Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலை இணைந்தது 2004 ம் ஆண்டு.

இது வரை பதிஞ்ச பதிவு 175.

நிர்மலன் என்பவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் போலை....

எதற்கும் திண்ணையில் சந்திப்பம்.

  • Replies 58
  • Views 14.1k
  • Created
  • Last Reply

ஆண்டவனே நீ இருந்தால் சொல்லு சிலர் அறிவை எல்லாம் கெடுக்குதடா.......????????

இங்கே உள்ளவர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக ஒரு கேள்வியை முன் வைக்க விரும்புகிறேன்

உங்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிவது மட்டுமே இந்தக் கேள்வியின் நோக்கம்

திருமாவளவனின் கருத்துப் பற்றி நீங்கள் கோபம் கொள்வதன் காரணம் என்ன?

1. ஒரு இனத்தின் தேசியத் தலைவரை திருமாளவன் சாதிய வட்டத்திற்குள் இழுத்து விட்டார்

2. உயர் சாதியினரான நீங்கள் போற்றுகின்ற ஒரு தலைவரை "கரையார்" என்று திருமாவளவன் சொல்லி விட்டார். அதுவும் வாழ்க்கையில் மீனே பிடிக்காத ஒருவரை கரையார் என்று சொல்லி இழிவுபடுத்தி விட்டார்.

உங்களின் கோபத்திற்கு இந்த இரண்டில் எது காரணம்?

ஐயோ சத்தியமாக நீங்கள் சொன்ன இரண்டாவது விசயம்தான் காரணம். வேற ஒண்டும் இல்லை.

சாதி, பிரதேச வாதங்களை இல்லாது செய்வதில் தலைவர் மிக உறுதியாக இருந்தார் என்பதனை மட்டும் என்னால் திட்டவட்டமாக கூற முடியும்.

இதைத்தவிர என்னால் எதுவும் கூற முடியவில்லை. நன் எப்போதும் அதனை சலஞ் பண்ண தயாராக இருப்பேன்.. ஆனால் இப்படியான தளங்களில் அல்ல. குழுவகவோ அல்லது தனித்தனியாகவோ..

எங்கட தலைவரை தாண்டி ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாத நிலையிலை சிலர் இருப்பது மட்டும் தெளிவாக தெரியுது... :D

2. உயர் சாதியினரான நீங்கள் போற்றுகின்ற ஒரு தலைவரை "கரையார்" என்று திருமாவளவன் சொல்லி விட்டார். அதுவும் வாழ்க்கையில் மீனே பிடிக்காத ஒருவரை கரையார் என்று சொல்லி இழிவுபடுத்தி விட்டார்.

உங்களின் கோபத்திற்கு இந்த இரண்டில் எது காரணம்?

நீங்கள் சொல்வதுக்கு இது மட்டும் தான் காரணம் எண்டு கண்டு பிடிக்கும் ஆளாக நீங்கள் இருந்தால்..

எங்கட தலைவர் சாதி குறைஞ்சவர் எண்டதுக்காக தான் பலர் அவரை தலைவராக ஏற்க மாட்டம் , தாள்ந்த சாதியை சேர்ந்த அவருக்கு அறிவு குறைவு எண்டு அடம் பிடிக்கினம் எண்டுறீயளோ...?? :D

அது சரி கரையார் என்பது தாள்ந்த சாதியா...?? :D உண்மையாகவே எனக்கு தெரியாது அதனால் தான் கேக்கிறேன்... மேலிருந்து கீழாய் ஒருக்கா சாதிப்பட்டியலை தந்தியள் எண்டால் பலருக்கு உதவியாய் இருக்கும்... தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவையாகவும் வளர்ச்சிக்கு உறுதுணையாக கூட அது இருக்கும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த சங்கரி நாதாரி.. திருமாவளவன் நாதாரி.. சரி ஆகட்டும்.

அப்போ அண்மையில் கனடாவில் வேற்று சாதி பையனோடு ஓடினதென்று துரத்திப் போய் காரை மோதவிட்டு.. அடிபட்டு.. அண்மையில் வழக்கொன்றில் தண்டனை பெற்ற நம் தமிழர்.. அவை யாராம்...???! அவை சீரழிக்காத ஒன்றையாக நாங்க எழுதிச் சீரழிக்கப் போறம்.

பூனை கண்ணை மூடிட்டா உலகம் இரண்டது என்றாகிடாது. நாங்க உண்மைகளை ஏற்க மறுத்தது அல்லது மறைத்ததாலும்.. எதிரிகளை தவறாக எடை போட்டதாலும்.. நண்பர்களை சரியாக இனங்காணாததாலும் தான் முள்ளிவாய்க்கால் எமக்கு புதைகுழியானது.

அதே தவறையே மீண்டும் இங்கு திருமாவளவனை திட்டுவதன் மூலம் செய்கிறோம். நாங்கள் ஏதோ சாதி வெறியற்ற அப்பழுக்கற்ற ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற பொய்த்தோறனையில்..!

