Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிருது களம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியடிக் குத்தியரும்

ஆனந்த சங்கரியரும்

சிங்களக் குகையினில்

கூடு கட்டி வாழ்ந்து கொண்டு

விட்ட அறிக்கைகள்

மறக்கவில்லை.

குத்தியன் சொன்னான்

கொடுத்திடுவேன்

வடக்கும் கிழக்கும் இணைந்த

மாநிலம்..

மத்தியில் அங்கும்

கூட்டாட்சி என்று.

சங்கரியன் சொன்னான்...

சம உரிமையோடு

தமிழருக்கும் அங்கு ஓர் வாழ்வு

இந்திய பாணியில்

ஒரு மாநில சுயாட்சி என்று.

இவர் தம் மூதாதை

இந்தியப் பேயரசின்

எச்சம்..

வரதராஜப் பெருமாளும்

ஒரிசா

ராஜஸ்தான்

டெல்லி என்று

பதுங்கிக் கிடந்து

பார்த்துச் சொன்னான்

ராஜீவ் - ஜே ஆர்

ஒப்பந்தமே நல்ல தீர்வென்று.

சித்துகளின் மன்னன்

வவுனியாவின் சிற்றரசன்

சித்தார்த்தனும் சொன்னான்

13ம் திருத்தம்

அமுலுக்கு வந்தால்

அமைவது நிச்சயம் தமிழீழம் என்று.

கூட்டமைப்பு என்று

கூடிக் கூத்தடித்த

சிலரும் சொன்னார்

மகிந்தவிடம் மண்டியிட்டால்

கிடைக்கும்

ஒரு பிடி மண்ணாவது

ஏட்டிக்கு போட்டி

நமக்கு ஒத்துவராது என்று.

கரிகாலன் சேனையின்

முன்னாள் திலகங்கள்

திமிலங்களாகி

தமிழரை கொன்று தின்று சொல்லின..

ஆளும் கட்சியில்

சிங்களச் சேனையில்

இணைவதே

தமிழருக்கு சுபீட்சம் என்று.

அண்டையில்

1986 இல் இருந்து

சட்ட சபை தோறும்

ஈழத்தமிழருக்கு...

தமிழீழமே தீர்வு

தீர்மானம் கொண்டு வந்து

ஈழத் துயரில் அரசில் செய்த

திருந்தாத முட்டாள்கள் கழகம்

கறுப்பாடு சொன்னது...

அது சகோதர யுத்தத்தால்

பாழ்பட்டுப் போச்சு

என் மகள்

கூனியாகி

கூடிப் பேசி

பொன்னாடை போர்த்தி..

மகிந்தவின் மனம் குளிர்வித்து

வாங்குவாள்

மகிமை மிகு

பரிசு

ஈழத்தமிழருக்கு என்று.

அட போங்கடா

வெட்டிப் பசங்களா..

மகிந்தவும் சொன்னான்

கோத்தாவும் சொன்னான்

பொன்சேகாவும் சொன்னான்

போதாக்குறைக்கு

ரணிலும் சொல்லிட்டான்

புலிகளோடு

பிரபாகரனோடு

அழிந்தது

இனப்பிரச்சனை..!

தமிழருக்கு...

இங்கு போல்

உலகில் வேறு எங்கும்

வாழ்வில்

வசந்தம் இல்லை என்று.

அடேய் பாழாய் போனவங்களே

அண்ணனின் பாதையில் தான்

நிற்க மறுத்தீர்கள்..

அண்ணனின் வழியை தான்

நியூயோர் லண்டன் என்று

போய்

பயங்கர வாதம் என்று காட்டினீர்கள்..

இப்போ..

நீங்களும்...

கூனிக் குறுகி

கூஜா தூக்கி

தாஜா அரசியல்

செய்கிறீர்கள்...

இதுதான்

உங்களின் தாகம்

என்று

அப்பவே.. என்ன..

இப்பவாவது

தேசங்களில்

ஓசியில

எழுதித் தொலையுங்கோடா.

