Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்காக சில தொழில் நடத்துநர்களை சந்திக்க சென்றோம். அதில் எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன்.

ஒரு 30 வயது பையன். இரண்டு பெரிய தொழில் நிலையங்களுக்கு உரிமையாளர். அதில் ஒன்றை அவரும் இன்னொன்றை அவரது சகோதரரும் கவனிக்கின்றனர். நாங்கள் அவரைச்சந்திக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களில் நேரே சென்று சந்திப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் 4 பேர் அவரது முதலாவது பாரிஸ் 1இல் உள்ள அவரது பாருக்கு சென்றபோது அவர் மற்ற கடையில் நிற்பதாக சொன்னார்கள். அங்கு சென்று சந்திக்கலாம் என்று சென்றோம். கால் வைக்க கூசும் அளவுக்கு அந்த நைற் கிளப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதை வடிவமைக்க அமெரிக்கா சென்று வந்து அதே வடிவமைப்பில் இதை பல லட்ச ஈரோக்கள் செலவளித்து கட்டியமைத்ததாக ஏற்கனவே கேள்விப்படடிருந்தேன். உண்மையில் அதற்குள் காலடி எடுத்து வைக்கும்போது பெருமையாக இருந்தது. ஒரு தமிழன் அதிலும் எமது அடுத்த சந்ததி இந்த அளவுக்கு முன்னேறி இருப்பது பெருமையிலும் பெருமை.

நாங்கள் உள்ளே சென்றபோது அவர் சமையலறைக்குள் ஏதோ வேலையாக நிற்பதை நானும் என்னுடன் வந்தவர்களும் கண்டோம்.

அவரை உள்ளே சென்று சந்திப்பது அழகல்ல என்பதால்அங்கு வேலை செய்யும் ஒருவரை எமக்கு எமக்கு ஏற்கனவே தெரிந்ததால்

அவரிடம் நாங்கள் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னோம். போனவர் 30 செக்கன்களில் திரும்பி வந்தார். அவர் வெளியில் போய் விட்டதாக சொன்னார். நாங்கள் கண்டதை அந்த ஊழியரிடம் சொல்ல மனம் வரவில்லை. சிறிது நேரம் வெளியில் நின்றுவிட்டு வந்துவிட்டோம். போன எங்களில் என்னையும் சேர்த்து 3 பேர் தொழில் வைத்திருப்பவர்கள். பெருத்த அவமானம். என் பொது வாழ்வில் எவ்வளவோ அவமதிப்புக்களைச்சந்தித்திருக்கின்றேன். ஆனால் இவர் எனக்கு தெரிந்தவர். நான் காண என் கண்முன்னால் படித்து திரிந்தவர். அதேநேரம் வளர்ந்து ஒரு நல்லநிலையில் இருக்கிறார் என்று நான் பெருமைப்பட்டவர்.

அஅன்று நேரடியாக அவரது சகோதரைப்பிடித்து இப்படி நடந்தது என்றும் சொல்லி நாங்கள் போனவிடயத்தை நிறைவேற்றிவிட்டோம்.

அதன் பின்னர் பலமுறை எமக்கு தொலைபேசி எடுத்துவிட்டார். ஆனால் நாங்கள் பதிலளிக்கவில்லை. இங்கு தங்களிடம் நான் கேட்பது இவருக்கு நான் என்ன பதில் சொல்ல.....???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் தந்திரோதபாயமாக நடந்த விதத்தை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இது மனக் கசப்பல்ல... உங்களது முதிர்ச்சி.

30 வயது இளைஞன் வாழ்க்கையில் பக்குவப் பட்டிருப்பான் என்று எண்ண முடியாது. அவனது குறிக்கோள் இன்னும் முன்னேற வேண்டும் என்பதே....

அதற்காக அவனை கோபிப்பதில் நியாயமில்லை, அவனை உணர வைக்க நீங்கள் அணுகிய விதம், அந்தப் பையன் இனி இப்படிச் செய்ய மாட்டார். நம்புங்கள்.

