Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"யூத இனத்துக்கு அடுத்து உலகெங்கிலும் பரவியது தமிழினமே'

Featured Replies

ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில், "ஆசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழர்கள் நல்கிய பங்களிப்பு' பற்றிய சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடந்தது. சென்னை, தி.நகர் வாணி மகாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கருத்தரங்கை துவங்கி வைத்து, பிரபல மொழி வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரை முடிவுகளிலிருந்து, முக்கிய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழர்களின் கடல் கடந்த அயல்நாட்டு தொடர்புகளையும், அத்தொடர்புகளின் சமுதாய வரலாற்று பின்னணிகளையும் விரிவாக ஆராய்ந்து நிலை நாட்டும் விதமாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி அளவுக்கு, உலகின் பெரும்பான்மையான தொல் பழங்கால மொழிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மொழியாக வேறு எந்த மொழியும் இருப்பதாக தெரியவில்லை.

தமிழர்கள் அளவுக்கு உலகெங்கிலும் பரந்து வாழும் இனமாக, வேறொரு இனத்தை குறிப்பிடவும் முடியவில்லை. யூத இனத்திற்கு அடுத்ததாக, உலகெங்கிலும் பரவியுள்ளது தமிழினமே. தமிழர்களின் கடற் பயணம், கடல் வணிகம் குறித்து பழந்தமிழ் இலக்கியங்கள் தரும் செய்திகளும், பிறநாட்டவர் மூலம் பெறப்பட்ட குறிப்புகளும் ஏராளமாக உள்ளன.

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவின் ஒரு பகுதியான பாலஸ்தீனத்தை ஆண்ட சாலமன் அரசனின் கப்பல்கள், தமிழகத்துடன் வணிக உறவு கொண்டதற்குரிய பழைய வரலாற்று குறிப்புகள், கிறிஸ்தவ திருமறையில் உள்ளன. ஆசிய மொழிக் குடும்பங்களுள் ஒன்றான சிந்தி மொழியில் குடும்பத்தோடு தமிழைத் தலைமை மொழியாகக் கொண்ட திராவிட மொழிகள், நெருங்கிய உறவு கொண்டுள்ளதை 1856ம் ஆண்டு மொழி ஆய்வு அறிஞர் கால்டுவெல் தெளிவுபடுத்தினார். இதை ஜெர்மன் நாட்டு, இந்தியவியல் அறிஞரான மாக்ஸ் முல்லரும் உறுதிப்படுத்தினர். சிறந்த மொழியியல் வல்லுனரான ஸ்கிரேடரும் இதை வழி மொழிந்துள்ளார். சுமேரிய மொழிகளில் தமிழின் பேராதிக்கம் இருப்பதை பல்வேறு வெளிநாட்டு அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் - சுமேரிய உறவுகள் குறித்த ஆய்வுகள், தமிழின் தொன்மை பற்றிய புது ஒளிக்கீற்றுகளை நல்கும் என்பது உறுதி. இவ்வாறு அன்பழகன் பேசினார்.

விழாவில், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் சாமுவேல் பேசும் போது, ""ஆசியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு பற்றிய சர்வதேச கருத்தரங்கு, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நாளை வரை நடக்கிறது. பல்வேறு நாட்டு மொழி, வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர்,'' என்றார். விழாவில், மொழி ஆய்வு குறித்த மூன்று புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன், ஆசியவியல் நிறுவனத்தின் சேர்மன் இஸ்ரேல், ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் துணை தலைவர் ஜமால் மற்றும் ஜப்பான், கிரீஸ், ஹாங்காங், அமெரிக்கா, இலங்கை, சீனா மற்றும் கொரிய நாட்டு வரலாறு மற்றும் மொழி ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=167937

பெரிய சாதனையாக்கும் . யூத இனம் எங்கே? , நாம் எங்கே? அதி புத்திஜீவிகளால் நிறைந்த நாடு. பலதசாப்தங்களுக்கு முன்னரே அவர்களூக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். சுண்டக்காய் அளவே கொண்ட நாடு சுட்டுவிரல் நீட்டி மிரட்டினா ல் வல்லரசுகளே செவிசாய்க்குமளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்கள். சும்மா கிடவுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சாதனையாக்கும் . யூத இனம் எங்கே? , நாம் எங்கே? அதி புத்திஜீவிகளால் நிறைந்த நாடு. பலதசாப்தங்களுக்கு முன்னரே அவர்களூக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். சுண்டக்காய் அளவே கொண்ட நாடு சுட்டுவிரல் நீட்டி மிரட்டினா ல் வல்லரசுகளே செவிசாய்க்குமளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்கள். சும்மா கிடவுங்க.

