Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Breaking News

Featured Replies

ஒற்றுமை ப்ளீஸ்!

நாங்கள் புலிக்கொடி பிடிக்கிறதோ இல்லையோ என்பதில குழம்பி போயிருக்க அந்தாள் சிரிச்சு கொண்டே ஓடி தப்ப போகுது.

புலிக்கொடி பிடிக்கோணும் எண்டு ஒற்றை காலில நிக்கிற அண்ணை மார் பெட் சீட் அளவுக்கு பெரிசா பிடிக்காமல் ஒரு சின்ன கொடியா எடுத்து பிடியுன்கோவன்.

எங்களின்ட இன்றைய பிரச்சினை இப்போது சேனல் 4 மற்றும் விக்கி லீக்ஸ் மூலமாக அம்பலமாகி இருக்கும் உண்மைகளை வைத்து லண்டனில Dorchester Hotel, 53 PARK LANE, LONDON, W1A 2HJ இல முகாம் போட்டு இருக்கும் மூதேவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது . கொடி பிரச்சினை பிறகு பாக்கலாம்.

  • Replies 72
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கனடாவில் தமிழீழக்கொடி (அதென்ன மண்ணங்கட்டிக்கு வரிக்கு வரி புலிக் கொடி என்கின்றீர்கள்) ஆர்பாட்டங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையை உணர்த்தி நின்றது நாங்கள் செய்கின்ற சிங்கள அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சிங்கள அரசு, புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகச் சித்திகரிக்க முனைந்ததைத் தடுப்பதற்காகவே.அவ்வாறன சில செயற்களைகளைச் சிங்கள அரசு செய்தது மட்டுமல்லாமல், பாதுகாப்பு வலையம் என்ற பகுதியை உருவாக்கி அதில் மக்களைக் கொன்றபடி புலிகள் மீது குற்றம் சுமத்தி வந்தது.

எனவே அந்த சமயத்தில் எம் வீதிப் போராட்டங்களில் சிங்கள அரசினைக் குற்றவாளியாக அடையாளம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதனால் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் சிங்கள அரசை இனம் காட்டும் விதமாக நடக்க வேண்டி ஏற்பட்டது. சிங்களக் கொடியும் எரிக்கப்பட்டது. எனவே அக்காலப்பகுதியில் தமிழீழக் கொடியை முன்நிறுத்தியதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

மற்றும்படி எங்களின் ஆர்ப்பாட்டத்தில் புலிச்சார்பாக நினைத்துத் தான் எங்களுக்கு உதவ அவர்கள் வரவில்லை என்பது பொய். எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கான காலம் குறுகியதாக இருந்ததாலும், முந்திய காலப்பகுதியில் அதற்கான கட்டுமானங்களை நாங்கள் வளப்படுத்தமையாலும், எம்மால் எதிர்பார்த்த தாக்கத்தினை அரசியல்மட்டத்தில் ஏற்படுத்த முடியவில்லை. இப்போதைய நிலையில் புலத்தமிழரின் அரசியல், மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களில் செயற்படுத்தல் தொடர்பான தேவை அதிகமாக உணரப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இருக்கிறது.அதை உணர்ந்து எழதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நடக்க வேனும் நடக்கும்,

கொலை வெறியன் எவளவு நாளுக்குத் தான் உயர்ந்து நிக்கிறது , அவன்ட போலி முகம் கிழிய அவன்ட வாழ்க்கையும் முடியும் , :wub::icon_idea:

மகிந்தவின் புகழ் கீழே இறங்க இந்தியன் அவனை மேலே அனுப்பி வைப்பான்..! :rolleyes:

  • தொடங்கியவர்

A demonstration is scheduled today (on Dec 2nd) opposite the Dorchester Hotel (53 PARK LANE, LONDON, W1A 2HJ, from 4pm till 8pm) in London where the war criminal srilankan President was reportedly staying.

இங்கு நாங்கள் பிரிந்து நிற்பது,

சிலர் தமிழனின் விடிவிற்காய் ,சிலர் புலிகளின் இருப்புக்காய் .

கோமணமே போய் விட்டது இப்போ வந்து பட்டு வேட்டி கதை கதைக்கின்றீர்கள்.குழந்தைபிள்ளைகள் மாதிரி உது தமிழீழகொடி,உது புலிக் கொடி,உது பாண்டியனின்ரை கொடி யார் இவற்றை பற்றி அலட்டிக்கொள்கின்றார்கள்.30 வருடம் போராட்டம் நடந்து முடிந்தும் விட்டது.இப்ப வந்து குறுகிய காலம் கட்டுமானங்களி வளப்படுத்தவில்லை என்றால் என்ன மாதிரி.

