Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா !

Featured Replies

வாத்தியார் .............ஒன்பது நம்பருக்கு எங்கே வாசிப்பது. இணைப்பு தரவும்.

ஒன்பதாம் நம்பர்காரர் பக்கா சுயநலவாதிகள் என்று சொல்லக்கேள்வி. உண்மையா?

ஒன்பதாம் நம்பர்காரர் பக்கா சுயநலவாதிகள் என்று சொல்லக்கேள்வி. உண்மையா?

ஆம் பக்கா சுய நலவாதிகள்தான். ஆனால் அதில் பொது நலமும் கலந்திருக்கும் நண்பரே.

அதிர்ஷ்டம் எண்டல்லோ போட்டிருக்கு..! :D அப்ப நான் ஏன் ஓடப் போறன்..! <_<:lol:

:wub:

ஆம் பக்கா சுய நலவாதிகள்தான். ஆனால் அதில் பொது நலமும் கலந்திருக்கும் நண்பரே.

5 பற்றி சொல்லுங்கள், 25 திகதி பிறந்த என்னைப்பற்றி சொல்லுங்கள், 27 திகதி மகன், 26 மகள்.

செலவு இல்லாம சாத்திரம் பக்கிறத இருக்கட்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடங்கள் கணிதங்கள் வானசாஸ்திரங்கள் என்பன இன்றல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை......

பல சாம்ராஸ்ஜியங்கள் சாம்பலாக கிடக்கின்றன.... அவற்றை கிழறினால் வெள்ளையன் கண்டுபிடித்ததாக எதுவுமே இல்லை ஆனால் களவெடுத்தாகவே எல்லாம் உள்ளது. அதனால் அதை வெள்ளைகாரன் நோண்டுவதில்லை. அவன் நோண்டாவிட்டால் நானும் நீங்களும் நோண்டினால் அது நாலு சுவருக்கும்தான் தெரியும். தழிழர்கள் வாழ்ந்த ஒரு கண்டமே இன்று கடலுக்கு அடியில்தான் கிடக்கின்றது. தமிழரின் அனைத்து படைப்பும் அதோடு அழிந்ததுதான்.....

ஜோதிடம் எனப்படுவது ஒரு சாத்வீக கணிதம். வானசாஸ்திரத்தையும் கணித்தையும் ஒன்றாக கலந்து காசு பார்ப்பதற்கு சில ஏமாற்றுகாரர்கள் கண்டுபிடித்த ஒன்று. ஆனால் அவர்கள் அறிவு மிகுந்தவர்கள் இலகுவாக விளங்கமுடியத அளவிற்கு கணிதத்தை பாவித்து இருக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு....

ஒரே விடயத்தை ஐந்துபேருக்கு சொல்வது அதில் அது இருவருக்கு நடந்தால்.... அந்த இருவரும் அவர்களின் இலவச பரப்புரை (விளம்பரம்) காரர் ஆகிவிடுகின்றர்.

தற்போதைய இரசிபலனை ஒரு மாதம் தொடாந்து சேகரியுங்கள்........ அதில் எண்ணிபாருங்கள் ஆக கூடியது 25விடயங்கள்தான் மொத்தம் இருக்கும் அதை வேறு வேறு இராசிஜகளுக்கு பிரித்துவிடுவது அதூன் அவர்கள் செய்வது. வாசித்துவிட்டு நாம் செய்வது அதில் எழுதியது ஒன்று நடந்துவிட்டால் அப்போதே அதில் எழுதியிருந்தார்கள் என்று கூப்பாடுபோடுவது.

எந்த பெரிய ஜோதிடராயிருந்தாலும் ஓரளவுக்கு மேல் சொல்ல முடியாது...ஒரு,இரு விசயம் தெரிந்தவர்கள் அதை பத்தாக்கி சொல்வார்கள்...அது சரி எனக்கு ஒரு ஜோதியம் சொல்லுங்கோ உள்ளங்கை கடித்தால் காசு வரும் என சொல்கிறார்களே அது உண்மையா?

உள்ளங்கை கடித்தால்: சொறிந்தால் புண்வரும், சொறியாட்டி விசர் வரும்...

ஆம் பக்கா சுய நலவாதிகள்தான். ஆனால் அதில் பொது நலமும் கலந்திருக்கும் நண்பரே.

அப்படியென்றால் பக்கா என்ற பதம் அர்த்தம் அறறதாகிவிடாதோ?

அப்படியென்றால் பக்கா என்ற பதம் அர்த்தம் அறறதாகிவிடாதோ?

பக்கா என்னும் சொல் எந்த மொழியுங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கா என்னும் சொல் எந்த மொழியுங்கோ?

பக்கா

பக்கா (இந்தி சொல்) = மிக சரியாக.