வெளியில் வடிவாக கடை அமைத்திருந்தாலும், அவனுக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உடனடியாக் உங்களை சந்திக்க் விரும்பாதிருக்கலாம் அவர் செய்துகொண்டிருந்த வேலை உடனடியாக் முடிக்க முடியாததாய் இருக்கலாம். உங்கள் சமயோசித் புத்தி நன்று. அவ்ரின்னும் மனபக்குவம் அடையாதவராய் இருக்கலாம் .கொஞ்சம்விட்டுபிடியுங்கள். :lol:

அந்த பொது வேலைத் திட்டம் தனிப்பட்ட உங்களின் தேவை ஒன்றெனில், சுயமரியாதைக்காக அவருடன் மீண்டும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

ஆனால் அந்த பொது வேலைத் திட்டம் பொது நலனுக்கானதெனில், மக்கள் நலனுகானதெனில் எம் தனிப்பட்ட கோபங்களை மறந்து, அவமானங்களை தாங்கி, மீண்டும் மீண்டும் அவரை தொடர்பு கொள்வதில் எந்த தவறும் இல்லை. சிலதுகளை கல்லில் நார் உரிப்பது போலத் தான் எம்மவர்களிடம் இருந்து செய்ய வேண்டி உள்ளது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பொது வேலைத் திட்டம் தனிப்பட்ட உங்களின் தேவை ஒன்றெனில், சுயமரியாதைக்காக அவருடன் மீண்டும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

ஆனால் அந்த பொது வேலைத் திட்டம் பொது நலனுக்கானதெனில், மக்கள் நலனுகானதெனில் எம் தனிப்பட்ட கோபங்களை மறந்து, அவமானங்களை தாங்கி, மீண்டும் மீண்டும் அவரை தொடர்பு கொள்வதில் எந்த தவறும் இல்லை. சிலதுகளை கல்லில் நார் உரிப்பது போலத் தான் எம்மவர்களிடம் இருந்து செய்ய வேண்டி உள்ளது

நிழலி,

சின்ன சந்தேகம் ஒன்று....

பொது வேலைத்திட்டம், தனிப்பட்ட தேவையாக இருக்க முடியாதே?

மற்றும் படி.... நீங்கள் இந்தப் பிரச்சினையை அணுகிய விதம் நன்றாக உள்ளது.

பொது வேலைத்திட்டம், தனிப்பட்ட தேவையாக இருக்க முடியாதே?

சரியான கேள்வி....பொது வேலைத் திட்டம் தனிப்பட்ட தேவையாக இருக்காது என்பது சரி :lol:

அஅன்று நேரடியாக அவரது சகோதரைப்பிடித்து இப்படி நடந்தது என்றும் சொல்லி நாங்கள் போனவிடயத்தை நிறைவேற்றிவிட்டோம். அதன் பின்னர் பலமுறை எமக்கு தொலைபேசி எடுத்துவிட்டார். ஆனால் நாங்கள் பதிலளிக்கவில்லை. இங்கு தங்களிடம் நான் கேட்பது இவருக்கு நான் என்ன பதில் சொல்ல.....???

