Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்? : கீர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்? : கீர்த்தி

கீர்த்தி அனுப்பியிருந்த இந்தக் கட்டுரை இனியொருவின் கருத்தல்ல. இங்கு கூறப்பட்ட சம்பங்களிற்கும் கருத்துகளுக்கும் நாம் பொறுப்பாளிகளுமல்ல. எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும் புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலம் இலங்கையில் மக்கள் யுத்தமொன்றை உருவாகுமானால் அங்கு மக்கள் விடுதலை பெற வாய்புண்டு. விடுதலைக்காகவே பங்களித்த மக்கள் தன்னம்பிக்கை இழத்தலாகாது என்ற வகையில் இக்கட்டுரை ஒரு உரையாடல் வெளியை உருவாக்குமானால் மகிழ்ச்சியடைவோம். -இனியொரு

மூன்று தசாப்த கால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது நம்புதற்கரிய இழப்பொன்று. எனினும் அந்த உண்மையின் முதலாம் வருட நினைவுதினம் இன்றாகும்.

ஓரிரண்டு தசாப்த காலங்களாக உலகின் பார்வை தென்னாசியா மீது திருப்பி வைத்திருந்தவர்கள் புலிகள் என்பதையும், அதன் தலைவர் பிரபாகரன் ஒரு ஆளுமை நிறைந்த மனிதராக அப்பொழுதில் பார்க்கப்பட்டார் என்பதும் எதிரிகள் கூட ஏற்கிற ஒரு யதார்த்தம்.

அவ்வாறான நிலையிலிருந்த விடுதலைப்புலிகள் இன்று வட-கிழக்குப் பிரதேசங்களில் முற்றாக இல்லை என்பதோடு, அடுத்த தலைமைக்கான ஒருவரை விட்டுவைக்காது முற்றாக எல்லாருமே அழிந்து போனார்கள் என்பது ஏற்பதற்கு சற்றுக்கடினமான உண்மை.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துத் தளபதிகளுமே ஏதோ ஒரு நம்பிக்கையின் பிரகாரமே முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றார்கள். உயிரைக் கொடுத்துப்போராடினார்கள். ஆனால் அவர்களின் மரணத்தில் மகிழ்பவர்களாய் அவர்களிற்கு இறுதிவரை நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த புலிகள் இன்று மாறிவிட்டார்கள்.

ஏனென்றால் பிரபாகரனும் அவரது படைக்கட்டுமானமும் நினைவு கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்களின் வாரிசுகளாக அறிவித்து ஐரோப்பாவில் பதுங்கியிருப்பவகேளே மறைக்கிற ஒரு கொடிய நேரப் பதிவு இது. தங்களது தலைவன் என்றல்ல ஒரு சிறந்த போராளியென்றாவது அல்லது கொண்ட கொள்கைக்காக உயிர் மாண்ட ஒரு மனிதன் என்ற மரியாதைக்காவது கௌரவிக்கப்பட வேண்டிய புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.

வெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்த தொண்டர்களாலேயே பிரபாகரனின் மரணமும், பிரபாகரனியமும் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் அற்ற ஒரு குழுமமாக எதிராளிகளால் வர்ணிக்கப்பட்ட புலிகள் அவ்வாறானவர்களல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்த பல தமிழர்களையும் மாற வைக்கிற அளவிற்கு இவர்களது இப்போதைய உள்ளக மோதல்கள் வியாபித்திருக்கின்றன.

எந்த ஒரு போரிலும் வன்மமாகப் போராடும் விடுதலைப்புலிகள் இந்த ஈழப்போர் நான்கில் செய்மதித் தொலைபேசியூடாகக் கதைத்தபடி, தங்களின் புலம்பெயர்ந்த தொடர்புகளின் அறிவுறுத்தல்களின் படி போராடினார்கள். அதுவே அவர்களின் முடிவுரையெழுதலாகவும் அமைந்து விட்டது.

இந்தத் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் மேற்குலக நாடுகளின் பேரிலான கற்பனாவாதத்தை விடுதலைப்புலிகள் மத்தியில் விதைத்து விட்டதோடு தங்களது புலம்பெயர்ந்த தொடர்புகள் மந்திரத்தால் மாங்காய் வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள் என்ற எண்ணத்தையும் வலுவாக களத்திலிருந்த புலிகளிற்கு ஏற்படுத்தியிருந்தது.

லண்டனில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். ஜேர்மனியில் 50 ஆயிரம் பேர் திரண்டனர், ரொறன்டோவில் 1 லட்சத்து ஐம்பதினாயிரம் திரண்டனர். லண்டனில் மெற்றோ போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. ஜேர்மனியில் சுரங்கப்பாதைப் போக்குவரத்துத் தடைப்பட்டது. ரொறன்ரோவில் ஹைவே மறிக்கப்பட்டது போன்ற கூப்பாடுகள் வன்னியில் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால் உண்மை யாதெனில் மேற்குலக நாடுகளின் புலிகளின் வழிநடத்துனர்களின் செயற்பாடுகள் அந்த அரசாங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடைய தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இருந்த ஆதரவைக் குறைத்து அவர்களை தமிழர் விவகாரங்களிலிருந்து தனிமைப்பட வைத்தது.

இதற்கும் மேலாக ஊடக ஆதிக்கத்தைக் கொண்டிருந்த புலிகள் உண்மைகளை மறைத்து மாயை நிலையிலே புலம்பெயர்ந்த மக்களை வைத்திருந்தார். ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையிலும், பிரதேச கட்டுப்பாடு முறியடிக்கப்பட்ட நிலையிலும் வன்னித்தலைமை சொன்ன செய்திகளை புலம்பெயர் புலிகள் மக்களிடம் நேர்மையாகச் சொல்லவில்லை. முடிவு கடலை நோக்கிக் கண்ணெறிந்தபடியே செய்மதித் தொலைதொடர்பில் புலம்பெயர்ந்த தமது தொடர்புகளுடன் உரையாடிய படியே அங்கிருந்தவர்கள் புலிகளின் தலைமை களமாடி மடிந்தார்கள்.

களத்தின் உண்மை நிலையை புலத்திற்கு உரைக்காத புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளார்கள் களத்தையும் புலத்தையும் மாயையில் வைத்திருந்ததே இந்தப் போராட்டத்தின் இழப்பிற்கான முழுமுதற்காரணம். புலிகளின் பலம் தொடர்பான அதீத கற்பனையை விதைத்து விட்ட இவர்கள், 15,000 புலிகள் தாக்குதலிற்காக காட்டிற்குள் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியை மே மாதம் பரப்பி விட்டு விடுதலைப்புலிகள் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பொன்றை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.