இதை தான் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஆபத்தானது. இதுவே இன்றைய தலைமுறைக்குள்ளும் சாதியத்தை காவுகிறது. நாங்கள் பிறந்து வளர்ந்த காலம் புலிகளின் காலம். நாங்கள் ஊரில் அறியாத சாதியை கூட புகலிடத்தில் காணக் கூடியதாக இருக்கிறது. அதை பிரபாகரன் காவவில்லை. திருமாவளவன் காவவில்லை. தமிழர்கள்.. ஈழத்தமிழர்கள் காவுகின்றனர். இதுவும் உண்மை. :D

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் போக்கு சாதீயவாதட்தை ஆழப்படுத்துவதனூடு கட்சி இலாபம் அநுபவிப்பது.

ஆனால் இலங்கையில் அப்படியே புலிகளின் போக்கும் என்று பழிபோடுவது அபத்தமானது.

இங்கே DAM என்பவர் தான் புலத்திற்கு வந்தது அகதியாக இல்லை கல்வியின் பலனாய் என்று. இவரிடம் இருக்கும் சின்னத்தனம் இப்படியும் பிதற்ற முடியும் என்றால், இவர் சாதியில் தனக்கு கீழ்நிலையில் உள்ளவரைப் பார்த்து தான் பெரியசாதிக்காறனடா என்று சொல்லுவது நிட்சயம், இந்தப் பாவத்தை அவரை உள்வாங்கும் சாதியின் தலையில் போடுவது எப்படித் தவறானதோ, அப்படியே தனிப்பட்டவர்களின் சின்னத்தனங்களின் காரணமாக வரும் பிதற்றல்களை எந்த சாதியின் தலையிலும் போட முடியாது.

பெரும்பான்மைச் சமூகம் மாற்றத்தை விரும்புகின்றது. அதற்கு ஆதாரம்தான், சாதீயவாத ஓழிப்பை முதற் பணியாக வரித்துக் கொண்ட புலிகளை இருகரம் கொண்டு மக்களால் அரவணைக்கப்பட்டதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சத்தியமாக நீங்கள் சொன்ன இரண்டாவது விசயம்தான் காரணம். வேற ஒண்டும் இல்லை.

சாதியவாத பெருமை பிதற்றலை சாதி சொல்லி ஒருவரும் செய்வதில்லை.

அவரவரிடம் இருக்கும் சின்னத்தனங்களின் பிதற்றல்கள், உதாரணமாக நீர் கூறி இருந்தீரே நான் படித்தே புலத்திற்கு வந்தேன் அகதியாய் இல்லை என்று. இப்படிப்பட்ட பேச்சுரைக்கத்தக்க சின்னத்தனங்கள்தான் காரணம்!

இங்கே உள்ளவர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக ஒரு கேள்வியை முன் வைக்க விரும்புகிறேன்

உங்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிவது மட்டுமே இந்தக் கேள்வியின் நோக்கம்

திருமாவளவனின் கருத்துப் பற்றி நீங்கள் கோபம் கொள்வதன் காரணம் என்ன?

1. ஒரு இனத்தின் தேசியத் தலைவரை திருமாளவன் சாதிய வட்டத்திற்குள் இழுத்து விட்டார்

2. உயர் சாதியினரான நீங்கள் போற்றுகின்ற ஒரு தலைவரை "கரையார்" என்று திருமாவளவன் சொல்லி விட்டார். அதுவும் வாழ்க்கையில் மீனே பிடிக்காத ஒருவரை கரையார் என்று சொல்லி இழிவுபடுத்தி விட்டார்.

உங்களின் கோபத்திற்கு இந்த இரண்டில் எது காரணம்?

திருமாவளவன் விமர்சிக்கின்றாரே என்பதுதான்.

கலைஞர் அளவுக்கு திருமாவளவன் இல்லை என்பதைத்தவர வேறொன்றும் பெரிதாய் அவரிடம் எதிர்பார்க்க நாம் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் பல கருத்துக்களுடன் நான் உடன்படுகின்றேன்.

'சரிநிகர்' என முன்னர் ஒரு வார ஏடு கொழும்பில் இருந்து வந்தது. அதில்கூட பலதடவை பிரபாகரனின் சாதியம் தொடர்பான சிந்தனைகளை எழுதியிருந்தனர் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பலர் எனது கருத்துக்களுக்கு கடும் விமர்சனத்தினை முன்வைத்திருக்கின்றனர். அதற்கு முதலில் எனது மகிழ்ச்சியினை தெரிவிக்கின்றேன்.

என்ன செய்வது, எமது தமிழ் இனத்தில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு ஆழ வேரூன்றி இருக்கின்றதோ அதேயளவுக்கு பிரபாகரன் என்கின்ற தனிமனித வழிபாடும் அவர் தொடர்பான பிம்பமும் தலைதூக்கியிருக்கின்றது.