சகோதரர் ஏதோ அவருக்கு சொன்னதால் அதன்பின்னர் அவர் உங்களிற்கு பல தடவைகள் தொலைபேசி எடுத்திருக்கலாம். வியாபாரத்தில் Thick Skin என்று ஓர் விடயம் உள்ளது. உங்களிற்கு அந்த Thick Skin காணப்படவேண்டும், தனிப்பட நொந்துகொள்வதில் பயன் இல்லை. உங்கள் நிலமையில் நான் காணப்பட்டால் பழையதை காட்டிக்கொள்ளாமல் உங்கள் வியாபார கொடுக்கல், வாங்கல்களை, அல்லது திட்டங்களை அல்லது தேவைகளை பற்றி அவர் தொலைபேசியில் அழைக்கும்போது உரையாடி அவருடன் தொடர்ந்து இணைப்பில் விளங்குவதையே நான் விரும்புவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சென்ற சமயம் அவர் வேலைப்பழு காரணமாகவோ அல்லது உங்களை சந்தித்து உரிய அலுவலை உடனடியாக முடிக்க முடியாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர் உங்களை திருப்பி அழைத்துள்ளார். வயதில் சிறியவர் என்பதால் வாழ்வில் பெரிய அனுபவம் வாய்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை.நீங்கள் அவரை மன்னிப்பதே உங்களுக்கு பெருந்தன்மை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு அண்ணா,

பொது விடயத்தில் இப்படியான விடயங்கள் சகஜம்தானே... ஒருவேளை நீஙகள் குறிப்பிடும் நபர் வேண்டுமென்றே உங்களைத்தவிர்த்திருந்தால் பின்னர் மீண்டும் மீண்டும் ஏன் உங்களை அழைக்கிறார்? பொதுவிடயத்தில் பணிசெய்யும் நீங்கள் பொதுப்பணிக்காக மற்றவர்களை நாடுமிடத்து மற்றவர்களால் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தப்பட்டிருப்பினும் மீண்டும் அவர்கள் உங்களை அழைத்து அவ்விடயத்தைப்பற்றி பேச விளையும்போது தவிர்த்தல் முறையன்று.... அவ்விடயத்தின் தேவை இன்னும் இருப்பின் அதற்காக அவரிடம் பேசுவதில் நீங்கள் எந்த வகையிலும் அவமானத்தை அடைந்துவிட முடியாது ஏனென்றால் நீங்கள் பொதுவிடயத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர். நீஙகள் எப்போதுமே மிகவும் பக்குவமாகவும் தெளிவாகவும் பொதுவிடயங்களை அணுகுபவர் ஆயிற்றே, எப்படி உங்களிடம் இப்படியான சஞ்சலம் உருவானது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகுவின் மனநிலை எனக்கு விளங்குகின்றது.இவர்களெல்லாம் நிலைகெட்ட மாந்தர்.சிறிது காலங்களில் மீண்டும் பழையநிலைக்குவருவர்.அப்போது உங்களை தேடி வருவர்.இதுதான் உலகின் நியதி.

இந்த விடயத்தில் எனக்கு உங்கள் பக்கம்தான் தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. அவரைப் பற்றி நீங்கள் கூறியதிலிருந்து அவர் கிட்டத்தட்ட பிரான்சில் அதிக காலம் வாழ்ந்தவராகத் தெரிகிறது. அதோடு, அவரின் நைற் கிளப்பைப் பற்றிக் குறிப்பிட்டதிலிருந்து அவர் ஒரு சிறந்த வணிகராகத் தோன்றுகிறது. அமெரிக்காவிற்கு வந்து அதனைப் போலவே வடிவமைத்தவர் என்பதிலிருந்தே அவரைப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது.

பொதுவாக வெளிநாடுகளில் ஒருவரைச் சந்திப்பதற்கு முன் சந்திப்பு நேரம் ஏற்படுத்திவிட்டுத் தான் செல்வார்கள். தமிழ் அலுவலகங்களில்கூட அந்த நடைமுறைதான் உள்ளது. ஆனால், நீங்கள் முன்னறிவித்தல் எதுவுமின்றி திடீரென்று சந்திக்கச் சென்றிருக்கிறீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சென்ற விடயம் பெரிதாகவும் முக்கியமானதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் அவரும் அப்படி நினைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. இதையே நீங்கள் பெருத்த அவமானம் என்று நினைத்தீர்களானால், பொதுவாழ்க்கையில் நீங்கள் காலம் தள்ளுவது சிரமம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

30 வயது இளைஞன் வாழ்க்கையில் பக்குவப் பட்டிருப்பான் என்று எண்ண முடியாது.

