Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சண்டித்தனம்

Featured Replies

பிரான்ஸ் காவல் துறையில் முறைப்பாடு செய்வதால் எதுவும் ஆகப் போவதில்லை. பயங்கரவாதச் செயல் அல்லது கிரிமினல் வழக்கு போன்ற பாரதூரமான ஒன்றை நிரூபிப்பதற்காவவே இணையத் தளத்திலிருந்து ஒருவரின் அந்தரங்க விபரங்களை புலநாய்வுத் துறையினர் அந்த இணையப் பொறுப்பாளரிடமிருந்து பெற வாய்ப்புள்ளது. சாதாரண நிரூபிக்கப்படாத முறையீட்டை விசாரிப்பதற்காக ஒருவரின் அந்தரங்க விடயங்களைக் காவல் துறையினருக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன். :wub:

  • Replies 110
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சொன்னது சரியாப் போச்சு. தமிழ் தேசிய ஊடக அவியலாளர்கள் தமிழை மறந்திட்டு.. சிங்களத்தில் எதயோ எழுதி வாயிலை கட்டிக்கொண்டு ஏன் பிரான்ஸ் வீதிகளில் பவனி வருவது போல படம் போட்டிருக்கிறார்கள். இப்போ சிங்களமும் தமிழ் தேசியத்தின் ஓர் அங்கமாகிவிட்டதோ...??!

http://www.eelamenews.com/?p=28734

இங்கு உள்ள படத்தில் ஆணின் வாயில் கட்டப்பட்டிருக்கும் கறுத்ததுணியில் சிங்களத்தில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. தமிழை காணவில்லை..! :wub: :wub:

நாங்க சொன்னது சரியாப் போச்சு. தமிழ் தேசிய ஊடக அவியலாளர்கள் தமிழை மறந்திட்டு.. சிங்களத்தில் எதயோ எழுதி வாயிலை கட்டிக்கொண்டு ஏன் பிரான்ஸ் வீதிகளில் பவனி வருவது போல படம் போட்டிருக்கிறார்கள். இப்போ சிங்களமும் தமிழ் தேசியத்தின் ஓர் அங்கமாகிவிட்டதோ...??!

http://www.eelamenews.com/?p=28734

இங்கு உள்ள படத்தில் ஆணின் வாயில் கட்டப்பட்டிருக்கும் கறுத்ததுணியில் சிங்களத்தில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. தமிழை காணவில்லை..! :wub: :wub:

ஒரு படம் போட்டதுதான் பிரச்சனைக்கான ஆரம்பம். எந்தப் படத்தை எப்ப எதில போட வேண்டுமென்றே விவஸ்தையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் போட்டதுதான் பிரச்சனைக்கான ஆரம்பம். எந்தப் படத்தை எப்ப எதில போட வேண்டுமென்றே விவஸ்தையில்லை.

இப்ப புரியுது எனக்கு எல்லாம்

அந்த வரிகளை வாசித்துவிட்டு நானும் யோசித்தேன் தான்.... ஒரு முடிவோடுதான் ஆரம்பிக்கின்றீர்கள் என்று...

உண்மை சுடும் என்பது இதுதானோ...?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு உள்ள படத்தில் ஆணின் வாயில் கட்டப்பட்டிருக்கும் கறுத்ததுணியில் சிங்களத்தில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. தமிழை காணவில்லை..! :wub::D

:wub::lol::D

ஹையோ ஹையோ எங்க சொல்லிச் சிரிக்கிறதெண்டே தெரியெல்லை.. :D

இப்படிப் பட்ட கேனையள் எழுதுற ஆக்கங்களை இவ்வளவு நாளும் நம்பி வாசிச்சதை நினைச்சால் சீ எண்டு இருக்குது... நமக்கெண்டு வந்து வாச்சுதுகள் நல்ல ஊடகங்கள் (வைரவருக்கு நாய் வாய்ச்ச மாதிரி :D )... இப்படிப் பட்ட காமெடி ஊடங்களை வைச்க்கொண்டு விடுதலையை முன்னெடுக்கிறது நல்ல வேடிக்கை தான்.

ஒரு படம் போட்டதுதான் பிரச்சனைக்கான ஆரம்பம். எந்தப் படத்தை எப்ப எதில போட வேண்டுமென்றே விவஸ்தையில்லை.

ஆக உங்களுக்கை அடிபடுகிறது எண்டு முடி வெடுத்திட்டியள்...??? பிறகென்ன வீர வேல் வெற்றி வேல்... வெல்வது நாங்களாக இருந்தாலும் வீழ்வது தமிழனாக இருக்கட்டும்...

