Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் நியாயமானதே - நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

ஆனால் இங்கு கோரிக்கை.. உண்ணாவிரதம்.. உறுதிமொழி.. கைவிடல்.. இவை குறித்து மக்களிடம் இன்னும் பல விடயங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.

1,யுத்தநிறுத்தம்.

2,அகதிகளுக்கான உடனடி உதவி.

இரண்டுக்கும் உடனடிதீர்வு உடனடியாக காணமுடியாது .. ஆனால் முயற்சி செய்யப்படும் எண்ட வாக்குறுதியும்.

பிரிட்டிஷ் தமிழர் பிரதினிதிகளின் வற்புறுத்தலலும். உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது...

  • Replies 81
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மக்களை நாங்கள் காப்பாற்றி தருகிறோம்.உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று சொல்லிருப்பார்கள்.அதே நேரம் பிரிட்டன் தமிழர் பிரதிநிதிகளிடம் உன்னுடைய ஆளின் உண்ணாவிரதத்தை நிற்பாட்ட சொல்லுங்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்க்கிறோம் என்றிருப்பார்கள்.பரமேஸ்வரனுக்கும் உண்ணாவிரதத்தை கைவிட்டு தனது குறிக்கோள் பிரித்தானிய அரசால் நிறைவேற்றப்படும் என அவர் நினைத்து இருக்க கூடும்.முருகதாஸ் போல தனது உயிரைமாய்த்தும் ஒன்றும் நடக்காத போது, பிரிட்டன் அரசின் சொல்லை நம்பி தனது உண்ணாவிரதத்தை கைவிட்டிருக்கலாம்.

மேலும் பிரிட்டன் தமிழ் பிரதிநிதிகளுக்கு தங்களின் சொல்லையும் மீறி பரமேஸ்வரன் தன்னிச்சையாக மேற்கொண்ட உண்ணாவிரதம் அவர்களால் சீரணிக்கமுடியவில்லை. இவர்கள் தான் பலவதந்திகளை பரப்பிய பெருமைக்கு உரியவர்கள்.இலங்கை அரசல்ல.இதனால் அவர்கள்(தமிழ் பிரதிசதிகள் ) பரமேஸ்வரனுக்கு பிரிட்டன் அரசின் அழுத்தத்துக்கு உடன் போனார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

" சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம். செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது" என்ற தேசியத்தலைவரது சிந்தனையைச் செயலாக்கி தளராது நின்று நீதி வெல்லுமென்பதை நிலைநிறுத்திய பரமேஸ்வரனுக்கு வாழ்த்துகள். kodi1.jpg

தன்னை வருத்தித் தமிழினத்தின் அவலத்தை உரைத்த இளைஞனது செயலை கொச்சைப்படுத்தியோருக்கும் சொல்லப்பட்டுள்ளது செய்தி. இந்தத் தீர்ப்பினூடாக என்பதே உண்மையாகும். உணர்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணா விரதம் என்டு இருந்த படியால் தான் பிரித்தானியா அரசு அவ் இடத்தை விட்டு தந்தது... தமிழ் மக்களும் போராங்களில் தொடர்ந்து கலந்து கொண்டனர்...அவரால் தான் ஓரளவுக்கேனும் இங்குள்ள மக்களுக்கு எமது பிரச்சனை தெரிய வந்தது...அவரைப் பாராட்டாமல் இருந்தால் பரவாயில்லை கொச்சைப்படுத்தாமல் இருந்திருக்கலாம்...பிரித்தானியா அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து உண்ணா விரதத்தை முடிக்க பண்ணியிருக்கலாம் அதற்கு இங்குள்ள தமிழ் தலைவர்கள் சிலரும் துணை போயிருக்கலாம்...ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என கந்தப்பு கேட்டதற்கு அவரது உண்ணா விரதத்தால் ஒரு பிரயோசனமில்லை என சொல்வது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை...ஒரு வேளை பரமேஸ்வரன் தீலிபன் அண்ணா மாதிரி செத்திருந்தால் ஒரு கதை,கவிதை எழுதிப் போட்டு இருந்திருப்பார்கள் அவர்களுக்கு என்ன சாகிறது யாரோ வீட்டுப் பிள்ளை தானே...புலிகளுக்கு எதிராக தேசம்நெற் நடத்தும் ஜெயபாலன் கூட மன்னிப்பு கேட்டிருந்தார் அந்த பண்பு எமக்கில்லாதது தான் கவலையான விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கில் வெற்றி பெற்ற பரமேஸ்வரணுக்கு வாழ்த்துக்கள், அவரது தியாகத்தை மதிக்கிறோம், வணங்கிறோம். இது போன்ற போராட்டங்கள் தொடரப்படவேண்டும், போராட்டம் தொடங்கபட்டதன் காரணம் மக்களை காப்பாற்றுவதற்காகவே, ஆனால் மக்கள் காப்பாற்றபடவில்லை, அவரருக்கு ஆதரவாக லட்சகணக்கில் மக்கள் துணையாக நின்றனர், போராட்டம் கைவிட பட்டபோது வெளியில் சொல்ல முடியாத காரணங்களுக்காக போராட்டம் கைவிட பட்டது, வெளியில் சொல்லப்டாவிட்டாலும், நல்லது நடந்தால் சரி என மக்கள் விட்டு விட்டார்கள். ஆனால் எதுவித நன்மையும் நடைபெறவில்லை, இதுவரை அவருக்கு துணையாக நின்றமக்களுக்கு எதுவித பதிலும் சொல்லபடவில்லை, மீண்டும் அவரோ அல்லது வேறு ஒருவரோ ஒரு போராட்டத்தை தொடங்கும் போது அந்த மக்கள் துணைநிற்க வேண்டும் என்றால், பரமேஸ்வரனின் பதில் மிக முக்கியமானது, அவர் சொல்ல போகும் பதிலில்தான் இனிநடக்கபோகும் மக்களின் பங்களிப்புகள் இருக்கும். வா என்று சொல்ல வரவும், போ என்று சொல்ல போகவும் மக்கள் வெறும் ஆட்டு மந்தைகள் அல்ல. அவருக்காக குளிர்மழை என பாரது, வேலை வெட்டிகளை தூக்கி எறிந்து விட்டு கடைசிவரை கூட இருந்த மக்களுக்காவது அவர் நடந்த உண்மைகளை கூற வேண்டும் அல்லது தான் உண்மைகளை கூற முடியாதுள்ள நெருக்கடிக்கான காரணத்தையாவது கூற வேண்டும்.

