Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜப் பெருமாளின் தொலைபேசி உரை

Featured Replies

  • Replies 55
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம்,

இவ்வளவு நீண்ட அரசியல் உரையை நான் மினக்கட்டு கேட்டது கிடையாது.

வரதராஜப்பெருமாள் அவர்களிடம் ஓர் விடயத்தை மாத்திரம் முன்வைக்கின்றேன். இந்திய இராணுவம் இலங்கையில் கால்பதித்த காலத்தில் ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள், படுகொலைகள், பலாத்கார ஆட்சேர்ப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன? த.வி.பு பற்றிய உங்கள் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க… நீங்கள் தமிழ் மக்களை அப்போது எவ்வாறு நடத்தினீர்கள்? உங்கள் இயக்கத்தின் நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கையை தொலைத்த ஆயிரம், ஆயிரம் இளைஞர்களுக்கு நீங்கள் கூறக்கூடிய ஆறுதல் வார்த்தைகள் எவை? இதற்காக தமிழ் மக்களிடம் நீங்கள் எப்போதாவது உங்கள் இரங்கல்களை தெரிவித்து உள்ளீர்களா? ஈ பீ ஆர் எல் எவ் இயக்கத்தின் அட்டூழியங்கள், மற்றும் தமிழீழ தேசிய இராணுவத்திற்கான பலாத்கார ஆட்சேர்ப்பு இவற்றின் காரணத்தினாலேயே பல ஆயிரம் இளைஞர்கள் வாழ்க்கை வெறுத்து த.வி.பு இல் இணைந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றுக்கு நீங்கள் கூறக்கூடிய பதில் என்ன? நீங்கள்கூட நல்லதொரு உழவன் என்று கூறுவதற்கு இல்லை. ஏன் என்றால் நீங்களும் நல்லதொரு அறுவடையை தமிழ் மக்களிற்கு கொடுக்கவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான பொதுமக்களை சுட்டுக்கொன்றீர்கள். யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள் அகிலன், தேவகுமாரன் தொடக்கம் மத்திய கல்லூரி மாணவன் கோபால் வரை அனைவரும் உங்கள் இயக்கத்தின் கலப்பைமூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், துடிதுடித்து இறந்தார்கள்.

வரதராஜப்பெருமாளின் குறிப்பிட்ட இந்த நீண்ட உரையை முழுமையாக கேட்டேன். உண்மையில் நல்ல பல கருத்துக்கள், சிந்தனைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால்.. மீண்டும் மீண்டும் பூதாகரமாக ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் செய்த அட்டூழியங்களே கண்முன் என் உளத்திரையில் வந்து பேயாட்டம் காட்டுகின்றன. சுமார் இருபது வருடங்களின் பின்னர்கூட ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் மூலம் ஊரில் அனுபவித்த அவலங்களை, பழைய சம்பவங்களை ஜீரணித்துப் பார்க்க முடியாமல் உள்ளது.

நன்றி!

இடம் : நெல்லியடி/யாழ்

காலம் : 1987, இந்திய இராணுவ காலம்

நடிப்பு : வடகிழக்கு முதலமைச்சர்ரும், தமீழ பிரகடனவாதியுமான வரதராசபெருமாள், ஈ.ஆர்.எல்.எப் புரட்சிகர தோழர்கள், இந்திய இராணுவத்தினர்

... அன்று வழமை போல் நெல்லியடிச்சந்தி களை கட்டுகிறது, காலை தெருக்கடைகள் திறந்தவுடன், அங்கு இந்திய இராணுவத்தினரின் பாதுகாப்புக்குள் இருந்து மக்கள் சேவையே மகேசன் சேவையாக செய்து கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல். எப் தோழர்கள், பிரபு/சுபத்திரன் என்பவர்களின் தலைமையில் வெளிக்கிட்டு தெருக்கடை முதலாளிகளிடம் ... இன்று மதியம் தாண்டி முதலமைச்சர், இங்கு வருகிறார், எல்லோரும் நேரத்துக்கு வந்து விட வேண்டும், இல்லையேல் ...???!!! ... வரதராசர் வரும் செய்தியுடன், இந்திய இராணுவத்தினர் போக்குவரத்து தடைகளை போட்டத்தொடங்கினர், அதனை கேள்வியுற்ற அப்பகுதியில் இருந்த இரு புலிகள் வந்து இந்திய இராணுவ காவலரனை நோக்கி சில துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து விட்டு போய் விட்டார்கள்! இந்திய இராணுவத்தினரும் கோபத்தில் கடைகளை அடித்து உடைத்து, கையில் அகப்படுபவர்களுக்கும் சத்துச்சாத்த, நெல்லியடி பகுதி உத்தரவற்ற ஊரடங்கு பகுதியாகிறது! ந்வந்த வரதருக்கோ ஏமாற்றம்!!! ... அவர் அவரின் புரட்சிகர தோழர்களுக்கு கட்டளையிடுகிறார் ... புலிகளுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமாயின், இவ்வூரிலுள்ள சில முக்கியஸ்தகர்களை போட்டு விடுங்கள்!!! அன்புக்கட்டளையை ஆருயிர் தோழர்களுக்கு இட்டு விட்டு இந்திய இராணுவ கெலியில் பறந்து விட்டார்!! அடுத்த நாள் காலை தெருக்கடைகள் திறக்கப்படுகின்றன!! வரதரின் புரட்சிகர தோழர்கள் பிரபு என்பவரின் தலைமையில் வருகிறார்கள் ... நெல்லியடிப்பகுதில் பிரபலமான வர்த்தக நிலையங்களான திருமகள் ஸ்ரோர்ஸ் சிவசோதி, இன்னொரு கடையின் உரிமையாளர் கோப்பிராயம், இன்னொரு சந்தக்கடை உரிமையாளர் சுப்பிரமணியம் போன்றவர்களை அழைத்துக்கொண்டு என் வீடு தாண்டி செல்கையில், என் அம்மா சிவசோதியிடம் ... எங்கை தம்பி போகிறீங்கள்?, பக்கத்தில் யமதூதர்கள் இருப்பதை பார்த்து விட்டு ... இல்லை அக்கா, இதிலை போட்டு வாறம் ... சொல்லி சில யார்கள் நடக்க, என் தாயார் பார்த்து/கதறியழ அவர்களின் வாய்களுக்குள் சுட்டு அவர்கள் கொல்லப்பட்டனர்!! ... நல்ல வேளை அவர்கள் இன்னும் சில வர்த்தகர்களையும் தேடினர், அன்று அவ்வர்த்தகர்களின் நல்ல காலம் யமதூதர்களின் கைகளில் அகப்படவில்லை!! .... இத்தனைக்கும் இந்த ஈ.பி.ஆர்.எல்.எப் புரட்சிகர தலைவர் வரதராசரினால் உத்தரவிடப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட வர்த்தகர்கள் ஒருவரும் புலி ஆதரவாலர்களோ அன்று அவர்களின் குடும்பங்கள் ஆதரவானவர்களோ இல்லை!!!!! ஏன் கொல்லப்பட்டனர்?????????????????????????

