Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசுக்கான வாக்களிப்பு சட்டவிரோதமாம். கொழும்புச் சிங்களம் சொல்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரச படைகளால் தாய் மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்டு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான ஒரு நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை ஜனநாயக வழியில் தேர்வு செய்வதற்கான தேர்தலில் உலக நாடுகள் பலவற்றில் நேற்றைய தினம் வாக்களித்திருந்தனர்.

கனடாவில் குறிப்பாக ரொரண்டோவில் பெருமளவு மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் கனடாவுக்கான சிறீலங்காவின் சிங்களத் தூதுவன் இந்தத் தேர்தல் சட்டவிரோதம் என்று கூறி இருக்கிறார். எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் அது சட்டவிரோதம் என்று சொல்கிறார் என்று புரியவில்லை. சிங்கள தேசத்தின் அராஜசட்டங்கள் கனடாவிலும் அமுல்படுத்தப்படுகிறது என்ற நினைப்பில் அல்லது சிங்களப் படைகள் யாழ்ப்பாணத்தில் இருப்பது போல ரொடண்டோவிலும் குவிக்கப்பட்டுள்ள கற்பனையில் சொல்கிறாரோ புரியவில்லை.

தமிழ் மக்கள் தொடர்ந்து சிறீலங்காவில் தேர்தல்களை புறக்கணித்து வரும் நிலையில் 20% வாக்குப்பதிவுகளோடு பிரதிநிதிகளை சிறீலங்கா பாராளுமன்றத்துக்கு மிகுந்த அச்சுறுத்தல் மத்தியில் வாக்களிக்கச் செய்து தெரிவு செய்வதை அங்கீகரிக்கும் சிறீலங்காவிற்கு.. நியாயமான வன்முறைகளற்ற மக்களின் சுயாதீன கருத்தறியும் இந்த வாக்குப் பதிவு சட்டவிரோதமாகத் தெரிவதில் வியப்பில்லை.

சிங்களத்தின் பார்வை இப்போ தமிழீழ மக்களின் நாடு கடந்த அரசை நோக்கி தீவிரம் அடைந்திருக்கிறது. இதை சவாலாக ஏற்று தமிழ் மக்கள் சிங்களத்தின் அனைத்து நகர்வுகளையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்ள திசடங்கற்பம் பூணுவதே இன்றைய காலத்தின் தேவை அவசியம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

-------

Transnational polls illegal

Monday, 03 May 2010 09:46

The Sri Lankan government says the polls for a transnational government of Tamil Ealam held in Canada yesterday is illegal and is an attempt to keep the LTTE movement alive. Tamil Canadians turned out by the thousands to cast ballots in the controversial election.

“Now there is peace, no war, no killings in Sri Lanka,” Chitranganee Wagiswara, the Sri Lankan High Commissioner in Ottawa, told The Globe Sunday night. “This action, this event is trying to continue this, to keep the movement alive.”

Ms. Wagiswara pointed to April’s election of 14 Tamil members to the Sri Lankan government as a truer measure of Tamil wishes, namely, for a political voice within a united Sri Lanka.

Turnout was reportedly high in Toronto, which is home to more than half of Canada’s estimated 200,000 Sri Lankan Tamils, many of whom fled their country after civil war broke out between the separatist Tamil Tigers and the national government in 1983.

The Tigers’ defeat led supporters of Tamil independence abroad to take a novel tack to keep their dream of a homeland alive: a highly organized election of 135 “government” members, with the largest block of seats, 25, in Canada.

“It’s very smooth; I haven’t seen anything unusual,” Tam Sivathasan, spokesman for the committee for the formation of the Transnational Government of Tamil Eelam, said a few hours before polls closed Sunday night, The Globe reported.

Mr. Sivathasan’s characterization of the vote, which he said aspired to and met Canadian election standards to prevent voter fraud and corruption, contrasted sharply with that of critics of the exercise both inside and outside the Tamil community. They saw the election as no more than a front for the defeated Tigers to revive their violent, secessionist movement, and said it will only impede Sri Lanka’s new peace and prevent Tamils from moving forward, The Globe reported.

Chris Sandrasagra, secretary of the Canadian Relief Organization for Peace in Sri Lanka, was similarly critical, and said callers to his Tamil radio show in Toronto were overwhelmingly against the vote.

“We love this country and we don’t want to have any kind of exile government; we can live in peace,” Mr. Sandrasagra said.

