Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளைப் பெற்று வீதியின் விட்டெறியும் பெண்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலமாக எங்கட தாயகத்தில (இதில எல்லாம் வடக்கு கிழக்கு பிரிஞ்சில்ல.. கொக்குவிலிலையும் பிள்ளையை பெத்து ரோட்டில போடுது.. மட்டக்களப்பிலும் போடுது..) இந்தப் பெண்கள் செய்யுற கூத்து தாங்க முடியல்ல. பிள்ளையை பெத்துகுதுகள்.. பிறகு ரோட்டில போட்டிட்டு ஓடிடுதுகள்.

இவற்றிற்கு தீர்வு தான் என்ன..

இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா.. நாம நம்பாட்டில நமக்கு நல்லவங்களா இருக்கிறதே சோதனையா அமையும் போல இருக்கு. தவிர வேற தேவைல்லாத விடயங்களை கதைப்பது கூட அநாவசியம் என்பது போலப் படுகுது.

ஒருத்தன்.. பிரபாகரன் என்ற ஒருத்தன்.. எதிரிக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இனத்துக்குமே ஒரு சவாலாக (நல்லதை செய்விக்க) இருந்திருக்கிறான் என்பது இப்போ தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

---------------------

நான்கு நாள் சிசு மட்டு நகரில் அனதரவான நிலையில் மீட்பு

4 நாட்களைக்கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவக்கப்படுகின்றது.

நேற்று (15.09.2010) அதிகாலை 3.30 மணியளவில் இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

-------------------------

கொக்குவில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இரு நாள் வயது குழந்தை

யாழ். கொக்குவில் கிழக்குப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பிறந்து இரண்டு நாட்கள் மாத்திரமே கழிந்த ஆண் குழந்தை தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குழந்தை தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து இரண்டு நாட்கள் மாத்திரமே கழிந்த ஆண் குழந்தையொன்று துணியில் சுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிசாரினால் நேற்று மீட்க்கப்பட்டது. கோப்பாய் அம்மன் கோவில் வீதியும் சம்பியன் விதியும் சந்திக்கும் முகப்பில் இந்தப் குழந்தை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் ... என்னத்த சொல்வது பாட்டின் வழியிலே விட வேண்டியதுதான்...

http://www.youtube.com/watch?v=L-7K1hnx2vQ

:D

ஒரே திர்வு என்னவெண்டா....

எல்லா ஆண்களும் நெடுக்ஸ் மாதிரி மாறினா பெண்களுக்கு பிள்ளையே பிறக்காது..

பிறகெப்படி வீதியில் விட்டெறியமுடியும்

மிகவும் கவலைக்குரிய விடையம்.

ஒரு வேளை போர், பொருளாதாரம், குடும்ப நிலைமைகள் போன்ற பல காரணங்களால் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் தான் இந்த இரக்கமற்ற, மனிதாபிபமற்ற செயலைச் செய்கிறார்களா என்று கூட யோசிக்க வைக்கிறது. கடந்த வருட போரின் உச்சக் கட்டத்தின் போது ஒரு காணொளி பார்த்து இருந்தேன், அதில் போரினால் அங்கங்கள் பாதிப்படைந்த மக்களை விட, மனநிலை பாதிக்கப் பட்ட மக்களே (பெரும்பாலான பெண்களே) அதிகம் என அந்தக் காணொளியில் காண்பிக்கப்பட்டது.

இன்றைய கால கட்டத்தில் பல பெண்கள் சிங்களவரின், ஏன் பல ஈனத் தமிழ்ப் பிறவிகளின் பாலியல் வல்லுறவுக்கு இன்னும் இரையாகத் தானே ஆக்கப் படுக்கிறார்கள்... அப்படிப் பாதிக்கப் பட்ட பெண்களால் எப்படி ஒரு சராசரி பெண் வாழும் வாழ்க்கையை வாழ முடியும்? ஓடி, ஓடி காதலித்து, காதலி கருவுற்றதும் கை களுவிச் செல்லும் ஆண்மை கொண்ட பல சிங்கங்கள் முன்னுதாரனமாக இன்னும் எம்முள் இருக்கும் பொழுது வேறு எதை எதிர் பார்க்க முடியும்?