முருகதாஸ் போல தனது உயிரைமாய்த்தும் ஒன்றும் நடக்காத போது,

முத்துகுமார் தெரியும்.. ..................... யார் உது முருகதாஸ்? :)

  • கருத்துக்கள உறவுகள்

முத்துகுமார் தெரியும்.. ..................... யார் உது முருகதாஸ்? :)

murugathas203.jpg

ஜெனிவாவில் ஐ.நாவுக்கு முன் தன்னை தானே தீமூட்டி தன்னை மாய்த்து கொண்டவர். இவர் லண்டனை சேர்ந்த மாணவன்.

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணா விரதம் என்டு இருந்த படியால் தான் பிரித்தானியா அரசு அவ் இடத்தை விட்டு தந்தது... தமிழ் மக்களும் போராங்களில் தொடர்ந்து கலந்து கொண்டனர்...அவரால் தான் ஓரளவுக்கேனும் இங்குள்ள மக்களுக்கு எமது பிரச்சனை தெரிய வந்தது...அவரைப் பாராட்டாமல் இருந்தால் பரவாயில்லை கொச்சைப்படுத்தாமல் இருந்திருக்கலாம்...பிரித்தானியா அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து உண்ணா விரதத்தை முடிக்க பண்ணியிருக்கலாம் அதற்கு இங்குள்ள தமிழ் தலைவர்கள் சிலரும் துணை போயிருக்கலாம்...ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என கந்தப்பு கேட்டதற்கு அவரது உண்ணா விரதத்தால் ஒரு பிரயோசனமில்லை என சொல்வது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை...ஒரு வேளை பரமேஸ்வரன் தீலிபன் அண்ணா மாதிரி செத்திருந்தால் ஒரு கதை,கவிதை எழுதிப் போட்டு இருந்திருப்பார்கள் அவர்களுக்கு என்ன சாகிறது யாரோ வீட்டுப் பிள்ளை தானே...புலிகளுக்கு எதிராக தேசம்நெற் நடத்தும் ஜெயபாலன் கூட மன்னிப்பு கேட்டிருந்தார் அந்த பண்பு எமக்கில்லாதது தான் கவலையான விடயம்.

ரதி,

நீங்கள் சொல்ல வருவதை நேரடியாகவே... சொல்லலாம் என நினைக்கின்றேன்.

நெடுக்ஸ் கூட பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தில் சந்தேகப் பட்டிருந்தார்.

ஆனால் அவர் கூட பரமேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்க இல்லை என்னும் போது......

மற்றவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று கந்தப்பு எதிர்பார்க்கக் கூடாது.

தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளும் போது மனிதன் உயர்ந்தவனாகின்றான்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கில் வெற்றி பெற்ற பரமேஸ்வரணுக்கு வாழ்த்துக்கள், அவரது தியாகத்தை மதிக்கிறோம், வணங்கிறோம். இது போன்ற போராட்டங்கள் தொடரப்படவேண்டும், போராட்டம் தொடங்கபட்டதன் காரணம் மக்களை காப்பாற்றுவதற்காகவே, ஆனால் மக்கள் காப்பாற்றபடவில்லை, அவரருக்கு ஆதரவாக லட்சகணக்கில் மக்கள் துணையாக நின்றனர், போராட்டம் கைவிட பட்டபோது வெளியில் சொல்ல முடியாத காரணங்களுக்காக போராட்டம் கைவிட பட்டது, வெளியில் சொல்லப்டாவிட்டாலும், நல்லது நடந்தால் சரி என மக்கள் விட்டு விட்டார்கள். ஆனால் எதுவித நன்மையும் நடைபெறவில்லை, இதுவரை அவருக்கு துணையாக நின்றமக்களுக்கு எதுவித பதிலும் சொல்லபடவில்லை, மீண்டும் அவரோ அல்லது வேறு ஒருவரோ ஒரு போராட்டத்தை தொடங்கும் போது அந்த மக்கள் துணைநிற்க வேண்டும் என்றால், பரமேஸ்வரனின் பதில் மிக முக்கியமானது, அவர் சொல்ல போகும் பதிலில்தான் இனிநடக்கபோகும் மக்களின் பங்களிப்புகள் இருக்கும். வா என்று சொல்ல வரவும், போ என்று சொல்ல போகவும் மக்கள் வெறும் ஆட்டு மந்தைகள் அல்ல. அவருக்காக குளிர்மழை என பாரது, வேலை வெட்டிகளை தூக்கி எறிந்து விட்டு கடைசிவரை கூட இருந்த மக்களுக்காவது அவர் நடந்த உண்மைகளை கூற வேண்டும் அல்லது தான் உண்மைகளை கூற முடியாதுள்ள நெருக்கடிக்கான காரணத்தையாவது கூற வேண்டும்.

சித்தப்பு சொன்னது சரி. இவர் மக்டொனால்ட் சாப்பிட்டது சாப்பிடாதது வேற விசயம். உறுதிமொழிகளுக்கு என்னானது எண்டு இவர் வெளிப்படுத்தோணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் யாரும் பரமேஸ்வரன் இருந்தது உண்ணாவிரதமே அல்ல.. என்று பிரகடனம் செய்யவில்லை. செய்தித் தாளில் வந்த செய்தியை ஒட்டித்தான் யாழ் கள உறவுகள் கருத்துப் பருமாறியுள்ளனர்.

அந்தச் செய்தி வெளியிடப்பட்ட காலம்.. முள்ளிவாய்க்காலில் பெரும் மனிதப் பேரவலம்... எந்த தங்கு தடையின்றி நடந்து முடிந்திருந்த நேரம். ஆயிரக்கணக்கான மக்கள் வதை முகாம்களில் வாடிய நேரம். செத்துக் கொண்டிருந்த நேரம்.

அந்த வேளையில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் எதையுமே தாயக மக்களுக்குச் செய்யத் தவறிவிட்டது என்ற ஏக்கம் மக்களிடம் இருந்தது. அவ்வேளையில் அப்படியான ஒரு செய்தி பரப்பப்பட்டதும் மக்கள் குழப்பமடைய வேண்டி இருந்தது.

அதுமட்டுமன்றி அந்த உண்ணாவிரத நிகழ்வுகளில் கலந்து கொண்டவன் என்ற வகையில் அங்கு எம்மவர்கள் எவ்வளவு "உணர்வு பூர்வமாக" அதனைக் கடைப்பிடித்தார்கள் என்றும் கண்டவன். எம் பி 3 யில் பாட்டுக் கேட்டுக்கொண்டே கூச்சல் போட்டதையும் கண்டவன். கொடுக்கிற சாப்பாட்டிற்கு முண்டி அடித்ததையும் கண்டவன். கேர்ள் பிரண்டை வரச்சொல்லிட்டு சந்திக்க வந்தவையையும் கண்டவன்..!

அதேவேளை திலீபன் அண்ணாவின் உண்ணாவிரத நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் பல. அன்று ஒரு அரசியல் அறிவின்றிய சிறிய வயதில் கூட என்ன நடக்கிறது.. ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள செய்யப்பட்டது. இங்கு எல்லாமே மர்மமாக முடிந்துவிட்டது.

புலம்பெயர் மக்களும்.. தேசத்தவரும் எமது பிரச்சனை பற்றி அறிவூட்டப்பட்டார்கள்.. (அதுவல்ல உண்ணாவிரதக் கோரிக்கை) என்பதைத் தவிர வேறெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

பரமேஸ்வரனின் முயற்சி முன்னெடுப்பு இரண்டும் வரவேற்கப்பட வேண்டியது. இவரோடு உண்ணா நோன்பிருந்துவிட்டு இடையில் ஒருவர் எழும்பிப் போயிருந்தார்.. இன்னொரு வெள்ளை இனத்தவரும் உண்ணா நோன்பிருந்திருக்கிறார்.. அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால்.. இந்தப் போராட்டம் எமது மக்களின் துயரை துடைக்கவோ.. தவிர்க்கவோ.. இல்லை என்பதே யதார்த்தம். இந்தப் போராட்டம் போதுமானதாக இருந்ததா என்பதும் கேள்விக்குறியே.

