌதீகம் இல்லை. அன்றைய நிலையில், அன்றைய மெயின்ஸ்ஸ்ரீம் தமிழ் மனநிலையில், அன்றிருந்த அரசியல் பேச்சுக்களிற்குள், பிரபாகரனின் கனவு தவறில்லை. ஆனால் சமூகம் உண்மையைப் பேசவில்லை என்பதைப் பிரகாரன் அவதானிக்காதது தான் அவரது தவறுகளிற் பெரும்தவறு. சமூகம்; மாறிக் கொடுக்கவில்லை. பிரபாகரன் மாறவில்லை என்று விமர்சிக்கும் சமூகம் தான் மாறியிருப்பின் பிரபாகரனும் மாறியிருப்பார்.

றியலிசம் என்ற கருத்து நிலையே அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவோ மாறிவிட்டது. கொள்கைப் பிடிப்பு முதலியன எமது உளவியில் பெறுமதிகளாகக் கொண்டாடப்பட்டது ஒருவரது தவறு மட்டுமல்ல. அது தான் நாங்கள். நாங்கள் மாறவில்லை என்பதில் அடுத்த கருத்து இல்லை. மாறவேண்டும் என்பது அவசியம்.

மற்றையது, இயகத்தில் படித்தவர்கள் இருக்கவில்லை என்று நான் கிஞ்சித்தும் கூறவில்லை. படிப்பு என்றால் என்ன என்பதன் வரைவிலக்கணம் தான் பிரச்சினை. பதினேளாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களைப் பற்றி இத்தலைப்பில் நாம் கதைத்துக் கொண்டு எமக்கு முதல் யாரும் இதைப் படிக்கவில்லை என்று கூறவா தோன்றும். படித்தவர்கள் என்று நாம் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் அன்று செய்திருக்கவேண்டியது அமிர்தலிங்கத்தின் பேச்சிற்கப்பால் ஜே,ஆரின நடவடிக்ககைளிற்கப்பால் தமிழரின் உண்மையான பிரச்சினை என்ன அபிலாசை என்ன. இதை எந்தெந்தக் கோணங்களில் அணுகலாம். என்னென்ன தெரிவுகள் உள்ளன சமூகம் என்ன விலை கொடுக்கத் தயாராய் உள்ளது, முதல் ஆசை சரிவராது எனின் என்னென்ன விட்டுக் கொடுப்புக்கள் சரி என்று தேடியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு விட்டு சேகுவாரா மயக்கங்களும் பேர்ளின் நோக்கிய பாட்டாளி ஊர்வலம் பருத்துறையில் இருந்து கிளம்பும் என்ற பிதற்றல்களும் இருந்திருக்கத் தேவையில்லை. அவர்களின் அறிவை நான் விமர்சிக்கவில்லை, அது தேவையான தருணத்தில் அன்று செயற்பட்டிருக்கவில்லை என்றே கூறுகின்றென். இதற்குப் பல காரணம் இருந்திருக்கும். ஆயுதக் கலாச்சாரம் முதலியன பேசுவதை இணையத்தில் பேசுவதைப் போல் இருக்க விட்டிராது. எனவே இது சிக்கலானது.

யாழ்ப்பாணியால் கனவு கலைந்தது என்று தப்பிவிடமுடியாது. இந்த யாழ்ப்பாணிக்கும் சேர்த்துத் தான் கனவிற்கான அத்திவாரம் கட்டப்பட்டிருந்தது. யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளாதது புரிந்துகொள்ளாதவர்களின் தவறும் கூடவே. ஆதனால் தான், எம்மைப் புரிந்து கொள்வது முதற்படி.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் பின்னோட்டங்கள் வழக்கம்போல் தொடருகின்றன.

பகுதி இரண்டாக எழுதப்பட்டதும் மிகவும் தேவையான ஒரு ஆக்கம். ஜயரின் ஆக்கம் பொன்னியின் செல்வனல்ல.சம்பந்ததே இல்லாத ஒருவருக்கு இரண்டும் ஒன்றுதான்(இளையவர்களுக்கு கூட அப்படித்தான் இருக்கும்}. ஆனால் அந்த நேரம் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக என்ன நடக்கின்றதென்று, யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்ற அறிய மக்கள் காட்டிய ஆர்வம் பெரியது.இப்போது உண்மையில் அவர்களுக்குள் இருந்த ஒருவர் பெயர்களுடன் சம்பவங்களயும் எழுத எனது வயதை ஒத்தபலர் எப்ப அடுத்த அத்தியாயம் வரும் என்ற ஆவலில் தான் உள்ளார்கள்.

70,80 களில் நடந்தவற்றை இப்போது திருத்தி எழுதிமுடியாது.{மாட்டுவண்டிலில் போன மனிதன் தான் இன்று ரொக்கெட்டில் போகின்றான். 2009 இலும் எமது போராட்டம் ஏறக்குறைய அதே நிலையில் இருந்ததற்கு பெரியதொரு கட்டுரையே எழுதலாம்.

புலிக்கு எதிராக எதையாவது புகுத்திவடுவதென்றால் அதெல்லோ புதினம்.......

அதெப்படி பொன்னியின் செல்வனாகும்?

ஐயர் ஆறு என்றால் சைபரை போட்டு ஆறுபதாக்குவது என்பது எங்களுக்கு தெரியத ஒன்றாக்கும். அப்படியென்றால் பிள்ளையார் பால்குடித்தது வெறும் பிரமையாகவல்லோ இருக்க வேண்டும்???