இதுவும் ஒருவகை அவலம், இதனை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை கொடுப்பதற்கு யார் முன் வருவார்கள்? அல்லது அவர்கள் யாரைத் தேடித் போவார்கள்? இங்கே (வெளிநாடுகளில்) உள்ள சலுகைகள் போல் எந்த ஒரு சலுகையும் அங்கே இல்லையே... அப்படி இருந்தாலும், பாதிக்கப் பட்டவர்கள் ஓரளவிற்கு வாழ்கையை தம் குழந்தைகளுக்காக வாழ முயற்சியாவது செய்வார்கள்... சாதரணமாக ஒரு குழந்தை பிறந்து எல்லா வசதிகளும் இருக்கும் போதே 1 /10 தாய்மார் பிள்ளை பெற்ற காலங்களில் Postnatal depression (PND) -க்கு ஆளாகிறார்கள் என்பது ஆராட்ச்சிகள் மூலம் கண்டறிந்த உண்மை.

இதே ஒரு பெண்ணுக்கு ஈனப் பிறப்புக்களின் வல்லுறவின் காரணத்தால் அந்தப் பெண் தாயாகி இருந்தாலோ அல்லது காதலித்தவனோ, கணவனோ அந்தப் பெண்களுக்கு இல்லாமல் போகும் பட்சத்தில் அவர்களிடமிருந்து எதை எதிர் பார்க்க முடியும்? (பொதுவாகச் சொல்கிறேன், எல்லாரையும் சொல்லவில்லை)

வேறு சிலர் பல ஆசைகளால் இப்படியான பிழைகளத் தெரிந்தே செய்கிறார்கள். இவர்கள் தங்கள் மீதி வாழ்கையில் எல்லா வசதிகளும் கிடைத்தாலும், வெறும் நடமாடும் பிணமாகவே கணிக்கப் படுவார்கள்.

...

இவற்றிற்கு தீர்வு தான் என்ன..

..

ஒருத்தன்.. பிரபாகரன் என்ற ஒருத்தன்.. எதிரிக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இனத்துக்குமே ஒரு சவாலாக (நல்லதை செய்விக்க) இருந்திருக்கிறான் என்பது இப்போ தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

...

இது மறுக்க முடியாத உண்மை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைக்குரிய விடையம்.

ஒரு வேளை போர், பொருளாதாரம், குடும்ப நிலைமைகள் போன்ற பல காரணங்களால் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் தான் இந்த இரக்கமற்ற, மனிதாபிபமற்ற செயலைச் செய்கிறார்களா என்று கூட யோசிக்க வைக்கிறது. கடந்த வருட போரின் உச்சக் கட்டத்தின் போது ஒரு காணொளி பார்த்து இருந்தேன், அதில் போரினால் அங்கங்கள் பாதிப்படைந்த மக்களை விட, மனநிலை பாதிக்கப் பட்ட மக்களே (பெரும்பாலான பெண்களே) அதிகம் என அந்தக் காணொளியில் காண்பிக்கப்பட்டது.

இன்றைய கால கட்டத்தில் பல பெண்கள் சிங்களவரின், ஏன் பல ஈனத் தமிழ்ப் பிறவிகளின் பாலியல் வல்லுறவுக்கு இன்னும் இரையாகத் தானே ஆக்கப் படுக்கிறார்கள்... அப்படிப் பாதிக்கப் பட்ட பெண்களால் எப்படி ஒரு சராசரி பெண் வாழும் வாழ்க்கையை வாழ முடியும்? ஓடி, ஓடி காதலித்து, காதலி கருவுற்றதும் கை களுவிச் செல்லும் ஆண்மை கொண்ட பல சிங்கங்கள் முன்னுதாரனமாக இன்னும் எம்முள் இருக்கும் பொழுது வேறு எதை எதிர் பார்க்க முடியும்?