40,000 மக்கள் இதே உண்ணாவிரத நிகழ்வுக் காலத்தில் தான் கொன்றழிக்கப்பட்டனர். ஒரு பரமேஸ்வரனுக்காக பரிதாபப்படும் உள்ளங்கள் (அதற்காக அவர் 40,000 மக்களுக்காக பலியிடப்பட்டிருக்க வேண்டும் என்பதல்ல கோரிக்கை) எப்படி அந்த 40,000 உயிர்களைப் பற்றியும் மறந்தார்களோ தெரியவில்லை. அது முள்ளிவாய்க்காலில்.. எங்கோ காட்டுக்குள்.. இது லண்டன் மாநகரில்.. பார்ளிமென்ர் ஸ்குயார் என்ற படியால்.. பெரிசா நினைக்கினமோ தெரியவில்லை..!

40,000 பேரினது உயிர்களை பாதுகாக்கத் தவறியதோடு.. பல்லாயிரம் பேரின் துன்பங்களையும் தடுக்க முடியாமல் போனது.. இந்த உண்ணாவிரதம் மக்களுக்கு என்று பெற்றுத் தந்த நேரடிப் பயன் என்று எதனையும் இனங்காண முடியவில்லை. இன்னும் இன்னும் ஏதாவது செய்திருக்கலாம் என்பதே ஆதங்கம்.

இதை பரமேஸ்வரனும் ஏற்றுக் கொள்வார் என்றே நினைக்கின்றோம். அந்த வகையில் இங்கு யாழ் உறவுகள் தாமாக எவரும் பரமேஸ்வரன் மீது குற்றம் சுமத்தவில்லை. வந்த செய்தியின் படி ஊகங்களை வெளியிட்டதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது அபாண்டமானது. பொய்யை சிருஷ்டிஸ்தவர்கள் தான் மன்னிப்புக் கோர நீதிமன்றால் கேட்கப்பட்டுள்ளனரே தவிர.. அந்தச் செய்தியின் அடிப்படையில்.. பொய்யை நம்பிய பிரிட்டிஷ் மக்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லி நீதிமன்றம் சொல்லவில்லை..!

இந்த மன்னிப்புக் கூட சரியாக பிரிட்டிஷ் மக்களை சென்றடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி..! :)

Edited by nedukkalapoovan

murugathas203.jpg

ஜெனிவாவில் ஐ.நாவுக்கு முன் தன்னை தானே தீமூட்டி தன்னை மாய்த்து கொண்டவர். இவர் லண்டனை சேர்ந்த மாணவன்.

... அநியாயமாக கொன்று விட்டோம், என்னத்தை சாதிக்க முடிந்தது???????? ... கேவலமான அரசியல் தலைமைகளின் முடிபுகள்!!!

முருகதாஸா, உன் ஆத்மா சாந்தி அடையட்டும், உன்னைக் கொன்ற பாவிகள் இன்றும் எம்மத்தியில்!! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழருக்காக பட்டினி கிடந்ததை தவிர வேறேதும் செய்யாத இந்தபாவியின் மேல் எத்தனை வாந்திகளை இந்த யாழ்களத்தில் எத்தனையோ தலைப்பின் கீழ் எடுத்தார்கள்......................... நிர்வாகம் அதையெல்லாம் கருத்துக்கள் என்று நினைத்ததுதான் எனக்கு ஆச்சரியமானது.

... அநியாயமாக கொன்று விட்டோம், என்னத்தை சாதிக்க முடிந்தது???????? ... கேவலமான அரசியல் தலைமைகளின் முடிபுகள்!!!

முருகதாஸா, உன் ஆத்மா சாந்தி அடையட்டும், உன்னைக் கொன்ற பாவிகள் இன்றும் எம்மத்தியில்!! :)

இதையும் ஒருக்கால் வாசியுங்கோ............

இவர் முருகாதாசு அவர்களுக்காக அழுகிறாராம்!

நஞ்சுகளை எங்கெல்லாம் கலக்க முடியுமோ அங்கெல்லாம் கலப்பதே தொழிலாக்கி விட்டார்கள்.

இவர் என்ன கூடி நின்று கொழுத்தினவரோ?

பரமேஸ்ன் உண்ணாவிரதம் பெரும் எழுச்சியை கொண்டு ஜரோப்பாவில் முழுவதும் கொண்டு வந்த்து.

ஆனால் ஒரு பெரிய பத்திரிக்கை நிறுவனம் 77 ஆயிரம் பவுன்Dஸ்டன் காரியத்தை முடித்து விட்டது இதே வெள்ளைக் காரன் என்றால் மில்லியோன் கணககாக கேட்டு அரவசியாவது வாங்கி இருப்பான்

Edited by வினித்

இப்பவாச்சும் விளங்கிக் கொள்ளுறீங்களா? பரமேஸ்வரன் காசுக்காக வழக்கைப் பதிவு செய்யவில்லை, பத்திரிகைகளில் பிரசுரித்த பொய்யான தகவல்களால் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்கி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும்.