இதனால் அவர்கள் பெற்ற நன்மை எதுவெனில் இறுதிநேரத்தில் கூட சேர்க்கப்பட்ட பெருமளவு நிதியேயாகும். இதுவே இன்றைக்கும் பிரபாகரன் இருக்கிறார். காட்டிற்குள் எங்கள் படையணிகள் இருக்கின்றன என்ற பொய்களை புலம்பெயர்ந்த புலிகள் பரப்புவதற்குக் காரணமாகும்.

காட்டிற்குள் ஒரு புலிகூட இல்லை. இருந்தவர்களையும் இவர்கள் அரசாங்கத்தின் கூலிகள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறி அந்நியப்படுத்தி விட்டார்கள். சிறீலங்கா கூறுவது போல ஒரு புலிகூட அங்கே இல்லை. எனவே இவர்கள் இனிப் போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்குவதற்கான தகுதியை ஒரு சிறு அளவு கூட கொண்டிராத ஒரு கூட்டமாக மாறி விட்டார்கள்.

கவனிக்க ஊடகதர்மம் பற்ற இரவுபகலாக அழுது வடிக்கும் தமிழ்நெற், பதிவு, சங்கதி போன்ற இணையத்தளங்கள் இன்றுவரை மக்களிற்கு உண்மையை மறைக்கும் தளங்களாகவே செயற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் முழு நிதிச் செயற்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிற தமிழ்நெற் இணையத்தளத்தின் பொறுப்பாளர் நோர்வே ஜெயா புலிகளின் சம்பளப்பட்டியலிலுள்ள ஒரு ஊழியர் என்பதும், தொடர்ந்து சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதுமே பிரபாகரனின் மரணத்தை இன்றுவரை அவர் மறைப்பதற்குக் காரணமாகும்.

உண்மையை மறைப்பவன் விடுதலைப்போராளியல்ல. புலிகளால் ஊதியத்திற்கு ஊதியத்திற்குப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வழியாக புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். பிரபாகரன் இருக்கிறார் என்ற பொய்யின் மூலம் பணம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் மக்களை உணர்ச்சி அரசியலில் வைத்திருக்கிறார்கள்.

புலத்திற்கும் களத்திற்குமான புரிந்துணர்வின்மையானனது கட்டுவதற்குக் கந்தல் துணி கூடக் கிடைக்காத ஒரு தருணத்தில், கந்தல் துணி போதும் என களம் தவிக்க, கந்தல் துணி வேண்டாம் பட்டுத்துணி வேண்டும் என புலம் அடாவடித்தனம் பண்ணியதே இந்த முள்ளவாய்க்கால் துன்பத்திற்கான அடிப்படை.

ஆயுதக்கப்பல்களை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகளின் கப்பற்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காகவே வணக்காமண் என்ற கப்பலை அனுப்பி, சிறீலங்காக் கடற்படையின் பாதுகாப்பு வலயத்தை மேலும் பலமாக்கிய புலம்பெயர்ந்த புலிகளின் மதிநுட்பத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகளேயில்லை.

இனிக்கப்பல்கள் வருவதற்கே வாய்ப்பில்லை என்றவுடன் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலிற்கு உள்ளான கப்பல்கள் போக மீதி இருந்தவை ஆழ் கடலில் தமது ஆயுதங்களைக் கொட்ட பிரபாகரன் உத்தரவிடுகிற அளவிற்கு அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டுப்பிரிவினரின் செயற்பாடுகளின் பின்னடைவு இருந்தது.

கஸ்ரோ குழுமம் என்ற இந்தக் குழுவின் பேச்சை தீவிரமாக நம்பிய பிரபாகரன் அதுவரை தொடர்பாளராக இருந்த கே.பி. என்பவரை ஓரங்கட்டி விட்டு கஸ்ரோ சார் அணியிடம் வெளிநாட்டுப் பொறுப்புக்களை ஒப்படைக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகள் பற்றிய அல்லது புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் பற்றிய எந்தவொரு அறிவோ அனுபவமோ இல்லாதவர்களை இவற்றைக் கவனிக்குமாறு அனுப்பபட்டதால் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள கஸ்ரோவிற்கு ஆதரவானவர்கள் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை. இதுவே இவர்களின் தோல்வி முகமாயிற்று.

இவர்களின் தொடர் தோல்விகளைப் பிரபாகரன் கிரகித்த போது போர் முடிவுறும் நிலையை அடைந்திருந்தது. 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கே.பியுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்து பழைய நிலையையடை பிரபாகரன் விரும்பினாலும் அதற்கான காலம் பிரபாகனிற்குப் போதாமலிருந்தது.

எனினும் மே மாதம் 8ம் திகதி விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முழுப்பழியும் கஸ்ரோ குழுமத்தின் மீதே பிரபாகரனால் சுமத்தப்பட கஸ்ரோ நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்கிறார். இது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களிற்குத் தெரியாமலே நடக்கிறது. பிரபாகரனால் போராட்டத்தின் இறுதியில் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட குழுமம் கஸ்ரோ குழுமம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

இவ்வாறு கஸ்ரோ இறந்ததே தெரியாமல் இருந்த கஸ்ரோவின் வெளிநாட்டுத் தலைமைத் தொடர்பாளர் நெடியவன் மே 14ம் தேதி திருமதி அடேல் பாலசிங்கத்தைத் தொடர்பு கொண்டு தனக்கும் கஸ்ரோவிற்கும் கடந்த பல நாட்களாகத் தொடர்பு இல்லையென்ற தனது கவலையை வெளியிடுகிறார். அவ்வளவிற்கு அந்தக் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் ஐரோப்பிய. வுட அமெரிக்க நாடுகளில் நிதி சேகரிப்பை மட்டும் நிறுத்தவேயில்லை.

மறுபுறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும் கஸ்ரோவின் அடுத்த நிலைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள் மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இது தமது நிலைமையில் ஏதோ ஒரு மாற்றம் வந்துவிட்டது என்பதை புலம்பெயர்ந்த கஸ்ரோவின் “முன்னைநாள்” தொடர்புகளிற்கு காட்டி நிற்கிறது. எனவே அவர்கள் மௌனமாக கே.பி. செய்வதைப் பார்த்தவாறு தமது நாட்களை ஓட்டுகின்றனர்.

