Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளிடைமலையாகும் கே.பியின் கதாநாயகர்கள்! - சேரமான் திகதி: 07.08.2010 // தமிழீழம்

Featured Replies

அது சரி நீங்கள் கேட்பது போல நானும் கேக்கிறேன் மேரி கெல்வின் அமையாரிடம் நம்ம்பிக்கை இல்லாமலா எரிக் சொல்கையிடமும் நடேசன் பேசினார்?

மேரி கெல்வின் அம்மையார் பிரித்தானிய பத்திரிகையாளர்.... எரிக்சொல்கைம் சமாதான தூதுவர், அமைச்சர்... இருவரும் வேறு வேறானவர்கள்... ! தகுதிகளும் தொடர்புகளும் வேறு பட்டவை...

ஆனால் KP அண்ணை புலிகளுக்காக பேசினார் எண்டால் யாருடன் பேசினார் எண்டு உங்களுக்கு கட்டாயம் தெரிஞ்சு இருக்க வேணுமே...?? யாரோடை எண்டதையும் சொல்லுங்கோவன்...

ஓ. தெரியுமே .. விடுதலை விடுதலை பாரதி பாட்டில் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கு :lol:

இலங்கையிலை தமிழர் எல்லாருக்கும் சிங்களம் விடுதலை குடுத்து இருக்கினம் எண்டதை நீங்கள் அப்ப விளங்கி தான் இருக்கிறீயள்... ! :lol:

Edited by தயா

  • Replies 58
  • Views 4.4k
  • Created
  • Last Reply

.. குறுக்காலபோவான் வேறொரு திரியில் எழுதியது போல் ... "சிலருக்கு இதுதான் வாழ்வாதாரமும்" ... அதேபோல் இந்த நெடியமான்களுக்கும் இதுதான் வாழ்வாதாரம்! .... அவர்கள நிறுத்தப்போவதில்லை, நிறுத்தினால் அவர்கள் சோத்துக்கு தடுங்கினத்தோம் போட வேண்டி வரும் ... நீ தொடரு நெடியமானே! ... சிங்களவனுக்கும் உன் போன்றோர் தான் தேவை! .... நீயும் அவனது நிகழ்ச்சி நிரலுக்கு, கேட்காமலே ஆடுகிறாய்!!!

.. குறுக்காலபோவான் வேறொரு திரியில் எழுதியது போல் ... "சிலருக்கு இதுதான் வாழ்வாதாரமும்" ... அதேபோல் இந்த நெடியமான்களுக்கும் இதுதான் வாழ்வாதாரம்! .... அவர்கள நிறுத்தப்போவதில்லை, நிறுத்தினால் அவர்கள் சோத்துக்கு தடுங்கினத்தோம் போட வேண்டி வரும் ... நீ தொடரு நெடியமானே! ... சிங்களவனுக்கும் உன் போன்றோர் தான் தேவை! .... நீயும் அவனது நிகழ்ச்சி நிரலுக்கு, கேட்காமலே ஆடுகிறாய்!!!

அப்ப KP அண்ணை என்ன செய்கிறான் எண்டதை சொல்லுறதும் இப்ப பிழையோ...?? :lol:

மேரி கெல்வின் அம்மையார் பிரித்தானிய பத்திரிகையாளர்.... எரிக்சொல்கைம் சமாதான தூதுவர், அமைச்சர்... இருவரும் வேறு வேறானவர்கள்... ! தகுதிகளும் தொடர்புகளும் வேறு பட்டவை...

ஆனால் KP அண்ணை புலிகளுக்காக பேசினார் எண்டால் யாருடன் பேசினார் எண்டு உங்களுக்கு கட்டாயம் தெரிஞ்சு இருக்க வேணுமே...?? யாரோடை எண்டதையும் சொல்லுங்கோவன்...

இலங்கையிலை தமிழர் எல்லாருக்கும் சிங்களம் விடுதலை குடுத்து இருக்கினம் எண்டதை நீங்கள் அப்ப விளங்கி தான் இருக்கிறீயள்... ! :lol:

என்ன தயா நக்கல் பன்ணுறிங்களோ?

நீங்கள் சொல்லுவது போலவே நானும் சொல்லூரேன் மேரி கெல்வின் அம்மையார் பத்திரிக்கையாளர் போl எரிக் சொல்கையும் முன்னால் தூதுவர்( சரியாக சொல்லவும்) கே பி புலிகளின் சர்வதேச தொடர்பாளர் இதில் என்ன தெரிகிறது"? சூசை என்ன இறுதி பேச்சில் சொன்னார் என்பதை சரி பார்க்கவும்

அப்ப KP அண்ணை என்ன செய்கிறான் எண்டதை சொல்லுறதும் இப்ப பிழையோ...?? :lol:

இலங்கை அரசின் கையில் கேபீ யும் ஒன்று தான் கரி நாகம் கருணாவும் ஒன்று தான் அதை புரிந்து கொள்ளுங்கள்.

சரி கே பீ பற்றிய புலிகளின் அறிக்கையை இனைக்கவும் இந்த பகுதியில்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சசி,

நீஙகள், ஒரு சீசனுக்கு வந்து தலைகாட்டி, வால் ஆட்டி போவதன் மர்மம் என்னவோ......?

.