எனது பார்வையில் பரமேஸ்வரன் அவர்கள் ஒரு சராசரி மனிதனாகத் தெரியவில்லை. கொள்கைகளோடு போராடத் துணிந்த ஒரு வீரனாகவே தெரிகிறார்.

ரதி,

நீங்கள் சொல்ல வருவதை நேரடியாகவே... சொல்லலாம் என நினைக்கின்றேன்.

நெடுக்ஸ் கூட பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தில் சந்தேகப் பட்டிருந்தார்.

ஆனால் அவர் கூட பரமேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்க இல்லை என்னும் போது......

மற்றவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று கந்தப்பு எதிர்பார்க்கக் கூடாது.

தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளும் போது மனிதன் உயர்ந்தவனாகின்றான்.

.

தமிழ்சிறி,

பரமேஸ்வரனின் உண்ணாவிரத்ததை நான் கொச்சை படுத்தவில்லை.

ஒரு தனி மனிதனாய் அவர்மேல் படிந்த கறையை துடைத்ததில் சந்தோசம்,

ஆனால்... ஒரு இனத்துக்காய் உண்ணாவிரதம் இருந்து

அந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஐக்கியராச்சியம் கொடுத்த வாக்குறிதிக்காய் உண்ணாவிரத்ததையே கைவிட்டவர்!

அந்த வாக்குறிதிகள் தான் என்ன?

இதுவரைக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்தாது ஏன்?

அந்த புதினத்தை தான் நானும் யாழ்கள புதினபகுதியில் புடுங்குவம் என்றால் ஒரு ---வருது இல்லை நான் பரமேஸ்வரனிடம் மட்டும் கேக்கவில்லை

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

நீங்கள் சொல்ல வருவதை நேரடியாகவே... சொல்லலாம் என நினைக்கின்றேன்.

நெடுக்ஸ் கூட பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தில் சந்தேகப் பட்டிருந்தார்.

ஆனால் அவர் கூட பரமேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்க இல்லை என்னும் போது......

மற்றவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று கந்தப்பு எதிர்பார்க்கக் கூடாது.

தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளும் போது மனிதன் உயர்ந்தவனாகின்றான்.

எனக்கு இந்த உண்ணாவிரதம் நிகழ்வு தொடங்கிய போதே தெரியும் அது வேறொரு இலக்கை காட்டிவிட்டு பிரதான இலக்கை எட்டாமல் இடைவழியில் முறிக்கப்படும் என்று. அப்படியே தான் நடந்தது. சிலர் திலீபன் அண்ணாவுக்கு நிகராக பரமேஸ்வரனை ஒப்பிட்டனர். அது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

ஒருவர் வந்து சாப்பிடாமல் குந்தி இருப்பது அல்ல உண்ணாவிரதம். அவர் அப்படி இருப்பதற்கு முன்வைக்கும் கோரிக்கைகள்.. அதன் நியாயப்பாடுகள்.. அவை அடையப்படும் தன்மைகள்.. அதனால் மக்கள் அல்லது சமூகம்.. பெறும் நன்மைகள் இவற்றைக் கொண்டுதான் நாம் உண்ணாவிரதம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட வேண்டும்.

பரமேஸ்வரன் உணவு உட்கொள்ளாத விரதம் இருந்தார் என்பது அப்பழுக்கற்றது என்பதை அவர் மீது உணவு உண்டார் என்று சந்தேகித்தவர்களுக்கு அப்படி இல்லை என்று நிரூபித்திருக்கிறார். அதை எல்லோரையும் போல நாங்களும் தான் வரவேற்கிறோம். இத்தனை பேர் வாழாதிருக்க ஒரு இனத்தின் தேவை கருதி நியாயமான கோரிக்கைகளோடு உண்ணாவிரதம் இருக்க முன் வந்த பரமேஸ்வரனையும் இன்னொருவரையும் (அவரின் பெயர் ஞாபகத்தில் இல்லை) பாராட்டுகின்றோம். ஆனால் இவர்களால் எட்டப்பட வேண்டிய இலக்கு எட்டப்பவும் இல்லை.. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்படவும் இல்லை.. வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றி மக்களுக்கு சொல்லப்படவும் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பில் கூட இந்த உண்ணாவிரதம் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனியுங்கள். ஆனால் மக்களுக்கு காட்டப்பட்டதோ.. வேறு..??! அது ஏன்..???!

பரமேஸ்வரனின் முயற்சிகள் அதன் பின்னாடி அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கள் அவற்றை அவர் போராடி வென்றது வரை நாமும் சக தோழன் என்ற வகையில் வரவேற்கிறோம்.. மகிழ்கிறோம். ஆனால் அவர் மக்களுக்கு பெற்றுத்தர நினைத்து வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் மெளனம் காப்பது தொடர்பில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்... ஒரு இனத்துக்காய் உண்ணாவிரதம் இருந்து

அந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஐக்கியராச்சியம் கொடுத்த வாக்குறிதிக்காய் உண்ணாவிரத்ததையே கைவிட்டவர்!