குறிப்பாக கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து கே.பி.யினால் பரிமாறப்பட்ட முக்கிய தகவல்களை பிரபாகரனிடம் பகிர்வதற்கான தொடர்பாளரான வேல் என்ற இடைநிலைத் தளபதிக்கு பிரபாகரனிடம் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறாமல் தங்களின் ஊடகவே அதனை செய்த கஸ்ரோ பிரிவின் செயற்பாடே பிரபாகரனை அதியுச்ச கோபத்திற்கு இறுதிநாட்களில் ஆட்படுத்தியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளே அவர்களை துரோகிகள் என அறிவிப்பதற்கு பிரபாகரனை இட்டுச் சென்றது.

மே 17ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த கஸ்ரோ குழுமம் தலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கஸ்ரோவின் தலைமைத் தொடர்பாளராக நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை ஓரங்கட்டுகிறது.

நெடியவன் என்பவர் ஒரு ஆளுமை நிறைந்த புலியல்ல. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களிற்கு அழைத்துச் செல்வதே அவரது தொழில். ஆவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல்வயப்பட்டதால், கஸ்ரோவின் அனுமதியோடு அவரை மனமுடித்து நோர்வேயில் வதியும் ஒரு புலி.

இவ்வாறு மணமுடித்து வெளிநாடு சென்றவரை கஸ்ரோ தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்ட அவமானம். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் புலிகளின் சொத்துக்களைப் வசப்படுத்திக் கொள்ளவும், புலிகளின் ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தலைவராக புலம்பெயர்ந்த புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

மறுபுறத்தே காலம் தனது பக்கமில்லையென்றதை பிரபாகரன் உணர்ந்த போது அவரது செல்வங்களான சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும் களப்பலியாகியிருந்தனர். சயனைட் வில்லை பலவந்தமாகப் நம்பிக்கைக்குரியவர்களால் பறிக்கப்பட்ட பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலானவர்கள் 15ம் தேதி மேற்கொண்டார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் உடைக்கப்பட்டு சென்ற கரும்புலிகள் தலைமையிலான அணியினால் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைக்க முடியவில்லை. இத்தாக்குதலில் பொட்டம்மானும் உயிரிழக்கிறார். பிரபாகரன் மீண்டும் முள்ளிவாய்க்காலிற்குள் முடங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் பிரபாகரனும், தென்முனையில் சூசையும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.

இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த சூசை கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என. உடனே கே.பி.

படைகளையும் அரசாங்கதையும் திசை திருப்ப ஒரு அறிக்கை வெளியிடுகிறார். பிரபாகரனும் 2000 போராளிகளும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் இருப்பதாக. இது அந்த இடத்தில் பிரபாகரன் இல்லை என்று நம்ப வைப்பதற்காக

ஆனால் அடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்ட சூசை தலைவர் வீரச்சாவு என்று தெரிவித்துவிட்டு வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால் தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார். கூடவே மதிவதனி பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் என பிரபாகரனின் சந்ததியே நேர்மையாக போரில் மடிகிறது.

கே.பி.க்கு அதன் பின்பு சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு மீண்டும் வரவேயில்லை. சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த படம் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முழுதாக முற்றுப் பெற்றது.

ஆனால் இப்போது தப்பி சிறையிருக்கும் விடுதலைப்புலிகளில் வெளியுறவுத் தொடர்பாளர் திலீபன், வேல் மற்றும் தொலைதொடர்புப் பரிவர்த்தனைப் பொறுப்பாளர்கள்; புனர்வாழ்வு பெற்று மீண்டு வந்தால் அவர்களால் சிறிலங்கா அரசிற்கு இணையாக யுத்தக்குற்றவாளிகள் ஆக்கப்படப்போவது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களும். ஓவ்வொரு நாடுகளிலும் தமிழ் மக்களைப் பொய் கூறி ஏமாற்றிய புலிகளின் முகவர்களுமேயாகும்.

போராட்டத்தின் முற்றுப் பெறுதலோடு தாயகத்தில் எஞ்சியிருந்த புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி தயாமோகன் உள்ளிட்ட பலர், செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி உள்ளிட்ட பலரையும் இலங்கையிலிருந்து மீட்டெடுத்த கே.பி. செய்த ஒரு செயல் அவரது முடிவிற்குக் காரணமாயிற்று. நெடியவன் அல்ல புலிகளின் தலைவர். தானே புலிகளின் தலைவர் என கே.பி. அறிவித்த மூன்றாம் நாளே சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவால் கைதியாக்கப்படுகிறார்.

இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த ஒருவர் கைதியாக்கப்படுகிறார். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் புகுவதாக புலம்பெயர் புலிகள் அறிவிக்கிறார்கள். தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் அறிவிக்கின்றனர்.

இப்போது விளங்குகிறதா என்ன நடந்தது என்று? புலிகளின் உள்ளிருந்து அறுக்கும் பகை நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அதற்கு உதாரணம் நோர்வேயில் கலவியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் என்கிற ஒரு சிறு பையன்.

(This website and its Articles are copyright of inioru.com – © inioru.com 2007-2010. All rights reserved. For republication or reproduction please provide the complete link of the article and the name of this website. email:inioru@gmail.com).(இனியொரு இணையத் தளத்தில் வெளிவரும் கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் போது கட்டுரைக்கான தொடுப்பையும் தயவுசெய்து வெளியிடவும். அச்சு மீள்பதிவிற்கு அனுமதி பெற inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.)

http://inioru.com/?p=12918

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைபிடிப்போர் மல்லாத்துவார் நாமள் சொன்னால் பாவம்.

தங்களுக்கு உடன்பாடும் நம்பிக்கைய்ம் இல்லாத விடயத்தை இன்னும் ஒரு அரசியல் வெளியிட்டு இருக்க வேண்டும் எண்று இல்லை... ஆனால் எங்களுக்கு இதில் உடன் பாடு இல்லை எண்று சொல்லிக்கொண்டு இணைப்பது என்பதின் காரணம் ஒண்றுதான்... தங்களை இனம் காட்டிக்கொள்கின்றனர்...

KP பற்றிய புகழ்ச்சியை படித்ததுமே ஒரு உண்மை தெளிவாக புரிந்து விட்டது... இலங்கை அரசுக்கு சாதகமான அறிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது...