செழியனின்"வானத்தை பிளந்த கதை" இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.போராட வெளிக்கிட்டவர்களின் மனப்பாங்கையும் அதன் தேவையையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளுங்கள்.

மீண்டும் நாங்கள் போக வேண்டிய தூரம் அதிகம் ஆகிவிட்டது. தமது இருப்பிற்காய் பலர் அரசியல் நடாத்துகின்றார்கள்.அவர்களுக்கு எடுப்பார் கைபிள்ளை ஆகிவிடாதீர்கள்.பலர் இன்று வருந்துவது இதனாலேயே.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் புகழ் கீழே இறங்க இந்தியன் அவனை மேலே அனுப்பி வைப்பான்..! :rolleyes:

கடவுள் அவனுக்கு குடுக்க போர அழிவை இத்தாலி எருமை சொனியா என்ன யாராலும் தடுக்க முடியாது.. :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

செழியனின்"வானத்தை பிளந்த கதை" இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் கதைகளை வாசியுங்கோ......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் கொடி எதிலும் தமிழ் ஈழ கொடி

aaaaaaes7.jpg

Untitled-1jpghhhhhh.jpg

20070612016.jpg

557981_561.jpg

20070417015.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அவனுக்கு குடுக்க போர அழிவை இத்தாலி எருமை சொனியா என்ன யாராலும் தடுக்க முடியாது.. :rolleyes::icon_idea:

நான் "மேலே" எண்டு சொன்னது பரலோகத்தை..! :wub:

கனேடிய பிரசை கூட வெட்கப்பட வேண்டிய செயலை அதன் வீரர்கள் செய்ததாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The latest probe follows an earlier investigation into allegations that a member of JTF2 shot and killed an Afghan who was surrendering in 2006.

http://www.thestar.com/news/canada/article/900329--secret-military-unit-investigated-for-actions-in-afghanistan-cbc?bn=1

கனடாவிலும் மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளிலும் விசாரணை நடக்கும், ஏனெனில் அதன் தலைமைகள் யுத்த குற்றங்களை எதிர்ப்பவை. ஆனால் சிங்களம் அவ்வாறு இல்லை.

தலைமையும் சேர்ந்தே குற்றங்கள் புரிகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நான் "மேலே" எண்டு சொன்னது பரலோகத்தை..! :rolleyes:

டங்கு....

பரலோகம் என்றால்.... இரண்டு இருக்குது.

சொர்க்க லோகமா? நரக லோகமா? :icon_idea:

இங்கு நாங்கள் பிரிந்து நிற்பது,

சிலர் தமிழனின் விடிவிற்காய் ,சிலர் புலிகளின் இருப்புக்காய் .

கோமணமே போய் விட்டது இப்போ வந்து பட்டு வேட்டி கதை கதைக்கின்றீர்கள்.குழந்தைபிள்ளைகள் மாதிரி உது தமிழீழகொடி,உது புலிக் கொடி,உது பாண்டியனின்ரை கொடி யார் இவற்றை பற்றி அலட்டிக்கொள்கின்றார்கள்.30 வருடம் போராட்டம் நடந்து முடிந்தும் விட்டது.இப்ப வந்து குறுகிய காலம் கட்டுமானங்களி வளப்படுத்தவில்லை என்றால் என்ன மாதிரி.

கொடி என்பது ஒரு இனத்தின் அடையாளம்... ஒரு தேசிய இனமாக போராடுகிறீர்களா இல்லை ஒண்டும் இல்லாத பனாதைகளா என்பது தான் இப்ப பிரச்சினையே... !

எந்த அடையாளமும் இல்லாமல் போய் நிண்டு மகிந்தவை பிடி எண்டா போதுமா...?? அதன் பின்னரான உங்களுக்கான நீதியையும், எதிர்காலத்தையும் பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டியளோ...??

அரசியல் தெரியும் எண்டு கதை விட்டால் போதாது...

நீங்கள் கதைகளை வாசியுங்கோ......

அறிவு இருக்கிறவனுக்கு யாரின் அறிவுரையும் தெளிவு படுத்தலும் தேவை இல்லை... ஆனால் இல்லாதவை இப்படி படிச்சு தான் தெரிஞ்சு கொள்ள வேணும்... ஆனாலும் படிச்சதை பன்னாடையாலை வடி கட்டி சக்கையை மட்டும் தூக்கிப்பிடிக்கிறதுக்கு படிக்காமலே இருக்கலாம்...

