Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகளின் பிறந்த நாளுக்கு பணத்தை பரிசாக கொடுப்பது சரியா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பிறந்த நாளுக்கு பரிசாக பணத்தை கொடுக்கிறார்கள்.இப்படி செய்வதால் பிள்ளைகளின் மனதிலும் பணம் சம்பந்தமான அளவுக்கு அதிகமான ஒரு ஆசையை உருவாக்குவது ஆரோக்கியமான விடையமா.ஏற்கனவே பெரியோர்கள் பணத்துக்காக சகலதையும் அற்பனித்து வாழும் நிலையில் :rolleyes: அடுத்த சந்ததிக்கும் இது கடத்தப்பட வேண்டுமா.

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியதை வாங் கி கொள்ளட்டும் என்று தான் பணம் கொடுக்க படுகிறது . அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தேடித்திரிந்து வாங்க நேரமின்மை, .அவர்களது விருப்புபொருள் தெரியாமல் பெரியவர்களின் இந்த இலகுவான் அன்பளிப்பு ..தான் பணம் கொடுத்தல்.

  • கருத்துக்கள உறவுகள்

உழைப்பினால் வரும் பணமே தொல்லையில்லாதது. நீங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பண அன்பளிப்பை அபரிமிதமாகக் கொடுத்தீர்களானால் அனேகமாக அவர்கள் காலப்போக்கில் ஊதாரிகளாகவே ஆவார்கள். காரணம் பணம் ஈட்டுவதில் உள்ள கஷ்டங்களை அவர்கள் மறந்துவிடுவதே..

அந்தவகையில் பிள்ளைகளுக்கும் பணத்தைக் கொடுத்துப் பழக்கினால் அவர்கள் பணம் ஏதோ மரத்தில் காய்ப்பதுபோல இலகுவில் நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவர்களது பிற்காலத்தையும் அது பாதிக்கலாம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் சின்னப் பிள்ளைகளுக்கு அவர்களின் பிறந்த நாள் பரிசாக பணம் கொடுப்பதை தவிர்த்து அவர்களது படிப்புக்கு உகந்த பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்.காரணம் அப்படி நாங்கள் கொடுக்கும் பொருட்களை பல வருடங்களுக்கு வைத்து உபயோகிப்பார்கள் அது மட்டுமில்லை சிறு வயதிலயே பணம் ஒன்றைக் காட்டி வளர்த்தோமானால் அந்தப் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் இல்லாது போய் விடும்.தாய்,தந்தையர்கள் படும் கஸ்ரம் தெரியாதவர்களாகிவிடுவார்கள்.யாரும் நினைக்கலாம் காசு கொடுத்தால் கொஞ்சம் குறைவாக வசதிக்கு தக்கபடி குடுக்கலாம் பொருட்கள் வாங்க வெளிக்கிட்டால் பணம் அதிகம் செலவாகி விடும் என்று....அது தப்பான அபிப்பிராயம் குறைந்த விலையிலயே எத்தனையோ நீண்ட காலம் பாவிக்க கூடிய பொருட்கள் நிறையவே வாங்கலாம்.

எங்கள் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை நல்ல வளிக்கு இழுத்து செல்ல வேண்டுமாக இருந்தால் தேவை அற்ற ஆசைகளை சிறு பராயத்திலயே பளக்காமல் விடுவது நன்று.அதற்காக ஆகலும் அந்தப் பிள்ளைகளை வதைக்கவும் கூடாது. உதாரணத்திற்கு உறவினர் வீடுகள் எங்காவது போனால் அங்கு இருக்கும் பொருட்களைப் பார்த்து அந்தப் பிள்ளை விருப்பட்டு கேட்டு மனம் வருந்தக் கூடாது.அதைப் பெற்றோர் நல்ல முறையில் எடுத்து சொல்லி விளங்க வைக்க வேண்டும்.பிள்ளைகளை அவர்களின் கல்வியில் மேலும் நாட்டம் கொள்ள வைத்து அதில் நன்கு தேறியதும் குழந்தை விரும்பும் பொருளை வாங்கிக் கொடுக்கலாம். இதுவே எனது அபிப்பராயம்.நான் எனது உறவுக்காரப் பிள்ளைகளுக்கு பணம் கொடுப்பது மிக,மிக குறைவு.நன்றி.. :rolleyes:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுக்கிறது தப்பு என்டு தான் நானும் நினைக்கிறேன் அதற்குப் பதிலாக பொருளாக வாங்கிக் கொடுக்கலாம் ஆனால் சில நேரம் காசு கொடுக்கா விட்டால் குழந்தைகள் காசை களவெடுத்து பழகி விடுவார்கள் என நினைக்கிறேன் :rolleyes: ...வளர்க்கும் போது கஸ்டத்தை சொல்லி வளர்த்தால் நல்லது