வட்டிக் கடைக்கு

வரியும்

சீட்டுக் கடைக்கு

பற்றுச் சீட்டும்

இருக்கோ என்று

ஆராய்ச்சி பண்ணுறதே

உங்களின் ஜனநாயம் என்று.

இது பேச

உங்களுக்கு ஒரு

தேசமாம்....

அதில

ஒரு மாற்றுக் கருத்து ஜனநாயகமாம்.

வீணாப் போனவங்களே..

உங்களின் காழ்புணர்ச்சியால்..

வீணடித்தீர்களேடா

எங்கள்

அன்புச் செல்வங்கள்

மாவீரர்களின்

மகத்தான

தியாகங்களை.

ஓர் நாள்

எம் மாவீரரின்

கல்லறைக் கற்கள்

அதிரும்

அதில்

உதிரும்..

உங்கள் வேசங்கள் மட்டுமல்ல..

எதிரிகளின் வீரங்களும்...!

வெல்லும்

எம் தேசம்..

தமிழீழம்..

மாவீரர் கனவு

அன்று

பலிக்கும்

இருந்து பாருங்கோடா..!

இளைய தலைமுறை

உங்கள் தலை நரைத்த

வாழ்க்கைக்கு

மொட்டை அடித்து

அதிர வைப்பர்

களத்தை...

அது

அரசியல்.. ஜனநாயகமாக கூட இருக்கலாம்..

இல்ல..

ஆயுதம் என்றால்

அதையும்

தூக்கலாம்.

சிங்களமே

வெற்றிக் களிப்பில்

திளைத்தது போதும்..

60 ஆண்டு கால

பகை இருக்கு..

மறந்திடாதே...!

தமிழர்

எம் தாகம்..

எம் மாவீரரின் தாகம்

தமிழீழமே..

புரிந்து கொள்.

புல்லுருவிகளும்

சில புலித் துரோகிகளும்

உனக்கு நண்பர்கள் ஆகலாம்..

உண்மைத் தமிழன்..

அடங்கமாட்டான்

உன் கொட்டத்தின் முன்

மண்டியிடான்.

நல்லூரும்..

நயினாதீவும்

மங்குஸ்தானும்

ரம்புட்டானும்...

எமக்கு...

நீ தர வேண்டியதில்லை..!

தமிழர்கள் நமக்கு

வேண்டியதெல்லாம்

எம் மாவீரர்களின்

இலட்சிய வெற்றி ஒன்றே.

இருந்து பார்

காலங்கள் மாறும்..

இராஜ தந்திரங்கள்

திசை மாறும்..

அன்று...

தமிழன்

கொண்டாடுவான்..

மாவீரர் தினம்..

சுதந்திர தமிழீழ மண்ணில்..

இது சபதம்..!

அது வரை..

களம் அதிரும்

அதில் ஜனநாயகம்

என்ன

பணநாயகம் இருந்தாலும்..

உதிர்ந்த எம்

மாவீரர்

மடியில்..

அது

மலரும்..

தமிழீழமாய்..!

மாவீரர்களுக்கு

வீர வணக்கம்...

இது சொந்த மண்ணில்

முழங்கும்..

கார்த்திகை பூக்கள்

சிதைந்து போன

கல்லறைகள்

எங்கும் பூக்கும்..!

முடிந்தால்..

ஆட்லறிகள் கொண்டும்

வெள்ளை பொசுபரசு கொண்டும்

மிக்குகள் கிபீருகள்..

மல்ரி பரல்கள்..

கிளஸ்ரர்கள் கொண்டு

குண்டு குண்டாய்

கொட்டிப் பார்

வெட்டிப் பார்.

அவை மலரும்..

மகிந்தா

இருந்து பார்..!

கோத்தா.. நீ..

பீஜிங் டெல்லி

மொஸ்கோ நியூயோர்க்

போய் பிச்சை வேண்டி வா..

கார்த்திகை

செடிகள்..

என்ற பயங்கரவாதம்

சிறீலங்காவுக்கு

சவால் என்று

சொல்லி வா...!

அவர்களும்....

வாய் பிளந்து..

இராணுவ திட்டம் தீட்டி

சற்றலைட்டுகள் ஏவி

உளவு பார்த்து

ரடார்கள் தந்து...