இலங்கை அரசின் கையில் கேபீ யும் ஒன்று தான் கரி நாகம் கருணாவும் ஒன்று தான் அதை புரிந்து கொள்ளுங்கள்.

சரி கே பீ பற்றிய புலிகளின் அறிக்கையை இனைக்கவும் இந்த பகுதியில்.

KP யும் கைது செய்யப்பட்ட இன்னும் 10 000 போராளிகளும் ஒண்டு தான் எண்டு சொல்லாமல் விட்டியளே... என்னமா கண்டு பிடிக்கிறீயள்...

புலிகள் KP பற்றி அறிக்கையோ...?? இல்லை புலிகள் எண்ட பெயரிலை விடப்பட்ட அறிக்கையோ...??

புலிகளால் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் கீழை இருக்கும் இணைப்பில் இருக்கு அதில் எது எண்டு சொல்லுங்கோ படிச்சு பாப்பம்...

http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=category&layout=blog&id=28&Itemid=2

Edited by தயா

KP யும் கைது செய்யப்பட்ட இன்னும் 10 000 போராளிகளும் ஒண்டு தான் எண்டு சொல்லாமல் விட்டியளே... என்னமா கண்டு பிடிக்கிறீயள்...

புலிகள் KP பற்றி அறிக்கையோ...?? இல்லை புலிகள் எண்ட பெயரிலை விடப்பட்ட அறிக்கையோ...??

புலிகளால் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் கீழை இருக்கும் இணைப்பில் இருக்கு அதில் எது எண்டு சொல்லுங்கோ படிச்சு பாப்பம்...

http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=category&layout=blog&id=28&Itemid=2

10.000 போராளிகளாம் மூடியாதை கே பீ யால் செய்ய முடியும் அதனால் தான் கே பீக்கு இந்த ராஜ மரியாதை தயா நான் தற்போது கேபீயின் செய்ற்பாட்டை நியாயம் என்று சொல்லவில்லை கேபீ காட்டி கொடுக்க பட்ட ஒருவர் என்பது என்னால் அசைக்க முடியாத நம்பிக்கை.

28 ஈரோபோதும் நான் இருக்கும் நாட்டில் விரும்பிய பெயரில் ஒரு இனையத்தளம் ஆரம்பிப்பதுக்கு ( அதை worldpress.com இல் இலவசமாக வடிவமைத்தும் கொள்ளலாம் ( வீண் செலவு இளைஞனுக்கு) :lol::lol:

10.000 போராளிகளாம் மூடியாதை கே பீ யால் செய்ய முடியும் அதனால் தான் கே பீக்கு இந்த ராஜ மரியாதை தயா நான் தற்போது கேபீயின் செய்ற்பாட்டை நியாயம் என்று சொல்லவில்லை கேபீ காட்டி கொடுக்க பட்ட ஒருவர் என்பது என்னால் அசைக்க முடியாத நம்பிக்கை.

28 ஈரோபோதும் நான் இருக்கும் நாட்டில் விரும்பிய பெயரில் ஒரு இனையத்தளம் ஆரம்பிப்பதுக்கு ( அதை worldpress.com இல் இலவசமாக வடிவமைத்தும் கொள்ளலாம் ( வீண் செலவு இளைஞனுக்கு) :lol::lol:

இலங்கை அரசாங்கம் நினைத்தால் 10 000 போராளிகளை தமிழர்களுக்கு எதிராக வேலை செய்ய வைக்க முடியும் எண்டுவியள் போல கிடக்கு...??

உங்களுக்கு தெரியுமோ கைது செய்யபட்ட புலிகளை நான்கு வகையாக பிரித்து வைத்து இருக்கிறார்கள் எண்டு... ஏன் அப்படி பிரிச்சு வைச்சு இருக்கிறார்கள் எண்டதாவது தெரியுமோ...??

பிடிச்சு கொண்டு போய் வைத்து இருந்தால் உடனை எல்லாரும் இலங்கை அரசுக்கு சார்ப்பாக வேலை செய்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி குடுப்பினம், அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு ஊக்கம் குடுப்பினம், எண்டு சிலர் கதை சொல்லுவினம் அதை உங்கள மாதிரி சிலர் நம்புவினம் எண்டதும் இப்ப எனக்கு விளங்குது...

புலிகளுக்கு மிண்டு குடுத்த ஒருத்தன் சிங்களவருக்கு எதிராக செயற்பட்ட ஒருத்தன் வலு வேகமாக இலங்கை அரசுக்கு நம்பிக்கைக்கு தகுந்தவராக எப்படி வந்தார், உயர் மட்ட சிங்கள தலைமைகளை சந்திக்கும் தகுதியை எப்படி கொண்டார் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை... !

Edited by தயா

இலங்கை அரசாங்கம் நினைத்தால் 10 000 போராளிகளை தமிழர்களுக்கு எதிராக வேலை செய்ய வைக்க முடியும் எண்டுவியள் போல கிடக்கு...??

உங்களுக்கு தெரியுமோ கைது செய்யபட்ட புலிகளை நான்கு வகையாக பிரித்து வைத்து இருக்கிறார்கள் எண்டு... ஏன் அப்படி பிரிச்சு வைச்சு இருக்கிறார்கள் எண்டதாவது தெரியுமோ...??