எங்களுக்கு, ஒரு மைக் கிடைச்சால்......sing.gif சும்மா நீட்டி, முழங்க வேண்டியது தானே... நீங்க கண்டுக்காதீங்க சிற்பி. :D

யூதர்களுடன் அப்படி என்ன கோபம்?

யூதர்கள் எல்லா நாடுகளிலும் கட்சி பேதமின்றி உயர்மட்டங்களில் இராஜதந்திர தொடர்புகளை வைத்துள்ளார்கள். மேற்கு நாடுகளில் அதிகமான ஊடகங்கள் யூதர்களின் கையில். ஊடகங்களையும் உயர்மட்ட தொடர்புகளையும் யூத இனத்தின் நன்மைக்காய் பாவிப்பதில் அவர்கள் கில்லாடிகள். அவர்களின் சமயத்தில் ஒரு யூதனை இன்னுமொரு யூதன் கொல்வது மிகப் பெரிய பாவம். ஒற்றுமை என்பது அவர்களுடன் கூடப்பிறந்தது.

இவங்களோட போய் எங்கட இனத்தை ஒப்பிட வெட்கமாயிருக்கு. :(

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் யூதர்களுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் பரந்து கிடக்கின்றார்கள் என்றுதானே சொல்லப்பட்டிருக்கு தம்பிகளா... தமிழர்களின் சமகால சிறப்பு குணங்களைப் (குறிப்பாக காட்டிக்கொடுத்தல், காலை வாருதல் ஒற்றுமையின்மை) பற்றி அவர் எங்கும் குறிப்பிடவில்லைதானே...அதற்குள் யூதர்களின் குணங்களோடு தமிழர்களை உங்களுக்குள்ளேயே ஒப்பிட்டுக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் சேறு பூசிக்கொள்கிறீர்களே... :unsure:

ஏன் முயன்றால் முடியாதா...? ஒற்றைத் துவக்குடன் துவங்கி விருட்ச்சமாகியவர்களின்-வழித்தோன்றல்களின் தன்னம்பிக்கை பேச்சா இவை? :huh:

  • தொடங்கியவர்

ஒருமுறை மறைந்த ஊடகவியலாளர் சிவராம் (தராக்கி) அவர்களை கனடாவில் வைத்து ஒரு உறவு கேட்டது: "உங்கள் ஆங்கிலம் தரம் கூடியதாக உள்ளது. கொஞ்சம் அதை இலகுமுறையில் எழுதினால் பலரும் கூடுதலாக வாசிக்க உதவும்". அதற்கு அந்த நாட்டுப்பற்றாளர் சொன்னார் : "நீங்கள் தான் உங்கள் தரத்தை, ஆங்கில அறிவை உயர்த்த முயற்சிக்க வேண்டும், மாறாக நான் இறங்கி வர கூடாது ".

கனடாவில் கூட யூதர்களின் பல நல்ல விடயங்களை நம்மவர் பார்த்து முன்னேறல் தேவை.

ஒருமுறை மறைந்த ஊடகவியலாளர் சிவராம் (தராக்கி) அவர்களை கனடாவில் வைத்து ஒரு உறவு கேட்டது: "உங்கள் ஆங்கிலம் தரம் கூடியதாக உள்ளது. கொஞ்சம் அதை இலகுமுறையில் எழுதினால் பலரும் கூடுதலாக வாசிக்க உதவும்". அதற்கு அந்த நாட்டுப்பற்றாளர் சொன்னார் : "நீங்கள் தான் உங்கள் தரத்தை, ஆங்கில அறிவை உயர்த்த முயற்சிக்க வேண்டும், மாறாக நான் இறங்கி வர கூடாது ".

கனடாவில் கூட யூதர்களின் பல நல்ல விடயங்களை நம்மவர் பார்த்து முன்னேறல் தேவை.