இதுவும் ஒருவகை அவலம், இதனை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை கொடுப்பதற்கு யார் முன் வருவார்கள்? அல்லது அவர்கள் யாரைத் தேடித் போவார்கள்? இங்கே (வெளிநாடுகளில்) உள்ள சலுகைகள் போல் எந்த ஒரு சலுகையும் அங்கே இல்லையே... அப்படி இருந்தாலும், பாதிக்கப் பட்டவர்கள் ஓரளவிற்கு வாழ்கையை தம் குழந்தைகளுக்காக வாழ முயற்சியாவது செய்வார்கள்... சாதரணமாக ஒரு குழந்தை பிறந்து எல்லா வசதிகளும் இருக்கும் போதே 1 /10 தாய்மார் பிள்ளை பெற்ற காலங்களில் Postnatal depression (PND) -க்கு ஆளாகிறார்கள் என்பது ஆராட்ச்சிகள் மூலம் கண்டறிந்த உண்மை.

இதே ஒரு பெண்ணுக்கு ஈனப் பிறப்புக்களின் வல்லுறவின் காரணத்தால் அந்தப் பெண் தாயாகி இருந்தாலோ அல்லது காதலித்தவனோ, கணவனோ அந்தப் பெண்களுக்கு இல்லாமல் போகும் பட்சத்தில் அவர்களிடமிருந்து எதை எதிர் பார்க்க முடியும்? (பொதுவாகச் சொல்கிறேன், எல்லாரையும் சொல்லவில்லை)

வேறு சிலர் பல ஆசைகளால் இப்படியான பிழைகளத் தெரிந்தே செய்கிறார்கள். இவர்கள் தங்கள் மீதி வாழ்கையில் எல்லா வசதிகளும் கிடைத்தாலும், வெறும் நடமாடும் பிணமாகவே கணிக்கப் படுவார்கள்.

இதில் கவலை என்ன என்றால்.. போர் காலத்தில் எங்க எந்த மூலைக்க சிறுவர் போராளிகள் சேர்க்கினம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சங்கரி கும்மானில இருந்து.. ராதிகா குமாரசாமிகள் உள்ளடங்க..யுனிசெப் போன்ற உளவு அமைப்புக்கள் தங்களின் உளவுப் பணிக்கு மட்டும் சிறுவர் நலம்.. மனித உரிமை காப்பு என்று ஊளையிடுவதும் தான்.

நான் நினைக்கிறேன் புலம்பெயர் தேசங்களில் உள்ளூரில் உள்ள புத்திமான் பலவான்கள் இதில் எல்லாம் கவனம் செலுத்தமாட்டார்கள் என்று.

நாம் யாழ் இணையத்தில் தொடங்கி இன்று ஒரு சிலரின் தன்னார்வத்தால் சேவை நிறுவனமாக மாறியுள்ள நேசக்கரம்.. இப்படியான பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உதவ முன்வர நாம் பங்களித்தால் நல்லது. அடுத்தவன் கொடுப்பான் செய்வான் என்றிருப்பதிலும்.. எமது சமூகத்தை நாம் தான் பாதுகாக்கவும் வேண்டும்..! இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் எழ வேண்டும்.

அதுமட்டுமன்றி வடக்கு கிழக்கில் உள்ள சமூக நலனில் அக்கறையுள்ள அரச அதிகாரிகள் சட்டத்தை வலுவாக அமுல் படுத்தி இவ்வாறான குற்றச் செயல்கள்.. பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றேல் மீண்டும் புலிகள் பிஸ்ரலோடு அலையும் நிலை தான் தோன்ற வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே திர்வு என்னவெண்டா....

எல்லா ஆண்களும் நெடுக்ஸ் மாதிரி மாறினா பெண்களுக்கு பிள்ளையே பிறக்காது..