இதற்கு உங்களை நான் நொந்து என்ன பிரயோசனம். அவரும் ஒரு மனிதன்தான் அவரும் பல தவறுகளைச் செய்ததனால்தான் போராட்டம் 30 வருடத்துக்குள் முடிவடைந்தது என்பதனை நீங்கள் எப்போது நம்புகின்றீர்களோ அப்போதுதான் பல தெளிவுகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

அதுவரைக்கும் நான் எழுதாது விடப்போவதில்லை. எனக்குத் தெரிந்த 100 வீதமான உண்மைகளை எழுதுவேன். இதுவரை காலமும் அவ்வாறுதான் எழுதி வருகின்றேன்.

எனது கருத்துக்களை விமர்சிக்க பலருக்கும் உரிமை உண்டு. அதற்காக நான் கூறுகின்ற கருத்தினை விமர்சிப்பவர்களுக்காக திருத்திக்கொள்ளப் போவதும் இல்லை. அதேநேரத்தில் அவர்களை மகிழ்ச்சியுறும் வகையில் எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

நீங்களே டி பி எஸ் ஜெயராஜ் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனும் ஒரு சாதி வெறியர் என்பதனை மறந்துவிடாதீர்கள். அவர் எப்படிப்பட்ட சாதி வெறியர் என்பதனை தற்போது எஞ்சியிருக்கக்கூடிய தளபதிகள், போராளிகள், எழுத்தாளர்கள் ஆகியோரிடம் கள உறவுகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இயக்கத்தினை அத்தகைய மனப்பான்மையில்தான் அவர் கட்டி வளர்த்தார். போராட்டம் இன்று கவிழ்வதற்கு பிரபாகரனின் சாதி வெறியும் ஒரு காரணம்.

என்ன உங்களுக்கு நான் கூறுவது அபாண்டம் என்று தெரிகிறதா? யாரோ ஒருவன் பிற்காலத்தில் வரலாறு எழுதும்போது பிரபாகரனின் சாதி வெறியினை எழுதுவார்கள். அப்போது என்னை நினைத்துக்கொண்டால் சரி. என்னை வசைபாடி உங்கள் நேரத்தினை விரயமாக்காதீர்கள்.

நான் வரலாற்று ஆதாரத்துடன்தான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றேன்.

திருமாவளவன் பேசியதில் தவறில்லை என இங்கே நான் கூற வரவில்லை. ஆனால், அவர் பேசுவதற்கும் பிரபாகரன்தான் காரணம். அதுதான் பாட்டிலேயே தேசிய மக்குகள் படித்து வைத்திருக்கின்றனரே. பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன்.

என்னா ஆதார்த்தை வச்சு இருக்கிறியள்,எங்க ஒருக்கால் எடுத்து விடுங்கோவன், அல்லது ஜநாவிலதான் ஒப்படைப்பீங்களா??

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சாதி, மதப் பிரிவுகளை இல்லாமல் செய்யவே தன்னால் இயன்றவரை முயன்றார். இயக்கத்திற்குள் சாதி, மத, பிரதேசவாதத்தை ஊக்குவித்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.

நிர்மலன் உம்மிடம் இருக்கும் ஆதாரத்தை முன் வையும் பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இந்த திரியின் கீழ்வரும் விவாதங்களும், கருத்துக்களும் எந்த விடயத்தை மாற்றியமைக்க வேண்டும், சீர் திருத்த வேண்டுமென்று தலைவர் நினைத்தாரோ அந்த விடயங்களை புதுப்பிற்கவும், ஒன்றுமே தெரியாத, புரியாத புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகி வரும் புதிய இளம் சமுதாயத்தினர் மத்தியிலும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் முயற்சியாகவுமே இதை கருத முடிகிறது.

ஏனெனில் இன்று தேசிய போராட்டத்தை இளைஞர்களே நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் மத்தியில் ஏதாவது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கு அவசியமாகவுள்ளது.

ஆகவே எனது கேள்வி என்னவென்றால் இந்த தலைப்பு அவசியம் தானா??? நிலமையை சரியாக புரிந்து தானா எங்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றோம்?

80 நடுப்பகுதியில் பிரபல்யமான ஒரு ஆங்கில மாத இதலுக்கு D.S.ஜெயராஜ் அவர்களும் இதைப்போன்ற கருத்துப்பட(சாதி) ஒரு ஆக்கத்தை பதிவுசெய்து கனடிய மக்களினால் துரத்தப்பட்டு பலகாலம் தலைமறைவாக இருந்ததும், அதன் பின்பு மஞ்சரி என்ற தமிழ் வாரஇதழை ஆரம்பித்து வர்த்தகர்களினாலும், மக்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பலரும் அறிவர்.

நெடுக்கின் பல கருத்துக்களுடன் நான் உடன்படுகின்றேன்.