  • தொடங்கியவர்

.... எத்தனை வீதி மறிப்புகளில் கூட கண்களை திறவாத ஊடகங்கள் ... நேற்று ... சிலர் ஹீத்ரோ விமான நிலையத்தில், ஓர் முன்னேற்பாடுகளும் அற்ற நிலையில், திரண்டு ... பலர் நினைத்தோம், அங்கு நடக்குமா? விடுவானா?? ... இல்லை ஏதாவது பலன் கிடைக்குமா????? ...... ஆனால் ... இதுவரை புலத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் அடைந்திராத ... முன்பு சொல்ல முற்பட்டும் முடியாததை ... சொல்லி முடித்திருக்கிறார்கள்!!!! ... நன்றிகள்!!!

... சில வாரங்களுக்கு முன் ... இதே மகிந்த ... ஐநா என்று அமெரிக்கவலம் வந்த போது ... தமிழ் அமெரிக்கர்களோ அல்லது வட அமெரிக்கா தமிழர்களோ?(தமிழ் கனேடியர்களும்) இனைந்து... ஏன் இதே செய்தியை அங்கு சொல்ல முற்படவில்லை????????????????

கொடி என்பது ஒரு இனத்தின் அடையாளம் மட்டும் அல்ல, கொடி என்பது ஒரு அடையாள சின்னம், ஒரு சரித்திரம், ஒரு வரலாறு.

இங்கே மாநிலங்கள் கொடி வைத்துள்ளன. மாநகர ஆட்சி அமைப்புக்கள் கொடி வைத்துள்ளன.

விளையாட்டு கழகங்கள் கொடி வைத்துள்ளன. தனியார் நிறுவனங்கள் பல கொடி வைத்துள்ளன.

ஏன் தனிப்பட குடும்பங்களே கொடி வைத்துள்ளன.

கொடி என்பது பலருக்கு நாட்டுப்பற்றை குறிக்கும், சிலருக்கு இனவாத குறியீடாக தெரியும்.

இன்னும் கொடி பிரச்சனையா? :icon_idea:

ஒன்று கேட்டால் குறை நினைக்க மாட்டீங்களே??

புலத்தில் தமிழரின் எந்த ஒரு போராட்டம் நடத்தும் போதும் நீங்கள் தமிழன் என்பதற்கு என்ன அடையாளம் வைத்து இருக்கிறீர்கள்?

நாம் இருக்கும் நாட்டுக்குரிய கொடிகளை பிடிப்பது பிழை என்று சொல்லவில்லை, ஆனால் அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அந்த நாட்டுக் கொடிகளை காற்றில் ஆட்டிய படி கொண்டு செல்வதைக் காட்டிலும், எமது தேசிய கொடிக்குப் பக்கத்தில் நின்றாலோ, அந்தக் கொடி காற்றில் அசைவதைக் கண்டாலோ ஒருவிதமான தென்பு எம்முள்ளே ஓடுவதை உணரக் கூடியதாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிக்கிறது சரியோ தப்போ என்பது ஒரு புறம் இருக்கட்டும்

இங்க அவுஸ்திரேலியாவில் பல்லின சமுகத்தில் இலங்கையன் என அறிமுகப்படுத்தினால்

தமிழ் புலியா அல்லது சிங்களமா? என கேட்பார்கள் ஆரம்பத்தில் விளக்க முற்படும் பொது அது வேற இது வேற என்றால்

அவர்கள் குழம்பி 3 வதா இன்னுமொரு இனம் என்ற அளவில தெளிவா இருக்கினம் இஞ்ச ஆக்கள்,

இப்ப விளக்கமாக தமிழ் புலி என்றே சொல்லுறது வழக்கம்.

ஆனாலும் எலி பூனை ஆகி நாயாகி புலியானாலும் அது மனதளவில எலிதான்.

அப்பிடி இருக்க சம்பந்த்தமில்லா புலிக்கொடி தூக்கத்தான் வேணுமோ?

ஆனா நீங்க கேக்கிறது நியாயம் தமிழர்களை பிரதிநிதி படுத்த ஒரு லோகோ வேணும்தான்

எலிக்கொடி எப்பிடி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொடி பிரச்சனையா? :icon_idea:

ஒன்று கேட்டால் குறை நினைக்க மாட்டீங்களே??

புலத்தில் தமிழரின் எந்த ஒரு போராட்டம் நடத்தும் போதும் நீங்கள் தமிழன் என்பதற்கு என்ன அடையாளம் வைத்து இருக்கிறீர்கள்?