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முன்னை நாள் போராளிக்கு மேற்கின் சிந்தனையாளர்களைப் புகழ்வதாகத் தொனிப்படும் எழுத்துக்கள், அறிந்தோ அறியாமலோ உள் நுழையும் ஆங்கில வார்த்தைகள், கல்வி மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த உரையாடல்கள், தாம் இழந்து போன சந்தர்ப்பங்களை நினைவு படுத்தும். அதுவும் இன்று இலக்கின்றி நிற்கையில், இவ்வாறான தலைப்புக்கள் அருவருப்பும் ஆத்திரமும் சேர்ந்து வரப்பண்ணும்.

உன்னிப்பாக அவதானித்து இருக்கின்றீர்கள் இன்னுமொருவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணியால் கனவு கலைந்தது என்று தப்பிவிடமுடியாது. இந்த யாழ்ப்பாணிக்கும் சேர்த்துத் தான் கனவிற்கான அத்திவாரம் கட்டப்பட்டிருந்தது. யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளாதது புரிந்துகொள்ளாதவர்களின் தவறும் கூடவே. ஆதனால் தான், எம்மைப் புரிந்து கொள்வது முதற்படி.

இங்கே சில கேள்விகள் தொக்கு நிற்பது போல இருக்கிறது..இந்த இடத்தில் தொடர்ந்து கேள்விகளை அடுக்குவது திரியை முன்னகர்த்துமான என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...

இங்கே யாழ்பாணி என்கின்ற பதம் சில இடங்களில் ஒருவிதமான பக்கச்சார்பான வகையில்/ அவர்களின் மீது காழ்புணர்வை செலுத்தும் வகையிலும் பாவிக்க படுகிறது...என்னைப்பொருத்தவரையில், இங்கே எமது பிரச்சைனயில், யாழ்ப்பாணிகள் ஒரு பெரிய பங்கு வகித்தார்கள், இனியும் வகுப்பார்கள். பிழைகள் நடந்திருக்கலாம், ஆனால் எல்லா பிழைகளும் திட்டமிடப்பட்டவையோ அன்றி அவர்களுடைய "தன்னித்தமையாலோ" வந்ததவை என்று நான் கருதவில்லை. அது தனியே பிரபாகரனாக இருக்கலாம் அல்லது அவர்சார்ந்த ஏனையோராக இருக்கலாம், அல்லது வேறும் ஒருவராயும் இருக்கலாம். முதலில் இங்கே எனது கருத்த்க்காய் நான் சொல்லுவது..அவர்கள் மக்கட் தொகையில் அதிகமானவர்கள்...உதரணத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை எடுத்தால்..யாழ் 9 வன்னி 6 திருகோணமலை 4 அம்பாறை 7 மட்டக்களப்பு 5 ...எனவே யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் இந்த நெருக்கடிக்கு தலைமை தாங்குவதோ அல்லது அதனால் ஏற்படுகின்ற முன்னேர்ரங்களுக்கோ அல்லது பின்னடைவுகளுக்கோ போருப்பனாதாயும், அல்லது பிரதான மூலகர்தவகளாக இருப்பது இயல்பானது என்றே நான் கருதுகிறேன்...மற்றது யாழ்பாணத்தின் கல்வி நிலைமை இலங்கையிலே குறிப்பிட தக்க இடத்தில் இருந்ததால்/ இருப்பதால் அவர்கள் கட்சிகளை அமைப்பதிலோ அவற்றை அலங்க்கரிப்பதிலோ முன் நின்றதில் நான் ஒரு வித்தியாசமான நிலையை பார்க்க முடியவில்லை...

"யாழ்பானிகளை" ஒரு வித்தியாசமான பிறவிகள்/ அவர்கள்தான் எமது இன்றைய நிலைகளுக்கு காரணம் என்பவர்கள் அதற்ற்குரிய காரணங்களை சொன்னால் எங்களையும்/ என்னையும் திருத்த உதவியாய் இருக்கும்...(மாவிரர்கள் கூட யாழ்மாவட்டைத்தை சேர்ந்தவர்கள் அதிகம் என வாசித்த ஞாபகம்.)

ஒரு சின்ன உதாரணம் நேற்று நடந்தது.டெக்சாஸில் இருக்கும் எனது பால்யநண்பன் காலை போன் அடித்தான் தான் டொரொன்டோவிற்கு ஒரு கொன்பிறஸிற்கு வந்திருப்பதாகவும் ஞாயிறு காலை பிறீ என்றான்.நான் ஏற்கனவே எனது இருவேறு நண்பர்களை ஜ்.பி.எல் கிறிக்கெட் பைனல் பார்க்க வரச் சொல்லி இருந்தேன்.அதைவிட முடிந்தால் போனமாதம் கனடா வந்த வேறொரு நண்பனையும் கூப்பிடுமாறு சொன்னான்.பாடசாலையில் அவ்வளவு நண்பனில்லாவிட்டாலும் யூனிவெர்சிடியில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்களகிவிட்டதாக சொன்னான்.

