Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் விரும்பும் வேலை தலைப்பு (Job Title) என்ன..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் கேட்டிருப்பார் நீ என்னவா வர விரும்புகிறாய் என்று..

நாங்களும் டாக்டர்.. இஞ்சினியர்.. எக்கவுண்டன்.. இப்படி எப்படியோ எல்லாம் சொல்லி இருப்பம்.

என்னை கேட்ட போது நான் ஒரு விஞ்ஞானி ஆகனும் என்று சொன்னதாக நல்ல ஞாபகம்.

அதன் படி ஒரு உருப்படியான விஞ்ஞானி ஆக முடியல்லை என்றாலும் அத்துறையில் கொஞ்சம் படிக்க முடிந்திருக்கிறது.

இடையில் வெவ்வேறு தலைப்புக்கள் மீது மோகம் ஏற்பட்டிருந்தாலும்

இப்போ எல்லாம் எனக்கு CEO (Chief executive officer) என்ற தொழில் தலைப்பு மேல் ஆசை முளைத்திருக்கிறது. (அப்பிள் நிறுவனத்தின் CEO க்கு வழங்கப்படும் முன்னுரிமை இத்தலைப்பு மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.) :(

இப்படி உங்களையும் நிச்சயம் சில தொழில் தலைப்புக்கள் கவர்ந்திருக்கும்.

சிலருக்கு அவை கிடைத்தும் இருக்கும். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டால்.. எப்படி அவற்றை அடைந்தீர்கள் என்று சொன்னால்.. நம்மைப் போன்ற தொழில் தலைப்பு கிரேசிகளுக்கு உதவியா இருக்கும் என்பதால் இப்பதிவை இடுகிறேன்.

பாங்கர் - இன்வேச்டர் (Banker - Investor)

அமெரிக்காவில் உள்ள கோல்ட்மன் சக்ஸ் ( http://www2.goldmansachs.com/careers/index.html ) அல்லது

( http://careers.bankofamerica.com/overview/overview.asp ) மெரில் லின்ச் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்க விருப்பம்.

எனது நண்பர் ஒருவர் (தமிழரல்ல) இங்குள்ள வங்கி ஒன்றில் "விற்பனை" தளத்தில் (Trader) வேலை செய்கிறார். ஐரோப்பாவின் நுகர்வோருக்கு கனடாவின் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டு பத்திரங்களை (Guranteed Investment Certificates - GIC) விற்பவர் சம்பளம் 120000 டாலர்கள் வெகுமதி (bonus) 280000 டாலர்கள் 2009 ஆம் ஆண்டு.

பின் குறிப்பு

இங்கு தமிழர்கள் அதிகளில் வங்கிகளில் வேலை செய்தாலும் இந்த பே வீதி - Bay Street ( அமெரிக்காவின் வால் வீதி Wall Street) வேலைகள் கிடைப்பது அரிது. காரணம் இங்கே உங்களுக்கு என்ன தெரியும் என்பதி விட உங்களுக்கு யாரை தெரியும் என்பதே முக்கியம். அதில் நாம் புதிதாக வந்தவர்கள் என்பதால் மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் அடுத்த தலைமுறை இந்த துறையுள் ஈடுபடல் வேண்டும் என்பது எனது அவா.

Edited by akootha

சிறு வயதில் இரயில் வண்டியின் சாரதி ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது... பிறகு 12 வயதின் பின் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தாலும் பரியோவான் கல்லூரியில் படிப்பித்த ராஜராஜசோழன் ஆசிரியராலும் கணணி பற்றி அறிந்து கணனித் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வந்தது, இடையில் பத்திரிகைத் துறையிலும் நாட்டம் வந்தது... இப்ப கணனித் துறையில் ஓரளவுக்கு உயர்ந்த பிரிவில் இருக்கின்றேன். இலங்கையில் இருக்கும் போது பத்திரிகைத் துறையிலும் இருந்திருந்தேன்

இப்ப நானே கணனித் துறையில் ஒரு சிறு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கு (ஆனால் கையில் அஞ்சு சதம் இல்லை )

Edited by நிழலி
எழுத்துப் பிழைகள் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நானே கணனித் துறையில் ஒரு சிறு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கு (ஆனால் கையில் அஞ்சு சதம் இல்லை )

இது முற்றிலும் ஒரு தவறான சிந்தனை. எம்மில் பலர் நிறைய முதலீடு இருந்தால் தான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு பேராசிரியர்.. அவருடைய நிறுவனத்துக்கு அவரே தலைவர்.. அவரே தொழிலாளி. அதாவது அவர் ஒரு one man army வைத்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்ப உலகில் இன்று பெரிய முதலீடுகள் இன்றி வர்த்தகம் செய்யக் கூடிய நிலை இருக்கிறது.