அவனது குறிக்கோள் இன்னும் முன்னேற வேண்டும் என்பதே....

வெளியில் வடிவாக கடை அமைத்திருந்தாலும், அவனுக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும்.

. அவ்ரின்னும் மனபக்குவம் அடையாதவராய் இருக்கலாம் .கொஞ்சம்விட்டுபிடியுங்கள். :rolleyes:

ஆனால் அந்த பொது வேலைத் திட்டம் பொது நலனுக்கானதெனில், மக்கள் நலனுகானதெனில் எம் தனிப்பட்ட கோபங்களை மறந்து, அவமானங்களை தாங்கி, மீண்டும் மீண்டும் அவரை தொடர்பு கொள்வதில் எந்த தவறும் இல்லை . சிலதுகளை கல்லில் நார் உரிப்பது போலத் தான் எம்மவர்களிடம் இருந்து செய்ய வேண்டி உள்ளது

இது அத்தனையையும் நான் ஒத்துக்கொள்கின்றேன்

சகோதரர் ஏதோ அவருக்கு சொன்னதால் அதன்பின்னர் அவர் உங்களிற்கு பல தடவைகள் தொலைபேசி எடுத்திருக்கலாம். உங்கள் வியாபார கொடுக்கல், வாங்கல்களை, அல்லது திட்டங்களை அல்லது தேவைகளை பற்றி அவர் தொலைபேசியில் அழைக்கும்போது உரையாடி அவருடன் தொடர்ந்து இணைப்பில் விளங்குவதையே நான் விரும்புவேன்.

எனக்கு தேவையானதை அவரின் சகோதரர் ஊடாக நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோம்

அவருக்கு நாங்கள் அவமானப்பட்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் எம்மை தேடுகிறார் என்றும் தெரியும். எம்மை சந்திக்க அவர் இனி பல வடிவங்களை எடுப்பார். ஏனெனில் எம்மை அவருக்கு தனிப்பட்ட முறையில் தேவை. இந்த திரிக்கும் ரதி எழுதிய ஒழுக்கம் என்ற திரிக்கும் ஒரு முடிச்சு போடலாம்.

நீங்கள் சென்ற சமயம் அவர் வேலைப்பழு காரணமாகவோ அல்லது உங்களை சந்தித்து உரிய அலுவலை உடனடியாக முடிக்க முடியாமல் இருந்திருக்கலாம்.

இருந்தாலும் அவர் உங்களை திருப்பி அழைத்துள்ளார். வயதில் சிறியவர் என்பதால் வாழ்வில் பெரிய அனுபவம் வாய்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை.

நீங்கள் அவரை மன்னிப்பதே உங்களுக்கு பெருந்தன்மை.

இந்த விடயத்தில் எனக்கு உங்கள் பக்கம்தான் தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. . அதோடு, அவரின் நைற் கிளப்பைப் பற்றிக் குறிப்பிட்டதிலிருந்து அவர் ஒரு சிறந்த வணிகராகத் தோன்றுகிறது. அமெரிக்காவிற்கு வந்து அதனைப் போலவே வடிவமைத்தவர் என்பதிலிருந்தே அவரைப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது.

பொதுவாக வெளிநாடுகளில் ஒருவரைச் சந்திப்பதற்கு முன் சந்திப்பு நேரம் ஏற்படுத்திவிட்டுத் தான் செல்வார்கள். தமிழ் அலுவலகங்களில்கூட அந்த நடைமுறைதான் உள்ளது. ஆனால், நீங்கள் முன்னறிவித்தல் எதுவுமின்றி திடீரென்று சந்திக்கச் சென்றிருக்கிறீர்கள்.

என்னுடைய கேள்வியே அதுதான் நுணாவிலான் மற்றும் தமிழச்சி

தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளியிடம் பொய் பேசும்

ஒருவரை சந்திக்க முடியாது ஓடி ஒழியும் ஒருவர் எப்படி சிறந்த நிர்வாகியாக இருக்கமுடியும்....???