இங்கே பிறந்து வளரும் குழந்தைகளைக் கவனித்தால் அவர்கள் சிறுவயதிலையே இருந்து தமக்குப் பிடித்த சாப்பாடு, உடுப்பு, விளையாடுப் பொருள், என்று எல்லாவற்றிலும் ஒரு favourite வைத்து இருப்பதைக் காணலாம். அதிற்கு அவர்களின் பெற்றோகள், நண்பர்கள், தொலைகாட்சி இப்படி அவர்களைச் சுற்றி இருக்கும் சூழலே அவற்றுக்குக் காரணமாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் ஊக்குவிப்பது அவர்களின் பெற்றோர்கள்/ பெரியோர்களிலையே தங்கி இருக்கிறது.

ஊரில நாங்கள் வீட்டில ஏதும் செய்து குடுத்தால் சில்லறைக் காசும், மரத் தளபாடங்களுக்கு வாணிஷ் அடிச்சு, வேலிக்கு கத்தியால் நட்டு, வேலியும் அடைச்சால் தான் தாள் காசு கைல காணலாம்... அப்படி வரும் காசுகளில் தான் புத்தகப் பை, கொம்பாஸ் என்று வாங்கியது போக மீதி பணத்தில் பெற்றோருக்கு, சகோதரங்களுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து மடல் வரைந்து, நிறம் தீட்டி அதனுள் ஸ்டார் டொபி வாங்கி விசுக் குடுத்த ஞாபகம். அப்படி ஊரில பல பெற்றோர் தம் பிள்ளைகளை பொறுப்பாக வளர்த்து இருக்கிறார்கள், அதனால் தான் இங்கே இந்த கடும் குளிரிலும் பணியிலும் உழைப்பின் அருமையை அறிந்து செய்யல படுகிறோம். ஆனால் இஞ்ச பிறந்த பிள்ளைகளை அப்படி வளர்க்க நாம் எந்த விதத்தில் முயற்சிக்கிறோம்?

காசின் அருமை இங்குள்ள பிள்ளைகளுக்கு விளங்குவது குறைவு என்று தான் எனது கணிப்பு... எது கேட்டாலும், அப்பா/ அம்மா உறவினர்கள் வாங்கித் தருவார் என்ற ஒரு நம்பிக்கை- அது பிழை இல்லை. அந்தப் பிள்ளை அவர்களில் வைத்திருக்கும் நம்பிக்கையையே காட்டி நிக்கிறது அதே சமையம் அதை வாங்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் என்று உணர்த்துவது பெரியோராகிய எம்மையே பொறுத்து இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தைக்கு ஐந்து வயது வரும் வரைக்கும் அவர்கள் எண்ணப் படி எதுவும் செய்யட்டும், ஆனால் 5 -10 வரை பிள்ளைக்கு எது அவசியமோ (பெற்றோரின் ஆலோசை பெற்று/ விளங்கப் படுத்தி) அதை அறிந்து வாங்குவதும், 10 வயதின் பின்பு வீட்டில் சில பொறுப்புகளை சிறுவர்களுக்குக் கொடுத்து அதை அவர்கள் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையானதை வாங்குவதற்கு சிறிய தொகைப் பணத்தை கொடுத்து ஊக்குவிப்பது நல்லது என்று நினைக்கிறன். அவர்கள் அந்தப் பணத்தினை தங்கள் உழைப்பிற்கு கிடைத்த பரிசாக மட்டும் நினைக்காமல் அதனை நல்ல முறையில் பாதுகாக்கவும், அதனை நல்ல முறையில் செலவு செயவும் கற்றுக் கொடுப்பதும், அவர்களின் பிறந்த நாள் பரிசாக அவர்களின் உழைப்பினிலே ஏதும் பொருட்களை அவர்களுடன் சென்று வாங்கினால் அதனை அவர்கள் முழுமையாகப் பாதுகாப்பார்கள் என்றும், இது அந்த பிள்ளையின் உழைப்பிற்கும், மன வளர்ச்சிக்கும் பிற்காலத்தில் உதவியாய இருக்கும் என்றும் நினைக்கிறன்.