இப்போ மொத்தம் 9 பேர் இருந்து மட்ச் பார்க்கின்றோம்.புதிதாக வந்த நண்பன் மனைவியுடன் வந்திருந்தார்.டீ.வீ யில் மட்ச் போய்க் கொண்டிருக்கின்றது ஆனால் நாங்கள் ஒரே அரசியல் வாக்குவாதம்.டெக்சசில் இருந்து வந்த நண்பரும்,புதிதாக வந்த நண்பரும் மனைவியும் டாக்குத்தர்கள்.டெக்சசில் இருந்து வந்தவர் நெடுகிலும் என்னுடன் போனில் கதைப்பதால் என்னப்பற்றி நன்கு தெரியும்.பார் இவன் இவ்வளவு காலமும் இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் கண்டியில் வேலை பார்த்துக் கொண்கு இருந்தவன் இனி மே 18 பிறகு அங்கு இருக்க முடியாது என்று இங்கு வந்துவிட்டான். புலி இருக்க மட்டும் நாங்கள் தலையை நிமிர்த்திக் கொண்டுதான் அங்கு இருந்தனாங்கள்.ஒவ்வொரு தாக்குதலுக்கும், அடிக்கும், குண்டு வெடிப்பிற்கும் முழுசிக்கொண்டு திரிந்தவங்கள் இப்ப எங்களை ஒரு பொருட்டாகவே பார்க்கின்றாங்களில்லை.மோட்டுசிங்களவனுக்கு அடிபோடாமல் ஒன்றயும் சாதிக்க முடியாது அதுதான் அங்கிருந்த 8 பெயர்களின் நியாயம்.அவா சொல்லுகின்றா 3 பிள்ளைகளும் பிறைவேட் பாடசாலையில் படித்தவர்களாம்.இவ்வளவு காலமும் இருந்திட்டு இப்ப வரவேண்டிவந்துவிட்டது என ஆதங்கம்.

இவர்களின் பிரச்சனை என்ன? தங்கள் பிழைப்பில மண்விழுந்துவிட்டது சிங்களவனை அடிக்க புலி வேணும் .போரினால் இறப்பவர்களை பற்றியோ போராடும் போராளிகளை பற்றியோ எதுவித அக்கறையுமில்லை.ஊரில முந்தி சண்டை வரேக்க கரையூர் மணியையும் கொட்டடி தேய்வேந்திரத்தயும் வைத்திருந்தது போல் தான் அவர்களுக்கு புலிகளும். சிஙகளவனை வெருட்ட ஒரு சண்டியன் தேவை.தங்கட பிழைப்பு ஓடவேண்டும்.ஆரும் அரசியல் கத்தைத்தால் அந்தப் பக்கம் ஒதுங்குவதேயில்லை பிடிக்கவும் மாட்டாது. யாழ்ப்பாணிகளுக்கு ஒரு சின்ன உதாரணம்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை தொடக்கியவர்களும் முதலில் போராடப் போனவர்கள் வேண்டுமானால் யாழ்ப்பாணர்களாக இருக்கலாம் ஆனால் போராட்டதிற்காக அதிகளவு உயிர் துறந்த போராளிகள் எனப் பார்த்தால் அது வன்னிப் போராளிகளும்,கிழக்கு மாகண போராளிகளும் ஆவார்...யாழின் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்த போராளிகளின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்...யாழை சேர்ந்த போராளிகள் போராட்டத்தில் இணைந்தாலும் ஏதோ ஒரு காரணத்தை காட்டி போராட்டத்தில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்.கிழக்கு மாகணத்தில் புலிகள் சண்டை பிடித்ததைக் காட்டிலும் வடக்கு,வன்னியில் தான் கூடுதலான சண்டை நடந்தது[கிழக்கு மாகணத்தை கைப்பற்றினாலும் தொடர்ந்து வைத்து இருக்க முடியாது]கிழக்கு மாகண போராளிகள் 90% பேர் வடக்கில் தான் உயிர் துறந்தார்கள்..இதை வைத்து நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை நானும் யாழ்ப்பாணம் தான்...யாழ்ப்பாணத்தாரிடம் நல்ல ஜடியா இருக்கும் ஆனால் அதை செயற்படுத்த வன்னி,கிழக்கு மாகணத்தார் வேண்டும்.

கருணா பிரிந்து சென்ற போது கருணா செய்தது பிழை என மட்டக்களப்பு புலிகள் நினைத்திருந்தால் அவரைப் பின் தொடர்ந்து போய் இருக்க மாட்டார்கள்...கருணா பிரதேசவாதம் கதைத்தாலும் அது உண்மையாக அவர்கள் அனுபவித்திருக்காத பட்சத்தில் அவர்கள் கருணாவோடு போய் இருக்க மாட்டார்கள்...எனக்கு ஞாபகம் இருக்கிறது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் கதை கதையாய் சொல்வார்கள்...ஒரு உதாரணம் ஆனையிறவு முதலாவது நடந்த தாக்குதல் தோல்வி அடைந்ததாம் அத் தாக்குதலில் தங்களைக் கொண்டு போய் முன்னுக்கு விட்டார்களாம் அதில் இடம்,வலம் தெரியாமலே அதிகளவு மட்டக்களப்பை சேர்ந்த புலிகள் இறந்தார்களாம்...இப்படி கதை கதையாய் சொல்வார்கள்...கருணா என்பது ஒரு தனி மனிதன் இல்லை,அவரது கட்டுப்பாட்டில் அப்போது இருந்த போராளிகள்,புதிதாய் புலியில் சேர‌க் காத்திருந்தோர் என பல இழப்பு...என்னைப் பொறுத்த வரை கருணா விட‌யத்தில் புலிகள் ஏமாந்து விட்டார்கள் அதுவே இவ்வளவு பெரிய இழப்பை முள்ளி வாய்க்காலில் சந்திக்க காரணமாய் இருந்தது.