வணக்கம் விசுகு அண்ணா,

ஒருவேளை நீஙகள் குறிப்பிடும் நபர் வேண்டுமென்றே உங்களைத்தவிர்த்திருந்தால் பின்னர் மீண்டும் மீண்டும் ஏன் உங்களை அழைக்கிறார்? பொதுவிடயத்தில் பணிசெய்யும் நீங்கள் பொதுப்பணிக்காக மற்றவர்களை நாடுமிடத்து மற்றவர்களால் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தப்பட்டிருப்பினும் மீண்டும் அவர்கள் உங்களை அழைத்து அவ்விடயத்தைப்பற்றி பேச விளையும்போது தவிர்த்தல் முறையன்று.... அவ்விடயத்தின் தேவை இன்னும் இருப்பின் அதற்காக அவரிடம் பேசுவதில் நீங்கள் எந்த வகையிலும் அவமானத்தை அடைந்துவிட முடியாது ஏனென்றால் நீங்கள் பொதுவிடயத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர். நீஙகள் எப்போதுமே மிகவும் பக்குவமாகவும் தெளிவாகவும் பொதுவிடயங்களை அணுகுபவர் ஆயிற்றே, எப்படி உங்களிடம் இப்படியான சஞ்சலம் உருவானது?

சகாராக்கா

அவர் எம்மை மீண்டும் மீண்டும் அழைப்பதற்கு காரணம் எம்மை அவருக்கு வேண்டும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு

அதைவிட அவரை நாம் கண்டோம் என்பது தற்போது தான் அவருக்கு தெரிந்துள்ளது. அதைவிட அவர் காரில் சென்றுவிட்டதாக அவரது ஊழியர் கூறினார். ஆனால் நாங்கள் போகும் போதும் வரும்போதும் அவரது கார் அங்குதான் நின்றது.

பொது வாழ்வில் இது சகசம் என்பதும் அதை எப்படி தொடர்வது என்பதும் தெரியும். ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் அதுவும் எம் துணையுடன் முன்னுக்கு வந்தவர்கள்.

அதைவிட முக்கியமானது இவர் ஒழிந்து கொண்டு தனது ஊழியரிடமே பொய் சொன்னதுதான் எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. என்ன நிர்வாகி இவர் என்று. இவர் திறமையினால் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றார் என்று பெருமையாக நினைத்திருந்த எனக்கு சவுக்கால் அடித்தது போலிருந்தது.

quote name='குமாரசாமி' timestamp='1291423885' post='625263']

விசுகுவின் மனநிலை எனக்கு விளங்குகின்றது. இவர்களெல்லாம் நிலைகெட்ட மாந்தர்.சிறிது காலங்களில் மீண்டும் பழையநிலைக்குவருவர்.அப்போது உங்களை தேடி வருவர்.இதுதான் உலகின் நியதி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சி சொன்ன மாதிரி தொலைபேசியில் அனுமதி பெறாமல் போனது உங்கள் பிழை தான் அண்ணா.இங்கு பொதுவாகவே சொந்தக்காரரைப் பார்க்க போவது என்டாலே தொலைபேசியில் அழைத்து அவர்கள் அனுமதி பெற்று தான் செல்லுவோம்.அவர் தொழிலதிபர் ஆக இருக்கிற படியால் நீங்கள் போன நேரம் அவர் பிசியாக இருந்திருக்க கூடும் அல்லது பிரஸ்டீஜ் காரணமாக[தொலைபேசியில் அழைக்காமல் போன படியால்]சந்திக்காமல் தவிர்த்திருக்க கூடும் என நினைக்கிறேன்.நீங்களும் உங்கள் கோபத்தை விட்டு அவரோடு கதைப்பதே நல்லது என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல முறை அவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தோம்

அவர் பதிலளிக்கவில்லை

திட்டம் முடிக்கும் காலம் நெருங்கிவிட்டதால்தான் இறுதித்தருணத்தில்தான் நேரே சென்றோம்.