இந்த புரட்சிகர யமதூதர் வரதராசபெருமாளின் உத்தரவில் யாழில் பிரபல பொருளியர் ஆசியரான கிருஸ்ணானந்தம்(பெயர் சரியாக நினைவில்லை) கொல்லப்பட்டார், ஏனெனில் ஜயதூதர் வரதருடன் முற்காலத்தில் தனியார் வர்த்தக நிலையங்களில் படிப்பிக்கும்போது ஏற்பட்ட மனத்தாங்கள்/போட்டிகள்!

இப்படி ஓரிருவரா யமதூதர் வரதராசபெருமாள் கூட்டத்தினால் கொல்லப்பட்டவர்கள்??? .. இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த ஓரிரு வருடங்களிலேயே ஆயிரங்கள்!!! முதல் முதலில் நாய் பிடிப்பை(தமித்தேசிய இராணுவமோ??????!!!!) தொடக்கி வைத்த பெருமை இந்த புண்ணியானாக இன்று திரியும் யமதூதரையே சாரும்!!!

நாம் விட்ட தவறுகளில் இந்திய/இலங்கை ஒப்பந்தத்தை ஏற்காதது மிகப்பெரியது! சிலசமயம் இதனை நாம் ஏற்று அன்று இந்திய இணக்க அரசியல் செய்திருப்போமாயின் நாடும் பிறந்திருக்கும்!! ... அவையெல்லாம் ... போய்விட்டது, எம் தவறான கொள்கையினால்!!!

... கொலைகளையே கொளகையாக கொண்ட இந்த யமதூதர் வரதராசபெருமாள் எம்மை மீட்கப்போகிறாரா? இல்லை எம்மெல்லோரையும் தன்னோடு யமலோகம் கூட்டிச் செல்ல தற்போது வந்துள்ளாரா??

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைய்யன்,

நீங்கள் கூறிய சம்பவம் நெல்லியடியிக்கும் நாவலர் மடத்துக்குமிடையிலுள்ள யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியோரத்தில் உள்ள தோட்டப்பகுதியில் நடந்ததா?? ஏன் கேட்கிறேன் என்றால் அப்போது நானும் கரவெட்டியிலிருந்தேன். ஆனால் ஒரு கடை உரிமையாளரும் அவரது மகனும் பிரபுவினால் கொல்லப்பட்டார்கள் என்று சனம் பார்க்கப்போனதை கேள்விப்பட்டேன்.

வரதர் காலத்தில் த்ரீ ஸ்டார் என்கிற இயக்கம் எங்கள் பாடசாலை, டியூஷன் என்று ஒரு இடம் விடாமல் பிள்ளைகளைப் பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். தெய்வாதீனமாக நான் பிடிபடவில்லை. ஆனால் அப்படிப் பிடிபட்ட எனது பல நண்பர்கள் கட்டாயப் பயிற்சிமுகாமிலிருந்து தப்பியோடும்போது சுட்டுக்கொல்லப்பட்டுப் பின்னர் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்று வரதர் ஆக்கள் கதையை முடித்தார்கள்.

உண்மைதான் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றிருக்கலாம். ஆனால் ஜே. ஆர் ஒப்பந்தப்படி சொன்ன எவற்றையுமே செய்யவில்லையே?? அவரை நிர்ப்பந்திக்க இந்தியாவால் முடிந்ததா?? குடியேற்றங்கள், மக்கள் மீதான சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் என்பன இந்திய ராணுவத்தின் பிரசன்னத்தின்போதும் கூடத் தொடர்ந்ததே??

புலிகளுடனான யுத்தம் என்பது தமிழினத்தை அழிப்பதன்மூலம்தான் வெற்றிகொள்ளப்பட முடியும் என்று திக்ச்சித்தும், ராஜீவும் செய்து காட்டியதைப் பார்க்கும்போது இந்தியா தான் செய்த ஒப்பந்தத்தை உண்மையாகவே நடைமுறைப்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

இன்றைக்கு என்ன நடக்கிறது ?? ராஜீவின் கொலைக்குப் பழி வாக்ன்கியாகிவிட்டது, ஆனாலும் தமிழரின் இன்னல் தீர்ந்ததா?? உண்மையாகவே 1987 இல் இந்தியா தமிழர் மேல் அக்கறைப்பட்டுத்தான் ஒப்பந்தம் போட்டதென்றால் இன்றைக்கு அதைச் செய்யாமலிருப்பதேன்?? சிங்களவனுக்குக் காவடி தூக்குவதேன்??

எங்கேயோ உதைக்கிறது நெல்லைய்யன். இந்தியா ஒருபோதுமே எமக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதன் நடவடிக்கைகளெல்லாம் தனது பிராந்திய நலனிலும், பிராந்திய ஆதிக்கத்திலும், பொருளாதார ஆக்கிரமிப்புலுமே அமைக்கப்பட்டிருக்கிறது. 1980 களில் அதன் நடவடிக்கைக்கு கிடைத்த ஒரு சாட்டு ஈழத்தமிழர் விவகாரம். ஆனல் இன்று அது தேவையில்லை. அதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்கள் ஆக்கத்துக்கு நல்லதொரு செய்தி

எங்கேயோ உதைக்கிறது நெல்லைய்யன். இந்தியா ஒருபோதுமே எமக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதன் நடவடிக்கைகளெல்லாம் தனது பிராந்திய நலனிலும், பிராந்திய ஆதிக்கத்திலும், பொருளாதார ஆக்கிரமிப்புலுமே அமைக்கப்பட்டிருக்கிறது. 1980 களில் அதன் நடவடிக்கைக்கு கிடைத்த ஒரு சாட்டு ஈழத்தமிழர் விவகாரம். ஆனல் இன்று அது தேவையில்லை. அதுதான் உண்மை.

.. இந்திய பயங்காவாதிகள்/பிராந்திய பயங்கரவாதிகளின் அடிவருடிகள், கைக்கூலிகள் ... இப்படித்தான் எழுதுவார்கள் ரகுநாதன்! - இது இங்கே ஆராவமுதன் எழுத மறந்த வசனங்கள் ... எப்படித்தெரியுமோவோ??? உதைத்தானே திரும்பத்திரும்ப எழுதுகிறார்! :rolleyes:

அர்ஜுன் போன்றோர் இத்திரியில் சிலவரிகளாவது எழுத மாட்டார்களா?????????