போராட்டத்தை தொடக்கியவர்களும் முதலில் போராடப் போனவர்கள் வேண்டுமானால் யாழ்ப்பாணர்களாக இருக்கலாம் ஆனால் போராட்டதிற்காக அதிகளவு உயிர் துறந்த போராளிகள் எனப் பார்த்தால் அது வன்னிப் போராளிகளும்,கிழக்கு மாகண போராளிகளும் ஆவார்...யாழின் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்த போராளிகளின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்...யாழை சேர்ந்த போராளிகள் போராட்டத்தில் இணைந்தாலும் ஏதோ ஒரு காரணத்தை காட்டி போராட்டத்தில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்.கிழக்கு மாகணத்தில் புலிகள் சண்டை பிடித்ததைக் காட்டிலும் வடக்கு,வன்னியில் தான் கூடுதலான சண்டை நடந்தது[கிழக்கு மாகணத்தை கைப்பற்றினாலும் தொடர்ந்து வைத்து இருக்க முடியாது]கிழக்கு மாகண போராளிகள் 90% பேர் வடக்கில் தான் உயிர் துறந்தார்கள்..இதை வைத்து நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை நானும் யாழ்ப்பாணம் தான்...யாழ்ப்பாணத்தாரிடம் நல்ல ஜடியா இருக்கும் ஆனால் அதை செயற்படுத்த வன்னி,கிழக்கு மாகணத்தார் வேண்டும்.

கருணா பிரிந்து சென்ற போது கருணா செய்தது பிழை என மட்டக்களப்பு புலிகள் நினைத்திருந்தால் அவரைப் பின் தொடர்ந்து போய் இருக்க மாட்டார்கள்...கருணா பிரதேசவாதம் கதைத்தாலும் அது உண்மையாக அவர்கள் அனுபவித்திருக்காத பட்சத்தில் அவர்கள் கருணாவோடு போய் இருக்க மாட்டார்கள்...எனக்கு ஞாபகம் இருக்கிறது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் கதை கதையாய் சொல்வார்கள்...ஒரு உதாரணம் ஆனையிறவு முதலாவது நடந்த தாக்குதல் தோல்வி அடைந்ததாம் அத் தாக்குதலில் தங்களைக் கொண்டு போய் முன்னுக்கு விட்டார்களாம் அதில் இடம்,வலம் தெரியாமலே அதிகளவு மட்டக்களப்பை சேர்ந்த புலிகள் இறந்தார்களாம்...இப்படி கதை கதையாய் சொல்வார்கள்...கருணா என்பது ஒரு தனி மனிதன் இல்லை,அவரது கட்டுப்பாட்டில் அப்போது இருந்த போராளிகள்,புதிதாய் புலியில் சேர‌க் காத்திருந்தோர் என பல இழப்பு...என்னைப் பொறுத்த வரை கருணா விட‌யத்தில் புலிகள் ஏமாந்து விட்டார்கள் அதுவே இவ்வளவு பெரிய இழப்பை முள்ளி வாய்க்காலில் சந்திக்க காரணமாய் இருந்தது.

.

86 ஆம் ஆண்டு. இரண்டு கல்லூரிகளை ஒப்பிட முடியும்.

யாழ் இந்து. ஒவ்வோர் தரத்திலும் ஆறு வகுப்புகள் இருந்தன. விரல் விட்டு எண்ணகூடியவர்கள் போராட்டத்தில் இணைந்தனர்.

குறிப்பிடத்தக்க அளவினர் மாணவர் அமைப்புகளில் இருந்தனர். :D:D

திருகோணமலை இந்துக்கல்லூரி. இரண்டுவகுப்புகள் ஒவ்வோர் தரத்திலும். பெரும்தொகை போராட்டத்தில் இணைந்ததால் இரண்டுவகுப்புக்களை ஒன்றாக்கியும் மாணவர் போதாதநிலை. மாண‌வ‌ர் அமைப்புக்க‌ளில் எவ‌ரும் இல்லை!

யாழ் இந்துவில் மாண‌வ‌ர் அமைப்பில் இருந்த‌வ‌ர்க‌ள் இன்று வீடு வாச‌ல் வ‌ள‌வு என்று.. ந‌ல்ல‌.. நிலையில் இருக்கிறார்க‌ள்..

யார‌யும் புண்ப‌டுத்தும் நோக்க‌ம் இல்லை. பொதுமைப்பாடான‌ ஒரு கூற்று.

  • தொடங்கியவர்

அர்யுனுடைய உதாரணம் பொருத்தமானது.