'சரிநிகர்' என முன்னர் ஒரு வார ஏடு கொழும்பில் இருந்து வந்தது. அதில்கூட பலதடவை பிரபாகரனின் சாதியம் தொடர்பான சிந்தனைகளை எழுதியிருந்தனர் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பலர் எனது கருத்துக்களுக்கு கடும் விமர்சனத்தினை முன்வைத்திருக்கின்றனர். அதற்கு முதலில் எனது மகிழ்ச்சியினை தெரிவிக்கின்றேன்.

என்ன செய்வது, எமது தமிழ் இனத்தில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு ஆழ வேரூன்றி இருக்கின்றதோ அதேயளவுக்கு பிரபாகரன் என்கின்ற தனிமனித வழிபாடும் அவர் தொடர்பான பிம்பமும் தலைதூக்கியிருக்கின்றது.

இதற்கு உங்களை நான் நொந்து என்ன பிரயோசனம். அவரும் ஒரு மனிதன்தான் அவரும் பல தவறுகளைச் செய்ததனால்தான் போராட்டம் 30 வருடத்துக்குள் முடிவடைந்தது என்பதனை நீங்கள் எப்போது நம்புகின்றீர்களோ அப்போதுதான் பல தெளிவுகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

அதுவரைக்கும் நான் எழுதாது விடப்போவதில்லை. எனக்குத் தெரிந்த 100 வீதமான உண்மைகளை எழுதுவேன். இதுவரை காலமும் அவ்வாறுதான் எழுதி வருகின்றேன்.

எனது கருத்துக்களை விமர்சிக்க பலருக்கும் உரிமை உண்டு. அதற்காக நான் கூறுகின்ற கருத்தினை விமர்சிப்பவர்களுக்காக திருத்திக்கொள்ளப் போவதும் இல்லை. அதேநேரத்தில் அவர்களை மகிழ்ச்சியுறும் வகையில் எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

உங்கள் முதல் கருத்தில் இருந்து இன்றுவரை நீங்கள் தலைவரையும் புலிகளையும் மட்டம் தட்டுவதிம் கற்பனையில் சில குற்ற சாட்டுக்களை புகுதுவதும்தான் உங்கள் நோக்கம் வேற தெளிவான எந்த ஒரு கருத்தும் உங்களிடம் இல்லை.

அதை விட நாய் ஒஅவர் பேஸ்டுக்கு தான் பின்னங்ககாலை தூக்கும் ஆனால் உங்களுக்கு முதல் போஸ்டில் தூக்கி அடிக்க தொடங்கியதில் இருந்து இதுவரை நிக்காமல் போகிறது என்று மட்டும் தெரிகிறது.

Edited by வினித்

நான் நினைக்கிறன் இந்த திரியின் கீழ்வரும் விவாதங்களும், கருத்துக்களும் எந்த விடயத்தை மாற்றியமைக்க வேண்டும், சீர் திருத்த வேண்டுமென்று தலைவர் நினைத்தாரோ அந்த விடயங்களை புதுப்பிற்கவும், ஒன்றுமே தெரியாத, புரியாத புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகி வரும் புதிய இளம் சமுதாயத்தினர் மத்தியிலும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் முயற்சியாகவுமே இதை கருத முடிகிறது.

ஏனெனில் இன்று தேசிய போராட்டத்தை இளைஞர்களே நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் மத்தியில் ஏதாவது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கு அவசியமாகவுள்ளது.

ஆகவே எனது கேள்வி என்னவென்றால் இந்த தலைப்பு அவசியம் தானா??? நிலமையை சரியாக புரிந்து தானா எங்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றோம்?

80 நடுப்பகுதியில் பிரபல்யமான ஒரு ஆங்கில மாத இதலுக்கு D.S.ஜெயராஜ் அவர்களும் இதைப்போன்ற கருத்துப்பட(சாதி) ஒரு ஆக்கத்தை பதிவுசெய்து கனடிய மக்களினால் துரத்தப்பட்டு பலகாலம் தலைமறைவாக இருந்ததும், அதன் பின்பு மஞ்சரி என்ற தமிழ் வாரஇதழை ஆரம்பித்து வர்த்தகர்களினாலும், மக்களினாலும் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பலரும் அறிவர்.

உங்கள் கருத்தில் ஒன்றுடன் மட்டும் உடன் பாடு இல்லை.

அதாவது புலத்தில் இளம்சமுதாயத்துக்கு சாதி பற்றி தெரியாது என்று நீங்கல் சொல்லுவது கண்மூடி பால் குடிப்பது போ.

