Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபாவளி தமிழர் விழாவா?

Featured Replies

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

http://meenakam.com/2010/11/04/11694.html

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது தீபாவளி நெருங்கி வருது... கள உறவுகள் எல்லாம் தூங்கிட்டு இருக்கங்களா..? பிளீஸ் ரெல் ரெல் மீ..

டிஸ்கி:

ம்ம்ம் ஆரம்பியுங்கப்பா... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தைப் பொங்கல், சித்திரை வருடம், தீபாவளி, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகத் தொலைத்து விட்டுக், கடைசியாத் தமிழனுக்குக்ம் கோவணத் துணிகூட மிஞ்சாது.

இப்பிடியான பண்டிகைகளால் தான், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், புத்தாடை உடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

தீபாவளி என்பது தீபம்+ ஆவளி = தீபங்களின் வரிசை எனப் பொருள்படும். வீடுகளுக்கு விளக்கேற்றும் ஒரு விழாவாக இது கொண்டாடப் பட்டிருக்கலாம். இதைத் தூக்கி, ஆரியர்கள், சூரசங்காரத்துடன் கொழுவியிருக்கலாம்.

எனவே, சூரன் போரை நிப்பாடுவதே, புத்திசாலித் தனம்! அதைத் தீபாவளியில் இருந்து தனிமைப் படுத்தி, விருப்பமானவர்கள், இன்னொரு நாளில் சூர சங்காரத்தைச் செய்யலாம்!

என்னப்பா இது தீபாவளி நெருங்கி வருது... கள உறவுகள் எல்லாம் தூங்கிட்டு இருக்கங்களா..? பிளீஸ் ரெல் ரெல் மீ..

டிஸ்கி:

ம்ம்ம் ஆரம்பியுங்கப்பா... :icon_idea: :icon_idea:

யோவ்

இது ஏதாவது ஒரு தமிழ் அசுரன் அழிந்த நாளாய் இருக்கும்.

வடக்கத்திய பெண்டிருடன் ஆட்டம் போட்டால் அது பண்டிகை.

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி எப்ப வருது மறந்தே போச்சு :(

  • கருத்துக்கள உறவுகள்

தைப் பொங்கல், சித்திரை வருடம், தீபாவளி, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகத் தொலைத்து விட்டுக், கடைசியாத் தமிழனுக்குக்ம் கோவணத் துணிகூட மிஞ்சாது.

இப்பிடியான பண்டிகைகளால் தான், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், புத்தாடை உடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

தீபாவளி என்பது தீபம்+ ஆவளி = தீபங்களின் வரிசை எனப் பொருள்படும். வீடுகளுக்கு விளக்கேற்றும் ஒரு விழாவாக இது கொண்டாடப் பட்டிருக்கலாம். இதைத் தூக்கி, ஆரியர்கள், சூரசங்காரத்துடன் கொழுவியிருக்கலாம்.

எனவே, சூரன் போரை நிப்பாடுவதே, புத்திசாலித் தனம்! அதைத் தீபாவளியில் இருந்து தனிமைப் படுத்தி, விருப்பமானவர்கள், இன்னொரு நாளில் சூர சங்காரத்தைச் செய்யலாம்!

ஏன் சூரசம்ஹாரத்தை நிப்பாட்ட வேண்டும் என சொல்கிறீர்கள்?...சூரன் போர் என்பது தமிழ் கடவுளான முருகன் அசுரனை அழித்த தினம் தானே! மேலும் அது ஒரு விழா இல்லையே!...விரதம் இருந்து வழிபடுவது தானே சூரன் போரும்,கந்த சட்டியும் மேலும் தீபாவளியும்,சூரன் போரும் ஒரே நாளில் வருவதில்லை தானே!

தமிழ் அரக்கனாகிய இராணவனை வடக்கத்திய இராமன் அழித்த தினன் தான் தீபாவளியாம் என வாசித்து உள்ளேன் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாது :unsure:

தமிழ்க் கடவுளாக இருந்த முருகன், வள்ளியைக் காதல் திருமணம் செய்து,(தமிழ் முறை) மகிழ்ச்சியாக இருந்த காலத்தில், இந்திரன் தனது மகளான தேவயானியை, முருகனுக்கு இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துவைத்து, தனது சம்பந்தியாக ஆக்கிக் கொண்டதன் மூலம், முருகனும், ஆரியக் கடவுளாகி, சூரபத்மன் ஆகிய, திராவிடனை, அழித்த வரலாறைக் கொண்டாடுவது, தீபாவளி என்று கூறுகின்றார்கள்.

முருகனே, இந்த நாளைத் தீபாவளியாகக் கொண்டாடும்படி, கூறியதாகக் கதை போகின்றது!