விடுதலை என வெளிகிட்ட அனைத்து இயக்கங்களுமே பிழைகள் விட்டன.இயக்கங்களுக்குள் கொலை,இயக்கங்களுக்கிடையில் சண்டை.

உள்ளதற்குள் ஈ.பீ.ஆர்.எல்.எப் தான் அராஜகமற்ற இயக்கமாக இருந்தது. இந்தியபடை வருகையுடன் அவர்களும் தாங்களும் ஒன்றும் சளைத்தவர்களல்ல என நிரூபித்துவிட்டார்கள்.ஆயுதம் கையில் வந்தவுடன் தன்னைவிட யாருமில்லை என்ற நினைப்பை எடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.

எமது ஆயுதப்போராட்டம் ஒரு அரசியல் பார்வையற்ற வெறும் கொலை அரசியலாகவே உருவெடுத்து வளர்ந்தது.அதனால் இயக்கங்களில் இளைஞர் சேருவதில் இருந்து இயக்கங்களில் இருந்து வெளியேறும் ஒரு நிலையேற்பட்டது.இதனாலேயே கட்டாய ஆட்சேர்ப்பு என்ற நிலை உருவானது.

சரியாக எமது போராட்டம் வழிநடாத்தப்பட்டிருந்தால் எப்போதும் இளஞர்கள் இணைந்திருப்பார்கள் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் போயிருப்பார்கள்.சிங்கள அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தான் கடைசிவரை மக்கள் ஆதரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் இன்று எதோ ஒன்றில் இருந்தாவது விடுதலை கிடைத்தை போல் உணருகின்றார்கள்.புலிகளின் தோல்வி வெளிநாட்டிலுள்ளவர்களை பாதித்த மாதிரி அங்குள்ள மக்களை பாதிக்கவில்லை.

The Mahavamsa Ideology - உண்மையான சரித்திரம்

Since Ceylon's independence in 1948, the rise of "political Buddhism" has seen a radical and uncompromising deviation from traditional Theravada Buddhism. Though Buddhist philosophy eschews violence, in Sri Lanka, monks and political elites have used mytho-history, like the Mahavamsa (Great Chronicle), to espouse ethno-religious supremacy. This is an ideology which contravenes the moral, ethical, and peaceful values of Buddhism.

It has contributed to a Sinhalese Buddhist ultra-nationalism that is now fully embedded and institutionalised as state policy. A policy which justifies dehumanising non-Sinhalese, i.e. Tamils, should doing so be necessary to preserve and propagate the dharma - Buddhist doctrine. Furthermore, it legitimises ethnocentrism and militarism as a means to enforce that ethos.

An underlying tenet of the Mahavamsa ideology is the belief that Sri Lanka is an island exclusive to the Sinhalese majority. It insists that only a Sinhalese Buddhist culture exists (or ought to exist) in Sri Lanka, which suggests that the only valid ethnic identity is a Sinhalese Buddhist identity. This has served as a mandate for a litany of injustice, cultural annihilation and human rights atrocities against the Tamil nation.

இதனால் தான் விடுதலை என தமிழர்கள் 1948ல் இருந்து சனநாயக ரீதியில் போராட்டம் நடந்தது.

"சிங்கள அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தான் கடைசிவரை மக்கள் ஆதரித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் இன்று எதோ ஒன்றில் இருந்தாவது விடுதலை கிடைத்தை போல் உணருகின்றார்கள்." - இதில் இப்படியும் எழுதலாம் பின்னர் வேறு திரியில் போய் "மக்களுக்கு உதவியவர்களுக்கு நன்றியும் சொல்லலாம்" - நாக்கை போல் பேனாவும் வளையும்.

நிச்சயமாக நாம் எந்தசந்தா்ப்பத்திலும் விலைபோகாது நம் இலட்சியத்தை அடைய ஒன்றிணைவோம்.

Edited by akootha

நெல்லைய்யன்,

எங்கேயோ உதைக்கிறது நெல்லைய்யன். இந்தியா ஒருபோதுமே எமக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதன் நடவடிக்கைகளெல்லாம் தனது பிராந்திய நலனிலும், பிராந்திய ஆதிக்கத்திலும், பொருளாதார ஆக்கிரமிப்புலுமே அமைக்கப்பட்டிருக்கிறது. 1980 களில் அதன் நடவடிக்கைக்கு கிடைத்த ஒரு சாட்டு ஈழத்தமிழர் விவகாரம். ஆனல் இன்று அது தேவையில்லை. அதுதான் உண்மை.

ரகுநாதா, ... நாம், எம் வீடு உடைந்த பின் உறவினர் வீட்டில் பெற்றோல் நிலையம் அருகே இருந்தோம், கண் முன் நடந்த கொலைகள் ... இன்னும் மறக்க முடியவில்லை!!!

உங்கள் கேள்விக்கு பதில் எழுதுவோம் என்றால் ஒருபுறம் வேறொரு திரி சூடாக போக அதில் , மற்றொரு புறம் கிருபன் நேற்று ஒரு இணைப்பை ... சாபா நாவலனின் ... இங்கு போட்டு விட்ட்டார்!! நானும் மேலும் இங்கெழுத ... இந்திய கைக்கூலி/இந்திய அடிவருடி எல்லாம் வந்து விழும்!!! அதுதான் ...

... இந்திய வெளியுறவு கொள்கை எமக்கு சர்ர்பாக இருக்கவில்லை என்பதற்கு மேல் .... இந்திய/புலிகளின் யுத்தம் தொடங்கும் முன்னர், இந்திய வெளியுறவு கொள்கை ஒருபோதுமே இலங்கை சார்பாக இருந்ததில்லை!!! இலங்கையில் 70களில் ஜே.வி.பி புரட்சியின் போது கூட இந்திய இராணுவம் இலங்கையின் அழைப்பிற்கு முன்னமே வந்து விட்டதாக கூறுகிறார்கள்.இந்திய/சீன யுத்தம், இந்திய/பாகிஸ்தானிய யுத்தத்தின் போதெல்லாம் கடுமையாக இலங்கை இந்தியாவினால் மிரட்டப்பட்டதாம்!! அத்ற்கு பின்னர் ஈழ விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் இயக்கங்களை உருவாக்கி, அது எமக்கு சார்பானதோ/எதிரானதூ என்பதற்கு மேல் இலங்கைக்கு அழிவை ஏற்படுத்தியது பொருளாதார/இராணுவ/சர்வதேச அளவில் ... ஏன் இலங்கையில் 87க்கு முன்னம் நடைபெற்ற தென்பகுதி தாக்குதல்கள் இந்தியாவிற்கு தெரிந்தோ அல்லது இந்திய அனுசரணையுடனோ தான் நடைபெற்றது!!