ஆயுதங்களை

அல்லாவின் பெயரால்

அள்ளிக் கொடுத்து

கூட்டமா ஓடி வந்து

தீர்த்து வைப்பர்

உன் எதிர்பார்ப்பு.

இருந்தும்

மலருமடா

எங்கள்

கார்த்திகைச் செடிகள்...

சிங்களமே - நீ

அதை புடுங்கவும் முடியாது.

அவை

எம் மாவீரரின்

கல்லறைகள் மீது

உதிர்வதை

உன்னால்

தடுக்கவும் முடியாது...

சிதைக்கவும் முடியாது.

அங்கும்..

களம் அதிரும்..

கார்த்திகை செடிகள்

அமைத்த

அந்தக் களம்...!

எதிரியே

உன்

பலத்தோடு மோதி

எம்

மாவீரர்களுக்கு

அஞ்சலி

செய்யும்...

அந்தக் கார்த்திகைப் பூக்கள்

முன்

நீ தோற்பது உறுதி..!

அது

கார்த்திகை 26 இல்

நிகழும்..!

Edited by nedukkalapoovan

....

ஓர் நாள்

எம் மாவீரரின்

கல்லறைக் கற்கள்

அதிரும்

அதில்

உதிரும்..

உங்கள் வேசங்கள் மட்டுமல்ல..

எதிரிகளின் வீரங்களும்...!

வெல்லும்

எம் தேசம்..

தமிழீழம்..

மாவீரர் கனவு

அன்று

பலிக்கும்

இருந்து பாருங்கோடா..

இளைய தலைமுறை

உங்கள் தலை நரைத்த

வாழ்க்கைக்கு

மொட்டை அடித்து

அதிர வைப்பர்

களத்தை...

அது

அரசியல்.. ஜனநாயகமாக கூட இருக்கலாம்..

இல்ல..

ஆயுதம் என்றால்

அதையும்

தூக்கலாம்.

....

இந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை இன்னும் வலுச்சேர்க்கிறது.

நீண்ட கவிதை தந்த நெடுக்குக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லும்

எம் தேசம்..

தமிழீழம்..

மாவீரர் கனவு

அன்று

பலிக்கும்

இருந்து பாருங்கோடா..!

இளைய தலைமுறை

உங்கள் தலை நரைத்த

வாழ்க்கைக்கு

மொட்டை அடித்து

அதிர வைப்பர்

களத்தை...

அது

அரசியல்.. ஜனநாயகமாக கூட இருக்கலாம்..

இல்ல..

ஆயுதம் என்றால்

அதையும்

தூக்கலாம்.

arumai.gif .thanksk.gifநெடுக்குஸுக்கு.

நல்ல நீண்ட கவிதை நெடுக்கர்.

60 ஆண்டு கால

பகை இருக்கு..

மறந்திடாதே...!

இதுதான் கொஞ்சம் இடிக்குது. பல நூற்றாண்டுப் பகை. (எல்லாளன், துட்டகெமுனு )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நீண்ட கவிதை நெடுக்கர்.

இதுதான் கொஞ்சம் இடிக்குது. பல நூற்றாண்டுப் பகை. (எல்லாளன், துட்டகெமுனு )

எல்லாளன் துட்டகைமுனு வரலாறு எப்படி இருந்தாலும்.. எமது இராட்சியத்தை சிங்களத்தின் பரிபாலனத்துக்குள் கையளித்தது காலணித்துவ பிரிட்டிஷ்காரர்கள் தான்.

இன்றும்.. எமது போராட்டத்தைப் பயங்கரவாதமாகக் காட்டி ஒரு பலவீனமான யுத்த களத்தில் ஒன்று திரட்டிய இராணுவ மற்றும் ஆயுத பலப் பிரயோகம் செய்து புலிகளை ஒழித்து கொள்கை வெற்றி கொண்டாடிக் கொண்டிருப்பதில் அமெரிக்க தலைமையிலான மேற்குலக சக்திகளும் அடங்குகின்றனர்.