மிகச் சரியான, முழுமையான

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

அமெரிக்காவின் மினசோட்டா பேராசிரியர் ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி இந்த இராசி பலன்கள் எல்லாமே கொஞ்சமாக தமது இடத்தை விட்டு விலகி உள்ளதாகவும் இதனால் உங்கள் இராசி சின்னமும் கூட மாறி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இது சிலருக்கு மகிழ்வையும் இன்னும் சிலருக்கு ஆதங்கத்தையும் தந்துள்ளது.

  • The astrological calendar is all wrong.

  • People might think they're a Pisces (compassionate, imaginative), but often they're really an Aquarius (witty, clever) -- at least based on an exact reading of the Earth's orbit. Or maybe, if you were born between Nov. 29 and Dec. 17, you're actually a strange new zodiac sign: Ophiuchus, the serpent holder.

  • "I defined the zodiac by the constellations that are in the background when you look at where the sun, moon, and stars are," said Minneapolis Community and Technical College instructor Parke Kunkle, the man responsible for momentarily turning the astrology world upside down. "Ophiuchus has been around a long time, and the sun has been going through Ophiuchus for thousands of years."

http://articles.latimes.com/2011/jan/14/news/la-sciw-astrological-signs-20110114

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் கேள்விப்பட்டது இச்செய்தி... சோதிடாமாக, ஆரூடமாகக்கூட இருக்கலாம்...

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன...

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் தம்பித்து விடுகிறது. 3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. எந்த வித பழுதும் செயற்கைக்கோளில் - அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசா(NASA)விற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு, நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில், தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்…தம்பித்துவிடுகின்றன. அப்படி தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது தம்பித்துவிடுகின்றன. அதே சமயம், செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது. ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்(?),அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசா(NASA)விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர். மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர். அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.

ஆம்! நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. :) நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..? மற்றவர்களின் பின்னால் ஏன் செல்ல வேண்டும்? :D

சற்று சிந்திப்போமா..?

.

  • கருத்துக்கள உறவுகள்

----

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசா(NASA)விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர். மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர். அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

ஆம்! நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. :) நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..? மற்றவர்களின் பின்னால் ஏன் செல்ல வேண்டும்? :D

சற்று சிந்திப்போமா..?

நாஸா விஞ்ஞானிகளும் இந்து சமயத்தை பின் பற்ற ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

இனி ராக்கெட்டை ஏவும் போது சோதிடத்தில் நம்பிக்ககை வைத்து..... கற்பூரம், கொழுத்தி, அட்டமி, நவமி, இல்லாத நாட்களில் ஏவினால்... விண்ணில் எந்த கிரகத்தின் தடங்கலும் ஏற்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாஸா விஞ்ஞானிகளும் இந்து சமயத்தை பின் பற்ற ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

இனி ராக்கெட்டை ஏவும் போது சோதிடத்தில் நம்பிக்ககை வைத்து..... கற்பூரம், கொழுத்தி, அட்டமி, நவமி, இல்லாத நாட்களில் ஏவினால்... விண்ணில் எந்த கிரகத்தின் தடங்கலும் ஏற்படாது.

இது இவருக்கு (சோதிடக்காறனுக்கு)

அவல் கிடைத்தமாதிரி செய்தி

விடுவாரா...? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முனிவர் அருளியது...

யாரென்று தெரியாது!

சாத்திரம் கேட்பவர்களையும் சொல்பவர்களையும் கடவுள் அங்கீகரிப்பதில்லை. சாத்திரிகள் எதிர்வுகூறுபவர்களாகவும் திருமணத் தரகர்களாகவும் செயல்படுகிறார்கள். கடவுளைத் தவிர வேறு எவராலும் எதிர்வு கூற முடியாது எனக் கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். சிலர் எதிர்வுகூற முடியுமெனச் சொல்லுவது பொய்யாகும். உங்களிடமே சில தகவல்களைப்பெற்று உங்களுக்குச் சாத்திரம் சொல்லுவதை உங்களில் பலர் அறிவீர்கள்.

உங்களிடம் அறிவிருக்கிறது. திறமை இருக்கிறது. பொருளாதாரம் இருக்கிறது. இருந்தும் உங்களை நீங்களே அழித்துக்கொள்ளுகிறீர்கள்.