சரி இந்திய/இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து இடப்பெற்று விட்டது ... நாம் அதனை ஏற்காவிடினும், இந்தியாவை இலங்கையுடன் நெருங்காதவாறு அரசியல் செய்திருக்கலாம்! சிறிது காலம் அதனை ஏற்று இந்தியாவுடன் இணைந்து, உந்த ஒட்டுக்குழுக்களுக்கு இடமும் கொடுக்காதவாறு .. செயற்பட்டிருந்தால், எம் இந்திய நெருக்கம் தென் இலங்கையில், பின்னர் வந்த இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியை விட படு மோசாமாக இருந்திருக்கும்!! அதனை தடுத்து விட்டோம்!!

சரி அதன் பின் ராஜீவ் காந்தி கொலை உட்பட பல வேண்டத்தகாத அழிவுகள் நடைபெற்று விட்டது!! ஈற்றில் 40000 உயிர்களை இந்தியா பறி கொண்டும் விட்டது!!! இது மறைப்பதற்கில்லை!!! ! ... பின் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டது!!??

சரி இந்தனை அழிவுகளை தந்த இந்தியா எமக்கு எம் வருங்காலத்திலும் எதிரியாக இருக்க வேண்டுமா??? .... இதற்கு சிங்களமே உதாரணம் தருகிறது!! 87இற்கு முன் எவ்வளவோ அழிவுகளை கொடுத்த இந்தியாவை சிங்களம் எவ்வாறு வளைத்தது!!

அதற்கு மேல் இரண்டாம் உலகயுத்த சமயம் ஜேர்மனியை அழித்தொழித்த ஐக்கிய இராட்சிய/அமெரிக்க நாட்டுக்கூட்டுப்படைகல் இன்று ஜேர்மனியின் நெருக்கமான நாடுகளாகவில்லையா??? இதேபோல் யப்பான், தற்போது யூகோஸ்லாவியா, லிபியா, ....?????? நாம் மட்டும்???????

இந்திய வெளிவிவகார கொள்கை மாறவேண்டும், அதற்கு நாம் உழைக்க வேண்டும், இந்திய தேசத்துக்கு நாம் இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்ற நம்பிக்கை ஊட்ட வேண்டும்!!! ... நிச்சயம் ஒருநாள் இந்திய கொளகை எமக்காதரவாக மாறும், அது எமது நலனின் அக்கறையின் பாலினதோ அன்றி இல்லையோ, அது சீனா என்ற வல்லாதிக்கத்தின் பிராத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக .......

Edited by Nellaiyan

புலிகளின் தோல்வி வெளிநாட்டிலுள்ளவர்களை பாதித்த மாதிரி அங்குள்ள மக்களை பாதிக்கவில்லை.

இந்த உண்மையை புலம்பெயர் தமிழர்களால் ஜீரணிக்க முடியவில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று மக்களும் சரி விடுவிக்கப்பட்ட போராளிகளும் சரி மாண்டுபோன மாவீர்கள் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அவர்கள் குறித்து ஆழமான வேதனைகளை சுமந்துகொண்டிருக்கின்றனர் அதே சமயம் புலிகள் தலமை அழிந்ததையிட்டு எவ்வித கவலையும் படவில்லை ஆனால் அது குறித்து சிந்திக்கின்றார்கள். அவ்வளவு தூரம் மக்கள் உள்ளக அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் ஒருவருடன் கதைக்கும் போது கூறினார் ராஜபக்ச மிகக் கொடிய இனவாதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அவர் செய்த நல்ல காரியமெனில் அது புலிகள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் என்றார். விடுவிக்கப்பட்ட போராளிகளிடமும் இந்தக் கருத்து வலுவாக உள்ளது. இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. இவ்வாறான ஒரு முடிவுக்கு மக்கள் வந்ததிற்குக் காரணம் பிரபாகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட குணாதிசயம் குறித்தல்ல மாறாக எமது தேசியவாதம் எம்மையே அழித்து தின்று ஏப்பம் விடும் அடித்தளத்தை கொண்டது. அந்தத் தளத்திற்கே பிரபாகரன் தலைவரானர். இது தவிர்க்கமுடியாத விதியாகியது. தளத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் முடிவு குறித்த கருத்தானதை அதன் தளத்தின் முடிவு குறித்த கருத்தாகவே புரிந்துகொள்ளவேண்டும் அதை விடுத்து குய்யோ முறையோ துரோகி எட்டப்பன் என்று கும்முவதில் எந்த அர்த்தமும் இல்லை.

புலிகளின் தலைமை பற்றிய கவலையை வெளிப்படும் நிலையிலா மக்களை தாயகத்தில் வைத்து இருக்கிறார்கள்...?? புலிகளின் ஒளிக்காட்ச்சியை வைத்திருந்தார் எண்று ஒரு பெண் கைது செய்யப்பட்டார் எனும் செய்தி எப்படியான உண்மையை உங்களுக்கு உணர்த்துகிறது...??? சரி போன தடவை கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னம் கூட்டமைப்பு புலிகளால் ( புலிகளின் தலைமையால்) உருவாக்கப்படவர்கள் தாங்களே எண்று சொல்லி வாக்கு கேட்டபோது உங்களுக்கு எப்படியான செய்தி வந்தடைந்தது.... அப்படி வாக்கு கேக்க வேண்டிய தேவைதான் என்ன...??

சரி புலிகளின் தலைமை அழிந்து விட்டது மக்கள் புலிகளை வெறுக்கிறார்கள் என்பது சரியானால் எதுக்காக அந்த மக்களை சுற்றி பாதுக்காப்பு..?? எதுக்காக நாளாந்த சோதனைகள் எல்லாம்...?? மக்களை சுந்தந்திரமாக விட எது தடுக்கிறது...??

உங்களுக்கு கதை சொல்லும் உங்களின் நண்பர்கள் மட்டுமே ஒட்டு மொத்த தமிழர்கள் அல்ல....!

பலஸ்தீனர்களை வலுவிழக்க செய்ய F-File எனும் தாக்குதல் திட்டம் இஸ்ரேலியர்களால் தீட்டப்பட்டது.... அதை அமுல் படுத்தும் போது மக்களிடம் எப்படியான ஒரு எதிர் வினை ஏற்படுமே அது ஏற்படுத்த படுகிறது...

என்னிடம் இருக்கும் எதையும் நான் இழக்காது தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை நான் தாராளமாக செய்வேன்... என்னிடம் இழக்க ஏதும் இல்லை எனும் போது நான் எதுவும் செய்வேன் என்பதுதான் இண்றைய பலஸ்தீனத்தின் தொனி...