உங்கள் knowledge.. experience.. information இன்றைய நிலையில் பெரிய முதலீடுகள். நீங்கள் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கல் நிறுவனம் ஒன்றை இலகுவாகவும் வினைத்திறன் உள்ள வகையிலும் ஆரம்பிக்க முடியும். அதற்கு பெரிய முதலீடுகள் அவசியம் இல்லை. ஆனால் உங்களிடம் போட்டிகளை வென்று தனித்துவமாக இயங்கக் கூடிய திட்டங்கள் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பேராசியர்.. இதனையே செய்கிறார். பிரபல கம்பனிகளுக்கு திட்ட ஆலோசனை வழங்குவதுதான் அவரின் வேலை. ஆனால் எந்த நிறுவனத்துக்காகவும் அவர் வேலை செய்வதில்லை. அவரின் திட்ட வரைவுகளை பிரித்தானிய அரசு கூட பெற்றிருக்கிறது. அந்தளவுக்கு அவர் உயர்ந்திருக்கிறார். அதுமட்டுமன்றி இன்றைய வர்த்தக உலகில் யாரும் நிரந்தர முதலாளிகள் கிடையாது. பங்குதாரர்கள் (shareholders) தான் பல நிறுவனங்களின் முதலாளிகளாக விளங்குகின்றனர்.

நேற்று ஒரு செய்தி படித்தேன்.. ரிவிட்டர்.. உலக பங்கு வர்த்தகத்தில் செல்வாக்குச் செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டிருப்பதாக. ரிவிட்டரில் வரும் செய்திகள் அவை அடையும் பரம்பல்கள் பங்கு வர்த்தகத்தையே ஆட்டிப்படைக்கும் நிலைக்குப் போய் இருக்கிறது. இது ரிவிட்டரின் பெறுமதியை மிக உயர்த்தி விட்டுள்ளது.

இன்றைய பணக்காரர்கள்.. கூகிளும்.. பேஸ்புக்கும்.. ரிவிட்டரும்.. நடத்துபவர்களாக உள்ள நிலையில்... இவர்களில் பலர் மாணவர்களாக இருந்து பொழுதுபோக்கிற்காக தொடங்கிய அம்சங்களே இன்று உலகம் வியக்கும் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன.

நம்மிடம் உள்ள அனுபவம் அறிவு தகவல்களை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தும் திறன்.. இருந்தால் நிச்சயம் ஒரு சதமும் இன்றி நாம் முன்னேற முடியும். ஆனால் எமது சமூகக் கட்டமைப்பில் அந்த நிலையில் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. பெரிய தோற்றங்களை காட்டி.. எட்டாத விடயங்களை உதாரணமாக்கி.. கடவுளை நம்ப வைத்து.. முயற்சிகளுக்கு குழிபறிக்கும் நிலையே பாடசாலையில் இருந்து எங்கும் பரந்து கிடக்கிறது. இது மாறனும்..! இன்றும் அது தொடர்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நானே கணனித் துறையில் ஒரு சிறு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கு

(ஆனால் கையில் அஞ்சு சதம் இல்லை )

நீங்கள் பிரான்சில் இருந்தால்

இப்படி நாலு பேரைத்தேடி

நாங்கள் நாலுபேர் முதலிட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு

உடனடியாக இல்லாது விட்டாலும் எனது அடுத்த திட்டம் அதுதான்

அதற்கு சில ஏற்பாடுகளைச்செய்தபடிதான் உள்ளேன்

இப்போ எல்லாம் எனக்கு CEO (Chief executive officer) என்ற தொழில் தலைப்பு மேல் ஆசை முளைத்திருக்கிறது. (அப்பிள் நிறுவனத்தின் CEO க்கு வழங்கப்படும் முன்னுரிமை இத்தலைப்பு மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.) :(

வேறெந்த நிறுவனங்களைப் போலல்லாது Apple நிறுவன CEO ற்கு உலகெங்கினும் ஆரம்பத்திலிருந்தே விசிறிகள் உள்ளனர். நானும் சுமார் 15 வருடங்களாக அவரது விசிறிதான். ஆனால் இவர் விசிறிகளைப் பெரிதாக மதிப்பதில்லை என்பது வேறு விடயம். இவரைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். இளமையிலிருந்து படிப்படியாக எவ்வாறு முன்னேறினார் என்பது சுவாரிசியமானது. ஏறத்தாள விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கும் Apple நிறுவனத்திற்கும் ஒரே வயது. கணணி தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த 30 வருடங்களைப் பின்னோக்கிப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கும். இவரைப் போல வர வேண்டுமென ஆசைப்படுவது பேராசைதான் என்று தெரியும். ஆனாலும் கனவு காணுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிகம் படிக்கவோ அல்லது முயற்சிக்கவோ சூழ்நிலை இடம் தரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. அப்பிள் கணனித்துறை சார் நிறுவனமாக இருந்தது பழைய கதை. இன்று அது music and entertainment சார்ந்த innovative நிறுவனம் என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது. அதேபோல் IBM ஒரு காலத்தில் கணனித்துறையில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம். இன்று அதன் தொழில்வடிவத்தையே மாறி வரும் போட்டிச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பும் சில மாற்றங்களை செய்ய முற்பட்டிருந்தது. ஆனால்.. தொழில்நிறுவனப் போட்டி போன்றதல்லாது அங்கு பயங்கரவாத முலாம் என்ற பெரிய பூகம்பத்தை அந்த அமைப்பு சந்திக்க நேரிட்டதே அதன் இன்றைய நிலைக்குக் காரணம் எனலாம். தேசிய தலைவர் சோவியத் வீழ்ச்சியோடு வன்முறைகளின் போக்கை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எதுஎப்படியோ அந்த அமைப்பை வீழ்ச்சியில் இருந்து மீட்க வேண்டின் அதன் அடிப்படை சித்தாந்தம் என்று உலகம் வர்ணிக்கும் வன்முறை என்ற அந்த எண்ண ஓட்டத்தில் இருந்து உலகை வெளிவர வைக்க வேண்டும்.