Proponents of the transnational government election, which also saw polling in the United Kingdom, United States, Germany, France and Switzerland, said their efforts are all about a peaceful and democratic way for Tamils abroad to continue supporting their war-weary kin back home, in the face of majoritarian chauvinism by Sri Lanka’s Sinhalese-led government.

“We welcome the democratic process in any community,” said David Poopalapillai, spokesman for the Canadian Tamil Congress. “As long as the process is open and transparent, we’re happy with it.”

Mr. Poopalapillai disputed critics’ assertions that the transnational government is simply a soft rebranding of the Tamil Tigers. He said Tamils who strongly disagreed with the Tigers’ brutal approach have lined up to support the new political movement, The Globe reported.

டெயிலிமிரர். (சிங்கள தேச ஆங்கில நாளிதழ்.)

சிங்களத்தின் இச்செய்தியோடு அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களையும் நோக்குங்கள்..

http://www.dailymirror.lk/index.php/news/3485-transnational-polls-illegal.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் அவங்கள் சொன்னதை நம்பிய சர்வதேசத்திற்கு இப்போது இவர்களின் நாடுகளில் அவர்களின் முன்னிலையில் நடை பெற்றதை சட்டவிரோதம் என்பது.சர்வசேத்தையே சட்டவிரோதிகள் கள்ளர்கள் பயங்கரவாதிகள் என்று சொன்னதிற்குச் சமம் இதற்குப் பிறகாவது இவர்களுக்கு உறைக்குமா? ஆனால் ஒன்று சிறிலங்கா அரசின் முகத்திரை மெல்ல மெல்ல கிழிந்து கொண்டே வருகின்றது என்பது மட்டும் உண்மையாகிறது.

இதனை வெறும் வார்த்தைகளாக எடுத்துவிட முடியாது. நாடுகடந்த அரசாங்கத்தை முடக்குவதற்கு சிறிலங்கா அரசு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். நாடுகடந்த அரசின் வெளிப்படைத் தன்மை அதனைக் காப்பாற்றும் என்று நினைக்கின்றேன்.

மேற்குலக நாடுகள் தமிழீழ நாடுகடந்டத அரசினை, சிறிலங்காவை தமது நலன்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவதற்கு இதனைப் பயன்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட இடமுண்டு.

இலங்கையில் புலிகள் இருந்ததைவிட

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு இலங்கை அரசு அதிகம் பயப்பிடுவதைப்பார்த்தால்

நாடுகடந்த தமிழீழ அரசு விடயத்தில் நன்மை விளையும்போல் தெரிகிறது

ஒண்டும் புடுங்க முடியாது நாடுகடந்த தமிழீழ அரசால் காரணம் அதனை உடைப்பதற்காக அந்த அமைப்பில் இலங்கை அரசால் பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டார்கள். பொறுத்திருந்து பாருங்கள் நாடுகடந்த அரசு நான்காக உடைக்கப்படும் அதுயார் என்றால் புலம்பெயர் தேசியத்தூண்களாலும் தேசியம் பேசும் ஊடகங்களாலும்

நாடுகடந்த அரசை உடைக்க சிங்களம் இண்று வரை செய்யும் நடவடிக்கைகளே போதுமானது...!

இருக்கும் கருத்து வித்தியாசங்களை பெரிதாக்கி காட்டி மக்களை குழப்புதல்... அதோடு நில்லாமல் ஒட்டாது ஒதுங்கி நிற்பவர்களுக்குள் பத்தவைப்பது போண்ற நடவடிக்கைகள் எண்று சிறிது சிறிதாக செய்தால் போதுமானது...

இல்லாத வெட்டுப்பாடும் நாளடைவில் கௌரவப்பிரச்சினைக்காக வெளிப்படும்...