புலிகள் பிழையே செய்ய வில்லை எண்று நான் சொல்ல வரவில்லை... எனக்கும் விமர்சனங்கள் உண்டு ஆனால் உங்களுக்கு நேர் எதிரானவை...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கள் தயா

அவர் இன்னும் பேசட்டும்

சுயமுகங்கள் தெரியாமல் நாம்...........???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கள் தயா

அவர் இன்னும் பேசட்டும்

சுயமுகங்கள் தெரியாமல் நாம்...........???

என்ன சுய முகம், இதுதான் அவரது சுய முகம், இவ்வளவு காலமும் விளங்காது இருந்து விட்டீர்கள், இதற்காகவே பயிற்றப்படவர்கள் அவர்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

எல்லோரையும் அரவணைக்கணும் என்று எவரிலும் சந்தேகப்படமாட்டேன்

ஆனால் முகம் தெரிந்துவிட்டால்

கொப்பன் ஆனாலும் மறந்துவிடமாட்டேன்

பார்க்கலாம்

புலியை வைத்து புண்ணாக்கு விற்பவர்களுக்கு அப்படித்தான் இருக்கும்.

தலையங்கத்தை ஒருக்கா பாருங்கோ.

ஒருக்கா நீங்களே நாட்டுக்கு போட்டுவாங்கோ.

பின்னர் யார் சொல்வது உண்மையென விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புத்தக கடைக்கு சென்று புத்தகம் வாங்க்கப்போகும் போது புத்தகத்தினை தெரிவு செய்வது எப்படி?

புத்தகம் முழுக்க வாசிக்க வேண்டியதில்லை அல்லது அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்த்து ஏமாந்து போகவும் தேவையில்லை,

முகவுரையும்,அணிந்த்துரயையும் வாசித்து அடுத்த முறையாவது சரியான புத்தகங்களை தேர்வு செய்யுங்கள் கள உறவுகளே!

  • கருத்துக்கள உறவுகள்

ஜீரிஎன்னிற்காக தீபச்செல்வன் :

80 களில் நடந்த தமிழ் தேசிய இராணுவ உருவாக்கதில் பொழுது நீங்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதைப்போல பின்னர் தமீழ விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடும் பொழுது அதை நீங்கள் கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்? இந்த இரண்டு விடயங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு?

வரதராஜப்பெருமாள் :

முதல் கட்டமாக நாங்கள் பலபேரை இணைத்திருந்தோம். மூவாயரம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தில் அந்த மூவாயிரம் பேரை அங்கரித்து உடனடியாக ஒரு தொண்டர் படையை அமைக்க திட்டமிட்டோம். குடிமக்கள் படை எனறு அதற்கு பெயர் வைத்தோம். அது சட்ட விரோதமான படையல்ல. அதற்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் நெருக்கடி ஒன்று ஏற்பட்ட பொழுது மீண்டும் நாங்கள் அரசாங்கததிடம் கேட்டோம். அப்பொழுது 64 ஆயிரம் பேர் இராணுவத்தில் இருந்தார்கள். நாங்கள் அதில் 20 ஆயிரம் பேரை தமிழ் பேசும் மக்கள் சார்பாக கேட்டோம். அப்பொழுது நாங்கள் கணக்கு பார்த்த பொழுது .06 வீதம்தான் தமிழர்கள் இராணுவத்தில் இருந்தார்கள். அப்பொழுது 27 ஆயரம் பேர் இலங்கையல் பொலிஸ் பதவியில் இருக்கும் பொழுது 9 ஆயிரம் பேரையாவது தமிழ் பேசும் மக்கிளல் இருந்து சேர்த்துக் கொள்ள கோரியிருந்தோம். அவர்கள் அதை மறுக்க முடியாது ஒத்துக் கொண்டார்கள். ஆனால் எங்களிடம் ஆட்கள் இல்லை. அதேவேளை மாநல ஆட்சிக்கும் மாநில ஆட்சி அமைக்க பொலிஸ் படைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டன. இதற்காக ஆட்களை விரைவாக திரட்ட வேண்டிய தேவை இருந்தது. அது மாகாண சபையின் முடிவாக இருக்கவில்லை. அது கட்சியின் முடிவாகவே பலவநதாமாக ஆட்சேட்பு நடந்தது.

பலவந்தமாக ஆட்களைப் பிடிப்போம். பிறகு பிரச்சாரம் செய்வோம். அதில் விலகுபவர்கள் விலகலாம். அப்படியான முயற்சியை பல கட்சிகள் செய்தன. அன்று தமிழ் மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசுடன் எதிர் கொள்ளக்கூடிய மாநில படையை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். அதில் பல நடமுறைத் தவறுகள் உள்ளன. யதார்த்தத்தில் அப்படி வைத்து செயற்படுத்த முடியுமா என்பது பின்னர் பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது.

ஆனால் விடுதலைப் புலிகள் இளைஞர்களைப் பிடித்து இரண்டு வாரம் பயிற்சி கொடுத்து போர்க்களத்தில் அவர்களை முன்னரண்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிநாட்டுக்காக போராடுகிறோம் என்பதற்காக பொருத்தமான போர் வீரர்களாக மாற்றாமல் முன்னுக்கு போ என முன்னுக்கும் மரணம் பின்னுக்கும் மரணம் என நிலமை இருந்தது. அதை எதிர்த்து பெற்றோர்கள் போன பொழுது முன்னர் பெற்றோர்கள் போன பொழுது பல இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இங்கு பெற்றோர்களே விடுபட முடியாமல் போனார்கள். இறந்த முப்பதாயிரம் பேரில் 29 ஆயிரம் பேர்தான் தமீழம் கிடைக்கும் என நம்பியிருப்பார்கள். தமீழம் கிடைக்காது என்று நம்பாதவர்களாலேயே இவர்கள் இப்படி கையாளப்பட்டார்கள். இது இரண்டும் ஒரே விடயமாக குறிப்பிட முடியாது. இதில் முழுச் சமுதாயமுமே அவலத்தை சந்தித்தது. நாங்கள் செய்த பரிசோதனை வேறு இப்படியான பரிசோதனை வேறு. இப்படியான பரிசோதனைகள் இனியும் நடக்க கூடாது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22700&cat=1

தமிழ் மக்களை பலவந்தமாக பிடித்து பயிற்சி கொடுத்து தமிழ் மக்களின் எதிரிகளுக்காக போரிட விட்டு தமிழ் மக்களை கூட ஈவிரக்கமிலாமல் கொலை செய்யும் படி ஏவிவிட்டவர்கள் மற்றும் புலி போராளிகள்,ஆதரவாளர்களை காட்டிக்கொடுத்தது மட்டுமில்லாமல் தெரு தெருவாக கொலை செய்தவர்களும் இவர்கள் தான். ஏன் மண்டையன் குழுவுக்கு தலைமை தாங்கியவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் இவை எல்லாவற்றையும் நடாத்தியவர் சாட்சியாக உயிருடன் உள்ளார்.