பிடிச்சு கொண்டு போய் வைத்து இருந்தால் உடனை எல்லாரும் இலங்கை அரசுக்கு சார்ப்பாக வேலை செய்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி குடுப்பினம், அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு ஊக்கம் குடுப்பினம், எண்டு சிலர் கதை சொல்லுவினம் அதை உங்கள மாதிரி சிலர் நம்புவினம் எண்டதும் இப்ப எனக்கு விளங்குது...

புலிகளுக்கு மிண்டு குடுத்த ஒருத்தன் சிங்களவருக்கு எதிராக செயற்பட்ட ஒருத்தன் வலு வேகமாக இலங்கை அரசுக்கு நம்பிக்கைக்கு தகுந்தவராக எப்படி வந்தார், உயர் மட்ட சிங்கள தலைமைகளை சந்திக்கும் தகுதியை எப்படி கொண்டார் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை... !

தயா தங்களின் புரிதலை நினைத்து புல்லு அரிக்குது...................நான் கேபீ எப்படி கைது செய்யப்பட்டார் என்ற தடுப்பு சுவரில் முட்டி மோதி கொண்டு இருகேன் நீங்கள் நாலு சுவர் எழுப்பி கட்டிய அறைக்குள் என்ன நடக்குது என்று கற்பனையில் எழுதுகிறிங்கள்......... .

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது சரணடைந்து இருக்கலாம். தான் சி.எம்.ஆரின் ராகவனின் தொலைபேசி அழைப்புக்கு விடை அளிக்க வந்த போது தொலைபேசி இணைப்பு சரியில்லாததால் கோட்டலின் வெளியில் வந்து கதைத்த போது மலேசிய உளவு படை கைது செய்ததாம்.தலைவரால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் சி.எம்.ஆருக்கு பேட்டி கொடுக்காமல் ஒரு மணித்தியால பேட்டி ஒன்றை இளையபாரதியின் வானொலிக்கு கொடுத்தன் மர்மம் என்ன? இப்பேட்டி கைது செய்யப்பட முதல் நடைபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

dbsjeyaraj.com Home

--------------------------------------------------------------------------------

KP, Soosai and Nadesan try for “ceasefire” while Praba and Pottu Amman become “silent”

May 17th, 2009

By D.B.S. Jeyaraj

The beleaguered Liberation Tigers of Tamil Eelam (LTTE) embarked on a frantic last-ditch effort to hold off the anticipated “final” operation by the Sri Lankan Armed forces that seemed to have ended in failure by the evening of Sunday May 17th 2009.

In spite of the LTTE’s efforts and international pressure to bring about a “ceasefire” of some kind , the Sri Lankan Government of President Mahinda Rajapakse resolved to stand firm in its decision to go ahead with its military operations to “finish” off the LTTE boxed into a tiny area not exceeding one sq km in area.

The Army commenced the final push on Sunday evening when its elite Special forces and commando units went into action against the last enclave of the LTTE in the Mullivaaikkaal area of Karaithuraipatru AGA division in Mullaitheevu district.

With the buzz surrounding unconfirmed reports of the LTTE leader’s demise gaining ground , knowledgeable politico-military-diplomstic circles were further intrigued by the sudden “silence” of LTTE leader Velupillai Prabhakaran and his right hand man and intelligence chief Sivashankaramoorthy alias Pottu Amman.

Both seemed to have “gone off the radar” suddenly and it was three other LTTE stalwarts who came to the fore by getting involved in negotiations.

Earlier, Sathiyadevi Sivanesan the wife of Thillaiyambalam Sivanesan alias Soosai had told the Sri Lankan authorities that an injured Prabhakaran was at a location in Mullivaaikkal with over 300 LTTE cadres guarding him.

The Intelligence chief Pottu Amman was also at the same place.

Sathiyadevi had surrendred to the Navy with her son Sivanesan Maniarasan and daughter Sivanesan Sindhuja.

Subsequently a member of the LTTE’s Thileepan medical unit who surrendered to the Army had confirmed that an injured Prabhakaran along with Pottu Amman was staying at a particular location and supplied co-ordinates of the position.

The Army had then closed in and encircled the location.

While the Armed forces and Defence ministry circles remained tight-lipped about the exact status of the operation there was much excitement about the demise of Prabhakaran

Speculation was rife that Prabhakaran had either committed suicide or been killed and that announcement of it was being delayed until President Rajapakse’s return from Jordan.

The President was expected to make a public announcement on Sunday May 17th.

The Presidential address to the nation has now been scheduled for Tuesday May 19th.

Meanwhile the “silence” of Praba and Pottu has added further grist to the rumour mill.

One line of speculation is that both Prabhakaran and Pottu Amman are dead either by committing suicide or being killed by aerial bombardment or artillery shelling.

The other line of speculation is that they have escaped from the area by sea after breaching the naval cordon or have broken through military lines on land to reach the Weli-Oya jungles.

But LTTE political commissar Nadesan told a Journalist that Prabakharan was still in Mullivaaikkaal but had been moved to a safer, secret location.

Whatever the “final” position about Prabhakaran , this writer is of the opinion that his “fate” is likely to be shrouded in mystery.

There is little chance of his being captured alive and if he is no more the chances of his body being discovered are also remote.

It would be destroyed by loyalists rather than let it be paraded around by the Army.

If Prabhakaran has fled Sri Lanka or gone into the jungles even then he would go out of public “circulation” for reasons of safety and security.