பிறகெப்படி வீதியில் விட்டெறியமுடியும்

நெடுக்ஸ் மாதிரி இருக்க வேண்டாம். குறைந்தது பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாண்டு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள பெண்களுக்கும்.. எதிரிக்கும்.. அவனுக்கு வால் பிடிக்கும் தேச விரோத சக்திகளுக்கும்... சூழ்நிலையைப் பயன்படுத்தி காவாலிகளாக மாறி அலையும் தமிழ் மற்றும் வேற்றின ஆண்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.

கோத்தா பகிரங்கமாகவே சொன்னான்.. தமிழ் ஆண்கள் எங்கள் துப்பாக்கிகளுக்கு இரை.. தமிழ் பெண்கள் எங்கள் சிப்பாய்களுக்கு இரை என்று. இதைக் கேட்டுக் கொண்டும் நீங்கள் எல்லோரும் எதிரிக்கு வக்காளத்து வாங்கினனீங்கள் தானே..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் யாழ் இணையத்தில் தொடங்கி இன்று ஒரு சிலரின் தன்னார்வத்தால் சேவை நிறுவனமாக மாறியுள்ள நேசக்கரம்.. இப்படியான பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உதவ முன்வர நாம் பங்களித்தால் நல்லது. அடுத்தவன் கொடுப்பான் செய்வான் என்றிருப்பதிலும்.. எமது சமூகத்தை நாம் தான் பாதுகாக்கவும் வேண்டும்..! இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் எழ வேண்டும்.

இப்ப உதல்லொம் செய்ய ஏலாது.தமிழீழம் கிடைச்சாப்பிறகுதான் என்ன உதவி என்றாலும் செய்வோம்.

உண்மை தான்! பிரச்சனையை ஊதிப் பெருசாக்கி, பல நேரங்களில் திரிவு படுத்தியும் பிரபல்யம் தேடிக் கொண்டார்களே தவிர, பிரச்சனைக்குரிய காரணங்களை அறிந்து, அதகுரிய தேவைகளை கொஞ்சமேனும் பூர்த்தி செய்தார்களா? இல்லையே...

வெளிநாடுகளில் இருந்து யாரும் கொஞ்சம் மனமிரங்கி உதவிகள் செய்தாலும், அதுவும் அவர்களுக்குப் போனதா? போகுமா என்ற கேள்வி. சிலர் தமைத் தாமே புகழாரம் செய்வார்கள், இந்த முறை ஊருக்குப் போன நேரம் நான் அங்க இருந்த பாதிரியாரிடமோ, ஐயரிடமோ பணம் கொடுத்து ஏழை மக்களுக்கு உதவும் படி சொன்னோம் என்று.

1 பண உதவி வேண்டும்.

2 அதே நேரம், பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து அதற்குரிய காரணங்களை அறிந்து, ஒவ்வொரு தனி மனிதனின் பாதிப்பிற்கு ஏற்ற அறிவுரை வழங்க போதுமானவர்கள் அங்கே செயல் பட வேண்டும்.

சிலருக்கு கதைபதால் பிரச்சனை, பலருக்கு கதைக்காமல் பிரச்சனைகளை தமக்குள்ளே அடக்கி வைத்திருப்பதால் பிரச்சனை. வாய்விடு பிரச்சனைகளைக் கதைச்சாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது விடுகிறது.

இந்த அரசாங்கம், EPDP யும் பதவியில் இருக்கும் வரை சமூக நலனுக்காக எத்தனை சட்டங்கள் வந்தாலும் அதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படும் என்று நம்பிக்கை இல்லை. நெடுக்ஸ் எழுதிய கடைசி வரியில் தான் நம்பிக்கை இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

எங்க கொஞ்ச பேரைக்காணல

ஏன் ஊரைப்பற்றி எழதுறியள்

புலத்தில நீங்க ஆடாத ஆட்டமே என்று ......... வந்து கண்ணுக்குள்ள குத்தப்போகினம் நெடுக்ஸ்

வெளியில வந்திட்டா

ஊரைப்பற்றி கதைக்கப்படாது

ரெலிபோன் வந்தால் கிலோவா அனுப்பிப்போட்டு ....