புலிகளின் தலைமை பற்றிய கவலையை வெளிப்படும் நிலையிலா மக்களை தாயகத்தில் வைத்து இருக்கிறார்கள்...?? புலிகளின் ஒளிக்காட்ச்சியை வைத்திருந்தார் எண்று ஒரு பெண் கைது செய்யப்பட்டார் எனும் செய்தி எப்படியான உண்மையை உங்களுக்கு உணர்த்துகிறது...??? சரி போன தடவை கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னம் கூட்டமைப்பு புலிகளால் ( புலிகளின் தலைமையால்) உருவாக்கப்படவர்கள் தாங்களே எண்று சொல்லி வாக்கு கேட்டபோது உங்களுக்கு எப்படியான செய்தி வந்தடைந்தது.... அப்படி வாக்கு கேக்க வேண்டிய தேவைதான் என்ன...??

சரி புலிகளின் தலைமை அழிந்து விட்டது மக்கள் புலிகளை வெறுக்கிறார்கள் என்பது சரியானால் எதுக்காக அந்த மக்களை சுற்றி பாதுக்காப்பு..?? எதுக்காக நாளாந்த சோதனைகள் எல்லாம்...?? மக்களை சுந்தந்திரமாக விட எது தடுக்கிறது...??

உங்களுக்கு கதை சொல்லும் உங்களின் நண்பர்கள் மட்டுமே ஒட்டு மொத்த தமிழர்கள் அல்ல....!

பலஸ்தீனர்களை வலுவிழக்க செய்ய F-File எனும் தாக்குதல் திட்டம் இஸ்ரேலியர்களால் தீட்டப்பட்டது.... அதை அமுல் படுத்தும் போது மக்களிடம் எப்படியான ஒரு எதிர் வினை ஏற்படுமே அது ஏற்படுத்த படுகிறது...

என்னிடம் இருக்கும் எதையும் நான் இழக்காது தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை நான் தாராளமாக செய்வேன்... என்னிடம் இழக்க ஏதும் இல்லை எனும் போது நான் எதுவும் செய்வேன் என்பதுதான் இண்றைய பலஸ்தீனத்தின் தொனி...

புலிகள் பிழையே செய்ய வில்லை எண்று நான் சொல்ல வரவில்லை... எனக்கும் விமர்சனங்கள் உண்டு ஆனால் உங்களுக்கு நேர் எதிரானவை...!

எனது கருத்து வேறானது.

இந்த உண்மையை புலம்பெயர் தமிழர்களால் ஜீரணிக்க முடியவில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று மக்களும் சரி விடுவிக்கப்பட்ட போராளிகளும் சரி மாண்டுபோன மாவீர்கள் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அவர்கள் குறித்து ஆழமான வேதனைகளை சுமந்துகொண்டிருக்கின்றனர் அதே சமயம் புலிகள் தலமை அழிந்ததையிட்டு எவ்வித கவலையும் படவில்லை ஆனால் அது குறித்து சிந்திக்கின்றார்கள். அவ்வளவு தூரம் மக்கள் உள்ளக அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் ஒருவருடன் கதைக்கும் போது கூறினார் ராஜபக்ச மிகக் கொடிய இனவாதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அவர் செய்த நல்ல காரியமெனில் அது புலிகள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் என்றார். விடுவிக்கப்பட்ட போராளிகளிடமும் இந்தக் கருத்து வலுவாக உள்ளது. இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. இவ்வாறான ஒரு முடிவுக்கு மக்கள் வந்ததிற்குக் காரணம் பிரபாகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட குணாதிசயம் குறித்தல்ல மாறாக எமது தேசியவாதம் எம்மையே அழித்து தின்று ஏப்பம் விடும் அடித்தளத்தை கொண்டது. அந்தத் தளத்திற்கே பிரபாகரன் தலைவரானர். இது தவிர்க்கமுடியாத விதியாகியது. தளத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் முடிவு குறித்த கருத்தானதை அதன் தளத்தின் முடிவு குறித்த கருத்தாகவே புரிந்துகொள்ளவேண்டும் அதை விடுத்து குய்யோ முறையோ துரோகி எட்டப்பன் என்று கும்முவதில் எந்த அர்த்தமும் இல்லை.

நான் குறிப்பிட்டது போராட்த்தின் முடிவை அல்ல அதன் தளத்தை. போராட்டம் எந்த தளத்தில் நடைபெற்றதோ அதன் முடிவு அவசியமானது. ஏனெனில் அது சிங்களப் பேரினவாதத்திற்கு ஒப்பானது அது எம்மை நாமே அழித்துக்கொள்ளும் அடிப்படையில் உருவானதளம். அத் தளத்திலேயே போராட்டம் நடந்தது. அதற்கே பிரபாகரன் தலைவராக இருந்தார்.

இந்தத் தளத்தில் ஒருவனை ஒருவன் எமக்குள் போட்டுத் தள்ளுவதற்கான அடிப்படை இருக்கின்றது. இந்தத் தளத்தில் மத ஐக்கியத்துடன் இனமாக வடிவம் பெற முடியாது. இந்தத் தளத்தில் நம்பிக்கை கொள்ள முடியாமல் வேறு தேசங்களுக்கும் வேறு தளங்களுக்கும் நகர்வதற்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கின்றது. சாதியம் இருக்கின்றது பிரதேசவாதம் இருக்கின்றது வேற்றுமை வெறுப்பு அனைத்தும் இருக்கின்றது. இவ்வளவத்தையும் வைத்துக்கொண்டு இந்தத்தளத்தில் இருந்து சிங்களப்பேரினவாதத்தை வெற்றிகொள்ளமுடியாது என்பதை உணரும்போது இந்தத் தளம் முடிவுக்குவருவது அவசியமானது என சிந்திக்கும்போது புதிய தளங்களுக்கான உருவாக்கம் கருக்கொள்கின்றது.

விசுகு மற்றும் சித்தன்

உங்கள் கருத்துக்கள் அச்சுறுத்தலானவை. ஆனால் நான் எழுதியதுக்கு இது பொருந்தாது.

எங்களுக்கு சுய முகங்கள் இல்லை. ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு முகம். இந்து முகம் இஷ்லாமிய முகம் யாழ்பாணத்து முகம் கிழக்கு முகம் என்னும் சாதிய முகம் புத்திஜீவி முகம் என்னும் என்னும் துரோகி தியாகி தேசியவாதி வெளிநாட்டு முகம் என ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு முகம் ஆனால் எமக்கானது ஒரு முகம் அது தமிழன் என்ற முகம். டக்ளஸ் கருணா சங்கரி பிரபாகரன் பத்மநாபா என எல்லோரும் முதலில் தமிழன் என்பதை ஏற்றுக்கொண்டு பின்னர் முகங்களை பிரிக்கலாம். முகங்களை பிரித்த பின் தமிழனை தேடமுடியாது. தமிழன் காணமல் போனது இப்படித்தான்.