சில சம்பவங்களை இப்படித்தான்னிருக்கும் என்பதை மறைத்து உண்மைபோல் எழுதுகிறார்கள். உண்மைகள் இதுவரை எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. 30 வருடப் போராட்டப் பின்னணியைக் கொண்ட விடுதலைப்புலிகள் இப்படியான முடிவிற்கு ஏன் இடம்கொடுத்தார்கள்? என்ற கேள்வியின் அடிப்படையிலேயே வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களுக்குள் கேபியைப் புகழ்ந்து வந்த 2வது கட்டுரை இது. தேசியத்தலைவருக்கும் உயர்மட்டத் தளபதிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் இந்தக் கட்டுரையாளர் எவ்வாறு நேரே பார்த்த மாதிரி எழுகின்றார் எனத் தெரியவில்லை.

என்றைக்கும் மற்றயவர்களின் கைகளை நம்பாமல் போராடிய எம் தலைவன் கடைசிப்போரில் உலகத்தை நம்பி இருந்தான் என்பது எல்லாம் பொருத்தமானதா? அதுவும் முள்ளிவாய்க்காலில் வைத்து அதிசயம் நடக்கும் என்று அவன் நம்பியிருக்கமாட்டன். தலைவர் இறுதிவரை வன்னிமண்ணிலே நிற்பதற்கான பிடிவாதத்தோடு தான் இருந்திருக்கின்றார் என்றே எண்ணுகின்றேன். இளங்கோ அண்ணா அனுதாரபுரத் தாக்குதல் நேரமே சொல்லுவார். தலைவரின் பாதுகாப்பை எங்களின் கைகளில் விட்டுச் செல்கின்றேன் என்று.

அப்போதே எதிரி தொடர்பான தெளிவோடு தான் இருந்திருக்கின்றார் என்பது புரியும். 2வது தமிழீழத்துக்கு வெளியே ஒரு நட்புநாட்டை நாம் உருவாக்கவில்லை என்பது தான் புலத்தமிழனின் மிகப்பெரிய தவறாக இருந்திருக்கமுடியும். இப்போதும் சரி, அப்போதும் சரி பகையைத் தான் உருவாக்கிக் கொள்கின்றானே தவிர, நட்புநாட்டின் அவசியத்தை மறந்து கொள்கின்றான்.

தலைவர் 20 நாடுகளோடு தனித்து நின்று போரிட்டது அவருக்குப் பெருமை. ஆனால் 20 நாடுகளும் ஏன் பகைக்க வேண்டி வந்தது என்றால், நட்பு ஆக்காமல் விட்டது புலத்தானின் தவறு.

உலகத்திலே எந்தவொரு சமுதாயமும் திரட்டமுடியாத மக்கள் பலத்தை காட்டியிருக்கின்றோம். அது முதலே செய்யாதது தான் தவறே அன்றி, அது திரட்டப்பட்டதால் புலிகள் ஏமாந்து போனார்கள் என்பது எல்லாம் பொய்க் கதை. ஏன் என்றால் அந்தப் பலம் தான் தனக்கான எதிர்கால எதிரி என்பதை எதிரி நன்றாகவே உணர்வான்.

இத்தனை போரளிகள், மக்கள், ஊனமுற்றவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டிய தேவையும் அவசியமும் இயக்கத்திற்கு இருந்தது. தலைவர் வெளியேறாமல் இருந்திருந்தால் அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும். அவர்களை விட்டு விட்டு, தான் தனியே தப்பிக்கும் மனநிலைவயில் அவர் இருந்திருக்காமல் இருக்கலாம்.

இதற்காக வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் சுத்தமானவர் என்றில்லை. தெரியும். எத்தனை பேர் திடீர் செல்வந்தார் ஆனார்கள் என்பதும், தலைவர் வந்து சொல்லும் வரை என்று பொதுப்பணத்தில் வாழ்க்கை நடத்துகிக்ற ஒரு சிலரும் நன்றாக இனம் காட்டப்பட வேண்டியவர்கள்.

நான் அறிந்தவரை கஸ்ரோ அண்ணா நஞ்சருந்தி சாவடையவில்லை. இறுதிநாள் வரை இருந்திருக்கின்றார்.

இத்தனையையும் மீறி அகனிம்சை வழியில் நாம் புலத்தில் எவ்வாறான போராட்டத்தை முன்னெடுத்துச் சிங்கள அரசினைத் தோற்கடிப்பது தான், எம்மக்காக வீரச்சாவடைந்தவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாக அமையும்.

கே பி கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? என்பதும் சர்ச்சைக்குரிய விடயமே. அவர் சரணடைந்திருந்தால் இதுவரை எந்த விதமான தகவல்களை வழங்கினார் என்பதைப் பொறுத்து சிறிலங்கா அரசு மிதமான நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்ததற்கான அடையாளங்கள் இதுவரையில் வெளித் தெரியவில்லை.

அல்லது நாடுகடந்த அரசியற் செயற்பாட்டையாவது முறியடிப்பதற்கு அவர் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் மும்முரம் பெற்றதாகத் தெரியவில்லை. உருத்திரகுமாருடன் சிறு பேரத்திலாவது ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அப்படி நடந்திருப்பின் உருத்திரகுமாரே அதனைப் பகிரங்கப்படுத்தியிருப்பார்.

கைது செய்யப்பட்டிருப்பின் மேற் கூறப்பட்டதற்கான எதுவித சந்தர்ப்பங்களுக்கும் இடமளிக்காதவராக கே பி இருந்திருப்பாரோ என்றும் எண்ணலாம்.

கே பி கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? என்பதும் சர்ச்சைக்குரிய விடயமே. அவர் சரணடைந்திருந்தால் இதுவரை எந்த விதமான தகவல்களை வழங்கினார் என்பதைப் பொறுத்து சிறிலங்கா அரசு மிதமான நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்ததற்கான அடையாளங்கள் இதுவரையில் வெளித் தெரியவில்லை.

[அல்லது நாடுகடந்த அரசியற் செயற்பாட்டையாவது முறியடிப்பதற்கு அவர் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் மும்முரம் பெற்றதாகத் தெரியவில்லை. உருத்திரகுமாருடன் சிறு பேரத்திலாவது ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அப்படி நடந்திருப்பின் உருத்திரகுமாரே அதனைப் பகிரங்கப்படுத்தியிருப்பார்.