இல்லையென்றால் அவரது பங்களிப்பு இத்திட்டத்துக்கு இல்லாது போய்விடும் என்ற நிலையில்தான் நேரே செல்லும் முடிவை எடுத்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அணுகிய முறை சரியானதே! பொதுவிடயத்தில் இப்படிப் பல சம்பவங்கள் வருவது தவிர்க்க முடியாததே!

கவலைப்பட வேண்டாம்! தொடர்ந்து அவரிடம் தொடர்பைப் பேணுங்கள்! :rolleyes:

அவரை உங்களின் அலுவலகத்திற்கு வரவழைத்து (கால் வைக்க கூசிற மாதிரி அண்டைக்கு கொஞ்சம் கிளீனா வைச்சிருங்கோ :D )

பின்னர் அவர் கண்ணில் தெரியும் படியாக கொஞ்ச நேரம் திரிந்து விட்டு

பின் கதவு வழியாக வெளியேறி ஆபீஸ் அச்சிச்டண்டுக்கு போன் போட்டு அவர் வெளியில போய்ட்டார் என்று சொல்லு எண்டு போட்டு

கார் எடுத்து கொண்டு போகும் போது "எஸ்" என்று கொண்டே போனால் சூப்பர் ஆக இருக்கும்!

mr+bean.jpg

ஆனா அப்பிடி மட்டும் செஞ்சிடாதேங்கோ :D

Edited by nadodi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரை உங்களின் அலுவலகத்திற்கு வரவழைத்து (கால் வைக்க கூசிற மாதிரி அண்டைக்கு கொஞ்சம் கிளீனா வைச்சிருங்கோ :D )

பின்னர் அவர் கண்ணில் தெரியும் படியாக கொஞ்ச நேரம் திரிந்து விட்டு

பின் கதவு வழியாக வெளியேறி ஆபீஸ் அச்சிச்டண்டுக்கு போன் போட்டு அவர் வெளியில போய்ட்டார் என்று சொல்லு எண்டு போட்டு

கார் எடுத்து கொண்டு போகும் போது "எஸ்" என்று கொண்டே போனால் சூப்பர் ஆக இருக்கும்!

ஆனா அப்பிடி மட்டும் செஞ்சிடாதேங்கோ :D

இது ரொம்ப சுலபமானது

எனது உதவியாளருக்கும் இதற்காகத்தான் செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு செய்வதும் சரியாகத்தான் இருக்கும்.

ஆனால் எனது உதவியாளரிடம் அவன் தாழ்ந்துபோவது என்னை உறுத்துமே.

வியாபாரத்தின் அல்லது நிர்வாகத்தின் முதல் பகுதியே பிரச்சினைகளுக்கு அல்லது நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பது.

அது அவருக்கு இல்லை என்பது தான் எனக்கு வருத்தம். நான் எழுதும்போதே பாரீஸ் 1 என்று குறிப்பிட்டது அதன் பெறுமதியை நீங்கள் தெரிந்து கொள்ளத்தான். இவ்வளவு மூலதனத்தையும் எவ்வாறு பெற்றார் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் கலக்கம்.

மற்றும்படி எனக்கு அவரிடமிருந்து பெறவேண்டியதை நான் பெற்றுவிட்டேன்

இனி அவரிடமிருந்து சற்று தள்ளியிருப்பதே எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லது.

இது உண்மையில் என்னிடமுள்ள ஒரு கெட்ட குணம். தப்பென்றால் மறக்கமாட்டேன். மன்னிக்கமாட்டேன்.

விசுகு,

நான் சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன்.

அவராகவே உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால் என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்பதே நல்லது. Small World என்று சொல்லுவார்கள். இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் அவரோடு deal பண்ண வேண்டி உங்களுக்கு ஏற்படலாம்.