இன்று அப்பிள் பெரிய வெற்றி பெற்றிருப்பது iphone மற்று ipod விற்பனையில் தான். மீண்டும் கணனி வடிவ வர்த்தகத்தை ipad மூலம் அப்பிள் புகுத்த முனைந்தாலும் அங்கு போட்டிகளை சந்திப்பதில் அது வெற்றி பெறவில்லை.

அப்பிள் இன்று பாவிக்கும் வர்த்தக தந்திரம் innovation. ஆண்டாண்டுக்கு ஒரு ஐபோன் என்று electronic generation (g-culture) கலாசாரத்தை தனது புதிய கண்டுபிடிப்புக்களை புகுத்துவதன் மூலம் அப்பிள் ஆரம்பித்து வைத்துள்ளது. அதன் மூலம் அது மீண்டும் வர்த்தக சந்தையில் தன்னை நிலை நிறுத்த முடிந்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பிலும் இந்த மாற்றம் அவசியம். ஆனால் இலட்சியம் மாறகக் கூடாது. அப்பிள் இன்னும் mac உற்பத்தியை கைவிடவில்லை. அதில் குறிப்பிடத்தக்க இலாபம் கிடைக்கவில்லை என்றாலும்.. அதன் மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தித் திறனுக்கான இருப்பை தக்க வைத்துக் கொள்ள முனைகிறது. காரணம்.. brand loyalty மீது அதற்கு நல்ல நம்பிக்கை உண்டு.

விடுதலைப்புலிகளும் அதை செய்ய வேண்டும். தலைமைப் போட்டியில் ஈடுபடுபவர்களை தூக்கி வீசிவிட்டு.. புலிகள் செய்ய வேண்டிய பல காரியங்கள் உள்ளன. உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எமது அரசியல் ரீதியான அமைப்பு என்ற நிலைக்கும் அப்பாற்பட்ட எமது இனத்துக்கான strategic கட்டமைப்பு என்று சொல்வது மிகையல்ல..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா;

இப்படி ஒரு திரியைத்திறந்து என்னையெல்லாம் கடுப்பேத்துறதென்றே முடிவு பண்ணிட்டிங்க போல‌ :(

எனக்கென்னமோ சின்னனிலை இருந்து இப்ப வரைக்கும் வைத்தியர் ஆகவேண்டும் என்பது தான் அவா ஆனால் சூழ்நிலை வாய்க்கவில்லை. நான்கு வருடம் வரைக்கும் படித்துவிட்டு(4ம்வருட பரீட்சை எழுதாமல்) ஓடிவந்துவிட்டேன். முதலாம் வருடம் மெரிட் இல் பாஸ் பண்ணி உதயன் பேப்பரில் கூட எங்க கல்லூரியே போட்டோவுடன் செய்தி போட்டிருந்தாங்க இப்ப என்ன டா என்றால் 7_8€ க்கு கோப்பை கழுவவேண்டியதா போச்சு இங்கை படிக்கலாம் என்றாலும் மறுபடியும் விசா றிஜெக்ட் பண்ணிட்டாங்க, இங்கையும் படிக்க முடியாமல்,ஊருக்கு போகவோ ,விடவோ என்று புரியாமல் இருகிறேன் பா. :D :D

சொந்த‌மாக நிறுவனம் தொடங்கி தொழில் செய்ய‌த்தான் விருப்ப‌ம்.

அதே நேரம் தொழில்நுட்ப ஆய்வுகள் வடிவமைப்புக்கள் (R&D) என்பன வேலையின் 70% சத விகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

நிழ‌லி மாதிரி காசுப் பிர‌ச்சனைக‌ள் இருக்கும் என்று ஒரு பயம் இருந்தது. ஆனால் எங்க‌ளிட‌ம் இருக்கும் சில‌ விசேட‌ திற‌மைக‌ள் (Innovative Ideas) ப‌ண‌ப் ப‌ற்ற‌க்குறையின் தாக்க‌த்தைக் குறைக்கும்.

இர‌வில் நிம்ம‌தியாக‌ நித்திரை கொள்ள‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் சொந்த‌ நிறுவ‌ன‌ம் தொட‌ங்க‌க் கூடாது. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா;

இப்படி ஒரு திரியைத்திறந்து என்னையெல்லாம் கடுப்பேத்துறதென்றே முடிவு பண்ணிட்டிங்க போல‌ :(