அந்த வாக்குறிதிகள் தான் என்ன?

இதுவரைக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்தாது ஏன்?

என்னைப்பொறுத்தவரை

இந்தக்கேள்விக்கான பதில் மிகவும் நீண்டது

அது இதுவரை

தமிழனுக்காக உழைத்த அனைவரையும் கேட்க வேண்டியது

தந்தை செல்வாவிலிருந்து தேசியத்தலைவர்வரை இதில் அடக்கம்

சிலருக்கு இதில் ஆத்திரம் வரலாம்

ஆனால் உண்மை அதுதான்

ஆனால் இக்கேள்விக்கான எனது பதில்

அவரவர்

அவரவரால் முடிந்ததை செய்தார்கள்

இதில் ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு

ஏமாந்தவர்களும் உண்டு

இன்றும் காத்திருப்பவர்களும்உண்டு

ஏன் நாம் கூட இன்றும்.......??????????????????

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்ஸ் நீங்கள் ஒழுங்காய் உண்ணா விரதம் நடக்கும் இடத்திற்கு வந்திருந்தீங்கள் என்டால் பரமேஸ்வரன் வைத்த கோரிக்கைகள் என்ன என்டு தெரியும்...அவர‌து கோரிக்கைகள்;

1)உட‌னடி யுத்தநிறுத்தம்‍‍ ‍‍இதற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது இவர‌து உண்ணா நோன்பை பிரித்தானியா அர‌சு நிறுத்துவதற்கு முன்பே சிங்கள் அர‌சு எல்லாவற்றையும் பிடித்து விட்டது.

2)பாதிக்கப்பட்ட‌ மக்களுக்கு உட‌னடி நிவார‌ணம் இதை செய்வதாக பிரித்தானியா அர‌சு வாக்குறுதி கொடுத்தது ஆனால் பின்ன‌ர் இலங்கை அர‌சு இதற்கு மறுப்பு தெரிவித்தது.

3)புலிகள் மீதான தடையை பிரித்தானியாவில் நீக்க வேண்டும் இதற்கு பிரித்தானியா அர‌சு முடியாது என சொல்லி விட்டது.

4)கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து மக்களையும் விடுதலை செய்ய வேண்டும் இதற்கும் ஆவண செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

5)இட‌ம் பெயர்ந்த மக்களை தமது சொந்த இட‌ங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இதற்கும் ஆவண செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் பர‌மேஸ்வர‌ன் உண்ணா விர‌தம் இருக்கத் தொட‌ங்கையில் வைத்த கோரிக்கைகள் வேற...பிறகு புலிகளின் பாரிய யுத்தப் பின்னடைவுக்குப் பிறகு வைத்த கோரிக்கைகள் வேற...ஆனால் ஓரே ஒரு கோரிக்கை மட்டும் மாறமல் இருந்தது அது தான் புலிகள் மீதான தடையை பிரித்தானியாவில் நீக்க வேண்டும் என்பது...தான் ஒன்றை கேட்கிறேன் ஒருவரும் தப்பாய் நினைக்க வேண்டாம் தீலிபன் அண்ணா ஊரில் உண்ணா விர‌தம் இருந்தார் அவரது கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்பட்ட‌தா இல்லைத் தானே...பர‌மேஸ்வர‌னே தான் சாகும் வரை உண்ணா விர‌தம் இருக்க விரும்பினாலும் புலிகள் தொட‌ர்ந்து இருக்க விட்டு இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து அப்படி பர‌மேஸ்வர‌ன் செத்து இருந்தாலும் அவர‌து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்காது என்பது தான் உண்மை...ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம் மாற்று கருத்துகளைக் கொண்ட‌ இணையங்களை நட‌த்துபவர்கள் எழுதினார்கள் தலைவரும்,தளபதிகளும் சர‌ணடைந்த பின் தான் கொல்லப்பட்டார்கள் என கொஞ்ச‌ காலம் போக உண்மை தெரிய வருகிறது அவர்கள் சர‌ணடையவில்லை என ஆனால் அவர்கள்[அந்த இணையங்களை நட‌த்துபவர்கள்] அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்டால் உங்களால் அதை எப்படி சுட்டிக் காட்ட‌ முடியும்...இந்த செய்தி பர‌மேஸ்வர‌ன் உண்ணா விர‌தத்தின் போது சாப்பிட்டாரா இல்லையா என்பது தான் நீங்கள் அவர் சாப்பிட்டு இருப்பார் அவர‌து உண்ணா விர‌தம் பொய் என்ட‌ மாதிரி முன்பு எழுதியிருந்தீர்கள் அது பொய் என அவர் நிருபித்து விட்டார் மன்னிப்பு கேட்பது உங்களது கட‌மை அல்லவா?