3வது வேலையைத்தடவவேண்டியதுதான் கடன் தீர்க்க....

கேள்வி அல்லது புத்திமதி அல்லது தண்டனை எதுக்கும் காசுக்கும் சம்பந்தமில்லை.

ஆனால் ஊரில் பாசமா இருக்கிறதால எம்மாலையும் அனுப்பும் பணத்தை நிறுத்தமுடியாது ;

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாட்டில் மருத்துவ, உளவள,மனோ தத்துவம் படித்த நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் மாறி, மாறி விடுப்பு எடுத்துக் கொண்டு போய் அங்கே முகாமில் உள்ள மக்களுக்கு குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்

வறுமை!! எனக்கு ஊர்காவற்துறையில் எனக்கு தெரிந்த ஒரு சிறுவர்க காப்பபத்தில் உள்ள 55வீதமான குழந்தைகளை பெற்றோரே கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர். காரணம் வறுமை! வறுமையின் கொடுமையை நேரில் கண்டு தான் சொல்கிறேன்! நம் இனம் இங்கு பகட்டான விழாக்களில் விரயமாக்கும் பணத்தில் ஒரு வீதம் சென்றாலே இந்த வறுமையை நீக்கலாம்! கணவன் மாரால் கைவிடப்படும் பெண்கள் குழந்தைகளை விட்டெறிய காரணமும் இந்த வறுமைதான்!

மாற்றம் வர மற்றவனை பார்காது மாற்றத்தை நாமே செய்ய வேண்டிய நேரமிது!

இதில் கருத்துக்கூறிய எத்தனை பேர் போர்க்காலங்களில் தமிழீழத்தில் இருந்தீர்களோ தெரியாது. நான் அங்குதான் இருந்தேன். 2006 இல் தான் படிக்க வந்தேன் வெளி நாட்டிற்கு. உண்மையில் குழந்தைகளை களவாக பெற்றெடுப்பது அப்போதும் இருந்தது.

ஆனால் கெளரவமாக, ஆரோக்கியமாக பெற்றெடுத்து அதனை உரிய முறையில் பொது அமைப்புக்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்களை பொது அமைப்புக்கள் கவனித்து அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவந்தனர்.

குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், பெண்கள் புனர்வாழ்வுக்கழகம் இந்த பணிகளை சிறப்பாக செய்து வந்தனர். தமிழர் புனர்வாழ்வுக்கழக குழந்தைகள் இல்லத்தில் 40 இற்கும் மேற்பட்ட அழகான குழந்தைகளை நான் பார்த்தேன்.

பெண்கள் புனர்வாழ்வுக்கழகத்தில் தாய் சேய் பராமரிப்பு இல்லத்தில் நூற்றிற்கு மேற்பட்ட தாய் குழந்தைகள் கற்பிணி தாய்மாரை பார்த்தேன். போர், பொருளாதார பிரச்சினை, சமூக பிரச்சினை, கல்வியறிவு இல்லாமையே இதற்கு காரணம். என அவர்கள் கூறினர்.

இந்த குழந்தைகள் நல்லாக வளர்க்கப்பட்டார்கள் குழந்தைகள் இல்லாத போராளி குடும்பங்கள் தத்தெடுத்தார்கள், வெளி நாட்டில் குழந்தைகள் இல்லாத குடும்பஙளும் தத்தெடுத்தார்கள்.

2006 ஆரம்ப கட்டத்தில் நான் கொழும்பில் இருந்து வன்னிக்கு மீண்டும் சென்றேன். அங்கு சர்வதேச ஆங்கில பாடசாலையில் இந்த குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள்.

எதிர்காலத்தில் சமூகப்பிரச்சினைகளை ஒழிக்கும் சமுதாயமாக இவர்கள் வருவார்கள் என அந்த அதிபர் கூறினார். எல்லாமே போச்சுது.

என்றாலும் நாம் புனர்வாழ்வுக்கழகம், பெண்கள் புனர்வாழ்வுக்கழகம் போன்ற பொது நிறுவனங்களை அங்கு உருவாக்க வேண்டும். இதன் மூலமே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கான முடியும்.