அம்பி அகோதா கனடாவில் மட்டுமல்ல உலகம்பூரா அவர்கள் பெரிய நிலையில்தான் இருக்கின்றார்கள். அமெரிக்காவிலேயே அறுபது இலட்சம் இர்ருக்கின்றார்கள் . அந்த நாட்டு அரசியலை ஆட்டுமளவிற்கு சக்தியுள்ள இனம் .

தமிழர்கள் யூதர்களுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் பரந்து கிடக்கின்றார்கள் என்றுதானே சொல்லப்பட்டிருக்கு தம்பிகளா... தமிழர்களின் சமகால சிறப்பு குணங்களைப் (குறிப்பாக காட்டிக்கொடுத்தல், காலை வாருதல் ஒற்றுமையின்மை) பற்றி அவர் எங்கும் குறிப்பிடவில்லைதானே...அதற்குள் யூதர்களின் குணங்களோடு தமிழர்களை உங்களுக்குள்ளேயே ஒப்பிட்டுக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் சேறு பூசிக்கொள்கிறீர்களே... :unsure:

ஏன் முயன்றால் முடியாதா...? ஒற்றைத் துவக்குடன் துவங்கி விருட்ச்சமாகியவர்களின்-வழித்தோன்றல்களின் தன்னம்பிக்கை பேச்சா இவை? :huh:

பூச்சாண்டியெல்லாம் தேவையில்லை. உண்மையை உண்மையாக எதிர்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

கனடாவில் மட்டுமல்ல உலகம்பூரா அவர்கள் பெரிய நிலையில்தான் இருக்கின்றார்கள். அமெரிக்காவிலேயே அறுபது இலட்சம் இர்ருக்கின்றார்கள் . அந்த நாட்டு அரசியலை ஆட்டுமளவிற்கு சக்தியுள்ள இனம் .

ஒரு வளர்ச்சிக்கு ஒப்பீடு ஒரு அளவு கோலாயும் உந்துகோலாயும் உள்ளது. புலம் பெயர் தேசங்களில் நாம் முன்னேற, சரியான பாதையில் வளர நமக்கு நமது இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு ஒரு இனம் தேவையுள்ளது. அதில் ஒன்று யூத இனம்.

நாமும் அவர்கள் போல வளர வேண்டும் என்பது ஒரு இலக்கு. வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருப்பது நன்று.

http://www.jewsinamerica.org/

யூதர்களை பார்த்தாவது நாங்கள் திருந்துவோம்.

முதலில் எங்களை அறிந்துகொள்வோம்.

கொசுக்கள்கூட உலகெல்லாம் பரந்து கிடக்கின்றது.

ஒற்றை துவக்குடன் தொடங்கி விருட்சமாகியவருக்கு எத்தனை பேர் துணை வந்தார்கள்?

சிவராம் சொன்ன மாதிரி நல்ல விடயங்களை நோக்கி எங்களை உயர்த்த முயற்சிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்களைப்பார் என்று சொல்வதில் என்ன இருக்கிறது

அவன் அதற்காக என்ன செய்கின்றான்

அதை நாங்கள் செய்யணும்

பிரான்சும் அவர்களது கைவிரல் அசைவுக்கு தகுந்தபடிதான் ஆடுகிறது

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இன்றைய பொருளாதரா நலன்களை முன்னிலைப்படுத்தும் சமுதாய அரசியல் வாழ்வில் தமிழினம் ஓடுவதும் இந்த ஓட்டப்பந்தய போட்டியில். இதில் எமக்கு முன்னே வெற்றிகரமாக ஓடுபவர்களை பார்த்து ஓடவேண்டும் என்பது பலராலும் ஏற்றுகொள்ளப்படுவது.

கனடாவில் எப்படி இவர்கள், யூதர்கள், எப்படி இவ்வாறு பலமாக உள்ளார்கள். இவர்கள் ஒருகாலத்தில் "வேண்டப்படாதவர்களாக" இருந்தார்கள். உதாரணத்திற்கு பூங்காக்களில் "நாய்களுக்கு தடை" என்ற பதாதைக்கு அருகில் "யூதர்களுக்கும் தடை" என எழுதப்பட்டதாம்.