திலீபன் அண்ணா ஐந்தம்சக் கோரிக்கையை வைத்து உண்ணா நோன்பிருந்த சூழல் வேறு. பரமேஸ்வரன் இருந்த சூழல் வேறு. திலீபன் அண்ணாவிக் கோரிக்கைகள் மக்களின் உயிர் மீது வைக்கப்பட்ட ஒன்றல்ல. பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முன் வந்த போது மக்கள் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருந்தனர். அதை தடுப்பதுதான் உண்ணா நோன்பின் கோரிக்கைகளிலும் அடங்கி இருந்தன. இந்த உண்ணா நோன்பால் பலன் கிடைக்கும் தாயக மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்று தான் புலம்பெயர் மக்கள் எண்ண வைக்கப்பட்டனர். எல்லோரினது எதிர்பார்ப்பும்.. இந்த உண்ணாவிரத்தை நோக்கியே இருந்தது. மற்ற வடிவங்களில் போராட்டங்களை கிட்டத்தட்ட மக்கள் கைவிட்டு எல்லா இடமும் அடையாள உண்ணாவிரதங்களை இருந்து இவருக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்படியான ஒரு நிலையில்.. இவருக்கு ஓபாமாவோடு சந்திக்க ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூடச் சொன்னார்கள். எமது மக்களை காக்க உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருப்பதாகவே சொன்னார். அந்த உறுதிமொழிகள் என்ன.. யாரால்.. தரப்பட்டது என்பதைப் பற்றி இன்னும் வெளியிடாதது ஏன்..??!

நான் அப்போது இவர் மீது பேகர் சாப்பிட்டு உண்ணா நோன்பிருந்தார் என்ற தலைப்பின் கீழ் எழுதிய கருத்தை மீளப் படியுங்கள். அப்போதும் இதையே தான் கேட்டுள்ளேன். இவரின் உண்ணாவிரதம் மீதாக குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதாக நான் கருத்தெழுதி இருக்கவில்லை. குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாம்.. ஏன்னா இவர்கள் உறுதிமொழிகளை கூட மறைத்துவிட்டார்களே என்ற ஆதங்கமே அங்கு வெளிப்பட்டிப்பதை தெளிவாகக் காணலாம்.

நான் குறித்த குற்றச்சாட்டை ஆதரித்து கருத்துச் சொல்லி இருக்கவில்லை. இவர்கள் உறுதிமொழிகளை மறைத்ததன் பின்னணியை முதன்மைப் படுத்தவே அப்படி எழுதி இருக்கிறேன். அதை தெளிவாக குறிப்பிட்ட தலைப்பில் நான் பதிவு செய்துள்ள இரண்டு கருத்துக்களிலும் இனம்காட்டியுள்ளேன். போய் படித்துப் பாருங்கள்.

என்னைப் பொறுத்தவரை.. பரமேஸ்வரன் தனக்கு தரப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான உறுதிமொழிகளை வெளியிட்டு விட்டேன்.. அது யார் யாரால் தரப்பட்டது என்றும் அறிக்கை விட்டுவிட்டேன்.. அதனால் மக்கள் இன்னென்ன நன்மைகளை அடைந்தனர்.. அதை அறியாமல் நாங்கள் வீணான குற்றம் சுமத்துவதாகச் சொல்லுவாரானால்.. அதற்காக மன்னிப்புக் கேட்போன். ஏனெனில் அதுவே எங்களின் அவருக்கான கோரிக்கையாக அங்கு எழுதப்பட்டுள்ளது..!

மக்களாகிய எமக்குத் தெரிய வேண்டும்.. என்னென்ன உறுதிமொழிகள்.. எந்தத் தரப்பால் தரப்பட்டு.. உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. பின்னர் ஏன் அந்தத் தரப்புக்கள் எம்மக்களின் உயிர்களை காக்கவில்லை.. முகாம் சித்திரவதைகளை தடுக்க முடியவில்லை.. இப்போ அந்தத் தரப்புக்கள் என்ன முன்னெடுப்புக்களை எமது மக்களின் நலனுக்காக மேற்கொள்கின்றன.. என்பது தெரியப்படுத்தப்படும் போதே இந்த உண்ணாவிரதம் உண்மையில் நிறைவைச் சந்திக்கும்.

நாங்கள் மன்னிப்புக் கேட்பதால்.. மக்களுக்கோ.. பரமேஸ்வரனுக்கோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அதில் கவனம் செலுத்துவது அநாவசியமானது.. ஏமாற்றுத்தனமானது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்கள் என்பதற்கு இந்த திரியைவிட எந்த உதாரணமும் தேவையில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவரிலயிருந்து கடைசியா பரமேஸ்வரன் வரை எதைத்தான் மக்களுக்கு சொல்லிச்செய்தார்கள். எல்லாமே இரகசியம். நீங்கள் காசையும் ஆதரவையும் தாங்கோ நாங்க தமிழீழம் வெல்லுவம் எண்டீனம். இப்போ இருந்த கோவணமும் இல்லாத நில தமிழனுக்கு. இதக்கேட்டா துரோகி.