உங்களுக்கு தெரியுமா... இப்போ வீதிகளில் கண்டெடுக்கப்பட்டது போல 1993 இல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஓர் சிறுமி இன்று யாழ் பல்கலையில் கல்விகற்று வருகின்றாள். ஊர் பெயர் நான் அந்த பிள்ளையின் எதிர்காலம் கருதி சொல்லவில்லை.

அடுத்ததாக மன்னார் பெரிய மடுவில் வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கிழமை வயதுடைய பெண் குழந்தை வெளி நாடு ஒன்றில் இப்போ தரம் ஒன்றில் மிகவும் துடிப்பாக கல்வி கற்று வருகின்றாள். குழந்தைகள் இல்லாத அந்த தமிழ் குடும்பம் அவளை தத்தெடுத்தது.

இவ்வாறு நாம் பிரச்சினைகளை தீர்ப்பது ஒருபக்கம். பிரச்சினைகளை நல்லவாறு எதிர்கொள்வது இன்னொரு பக்கம் இரண்டுமே தேவை.

Edited by உமை

செய்திகளில் வருவதை விட அங்கு நிலைமை மோசமாயுள்ளது. தொழிலில்லை. வறுமை. சிறுவர்கள் படிக்காமல் கூலி தொழிலிற்கு செல்கிறார்கள். ஏழைப் பெண்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வசதிகள ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை. எனக்கு தெரிந்தவர்கள் மூலம் என்னால் இயலுமான வரை உதவி செய்கிறேன். நாங்கள் அங்குள்ள தெரிந்த நம்பிக்கையானவர்கள் ஊடாக இதை செய்யலாம். அல்லது தெரிந்த ஒரு நிறுவனத்தினூடாகவும் செய்யலாம். ஆனால் புலம் பெயர்ந்த மக்களிடம் ஒரு அசமந்த போக்கே காணப்படுகிறது. கேபி, சூப்பி, காஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ இப்ப புதிசா ரெஜி என ஆட்களை வைத்து கும்மி அட்டிப்பதிலே காலத்தை வீணாக்கிகிறோம்.

நல்ல கருத்து வரவேற்கின்றேன்.

இதில் கருத்துக்கூறிய எத்தனை பேர் போர்க்காலங்களில் தமிழீழத்தில் இருந்தீர்களோ தெரியாது. நான் அங்குதான் இருந்தேன். 2006 இல் தான் படிக்க வந்தேன் வெளி நாட்டிற்கு. உண்மையில் குழந்தைகளை களவாக பெற்றெடுப்பது அப்போதும் இருந்தது.

ஆனால் கெளரவமாக, ஆரோக்கியமாக பெற்றெடுத்து அதனை உரிய முறையில் பொது அமைப்புக்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்களை பொது அமைப்புக்கள் கவனித்து அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவந்தனர்.

குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், பெண்கள் புனர்வாழ்வுக்கழகம் இந்த பணிகளை சிறப்பாக செய்து வந்தனர். தமிழர் புனர்வாழ்வுக்கழக குழந்தைகள் இல்லத்தில் 40 இற்கும் மேற்பட்ட அழகான குழந்தைகளை நான் பார்த்தேன்.

பெண்கள் புனர்வாழ்வுக்கழகத்தில் தாய் சேய் பராமரிப்பு இல்லத்தில் நூற்றிற்கு மேற்பட்ட தாய் குழந்தைகள் கற்பிணி தாய்மாரை பார்த்தேன். போர், பொருளாதார பிரச்சினை, சமூக பிரச்சினை, கல்வியறிவு இல்லாமையே இதற்கு காரணம். என அவர்கள் கூறினர்.

இந்த குழந்தைகள் நல்லாக வளர்க்கப்பட்டார்கள் குழந்தைகள் இல்லாத போராளி குடும்பங்கள் தத்தெடுத்தார்கள், வெளி நாட்டில் குழந்தைகள் இல்லாத குடும்பஙளும் தத்தெடுத்தார்கள்.