கைது செய்யப்பட்டிருப்பின் மேற் கூறப்பட்டதற்கான எதுவித சந்தர்ப்பங்களுக்கும் இடமளிக்காதவராக கே பி இருந்திருப்பாரோ என்றும் எண்ணலாம்.

நீங்கள் இதுக்கான தகவலையும் தரவை ஐரோப்பாவில் தேடுவதை விட்டு தூர கிழக்கில் தேடிப்பாருங்கள்... புலிகளுக்காய் வேலை செய்தவர்கள் , ஆதரவான பொதுமக்களை நீங்கள் கேட்டுப்பார்க்கலாம்..

(எனக்கு சொல்லப்பட்ட தகவல்கள் மிகவும் குறுகியது... )அங்கு புலிகளின் சொத்துக்களாக இருந்தவை சில KPயின் சொத்துக்களாக மாற்றம் அடைந்து இருக்கின்றன... அங்கு சமூகத்தில் கண்ணியமாக இருக்கும் பெரும் புள்ளிகளிடம் இருந்து மாற்றப்பட்டு இருக்கின்றது... பலர் மிரட்டப்பட்டு கொண்டும் இருக்கிறார்கள்... அதுக்காக இந்த மாதம் மட்டும் மூண்றாவது முறையாக KP சிங்கை வந்து இருக்கிறார் என்கிறார்கள்...

Edited by தயா

நீங்கள் இதுக்கான தகவலையும் தரவை ஐரோப்பாவில் தேடுவதை விட்டு தூர கிழக்கில் தேடிப்பாருங்கள்... புலிகளுக்காய் வேலை செய்தவர்கள் , ஆதரவான பொதுமக்களை நீங்கள் கேட்டுப்பார்க்கலாம்..

(எனக்கு சொல்லப்பட்ட தகவல்கள் மிகவும் குறுகியது... )அங்கு புலிகளின் சொத்துக்களாக இருந்தவை சில KPயின் சொத்துக்களாக மாற்றம் அடைந்து இருக்கின்றன... அக்கு சமூகத்தில் கண்ணியமாக இருக்கும் பெரும் புள்ளிகளிடம் இருந்து மாற்றப்பட்டு இருக்கின்றது... பலர் மிரட்டப்பட்டு கொண்டும் இருக்கிறார்கள்... அதுக்காக இந்த மாதம் மட்டும் மூண்றாவது முறையாக KP சிங்கை வந்து இருக்கிறார் என்கிறார்கள்...

????????????????????????????????????//

போராட்டத்தின் முற்றுப் பெறுதலோடு தாயகத்தில் எஞ்சியிருந்த புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி தயாமோகன் உள்ளிட்ட பலர், செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி உள்ளிட்ட பலரையும் இலங்கையிலிருந்து மீட்டெடுத்த கே.பி. செய்த ஒரு செயல் அவரது முடிவிற்குக் காரணமாயிற்று. நெடியவன் அல்ல புலிகளின் தலைவர். தானே புலிகளின் தலைவர் என கே.பி. அறிவித்த மூன்றாம் நாளே சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவால் கைதியாக்கப்படுகிறார்.

இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த ஒருவர் கைதியாக்கப்படுகிறார்.

ஏறக்குறைய 25 வருட காலங்களுக்கு மேலாக உலக வல்லரசுகளின் புலனாய்வுத்துறைகள், சர்வதேச பொலிஸார்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவிய படி ஓரிருவருடன் மாத்திரம் தொடர்புகை வைத்திருந்தைருந்த இந்த "KP" .... மலேசியாவிலிருந்து ... வாசு, தேவன், பொன்னன், சுப்பன், ..... என நிண்டது/நடந்தது/இருந்ததுகளுக்கெல்லாம் போன் போட்டு கதைச்சுது!!! ... அன்று உது புரியவில்லை, நாம் நினைத்தோம் ஏதோ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வெளிக்கிடுகிறார் என!!!!!

ஆமா, இவ்வளவு உலக வல்லரசுகளின் கண்களுக்குள்ளேயே கைகளை விட்டாட்டிய மேன்மைமிகு "KP" இற்குத்தெரியாதா, இவைகள் ஒட்டுக்கேட்கப்படும் என்று????? இன்றைய தொழில்நுட்பங்கள் வேறு!!!!

ஆமா. மலேசியாவில் இருந்து இவ்வாறுபகிரங்கமாக செயற்பட்டருக்கு தெரியாதா, மலேசியா எங்கள் பாட்டன்/பூட்டியுடைய நாடில்லை என்று?

ஆனால் முள்ளி வைக்காலுக்கு முன்னமே போராட்டத்துக்கு கொள்ளி வைத்தவர்கள் "காஸ்ரோக்கள்* என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

இன்க்கு இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுவது சிலவற்றுக்கு விடை தேடலாம்........ அப்போது "வணங்கா மண்" சிக்கலில் இந்து சமுத்திரத்தில் தரித்து நின்ற சமயம் .....

..... முன்னால் புலிப்போராளியும், இடைநாள் புலத்து புலிப்புலனாய்வுதுறை செயற்பாட்டாளரும், பின்னால் KPயின் வலதுகரமும், இன்னால் "புலம்பெயர் தமிழர்களே, லங்கா மாதாவை கட்டியெழுப்புவோம், வாருங்கள்" என அழைப்பு விட்டவரும் கூறியது ....

.... "நான்டாப்பா, நேற்று KPயருடன் கதைக்கும் போது, அந்தாள் உவங்கள் மூர்த்தியர் கொம்பனியை பேசித்தள்ளுது! எனக்கு(KP) ஒரு சொல் சொல்லியிருந்தால், நான்(KP) பஷிலுடன் கதைத்து கப்பல் சாமான்களை கொழும்பு மூலம் அனுப்பியிருப்பன் எண்டு சொல்கிறாற்றா" ....

அப்போது இதனை சிந்திக்க உடன் அரைகுறை மூளைக்கு இடம் வரவில்லை.....

1) KPஇற்கும் பஷிலுக்கும் உள்ள தொடர்பை தெரியாமல் KP வெளிப்படுத்தியிருக்க வேண்டும்

1) KP பற்றிய வதந்தியைஉருவாக்க லங்காவை கட்டி எழுப்ப வேண்டுமென்பவர் கூறியிருக்க வேண்டும்.