அர்யுனின் உதாரணத்தைப் போல, யாழ்ப்பாணத்திலும் ஈழத்தின் இதர பகுதிகளிலும் நடுத்தர வர்க்கமும் அதற்கு மேலும் போராட்டத்தை ஆதரித்ததற்கான மிகமுக்கிய காரணம், சிஙகள ஏகாதிபத்தியத்தால் தமது நலன்களிற்கான போட்டி தடைப்படுகிறது என்பது மட்டுமே. சிங்களம், தமிழ் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பங்கெடுப்பைக் கேலிக்குரிய விதத்தில் மட்டுப்படுத்தியிருந்தது. தமிழ் நடுத்தரவர்க்கத்தின் வாக்கு செல்லாக்காசாகி இருந்தது. கல்வி பொருளாதார முன்னேற்றத்திலும் சிங்களம் சிக்கல் கொடுத்தது. இதுவே தமிழ் நடுத்தர வர்க்கம் போராட்டத்தை ஆதரிக்கச் செய்த முக்கிய காரணம். இருப்பினும், இதனை ஒரு அசௌகரியமாக ஆத்திரப்படுத்தலாகத் தான் தமிழ் நடுத்தரவர்க்கம் பார்த்ததே அன்றி வாழ்வாதாரமாகப் பார்க்கவில்லை. ஆராவது இவ்வசௌகரியத்தை நீக்க முனைந்தால் அவர்களிற்கு ஆதரவு வழங்க நடுத்தரவர்க்கம் ஆயத்தமாய் இருந்தது. ஆனால் இந்த அசௌகரியங்களின் பேரில் தான் சாவதற்கு அது தயாராக இருக்கவில்லை.

ஒருவர் போராளியாக மாற வேண்டுமாயின், அவர் இறப்பதற்குத் தயாராயிருக்கவேண்டும். வாழ்வாதாரப் போராட்டத்தில் வாழ்வதற்காக இறத்தல் என்பது அடிப்படையில் முரண்நகை. அப்படியிருக்கையில், புனிதங்களின் சித்தரிப்பாலும், பாரம்பரியங்களின் பிரமிப்பாலும், முப்பாட்டன் பெருமைகளாலும், இலக்கியத்தாலும், இறப்பின் பின்னான புகழ்தலாலும், கிட்டத்தட்டச் சமத்துவ சமூகம் போன்று அடித்தட்டு மக்களிற்குத் தோன்றிய அங்கீகாரவழங்கலாலும் இதர உசுப்பேத்தல்களாலுமே ஒரு இனத்திற்காக இறப்பது என்பதையும் மானமே பெரிதென்ற விடயத்தையும் நடுத்தர வர்க்கம் இளையோர் மீது திணித்தது—தங்கள் இளவல்களை இயன்றவரை காத்துக் கொண்டது. மானமே பெரிதென்ற கவரிமான் சிந்தனை வெற்றி பெற்ற சமூகங்களிலும் எம்மளவிற்கு இருந்தது. மானமே அங்கீகாரம் என்று அனைவரும் நினைத்தனர். எனினும் மானத்திற்காகச் சாதல் என்பது பற்pய சிந்தனை தோன்றையில், வாழ்வது தான் உச்சக் குறிக்கோழாக இருக்க முடியும், வாழும் போது தான் மானம் முதலிய இதர பண்புகள் அர்த்தம் பெறுகின்றன என்ற சிந்தனை வீச்சுப் பெற்றது. இதன் பிரகாரமே, துச்சமென உயிரை மதித்து நடந்த மானப்போர்கள் வெற்றி பெற்ற சமூகங்களில் குறையத் தொடங்கின. போர் தவிர்ப்பு என்பது வெற்றி பெற்ற சமூகங்களில் வெற்றி பெறத் தொடங்கியது.

தங்கள் நலன்சார்ந்து நடுத்தர வர்க்கம் புனிதங்களைக் கொண்டாடிக் காட்டியது. ஒரு போராளி என்றால் இப்படித்தான் இருப்பான், இன்ன இன்ன விடயங்களே உயரிய பண்புகள் என்று நடுத்தரவர்க்கம் தங்கள்; நலன் சார்ந்து வாயுழையக் கத்திக் கதைத்தது எழுதியது. போராளிகளை வைத்து சிங்களத்திடம் மறுமுனையில் பேரம் பேசியது. இயன்ற வரை கொழும்பிலும் இதர வணிக பிரதேசங்களிலும் குடியேறியது, வெளிநாடு சென்றது, பல்கலைக்கழகம் சென்றது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வரை சிங்களத்திடம் அது நாட்டாண்மை பண்ணக் கற்றுக் கொண்டது.

சிங்களம் என்பது இராணுவ பலத்தால் மட்டுமே பேரம்பேசப்படக்கூடியது என்பதை தமிழ் நடுத்தரவர்கம் உளப்பூர்வமாய் நம்பியது. இராணுவ பலம் மட்டுமே உண்மையான பலம் என்ற இந்த நம்பிக்கை அன்று மாற்றுக் கருத்தி;றகு இடமின்றி ஒட்டுமொத்தமாக நம்பப்பட்டது என்பதைப் பலர் இன்று கவனிக்கத் தவறுகின்றனர். கமியூனிசிஸ்ட்டுக்கள் முன்வைத்த ஒரு சமூகவியல் அவதானனம் இங்கு பொருந்தும், அதாவது இரஸ்சியாவின் பிரபு ஒருவரிற்குப் பிரஞ்சுதேசத்தின் பிரபு ஒருவருரைப் புரிந்து கொள்வது என்பதும் அவருடன் உரையாடுவது என்பதும் இரஸ்சியாவின் பாட்டாளி ஒருவனை புரிந்துகொள்வதைக் காட்டிலும் அப்பாட்டாளியோடு உரையாடுவதைக் காட்டிலும் இலகுவாய் இருக்கும் என்பது அவ்வவதானம். மனிதர்களின் பொதுமை என்று ஒன்று இருக்கத் தான் செய்கிறது, அதிலும்; குறிப்பிட்ட பொருளாதார அதிகார நிலைகளில் உள்ளவர்களின் சிந்தனை ஒருமிக்கத் தான் செய்கிறது--இதற்கு இன்னுமொரு காரணம் ஒரு குறித்த பொருளாதார அதிகார நிலையினை அடைவதற்கு குறித்த பாணியிலான சிந்தனை பலம்சேர்க்கிறது. அந்த வகையில் தமிழ் நடுத்தர வர்க்கம் அன்று இராணுவ பலம் மீது கொண்டிருந்த நம்பிக்கை புரிந்து கொள்ள்க் கூடியது--இதே நம்பிக்கையைத் தான் வெற்றி பெற்ற அனைத்து சமூகங்களும் அன்று கொண்டிருந்தன.