Thus the questions “what happened to Praba” or “where is he” would continue to be unanswered yet generate much discussion and speculation.

The current “silence” itself could be a harbinger of the future.

Meanwhile three other LTTE stalwarts took over the task of “talking” even as Praba and Pottu were conspicuous through their absence.

The LTTE trio involved in negotiations were Sea tiger special commander Soosai, Political commissar Nadesan and International relations head Selvarasa Pathmanathan alias KP.

In a frantic bid to stave off the impending military drive the LTTE got in touch with influential “friends” in Britain and the USA to urge for a “humanitarian ceasefire” to avoid carnage and bloodbath of civilians.

It is reliably learnt that the LTTE while refusing to surrender to the Sri Lankan army offered to “surrender” to the UN, if Britain and the USA guaranteed the safety and security of its leaders, cadres and families.

The LTTE said it would not formally subscribe to the word “surrender” and instead use the phrase “silencing of its arms”.

The LTTE also pointed out that there were more than 10,000 civilians consisting of families of cadres, leaders, great heroes, supporters, LTTE and employees in the war zone . In addition there were around 25,000 other civilians.

Thousands of these civilians were injured and needed urgent medical treatment.

The LTTE urged a “pause” during which the injured could be evacuated through Irattaivaaikkaal in the north and Vattavaakal in the South.

The LTTE also offered to “silence their guns” if necessary.

Sea tiger special commander Soosai made an urgent appeal through a European TV.

Selvarasa Pathmanathan alias KP also issued a special statement offering a “ceasefire”.

Thereafter diplomats from Western nations made efforts to get Colombo to declare a temporary ceasefire to facilitate evacuation of injured civilians and to enable negotiations about surrendering to a third party.

Apart from diplomatic efforts, British Prime Minister Gordon Brown reportedly telephoned President Rajapakse for exploratory talks on the subject.

UN Secretary-General Ban Ki Moon also talked to the President.

Moon’s chief of Staff, Vijay Nambiar is already in Colombo to discuss humanitarian measures.

The twin issues concerning the International community are the need to prevent a potential civilian catastrophe and the urgent need to evacuate civilians including the wounded to safe areas.

Though more than 800 injured civilians have been evacuated almost all of them are in the walking wounded category.

Hundreds of seriously injured civilians are in the war zone suffering under desperate conditions.

Not even a single makeshift hospital is functioning there and most medical personnel have also been evacuated.

The Red Cross ship that goes in to transport injured people has not docked there for more than a week.

The ICRC has been denied entry since the war escalated, on the grounds, that the situation there is dangerous now

Attempts to bring about a humanitarian pause to enable the ICRC ship’s passage to the war zone has failed due to the refusal by armed forces to declare even a temporary ceasefire.

The Army is on the verge of defeating the LTTE and does not want the tigers to be let off the hook.

The situation is also terrible due to shortage of food, water and adequate, safe shelter.

According to information provided by medical personnel who came out recently around 2000-3000 persons have been killed and thousands more injured.

Dead bodies are being cremated in bunches or buried in mass graves.

There is also the potential threat to civilians as the military intensifies military operations.

The estimates of the Govt about the civilian population is at variance with other agencies.

The Govt had earlier said that only 15-20,000 civilians were living in the war zone. But the UN and ICRC estimated it to be upward of 50,000. Other NGO’s placed it as between 80,000-120,000. The Administrative AGA figures placed it officially at 165,000.

Now the very same government which said only 15-20,000 were there claims proudly about having evacuated 72,000 in three days.

This is like the govt earlier saying in April that only 70,000 civilians were in the war zone and then boasting that it has rescued more than 110,00 in three days.

The Government is now saying that all civilians are now evacuated and that only the tigers are remaining in the war zone.

In the eyes of Colombo all members of LTTE related families are not civilians but “tigers”. Unofficially the govt opines that around 10-15,000 “civilians” are in the war zone but refuse to acknowledge their civilian status.

The LTTE says there are around 2000 cadres, 10-12,000 LTTE related family members and a further 25,000 other civilians.

The Armed Forces and Defence establishment have also firmly ruled out a ceasefire whether temporary or permanent.

There was no question of surrendering to a third party and there would be no negotiations to arrange for a surrender.

The only option was for Tigers and “civilians” to approach the armed forces carefully with white flags and surrender.

The LTTE on the other hand has firmly declared that there would be no “surrender” to the Army.The “silencing of guns” would be to an Internationally facilitated initiative alone

If the armed forces go ahead with the anticipated military operation the tigers would regret the “loss of lives” and be sorry for “not being able to hold out any longer”.

There was some hesitation among enlightened sections of the government about going ahead with full- scale war in the face of international concern for civilians

Undertaking a military operation with full knowledge of potential civilian casualties and not taking adequate preventive measures was tantamount to a war crime, these sections feared.

Notwithstanding concerns about “war crimes” the upper echelons of the armed forces and defence establishment were firmly in favour of going ahead with the “final” mission to eliminate the LTTE.

It was pointed out that the armed forces were at a historic juncture being poised to conclusively defeat the “terrorist” movement plaguing the country for three decades.

If the Govt was to falter or fumble at this stage the nation at large would revolt besides aggravating dissension in military ranks,it was pointed out.

Therafter the Govt decided to go ahead as planned despite international pressure and warnings about “war crimes”.