ஒண்டும் புடுங்க முடியாது நாடுகடந்த தமிழீழ அரசால் காரணம் அதனை உடைப்பதற்காக அந்த அமைப்பில் இலங்கை அரசால் பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டார்கள். பொறுத்திருந்து பாருங்கள் நாடுகடந்த அரசு நான்காக உடைக்கப்படும் அதுயார் என்றால் புலம்பெயர் தேசியத்தூண்களாலும் தேசியம் பேசும் ஊடகங்களாலும்

உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கின்றேன்

உங்களைப் போன்றவர்கள் இருக்கும்பொழுது அது சாத்தியம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் புடுங்க முடியாது நாடுகடந்த தமிழீழ அரசால் காரணம் அதனை உடைப்பதற்காக அந்த அமைப்பில் இலங்கை அரசால் பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டார்கள். பொறுத்திருந்து பாருங்கள் நாடுகடந்த அரசு நான்காக உடைக்கப்படும் அதுயார் என்றால் புலம்பெயர் தேசியத்தூண்களாலும் தேசியம் பேசும் ஊடகங்களாலும்

தேசியம் பேசதா (Alergy to Nation ) நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் அதற்குள் உள்நுழைந்து அது உடையும்போது உடையாது ஒட்ட வைப்பதற்குரிய வேலைகளை செய்ய முடியாயதா?

உங்களை போன்ற மேதாவிகளின் மேன்மை நிலை வெற்றிடங்கள் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கிறதே......

இதை நீங்கள் இனியும் புறக்கணிக்காது அப்பாவி மக்களுக்காக அந்த இடங்களை உங்களால் பூர்த்தி செய்ய முடியாதா???

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் புடுங்க முடியாது நாடுகடந்த தமிழீழ அரசால் காரணம் அதனை உடைப்பதற்காக அந்த அமைப்பில் இலங்கை அரசால் பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டார்கள். பொறுத்திருந்து பாருங்கள் நாடுகடந்த அரசு நான்காக உடைக்கப்படும் அதுயார் என்றால் புலம்பெயர் தேசியத்தூண்களாலும் தேசியம் பேசும் ஊடகங்களாலும்

இதை தாண்டி எவ்வளவு தூரம் வந்து விட்டோம்.இன்னும் தமிழ் மக்களை விற்க பலர் ஆலாய் பறக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவர்களை அடையாளம் காணுவார்கள்.நீங்கள் அவசரபட தேவை இல்லை. காட்டி கொடுத்தல் என்பது எமது கலாச்சாரத்தில் ஒன்று. ஆகவே மிக அவதானமாக நடப்போம். ஏதோ தமிழராய் பிறந்தபடியால் ஏதாவது தமிழருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாது விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை சிறிலங்கா அரசு தடுக்க முனையும் என்பதனைவிட இவ்வளவு காலமும் நாடு கடந்த தமிழீழ அரசினை எதிர்த்து வந்த அனைத்துலக தொடர்பகச் செயற்பாட்டாளர்கள் எல்லா நாடுகளிலும் தமது செயற்பாட்டாளர்களை போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்ததன் மூலம் இதனை அப்பட்டமான புலிச்சாயம் பூசி விட்டனர். (உருத்திரகுமாரன் அவர்களின் தனிப்பட்ட வாழ்வினை விமர்சித்த அனைத்துலக தொடர்பகச் செயற்பாட்டாளர்களுக்கு இப்போது அவரால் ஒருங்கிணைக்கப்படுகின்ற நாடு கடந்த அரசு எப்படி இனிக்கின்றது என்பது புரியவே இல்லை)

ஆகவே, சிறிலங்கா அரசு நிச்சயம் இவர்களின் விபரங்களை திரட்டி அந்த அந்த நாடுகளில் கொடுத்து இதனை தடைசெய்ய முயற்சி செய்தே தீரும்.

நீங்கள் இவற்றை எல்லா நாடுகளிலும் போட்டியிட்டவர்களை வைத்தும் வென்றவர்களையும் வைத்தும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

முன்னர் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி பல நாடுகள் புலிச்சாயத்துடன் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்புக்களாக இயங்கி வந்த உலகத் தமிழர் இயக்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர், தமிழீழப் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களுடன் பேச மறுத்து வந்தது அனைவரும் அறிந்ததே.

இப்போது நாடு கடந்த அரசுக்குள்ளும் அனைத்துலகச் செயற்பாட்டாளர்கள் நுழைந்து அடாவடி செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இதன் முதற்கட்டம் கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியிருக்கின்றது. இவ்வாறு பல நாடுகளிலும் போட்டியிட்ட அனைத்துலகச் செயற்பாட்டாளர்கள் நாடு கடந்த அரசினை இயங்க விடாது அதாவது நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றம் கூடும்போது இவர்கள் குழப்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதனைத்தான் தாம் செய்யப் போவதாக தமக்கு நெருங்கியவர்களிடமும் வெற்றி பெற்றவர்கள் கூறியிருக்கின்றனர்.