சூரபத்மனே, தன்னை உலகம் மறக்காது இருக்கும் பொருட்டு, மரணத் தறுவாயில் முருகப் பெருமானிடம் வரம் கேட்டதாகவும், முருகப் பெருமான் இந்த நாளைத் தீபாவளி என்று மக்கள் கொண்டாடுவார்கள்! அதனால் நீ என்றும் அவர்கள் நினைவில் நிறைந்திருப்பாய் என்று கூறியதாகவும் ஐதீகம்!

வடக்கில் இதைத்தான் 'திவாலி' என்று கொண்டாடுகிறார்கள். அவர்கள், இராவணனை, இராமன் அழித்த நாள் என்று கூறுகின்றார்கள்!

திராவிடனையே கொன்று விட்டு, அந்த நாளைத் திருநாளாகத் திராவிடர்களையே கொண்டாடவைக்கும் அளவுக்குத் திராவிடர் தலை மீது, ஆரியம் இதுவரை காலமும் மிளகாய் அரைத்திருக்கின்றது,என்பது தான் நம்ப முடியாமல் உள்ளது, ரதி!

மன்னிக்கவும் இந்திரன் உண்மையிலேயே வட இந்தியனா? உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் இந்திரன் உண்மையிலேயே வட இந்தியனா? உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் :unsure:

இந்திரன் தான் தேவர்களுக்கு அதிபதி, ரதி!

வேதங்களின் படி, சுத்தமான ஆரிய ரத்தம் அவனுடையது!

வச்சிராயிதமும், வெள்ளைக் குதிரையும், அவனது தனித்துவமான அடையாளங்கள்!

மன்னிக்கவும் இந்திரன் உண்மையிலேயே வட இந்தியனா? உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் :unsure:

சங்க காலத்தில் முல்லை நிலக் கடவுளாக மாயோனையும் (திருமாலும்) மற்றும் மருத நிலக் கடவுளாக இந்திரனையும் வழிபட்டனர். வேளாண்மை செய்யும் மருத நில மக்கள் இந்திரனை மழைக் கடவுளாக தொழுதனர் என்றே சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். இந்திரன் சுத்தமான தமிழ்க் கடவுள். வட இந்தியர்கள் வழிபடும் இந்திரனையும் சங்க கால இந்திரனையும் நாம் ஒப்பிட்டு குழப்பமடைகிறோம் என்றே நினைக்கிறேன். இந்த திரியை கொஞ்சம் பார்க்கவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104585#entry776030

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது தெரியாமல் விஷ்ணு நரகாசுரனை அழித்த நாள் அல்லோ தீபாவளி

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது தெரியாமல் விஷ்ணு நரகாசுரனை அழித்த நாள் அல்லோ தீபாவளி

வாதவூரன், நீங்கள் கூறுவது போலவும், ரதி குறிப்பிட்டது போலவும், விக்கிபீடியாவும் சொல்கிறது.

எங்களுக்குச் சொல்லித் தந்த வாத்தியிடம், சான்றிதழ்கள் கேட்க வேண்டும்! :D

சங்க காலத்தில் முல்லை நிலக் கடவுளாக மாயோனையும் (திருமாலும்) மற்றும் மருத நிலக் கடவுளாக இந்திரனையும் வழிபட்டனர். வேளாண்மை செய்யும் மருத நில மக்கள் இந்திரனை மழைக் கடவுளாக தொழுதனர் என்றே சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். இந்திரன் சுத்தமான தமிழ்க் கடவுள். வட இந்தியர்கள் வழிபடும் இந்திரனையும் சங்க கால இந்திரனையும் நாம் ஒப்பிட்டு குழப்பமடைகிறோம் என்றே நினைக்கிறேன். இந்த திரியை கொஞ்சம் பார்க்கவும்

http://www.yarl.com/...585#entry776030

அகலிகையைக் கிழப்பிக் கொண்டு போனது, எந்த இந்திரன்? :D

  • கருத்துக்கள உறவுகள்

அகலிகையைக் கிழப்பிக் கொண்டு போனது, எந்த இந்திரன்? :D

விசுவாமித்திரரிடம், உடம்பெல்லாம்... ஆயிரம் ஓட்டை விழவேணும் என்று சாபம் பெற்ற இந்திரன் தான்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுவாமித்திரரிடம், உடம்பெல்லாம்... ஆயிரம் ஓட்டை விழவேணும் என்று சாபம் பெற்ற இந்திரன் தான்... :lol:

நியானி வந்த பிறகு, வார்த்தைப் பிரயோகங்களில், நல்ல முன்னேற்றம் தெரிகிறது! :D

  • கருத்துக்கள உறவுகள்

நியானி வந்த பிறகு, வார்த்தைப் பிரயோகங்களில், நல்ல முன்னேற்றம் தெரிகிறது! :D

நான்... சொல்ல வந்ததை, டக்கென புரிந்து விட்டீர்கள் புங்கையூரான் :icon_idea:

நியானியால்... சரியாய், கஸ்ரப்பட வேண்டியிருக்கு. :lol:

விசுவாமித்திரரிடம், உடம்பெல்லாம்... ஆயிரம் ஓட்டை விழவேணும் என்று சாபம் பெற்ற இந்திரன் தான்... :lol:

நியானி வந்த பிறகு, வார்த்தைப் பிரயோகங்களில், நல்ல முன்னேற்றம் தெரிகிறது! :D

உங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே பேசினா எப்படி?