இன்றும் இவர்களுக்கு எதிராக பல விஷமத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் தலையில் சுடப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் பெண் கூட யூதர். இன்றும் கனடாவின் மொன்றியல் நகரில் அவர்களின் கோயிலான "சினகாக்" விசமனத்தனங்களுக்கு உள்ளாகின்றது.

கனடாவில் இவர்கள் வசம் பல துறைகள் முன்னிற்கின்றன:

  • மருத்துவத்துறை ( ஒன்டாரியோ மாநிலத்தில் இது 40பில்லியன் டாலர்/ 10 மில்லியன் மக்கள் பெறுமதி உடையது)
  • அசையா சொத்துக்கள் ( வியாபார நிலையங்கள், வீடுகள், காணிகள்.. )
  • தங்க, வைர வியாபாரம்
  • சட்டத்துறை

மேற்சொன்ன துறைகளில் தமக்குள் ஒற்றுமையை கொண்டுள்ளார்கள். இந்த துறைகளுக்குள் வேறு யாரையும் இலகுவில் அனுமதிக்க மாட்டார்கள்.

Edited by akootha

  • தொடங்கியவர்

புதிதாக நாட்டுக்கு வருவர்களுக்கு அவர்கள் அமைப்பு நிதி உதவி

புதிதாக நாட்டுக்கு குடிபெயர்ந்து வருபவர்களுக்கு ஊக்க பணமாக தலைக்கு 10000 டாலர்கள் வரை கொடுப்பார்கள். இதை வைத்து படிக்கவோ இல்லை ஒரு தொழிலையோ ஆரம்பிக்க உதவ இந்த தொகையை பாவிக்க தருவார்கள். ஒரு காலத்தில் நல்லாக வந்தால் இயலுமானதை மீண்டும் சமுதாயத்திற்கு அன்பளிப்பு செய்ய சொல்லுவார்கள். பலரும் இலட்சக்கணக்கில் அன்பளிப்பது உண்டு.

தொழில்துறையில் கைதூக்கி விடுதல்

மருத்துவத்துறையில் தமக்கு யூதர்கள் என தெரிந்தவர்களை, இதற்கு குடும்ப பெயர் பெரிதும் துணை நிற்பது, உள்ளே எடுப்பது, முன்னேற்றி விடுவது. இதற்காக என்ன ஒருவரின் கல்வித்தராதரம் உள்ளதோ அதற்கேற்ப வேலை ஒன்றை உருவாக்கி அவர்களை தெரிவு கூட செய்வார்கள்.

அநேகமான வைத்தியசாலைகளின் 100-500 மில்லியன்களை நிர்வகிக்கும் முதன்மை நிர்வாகிகளாக (CEO) உள்ள யூதர்கள் ( MD with MBA), பல செலவுகளில் யூத நிறுவனங்களை உள்வாங்குவார்கள்: புதிய உபகரணங்கள், கட்டிட புனர்நிர்மாணம்...

தமது இனத்தவருக்கு வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் பழக்கமும் உண்டு.

தமது "பகுதிக்குள்" வேறு இனத்தவர் வருவதை விரும்பாதவர்கள்.

டொராண்டோவின் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஒருவர் விலைக்கு போன வீடு ஒன்றை வேண்டினார். குடும்பத்துடன் வாழத்தொடங்கி மூன்று மாதங்கள் ஆயின. அவரின் கதவை அந்த பகுதியில் வாழும் ஒரு குழுவினர் தட்டினர். "நீங்கள் வேண்டிய விலையை விட ஒரு இலட்சம் கூடத்தருகிறோம், விற்பீர்களா?", என கேட்டனர். அவரும் வித்துவிட்டு சென்றுவிட்டார். பிறகு தான் அவருக்கு தெரியும் அவரது குடும்ப பெயர் "யூத" இனப்பெயராக இருந்ததால் தான் அவருக்கு இந்த வீடு விற்கப்பட்டது என.

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சாண்டியெல்லாம் தேவையில்லை. உண்மையை உண்மையாக எதிர்கொள்ளுங்கள்.

நன்றி.. இனி உங்கள் விருப்பம்..

ஒரு வளர்ச்சிக்கு ஒப்பீடு ஒரு அளவு கோலாயும் உந்துகோலாயும் உள்ளது. புலம் பெயர் தேசங்களில் நாம் முன்னேற, சரியான பாதையில் வளர நமக்கு நமது இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு ஒரு இனம் தேவையுள்ளது. அதில் ஒன்று யூத இனம்.