இராணுவ பலம் மீதான மனமொருமித்த நம்பிக்கையால், தான் விரும்புகின்ற விடயங்களைத் தனது அபிலாசைகளை அங்கீகாரத்தை சிங்களத்திடம் இருந்து அடைவதற்கான மாற்று வழிகள் பற்றியோ, என்ன ஆசைகளிற்குத் தான் என்ன விலை கொடுக்கத் தயாராக உள்ளது என்றோ நடுத்தரவர்க்கம் அன்று சிந்திக்கத் தவறியது. இதற்கு ஒரு மிகப்பெரும் காரணம், தனது சண்டித்தனங்களைச் செய்வதற்கான ஆட்களைத் தன்னால் கண்டுபிடிக்கவும் தக்கவைக்கவும் முடியும் என்று இந்த நடுத்தரம் அன்று நம்பியது. ஆதற்கும் மேலால், தான் உருவாக்கும் சண்டியர்கள் எப்போதும் தனக்குக் கட்டுப்பட்டவர்களாக, தனக்குச் சவாலாகாதவர்களாவே இருப்பார்கள் அல்லது அவ்வாறு அவர்களை வைத்திருக்கத் தனக்குத் தெரியும் என்று இந்த நடுத்தரவர்க்கம் எடைபோட்டது. இந்த எடைபோடலின் தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்குஇ இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் முப்பத்திச் சொச்ச ஆசனங்களிற்காய் இரண்டாயிரம் பேர் போட்டி போட்டியிட்டமை மற்றும் தற்போது நாடுகடந்த அரசு தேர்தலில் முன்பின் தெரியாத எத்தனை பேர் போட்டி போடுகின்றனர் போன்ற விடயங்களைப் கவனிப்பது உதவு. இது உன்னிப்பாய்க் கவனிக்கப்படவேண்டியது. (தாம் வளர்;க்க நினைத்த சண்டியர்கள் தம்மை மிஞ்சியதை சமூகத்தின் அதிகார வர்க்கத்தால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதும் எமது போராட்டத் தோல்விக்கு ஒரு காரணம்)

ஒரு விடயத்தை இங்கு நாம் கவனிக்கத் தவறக் கூடாது. அதாவது, ஏன் எப்படிப் போராட்டம் ஆரம்பித்தது என்பதற்கு அப்பால், போராட்டம் ஆரம்பித்து நகர்;ந்து கொண்டிருக்கையில், பல தமிழர்கள்; போராட்டத்தின் புனிதங்களை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள் நம்பினார்கள். தமிழ் தேசியம் என்ற குழுநிலை அடையாளத்தை விரும்பினார்கள் ஏற்றுக் கொண்டார்கள். வர்க்க சாதிய பால் வித்தியாசங்களையும் இதர வித்தியாசங்களையும் கடந்து போராடடத்தின் இலக்கிற்காய், மக்கள் மீது தமக்கிருந்த இதயசுத்தியான அன்பினால், அம்மக்கள் சிங்களத்தால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற விதத்தை எதிர்த்துப் போராடிப் பல தியாகங்கள் நடந்தன. இவர்கள் எம்மக்கள் என்ற இதயசுத்தியான சிந்தனை பிறந்தது வளர்ந்தது தங்கி நிற்கின்றது. ஆழுமைகள் வெளிப்பட்டன. கற்பனை சிறந்தது. கனவுகள் பல வகையில் நியமாக்கப்பட்டன. சமூகம் ஒட்டுமொத்தமாப் பல சாதனைகளைச் செய்தது, பல நிரந்தர மாற்றங்கள் ஏற்பட்டன. உதாரணமாக பொறியியலையும் மருத்துவத்தையும் பாடப்புத்தகங்களாய் மட்டும் படித்துக் கொண்டிருந்த சமூகம் இத்துறைகளில் புதமைகளைப் புகுத்தும் அளவு வளாந்;தது மட்டும் இன்றி இதர துறைகள் பற்றிச் சிந்தித்தது. இதனால் ஈழத்தின் பாரம்பரிய கல்விச் சிந்தனை முன்னர் கைவிட்ட அல்லது இகழ்ந்த திறமைகள் இப்போது தேவைப்பட்டது. இதனால் புதிய ஆழமைகள் அடையாளம் காணப்பட்டன. மக்கு என்று எவரும் இல்லை என்று போராளிகள் நிறுவிக் காட்டினர். ஓட்டுமொத்த சமூகமே ஒரு வீச்சுடன் எழுந்தது. எனவே எதையும் இங்கு நாம் கருப்பு வெள்ளையாக மட்டும் பார்த்துவிடமுடியாது.