சாத்திரிகள் குறையிருப்பதாகச் சொல்லி சாந்திசெய்வததையும் அவர்களே பொறுப்பேற்பார்கள். சாத்திரத்தைவிட சாந்தியில் உங்களிடம் அதிகம் சம்பாதிப்பார்கள். சாந்தியைக் கட்டாயப்படுத்துவதை நீங்கள் உணரமுடியும். உங்களுடைய கோரிக்கைகளை ஏற்பவர் கடவுளைத்தவிர வேறு எவரும் இல்லை. அதிகாலை 5மணிக்கு எழுந்து வடக்கு நோக்கி மடிகாலில் இருந்து கையேந்திக் கடவுளிடம் உங்கள் கோரிக்கைகளை ஒப்படைத்து வாருங்கள். சாந்தி செய்பவர்களிடமும் சாத்திரிகளிடமும் போகத் தேவையில்லை.

தன்னம்பிக்கை உள்ளவருக்கு சோதிடம் பொய்:

தன்னம்பிக்கைஇல்லாதவருக்கு சோதிடம் மெய்:

சோதிடம் மெய் அதை சொல்லுறவை தான் பொய்.... :lol: :lol: :lol:

கணவன், மனைவி பிரிவுக்கு சாதகத்தில தோசம் இருக்கென்று ஒருவர் சொல்லி இருக்கிறார், அதற்கு பரிகாரம் (அவர் ஏழாம் இலக்கத்தில் பிறந்தவராம்) ஏழு வாரத்திற்கு ஏழு மரக்கறி சமைத்து காகத்திற்கு போடவேணும் என்று, (இதற்கு £500 வசூல் வேற) அந்த லூசு மனுசியும் புருசன் திருந்தி திரும்ப வரவேணும் என்று நினைச்சு ஏழு மறக்கரியோட சமைச்சு பாக்கில போய் காகத்தை கத்தி கூப்பிட்டு சாப்பாடு வைச்சிட்டு வந்து இருக்கு. ஏழு கிழமையும் முடிஞ்சுது அவரை அந்தப் பக்கமே காண இல்லை. தோசம் என்று சொன்னவருக்கு போன் பண்ணி நிலைமையைச் சொல்லி இருக்குகிறா, அவர் சொன்னவராம், 'சாதகத்தில பிரிஞ்சது சேரும் என்று தானே இருக்கென்று' சொல்லி இன்னொருபரிகாரம் செய்யச் சொன்னவராம், அதாவது அவ பிறந்த இலக்கத்திற்கும் அதே மாதிரி சமைச்சு காகத்திற்கு போடச்சொல்லி...

இது அந்த பெண்ணின் அறியாமையா இல்லை உண்மையிலேயே நம்பிக்கையா? :unsure:

சோதிடம் உண்மையா பொய்யா என்று தெரியாது, அதில் அதிகம் ஈடுபாடும் கிடையாது. ஆனால் இப்படியானவைகளை கேள்விப்படும் போது, விசித்திரமாக இருக்கிறது. :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா

உங்கினேக்கை பூணூலை போட்டுக்கொண்டு திரியிற கள்ளப்பூசாரியளாலையும் ,

முதலாம் வாய்ப்பாடே தெரியாத கள்ளச்சாத்திரியளாலையும் வாற பிரச்சனையள்தான் உது :)

பக்கா என்னும் சொல் எந்த மொழியுங்கோ?

ஆங்கிலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் தான். (pukka)

இது அந்த பெண்ணின் அறியாமையா இல்லை உண்மையிலேயே நம்பிக்கையா? :unsure:

உண்மையில் அந்த பெண்ணின் மனம் நலிந்துள்ள காலகட்டத்தில், அவர் எப்படியாவது தனது கணவனை கிடைக்கசெய்ய ஏதாவது வழி தேடும் போது, சோதிடம, மற்றும், அது இது என்று பேக்காட்டுவார்கள்.

இப்படியான நிலைமையில் உள்ளவர்களது சுற்றத்தார் தான் எடுத்துசொல்லவேண்டும்.

Edited by Eas

ஆங்கிலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் தான். (pukka)

ஆங்கிலத்தை கேட்கவில்லையுங்கோ.

உண்மையில் அந்த பெண்ணின் மனம் நலிந்துள்ள காலகட்டத்தில், அவர் எப்படியாவது தனது கணவனை கிடைக்கசெய்ய ஏதாவது வழி தேடும் போது, சோதிடம, மற்றும், அது இது என்று பேக்காட்டுவார்கள்.

இப்படியான நிலைமையில் உள்ளவர்களது சுற்றத்தார் தான் எடுத்துசொல்லவேண்டும்.

அவரின் உறவினர் நண்பர்கள் எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை. கனடாவில் ஒரு சிறந்த யோசியர் உள்ளாராம் அவர் சொல்லவதெல்லாம் நடக்குமாம்... (கோதாரி!!! :blink: ) என்று நேரே சென்றுள்ளதாக அறிந்தேன். :rolleyes: தானாக உணர்ந்தாலே தவிர மறவர் ஒருவரை உணரும் படி வற்புறுத்த முடியாது தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.