வேலை என்று வரும் பொது Emotionsஐ தள்ளி வைக்க பழகி கொள்ள வேண்டும் (நானும் பல தடவை வேலை செய்யும் இடங்களில் முன் கோபத்தால் தவறுகள் விட்டு, பின்னர் எப்படி calm ஆக இருப்பது என்று கொஞ்சம் கற்றுள்ளேன்). It is easily said than done. Emotional Intelligence என்பது learned skill. உங்களுக்கு வரும் ஒவ்வொரு challenge-ஐயும் அதை வளர்த்து கொள்ள பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கொஞ்சம் மாறுபாடு உண்டு

இங்கேதான் சில தப்புக்கள் உருவாகின்றன.

எனக்கு ஒருநாள்தேவை வரும் என்பதற்காக எப்போது நாம் வளைய தொடங்குகின்றோமோ அன்றே தப்புக்களை நாம் காணாது அல்லது களையாது விட்டுவிட ஆரம்பிக்கின்றோம். பொதுச்சேவையில் உள்ளவன் குனிந்தே ஆகவேண்டும் என்ற நியதி எனக்கு ஒத்துவராது.

முக்கிய நேரங்களில் நாங்கள் விறுவிறுப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டங்களில்மேலிடங்களில் இருந்து சில தடைகள் வரும். அப்படி வந்தபோது இப்படி நானும் யோசித்திருக்கின்றேன் நாங்கள் செயற்பட இப்படி தடைபோடுகிறார்களே என்று. ஆனால் அவர்கள் சொன்னதை செயற்படுத்தி பார்த்தபோது...

அவர்களின் அனுபவத்தையும் நேரத்தை மிச்சப்படுத்தலையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

எல்லாக்கதவுகளையும் நாங்கள் தட்டிக்கொண்டிருந்தபோது........கடைசியாக வந்த கட்டளை

விதண்டாவாதம் செய்பவர்களுடன் நேரத்தை வீணடிக்கவேண்டாம் வேறு ஒரு வீட்டைத்தட்டுங்கள் என்று.

கொஞ்சம் கவலையோடுதான் தொடங்கினோம். ஆனால் இலக்கை விரைவாக அடைந்தோம்.

இவரும் அந்த வகைதான். இவருடன் மினக்கெடுவதைவிட வேறு ஒருவரை அணுகுவது சிறந்தது.

வளைய வேண்டும் என்ற அல்லது அவருடன் நட்பாக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. அவர் உங்கள் மரியதைக்குரியவரில்லை என்றாலும் வேலை சம்பந்தமாக எனும்போது (அதுவும் அவராக உங்களை தொடர்புகொள்ள முயற்சிக்கும் போது) நீங்கள் ஒரு professional என்ற முறையில் கட் அண்ட் ரைட் ஆக அணுகலாம் என்பது எனது கருத்து. இது ஒரு பொதுவான அணுகுமுறை தான், எல்லா சந்தற்பங்களுக்கும் பொருந்தும் என்றில்லை. (கனக்க கதைகிறன் போல கிடக்கு! குழப்பகரமாக எதையாவது நான் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். :icon_idea: )

Edited by nadodi

  • கருத்துக்கள உறவுகள்

mgr.jpg

தனிப்பட்ட குண நலன்கள் என தனியே இருந்தாலும் தற்போதுள்ள நிலமையில் ஈழ தோழர்கள் எம்.ஜி .ஆரின்ட குணநலன்களை பாவிக்கவேணும்.. வோட்டு கேட்க போகும் போது பிச்சைக்காரியையும் கட்டிபிடிப்பார்... மோர் தயிர் விற்பவனையும் கட்டிபிடிப்பார்.. அவனது பாக்கெட்டில் அஞ்சு பத்து சொருகுவார்... மறுநிமிடம் தொழில் அதிபர்களை சந்திப்பார்.. அவர்களோடும் அதற்குரிய கெத்தோடு பேசுவார்.. ஆனால் சுயமரியாதையோடு சிலவற்றை நாசுக்காக ஏற்று கொள்ள மாட்டார்.. அந்த அமெரிக்காக்காரன் கொடுத்த பல்கரையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இவரே தனியாக சத்துணவு என்று ஆரம்பித்துதுவிட்டார்... அவனை விட கூடுதலாக பல்பொடி.. செருப்பு .. என ஆரம்பித்து போட்டார்...