கனடாவில் வாக்களிக்கச் சென்ற இடத்தில் நின்றவர்களைப் பார்த்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. முன்னர் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களும் அடாவடி செய்தவர்களுமே நின்றிருந்தனர்.

நாடு கடந்த அரசுக்குள்ளாவது நன்கு படித்தவர்களும் மொழி ஆளுமையும் உள்ளவர்கள் சென்றிருந்தால் பல நாட்டின் பிரதிநிதிகளுடன் எமது பிரச்சினையை தர்க்க ரீதியாக வாதாடாக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். என்ன துரதிர்ஸ்டவசமான நிலை. அங்கே சென்றவர்கள் கூட மொழி ஆளுமையோ எந்தவிதத் தகுதியும் அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசினையும் விடுதலைப் புலிகளின் கொடியினையும் பிரபாகரனின் படங்களையும் தூக்கிப்பிடித்துத்தான் இவர்கள் தேசியத்தினை வலியுறுத்தப் போகின்றனர். இவற்றினை கடந்த காலங்களில் தூக்கிப்பிடித்து என்ன நடந்தது என்பதனை சிறிதளவேனும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, கள நண்பர்களே நீங்கள் இதில் கவலைப்பட்டு எழுதாதீர்கள். ஏனெனில் அனைத்துலக தொடர்பகச் செயற்பாட்டாளர்களே இதனை குழப்பியடித்து உருத்திரகுமாரன் அவர்களையும் இயங்கவிடாது கலைந்து போகவே செய்வார்கள்.

எமக்கு இப்போது முக்கியமான எதிரி சிறிலங்கா அரசோ, இந்தியாவோ அல்ல. அனைத்துலக தொடர்பகச் செயற்பாட்டாளர்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ள உங்களுக்கு இப்போது கடினமாகத்தான் இருக்கும். இன்னொரு முள்ளிவாய்க்கால் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற பின்னர் நீங்களே இவர்களை கடுமையாக விமர்சிப்பீர்கள். அந்த நிலை வரக்கூடாது எனில் அனைவரும் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுங்கள்.

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுக்கு சட்டம் என்றால் என்ன என்று தெரியுமோ? உதைப் பற்றியெல்லாம் கதைக்க ஒரு அடிப்படைத் தகுதி வேணும்.

நாடுகடந்த அரசாங்கம் தனது வெளிப்படைத் தன்மையைப் பேணினால் போதும், அதனை உடைக்க முற்படுபவர்கள் இலகுவாக வெளியேற்றப்பட்டு மக்கள் முன் அடையாளப்படுத்தி விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மொழி தெரிந்தவர்கள் என்றால் பலர் உள்ளார்கள். உணர்வாளர்கள் பலர் தெரியப்பட்டுள்ளார்கள். தாரணி மட்டுமே போதும் மொழியாகட்டும் செயலில் ஆகட்டும். குறிப்பாக இரு சகோதரிகள்.மொழியை வைத்து என்ன செய்வது? ரஸ்ய புட்டினோ அல்லது யப்பானிய யமகுச்சியோ அவர்களின் மொழியில் தான் பேசுகிறார்கள். மொழி பெயர்பாளர் போதும் மொழி பெயர்க்க.

பார்ப்போம். வெறும் சக்கல் வெடிகள் தான் என நிர்மலன் குறிப்பிடுவது நம்ம கூடிய தகவல் இல்லை. ஏதோ வயிறு எரிச்சலில் எழுதியது போல் உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசை எதிர்கொள்ளத் தயார் என பீரிஸ் தெரிவித்துள்ளார்: இலங்கை அரசுக்கு தற்போது இது பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்து.

இலங்கை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கடந்த வாரம் பூட்டான் சென்று திரும்பியுள்ள நிலையில், இன்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைய தேர்தல் முடிவுற்ற நிலை காணப்படுவதால், அந்த நாடு கடந்த தமிழீழ அரசால் விடப்படும் சவால்களைச் சந்திக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்துத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்தந்த நாடுகளுக்குரிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு தாம் பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் உலகெங்கும் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை அரசோ இதனால் என்ன ஏற்படப் போகும் சவால்களை எதிர்கொள்ளவும், இதனை முடக்கவும், பல வெளிநாடுகளை இராஜதந்திர ரீதியாகத் தொடர்புகொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இலங்கை அரசுக்கு தற்போது இது பெரும் சவாலாக அமைந்துள்ளதாக உலக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

http://seithy.com/breifNews.php?newsID=27542&category=TamilNews

நாடுகடந்த அரசை குழப்ப நினைப்பவர்கள் உள்ளுக்குள்ளேயே இருந்தால் கடினந்தான்.