எமது ஆயுதப் போராட்டம் இவர்களின் ஆயுதத்துக்கு முள்ளிவாய்க்காலில் இரையானதே தவிர.. இவர்களின் துரோகத்துக்கு எமது உரிமை 1948 க்கு முன்னமே பறிபோய் விட்டது. அதை மீட்க வேண்டின்.. மேற்குலகிற்கு அதன் துரோகத்தனத்தை சொல்லி ஆக வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு வரலாறு தெரியும். இருந்தும்.. எமது நில இருப்பை அவர்கள் அங்கீகரிக்க மறுப்பதோடு அன்று தொட்டு இன்று வரை எம்மை ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

சோல்பரி யாப்பில் இருந்து விடுதலைப்புலிகளுடனான பேச்சு வரை மேற்குலக முன்னாள் ஆதிக்க சக்திகளும் இன்னாள் ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் உரிமைகளை கோரிக்கைகளை மதிப்பதாகத் தெரியவில்லை. அது எமது பலவீனமும் கூட.

மட்டுப்படுத்திய ஆயுத பலமும் அதை விஞ்சிய வீரமுமே புலிகளின் இருப்பை காத்து வந்தது. தமிழர்களின் குரலை உலகம் செவி சாய்க்க வைத்தது. இன்று அது இழக்கப்பட்டுள்ள நிலையில்.. தமிழர்கள் அரசியல் அனாதைகளாக மட்டுமல்ல.. உலகால் பிற மனிதர்கள் மீது காட்டப்படும் அடிப்படை உரிமைகளோடு வாழும் தகவு கூட இழக்கச் செய்யப்பட்டுள்ளனர். இது கொடுமையானது. ஏன் எமக்கு இந்த நிலை. இதில் இருந்து நாம் எப்படி மீள்வது. அதற்கு ஒற்றுமையும் மாவீரர்களின் இலட்சியத்தின் பால் ஒன்று திரண்டு கொள்கைகளை விட்டுக் கொடுக்காது உலகின் போக்கிற்கு சவால்விடும் இராஜதந்திரத்தை வகுத்து நாம் செயற்பட வேண்டும்.

காலணித்துவ ஆட்சியாளர்களிடம் எமது இன்றைய நிலைக்கு விளக்கம் கோர வேண்டும். அவர்களிடம் எமது உரிமைகளின் மீதுள்ள நியாயம் பற்றிப் பேச துட்ட கைமுனு காலத்திற்குப் போக முடியாது. 1948 இல் நடந்தவற்றில் இருந்துதான் அவர்களுடன் பேச வேண்டும்..!

காலனித்துவப் பாணியில் இன்று சிங்களம் எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்க.. அமெரிக்க தூதுவனோ.. புலிகளின் அழிப்பில் களிப்படைகிறான். இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் அமெரிக்க உதாசீனம் செய்வதையே காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களை நம்பி எமது போராட்டத்தின் இறுதி முடிவுக்கு காத்திருந்தது எமது ஏமாளித்தனமும் கூட.

நாம் இவர்களை விஞ்ச வேண்டின்.. வேறு நட்புக்களை நாட வேண்டும். எனி ஆயுதம் மூலம் செய்தாததை மூளை உள்ளதாக பிதட்டி திரிவதிலும் அதை பாவித்து இராஜதந்திரமாக இந்த எதிரிகளை மோதவிட்டு அதில் நாம் எமது இலக்கை அடைய முனைய வேண்டும்.

இன்றேல்.. எமது இனத்தின் அழிவில்.. கொள்கை வெற்றிகளை சிங்களவன் இந்தியன் சீனன்.. இஸ்லாமியன் மட்டுமல்ல.. அமெரிக்கனும் இனங்காட்டிக் கொண்டிருப்பான்.

அமெரிக்கா கடந்த 4 தசாப்தங்களில் போன இடமெல்லாம் தோல்வியையே சந்தித்துள்ளது. அது வியட்னாம் ஆகட்டும்.. ஈராக் ஆகட்டும்.. குவைத் ஆகட்டும்.. சோமாலியா ஆகட்டும்.. ஆப்கானிஸ்தான் ஆகட்டும்.