நாமும் அவர்கள் போல வளர வேண்டும் என்பது ஒரு இலக்கு. வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருப்பது நன்று.

http://www.jewsinamerica.org/

வியாபாரம் செய்யும் யூதர்கள், சங்கம் அமைத்து ஒன்றுகூடி நெளிவு சுளிவுகளை பகிர்ந்து கொண்டு வரிமுறையிலிருந்து தப்புவது வரை ஆலோசனை வழங்குவார்கள் .அது அவர்களின் ஒற்றுமையை எடுதுக்காட்டுகின்றது.புதிய வரியை அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அந்தத் துறையில் உள்ள யூதகில்லாடிகள் கூடி ஆலோசித்து தன் இனத்திற்குமட்டும் ஆலோசனை அளிகின்றான் .காரணமவர்கள் தங்களை அடையாளப் படுத்த விரும்புபவர்கள். நாம் நாளைக்கே ஒரு ஊசியில் வெள்ளைத்தோலாகலாமென்றால்.ஒரே நாளில் நமது அடையாளத்தை தொலைத்து விடுவோம்.

  • தொடங்கியவர்

கோடை விடுமுறையும் இஸ்ரேலும்

பல யூத இனத்தவர்கள் தம் பிள்ளைகளை, வெளிநாடுகளில் பிறந்தவர்களை, கோடை விடுமுறையில் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு மொழி, கலாச்சாரம் உட்பட நாட்டுப்பற்றை வளர, வளர்க்க உதவுவார்கள்.

தமக்குள்ளேயே எல்லாவற்றையும் செய்யும் பண்பு

ஒரு புது வியாபார கட்டட தொகுதியில் ஒரு தமிழர் ஒரு இலக்கத்தை வேண்ட முற்பணம் கட்டியிருந்தார். அதை கட்டி விற்கும் யூதர், தனது யூத சட்டவியலாளர், கணக்காளர் என ஒரு சிறு குழுவுடன் வீற்றுருந்தார்.

ஒரு வேறு இன தொழில்சார் வல்லுனர்களை இவர்கள் நாடுவது அரிது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் பெருமளவில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கியது ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான்..! அங்கு சென்ற சந்ததியினர் தம்மை முதலில் நிலைநிறுத்திக்கொண்டு தமது வழித்தோன்றல்களை கல்வி கலைகளில் முன்னேற்றியுள்ளது. எனக்குத் தெரிந்த வட்டாரங்களிலேயே மருத்துவத்துறை வருமானவரித்துறை என்று பல துறைகளில் இளம்தலைமுறையினர் காலடி எடுத்து வைத்துள்ளனர். :rolleyes:

இவன் தெருவில் நின்று வீணாப் போய்ட்டான் என்று இளம்தலைமுறையினரில் யாரையும் காணவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முன்னேறித்தான் உள்ளார்கள். இந்தத் தலைமுறை உச்சத்துக்கு வரும்போது தமிழர்களின் தொழிற்துறைப் பரவல் வெளியுலகுக்குப் புலப்படும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இசை

கல்வியிலும் பொருளாதாரத்திலும் எம்மினம் உயர்வடைந்து வருகிறது. வெளிநாடுகளில் எமக்கு கிடைக்கும் இந்த வசதிகளை நாம் அதிஉச்ச அளவில்பயன்படுத்தணும். அதை எல்லோரும் செய்யணும். செய்கிறார்கள்.

நிச்சயம் அறுவடை நன்றாக இருக்கும். :rolleyes:

  • தொடங்கியவர்

இன்று கனடாவில் "மனச்சாட்சியின் சில்லு" - The Wheel of Conscience வெளியிடப்பட்டது.

எந்த துறைமுகத்தை நோக்கி ஏதிலிகளாக வந்த யூதர்கள், 1939 ஆம் ஆண்டு, அந்த துறைமுகத்தில், Halifax, வெளியிடப்பட்டது.

இதில் வந்த 937 பேரில் கிடத்தட்ட 250 பேர் ஹிட்லரின் பிடியில் இறந்தனர்,

ஆம் அந்த கப்பல் திருப்பி அனுப்பபட்டது

A memorial to the hundreds of Jews aboard the MS St. Louis who were turned away from Canada on the eve of the Second World War was unveiled in Halifax Thursday.