:blink:

என்னைப் போல புராணக் கதைகள் தெரியாதவர்களும் இருக்கிறோம். எழுதிறத விளக்கமாக எழுதுங்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே பேசினா எப்படி?

:blink:

என்னைப் போல புராணக் கதைகள் தெரியாதவர்களும் இருக்கிறோம். எழுதிறத விளக்கமாக எழுதுங்கள்.

ஒன்றும் இல்லை, தப்பிலி!

புராணக்கதையில் நடந்தது இது தான்!

இந்திரனுக்கு, அகலிகை மீது ஒரு கண்,

நடுச்சாமத்தில் சேவல் வடிவம் எடுத்துக் கூவுகிறான்,

முனிவர் விடிந்து விட்டது என நினைத்து, சந்தியாவந்தனம் செய்ய ஆற்றங்கரைக்குப் போய் விடுகிறார்.

இந்திரன் அகலிகையுடன் இருக்கும் போது, சூரியனைக் காணாத முனிவர் திரும்ப வந்து விடுகிறார்.

கோபம் கொண்ட முனிவர், அகலிகையைக் கல்லாகிப் போகுமாறு சபித்து விடுகிறார்.

இந்திரனது உடம்பில் ஆயிரம் ஓட்டைகள், உண்டாகவேண்டும் என்றும் சபித்து விடுகிறான்.

வழக்கம் போல, இந்திரன் சாபவிமோசனம் கேட்க, அந்த ஓட்டைகள், அவனது கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்று கூறுகிறார்,

படிப்பினை: அடுத்தவன் மனைவியைக் கிழப்ப நினைக்கக் கூடாது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே பேசினா எப்படி?

:blink:

என்னைப் போல புராணக் கதைகள் தெரியாதவர்களும் இருக்கிறோம். எழுதிறத விளக்கமாக எழுதுங்கள்.

சரி... தப்பிலிக்காக புராணக்கதை. நியானி வர முதல் வாசித்துப் போடுங்கோ...... :D

விசுவாமித்திர முனிவரின் மனைவியான... அகலிகை மீது... இந்திரனுக்கு ஒரு கண்.

ஒருநாள் அகலியை... அடைந்தே தீருவது என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்க.. இந்திரனுக்கு ஒரு ஐடியா வந்தது.

அந்தக் காலத்தில்... அலார்ம் மணிக்கூடு இல்லாததால்... சேவல் கூவுவதை வைத்துத்தான்... விடிய‌ எழும்புவார்கள்.

அத‌னை த‌ன‌க்குச் சாத‌க‌மாக‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ எண்ணிய‌ இந்திர‌ன்.... ந‌டுச்சாம‌ம் ஒரு ம‌ணி போல்... கொக்க‌ர‌க்கோ... என்று சேவ‌ல் மாதிரி கூவ‌...

போத்துக் கொண்டு ப‌டுத்திருந்த‌ விசுவாமித்திர‌ர், விடிந்து விட்ட‌து என்று நினைத்து.. ப‌ல்லுவிள‌க்கி, குளிக்க‌... குள‌த்துக்குப் போய் விட்டார்.

அவ‌ர் குள‌த்துக்குப் போன‌வுட‌ன்... இந்திர‌ன் விசுவாமித்திர‌ரின் உருவ‌மாகி அக‌லிகையின் அருகில்.. ப‌டுத்து... உற‌வு கொண்டு விட்டான்.

அந்நேர‌ம் குள‌த்த‌டிக்குச் சென்ற‌ விசுவாமித்திர‌ருக்கு... இன்னும்... விடிய‌வில்லை, சாம‌க் கோழி கூவியிருக்குது என்று ட‌வுட் வ‌ர‌, வீட்டை வ‌ந்தால்... அக‌லிகை உண்மைக் க‌ண‌வ‌னைக் க‌ண்டு... அரை குறை ஆடையுட‌ன் எழ‌...

முனிவ‌ர் சும்மா இருப்பாரா...

அக‌லிகை க‌ல்லாக‌வும், இந்திர‌ன் உட‌ல் முழுக்க‌... ஆயிர‌ம் பெண்குறியுட‌ன் மாற‌வேண்டும் என்று போட்டார் சாப‌ம்.

இந்திரன் தான் தேவர்களுக்கு அதிபதி, ரதி!