ஆனால் அமெரிக்க மறைமுக நகர்வுகள் கம்போடியா.. அல்ஜீரியா.. சிறீலங்காவில் போராட்டங்களை ஒடுக்க நன்கு உதவியுள்ளது.

எமது போராட்டம் கம்போடிய பாணியில் நசுக்கப்பட்டுள்ளதை பல பரிமானங்களூடு காணக் கூடியதாக உள்ளது. அதற்கு காரணம்.. உலக நாடுகள் அவர்களின் தந்திரோபாயங்களை மாற்றும் போது திட்டங்களை தீட்டும் போது நாம்.. அவர்களை ஏமாளிகள் போல முழுமையாக நம்பிச் செயற்பட்டதுதான். எமக்கு என்றான தந்திரோபாயமோ.. அரசியல் பிராந்திய கொள்கையோ இல்லை.

இந்த நிலையை நாடு கடந்த தமிழீழ அரசாவது இந்த மாவீரர் தினத்தோடு மாற்ற முனைய வேண்டும். எமது எதிர்கால சந்ததியிடம் எந்திரன் பற்றிய மோகத்தைக் காட்டிலும் அரசியல் இராஜதந்திரம்.. வியூகம் அமைப்பு பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.

எமது தேசத்தை நாமே கட்டி அமைக்க வேண்டும். ஆனால் அதில் எதிரி பயனடைவதை குறைக்க முயல வேண்டும். சிங்கள அந்நிய ஊடுருவல்களுக்கு இடமளித்துவிட்டு ஐயோ சிங்களவன் உல்லாச விடுதி கட்டி குடியிருக்கிறான் என்று புலம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது வெறும் அரசியல் கோசத்தோடு இல்லாமல்.. புலம்பெயர் மக்களின் ஆதரவோடு ஒரு அரசாக பொருண்மிய.. சமூக.. அரசியல் பன்முக வேலைத்திட்டத்தோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ புலம்பெயர் தேசங்கள் மற்றும் தாயகத்தில் அதன் செயற்பாடுகளை உறுதியாக கொண்டு செல்ல வேண்டும்.

நாம் காத்திருக்கும்.. அல்லது பின்னடிக்கும் ஒவ்வொரு நிமிடமும்.. எதிரிக்கு நாம் நல்ல அவகாசத்தை வழங்குகிறோம்.

ஒட்டுக்குழுக்களை இணைத்து ஜனநாயகம் செய்வது அல்ல எமது இலக்கு. எமது இலக்கு.. எமது தேசத்தின் இனத்தின் இருப்பை பாதுகாப்பது... உறுதிப்படுத்துவது. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் செயற்பாட்டு வடிமே அன்றி.. அது எமது இனம்.. நிலம்.. தேசியம்.. இவற்றின் இருப்பை பாதுகாக்க போதுமானதல்ல. அதற்கு நாம் எமக்கான இராஜதந்திரத்தை பொருண்மிய.. சமூக அலகுகளை நிறுவிச் செயற்பட வேண்டும்.

தாயகத்தில் வறுமையில் மக்கள்.. 80,000 விதவைகள்.. ஆயிரக்கணக்கான மன நலம் குன்றியோர்.. ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர்.. முன்னாள் போராளிகள்.. ஒரு இனத்தின் பல நிலை சமூக அமைப்பு சிதைந்து கிடக்கிறது. அதனை மறுசீரமைத்து ஒரு பலமான சமூகக் கட்டமைப்பாக்காமல்.. வெறும் இணக்க அரசியல் ஜனநாயகம் செய்து ஒன்றும் புடுங்க முடியாது.

நாடு கடந்த அரசு.. சர்வதேச தொண்டர் அமைப்புக்கள் உதவி நிறுவனங்களோடு இணைந்தாவது.. அவர்களின் ஆதரவோடாவது பல வேலைத்திட்டங்களை சமூக நிலையில் இருந்து செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

புலம்பெயர் மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொது அமைப்புக்குள் அவர்களின் பொருண்மியத்தை.. திறமைகளை உள்வாங்கி தேசத்தை கட்டி எழுப்பும் கட்டமைப்புக்களை கொண்டு வர வேண்டும். அதனை சர்வதேச அங்கீகாரத்தோடு தாயகம் நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

அதைவிடுத்து.. எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் பற்றி பேசிக் கொண்டிருப்பின்.. நிலம்.. இனம்.. விழுமியம்.. எல்லாம் இழந்து.. எமது மண்.. சிங்கள மயமாகி நிற்பதையே நாம் சந்திக்க வேண்டி வரும்.