இன்று எல்லோரும் தேசியம் பேசுவதாலோ என்னவோ தேசியத்தைப் பெற்றிப் பெசுவேரைக் கண்டால் மனம் நம்ப மறுக்குது. ஒரே தேசியம் பெசுவோருக்குள் எப்படிப் பிளவுகள் வரும்? தனிப்பட்ட ரீதியில் பிளவுகள் இருந்தாலும் அந்த தேசியத்தின் மீது உள்ள பற்று அவர்களை ஒன்று சேர்க்கிறதா?

அப்படியும் சேர்க்காது போனால் அந்தத் தேசியத்தால் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் நான் ஒன்றும் வயிற்றெரிச்சலில் எழுதவில்லை. யாவற்றையும் கூர்ந்து கவனித்து நீங்களும் உங்கள் தரப்புக் கருத்தினை வைக்கலாம். அதனைவிட்டு விட்டு மேலேழுந்த வாரியாக என்னைக் குறை கூறிப் பிரயோசனமில்லை.

ஏனெனில் இது புலம்பெயர் தமிழர்களின் தலைவிதியை இவர்கள் தீர்மானிக்கவில்லை. மாறாக தாயகத் தமிழர்களின் தலைவிதியைத்தான் இவர்கள் தீர்மானிக்கப் போகின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசையும் அதன் இணைப்பாளர் உருத்திரகுமாரனையும் கடுமையாக விமர்சித்த இவர்கள் திடீரென எல்லா நாடுகளிலும் தமது ஆட்களை முன்நிறுத்தி தேர்தலில் வெற்றிபெற வைத்திருப்பதன் நோக்கம்தான் என்ன?

இவர்கள் கடந்த காலத்தில் செய்த அத்தனை அடாவடிகளும் நிச்சயம் தொடரவே செய்யும். அப்போது நான் வயிற்றெரிச்சலில் எழுதினேனா அல்லது சரியாகத்தான் குறிப்பிட்டுத்தான் எழுதினேனா என்பதனை நீங்கள் குறிப்பிடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் நான் ஒன்றும் வயிற்றெரிச்சலில் எழுதவில்லை. யாவற்றையும் கூர்ந்து கவனித்து நீங்களும் உங்கள் தரப்புக் கருத்தினை வைக்கலாம். அதனைவிட்டு விட்டு மேலேழுந்த வாரியாக என்னைக் குறை கூறிப் பிரயோசனமில்லை.

ஏனெனில் இது புலம்பெயர் தமிழர்களின் தலைவிதியை இவர்கள் தீர்மானிக்கவில்லை. மாறாக தாயகத் தமிழர்களின் தலைவிதியைத்தான் இவர்கள் தீர்மானிக்கப் போகின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசையும் அதன் இணைப்பாளர் உருத்திரகுமாரனையும் கடுமையாக விமர்சித்த இவர்கள் திடீரென எல்லா நாடுகளிலும் தமது ஆட்களை முன்நிறுத்தி தேர்தலில் வெற்றிபெற வைத்திருப்பதன் நோக்கம்தான் என்ன?

இவர்கள் கடந்த காலத்தில் செய்த அத்தனை அடாவடிகளும் நிச்சயம் தொடரவே செய்யும். அப்போது நான் வயிற்றெரிச்சலில் எழுதினேனா அல்லது சரியாகத்தான் குறிப்பிட்டுத்தான் எழுதினேனா என்பதனை நீங்கள் குறிப்பிடுங்கள்.

அண்ணோய் உங்களிற்கு இருக்கிற கவலையைப் போல பல மடங்கு கவலைகள் தொல்லைகள் தொந்தரவுகள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான திட்டத்தை வகுத்து செயற்படுத்துபவர்களுக்கு இருக்கும். அவர்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். கடந்த காலங்களில் இருந்து நீங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனும் கசப்பான பாடங்களை படித்துள்ளான்.

நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலில் நின்ற அனைவரும் சில வாக்குறுதிகளுக்கு அமைவாகச் செயற்படுவதாக உறுதிமொழி எடுத்துத்தான் தேர்தலில் நின்றுள்ளனர். அதுமட்டுமன்றி நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் யாப்பின் பிரகாரம் வாக்குறுதிகளுக்கு மாறாக செயற்படுபவர்கள் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை இழப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் வரை அவர்களை கூட வைத்திருந்து குழிதோண்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல் ஆணையம் சில கடுமையான முடிவுகளை முறைகேடுகளை செய்ய முற்பட்டவர்கள் மீது எடுத்துள்ளது. இது அதற்கான நல்ல ஆரம்பம் என்றே நினைக்கிறேன். அதுமட்டுமன்றி பல இளைய தலைமுறையினர் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வளர்ந்த ஒட்டுக்குழு மாற்றுக் கருத்து மாஜாயால அரசியல் கபடம் அறியாத நல்ல உள்ளங்கள் உறுப்பினர்களாகி இருக்கின்றனர். இதுவும் நல்ல ஒரு சமிக்ஞை ஆகும்.

அதிகம் அலட்டி.. உங்களின் ஆதங்கம் என்ற பெயரில்.. செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகங்களை விதைப்பதை முதலில் கைவிடுங்கள். எமக்கு வேண்டாம் இந்த ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாஜாயால சிங்கள புலனாய்வு ஒட்டுண்ணி அரசியல். அன்று தொடக்கம் இன்று வரை இதையே எங்கும் செய்து வருகிறீர்கள். பிரபாகரன் ஈழம் வெல்வாரோ.. உமாமகேஸ்வரன் என்ன புடுங்கிறானோ.. இப்படிக் கேட்டுக் கேட்டே காலத்தை ஓட்டினீங்களே தவிர.. ஈழம் வெல்ல ஒரு புல்லுக் கூட புடுங்கி இருக்க மாட்டீர்ங்கள். :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வன்முறையைக் காட்டி பயங்கரவாதி என்றால்களே தவிர புலிகளை தமிழீழம் கேட்டதற்காக எவரும் பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டதாகத் தெரியவில்லை.

தமிழீழம் புலிகளின் தாகம் என்றிருந்ததை விட தமிழரின் தாகம் என்பதை உலகிற்கும் சிங்கள தேசத்திற்கும் ஜனநாயக வழியில் சொல்லும் நேரம் இது.

இதோ நாடு கடந்த தமிழீழ அரசைக் கண்டு சிங்களம் அதற்கும் புலிச்சாயமும் பயங்கரவாத முலாமும் பூச வெளிக்கிடுறது. இதுதான் எமக்கான செயற்படும் நேரம். சிங்களம் மேற்குலக நாடுகளை நாடி வரும் போது மேற்குலக நாடுகளும் சிங்களத்தை தமது காலடியில் விழ வைக்க இந்த நாடு கடந்த தமிழீழ அரசான எமது முயற்சியை பாவிக்க விளையும். பயனடைந்த பின் தடைபோட்டாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. எனவே நாம் இந்த இரண்டு பெரும் பூதங்களிடையேயும் இருந்து சாதுரியமாக விளையாட வேண்டிய அரசியல் சதுரங்கமாக இந்த நாடு கடந்த தமிழீழ அரசு மாறி வருகிறது.

--------------

Lanka takes on LTTE polls

The Government says they will ask their embassies to work closely with the respective countries in dealing with LTTE front organizations that organize transnational polls by the so called provisional LTTE government.

“We will provide information with regard to these LTTE front organizations and the negative impact they can have on their countries,” External Affairs Minister Prof. G.L. Peiris said.

According to him the Government will not pay attention to these transnational polls that were held in Canada and Australia. “We have had two major elections in the country since the end of the war and the Government has won with nearly a 2/3 majority, and these so called polls will not have any effect,” Prof. Peiris said.

According to him they are looking forward to carrying out preventive action against the propaganda that is created by these polls while on the other hand educating them on Sri Lanka’s efforts of moving forward.

http://www.dailymirror.lk/index.php/news/3503-lanka-takes-on-ltte-polls.html

Edited by nedukkalapoovan

புலிகளை வன்முறையைக் காட்டி பயங்கரவாதி என்றால்களே தவிர புலிகளை தமிழீழம் கேட்டதற்காக எவரும் பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டதாகத் தெரியவில்லை.