2006 ஆரம்ப கட்டத்தில் நான் கொழும்பில் இருந்து வன்னிக்கு மீண்டும் சென்றேன். அங்கு சர்வதேச ஆங்கில பாடசாலையில் இந்த குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள்.

எதிர்காலத்தில் சமூகப்பிரச்சினைகளை ஒழிக்கும் சமுதாயமாக இவர்கள் வருவார்கள் என அந்த அதிபர் கூறினார். எல்லாமே போச்சுது.

என்றாலும் நாம் புனர்வாழ்வுக்கழகம், பெண்கள் புனர்வாழ்வுக்கழகம் போன்ற பொது நிறுவனங்களை அங்கு உருவாக்க வேண்டும். இதன் மூலமே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கான முடியும்.

உங்களுக்கு தெரியுமா... இப்போ வீதிகளில் கண்டெடுக்கப்பட்டது போல 1993 இல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஓர் சிறுமி இன்று யாழ் பல்கலையில் கல்விகற்று வருகின்றாள். ஊர் பெயர் நான் அந்த பிள்ளையின் எதிர்காலம் கருதி சொல்லவில்லை.

அடுத்ததாக மன்னார் பெரிய மடுவில் வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கிழமை வயதுடைய பெண் குழந்தை வெளி நாடு ஒன்றில் இப்போ தரம் ஒன்றில் மிகவும் துடிப்பாக கல்வி கற்று வருகின்றாள். குழந்தைகள் இல்லாத அந்த தமிழ் குடும்பம் அவளை தத்தெடுத்தது.

இவ்வாறு நாம் பிரச்சினைகளை தீர்ப்பது ஒருபக்கம். பிரச்சினைகளை நல்லவாறு எதிர்கொள்வது இன்னொரு பக்கம் இரண்டுமே தேவை.

நீங்கள் குறிப்பிடும் காலங்களில் நான் அங்கு இருக்கவில்லை. அந்தக் காலங்களில் புலிகளின் ஆதரவில் பல புனர்வாழ்வுக்கழகங்கள் இருந்தது என்பது தெரியும். ஆனால் தற்போதைய நிலையில் யாரைப் பார்த்தாலும் பத்தாசை கொண்டே கழகங்களை உருவாக்கிறார்கள், செயல்படுகிறார்கள் ஒரு சிலரைத் தவிர்த்து.

உறவினர்களின் குழந்தைகளை தவிர்த்து ஆதரவற்ற ரத்த உறவு இல்லாத குழந்தைகளை அங்கிருந்து தத்தெடுப்பது சுலபமான காரியம் இல்லை உமை. அங்கே நேர்மையான அமைப்புகள் செயல் படவேண்டும், அவர்களுக்கு பணப் பலம், ஆட்பலம், இங்கிருந்து அளிக்க நாமும் முவரவேண்டும். அப்படி நடக்குமாயின் இப்படியான பிரச்சனைகளை எதிரி கொள்ளமுடியும் என்று நினைக்கிறன். ஆனால் தற்போதைய நாட்டு நிலைமையில் எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று சொல்லத் தெரியவில்லை.

பொஸ்னிய பெண்களை சேர்ப்பிய இராணுவத்தினர் கட்டாயமாக குறைந்தது 6 மாதங்கள் அடைத்து வைத்து கருவூட்டிய பாலியல் வதை செய்த வரலாறுகளை மறப்பதுக்கும் மறுப்பதுக்கும் இல்லை...

இதே வரலாறு தமிழீழ பெண்களுக்கும் பொருந்தும்...! இராணுவ பிடியில் இலங்கை பகுதிகளில் இருக்கும் பெண்கள் கருவுற அவர்கள் விரும்பாத பல வளிகள் உண்டு... ! கருக்கலைக்க முடியாத பல சந்தர்ப்பங்களும் உண்டு...

Edited by தயா

யதார்த்தமான, கசப்பான உண்மை தயா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.