வாழ்த்துக்கள்...

இது இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் சுனந்த தேசப்பிரியவின் தலைமையில் இலங்கை அரசினால் இலங்கை பத்திரிகையாளர்களின் அடக்குமுறைக்கெதிராக கொழும்பு புறக்கோட்டையில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படம் அந்தப் படத்தினையே அவர்களின் அனுமதியின்றி அல்லது அதன் விபரம் இன்றி ஈ நியூஸ் பாவித்தற்கு அவர்களிற்கெதிராக வழக்கு போடலாம்.

யாரையாவது யார் கடித்து குதற வேண்டும் இதுதான் இப்ப இங்கை இருக்கும் பெரிய பிரச்சினை போல கிடக்கு...

யாழும் அதிலை விதி விலக்கு இல்லை... தூற்றுவதுக்காகவும் குழப்பங்களை விளைவிப்பதுக்காகவுமே பலர் இங்கை வருகை தருகிறார்கள்...

இங்கை சங்கதியை குறை சொல்பவர்களும், பதிவை குறை சொல்பவர்களில் யாராவது முன் வந்து சொல்வார்களா அங்கு சம்பந்த பட்டவர்களை விட தமிழரின் விடிவுக்காக நான் அதிகமாக பாடுபட்டேன் எண்று...??

இரவும் பகலும் குடும்பதை எல்லாம் விட்டு போட்டு திரிந்தவர்களை இப்படியான மொட்டை எழுத்தாளர்களானின் காயப்படுத்தாமல் விடுமா...?? ஓரிருவர் பிழை விட்டு இருக்கலாம் அதுக்காக ஒட்டுமொத்தமானவர்களையும் வையும் கூட்டம் தமிழர்களுக்காகவும் அவர்களின் விடிவுக்காகவும் என்ன செய்தது...??

வெளிப்படையாக வேலை செய்தவர்களை குற்றம் சொல்பவர்கள் நீங்களும் வெளிச்சத்துக்கு போய் குற்றங்களை சாட்டுங்கள்... மறைந்து இருந்து கல் வீசுவது கேவலமானது...

Edited by தயா

ஈழம் நியூஸ் எழுதும் பல கட்டுரைகள் செய்திகள் தமிழ் மக்களை, எம்மை குழப்புவதாக உள்ளது.

எனவே 48 மணி மணித்தியாலங்களுக்குள் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் அனைத்து விடயங்களுக்கும் ஆதாரங்களை ஈழம் நியூஸ் தளத்தில் பகிரங்கப்படும் படி இத்தால் கோரப்படுகின்றனர்.

மேலும் மேற்படி ஈழம் நியூஸ் தளத்துக்கு கட்டுரைகள் எழுதும் ஒரு சிலரின் ஒருசில கட்டுரைகள் இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன. இலங்கை தமிழ் பத்திரிகைகள் ஆதாரமற்ற கட்டுரைகளை இனி பிரசுரித்து எம்மை குழப்பவேண்டாம் என இத்தால் கோரப்படுகின்றனர். கடந்த வாரங்களில் பிரசுரித்த கட்டுரைகளுக்கு ஆதாரங்களை, அதை எழுதியவர்களின் பெயர், முகவரி போன்ற விடயங்களை அவர்களது ஈ-இணையத்தில் பிரசுரிக்குமாறு பகிரங்கமாக இத்தால் கோரப்படுகின்றனர்.

தவறின் அவர்களுக்கு உரிய சட்ட வேண்டுகோள் உடன் அனுப்பி வைக்கப்படும்.

இது இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் சுனந்த தேசப்பிரியவின் தலைமையில் இலங்கை அரசினால் இலங்கை பத்திரிகையாளர்களின் அடக்குமுறைக்கெதிராக கொழும்பு புறக்கோட்டையில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படம் அந்தப் படத்தினையே அவர்களின் அனுமதியின்றி அல்லது அதன் விபரம் இன்றி ஈ நியூஸ் பாவித்தற்கு அவர்களிற்கெதிராக வழக்கு போடலாம்.

ஈழம் நியுஸ் பாவிக்கும் படங்களின் ராயலிட்டி பற்றி சிந்திப்பதில்லை..அது அரசியல் சிறுபிள்ளைதனம் உள்ள பெரியவர்களால் இயக்கப்படுகின்றதாக்கும்...லங்கா நியுஸ் வெப் எனும் சிங்கள இணையத்தில் காப்பி எடுத்த செய்திதான் இத்தளத்தில் அதிகம் .......

1. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால்

புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். :wub:

2. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால்

புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். :wub:

3. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால்

புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். :lol:

4. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால்

புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். :D

5. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால்

புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். :D

6. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால்

புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். :D

தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் சிங்களஅரசு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பை பயன்படுத்த முயற்சிக்கின்றது.

சப்பாத்து ஆய்வுகள் செய்யும்போதே ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இப்ப கிளியராயிட்டுது ஆருக்காக புலம்பெயர் தமிழ்மக்களை ஒரு பொய்யான மாயையில் வைத்திருந்தார்கள் என்று.

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

யாரையாவது யார் கடித்து குதற வேண்டும் இதுதான் இப்ப இங்கை இருக்கும் பெரிய பிரச்சினை போல கிடக்கு...

இங்கை சங்கதியை குறை சொல்பவர்களும், பதிவை குறை சொல்பவர்களில் யாராவது முன் வந்து சொல்வார்களா அங்கு

சம்பந்த பட்டவர்களை விட தமிழரின் விடிவுக்காக நான் அதிகமாக பாடுபட்டேன் எண்று...??

இரவும் பகலும் குடும்பதை எல்லாம் விட்டு போட்டு திரிந்தவர்களை இப்படியான மொட்டை எழுத்தாளர்களானின் காயப்படுத்தாமல் விடுமா...?? ஓரிருவர் பிழை விட்டு இருக்கலாம் அதுக்காக ஒட்டுமொத்தமானவர்களையும் வையும் கூட்டம் தமிழர்களுக்காகவும் அவர்களின் விடிவுக்காகவும் என்ன செய்தது...??

வெளிப்படையாக வேலை செய்தவர்களை குற்றம் சொல்பவர்கள் நீங்களும் வெளிச்சத்துக்கு போய் குற்றங்களை சாட்டுங்கள்... மறைந்து இருந்து கல் வீசுவது கேவலமானது...

ஒரு பச்சை போட்டுள்ளேன்

நான் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகவே எழுதுகின்றேன்

மிகமுக்கிய நேரங்களில் அவர்கள் செய்தவற்றை அறிவேன்

அதற்கு தலைவணங்குகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா படம் காட்டுறானுங்களப்பா,

தேள் மாதிரி அடிப்பாங்க(கடிப்பாங்கள்) பாம்பு மாதிரி அடிப்பாங்கள் என்று படம் காட்டினவைக்கு இன்றைக்கு எல்லாம் பப்படமாப் போச்சு பாருங்கோ. படம் காட்டினவையளாலை சும்மா இருக்க முடியுமோ சொல்லுங்க???

இது வரைக்கும் தாயகம்,தேசியம் என்று சனத்தின்ரையை சுத்தினவை இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க இப்படி தான் ஏதாச்சும் செய்ய வேணும். யாழிலை பலபேற்றை வண்டவாளங்கள் வெளிவருது.. இப்படியே போனால் ஜரோப்பிய வீதிகளில் வெள்ளைத்துண்டை போட்டிடு தான் இருக்க வேணும் என்று தெரியும் அதனாலை யாழையும் அச்சுறுத்தி மூடிப்போட்டால் சனத்துக்கு எங்கை உண்மை தெரிய போகுது எங்கடை தேசிய ஊடகங்கள் சொல்லுறதை சனம் நம்பும் நாங்கள் ஓசியிலை உடம்பு வளப்பம் என்று இருக்கினம்.. அப்படி இருக்க சும்மா விடுவாங்களா?

உண்மையை சொல்லும் ஊடகங்களுக்கு பூட்டுப் போட்டால் தானே பிழைக்க முடியும் அது தான் இந்த சித்து விளையாட்டெல்லாம். எத்தனை நாளைக்கு தான் இந்த பருப்பெல்லாம் வேகப் போகுதுனு பார்ப்போம்.

இப்பிடி சவுண்டு விடுறவை .. சுமங்களா சொன்னது போல இலங்கை அரசே குறித்த கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவல்களை வெளியிடாத போது குறிப்பிட்ட இணையங்களுக்கு எப்படி கைது செய்யப்பட்ட நபரின் போட்டோ,பெயர் விலாசம் கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை உண்டு முதலில் அதை செய்தால் .. சுமங்களா போன்றவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க சந்தர்ப்பம் உண்டு.