எனினும்;, ஒரு வீதத்திற்கும் குறைவானவர்களே போராளியாகியிருந்த நிலையில், போராளிகளின் இறப்பினால் தாங்கள் போராளி ஆக வேண்டிய நிலை தோன்றியதும், வீட்டிற்கொருவர் என்ற பேச்செழுந்ததும் நடுத்தர வர்க்கதம் தாங்கள் சிருஸ்டித்த புனிதங்களைத் தாங்களாகவே சிதைக்கத் தொடங்கியது;. போராட்ட காலத்தில் தாங்கள் கண்டு கொண்ட புலம் பெயர் வாழ்க்கை முதலான பொருளாதாரத் தேடல்கள் தங்களிற்கு இப்போ லாபகரமாய்த் தெரிய, சிங்களம் நிராகரித்த அங்கீகாரத்தையும் சலுகைகளையும் பெறுவதற்கான மாற்று வழிகளைத் தேடாமலேயே நடுத்தரவர்க்கம் கண்டு கொண்டது. போராட்டம் என்ற புராதனத்தை நடுத்தரவர்க்கம் கைவிட்டது.

நாங்கள் உருவாக்கிய போராட்டம் நாங்கள் சித்தரித்த புனிதங்கள் இருக்கும் வரையே தொடரக் கூடியதாக இருந்தது, ஆனால், நாங்கள் உருவாக்கிய புனிதங்களின் பிரகாரம் நாங்கள் போராடவேண்டி ஏற்பட்டதும் எங்களின் புனிதங்களின் பிரகாரம் நாங்கள் வாழ்வதற்கு மாறாய் புனிதத்தையே நாங்கள் சிதைத்துக் கொண்டோம். இதனால் தான் எம்மைப் புரியாத போராட்டம் எம்முன்னே தோற்றது.

மொத்தத்தில் நாங்கள் ஏன் போராட வெளிக்கிட்டோம் என்பது பற்றிய தெளிவு எங்களிற்குள் மறைக்கப்பட்டது அல்லது நாங்கள் தெரிந்து கொள்ளாது இருந்தோம். நாங்களும் போராளிகளை ஏமாற்றினோம். மனக்குறைகளை வெளிப்படுத்திய போராளிகளை புனிதம் குறைந்தவர்களாக நாங்களும் காட்டினோம்.

எனவே அடுத்த போராட்டம் என்று எங்களிற்குள் நாங்கள் கதைப்பதற்கு முன்னர் எங்களிற்குள்ளேனும் உண்மை பேசுவோம். எங்களிற்கு என்ன வேணும் என்று நாங்களாவது புரிந்து கொள்வோம். எங்களிற்குத் தேவையானதை, எங்களிற்காக மற்றையவர் இறக்காது எவ்வாறு அடைவது என்று தேடுவோம். நூங்கள் கொடுக்கச் சித்தமாயிருக்கும் விலை பற்றியும் சிந்திப்போம்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி...

இங்கே யாழ்ப்பாணிகள் என்றால் "சுயநலவாதிகள்" என்ற கருத்தில் பதிவுகள் போகின்றன..நான் மறுக்கவில்லை அவர்கள் சுயநலவாதிகள்தான். ஆனால் என்ன விதத்தில் அது அவர்களுக்கு மட்டும்தான் உரியது என்று சொல்லுகிறீர்கள். இங்கே அர்ஜுன் , ரதி, ஈசன் சொன்னவையும் அவற்றிக்கு கிட்டவருவது போல் தெரிந்தாலும் அவற்றினுடைய, பின்புலத்தையும் நாங்கள் பார்க்க வேண்டும். ஈசன் சொன்ன, யாழ் இந்து/ திருகோணமலை இந்து உதாரணத்தில் நான் பார்ப்பது, அவர்கள் அடைந்த, அந்த களத்தில்/காலத்தில் நடந்த நிகழ்வுகளில் மொத்த வெளிப்பாடு என்றுதான் பார்க்க வேண்டும். 1986 ஆண்டவில் திருகோணமலையை சார்ந்தவர்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான பிரச்சினையை சந்திரிருப்பார்கள் ஏனெனில் அவர்கள் இருந்தது/இருப்பது ஒரு கலப்பினனமான பகுதி, ஆனால் யாழில் அந்த தேவை இருக்கவில்லை. 100/1000 சிங்களவர் அவர்களும் சண்டை தொடங்கவிட்டு யாழை விட்டு ஓடிவிட்டார்கள். மற்றது ரதி சொன்ன மட்டக்களப்பு பற்றியது, நீங்கள் அங்கு இருந்தது என்றபடியால் தெரியும்: மட்டக்களப்பு நகரத்தை விட, மற்ற இடத்தில் உள்ள ஆட்களின் வாழ்கைதரத்தைப் பார்த்தால் ஏன் அவர்கள் போரடத்துக்குள் இலகுவாக இழுத்து செல்லப்பட்டார்கள்/ செல்லப்படப்பட்டார்கள் என்பது விளங்கும். வன்னியில் 2008 கட்டாய ஆள் சேர்ப்பு வருவதர்ற்கு முன்பே மட்டக்களப்பில் தொடங்கிவிட்டது. அந்த காலத்தில் (எங்களது போராட்டத்தில் எது செய்தாலும் சரி என்கிற நிலை வந்தபோது/வருகிற போது) யாழ்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்பாணத்தின் பெரும் பகுதி/ அல்லது முழுவதுமே இராணுவத்தின் கட்டுப்பாடில் தான் இருந்தது. 1995 தொடக்கம் 2009 வரை ஆனால் அந்த காலத்தில்தான் போராட்டம் பெருமளவு வளர்ந்த்தது. நான் சொல்லுவேன் யாழில் பூகோள அமைப்பும் ராணுவத்தின் ஆதிக்கமும் யாழ்பானத்தவர் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் நேரடியாக பங்கேற்காமல் விட்டதிர்ற்கு என்று...இதற்கு நல்ல உதாரணம் ரதி இன்னுமொரு இடத்தில் எழுதிய என்ன என்ன காரணதுக்கேல்லாம் இளைஞர்கள் போராட்டத்துக்கு போயிருக்கிரர்ர்கள் என்ற விபரம்...அந்த காலத்தில் அப்பா அடிச்சு போட்டார் என்று யாரும் யாழில் இருந்து போரடத்துக்கு போக முடியாது