எனக்கென்னமோ சின்னனிலை இருந்து இப்ப வரைக்கும் வைத்தியர் ஆகவேண்டும் என்பது தான் அவா ஆனால் சூழ்நிலை வாய்க்கவில்லை. நான்கு வருடம் வரைக்கும் படித்துவிட்டு(4ம்வருட பரீட்சை எழுதாமல்) ஓடிவந்துவிட்டேன். முதலாம் வருடம் மெரிட் இல் பாஸ் பண்ணி உதயன் பேப்பரில் கூட எங்க கல்லூரியே போட்டோவுடன் செய்தி போட்டிருந்தாங்க இப்ப என்ன டா என்றால் 7_8€ க்கு கோப்பை கழுவவேண்டியதா போச்சு இங்கை படிக்கலாம் என்றாலும் மறுபடியும் விசா றிஜெக்ட் பண்ணிட்டாங்க, இங்கையும் படிக்க முடியாமல்,ஊருக்கு போகவோ ,விடவோ என்று புரியாமல் இருகிறேன் பா. :D :D

உங்களின் இப்போதைய உடனடிப் பிரச்சனை விசா தான். அதை சரிக்கட்டிற வழியைப் பாருங்க. யாரேனும் ஒரு புண்ணியவதின் காலில் கையில் விழுந்தாவது விசாவை எடுக்கப் பாருங்க. மானம் இடம்கொடுக்கல்ல என்றால் ஊருக்குப் போய்.. கீழ் சொன்ன வழியில் மீண்டும் முன்னேறி வரலாம்.

நீங்கள் மருத்துவத்துறையிலேயே தொடர்ந்து படிக்கலாம். உங்களிடம் 4 ஆண்டுகாலம் கற்றதற்கான கல்விச் சான்றுதழ்கள் இருக்கும் என்றால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி போலந்து போன்ற நாடுகளுக்குப் போய் குறைந்த செலவில் ஓரிரண்டு ஆண்டு கால கல்வியை முடித்துவிட்டு பிறகு..பிரித்தானிய PLAB பரீட்சைகள் செய்து முழு மருத்துவராகலாம். (ஊரில உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் கூட ரஷ்சியா போன்ற நாடுகளுக்குப் போய் படித்து இன்று பிரித்தானியாவில் மருத்துவர்களாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.)

உங்களின் காலத்தை வீணடிக்காது இன்றே செயலில் இறங்குங்கள். வருடத்திற்கு 2000- 3000 டொலர்கள் தேவைப்படும். கடனாக வாங்கி என்றாலும் படியுங்கள். பின்னர் உழைக்க ஆரம்பித்தால் அவை ஒரு மாத அல்லது இரு மாதச் சம்பளம். பெப்ரவரியில் அல்லது செப்ரம்பரில் ஹங்கேரிக்கு மருத்துவ துறைக்கு ஆட்களை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். நோர்வே சுவிடன் போன்ற நாடுகளில் இருந்து கூட பலர் அங்கு போய் படிக்கின்றனர்.

சுவிடனுக்கும் முனைந்து பாருங்கள். அங்கு படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கும் கடன் வசதி தருகிறார்கள். நோர்வேயில் முன்னர் வழங்கினார்கள்... நம்மவர்கள் போய் கூத்துக்காட்டி இப்போ நிறுத்தி விட்டார்கள்.

Hungary Universities..

http://www.studyhungary.hu/

உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். :)

உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். :(

எது?????????????கலியாணம் கட்டவோ? ஏன் யா? :D

நன்றி நெடுக்ஸ் அண்ணா, :D

நான் இங்கை எல்லா சான்றிதழும் குடுத்தனான். தற்போதும் கைவசம் தான் இருக்கு. சில தினங்களுக்கு முதல் தான் நீதிமன்ற முடிவு வந்தது றிஜெக்ட் என்று. நான் ஜேர்மனி வரும் போது அண்ணா ஸ்பொன்சர் பண்ணிவந்து ப்ராங்போட் எயார்போட்டிலை தான் அசைலம் கேட்டேன் அவங்க பாஸ்போட்டை வாங்கி வச்சிட்டு இப்ப சொல்றாங்க உனக்கு ஊரிலை எந்த பிரச்சனையும் இல்லை ஏன் என்றால் பாஸ்போட்டிலை நீ முதல் சிங்கப்பூர்,மலேசியா போய் திரும்ப இலங்கை சென்று வந்திருக்கிறாய் அதனாலை அசைலம் தரமுடியாது என்று ஆனால் லோயர் சொல்லி இப்ப இங்கை இருக்கலாம். ஒரு வருடவிசா வேலை செய்ய அனுமதி தந்திருக்கு அண்ணா.

சொந்த பணத்தை போடாமல் உங்கள் திறனை(ability), பட்டறிவை (ideas) வைத்து ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல வழிகள் தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்த நாடுகளில் உள்ளன. உதரணத்துக்கு

http://www.cvca.ca/

http://www.cbc.ca/dragonsden/

அதே நேரத்தில் பல வரிச்சலுகைகளும் உள்ளன.

http://news.ontario.ca/mof/en/2008/09/ontario-supports-innovative-businesses-in-commercializing-research-by-post-secondary-schools-and-res.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது?????????????கலியாணம் கட்டவோ? ஏன் யா? :D