மற்றும் படி எங்கை போயும் சாதிக்க போவது ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு இத்தாள் அறிவிக்கிறேன் ..... :wub::wub::lol::D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சட்டரீதியான...?? எல்லாவற்றையும் சட்டரீதியாகத் தான் சந்திப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை அறிமுகம் செய்ததற்கு இவர்களுக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். இதுவரையோ அல்லது எனி வரும் காலங்களிலோ இவர்களது ஊடகங்களில் வருகின்ற தனிநபர் தாக்குதல்கள் தொடர்பாகவும். அமைப்புக்கள் சம்பந்தப்பட்ட அவதூறுகளுக்காகவும் இவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கலாம் போலுள்ளதே... அவர்கள் யார் யாரைப் பற்றித் தூற்றி எழுதினார்கள் என்பதை எல்லாம் எடுத்து கொலை மிரட்டல், பாலியல் துன்புறுத்தல், பணப்பறிப்பு என்று கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் வழக்குப் பதிந்து வாருங்கள்... மாறி மாறிக் காலை வாருவோம். எமக்குள்ள இருக்கின்ற எதிரிகளை இனம் காண்போம். அல்லது உருவாக்கி நாசமாகப் போவோம்... வாருங்கள்

:wub: :wub:

நான் அறிந்தவரை பிரெஞ்சு அரசாங்கத்தக்கு இவர்கள் பற்றிய முறைப்பாடுகள் சட்டபூவமாக செய்யப்பட்டிருக்கின்றன.சேரலாதனின் இரத்த உறவினர் ஒருவர் தனது தம்பியை துரொகி என்று எழுதிதன் மூலம் அவரது உயிருக்கும் தங்களுக்கும் கூட அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக சட்டத்தரணி மூலம் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த சிலர் விநாயகம் தொடர்பாக இவர்கள் எழுதியதை சுட்டிக்காட்டி அப்படி ஒருவர் பிரான்சில் இல்லை என்றும் இவர்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பிரான்சில் இருப்பாதாக பொய் தகவல்களை வெளியிடுவதன் முலம் சிறிலங்கா அரச உளவாளிகளின் தாக்குதல்களுக்கு பொது மக்களும் பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்ற முன்னாள் போராளிகளும் உள்ளாகும் ஆபத்து இருப்பதாக பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த நெருக்கடி இவர்களுக்கு தெரிய வந்த பின்னர் தான் தாங்கள் ஊடகவியலாளர்கள் தங்களுக்கு அச்சுறுத்தில் இருக்கிறது என்று கதை விட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

நான் அறிந்தவரை விரைவில் இவர்கள் மீது சட்டம் பாய இருக்கிறது.

Edited by athiyan

உண்மை அம்பலம்

யாழில் கடந்த சில நாட்களுகு முன்னால் , மக்களிடம் கொள்ளையடித்த பணம் எங்கே என தொடங்கப்பட்ட திரியால் பாதிக்கப்பட்ட அந்த கயவர் குளுவே இப்போது யாழுக்கு எதிராக செயற்படுகின்றதாம்...

அந்த திரியை பாருங்கள்.....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72220

எனக்கு தமிழ் தேசிய ஊடகவியலாளர் என்டுறது விளங்கல்ல. தயவு செய்து தமிழ் தேசிய ஊடகவியலாளர் எண்டதுக்கு விளக்கம் சொன்னால் நல்லது.

இப்ப எல்லாரும் தமிழ் தேசிய ஊடகவியலாளர் எண்டு சொல்லித்திரியினம். நான் தமிழ் தேசிய ஊடகவியலாளரா இல்லையா எண்டு சொல்லுங்கோ

நான் யாழ்ப்பாணத்தில ஒரு தினசரி பத்திரிகையில செய்தியாளராக வேலை செய்தனான். கொழும்பில இருக்கிற இதழியல் கல்லூரியிலும் இரண்டு வருசம் டிப்ளோமா செய்ததனான். பிறகு கொழும்பிலயும் ஒரு தினசரி பத்திரிகையில வேலை செய்தனான்.

பிறகு அங்க பிரச்சினையால ஐரோப்பாவுக்கு வந்து இரண்டு வருசமாக குப்பை கோப்பை கழுவிக்கொண்டிருக்கிறன். இடைக்கிடை யாழ். இணையத்திலயும் குப்பை கொட்டிப்போட்டு போறனான்.