என்னவே நான் சொன்னது இதுதான், யாழ்பானத்தவர்கள் ஒரு விதிவிலக்கான சமூகமாக இருக்கவில்லை...சந்தர்பம் உள்ளவர்கள் செய்யும் காரியங்களைதான் செய்தார்கள் என்று.அவர்களுக்கு போராட்டம் பெரியளவு நேருக்கு வாரத்தை கொடுக்கவில்லை என்றால் ஏற்ருக்கொள்வேன். ஆனால் அது தனியே யாழ்பாணி என்கின்ற வரையறைக்குள் வராது. நான் ஏற்றுக்கொள்கிறேன் இது யாழ்ப்பாணத்தவர்/ யாழ்ப்பாணிகள் தொடக்கின போராட்டம், இடையில் அவர்கள் கையை விட்டார்கள் என்பதையும், ஆனால் அவை எல்லாம் திட்டமிட்டு நடந்தவை அல்ல. சிங்களவர்களையும் பாருங்கள் யார் யார் கூடுதலாக போராடியது, யார் யார் பதவிகளை அலங்கரித்தது என்று..இங்கே உள்ள (கனடாவில்) அரச உத்தியோகத்தர்களை பாருங்கள்..எல்லாம் பின்புலம் உள்ளவர்களே செய்கிறார்கள். ஆனால் இந்த பின்புலம் எப்படி யாழ்பாணத்துக்கு வந்தது என்று தேடினால்,ஏன் எங்கள் மன்னர்களும், மற்ற இனத்தவர்களும் யாழை கட்டி ஆழ்ந்தார்கள் என்று பார்த்தால் "யாழ்பானிகளின்" மறைந்து நிற்கிற குணங்களுரிய விடைகள் கிடைக்கலாம். அதை தவிர இன்று நாம் சொல்லுவது எல்லாம், பல்லுள்ளவன் எதோ சாப்பிடுகிறான் என்ற ரீதியிலேயே வரும்..

அர்ஜுன் உங்கள் உதாரணத்தையும் நான் அதே வகைக்குள்ளே பார்க்கிறேன். நீங்களே சொல்லுகிறீகள் யாழ்பானிகளே "கொட்டடி தேவேந்திரத்தையும், கரையூர் மணியையும் வைத்திருந்தது" என்று ஆக யாழ்பாணிகளுக்குள்ளேயே இன்னுமொரு குட்டி யாழ்பாணிகள்...இந்த சுயநலம் எல்லோருக்கும் இருக்கு என்பதுதான் எனது கருத்து.

இன்னுமொருவன்,

எங்களுக்கு என்ன வேணும் என்ற கேள்வி நல்ல கேள்வி?

ஆனால் நான்/ நாங்கள் என்ன செய்வம் என்று கேட்பது சரியோ என தெரியாது.. இதே சுயநலத்தின் தொடக்கம் என்று சொல்லுவீர்களே/ கருதுவீர்களோ தெரியாது. யாரும் தன்னால் இயலுமானதை செய்வார்கள் அவர்களுக்குடைய வழங்கல்களும் வாய்ப்புகளும் சமனாய் இருக்கும் மட்டும். உதரணத்துக்கு இங்கே ஒருமாத லீவு எடுக்க கூடியவர்கள் 10 நாள் உர்வலத்துக்கோ, தேசிய பணிக்கோ சொல்வதும்..கைக்காசுக்கு கடையில் வேலை செய்பவர் 2 நாள் போவதும் ஒன்றல்ல. யாரையும் இதுதான் செய்யவேண்டும், அல்லது இது செய்தால் தான் உனக்கு தேசியம் கதைக்க அருகதை இருக்கு என்ற வட்டத்துக்கு கொட்டுவருவது, அல்லது அதைப்பற்றி கேட்பது சரியென நான் நினைக்க வில்லை.(நீங்கள் கேட்ட கேள்ளிக்குரிய பதிலாய் இருக்காவிட்டாலும் இதுதான் நான் இந்த இடத்தில் சொல்லக்கூடியது/நான் இந்த கேள்வியை விளங்கிக்கொண்ட முறையாகவும் இருக்கும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.