In May 1939, almost 1,000 European Jews fled Nazi Germany for Cuba, which had issued them visas. After sailing for a week, the ocean liner pulled into Havana harbour. After waiting for several days, the 937 passengers learned Cuba had changed its mind, and the ship was told to leave.

Read more: http://www.cbc.ca/arts/story/2011/01/20/ns-stlouis-memorial.html#ixzz1BdP1BcRN

  • தொடங்கியவர்

பணத்தை நிர்வகித்தல்

இன்னொரு துறையில் யூதர்கள் முன்னோடி என்றால் அது பணத்தை நிர்வகித்தல். உலகின் பெரிய அளவிலான பணத்தை, அதை நிர்வகிக்கும் வங்கிகளின் பங்குதரார்களாக, நிர்வாகிகளாக உள்ளனர் (ie: Goldman Sachs)

கனடாவில் பரந்த அளவில் தமது நாட்டை வளர்க்க பல்லின மக்களிடம் இருந்தும் கூட பண முதலீட்டை கோரியுள்ளனர். "இஸ்ரேல் போந்து" என உறுதியளிக்கப்பட்ட உத்தரவாத வட்டியுடன், கனேடிய சட்ட அமைப்புக்களுக்கு இணங்க வழங்கபடும்.

http://www.israelbonds.com/israelbonds/HQ_CONTENTS/HQ_pages/home.aspx

State of Israel Bonds: 60 Years of Building Israel

The 60th anniversary of State of Israel Bonds will be commemorated throughout 2011. Officially launched in 1951, the ensuing decades have seen the Bonds organization play a vital, consistent and reliable role in building Israel’s economy

இப்படியான பண உதவிகள் மூலம் தமது நாட்டை வளர்த்துக்கொள்ளுகின்றனர்.

.

யூத இனத்தை முன்னேற்றியவர்கள் அவர்களில் இருந்த திறமைசாலிகள். அவர்களை அழித்தது, தமது சமூகத்தை மட்டுமே கருத்தில் எடுக்கும் குறுகிய மனப்பான்மை.

அமெரிக்காவில் இப்போது எப்படி யூதர்கள் இருக்கிறார்களோ அப்படியே 1940 களில் ஜேர்மனியில் இருந்தார்கள். ஜேர்மனியப் பணம் முழுக்க அவர்கள் பொக்கட்டுக்களில், சாதா ஜேர்மனியக் குடிமகன் தெருவில்.

இறுதியில் ஜேர்மனியர்கள் இவர்களை வறுத்து எடுத்தார்கள்.

இன்று கூட வெள்ளை இன மக்களுக்கு இவர்களைப் பிடிப்பதில்லை. இவர்களின் பண ஆவேசமும் குறுகிய மனப் பான்மையும் தான் இதற்குக் காரணம்.

இஸ்ரேலும், யூத இனமும் இன்று தப்பி இருப்பதற்குக் காரணம் கிறீஸ்தவத்தின் பிறப்பிடம் முஸ்லீம்களின் கையில் விழுந்துவிடக்கூடாது என்று மேற்குலகம் கருதுவதாலேயே.

quote name='esan' timestamp='1295698434' post='635254']

.

இஸ்ரேலும், யூத இனமும் இன்று தப்பி இருப்பதற்குக் காரணம் கிறீஸ்தவத்தின் பிறப்பிடம் முஸ்லீம்களின் கையில் விழுந்துவிடக்கூடாது என்று மேற்குலகம் கருதுவதாலேயே.

Edited by Dash

quote name='esan' timestamp='1295698434' post='635254']

.

மேற்கு உலகத்தின் பொருளாதார வளம்,அரசியல் பலம் 2ம் இவர்களின் கையில் அது வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது ஒரு உதாரணத்திற்கு ப்ரித்தனியாவைப் எடுத்தால்

தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ஒரு யூதர்

முன்னாள் வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜக் ஸ்ட்ட்ரோ

தொழிற் கட்சியின் நிதி சேகரிப்பாலர் லேவி ஒரு யூதர்

பழமைவாத கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரான சக் கோல்ட்ஸ்மித்

பழமைவாத கட்சியின் முன்னாள் தலைவர் மைக்கல் கொவார்ட்

இதெல்லம் சிறு உதாரணம் தான் ஆனால் அவர்களது பலம் இதை விட பல மடங்கு பெரியது

பிரித்தானிய அரசியல்வாதிகள் பலர் யூத கலப்புள்ளவர்கள். ஆனால் யூதர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்வதிலை. ரொனி பிளேயரிலும் யூத கலப்புள்ளது. முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது இஸ்ரேலின் சார்பாக அவர்கள் செல்வது இயற்கை.