எது உண்மை பொய்யோ .... KP சரணடைந்ததோ/இல்லை முன்னமே சில வெளிநாட்டு புலனாய்வுத்துறையினருடன் அகப்பட்டதாக கூறப்படுவதோ/இல்லை இந்திய றோதான் இயக்கியதோ ... எதுவாயினும் KP எனும் இன்னொரு முட்டாளின் பின் எம் பயணம் தவிர்க்கப்பட்டுள்ளது!!!!! ... இறைவனுக்கு நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மறுபுறத்தே காலம் தனது பக்கமில்லையென்றதை பிரபாகரன் உணர்ந்த போது அவரது செல்வங்களான சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும் களப்பலியாகியிருந்தனர். சயனைட் வில்லை பலவந்தமாகப் நம்பிக்கைக்குரியவர்களால் பறிக்கப்பட்ட பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலானவர்கள் 15ம் தேதி மேற்கொண்டார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் உடைக்கப்பட்டு சென்ற கரும்புலிகள் தலைமையிலான அணியினால் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைக்க முடியவில்லை. இத்தாக்குதலில் பொட்டம்மானும் உயிரிழக்கிறார். பிரபாகரன் மீண்டும் முள்ளிவாய்க்காலிற்குள் முடங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் பிரபாகரனும், தென்முனையில் சூசையும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.

இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த சூசை கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என. உடனே கே.பி.

படைகளையும் அரசாங்கதையும் திசை திருப்ப ஒரு அறிக்கை வெளியிடுகிறார். பிரபாகரனும் 2000 போராளிகளும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் இருப்பதாக. இது அந்த இடத்தில் பிரபாகரன் இல்லை என்று நம்ப வைப்பதற்காக

ஆனால் அடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்ட சூசை தலைவர் வீரச்சாவு என்று தெரிவித்துவிட்டு வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால் தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார். கூடவே மதிவதனி பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் என பிரபாகரனின் சந்ததியே நேர்மையாக போரில் மடிகிறது.

கட்டுரையாளரின் வாண வேடிக்கை கட்டுரையின் மேற்கூறிய பந்திகளில் இருந்து தெரிகிறது.மேற்படி கட்டுரையாளர் எல்லா தகவலும் தெரிந்து உள்ளவராயின் வன்னியில் இறந்த மக்களின் பெயர் விபரங்களை தர முடியுமா?

கே.பி இவ்வளவு காலமும் எல்லோருக்கும் கண்ணில் மண்ணை தூவியவர் இறுதியாக இலங்கை/மலேசிய உளவு படையால் கைது செய்யப்பட்டது ஒன்றும் தர்செயல் இல்லை. கீதவாணியில் வந்து அழுததும் ஒரு முதலை கண்ணீர் தான்.

அரச படைகளால் பிரபாகரனின் படத்தை காட்ட முடியுமெனில் பொட்டமானின் இறந்த படத்தை ஏன் காட்டமுடியவில்லை?

எனக்கு விளங்காத ஒரு விடயம் KP போயும் போயும் ஏன் சிறிலங்காவிற்கு போகவேண்டும். அவரிற்கு உள்ள செல்வாக்கிற்கு அரசியலை விட்டு விலகி வேறு ஒரு ஆபிரிக்க நாட்டில் உல்லாசமாக வாழ்திருக்க முடியாதா? (உண்மையாகவே விளங்காமல்தான் கேட்கிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றை இயக்குபவர்கள் யார் என்பதை அடையாளம் போட்டுக் காட்டிய பெருமை யாழ்களத்தில் உள்ள சிலரைச் சாரும். தங்களுக்கு உவங்களைத் தெரியும் என்று பெருமை அடிக்கத் தான் அது நடந்ததோ தெரியாது. ஆனால் இதுவரை காலமும் அமெரிக்காவில் இருந்து இயங்கியதாக சிறிலங்கா அரசு நம்பிக் கொண்டிருந்த ஒரு தளத்தைக் காட்டிக் கொடுத்தது எவ்வகை அறிவுபூர்வமானது?

இப்போதும் "அது எனக்குத் தெரியும், இது எனக்குத் தெரியும் என்று பெருமை அடிக்கவும், நாங்களும் முந்த பெரிய ஆள் அல்லோ" என்று விலாசித்தள்ளவும் கண் மண் தெரியாமல் வதந்திகளாக உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால் ஒரு நம்பிக்கை கஸ்ரோ வரமாட்டார் என்றோ, தலைவர் வரமாட்டார் என்றோ..

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். புதினம் யாரால் இயக்கப்பட்டது என்று காட்டிக் கொடுத்து கட்டுரை எழுதியதும் ஒரு துரோகம் தான். தமிழ்நெற்றை அடையாளம் செய்வதும் இன்மொருமொரு துரோகம் தான்.

எந்த மக்களுக்காக ஆயுதம் தூக்கிப் போராடப்பட்டதோ, அந்த மக்கள் வகைதொகை இன்றிக் கொல்லப்படும்போது அந்த ஆயுதங்கள் மௌனமாகிப் போனதே அன்றி, கண்டமேனிக்கு போராட்டத்தில் களம் ஆடியவர்களைப் பற்றிக் கதைக்க எந்த நாயிற்கும் உரிமை கிடையாது.

கேபி துரோகம் செய்தவராக இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். பிடிபட்ட போராளிகளை மீட்பதற்காகத் தானாகச் சரண் அடைந்துமிருக்கலாம். ஆனால் இப்போது அவர் சிறிலங்கா அரசின் கைதி ஆவர். எனவே அவரைப் பற்றி நம்பிக்கை உருவாக்குவது என்பது சிறிலங்கா எம் மக்களை ஆட்டுவிக்க ஒரு வழி ஆக மாறிவிடும். இல்லை, அப்படி மக்கள் ஒரு வகை எழுச்சி பெற்றாலும் கூட கேபியின் உயிருக்கு ஆபத்தை அது விளைவிக்கும். ஆகவே நல்லவரோ கெட்டவரோ, எனி வரும் காலங்களில் ஒரு சிங்கள அரசின் கைதியாக உள்ளவரைப் பற்றி மரியாதை உருவாக்குவது எமக்கும் நல்லதல்ல, அந்தக் கைதிக்கும் நல்லதல்ல.