வேதங்களின் படி, சுத்தமான ஆரிய ரத்தம் அவனுடையது!

வச்சிராயிதமும், வெள்ளைக் குதிரையும், அவனது தனித்துவமான அடையாளங்கள்!

ஏனுங்க சங்ககால இலக்கியமான மணமேகலைல இந்திர விழா செலிபறேற் பண்ணியிருக்காங்க புங்கையூரான் அண்ணன் :) :) . இந்திரனு தமிழ் கடவுள் தாங்க அவரு . ஒரு பிளே போயா இருக்கிறதால விசுவாமித்திரர் வைப் கூட வாலாட்டினாங்க . விசுவாமித்திரு இந்திரனோட வால ஒட்ட நறுக்கீட்டாரு :lol: :lol: .

சூரியனுக்கும் தானே, தமிழன் விழா எடுக்கிறான்!

அதனால், சூரியன் திராவிடக் கடவுளாகி விட்டான் என்று கருதலாமா. சொப்னா?

அர்ஜுன் சுத்தமான சத்திரியன் அல்லவா?

அர்ஜுனனின் தந்தை, எவ்வாறு திராவிடனாக இருக்க முடியும்/

ரிக் வேதத்தின் தலைவன், இந்திரன் அல்லவா?

விசுவகர்மா, சூரியனில் ஒரு துண்டை எடுத்து, வஜ்ராயுதம் செய்தானென்று, வேதங்கள் சொல்கின்றனவே!

Edited by புங்கையூரன்

நன்றி புங்கை, சிறி

புராணத்தில் உள்ள கதைகளைத்தானே கூறினீர்கள். புராண அறிவையூட்டும் கருத்துக்களை ஏன் வெட்டப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரன் தான் தேவர்களுக்கு அதிபதி, ரதி!

வேதங்களின் படி, சுத்தமான ஆரிய ரத்தம் அவனுடையது!

வச்சிராயிதமும், வெள்ளைக் குதிரையும், அவனது தனித்துவமான அடையாளங்கள்!

மன்னிக்க வேண்டும் புங்கை எதை வைத்து தமிழர்கள்[திராவிட‌ர்கள்] அசுர‌ர்கள் என சொல்கிறீர்கள்?

விசுவாமித்திரரிடம், உடம்பெல்லாம்... ஆயிரம் ஓட்டை விழவேணும் என்று சாபம் பெற்ற இந்திரன் தான்... :lol:

கௌதம முனிவரின் மனைவியான அகலிகையிடம் இச்சையடைந்த இந்திரன் இறுதியில் கௌதமமுனிவரின் சாபத்துக்கு இருவருமே ஆளாகின்றனர் , மேலதிக விபரம் வருமாறு.....

தேவர் தலைவனான இந்திரன், கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். ஒருநாள், நள்ளிரவில் சேவல் வடிவெடுத்து கூவினான். பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர அனுஷ்டானத்திற்காக கிளம்பினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான். விஷயமறிந்த முனிவர், இந்திரன் உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்தார். சாபம் தீர இந்திரன் யாத்திரை புறப்பட்டான். பூலோகத்தில் அர்ஜுனபுரி என்னும் (கடையநல்லூர்) தலத்தை அடைந்தான். அங்கு நீலமணிநாதர், அருணாசலேஸ்வரர் என்னும் இரு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்பகுதியின் ஈசானபாகமான வடகிழக்கில் குளம் ஒன்றை வெட்டினான்.

http://ta.wikipedia....்_செல்வி_அம்மன்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் புங்கை எதை வைத்து தமிழர்கள்[திராவிட‌ர்கள்] அசுர‌ர்கள் என சொல்கிறீர்கள்?

அ + சுரர் = அசுரர்.

சுரர் என்பது, சமஸ்கிரிதத்தில் குடிகாரர்களைக் குடிக்கும்!

அசுரர் என்பது குடிக்காதவர்களைக் குறிக்கின்றது!

உண்மையில், அசுரர் என்பது ஒரு நல்ல வார்த்தையாகத் தான் ஆரம்பிக்கப் பட்டது.

பின்பு புராணங்களில், அசுரர்கள் என்பது, ஒரு கூடாத வார்த்தையாகப் போய் விட்டது!

திராவிடர்களில், குடிப்பழக்கம் இருக்கவில்லை. ஆயினும், ஆரியர்களில், குடிக்கும் பழக்கம் அவர்களது, கலாச்சாரத்தில் ஆழமாகப் பிணைந்திருந்தது. இதனை நீங்கள் இன்றும், அவர்களது கொண்டாட்டங்களிலும், சமூக ஒன்று கூடல்களிலும் அவதானிக்கலாம்!

திராவிடர்களின், தமிழர்களின், குடிப்பழக்கம், மிகவும் பிந்திய கால கட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும் என எண்ணுகின்றேன், ரதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.