நாம் இருக்கும் நாட்டுக்குரிய கொடிகளை பிடிப்பது பிழை என்று சொல்லவில்லை, ஆனால் அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அந்த நாட்டுக் கொடிகளை காற்றில் ஆட்டிய படி கொண்டு செல்வதைக் காட்டிலும், எமது தேசிய கொடிக்குப் பக்கத்தில் நின்றாலோ, அந்தக் கொடி காற்றில் அசைவதைக் கண்டாலோ ஒருவிதமான தென்பு எம்முள்ளே ஓடுவதை உணரக் கூடியதாகவே இருக்கும்.

புலத்திலை நாலு சிவருக்கை இருந்து புலம்புறவைக்கு.......... :rolleyes:

நீங்கள் பிறக்கும் போதே திருஞானசம்பந்ததராக பிறந்தீர்களோ எனக்கு தெரியாது.எதுக்கும் பின்னால் ஓடும் மந்தை கூட்டமாக தான் இருக்கப்போகின்றோம் என்று அடம் பிடித்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

இவ்வளவு அழிவிற்கு பின்பும் நாங்கள் செய்தது சரி என்றுசொல்ல உங்களால் எப்படி முடிகின்றது.உங்கள் அழிவிற்காக நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கவில்லை ஆனால் போகிறபோக்கில் நீங்களும் அழிந்து இனத்தையும் இப்படியொரு நிலமைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள் என்பது நாலு புத்தகம் வாசித்து வந்த அறிவுதான்.

நீங்கள் வென்றிருந்தாலோ அல்லது போராட்டத்தை வேறு திசையில் கொண்டுபோயிருந்தாலோ நாங்கள் எழுதுவதற்கே இடம் வைத்திருக்க மாட்டீர்கள்.ஆயிரம் தான் காரணம் சொன்னாலும் எங்களுக்கு விளங்கிய ஒன்று உங்களுக்கு விளங்கவில்லை என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வென்றிருந்தாலோ அல்லது போராட்டத்தை வேறு திசையில் கொண்டுபோயிருந்தாலோ நாங்கள் எழுதுவதற்கே இடம் வைத்திருக்க மாட்டீர்கள்.ஆயிரம் தான் காரணம் சொன்னாலும் எங்களுக்கு விளங்கிய ஒன்று உங்களுக்கு விளங்கவில்லை என்பதுதான் உண்மை.

நீங்கள் அந்த மாலைதீவை பிடித்த கதைதானே.உண்மையில் இன்று வரை விளங்கவில்லை?? :lol::lol:

.ஆயிரம் தான் காரணம் சொன்னாலும் எங்களுக்கு விளங்கிய ஒன்று உங்களுக்கு விளங்கவில்லை என்பதுதான் உண்மை.

ஓம் அண்ணை... இந்திய இராணுவத்துக்கு முதல் காலத்தில் எப்படி யாழ் கோட்டையிலை பெண் புலிகளை காவலுக்கு விட்டு போட்டு பின்னாலை யாழ் நகருக்கை நிண்டு அரசியல் செய்தனீங்கள் எண்டு எனக்கு இன்னும் விளங்க இல்லை....

ஆமி கோட்டையிலை இருந்து வெளிக்கிடுகிறான் எண்டு எப்படி கண்டு பிடிச்சனீங்கள் எண்டு எனக்கு இண்டுவரைக்கும் விளங்க இல்லை... ( தங்களது தொலைத்தொடர்பை ஒட்டு கேக்கிறவங்கள் எண்டு சுதந்திரப்பறவைகள் அக்காமார் சொல்லுறவை தான்)

கோட்டையிலை இருந்து ஆமி வெளிக்கிட்டால் எப்படி ஓடித்தப்பி உயிரை பாதுகாத்தனீங்கள் எண்டும் எனக்கு விளங்க இல்லை.... இத்தனைக்கும் அந்த பெண்புலிகளை தனிய சண்டை பிடிக்க விட்டுப்போட்டு... ( பிறகு ஈரோஸ் அண்ணை மாரும் கிட்டண்ணையும் வாறது வேற கதை எண்டாலும்)

உங்கட அரசியல் வரலாறுகளையும் வீரத்தீரங்களும் எங்களுக்கு விளங்காமல் கனக்க இருக்குதண்ணை... அது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்..

Edited by தயா

நீங்கள் அந்த மாலைதீவை பிடித்த கதைதானே.உண்மையில் இன்று வரை விளங்கவில்லை?? :lol::lol:

உங்களுக்கே விளங்கவில்லையாம்.. இதில நான் அது என்ன கதை என்று கேட்டு அதை நீங்கள் எப்படி விளங்கப் படுத்தப் போறீங்கள்?? :lol::D உங்கட நிலைமை விளங்கி நான் விளக்கம் கேட்கவில்லை நுணா... :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... உதுக்குள்ளை

என்ன விளையாட்டு நடக்குது? :wub::lol::lol::lol::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.