விடுதலைப் போராட்டத்தின் வீழ்சசிக்கு காரணம் தகுதியை யார் கொண்டிருக்கின்றார்கள். உள்வீட்டு இரகசியம் தெரிந்தவர் போல பிதற்குகின்ற நாய்க்கும் உரிமை கிடையாது. முதலில் இந்த ஊள்வீட்டு விடயம் எப்படி இவருக்கத் தெரியும்? ஏன் இப்படி இவர் கட்டுரை எழுதவேண்டும் என்பதையே முதலில் ஆராயுங்கள். அதன் பின் கட்டுரையை நம்பிக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்கிக் கொள்ள 12 மாதங்கள் பிடித்திருக்கிறது. என்றாவது ஒரு நாள் உங்களுக்கு புரியும் என பொறுமையாக இருந்தது சரிதான்.

இன்க்கு இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுவது சிலவற்றுக்கு விடை தேடலாம்........ அப்போது "வணங்கா மண்" சிக்கலில் இந்து சமுத்திரத்தில் தரித்து நின்ற சமயம் .....

..... முன்னால் புலிப்போராளியும், இடைநாள் புலத்து புலிப்புலனாய்வுதுறை செயற்பாட்டாளரும், பின்னால் KPயின் வலதுகரமும், இன்னால் "புலம்பெயர் தமிழர்களே, லங்கா மாதாவை கட்டியெழுப்புவோம், வாருங்கள்" என அழைப்பு விட்டவரும் கூறியது ....

.... "நான்டாப்பா, நேற்று KPயருடன் கதைக்கும் போது, அந்தாள் உவங்கள் மூர்த்தியர் கொம்பனியை பேசித்தள்ளுது! எனக்கு(KP) ஒரு சொல் சொல்லியிருந்தால், நான்(KP) பஷிலுடன் கதைத்து கப்பல் சாமான்களை கொழும்பு மூலம் அனுப்பியிருப்பன் எண்டு சொல்கிறாற்றா" ....

அப்போது இதனை சிந்திக்க உடன் அரைகுறை மூளைக்கு இடம் வரவில்லை.....

1) KPஇற்கும் பஷிலுக்கும் உள்ள தொடர்பை தெரியாமல் KP வெளிப்படுத்தியிருக்க வேண்டும்

1) KP பற்றிய வதந்தியைஉருவாக்க லங்காவை கட்டி எழுப்ப வேண்டுமென்பவர் கூறியிருக்க வேண்டும்.

எது உண்மை பொய்யோ .... KP சரணடைந்ததோ/இல்லை முன்னமே சில வெளிநாட்டு புலனாய்வுத்துறையினருடன் அகப்பட்டதாக கூறப்படுவதோ/இல்லை இந்திய றோதான் இயக்கியதோ ... எதுவாயினும் KP எனும் இன்னொரு முட்டாளின் பின் எம் பயணம் தவிர்க்கப்பட்டுள்ளது!!!!! ... இறைவனுக்கு நன்றிகள்!!!

தமிழ் தேசித்தை எதிர்முனைசெய்யும் கனடா சி ரி பீ சி வானொலி போர் முடிவுக்கு வந்த 4 அல்லது 5 நாட்களின் பின்

கே பீ யிடம் பேட்டி எடுத்திருந்தது அதனை மறுபடி 2 நாட்களுக்கு முன் மறு ஒலிபரப்பு செய்திருந்தார்கள்

கருணா பிரிந்தவுடன் பேட்டி எடுத்திருந்தார்கள் இதன் பின்னரும் இடைக்கிடை பேட்டி எடுக்கிறார்கள்

டக்ளசுடன் அடிக்கடி பேட்டி ஏடுப்பார்கள்

அதாவது யார் யார் அரசுடன் சேர்ந்துகொண்டார்களோ அவர்களுடையதும் தமிழ் தேசியத்துக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களினதும் பேட்டிதான் அதிகமாக இவர்களுடைய வானொலியில் இடம்பெறும்

தமிழ் தேசியத்துக்கு எதிரான வானொலிக்கு கே பியின் பேட்டி கிடைக்கும் அளவிற்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது? யார்மூலம் ஏற்பட்டது?

எனவே கே பி எங்கே நிற்கிறார் என்பது வெள்ளிடை மலை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்காத ஒரு விடயம் KP போயும் போயும் ஏன் சிறிலங்காவிற்கு போகவேண்டும். அவரிற்கு உள்ள செல்வாக்கிற்கு அரசியலை விட்டு விலகி வேறு ஒரு ஆபிரிக்க நாட்டில் உல்லாசமாக வாழ்திருக்க முடியாதா? (உண்மையாகவே விளங்காமல்தான் கேட்கிறேன்)

செல்வாக்காக தான் சிறிலங்காவிலும் இருக்கிறார்.

செல்வாக்காக தான் சிறிலங்காவிலும் இருக்கிறார்.

கே பி இந்தியாவல் தேடப்படும் ஒருவர் இந்தியாவிடம் அகப்பட்டால் சிறை இல்ங்கையுடன் சேர்ந்தால் கருணா போல வாழ்வு வரும் என்று நினைத்து இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளி வச்சது உலகமாம்.... சண்டைய விடு அரசியல எடு எண்டு சொன்னது 2009 ஜனவரி 2 ம் திகதியாம்.... ஆயுதங்கள கீழே வையெண்டு சொன்னது பெப்ரவரி மாதமாம்.... நாங்கள் இன்னும் பலமாகவே இருக்கிறோம் எங்களை தலைவர் வழிநடத்திக்கொண்டிருக்கிறார் எண்டு நடேசன் சொன்னது 2009 மே 12 ம் திகதியாம்.... ஆயுதங்களை மௌனிக்கிறோம் எண்டு நடேசன் சொன்னது 2009 மே 14 ம் திகதியாம்.... வெளியில் வரவிரும்பிய மக்கள் எல்லோரும் வெளியே வந்தது 14 15 ம் திகதிகளிலாம்.... அடிச்சு முடிவு செய்யச்சொல்லி சொன்னது .... நோவேயா அமெரிக்காவா இங்கிலாந்தா பிரான்சா இந்தியாவா இல்லை ஐநாவா??? :lol:

(எனக்கு சொல்லப்பட்ட தகவல்கள் மிகவும் குறுகியது... )அங்கு புலிகளின் சொத்துக்களாக இருந்தவை சில KPயின் சொத்துக்களாக மாற்றம் அடைந்து இருக்கின்றன... அங்கு சமூகத்தில் கண்ணியமாக இருக்கும் பெரும் புள்ளிகளிடம் இருந்து மாற்றப்பட்டு இருக்கின்றது... பலர் மிரட்டப்பட்டு கொண்டும் இருக்கிறார்கள்... அதுக்காக இந்த மாதம் மட்டும் மூண்றாவது முறையாக KP சிங்கை வந்து இருக்கிறார் என்கிறார்கள்...