உண்மைதான்

எல்லோரையும் அரவணைக்கணும் என்று எவரிலும் சந்தேகப்படமாட்டேன்

ஆனால் முகம் தெரிந்துவிட்டால்

கொப்பன் ஆனாலும் மறந்துவிடமாட்டேன்

பார்க்கலாம்

இந்த ஆத்திரம் சார்ந்த குணம்தான் ஒருவனை ஒருவன் போட்டுத்தள்ளுவதற்கான அடிப்படை. ஒருவனை போட்டுத்தள்ளும் போது குறைந்தது 200 நபர்கள் (குடும்பம் நண்பர்கள் சொந்தங்கள் ஊர்வட்டம் என) போட்டுத்தள்ளும் அமைப்பு மீது நம்பிக்கை இழக்கின்றார்கள். இயக்கங்கள் தங்களுக்குள் தாங்கள் எடுத்த வன்முறை நடவடிக்கை என்பது இலங்கை அரசபடைகளுடன் எடுத்த வன்முறை நடவடிக்கையை விட அதிகமானது. நாற்பது லட்சம் மக்களுக்கான விடுதலைப்போரில் எத்தனை விதமான அதிருப்திகளை நம்பிக்கையீனங்களை ஒவ்வொருவனும் தன்னகத்தே கொண்டுள்ளான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

கருணா தரப்பினர் தெண்டுநிறுவனப்பணிப்பெண்களை எவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக்கொன்றனர் என்பதை படித்திருப்பீர்கள். இறுதி யுத்ததில் தப்பியோடிய மக்களுக்கு எதிராக புலிகளின் துப்பாக்கிகளும் வெடித்தது. என்னும் டக்ளஸ் ஆட்கள் நிறைய செய்தார்கள். சிங்களவனும் நிறைய செய்தான். சிங்களவன் வேற இனம். ஆனால் எமக்குள் நடப்பதற்கான அடிப்படை என்ன? ஒரு தமிழனை என்னொருவன் வெறுக்கின்றபோது நிராகரிக்கின்றபோது உயிர்பறிக்கத் துணிகின்றபோது ஏன் நானும் அவனும் தமிழன் என்று சிந்திக்கமுடியாமல் உள்ளது? இதற்கான அடிப்படை என்ன? துரோகம் செய்கின்றான் துரோகி என்றால் ஏன் அப்படி நடக்கின்றது? அதற்கான அடிப்படை என்ன?

எனது உறவினர்கள் சிலர் விமானக்குண்டுவீச்சுக்கு இலக்காகி இறந்துள்னர். சிலர் இறுதி யுத்தத்தில் இராணுவக்கட்டுப்பாட்டுக்கு தப்பியோடும் போது புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சிலர் புலிகளில் இருந்து மரணமடைந்துள்னர். இவற்றின் பாதிப்புகளுக்கு வெளியில் நின்று கருத்தெழுத முடியாது.

நான் குறிப்பிட்டது போராட்த்தின் முடிவை அல்ல அதன் தளத்தை. போராட்டம் எந்த தளத்தில் நடைபெற்றதோ அதன் முடிவு அவசியமானது. ஏனெனில் அது சிங்களப் பேரினவாதத்திற்கு ஒப்பானது அது எம்மை நாமே அழித்துக்கொள்ளும் அடிப்படையில் உருவானதளம். அத் தளத்திலேயே போராட்டம் நடந்தது. அதற்கே பிரபாகரன் தலைவராக இருந்தார்.

இந்தத் தளத்தில் ஒருவனை ஒருவன் எமக்குள் போட்டுத் தள்ளுவதற்கான அடிப்படை இருக்கின்றது. இந்தத் தளத்தில் மத ஐக்கியத்துடன் இனமாக வடிவம் பெற முடியாது. இந்தத் தளத்தில் நம்பிக்கை கொள்ள முடியாமல் வேறு தேசங்களுக்கும் வேறு தளங்களுக்கும் நகர்வதற்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கின்றது. சாதியம் இருக்கின்றது பிரதேசவாதம் இருக்கின்றது வேற்றுமை வெறுப்பு அனைத்தும் இருக்கின்றது. இவ்வளவத்தையும் வைத்துக்கொண்டு இந்தத்தளத்தில் இருந்து சிங்களப்பேரினவாதத்தை வெற்றிகொள்ளமுடியாது என்பதை உணரும்போது இந்தத் தளம் முடிவுக்குவருவது அவசியமானது என சிந்திக்கும்போது புதிய தளங்களுக்கான உருவாக்கம் கருக்கொள்கின்றது.

எங்களுக்கு எதிரிகளை கையாளும் திறமை இருந்தது... ஆனால் எதிரியோடு சேர்ந்த துரோகிகளை எப்படி கையாண்டு இருக்க வேண்டும் என்கிறீர்கள்...?? பிரபாகரன் தான் தோண்றி தனமான ஒடுக்கப்பட்ட மக்களை வதைக்கும் சிந்தனை போல காட்ட முயலும் நீங்கள் சொல்லுங்கள்.... இந்த வரதராஜ பெருமாளை புலிகள் சுட்டு இருக்க வேண்டும் எண்று விரும்பவில்லையா...??

புலிகளின் போராளிகளை இதே வரதராஜ பெருமாள் கொலை செய்ததை புலிகள் மன்னிக்கலாம்... ஆனால் மக்களுக்கு செய்த கொடுமைகளை யார் மன்னிப்பார்...?? மக்களை காக்க போராடுகிறோம் எண்று ஆட்சியில் ஏறி செய்த கொலைகளுக்கு யார் பொறுப்பு யார் தண்டனை கொடுப்பது...

புலிகள் தங்களுக்கு போட்டியாக இருந்த யாரையும் கொல்லவில்லை... தங்களுக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாகவும், துன்பம் கொடுத்தவர்களை தான் கொலை செய்தனர்...

சரி உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா புலிகளால் கொல்ல பட்ட ஒரு மகானை....?? அல்லது தமிழர்களுக்கு எந்த கெடுதலும் செய்யாத ஒரு தமிழனை...??

புலிகள் எதிர்த்தவனை எல்லாம் கொல்வதாக இருந்தால் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எண்று தொடக்கி சம்பந்தன், எண்டது வரையான நாடாளு மண்ற உறுப்பினர்களும், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, எண்டு யாரும் உயிரோடை இருந்து இருக்க முடியாது...