The Army commenced its “final” operation on Sunday May 17th evening. Elite special forces and commando units are deployed to target an area less than a square km where the tiger hierarchy and bulk of cadres are said to be holed up.

President Rajapakse is hopeful of “victory” when he addresses the nation on Tuesday May 19th.

Meanwhile there are ominous signs of mass deaths as the armed forces zoom in on the target area. The armed forces will unleash massive firepower and airpower resulting in huge civilian casualties.

There is also a lot of fear that the tigers and supportive civilians could engage in mass suicide rather than surrender to or be captured by the armed forces.

Adding to these fears further was the sudden “rupture” in communications between KP and Soosai via satellite phone for the past few hours.

A humanitarian catastrophe seems to be unfolding even as the “end” of the conventional war phase seems to be in sight.

http://dbsjeyaraj.com/dbsj/archives/590

http://www.youtube.com/watch?v=3t9qAnUr5vc

http://www.youtube.com/watch?v=oz9DujtyghM&feature=related

http://www.youtube.com/watch?v=GHJKEa5KDc4&feature=related

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாவிட்டால் பலரைப் போல தங்கள் சொந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போயிருப்பாரே.

இன்னமும் சிறையில் வாடும் பல முன்னாள் போராளிகளைப் பற்றிப் கவலைப்படாத தேசியவாதிகளைவிட நெல்லையன் பரவாயில்லை.

இலங்கையரசு முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு கொடுத்து விடுவித்து வருவதை பல "உணர்வாளர்கள்" விரும்பாமல் இருப்பதும் தெரியும்!

கண்டதையும் கடித்து குதறும் ஓநாயிலும் விட திட்டமிட்டு கொன்று தின்னும் நரி பராவாயில்லை என்ற உங்களின் கருத்து பிழையானது என்பதல்ல எனது இடம்.

மாவீரரைபற்றி கவலைபடும்போதெல்லாம் தலைமையின் தலையிலும் ஒன்றிரண்டு மயிரை இழுத்து புடுங்கிறார்களே........... இவர்களை மாவீரர்களின் மரணங்கள் எந்தளவு பாதித்துள்ளது என்பதை நினைக்கும்போது............ எமக்கு மட்டும் அந்தளவு கவலை வரவில்லையே என்ற ஒரு சின்ன ஆதங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்த பாம்பை அடிக்கிறதில எவ்வளவு சந்தோசம் எமக்கு??????? :lol: :lol:

கண்டதையும் கடித்து குதறும் ஓநாயிலும் விட திட்டமிட்டு கொன்று தின்னும் நரி பராவாயில்லை என்ற உங்களின் கருத்து பிழையானது என்பதல்ல எனது இடம்.

0002064B.gif

வாவ்வ்வ்வ்வ்...... ஓநாய்களிடமும், நரிகளிடமும் என்ன பூனை, எலி, பல்லிகளிடமும் கொண்டு போய் தேவையில்லாமல் தலையை அல்லோ கொடுத்து அழிந்தோம்! .... தலையை கொண்டு போய் கொடுத்தால் நாக்கால தலையை வாரி, தடவி விட்டுத்தான் போகும் எண்டு நினைத்தனீங்களோ???? :lol::lol:

செத்த பாம்பை அடிக்கிறதில எவ்வளவு சந்தோசம் எமக்கு??????? :lol::D

ம்ம்ம்ம்... செத்த பாம்பை ஒரே அடியாக புதையுங்கோவன்???? புதைத்துப் போட்டு இனி என்ன செய்வம் என்று நினைக்காமல் ... செத்ததை இழுத்து திரிந்து உயிர் கொடுக்க முனைந்தால் ...!!!!! :lol:

Edited by Nellaiyan

2005ம் ஆண்டு திடிரென ஜோர்ஜ்ஜா நாட்டு இராணுவம் சமாதனத்தை குழப்பி போராளிகள் மேல் தாக்குதல் தொடுத்ததற்கான காரணத்தை எழுத முடியுமா?

... ஆட்டுக்குள் மாட்டை செருகி பழகி விட்டோம்!!!!! ... ம்ம்ம்ம்ம்.... இங்கு ஜோர்ஜியாவை கொணர்ந்து சொருகி இருக்கிறீர்கள்!

* ஜோர்ஜியாவை இங்கு ஏன் சொருகினீர்கள்?

* ஏதோ தெரியும் போல் சொருகி இருக்கிறீகள், சொருகியதை பற்றி சிறிது சொல்லுங்கோ பாப்பம்?

* ஜோர்ஜியாவின் புவியியல் நிலைமை பற்றி சொல்லுங்கோ?

* ...???

நாங்கள் கொஞ்சக்காலத்துக்கு முன்னுக்கு லெனின்கிராட்டையும், எரிட்ரியாவையும், ... அலசி புளிஞ்சு எடுத்தனாங்கள்!!! இப்ப ஜோர்ஜியாவாம்!!!!!!!! அதுக்கு முன் உலக படத்தை திறந்து வைத்து விட்டு மருந்தங்கேணியில் நுனி விரலை வைத்துக் கொண்டு(அது முழு ஈழத்தையும் கவர் பண்ணும்) சுற்றும் முற்றும் பாருங்கள்? எங்கள் அரசியல் புரியும்? :lol:

கேபீ காட்டி கொடுக்க பட்ட ஒருவர் என்பது என்னால் அசைக்க முடியாத நம்பிக்கை.