சிலவேளை கோத்தபாயாவின் சித்திரவாதை தாங்காமல் சொல்லி இருக்கலாம். இங்கு யாழில் கருத்து எழுதுபவர்கள் உங்களை சிறிலங்கா சிறையில் கோத்தபாயாவின் கொலைப்படை பிடித்து சித்திரவாதை செய்தால் எத்தனை வீதம் உண்மையைச் சொல்லுவீர்கள்?. அடி தாங்காமல் நான் எல்லாவற்றையும் சொல்லுவேன் .எனக்கு தைரியமிருந்தால் சிறிலங்காவில் இருப்பேன். இல்லை என்றதினால் தான் நான் அகதியாக ஓடி வந்து விட்டேன். ஆனால் சிங்கப்பூருக்கு கேபி வந்து போனது உண்மை என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கொள்ளி வச்சது உலகமாம்.... சண்டைய விடு அரசியல எடு எண்டு சொன்னது 2009 ஜனவரி 2 ம் திகதியாம்.... ஆயுதங்கள கீழே வையெண்டு சொன்னது பெப்ரவரி மாதமாம்.... நாங்கள் இன்னும் பலமாகவே இருக்கிறோம் எங்களை தலைவர் வழிநடத்திக்கொண்டிருக்கிறார் எண்டு நடேசன் சொன்னது 2009 மே 12 ம் திகதியாம்.... ஆயுதங்களை மௌனிக்கிறோம் எண்டு நடேசன் சொன்னது 2009 மே 14 ம் திகதியாம்.... வெளியில் வரவிரும்பிய மக்கள் எல்லோரும் வெளியே வந்தது 14 15 ம் திகதிகளிலாம்.... அடிச்சு முடிவு செய்யச்சொல்லி சொன்னது .... நோவேயா அமெரிக்காவா இங்கிலாந்தா பிரான்சா இந்தியாவா இல்லை ஐநாவா??? :lol:

உங்களைப் போன்ற ஒட்டுப்படை நாய்கள்.

அங்கும் இங்கும் கிடைத்த ஓரிரு தகவல்களை வைத்து கற்பனைக் கட்டுரைகள் வரைந்து பொழுது போக்குகிறார்கள். காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளி வச்சது உலகமாம்.... சண்டைய விடு அரசியல எடு எண்டு சொன்னது 2009 ஜனவரி 2 ம் திகதியாம்.... ஆயுதங்கள கீழே வையெண்டு சொன்னது பெப்ரவரி மாதமாம்.... நாங்கள் இன்னும் பலமாகவே இருக்கிறோம் எங்களை தலைவர் வழிநடத்திக்கொண்டிருக்கிறார் எண்டு நடேசன் சொன்னது 2009 மே 12 ம் திகதியாம்.... ஆயுதங்களை மௌனிக்கிறோம் எண்டு நடேசன் சொன்னது 2009 மே 14 ம் திகதியாம்.... வெளியில் வரவிரும்பிய மக்கள் எல்லோரும் வெளியே வந்தது 14 15 ம் திகதிகளிலாம்.... அடிச்சு முடிவு செய்யச்சொல்லி சொன்னது .... நோவேயா அமெரிக்காவா இங்கிலாந்தா பிரான்சா இந்தியாவா இல்லை ஐநாவா??? :lol:

உங்களின் கதையை பார்த்தால் ஏதோ செய்து விட்டு கழுவாமல் வந்தமாதிரி இருக்கு. :):(

சிலவேளை கோத்தபாயாவின் சித்திரவாதை தாங்காமல் சொல்லி இருக்கலாம். இங்கு யாழில் கருத்து எழுதுபவர்கள் உங்களை சிறிலங்கா சிறையில் கோத்தபாயாவின் கொலைப்படை பிடித்து சித்திரவாதை செய்தால் எத்தனை வீதம் உண்மையைச் சொல்லுவீர்கள்?. அடி தாங்காமல் நான் எல்லாவற்றையும் சொல்லுவேன் .எனக்கு தைரியமிருந்தால் சிறிலங்காவில் இருப்பேன். இல்லை என்றதினால் தான் நான் அகதியாக ஓடி வந்து விட்டேன். ஆனால் சிங்கப்பூருக்கு கேபி வந்து போனது உண்மை என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சித்திரவதை எண்றுதான் முதலில் எல்லாரும் நினைத்தனர்... ஆனால் செயற்பாட்டாளர்களின் உண்மையான பெயர் பிறந்த திகதி தொலைபேசி இலக்கங்கள் என்பன யாரும் வெளியில் குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் இருப்பதில்லை... ஆனால் இவைகள் எல்லாமே எழுதி வைத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது... ஒருவர் இருவரினது அல்ல... பலரது.

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எலலோரும் செத்துக் கொண்டிருக்க கட்டுரை எழுதியவர் மட்டும் கொப்பி பேனையுடன் குறிப் பெடுத்துக் கொண்டிருக்கிறார்.தற்போது சிறிலங்காவின் பிடியில் உள்ள கேபியைப் பற்றி அவர்நல்லவரா கெட்டவரா என்று பட்டி மன்றம் நடத்துவதை விட்டு ஆக வேண்டிய வேலையைப்பாருங்கப்பா,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலர் கலரா படம்புடிச்சு, லெவ் கொமென்றி எல்லாம் சொல்லுப்பட்டுது, தந்திரோபாயமா பின்வாங்கி உள்ளுக்க விட்டு அடிக்கிறது பற்றி லெக்சர் குடுபட்டுது, கொப்பி பேனையோட குறிப்பெடுத்தது ....

ஓ....அது வேற இது வேற...

அதுசரி கேபி இப்ப யாரோட? :)

அதுசரி கேபி இப்ப யாரோட? :)

அது மட்டும் உமக்கு தெரியாது எண்டுறீர்... PLOT காறரோடையும் டங்கு கோஸ்ரியையும் ஏன் அரசாங்கத்துக்கு வேண்டாம் எண்டு இன்னும் உமக்கு விளங்க இல்லையோ...??

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.