இன்று இனம் இனம் என்று எங்களுக்கு போதித்துவிட்டு கருநாவுக்கு சோப்பு போடும் இளங்கோவன் முதல் அனைவரும் கடைபிடிப்பது ... ஈ... ஈ.. என்ற தே... சிரிப்பு... அவன் அவன் வேலைக்கு சோப்பு போடுகிறான்.. (இவனின்ட தகுதி பற்றி தனி கட்டுரை போடணும்.. தம்பிகளா திருக்குறளில் நான் பெரிய தப்பு கண்டுபிடித்துட்டேன் வாங்க உங்களுக்கு காட்டுகிறேன் என அழைத்து போட்டு .. சரி திருவள்ளுவரையே மிஞ்சிய ஆளா இருக்காரே நம்மட ஆசிரியர் என்று அனைவரும் ஆர்வமாக அமர்ந்த போது ... ஒரு திருக்குறள் புக்கை பிரித்து இந்த ஒரே வாய்மை பக்கம் ரெண்டு பக்கத்துல சேமாக பிரிண்டாகி இருக்கு என்ற சொன்ன அறிவு திலகம்) போகட்டும்..

LTTE-Flag.jpg

தற்போது உள்ள நிலைமையில் ஈழ தோழர்கள் தாங்கள் இருக்கும் நிலமையில் தனிப்பட்ட குணநலங்களை ஒதுக்கிவைத்துவிட்டு.. அங்கிட்டு வெளிநாட்டில் சந்திப்பவர்களை தனிப்பட்ட ரீதியில் ஒரு டைரியில் குறித்து வைத்து கொண்டு.. அவர்களின்ட பிறந்த நாள் .. இறந்தநாள் ...கல்யாணம்... கருமாதி ... ஆகியவற்றுக்கு சும்மா ஒரு ஈமெயிலு... எஸ் எம் எஸ்.. ஆகியவற்றை தட்டிவிடுங்கள்... நம்மட இளங்கோவன் போல ஆயிரம் கஸ்டம் உள்ளுக்க இருந்தாலும் ஈ.. ஈ என சிரிப்பை உதிர்த்துவிட்டு ... உங்கட வேலையை பார்க்க சென்றுவிடுங்கள் .. போராட்டம் .. ஆதரவு எனும் போது அங்கிட்டு இது போல டச்சில் இருப்பவர்களை உரிமையோடு அந்த சமயத்தில் அழைக்கலாம் .... தமிழீழ தேசிய கொடியை உள்ள நிலைமையை விளக்கி சொல்லி அவர்கள் கையிலும் கொடுக்கலாம்... அப்ப தமிழீழம் உலகளாவிய சிக்கலாகி போகிறது...

டிஸ்கி:

சுருக்கமாக சொன்னால் இப்ப ஈழ தோழர்கள் எல்லாம் எம்.ஜி .ஆரினை போல தேர்ந்த அரசியல் வாதிகள் போல செயல்படுணும்.... உங்களை நீங்களே அரசியல்வாதி போல நினைத்து கொள்ளுங்க... :rolleyes: ஏதோ வயதில் சிறியவன் தவறுதலாக உளறி இருக்கலாம் .. வயதில் முதிர்ந்தவர்கள் மன்னிக்குக... ரைட்டா இருந்தா செயல்படுத்துக...ரைட்டு...

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.