ஒரு பெண்ணோ இல்லை ஆணீ வீட்டில் போய் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்றால் முதல் அவர்கள் சாதியை தான் கேட்ப்பார்கள் ஆனால் கட்டி கொடுத்தும் இருக்கிறார்கள் ஆதே பெடியன் படித்து நல்ல வசதியாகவும் பார்வைக்கு நல்ல மாதிரி இருந்தால் மட்டும் தான் இல்லை எனில் ஓடிபோய் தான் கட்டிக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் மிக மோசமான சாதி வெறி காணப்படுகின்றது. உதாரணமாக சில வீடுகளில் தாழ்ந்த சாதி எனப்படுவோரை அவர்கள் வீட்டிற்குள் எடுப்பதே இல்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக பணிபுரியும் தொழிற்சாலைகளுக்கு போனால் தெரியும். எப்போதும் சாதிக்கதைகளும் மற்றவர்களை சாதி சொல்லி நையாண்டி செய்வதும். இவற்றில் அதிகமாக ஈடுபடுவோர் யார் எனில் முன்னாள் புலி போராளிகள் மற்றும் தீவிர புலி ஆதரவாளர்கள். பிரதேசவாதம் என நினைக்க வேண்டாம். அனைவரும் வன்னியையும் யாழையும் சேர்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாணத்தில் ஒரு வில்லிசை கச்சேரி நடைபெற்றது. அதில் அந்த நேரம் காணப்பட்ட சோப் தட்டுப்பாடு பற்றிய கதையில் பக்கப்பாட்டு ஒருவர் எடுத்து விட்டார் அண்ணை ... எல்லா உடுப்புக்களையும் பிரேமதாஸாவிடம் அனுப்பி விட்டாலென்ன.. அதாவது மறைமுகமாக பிரேமதாஸாவின் சாதியை கிண்டலடித்து. அவ்விடத்திலேயே புலிகளால் அந்த வில்லிசை கச்சேரி நிறுத்தப்பட்டது. அதுமாத்திரமில்லாமல் அந்தக் குழு அதற்குப்பின் பல காலம் எந்த நிகழ்வையும் செயவும் அனுமதிக்கப்படவில்லை. எதிரியிடம் கூட சாதி பார்க்கக் கூடாது இது தான் புலிகளின் கொள்கை.

அப்பு நிர்மலன் ... அது சரி சாதி வெறி என்றால் என்ன ... உயர் சாதி காரர் தாழ்த்தப்பட்டவர்களிடம் காட்டுவது அல்லது தன் சாதியை தவிர வேறு எந்த சாதியையும் அடுக்காதது. அப்படிப் பார்த்தால் தலைவர் சாதி வெறியை காட்டினால் என்றால் யார் மீது காடினார்? தன் சாதியிலும் உயர்வானோர் மீதா? தழ்வானோர் மீதா? ஒரு உதாரணம் தமிழ்செல்வன் ... தலைவரின் மிக நம்பிக்கைக்குரிய போராளி... (நாவிதர் என்று உங்கள் டி.பி.ஸ் சொல்லியிருக்கிறார்). அப்படிப் பார்த்தால் தலைவரின் சாதி வெறி என்ற உங்கள் கூச்சல் அங்கேயே உடைந்து போகிறதே!!!

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த வேதனையாக இருக்கிறது

எம்மவர்களால் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும்

ஆனால் பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் மிகவும் அதிமுக்கிய விடயமாக அமுல்படுத்தப்பட்ட சாதி ஒழிப்பு என்ற நோய்

மீண்டும்இங்கு அமுல்படுத்தப்படுவது வேதனை தருகிறது. தலைவர் இல்லையென்றால் அல்லது புலிகள் இல்லையென்றால் இது போன்ற ஒழிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட, வெட்டப்பட்ட ,துரத்தப்பட்ட....... பல மீண்டும தலைகாட்டப்போகின்றன. தமிழனின் விடுதலையை தள்ளிப்போடப்போகின்றன........................???????????????

  • கருத்துக்கள உறவுகள்

சாதி என்பது இனம் என்பது போல மக்களை அவர்களின் போக்குகள், குணாம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஒன்றாக அமைகிறது. சாதிமுறைப்படி மக்களை வகைப்படுத்துவது,

  1. இனமுறைப்படி,
  2. மத முறைப்படி,
  3. பால் முறைப்படி,
  4. வயது முறைப்படி
வகைப்படுத்துவது போன்ற ஒன்றே.

ஆனால் எந்த முறைப்படியும் வகைப்படுத்தப்பட்ட மக்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதே தவறானதும் கண்டிக்க தக்கதும் ஆகும்.

உதாரணமாக, சாதி முறைப்படி வகைப்படுத்துவது தவறு, ஆகவே நாம் அவ்வாறு வகைப்படுத்த மாட்டோம், ஆனால் கல்வி அறிவு குறைந்தவர்களை நாம் மதிக்கப் போவது இல்லை, அவர்களை

  • எமது வீடுகளுக்கு அழைக்க மாட்டோம்,
  • அவர்களது வீடுகளுக்கு நாமும் போக மாட்டோம்,
  • எமது உணவகங்களுக்கு அவர்கள் வரக்கூடாது

என்று நாம் கருதினால், அது அடக்குமுறை. அது தவறு.