மாவீரர்களின் கல்லறைகளாக எனி கார்த்திகை செடிகள் வீடுகள் தோறும் முளைக்க வேண்டும். எதிரி இடித்துத் தள்ளிய கல்லறைகளுக்குப் பதில் மதில்கள் தோறும் வேலிகள் தோறும் கார்த்திகை செடி முளைக்க வேண்டும். எதிரிக்கு நாம் கொள்கை அளவில் தோற்கவில்லை.. அவனால் அதை செய்ய முடியாது என்பதை உணர்த்த வேண்டும். நாம் போரில் தோற்கடிப்பட்டிருந்தாலும்.. புலிகள் எமக்கு strategic வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். அதன் பிரதிபலிப்பே.. அவர்கள் மீதான இந்தியத் தடை நீடிப்பு. இந்தியா இன்னும் எமது போராட்டம் பற்றிய ஒரு அச்சத்தில் இருக்கிறது. அது மற்ற நாடுகளிடமும் இருக்கும். வெளியில் அதை காட்டிக் கொள்ளமாட்டார்கள். இது எமது அடுத்த நகர்வுக்கான இராஜதந்திரத்திற்கான நல்ல அடிப்படை. இவற்றைப் பாவிக்க வேண்டும்.

எம்முன்னே விரிந்து கிடக்கும் இராஜதந்திரங்களை எல்லாம் தவறுவிட்டுக் கொண்டு.. நாம் பலவீனமான நிலையில் எம்மை வைத்துக் கொண்டு எதிரியையும் துரோகிகளையும் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் காலத்தை வீணடிக்கிறோம். எதிரிகளையும் துரோகிகளையும் கண்காணிப்பதோடு சரியாக அளவிட்டுக் கொண்டு.. எமது நகர்வுகள் குறித்து நாம் விரைந்து தீர்மானிக்க வேண்டும்.

இன்றேல் எதிரி எம்மை இலகுவாக வென்றுவிட்டதாக தன்னுள் இறுமாந்து இன்னும் இன்னும் எம்மை பலவீனப்படுத்தி தனது வெற்றியின் உறுதித் தன்மையை பாதுகாக்கவே அதிகம் முனைவான். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

இதுவே இக்கவிதையின் நோக்கமும் கூட..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என்டு தெரியவில்லை :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என்டு தெரியவில்லை :wub:

கடந்த 35 வருடகால ஆயுதப் போராட்டம்.. களம்.. அதிர்வு என்ற பதங்களுக்கு ஆயுதப் பிரயோகம் என்ற ஒரு சிந்தனை ஓட்டம் எம்மவருள் எழுவதை இயல்பாக்கி விட்டுள்ளது. ஆனால் இன்றைய களம் அதிர்வது.. கார்த்திகைச் செடிகளின் முளைப்பில்.. அவற்றின் இருப்பில்.. அதைதான் தலைப்புச் சொல்கிறது.

கவிதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்குது. அது இது தான்..! :blink::)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்

தங்களது நேரத்திற்கும் கவிதைக்கும்

தமிழன் மறந்தாலும்

சிங்களம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும்தமிழருக்கான தீர்வுதான் தமிழீழம்.

இன்றைய காலகட்டத்தின் தேவைக்கேற்ப சிந்தித்துள்ளீர்கள். விளக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ். :o

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்குத்தம்பி

அடங்கிக்கிடக்கும் மனக்களங்களை அதிர வைக்கும் நல்லதொரு கவிதை நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் விரக்தி அடைந்துள்ள மக்கள் மனதில்,

விழிப்புணர்வை தூண்ட கூடிய கவிதை .பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.