சசி, நானும் இவ்வாறுதான் நினைத்திருந்தேன்!!!

... இந்த புலத்தில் பணத்துக்கும், பதவிக்குமாக ஒட்டி இருந்த/இருக்கும் கொள்கையற்ற காஸ்ரோக்கள் காட்டிக்கொடுக்கக்கூடியவர்கள், அதில் சந்தேகமில்லை!! ...

நானும் காட்டிக்கொடுக்கப்பட்டதாகவே நம்பினேன், ஆனால், இந்த கேபிக்காக நின்ற/செயற்பட்டவர்கள் அதிலும் கேபியின் மேல் திடீர் காதல் வந்து ஒட்டியவர்களின் கதைகளும் செயற்பாடுகளும் ... அண்ணையின் பாசறையில்/அண்ணையால் வளர்த்தெடுக்கப்பட்ட கேபியானவர் சில காலங்களுக்கு முன்னமே, அண்ணைக்கு ஆப்பிறுக்கத் தொடங்கி விட்டதை உறுதிப் படுத்தியது! ... யாரை நோவது???????

தயா தங்களின் புரிதலை நினைத்து புல்லு அரிக்குது...................நான் கேபீ எப்படி கைது செய்யப்பட்டார் என்ற தடுப்பு சுவரில் முட்டி மோதி கொண்டு இருகேன் நீங்கள் நாலு சுவர் எழுப்பி கட்டிய அறைக்குள் என்ன நடக்குது என்று கற்பனையில் எழுதுகிறிங்கள்......... .

நான் கற்பனை செய்கிறேன் எண்று நீங்கள் கற்பனையில் கண்டு பிடிச்சது இன்னும் புல் அரிக்க வைக்கின்றது...

கே பி செய்வது சரியா தவறா அது ஒரு புறம் இருக்கட்டும் சரணடைந்த போராளிகளை ஒருகணம் எண்ணிப்பாருங்கள்

  • தொடங்கியவர்

கேபீ காட்டி கொடுக்க பட்ட ஒருவர் என்பது என்னால் அசைக்க முடியாத நம்பிக்கை

கே.பி காட்டிக்கொடுக்கப்படவில்லை என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி காட்டிக்கொடுக்கப்படவில்லை என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

அது தான் எனது கருத்தும்

ம்ம்ம்ம்... செத்த பாம்பை ஒரே அடியாக புதையுங்கோவன்???? புதைத்துப் போட்டு இனி என்ன செய்வம் என்று நினைக்காமல் ... செத்ததை இழுத்து திரிந்து உயிர் கொடுக்க முனைந்தால் ...!!!!! :)

நாங்க புதைச்சிட்டம்.! நீங்கள்தான் கிழறி எடுத்துக்கொண்டுவந்து அடிச்சிக்கொண்டு இருக்கீங்க.. :) முதல்லை அதை நிப்பாட்டுங்க... அடுத்த கட்டத்துக்கு போவதற்கு அது உதவும். :D

  • கருத்துக்கள உறவுகள்

0002064B.gif

இந்தத் திரிக்கு சரியான பதில் :)

  • கருத்துக்கள உறவுகள்

வி.உருத்திரகுமாரன் அவர்கள் கூறுவது போன்று கே.பி ஒரு 'சூழ்நிலைக் கைதியாக' இருக்கும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்விடயங்கள் தொடர்பாக அவர் வழங்கும் செவ்விகளை எவ்விதமாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் கற்பிதம் செய்து கொள்வது?

இதில் எங்கே கே பீயை உருத்திரகுமாரன் நியாயப் படுத்தி இருக்கிறார்.சிறிலங்கா அரசின் வசம் உள்ள கைதியின் செயற்பாட்டை நாம் (நா.க.த.அ)இனி பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தொனியிலேயே பேட்டி கொடுத்திருக்கிறார். கட்டுரையாளர் அதற்கு தவறான விளக்கம் கொடுத்து வாசகர்களை குழப்ப திசை திருப்ப எத்தனிக்கிறார்.தவறான ஒருவர் சரியான ஒரு தீர்மானத்தை (நா.க. த.அ)முன்மொழிந்தார் என்பதற்காக அதனை நடை முறைப்படுத்துபவரும் தவறானவரே என்று நிறுவ முற்படுவது அபத்தமானது.தமிழிPழக் கொள்கையையும் தவறானவர்களே (த.வி.கூ) முன்மொழிந்திருந்தனர்.அதற்காக அதனை முன்னெடுத்த புலிகளும் தவறானவர்களே என்று சொல்வதைப்போல் இருக்கிறது கட்டுரையாளரின் கருத்து.

Edited by புலவர்

இதில் எங்கே கே பீயை உருத்திரகுமாரன் நியாயப் படுத்தி இருக்கிறார்.சிறிலங்கா அரசின் வசம் உள்ள கைதியின் செயற்பாட்டை நாம் (நா.க.த.அ)இனி பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தொனியிலேயே பேட்டி கொடுத்திருக்கிறார். கட்டுரையாளர் அதற்கு தவறான விளக்கம் கொடுத்து வாசகர்களை குழப்ப திசை திருப்ப எத்தனிக்கிறார்.தவறான ஒருவர் சரியான ஒரு தீர்மானத்தை (நா.க. த.அ)முன்மொழிந்தார் என்பதற்காக அதனை நடை முறைப்படுத்துபவரும் தவறானவரே என்று நிறுவ முற்படுவது அபத்தமானது.தமிழிPழக் கொள்கையையும் தவறானவர்களே (த.வி.கூ) முன்மொழிந்திருந்தனர்.அதற்காக அதனை முன்னெடுத்த புலிகளும் தவறானவர்களே என்று சொல்வதைப்போல் இருக்கிறது கட்டுரையாளரின் கருத்து.