தலைவரும் பரமேஸ்வரன் மட்டுமல்ல.. வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தியில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ர டக்கிளசாரும்.. இந்தியாவோடு உறங்கி எழுந்தால் தமிழீழம் மலரும் என்ற வரதராஜப் பெருமாள்களும்.. இன ஐக்கியமே இறுதித் தீர்வு வடக்கிக் கிழக்கு எங்கனும் கொழும்பு போல்.. சிங்கள மக்கள் பரவி வாழனும் என்று தத்துவம் பேசும் கருணாக்களும்.. ரகசியமாத்தான் செயற்பட்டவை. அவையும் தான் என்ன செய்ய முடிஞ்சுது மக்களுக்கு. பாதிக்கப்பட்ட மக்களில் கொஞ்சப் பேரை வெளில எழுத்து விட்டிருக்காங்க.. என்று கேள்வி...! :)

நாம் தமிழர்கள் என்பதற்கு இந்த திரியைவிட எந்த உதாரணமும் தேவையில்லை

தமிழர்கள் மட்டுமல்ல எந்த சிந்திக்க தெரிந்த மனிதனுக்கும் கேள்வி எழும்..! சலாம் போடுவது.. மந்தைகள் போல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே தவறுகளை மறப்பது அல்லது மறைப்பது.. தான் தமிழர்களுக்கான சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட பத்திரிகைளை அடுத்தநாள் பார்த்தேன்.சண் பத்திரிகையில் இது தொடர்பாக எந்த மன்னிப்புச் செய்தியம் வரவில்லை.இணையத்தளத்தில் மன்னிப்புக்கேட்டதோடு சரி.குற்றம் சுமத்தியது பத்திரிகையில் மன்னிப்புக் கேட்பது இணையத்தளத்திலா? சண் இணையத்தளத்தைப் பார்ப்பவர்களை விட சண் பத்திரிகையை வாசிப்பவர்களே(பார்ப்பவர்களே) அதிகம் என்று நினைக்கிறேன்.டெய்லி மெயிலில் ஏதோவொரு பக்கத்தில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்று தலைப்பிட்டு மன்னிப்புக்; கேட்டிருந்தார்கள்.இந்தத் தலைப்பு வாசிப்பவர்களை தொடர்ந்து வாசிக்கத் தூண்டியிருக்காது.இது தொடர்பான செய்தியை தேடி வாசிக்கும் நாங்கள்தான் வாசித்திருப்போம்.ஆனால் முதலில் அவர்கள் போட்ட செய்தித் தலைப்பான பெகரின் பெறுமதி பல மில்லியன் பவுண்ஸ்கள் என்பது பலரையும் வாசிக்கத் தூண்டியிருக்கும்.உரிய முறையில் அனைத்து வாசகர்களின் கவனத்திற்கு இந்த மன்னிப்பு சென்றடையும் விதத்தில் (வாசிக்கத் தூண்டும் வித்தில்) செய்தி போடப்பட வேண்டும் என்று சரியான உறுதி மொழி பெறத்தவறிவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நெடுக்கரின் கேள்விகள் நியாயமானவை? ஆனால் அவரின் உண்ணாவிரதத்தின் மீது கொண்ட சந்தேகத்திற்கு தம்மாத்தண்டு மன்னிப்புக் கேட்பதில் என்ன நட்டம் வந்து விடப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கிறவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்கிற மாதிரி நடிக்கிறவர்களை தட்டி எழுப்ப இயலாது...ஒரு பிரபாகரன் இல்ல ஒன்பதாயிரம் பிரபாகரன் வந்தாலும் தமிழன் திருந்தப் போறது இல்லை...ஆனால் தயவு செய்து இனிமேல் மாற்றுக் கருத்துக்காரரை விமர்சிக்க வேண்டாம் அவர்களை விமர்சிக்கிற தகுதி உங்களுக்கு இல்லை என நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கேட்க வேண்டியவங்க கேட்டாச்சு. அர்த்தமற்ற வகையில் மன்னிப்புக்களை வலியுறுத்திக் கொண்டிருக்க பிரபாகரன்கள் அவசியமில்லை. அதை சாதாரண தமிழர்கள் செய்து கொண்டே இருப்பர்.

மாற்றுக் குழுக்களை விமர்ச்சிக்கும் தகுதியை மன்னிப்பு தான் தருமென்ற மாயை அநாவசியமானது.

நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.. என்ன எழுதினோம்... என்ன எழுதுகின்றோம் என்று.

அர்த்தமற்ற மன்னிப்புக்களை கேட்டு மன்னிப்பை மலினப்படுத்த விரும்பப் போவதும் இல்லை. பரமேஸ்வரன் விடயத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் கேட்டுவிட்டார்கள். அது தான் அங்கு அவசியம். :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.