நன்றி நெடுக்ஸ் அண்ணா, :D

நான் இங்கை எல்லா சான்றிதழும் குடுத்தனான். தற்போதும் கைவசம் தான் இருக்கு. சில தினங்களுக்கு முதல் தான் நீதிமன்ற முடிவு வந்தது றிஜெக்ட் என்று. நான் ஜேர்மனி வரும் போது அண்ணா ஸ்பொன்சர் பண்ணிவந்து ப்ராங்போட் எயார்போட்டிலை தான் அசைலம் கேட்டேன் அவங்க பாஸ்போட்டை வாங்கி வச்சிட்டு இப்ப சொல்றாங்க உனக்கு ஊரிலை எந்த பிரச்சனையும் இல்லை ஏன் என்றால் பாஸ்போட்டிலை நீ முதல் சிங்கப்பூர்,மலேசியா போய் திரும்ப இலங்கை சென்று வந்திருக்கிறாய் அதனாலை அசைலம் தரமுடியாது என்று ஆனால் லோயர் சொல்லி இப்ப இங்கை இருக்கலாம். ஒரு வருடவிசா வேலை செய்ய அனுமதி தந்திருக்கு அண்ணா.

அதுதான் ஒரு வருடம் தந்திருக்காங்கல்ல. வேலை செய்ய அனுமதியும் தந்திருக்காங்க. அதில உழையுங்க. அதே நேரம் ஜேர்மனியிலும் பல்கலைக்கழகங்களிற்கு விண்ணப்பித்துப் பாருங்க. எனது நண்பர்கள் சிலர் அங்கு படிக்க என்று வந்திருந்தார்கள்.

ஆனால் ஊருக்குப் போவதாக இருந்தால்.. ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு அப்பிளை பண்ணி அட்மிசனை எடுத்து வைச்சுக் கொண்டு போங்கோ. பிறகு அங்க போயிட்டு உடனடியாகவே திரும்பிடலாம் படிக்க. கால விரயத்தை தடுக்கலாம். இதுதான் என்னால் சொல்லக் கூடிய புத்திமதி.

எனக்கும் லுமும்பா பல்கலைக்கழக மருத்துவ அனுமதி கிடைத்து அதுவும் புலமைப்பரிசிலோடு கிடைத்து பிறகு ஊரில் பிரச்சனை காரணமாக வெளிய வரமுடியாது.. அந்த சந்தர்ப்பம் தவறிப் போயிட்டுது. இருந்தாலும் ஊரில உயர்கல்வி கற்க கிடைத்த வாய்ப்பால் ஏதோ படிச்சன்.

உங்களுக்கெல்லாம் அப்படி சந்தர்ப்பங்களை இழக்கும் நிலை.. ஆகக் கூடாது என்பது எனது எதிர்பார்ப்பு. :(

நெடுக்ஸ் அண்ணா நான் வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது கேட்காத இடமில்லை. விசா வரட்டும்,விசா வரட்டும் என்றாங்கள் பிறகு என் தொல்லை தாங்காமல் டொச் படிக்க சொல்ல அதையும் படிச்சிட்டு போக சொன்னாங்கள் Bundesamt முடிவெடுக்க வேண்டும் என்று

http://www.bamf.de/cln_101/DE/Startseite/home-node.html?__nnn=true

இவங்க தான் முடிவெடுக்க வேண்டும் என்று.

நல்ல விசா இருந்தால் படிக்கலாம் காத்திரு என்று இப்ப அதுக்கும் அல்வா குடுத்திட்டாங்க.

நெடுக்ஸ் அண்ணா, :D

வாற திங்கள்கிழமை லோயரிடம் கதைக்க போறேன். அப்பொயின்ட்மென்ட் வச்சிருக்கு. அதன் பிறகு பார்க்கிறேன்.

வீட்டிலை என்ன என்றால் வா வந்து இங்கையே படி எங்களையும் பார்க்க ஒரு ஆம்பிளைப்பிள்ளையும் இல்லை என்று நிக்கிறாங்க,நான் தான் முழிச்சிட்டு இருக்கிறேன்.

Edited by ஜீவா

ஒரு பத்திரிகையாளனாக உலகம் முழுக்க சுற்றி அவரவர் வாழ்க்கை முறைகளை பார்க்கவேண்டும் என்ற அவா மணியனின் பயணக்கட்டுரைகளை படித்த நாட்களில் இருந்து இன்றுவரை இருக்கின்றது.இன்றும் பயணகட்டுரைகள் ,டொக்குமென்ரறீஸ் விரும்பிப்பார்ப்பேன்.

தலைவிதி யாரை விட்டது.ஊரில் யுனிவேர்சிட்டி போகாவிட்டால் அக்கவுன்டன்சி பின்னர் வெளிநாடு அங்கும் விட்டகுறையை தொடர்ந்து அக்கவுன்டன்சி பின்னர் இந்திய பயணம்.அந்த சில வருடங்கள் இயக்க புண்ணியத்தில் இந்தியாவிற்குள் பல இடங்கள் திரிந்தேன்.பின்னர் திரும்ப லண்டன்.

பின்னர் தான் தெரியுமே ஒரு அடிப்படை தகுதியில்லாவிட்டால் வெளிநாடுகளில் நல்ல வேலை எடுப்பது மிகவும் கஸ்டம்.கனடா வந்து கடவுள் புண்ணியத்தில் மிகப்பெரிய கொலிவூட் படக்கொம்பனியி வினியோகப் பிரிவில் சேர்ந்து 3 வருடங்களில் சூப்பர்வைசரானேன்.18 வருடங்களாகின்றது (எனது வேலை அனுபவங்களை வேறொருபதிவில் எழுதுகின்றேன்).பகுதி நேரம் வீடு விற்பனை முகவராகவும் இருக்கின்றேன்.