பிரித்தானிய அரசியல்வாதிகள் பலர் யூத கலப்புள்ளவர்கள். ஆனால் யூதர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்வதிலை. ரொனி பிளேயரிலும் யூத கலப்புள்ளது. முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது இஸ்ரேலின் சார்பாக அவர்கள் செல்வது இயற்கை.

ஏன் தற்போதைய பிரதம மந்திரி டேவிட் கம்ரூனிடமும் யூத கலப்பு உள்ளது, அதை விட பிரித்தானியாவின் பிரபல வியாபாரிகள் பலர் யூத்ர் உதாரணமாக

டெஸ்க்கோவின் நிறைவேற்று உத்தியோகத்தர் டெரி லேகி

பிரபல ஆடை வர்த்தக நிறுவன உரிமையாளர் பிலிப் கிரீன்

பிரபல பல் தொழில் வர்த்தகர் அலன் சுகர்

தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் ரூபர்ட் மேர்டொச், இவர் மிக முக்கியம் உலத்திலேயே மிக பெரிய ஊடக சாம்ராஜ்ஜியம் அவருடையது தான்,

மார்க்ச் அன்ட் ச்பென்சர் நிறுவன்ம்

இதெல்லம் யூத்ர்கள்டன் சம்பந்தப் பட்டது அந்தளவுக்கு நாம் வளர்லாமா என்பது கேள்விக் குறி, ஏன் என்றால் ஒருவன் கடை போட்டல் போட்டியாக 10 பேர் போட்டுவீனம் :(:(

ஏன் தற்போதைய பிரதம மந்திரி டேவிட் கம்ரூனிடமும் யூத கலப்பு உள்ளது, அதை விட பிரித்தானியாவின் பிரபல வியாபாரிகள் பலர் யூத்ர் உதாரணமாக

டெஸ்க்கோவின் நிறைவேற்று உத்தியோகத்தர் டெரி லேகி

பிரபல ஆடை வர்த்தக நிறுவன உரிமையாளர் பிலிப் கிரீன்

பிரபல பல் தொழில் வர்த்தகர் அலன் சுகர்

தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் ரூபர்ட் மேர்டொச், இவர் மிக முக்கியம் உலத்திலேயே மிக பெரிய ஊடக சாம்ராஜ்ஜியம் அவருடையது தான்,

மார்க்ச் அன்ட் ச்பென்சர் நிறுவன்ம்

இதெல்லம் யூத்ர்கள்டன் சம்பந்தப் பட்டது அந்தளவுக்கு நாம் வளர்லாமா என்பது கேள்விக் குறி, ஏன் என்றால் ஒருவன் கடை போட்டல் போட்டியாக 10 பேர் போட்டுவீனம் :(:(

Sainsburys , Lloyds ......;ext ....ext ... எல்லாம் அவர்களது.

ஆனால் அவர்கள் முன்னால் வருவதில்லை. தங்களுக்கும் சமூகத்துமாக உழைப்பவர்கள்.

ரூபர்ட் இன் ஊடகங்களே போதும் பிரித்தானியாவை தங்களின் ஆளுகைக்குள் வைத்திருப்பதற்கு. (சின்ன ஒரு உதாரணம் Sun பத்திரிகையே அதிகமான தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றது.)

ஓப்பீட்டளவில் பிரித்தானியாவில் குறுகிய காலத்தில் அவர்களை விட முன்னேறியது எம் சமூகம். ஆனால் ஏனோ தெரியவில்லை ஒரு தமிழன் இன்னொரு தமிழன் செய்யும் தொழிலுக்கு போட்டியாகவே தனது தொழிலை செய்ய விரும்புகிறான். :blink:

இந்த மந்தை மனோபாவம் மாறினால் தமிழர்களுக்கு விடிவு உண்டு. :)

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.