அருமையான கருத்து புலவர்.

இவர்களின் முதன்மையான இலக்கு நாடுகடந்த தமிழீழ அரசினை முடக்குவதே! இவர்களிற்கு கிடைத்த ஆயுதம் கேபி.

ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு பாதையை இடைநடுவிலேயே நிறுத்துவதற்கு நல்லாத்தான் முயற்சி செய்கிறார்கள்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"

[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2010, 07:36.45 மு.ப | இன்போ தமிழ் ]

2009 மே 17ன் பின்னரான தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணம், புதிதாய் பிறப்பெடுத்திருக்கும் நாடுகடந்த அரச உருவாக்கம், கே.பி மற்றும் உருத்திரகுமாரன் மீதான தனிமனித வசைபாடல்கள் என பல்வேறு வினாக்களோடு சுவிசிலிருந்து வெளிவரும் ஆதவன் மாத இதழ் பொறுப்பாசிரியர் பொன்னிலா நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தின் இணைப்பாளர் உருத்திர குமாரன் அவர்களிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த சிறப்பு நேர்காணலை காலத்தின் தேவை கருதி மீள் இடுக்கை செய்கின்றோம். அத்தோடு இதை மீள் இடுக்கை செய்வதற்கு அனுமதித்த ஆதவன் சுவிஸ் மாத இதழ் நிர்வாகத்தினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்

- இன்போதமிழ் குழுமம்-

உருத்திர குமாரன் அவர்களுடனான ஆதவன் இதழ் பொறுப்பாசிரியர் பொன்னில்லாவின் நேர்காணல் வருமாறு:

2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது.

கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாயு;வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சிறிலங்கா அரசிடம் கையளிக்கபட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல.

இவர் சிறிலங்காவின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், சிறிலங்கா தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.

எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில்; நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன்.

இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.

இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

எல்லா தரப்புக் குழுக்களையும் ஒருங்கிணைத்து பரந்து பட்ட ஒரு தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாதா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு இத்தகைய நோக்கமும் உண்டு. இத் திட்டம் தொடர்பாக நாம் 16.06.2009 அன்று விடுத்த முதலாவது முன்மொழிவில்,

”1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

- தமிழர் ஓர் தேசிய இனம்

- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது” என்பதனை இம் முயற்சியின் அடிப்படைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமிழர் சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் உருவாகி வரும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்குpய திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் உருவாக்கும் போது நீங்கள் குறிப்பிடும் வகையிலான இணைவு நடந்தேறும் என்றே நான் கருதுகிறேன்.

புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?

மே மாத நடுப்பகுதி வரை நாhளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை.

மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் உலங்கிலும் உள்ள தமிழர்கள் தலைமை ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள். இது பெருங்குறை இல்லையா?

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம்வரை இருந்த சூழலும் தற்போதய சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இப் புதிய சூழலில், புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை இவற்றின் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும்; மூலோபாயங்களில் தான் வித்தியாசம். வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே. இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் (யபசநந வழ னளையபசநந) இருந்தாலே போதுமானது. இத்தகைய புரிந்துணர்வு செயற்பாடுகளுக்குள்ளால் எட்டப்படக்கூடியது என்பதனை நான் திடமாக நம்புகிறேன். தற்போதய இடைமாறு காலகட்டத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் எல்லாம் செயற்பாடு எனும் தளத்தில் இணையும்போது தெளிந்து விடும்.

நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய உலகச் சூழலில் உலக நாடுகளின் கவனத்தை குறிப்பாக ஐய்ரோப்பிய நாடுகளின் கவனத்தை தன்பால் ஈருக்குமா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக அமைக்கப்படுகிறது. இதன் செயற்பாடுகளும் முழுமையாய் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஜரோப்பிய மற்றும் மேற்குலக மக்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இந் நாடுகளால் நிராகரிக்கமுடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சிறிலங்கா அரசு தனது ஆரவாரத்தால் உலக நாடுகளின் கவனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திருப்பி விட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து சிறிலங்கா அரசு அச்சமடைந்துள்ளது என்பதனை இதன் ஊடாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, அது ஜரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி - இந் நாடுகளின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்போதுதான் முழுமையாக வெற்றியளிக்கும். தற்போது சிறிலங்கா அரசின் போக்கில் ஜரோப்பிய நாடுகள் உள்ளடங்கலான மேற்குலகம் அதிர்ப்தியடைந்திருப்பதனை உணரமுடிகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பக்குத் துணைபுரியக்கூடிய சாதகமான ஒரு அம்சமே.

உலகின் எந்த ஒரு நாடுமே ஒரு இன விடுதலைப் போராட்டம் என்கிற அளவில் கூட ஈழ மக்களின் இறையாண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே?