ஆனால் இன்னமும் சுத்தியடிக்கும் ஆசைவிடவில்லை(ஒரு கானாபிரபா,அரவிந்தன் போல் )அதற்காக ஒரு விடுமுறை பாக்கேஜுக்கு மாதாமாதம் காசுகட்டிக்கொண்டிருக்கின்றேன் உலகின் எங்கும் வருடத்திற்கு 1 கிழமை அவர்களின் இடத்தில் போய் தங்கலாம்.சவுத் ஆபிரிக்கா,சீனா,எகிப்து இம் மூன்று இடங்களும் பார்த்து விடவேண்டுமென்பதே கனவு.

தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும். இளஞர்களாகிய உங்களுக்கு படிப்புத்தான் முதலாவது மற்றவயையெல்லாம் இரண்டாம் பட்சமே இது என் அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும். இளஞர்களாகிய உங்களுக்கு படிப்புத்தான் முதலாவது மற்றவயையெல்லாம் இரண்டாம் பட்சமே இது என் அனுபவம்.

உண்மை தான் அர்ஜுன் அண்ணா.

:(

கனடாவை பொறுத்தவரை வெளிநாட்டு மருத்துவ பட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது கடினம். ஆனால் முடியும்.

எனக்குதெரிந்த பலர் ஊரிலும் மற்றும் உருசிய நாடுகளிலும் படித்து இங்கே வேலை செய்கிறார்கள்.

இங்கே மருத்துவத்துறை மாநிலங்களால் கட்டுப்படுத்தப்படுவது. ஆறு நாடுகளில் பட்டம் பெற்றவர்கள் இலகுவாக (no residency required) மருத்துவராகலாம்: அமெரிக்க, இங்கிலாந்து, தென் ஆபிரிக்க, அவிஸ்திரேலியா, அயர்லாந்து. (மற்றையது இஸ்ரேல் அல்லது நியு சிலந்தாகா இருக்கலாம்) . பலரும் அயர்லாந்து போய் படிகின்றார்கள்.

கூடிய விபரம் தேவை எனில் அந்தந்த மாநில மருத்துவ அமைப்புக்களை (அல்லது எனது தனி மடலுக்கு) தொடர்பு கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...ஆ...ஆ.நெடுக் அண்ணா வேலை பற்றி எழுதி என்னை ரென்சன் ஆக்கி போட்டார்....இதை நான் எங்க போய் சொல்ல..... :( just joke :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா நான் வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது கேட்காத இடமில்லை. விசா வரட்டும்,விசா வரட்டும் என்றாங்கள் பிறகு என் தொல்லை தாங்காமல் டொச் படிக்க சொல்ல அதையும் படிச்சிட்டு போக சொன்னாங்கள் Bundesamt முடிவெடுக்க வேண்டும் என்று

http://www.bamf.de/cln_101/DE/Startseite/home-node.html?__nnn=true

இவங்க தான் முடிவெடுக்க வேண்டும் என்று.

நல்ல விசா இருந்தால் படிக்கலாம் காத்திரு என்று இப்ப அதுக்கும் அல்வா குடுத்திட்டாங்க.

நெடுக்ஸ் அண்ணா, :D

வாற திங்கள்கிழமை லோயரிடம் கதைக்க போறேன். அப்பொயின்ட்மென்ட் வச்சிருக்கு. அதன் பிறகு பார்க்கிறேன்.

வீட்டிலை என்ன என்றால் வா வந்து இங்கையே படி எங்களையும் பார்க்க ஒரு ஆம்பிளைப்பிள்ளையும் இல்லை என்று நிக்கிறாங்க,நான் தான் முழிச்சிட்டு இருக்கிறேன்.

விசாவுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கல்லை என்றால் ஜேர்மனியில் விசாவிற்காக காத்திருந்து காலம் போவது உங்களைப் போன்றவர்களுக்கு பேரிழப்பாகும் என்றே நினைக்கிறேன். விசாவிற்கு ஒரு வழி பிறக்கும் என்றால் காத்திருப்பதில் அர்த்தம் இருக்கும்..!

உத்தரவாதமற்ற விசாவுக்காக காத்திருப்பதிலும்.. ஊருக்குப் போய் நிலைமையை விளக்கி படிப்பை தொடர்ந்து முடித்துவிட்டு அதன் பின்னர் பல வழிகளில் நீங்கள் வெளிநாட்டுக்கு வரலாம். அதுவும் மருத்துவ துறையினருக்கு அவுஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. விரும்பினால் பிரித்தானியா.. யு எஸ்.. கனடாவிற்கும் வரலாம்.

ஒரு படிப்பை முடித்து டிகிரியை கையில வைச்சுக் கொண்டு நேரத்தைக் கடத்தினாலும் பறுவாயில்லை. உங்கள் நிலை கொஞ்சம் யோசிக்க வேண்டி உள்ளது. விசா வரும் என்பது நிச்சயம் என்றால் பறுவாயில்லை காலம் போனாலும் படிக்க ஒரு வாய்ப்பிருக்கு என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.