தமிழர்கள் ஈழம் கேட்பது தப்பிலை ஆனால் கேட்கிற முறை சரியில்லை(அதாவது ஆயுதமுலம் கேட்ககூடாது)என்று ஒரு ராஜதந்திரி அறிக்கை விட்டவர்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமீழீழ அரசின் தேர்தலில் குழறுபடிகள் இங்கிலாந்தின் சில இடங்களில் நடைபெற்றுள்ளன. இக்குழறுபடிகளே நாடுகடந்த அரசைக் கைப்பற்ற சிலர் முனைவதற்குச் சாட்சி. வென்றவர்களில் பலர் இதயசுத்தியுடன் செயற்பட முனையாவிட்டால், நாடுகடந்த தமிழீழ அரசும் பூமி கடந்துவிடும்.

இலங்கை அரசு தற்போது நடைமுறைப்படுத்த எண்று சொல்லப்பட்டு செய்யும் முக்கிய விடயம் நிதி சேகரிப்பு... யாரிடம் இருந்து எண்றால் அது புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து தானாம் என்கிறார்கள்...

மிக முக்கியமாக மீள் குடியேற்றத்துக்கு புலம் பெயர்ந்தவர்கள் தான் ( மட்டும் தான்) உதவ வேண்டும் எனும் மனநிலையை தோற்றுவித்து கொண்டு இருக்கிறார்கள்...

புலம் பெயர்ந்தவர்களின் பணம் அவலப்பட்ட மக்களுக்கு போவதானால் நல்லதுதான்.... ஆனால் அதில் எவ்வளவு விகிதம் நேரடியாக தமிழ் மக்களுக்கு போகப்போகிறது என்பதே இப்போதைய பிரச்சினை...

அவன் எதற்காகக நிதியை கேட்க வேண்டும். நாம்தானே கோடை விடுமுறைக்கு அன்னியசெலாவணியை அவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகின்Nறூம். வெட்கம் கெட்ட தமிழன். அங்கே ஒரு| இனமே மண்ணிற்குள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்போது அந்த வீதிகளின் வழியே பயணிக்க நினைக்கின்றான். சொகுசுவாழ்க்கையை அங்கு விளம்பரம் செய்ய நினைக்கும் ஈனத்தமிழன் இருக்கும்வரை ஈழம் கானல் நீர்தான்.

நோர்வேயில் மாத்திரம் கோடைவிடுமுறைக்கு இலங்கைக்கு போவதற்கு 8200 பேர் பதிந்திருக்கின்றார்கள். கொடுமை சாமி

தமிழர்களை ஒரு குறிப்பிட்ட கோட்டுக்கு மேல் போகமல் இந்தியா பாத்துக்கொள்ள்கிறது..

வியாபாரத்தில் மிக மிக கஸ்டப்பட்டு செழிப்பவர்களை. உடனுக்குடன் தூக்குகிறார்கள்.

சொத்து பறிமுதல் செயப்படுகிறது. சொஞ்சம் தெண்டப்பார்த்தால், குடும்பத்தோடு கொலை செய்யப்படுகிறார்கள்.

இதற்கு EPDP அடியாட்கள் இதற்க்கு உபயோகப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கை வைக்காமல் எமக்கு விமோசனம் இல்லை.......!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு பற்றிச் சிங்கள அரசு பயம் கொள்கிறது என்பதற்கு அதன் நடவடிக்கைகளே காட்டிக் கொடுக்கின்றன.காரணம் இதற்குப் பயங்கரவாத முலாம் பூசுவது கடினம்.உதவிக்கு இந்தியாவோ சீனாவோ வரமுடியாது.அவர்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது.ஆகவே அவர்கள் உள்ளே புகுந்துள்ளவர்களை வைத்துத்தான் குழப்பம் செய்ய முனைவார்கள்.வெளிப்படைத்தனமை இங்கே நிலவினால் அவர்கள் உள்ளே புகுந்தாலும் அவர்களின் குழப்பம் எடுபடாது போகும் எதற்கும் ஏற்பாட்டாளர்களும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும்.

தலைவனின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களே நாடு கடந்த அரசில் தொடர்ந்து நீடிக்கமுடியும் எதிராக செயற்படுபவர்களை இலகுவில் இனம் காணலாம்

பொறுத்திருந்து இவர்களது செயல்வடிம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம் மாறாக அமையும் பட்சத்தில் அதன் விளைவு அவர்களுக்கே........???? தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.