இங்கு நாடுகள் எனும்போது அரசுகளையும் அந் நாட்டு மக்களையும் நாம் பிரித்து பார்த்தல் நல்லது.

ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கு போராடும் போது அவ் இறையாண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனிஅரசினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குரிய சூத்திரம் அரசுகளைப் பொறுத்த வகையில் நலன்கள் என்ற மந்திரக்கோலில்தான் தங்கியுள்ளது. அதற்குரிய சமன்பாடு மிக எளிதானது. இலங்கைத்தீவு ஒரு நாடாக இருப்பதா அல்லது இரு நாடுகளாக இருப்பதா தமது நலன்களுக்கு நல்லது என்ற கணக்கிலிருந்துதான் அரசுகளின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மை உணர்வினை உலக நாடுகள் புரிந்து கொள்ள முயலவில்லை. இவ் விடயத்தில் இந்தியாவின் நிலையும் உலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமாகவிருந்திருக்கிறது.

ஆனால் மக்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கான நியாயப்பாடுகள் உரியமுறையில் அவர்களைச் சென்றடையும் போது எமது கோரிக்கையின் நியாயத்தன்மையினைப் புரிந்து கொளகிறார்கள். ஆதரவினைத் தருகிறார்கள்.

வன்னி மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையானது. தமிழர்களுக்கு எதிரான இந்தியத் தலையீடு தமிழகத்திலும் புலத்திலும் இந்தியாவின் மீது கடும் விசனத்தை உண்டு பண்ணியிருக்கும் நிலையில் இந்தியா உங்களின் கோரிக்கைக்காக உதவும் என்று நம்புகிறீர்களா?

ஈழத் தமிழர் தேசத்திற்கு இந்திய அரசு உதவுவது என்பது அதன் நலன்களோடு தொடர்புபட்டது.

முற்றி வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்பக்கள் உண்டு எனறே நாம் கருதுகிறோம். சிறிலங்கா அரசினைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி வைத்திருத்தல் தனது பிராந்திய மற்றும் ப+கோள நலன்களுக்கு அவசியம் என இந்தியா கருதுகிறது. அதற்காக சிறிலங்கா அரசுக்கு உதவியளித்து – அதனைத் தனது செல்வாக்கிற்குட்படுத்தி வைத்திருக்கும் கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தான் வன்னிப்போரிலும் எதிரொலித்தது.

இலங்கைத்தீவினை சீனமயப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசு தற்போது ஈடுபட்டிருப்பதானது தற்செயலானதல்ல. அல்லது உதவி செய்யும் சீனாவின் விருப்பத்திறகிணங்க மட்டும் நடைபெறுமொன்றுமல்ல. இந்தியாவின் தன் மீதான ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா அரசு தனது நலனின் அடிப்படையிலும்தான் சீனாவுக்குக் கதவு திறந்து விட்டுள்ளது. காலவோட்டத்தில் சீனா இந்தியாவின் செல்வாக்கினையும் மீறி இலங்கைத்தீவினை விழுங்கத்தான் முயலும். இவ்விடத்திலிருந்து இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இன்னமும் முகாம்களுக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் அடைபட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வதை முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களின் உயிர் பாதுகாப்பு... விடுதலை குறித்தெல்லாம் முன்னெடுப்புகளை உங்களால் செய்ய முடியாதா?

இவை குறித்து தற்போது எமது மதியுரைக்குழு உறுப்பினர்கள் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் போது இவ் அரசாங்கம் இவை குறித்த நடவடிக்கைக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் என்பது எமது நம்பிக்கை.

புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அஞ்சி நாம் எமது வெளிநாட்டுப் பயணங்களை கைவிட மாட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?இது பற்றி என்ன நினைகிறீர்கள்?

சிறிலங்கா அரசு இவ்வாறு கூறுவதே புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பான அச்சம் அவர்களுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் முக்கியமான அரசியல் சக்தியாக பரிமாணம் அடைந்துள்ளனர் என்பதனையும் இது காட்டுகிறது.

புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?

மே மாத நடுப்பகுதி வரை நாhளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை.

மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.

இனக்கொலை, தடுப்பு முகாம்களில் மக்கள், அரசியல் கைதிகள், இதற்கெல்லாம் என்ன வேலைத் திட்டம் உங்களிடம் இருகிறது?

இத்தகைய விடயங்களை கையாள்வது குறித்து தொடர்பான சில விபரங்கள் மதியுரைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்த விரிவான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் வகுத்துச் செய்யப்படவேண்டியவை.

அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?

அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகனடப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும். அமெரிக்கச் சட்டப் படி இவ் அமைப்புக்களுக்கு பொருண்மிய உதவி வழங்குதல் குற்றமாகும். ஆயினும் இவ் அமைப்புக்களின் அரசியல் கொள்கைகளுக்கு சுயாதீனமான முறையில் ஆதரவு வழங்குவது சட்டத்திற்கு ஏற்புடையது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குறிக்கோளை, அரசியல் வேலைத்திட்டத்தை சுயாதீனமான முறையில் எடுத்துச் செல்லலாம்,

அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் எடுத்துக்கொண்ட சாரம் என்னவெனில், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுடன் இணைந்து செயல்படும் உரிமையை மறுப்பது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு முரணானது என்பதாகும்.

உச்ச நீதிமன்றதின் தீர்ப்பு ஜுன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.