எனக்கு ஒருக்கா சொல்லுங்கோ உந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர் எண்டதுக்க என்னையும் சேர்ப்பினமோ,

நான் தமிழ் தேசிய ஊடகவியலாளனோ இல்லாட்டி சும்மா ஊடகவியலாளனோ இல்லையெண்டால் ஊடகவியலாளன் எண்டதுக்க என்னை சேர்க்க மாட்டினமோ,

நான் ஊடகவியலாளன் இல்லை எண்டா இதழியல் கல்லூரியில டிறக்ரல் ஜெயத்தும், இணைப்பாளர் சிவநேசசெல்வனும் சைன் வைச்சுத்தந்த சேட்டிப்பிக்கற்ற லச்சப்பல்ல *** கடைக்கு முன்னால போட்டு கொழுத்தப்போறன்.

Edited by இளைஞன்

முக்கிய குறிப்பு:- உலகத்தமிழ் சமூகத்திற்கு ஆதிவாசி பயங்கரவாதி இல்லை என்பதை இத்தால் உறுதி செய்கிறேன்

அடடா தாங்க முடியலை... மெயிலிலை வந்தது தகவலுக்கு இணைக்கிறேன்!

தேசிய ஊடகங்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் – எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பில் முறைப்பாடு

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல்கள், படுகொலையை தூண்டுதல்,

பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ போன்ற தளங்கள் இறங்கியுள்ளமை தொடர்பில் பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பில் முறைப்பாடு ஒன்று கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ தளங்கள் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருவது தொடர்பில் தேசிய ஊடகங்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் குற்றவியல் பிரிவில் ஊடக இல்ல நிர்வாகத்தினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன், பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிலும் இதுதொடர்பான முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, அவதூறு பரப்பியமை, பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் இந்த இணையங்களின் நிர்வாகம் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிரான்ஸ் இல் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் அங்கு தமது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், பிரான்ஸ் நாட்டு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரதி ஒன்றினையும் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ள இந்த பேரவலம் குறித்த தகவல்களை விபரமாக கேட்டறிந்த எல்லைகள் அற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் திரு வின்சன் புரொசெல் (Mr. Vincent Brossel) இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்புக்களுக்கும் இது குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயோ!!!!!!! ........ ஆடுகள் நனைகின்றனவாம் என ஓநாய்கள் ...... !!!!!!!!??????????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ஈழம் ஈ நியூஸ் காரர்கள் ... அவர்கள் ரொம்ப ரொம்ப சீரியசா சொன்ன வசனங்கள் எல்லாம் இப்ப ரொம்பவே பிரபலம் . ஆளாளுக்கு கொமடியா சொல்லி திரியிறாங்கள் .

எதுக்கெடுத்தாலும் இப்போது எல்லோருமே எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிடம் சொல்லிடுவன் என்கிறார்கள் !?!? பிரெஞ்சு புலனாய்வுத் துறைக்கு அறிவிப்பேன்

என்கிறார்கள் ?!?!?! முடியல : )))))

சந்திர முகி படத்தில பிரபு சொன்ன " என்ன கொடுமை சரவணன் இது ? " எண்ட வசனம் பிறகு பிரேம்ஜியால கொமடியா சொல்லப்பட்டு எல்லாராலயும் ரசிக்கப்பட்டது. அப்படித்தான் இப்ப

இந்த " எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிடம் சொல்லிடுவன் " , " பிரெஞ்சு புலனாய்வுத் துறைக்கு அறிவிப்பேன் " , " சிறீலங்கா புலனாய்வுத் துறைக்கு அறிவிப்பேன் " , " நாங்கள் தமிழ் தேசிய ஊடக வியலாளர்கள் " ........ இப்பிடி நிறைய வசனங்கள் உங்கட புண்ணியத்தால இப்ப பிரபலமாகிட்டு வருது. இனி என்ன செய்ய போகினமாம் ? அடுத்த அறிக்கை எப்பவாம் வெளியிட போகினமாம் ?

என் உறவினர் வலைப்பதிவில் தாங்களின் பெருமைகளைப் பத்தி விரைவில் எழுத இருக்கிறார் : ) அதுக்கும் முன்கூட்டியே உங்கள எல்லா அமைப்பிட்டையும் சொல்லி வைக்கச்

சொன்னார் ... ஏனெண்டால் அதில உதவிட நீங்க கவலைப்பட வேண்டிய நிறைய விடயம் வரப்போகுது பாருங்கோ ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.