நிலைமையை யோசிச்சு செய்யுங்கோ. அப்புறம் படிக்க முயல்லையே என்று பின்னாடி வருத்தப்படக் கூடாது. ஊரில மருத்துவம் படிக்க சந்தர்ப்பம் கிடைப்பதே அரிது.

உங்களைப் போன்று இடையில் படிப்பை தொடராது வருபவர்களால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை தேடி அலையும் மாணவனுக்கு அது கிடைக்காமலும் செய்யப்படுகிறது. எனது நண்பர்கள் சிலரும் இப்படித்தான் ஓரிரண்டு ஆண்டு படித்துவிட்டு கனடா என்று போய்விட்டார்கள். அதனால் அவர்களின் இடங்களை நிரப்பக் கூடிய நிலை இருந்தும்..இடையில் விட்டிட்டு ஓடுவதால் அந்த வாய்ப்புக்கள் பல மாணவர்களை சென்றடைவதும் இல்லை. அவை வீணடிக்கப்படுகின்றன. இதில் எம்மவரிடம் சமூக நோக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் ஊரில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை இழந்த எம்மைப் போன்றோருக்குத்தான் அதன் வலி தெரியும். எதுஎப்படியோ.. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அது சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். :D:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விசாவுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கல்லை என்றால் ஜேர்மனியில் விசாவிற்காக காத்திருந்து காலம் போவது உங்களைப் போன்றவர்களுக்கு பேரிழப்பாகும் என்றே நினைக்கிறேன். விசாவிற்கு ஒரு வழி பிறக்கும் என்றால் காத்திருப்பதில் அர்த்தம் இருக்கும்..!

உத்தரவாதமற்ற விசாவுக்காக காத்திருப்பதிலும்.. ஊருக்குப் போய் நிலைமையை விளக்கி படிப்பை தொடர்ந்து முடித்துவிட்டு அதன் பின்னர் பல வழிகளில் நீங்கள் வெளிநாட்டுக்கு வரலாம். அதுவும் மருத்துவ துறையினருக்கு அவுஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. விரும்பினால் பிரித்தானியா.. யு எஸ்.. கனடாவிற்கும் வரலாம்.

ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் ஊரில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை இழந்த எம்மைப் போன்றோருக்குத்தான் அதன் வலி தெரியும். எதுஎப்படியோ.. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அது சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். :D:(

ஜீவா

தங்களுக்கான பதில் இந்த வாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன்

மிகவும் கவலையான செய்தி

ஆனால் சோர்ந்து விடவேண்டாம்

நெடுக்ஸ் சொல்வதைக்கேளுங்கள்

நீங்கள் ஒரு வருடம் அல்லது இரு வருடம் ஜரோப்பாவில் எங்காவது படிக்க கிடைத்தால்

அதை பயன்படுத்துங்கள்

பணத்துக்கு யோசிக்கவேண்டாம்

அண்ணன் இருக்கின்றேன்

இதைத்தான் தங்களுக்கு நான் சொல்லமுடியும்

ஏனெனில் படிப்பை பாதியில் இழந்தவன்தான் நானும்.

ஒவ்வொரு காரணங்களுக்காக அது பின் போடப்பட்டு அது கிடைக்காமலேயே போய்விட்டது எனக்கு.

அதன் வலி எல்லாவற்றிலும் பெரிது.

தாங்கள் ஊருக்குப்போய் படிக்க நினைத்தாலும் பணம் என்கின்ற பிரச்சினையை என் மீது விட்டுவிட்டு

வேறு ஏதாவது இருந்தால்மட்டும் யோசியுங்கள்.

எனக்கு உங்களைப்போல் உணர்வுள்ளவர்கள் பெரிய இடங்களுக்கு வரணும்.

அவ்வளவுதான்.

சிறு வயதில் இரயில் வண்டியின் சாரதி ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது...

நல்ல சோக்கான வேலை. இங்கு சப்வே ஓடினால் வருசத்திற்கு $80,000 சொச்சம் உழைக்கலாம், அத்தோட பல சலுகைகளும் உள்ளது என்று நினைக்கின்றேன். ஆனால் உள்ளுக்கை புகுவது என்றால் அது யூனியன் சமாச்சாரம். சும்மா குந்தி இருந்து பணம் சம்பாதிக்கக்கூடிய பன்பலான வேலை. ஜாலியான வாழ்க்கை. :(

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர பரீட்சையில் 3 துறைக்கும் போகக்கூடிய தகுதி

ஆனால்; தேர்ந்தெடுத்து கணக்கியலுடன் கணிதம்

ஒரு சார்ட்டட் எக்கவுண்டனாக வரணும் என்ற கனவு.

83 அடியுடன் எல்லாம் துலைந்து பல்கலைக்கழக முதலாவது பத்திரம் வரும்போது பிரான்சில்.

லண்டன் போவது தான் நினைவு.

அக்கா பரீசிலிருந்த படியாலும் அந்த நேரம் லண்டன் போவுத ஆபத்தாக இருந்ததாலும்...

வந்த அடுத்த நாள் வேலை.