கொலை செய்தது யாரை மாணிக்க வாசகன் , ராசிக், மோகன், இப்படியான கேடு கெட்டதுகளை தானே...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்டது போராட்த்தின் முடிவை அல்ல அதன் தளத்தை. போராட்டம் எந்த தளத்தில் நடைபெற்றதோ அதன் முடிவு அவசியமானது. ஏனெனில் அது சிங்களப் பேரினவாதத்திற்கு ஒப்பானது அது எம்மை நாமே அழித்துக்கொள்ளும் அடிப்படையில் உருவானதளம். அத் தளத்திலேயே போராட்டம் நடந்தது. அதற்கே பிரபாகரன் தலைவராக இருந்தார்.

இந்தத் தளத்தில் ஒருவனை ஒருவன் எமக்குள் போட்டுத் தள்ளுவதற்கான அடிப்படை இருக்கின்றது. இந்தத் தளத்தில் மத ஐக்கியத்துடன் இனமாக வடிவம் பெற முடியாது. இந்தத் தளத்தில் நம்பிக்கை கொள்ள முடியாமல் வேறு தேசங்களுக்கும் வேறு தளங்களுக்கும் நகர்வதற்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கின்றது. சாதியம் இருக்கின்றது பிரதேசவாதம் இருக்கின்றது வேற்றுமை வெறுப்பு அனைத்தும் இருக்கின்றது. இவ்வளவத்தையும் வைத்துக்கொண்டு இந்தத்தளத்தில் இருந்து சிங்களப்பேரினவாதத்தை வெற்றிகொள்ளமுடியாது என்பதை உணரும்போது இந்தத் தளம் முடிவுக்குவருவது அவசியமானது என சிந்திக்கும்போது புதிய தளங்களுக்கான உருவாக்கம் கருக்கொள்கின்றது.

இந்த ஆத்திரம் சார்ந்த குணம்தான் ஒருவனை ஒருவன் போட்டுத்தள்ளுவதற்கான அடிப்படை . ஒருவனை போட்டுத்தள்ளும் போது குறைந்தது 200 நபர்கள் (குடும்பம் நண்பர்கள் சொந்தங்கள் ஊர்வட்டம் என) போட்டுத்தள்ளும் அமைப்பு மீது நம்பிக்கை இழக்கின்றார்கள்.

துரோகம் செய்கின்றான் துரோகி என்றால் ஏன் அப்படி நடக்கின்றது? அதற்கான அடிப்படை என்ன?

எனது உறவினர்கள் சிலர் விமானக்குண்டுவீச்சுக்கு இலக்காகி இறந்துள்னர். சிலர் இறுதி யுத்தத்தில் இராணுவக்கட்டுப்பாட்டுக்கு தப்பியோடும் போது புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சிலர் புலிகளில் இருந்து மரணமடைந்துள்னர். இவற்றின் பாதிப்புகளுக்கு வெளியில் நின்று கருத்தெழுத முடியாது.

ஐயா 200 பேர் மனமுடைந்தார்கள் என்றால் அவர்களின் மனநிலை தன் குடும்பம் சார்ந்து இருந்தது என்பது தான் காரணமே தவிர கொடுக்கப்பட்ட தண்டனையில் குற்றமில்லை.

விமானக்குண்டு வீச்சுக்கும் புலிகளின் நடவடிக்கைதான் காரணம் என்பதாக முடிப்பீர்கள் போலுள்ளது. நடத்துங்கள்

தண்டனைக்கு பழிவாங்கும் கூட்டத்தையும்

அது என்ன உங்கள் கொள்கை

ஆ ... தமிழர்கள் என்றால் போதும் எல்லோரும் கூடியிருந்து கும்பிடுபோட்டு சிங்களவனிடம் யாசித்து அவன் தருவதை பெறுங்கள். தற்போது இடம் காலியாகத்தானே இருக்கிறது. நாங்கள் இதையெல்லாம் செய்து பார்த்து முடியாத நிலையிலேயே ஆயுதம் ஏந்திய வரலாற்றை மறக்கவில்லை. அது தோல்வியில் இன்று முடிந்ததற்கு நாங்கள் காரணமல்ல. அதை நாம்புரிந்து வைத்துள்ளோம். நீங்கள் பூச்சியத்திலிருந்து புரட்சி என்றும் ஐனநாயகம் என்றும் சமதர்மம் என்றும் சோசலிசம் என்றும் ஆரம்பித்து .........

30 வருடங்களின் பின் என்னைப்போல் வந்து நின்று எழுதுங்கள். அதற்கு தங்களைப்போல் ஒன்று வந்து நின்று மீண்டும் புதுவழி எடுத்துயம்பும். ஆமாம் போட்டு மீண்டும் 30 வருடம்.................???

ஆமென்... ( :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எதிர்த்தவனை எல்லாம் கொல்வதாக இருந்தால் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எண்று தொடக்கி சம்பந்தன், எண்டது வரையான நாடாளு மண்ற உறுப்பினர்களும், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, எண்டு யாரும் உயிரோடை இருந்து இருக்க முடியாது...

கொலை செய்தது யாரை மாணிக்க வாசகன் , ராசிக், மோகன், இப்படியான கேடு கெட்டதுகளை தானே...??

ஏன் அங்கெல்லாம் போவான்

இவரே உயிரோட இருந்து தானே தற்போது இப்படி எழுதுகிறார் என்றால் புலிகள் எவ்வளவு நல்லவர்கள்

புலிகள் எவ்வளவு பொறுமை சாலிகள் என்று புரியவில்லையா...???

நான் குறிப்பிட்டது போராட்த்தின் முடிவை அல்ல அதன் தளத்தை. போராட்டம் எந்த தளத்தில் நடைபெற்றதோ அதன் முடிவு அவசியமானது. ஏனெனில் அது சிங்களப் பேரினவாதத்திற்கு ஒப்பானது அது எம்மை நாமே அழித்துக்கொள்ளும் அடிப்படையில் உருவானதளம். அத் தளத்திலேயே போராட்டம் நடந்தது. அதற்கே பிரபாகரன் தலைவராக இருந்தார்.

எங்களது அரசியல் பொறுப்பாளர் திலீபன் அண்ணா தீர்க்கதரிசனமாக சொன்னதை முடிந்தால் கேட்டு பயன் பெறுங்கள்... இதை விட உங்களுக்கு பதில் தர வேறு யாரும் வர முடியாது...

இது விடுதலை புலிளின் தலைமையின் கருத்து, இதுதான் எனது தீர்க்கமான கருத்து... இதுதான் நடந்தது இதுதான் நடக்கின்றது...

http://kuma.lunarservers.com/~pulik3/2010/Thilipan/THELPAN%20%20Kodaai%20munbakka%20urai%201987.mp3

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.