இந்த கல்வி அறிவு அடிப்படையிலான அடக்குமுறை தவறு என்ற காரணத்தால் கல்வி அறிவு அடிப்படையில் மக்களை வகைப்படுத்துவதே தவறு என்று நாம் முடிவெடுத்தால், லண்டனில் தோல்தலையரின் வாதத்துக்கு நாம் உடன் பட்டவராகிறோம்.

england_2.jpg

லண்டனில் தோல்தலையர் தலைவர் ஒருவரை பிரபல பத்திரிகையாளர் பேட்டி கண்டார். அவர் கேட்டார் ஏன் நீங்கள் இந்த ஆசியா நாட்டவர்களை வெறுக்கிறீர்கள்? என்று. அதற்கு தோல்தலையர் சொன்னார் “இந்த ஆசியர்கள் எங்கள் வேலைகளை எல்லாம் தாம் எடுத்து கொள்கிறார்கள். இதனால் எமக்கு வேலை கிடைக்கவில்லை. ஆகவே அவர்களை வெளியேற்ற வேண்டும்.” பத்திரிகையாளர் அதற்கு உதாரணம் கேட்டார். தோல்தலையர் சொன்னார், “மருத்துவமனைகளுக்கு போய் பாருங்கள். யாரங்கே வைத்தியர்கள்? இந்த ஆசியர்கள்.” பத்திரிகையாளர் திகைத்து போய், “மருத்துவராக வருவதற்கு நீங்கள் நன்கு படித்து, பல்கலைக்கழக பட்டம் பெறவேண்டி உள்ளது அல்லவா? உங்களிடம் அது இல்லையே?”என்றார். பத்திரிகையாளருக்கு கிடைத்த பதில், ஊரை விட்டு கிளம்ப 24 மணி நேர அவகாசம்.

ஆகவே வகைப்படுத்தல் தேவையான ஒன்று. பாரம்பரியமாக எமது சாதி முறை மக்களை பாரம்பரிய தொழில் அடிப்படையில் வகைப்படுத்தி வந்திருக்கிறது. சாதிகளுக்கு என்றே:

  1. மொழிவழக்கு,
  2. கலைகள் (நாட்டுக்கூத்து),
  3. சடங்குமுறைகள்,
  4. பண்பாடுகள்,
  5. உணவுவகைள்
இருக்கின்றன.

இலங்கை தமிழ் மீனவர்களின் சிறப்பானதும், நுணுக்கமானதுமான மீன்பிடிக்கும் தொழில்நுட்பம் நோர்வே நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. கனடாவுக்கு இன்றைக்கும் மீன்பிடி தொழில்நுட்பம் தெரிந்த இலங்கையர் சுலபமாகவும், சட்டரீதியாகவும் மீன்பிடி தொழிலுக்காக குடிவர முடிகிறது.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மீனவ சமுதாயத்தின் சிறப்பான ஆற்றலினால் கட்டியெழுப்பப்பட்டதாகும். ஆகவே எப்படி ஒருவர் தம்மை

  1. தமிழர்,
  2. சைவர்,
  3. பெண்,
  4. முதியவர்
என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட முடிகிறதோ, அப்படியே நாம் மீனவர் சமுகத்தை சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதிலும் மீனவர் சமுகத்தை சேர்ந்தவர்கள் பெருமை கொள்ள வேண்டும். அதே போல நோபல் பரிசு பெற்ற சி. வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கடராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழர்கள் என்று கூறுவதால் தமிழர்கள் பெருமை கொள்கிறார்ளோ, அப்படியே மீனவர்களும் தமது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சிறப்புற்று விளங்குவதால் பெருமை கொள்ள வேண்டும்.

seatigers.jpgfishing.jpg

சில பேர் தம்மை தமிழர் என்று அடையாளம் காட்டிக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பின்தங்கிய மக்கள், பயங்கரவாதிகள், கடன்அட்டை திருடர்கள் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்பது இவர்கள் பயம். இதே போல வேறு சிலர் தம்மை மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். படிப்பறிவற்றவர்கள், மீன் மணம் கொண்டவர்கள், சுத்தமற்றவர்கள் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்பது இவர்கள் பயம். இவர்களில் ஒருவராக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருக்க மாட்டார்.

உண்மையில் தமிழர் அல்லாதவர்களில் பெருமளவிலான பின்தங்கிய மக்கள், பயங்கரவாதிகள், கடன்அட்டை திருடர்கள் இருக்கிறார்கள். அதே போல மீனவர் சமுதயாத்தை சேராதவர்களில் பெருமளவிலான படிப்பறிவற்றவர்கள், வெறுக்கத்தக்க மணம் கொண்டவர்கள், சுத்தமற்றவர்கள் இருக்கிறார்கள்.