உறவினர்கள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்... நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்ற முறையில் அந்த சிறுவர்களின் பெற்றோகளுக்கும் இதனை சொல்லி விளங்கப் படுத்தலாம். அவர்களின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. சிலர் வில்லங்கமாக யோசிப்பார்கள் (என்ர பிள்ளைக்கு உவன் ஆர் பழக்குறது என்று) அப்படியான வில்லங்கங்களை விலைக்கு வாங்காதேங்கோ... அது உங்களுக்கு நல்லம்!

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கு பணம் கொடுத்தல்

அது எமது கட்டுப்பாட்டுக்கு மேல் செல்லும்போது...

ஆகாத ஒன்று தான்

அது அளவோடு

அவர்களது வயதுக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்

இதில்பெற்றோரது வருமானம் அல்லது தொழில் பிள்ளைகளின் தொகை ஆண் பெண் மற்றும் உறவுகளுடன் இவர்கள்பழகும்முறையைப்பொறுத்து அதற்கு ஏற்றவாறு அமையும்.

எனது பெரியவர்களுக்கு எனது வங்கிமூலம் குறிப்பிட்ட பணம் மாதா மாதம் செல்லுமாறு செய்துள்ளேன்

அதுவும் கணக்கு அடிக்கடி பார்ப்பேன்

சிறியவளுக்கு நல்லநாளுக்கு ஏதாவது அவர் விரும்பும் பொருளின் பெறுமதியைக்கேட்டு அந்த பணத்தைக்கொடுத்து உடனே அதை அந்த பணத்தில் வாங்கிக்கொடுத்துவிடுவேன்

அவரது கையில் பணம் இராதவாறு பார்த்துக்கொள்வேன்

அதேநேரம்

வெளிநாட்டில் பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கடினமான விளையாட்டு போன்றது

கொஞ்சம்அயர்ந்தாலும் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள்

ஏனெனில் அவர்கள் பழகும்சமூகம் அந்தளவுக்கு

விசாலமானது

சுதந்திரமானது

கட்டுப்பாடுகள் அற்றது

சிறியவர் பெரியவர் என்ற பேதமற்றது

கையில் பெருந்தொகை பணத்தை வைத்திருப்பது..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிசாக பணம் கொடுப்பதில் தப்பில்லை.

ஆனால் கொடுக்கும் தொகையை பொறுத்துத்தான் சகலதையும் தீர்மானிக்கலாம்.

பொதுவாக அவர்களின் சேமிப்புபுத்தகத்தில் இடுவதே சிறந்தது.