என்ன வேலை

இரவு உணவு விடுதியில் குடித்துவிட்டு ஆடுவார்கள்

ஆடும்போது சாப்பிட்ட போப்பகளையும்உடைப்பார்கள் என்று தெரிந்தே வாங்கி வைக்கும் கோப்பைகளையும் அவர்கள்; உடைத்துவிட்டு அதற்கு மேல் நின்று ஆடிவிட்டு செல்ல அவற்றை கூட்டி அள்ளும் வேலை....

முதல் நாள் அப்படியே இருந்து சிறிது நேரம் அழுதேன்

ஏனெனில் பல் துலக்க பிரசை மறந்துவிட்டு சென்றுவிட்டு கையால் துலக்கினால் கை பொக்கழிக்கும் அளவுக்கு சொகுசாக வளர்ந்தவன்.

வேலையை ஆரம்பித்தவன் தான்

83 கலவரத்தினால் ஆடிப்போயிருந்த எமது குடும்பத்துக்காக உழைக்கத்தொடங்கினேன்

என்னைவிட 6 வயது அதிகமான அக்காவை வெளியில் எடுப்பது

தம்பியை எடுப்பது என்று ஆரம்பித்து அக்காமாரின் பிள்ளைகளை எடுப்பது வரை சுமை தொடர்ந்ததால் வந்த நோக்கம் மறந்து போனது. அல்லது மரத்துப்போனது.

இது எனது படிப்பு சம்பந்தமானது

ஆனால் இன்னொரு பக்கத்தையும் எழுதவேண்டும்

கிடைப்பதை பயன்படுத்தும் தன்மை என்னிடமுண்டு

அந்த வகையில் கோப்பை பொறுக்கும் கடையில் கோப்பை கழுவ தொடங்கி

சமையலுக்கு உதவியாகி

சமையல்காறனாக எனக்கு தேவைப்பட்டது 6 மாதம் தான்.

12 வருடங்களாக அதேவேலை.

அந்த முதலாளியின் துணையுடன் (ஆர்மேனியன்) 3 இலிருந்து 6 வரை பிரெஞ்சு பாடம் படிப்பு என்று தொடர்ந்த எனக்கு கணணி படிக்கும் ஆவலும் வந்தது.

அத்துடன் வேலையும் மாறி வர

மீண்டும் உதவி சமையல்காறன்.

அதிலிருந்து கணணி அறிவையும் பாவித்து 2 வருடத்தில் ரெஸ்ரோரன்ரின்

உள் வரும் வெளியே போகும் பொருட்களுக்கான பொறுப்பாளராக....

7 வருடம் அதே வேலை

அதற்கு அடுத்த பொறுப்பு

அந்த உணவகத்தின் பொறுப்பாளர் பதவி.

அதற்கு எனது நிறம் இடம் தராததால்....

படித்த கணணி அறிவைக்கொண்டு சொந்தத்தொழில்..

உண்மையைச்சொன்னால்

தேடியது கிடைக்வில்லை

கிடைத்ததை வளம்படுத்தி வாழ்கின்றேன்

ஆனால் இத்தனை நாள் நேரம்பாராது சாப்பாட்டை கவனியாது செய்த உழைப்புக்கு வெகுமதியாக...

உடலுக்குள் பலவித குளறுபடிகள்

எவர் முதலில் இவரைக்கொண்டு போவது என்று அவர்களுக்குள் போட்டிகள்

நானும் நம்ம வசம்பு அண்ணா போல் ஒருநாள் திடீர்ப்பயணம்தான்.....

அதற்காகத்தான் இதையும் இங்கு எழுதுகின்றேன்

ஏனெனில் படிக்க வசதியுள்ளவர்கள் படித்து அதற்கு தகுதியான வேலைகளைப்பெறுங்கள்

நான் 40 மணித்தியாலங்கள் அடித்து பெற்ற வருமானத்தை தாங்கள் 5 மணித்தியாலத்துடன் பெறமுடியும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோழி மேய்க்கலாம் எனறு இருந்தேன் ஆனால் இப்ப கோழி என்னை மேய்க்குது. :D (எல்லாரும் சென்டிமன்டா பீல் பன்னுறீங்கள் அது தான்.இதுக்காக எல்லாரும் சேர்நது கும்முறது இல்லை :(:D:) )

ஆனால் இத்தனை நாள் நேரம்பாராது சாப்பாட்டை கவனியாது செய்த உழைப்புக்கு வெகுமதியாக...

உடலுக்குள் பலவித குளறுபடிகள்

எவர் முதலில் இவரைக்கொண்டு போவது என்று அவர்களுக்குள் போட்டிகள்

இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் வாழும் புலம் பெயர்ந்த நாடுகளில் சகல விதமான முதலாந்தர வசதிகள், உதவிகள், கருவிகள், மருந்துகள் உள்ளன. நேரம் இல்லை என்றும் சொல்ல கூடாது.

இவற்றை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வதில் தான் எமது வெற்றியும் எமது அடுத்த தலைமுறை வெற்றியும் தங்கி உள்ளது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அகோதா

ஆனால் வீடு, நாடு என்று எல்லாவற்றையும் சுமந்தோம் நாம்.

இன்னும் சிறிது காலம் என்றால் நிமிர்ந்து விடுவேன்

நிமிர்த்திவிடுவேன் வாரிசுகளை..

அதுவரை ரிஸ்க்தான்

பார்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.