சாதி அடிப்படையில் மக்கள் தமது பண்பாடுகள், கலைகள், உணவுவகைகளை போற்றி பாதுகாப்பதும், பகிர்ந்து கொள்வதும் தேவையானது. அதே வேளை, சாதி அடிப்படையில் மட்டுமல்ல, இன அடிப்படையிலும் மற்றவர்களை அடக்குமுறைக்காளாக்குவது தவறானது.

Edited by Jude

எனக்கு 32 வயதாகின்றது சத்தியமா சொல்றன் இதுவரைக்கும் நான் என்ன சாதி என்று எனக்கு தெறியாது அதைப்பற்றி தெறிந்து கொள்ள வேன்டிய அவசியம் எனக்கு இருக்க வில்லை அதைப்பற்றி தெறிந்து கொள்ளப்போவதுமில்லை.எனக்கு தெறிந்ததெல்லாம் உலகிலே இரண்டே சாதிதான்.

ஒன்டு ஆண் சாதி

ஒன்டு பெண் சாதி

கிளியவன்,

எழுதிய கருத்தை அகற்றியிருக்கிறேன். மன்னிக்கவும். தவறை சுட்டிகாட்டியவர்களுக்கு நன்றி.

ஆண், பெண் என்ற வகுப்பு பால் சம்பந்தப்பட்டது. சாதியல்ல.

Edited by Jude

இந்த நவீன உலகத்துக்கு சாதிய அடையாளம் என்பது அவசியம் அற்றது.யாழ்ப்பாண நில உடமைச் சமூக வேளாள அடக்குமுறையின் எச்சமே இன்றைய சாதிய முறமை,தமிழ்னாட்டில் அது பார்ப்பனீயமாக இருந்தது.சைவ இந்து வேளான் சமூகங்களில் வர்க்கமும் சாதியும் கலாச்சார பொருளாதார அடுக்குகளாக இருக்கின்றன.பேரினவாத ஒடுக்குமுறை பிரதான ஒடுக்குமுறையாக இருந்தமையால் தமிழத் தேசிய அடையாளம் முன் நிறுத்தப்பட்டு சாதிய அடையாளங்கள் பின் தள்ளப்பட்டன.பிறப்பால் எல்லோரும் ஒரே மனிதரே.மனிதர் எல்லோருக்கும் ஆன தேவைகள் ஒன்றே.ஒரு ஒடுக்குமுறைக் கலாச்சாரத்தின் எச்சக்கங்கள் ஏன் காவப்பட வேண்டும்? இன்று தமிழர் என்று அறியப்பட்டவர் நேற்று திராவிடர், நாகர், எதோ ஒரு ஆபிரிக்கப் பழங்குடியின் வழித் தோன்றலே.மனிதர்களின் அடையாளம் என்பது மாறிக் கொண்டு வருவது.எமது அடையாளத்தைப் பாதுகாக்க விரும்பின் நாங்கள் பத்து ஆண்டுகள் பின் செல்வதா நூறு ஆன்டுகள் பின் செல்வதா அல்லது ஆயிரம் ஆண்டுகள் பின் செல்வதா? அதற்கு வாரைறை என்ன? யார் அதனைத் தீர்மானிப்பது? அதனால் இன்று நமக்குப் பயன் என்ன?

தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த திராவிட அடையாள அரசியல் பயன் பட்டது.அதன் இன்றைய எச்சமே இட ஒதிக்கீடும் சாதிய வாக்கு வங்கி அரசியலும்.இட ஒதிக்கீடு பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட மகுபாடுககளுக்கு வாய்ப்புக்களை வழங்கியது.ஆனால் சாதிய வாக்கு வங்கி அரசியல் ஒதுக்கப்பட்ட மக்களை மேலும் கூறுகளாக்கி வன்னியர் ஒரு புறம் முக்குலத்தோர் தலித்துக்கள் என பல்வேறாகப் பிரிந்து விட்டது.இந்த சாதிய அரசியலாலையே தமிழர் என்னும் அடையாளமும் அதன் ஒன்று பட்ட பலமும் இல்லாது போய் விட்டது.ஈழத்தில் இந்த சாதியத்தின் அடிப்படையில் இட ஒதிக்கீடு இல்லை.சாதிய அடையாள அரசியலால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய சமூகப் பொருளாதார நிலமைகளில் என்ன பயன்?பிரதானமான ஒடுக்குமுறை இன அடையாளத்தின் அடிப்படையில் இருக்கும் போது,ஒடுக்குமுறைக்கு எதிரான போர் இன அடையாளத்தின் அடிப்படையிலையே மேற் கொள்ளப்பட முடியும்.அதனாலையே புலிகள் தமிழர் என்னும் அடையாளத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து சமய சாதிய அடையாளங்களைப் பின் தள்ளினர்.அதற்க்கு அவர்கள் தமிழரின் வரலாற்றில் இருந்து சமய சாதிய வேற்