இதனால் பிள்ளைகளுக்கு சேமிப்பு ஆர்வமும் கூடிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கொடுப்பது நல்லது என நினைக்கிறேன்.ஏனெனில் அவர்களின் தேவை பெற்றோருக்கு மட்டுமே தெரியும்.நாம் ஒரு பரிசு பொருளை வாங்கி கொடுக்க அது அவர்களிடன் இருக்க கூடும்.சில வேளை உடுப்பு எனில் அளவு இல்லாமல் போகும் அல்லது நிறம் பிடிக்காமல் இருக்கலாம்.பணத்தை கொடுக்கும் போது பெற்றோர் அவற்றை சேகரித்து பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுக்கலாம்.எந்த பெற்றோரும் பிள்ளையிடம் பணத்தை செலவளிக்க கொடுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

மிகவும் சிக்கலான கேள்வி. நாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் குழந்தையாக ஊரில் வாழ்ந்தபோது காணப்பட்ட நிலமையை, பெற்ற அனுபவங்களை தற்கால சூழ்நிலைகளுக்கு பிரயோகம் செய்வது கடினமானது. நான் வழமையாக குழந்தைகளுக்கு Gift Card கொடுப்பது: உதாரணமாக திரைப்படம் பார்க்க செல்வதற்கு அல்லது குறிப்பிட்ட ஓர் கடையில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு அல்லது உணவு உண்பதற்கு. மண்டபம் எடுத்து விழாவாக வைத்தால் பணமாக கொடுக்கவேண்டியது தவிர்க்க முடியாதது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.நான் இநத கேழ்வியை கேட்டதன் முக்கய நோக்கம் இங்கு பெரும்பாண்மையான பெரியோர்கள் பணம்தான் வாழ்க்கை என்று வாழுகிறார்கள்.இந்த எண்ணம் பிள்ளைகளுக்கும் பரவிவிடக்கூடும் என்ற எண்ணத்தில்தான்.மீன்டும் அனைவருக்கும் நன்றி. :D

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பிறந்த நாளுக்கு பரிசாக பணத்தை கொடுக்கிறார்கள்.இப்படி செய்வதால் பிள்ளைகளின் மனதிலும் பணம் சம்பந்தமான அளவுக்கு அதிகமான ஒரு ஆசையை உருவாக்குவது ஆரோக்கியமான விடையமா.ஏற்கனவே பெரியோர்கள் பணத்துக்காக சகலதையும் அற்பனித்து வாழும் நிலையில் :rolleyes: அடுத்த சந்ததிக்கும் இது கடத்தப்பட வேண்டுமா.

பணத்தை, அதுவும் குழந்தைகளுக்கு பரிசாகக் கொடுப்பது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணத்தை, அதுவும் குழந்தைகளுக்கு பரிசாகக் கொடுப்பது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

சம காலத்தில் பிரபல்யமான ஒரே பொம்மையை நால்வர் அந்த குழந்தைக்கு பரிசளிக்கும் போது...........

அந்த பொம்மைகளை வைத்து பெற்றோர் விளையாடுவதா?

அல்லது

அதையே இன்னொரு குழந்தையின் பிறந்தாள் பரிசாக மாற்றுவதா?

இல்லையேல்

பழையபொருட்கள் விற்கும் சந்தையில் இழக்காரவிலைக்கு விற்று குழந்தைகளை மகிழச்சொல்கின்றீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம காலத்தில் பிரபல்யமான ஒரே பொம்மையை நால்வர் அந்த குழந்தைக்கு பரிசளிக்கும் போது...........

அந்த பொம்மைகளை வைத்து பெற்றோர் விளையாடுவதா?

அல்லது

அதையே இன்னொரு குழந்தையின் பிறந்தாள் பரிசாக மாற்றுவதா?

இல்லையேல்

பழையபொருட்கள் விற்கும் சந்தையில் இழக்காரவிலைக்கு விற்று குழந்தைகளை மகிழச்சொல்கின்றீர்களா?

அதுவும் சரிதான். ஆனால் பணம் என்ற தீயை பிள்ளைகளிடம் வழர்கமால் பரிசு அட்டையை கொடுக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்தின்படி10 அல்லது12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்குப் பணம் பரிசாகக் கொடுக்கப்படுவதில் தப்பில்லை.

ஆனாலும் அந்தப் பணத்தை அவர்கள் எந்த வகையில் செலவிடுகின்றார்கள் என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.