அற்ற வரலாற்றுக் காலங்களில் இருந்து கலை கலாச்சார அடையாளங்களை முன் நிறுத்தினர்.இதன் அடிப்படை முற்போக்கான ஒரு தமிழ் அடையாளத்தை முன் நிறுத்துவதன் மூலம், அடக்குமுறைக்கு உள்ளான அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க முயற்ச்சித்தனர்.இளங்கோ அடிகளை முன் நிறுத்தியமை,திருக்குறளையும் சிலப்பதிகாரத்தை முன் நிறுதியமை என்று பல்வேறு உதாரணக்களைக் கூறலாம்.ஆனால் அவர்களுக்கு உண்டான நெருக்கடிகளுக்குள் இதனைச் சரிவரச் செய்ய முடியாமல் போனது.பழமையில் ஊறிய யாழ்ப்பாணச் சமூகத்தில் சமய நம்பிக்கைகளில் ஊறிய ஒரு கலாச்சாரத்திற்க்குள் இவற்றை எல்லாம் செய்ய அவர்களுக்கு கால அவகாசமோ ஆளணியோ இருந்திருக்கவில்லை.இனி வரும் காலத்திலாவது இவற்றை நாம் செய்யலாம்.புலத்தில் இவற்றை தமிழ்ப் பள்ளிகளினூடாகச் செய்யலாம்,தமிழ் ஊடகங்களினூடாகச் செய்யலாம்.எல்லாம் புலிகள் செய்ய வேண்டும் என்னும் மனப்பான்மையில் இருந்தும் அவர் செய்ய வேண்டும் இவர் செய்ய வேண்டும் என்னும் நழுவல் மனப்பான்மையில் இருந்தும் நாம் செயல்வடிவமான நடவடிக்கைகளுக்குள் எம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.புலிகளும் பிரபாகரனும் அதனையே செய்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பால் எல்லோரும் ஒரே மனிதரே.மனிதர் எல்லோருக்கும் ஆன தேவைகள் ஒன்றே.ஒரு ஒடுக்குமுறைக் கலாச்சாரத்தின் எச்சக்கங்கள் ஏன் காவப்பட வேண்டும்?

இனம் என்ற அடையாளம் ஒடுக்குமுறை கலாச்சாரத்தின் அடையாளம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தமிழ் இனத்தை சிங்கள இனம் அடிமைப்படுத்தியிருப்பது இந்த ஒடுக்குமுறை கலாச்சாரத்தால் அல்லவா? நீங்கள் சொல்வது போல நாம் எல்லோரும் ஒரே மனிதர்கள், எமது தேவைகள் அனைத்தும் ஒரே விதமானவை (சிங்களவருக்கும் தமிழருக்கும் மனிதருக்கு உள்ள பிரச்சினைகள் தானே இருக்கின்றன?) என்ற உங்கள் வாதத்தின் அடிப்படையில் இந்த இனப்பாகுபாட்டை கைவிட்டு, நோர்வே தமிழர் நோர்வே மொழி பயின்று ஒற்றுமையாக வாழ்வது போல இலங்கை தமிழர் சிங்கள மொழி பயின்று ஒற்றுமையாக வாழ சொல்கிறீர்களா?

யூட் அண்ணை உந்த சாதி சங்கம் ஒண்டு இங்கனுக்கை ஆரம்பிக்கை என்ன procedure எண்டு ஒருக்கா விசாரிச்சு சொல்லுவியளோ... ??

தலைவராய் வேணும் எண்டால் நீங்கள் இருக்கோ பொருளாளர் பதவியை மட்டும் என்னட்டை தந்திடுக்கோ....

உள்ள சாதிகளுக்கை வெள்ளாளர் பறவாய் இல்லை எண்டு சொல்லுகினம்... ஆனால் அண்ணை நான் கறுப்பு.... ஆகவே வெள்ளாளர் சரிவராது கறுப்பாளர் எண்டு வைச்சால் கனபேர் சங்கத்திலை இணைவினம்... என்ன நான் சொல்லுறது...

மற்றது வருங்காலத்தில உந்த சாதிகளை எல்லாம் ஒருக்கா Re Structure செய்து ஆக்களை இடம் மாத்தினால் நல்லா இருக்கும்... அதுக்கு ஒரு Criteria வரைஞ்சால் இன்னும் நல்லது...

இப்ப பாருங்கோ கன வெள்ளாளர் மார் கடலிலை போற கப்பல்களில் கப்ரனாக இருக்கினம், மாலுமியாகவும் இருக்கினம். அவையளை பிடிச்சு கடல் தொழில் செய்யிற சாதியிலை போட வேணும்... முக்கியமாக வெள்ளையாக இல்லாத எல்லாரயும் வெள்ளாளருக்கை இருந்து மாத்தி எங்கட( வேலை வெட்டி இல்லாத) கறுப்பாளருக்கை கொண்டு வரவேணும்....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.