Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்ததி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்ததி

வெள்ளி, 21 ஜனவரி 2011 01:29

இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற இலக்கிய விழாவை எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமித்துப் புறக்கணிக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்றார் சர்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய்.

இந்நாட்டில் இடம்பெறுகின்ற அடக்குமுறைகள், அநியாயங்கள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுத்தாளர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் மஹிந்த அரசின் ஏற்பாட்டில் காலியில் இடம்பெற இருக்கும் இவ்விழாவை பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும் என்றும் இவர் குரல் கொடுத்து உள்ளார்.

பேசும் திராணி அற்றவர்களாக நசுக்கப்பட்டு இருக்கின்ற இலங்கைச் சகோதரர்களுக்காக விழாவை புறக்கணிக்க வேண்டியமை ஒவ்வொரு எழுத்தாளரதும் கடமை என்று வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பாரிஸை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்கிற சர்வதேச ஊடக உரிமைகள் அமைப்புக்கும் எழுத்துமூல வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

tamilcnn.com

கருத்துச் சுதந்திரதுக்கு எதிராக இருக்கும் அருந்ததியைக் கண்டிக்கிறேன்.வாழ்க எழுத்தாளர் மானாடு,வாழ்க அண்மையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மானாடும்.

அவர் என்ன சூடு சுறணை அற்ற மாற்றுகருத்து என்று கதை வசனம் பேசும் சில சந்தர்ப்பவாத தமிழ் எழுத்தளர்கள் போல நினைத்தீர்களா..இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் பேருக்காகவும் எழுத்தை எடைபோடுபவர்கள்..அவர் தான் நேசிக்கும் எழுத்தை தான் நேசிக்கும் அடக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்தவர். தான் எழுதுவதையே நியத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்..பின்னையவர்கள் எழுதுவது யாவும் கற்பனையே அவர்கள் எழுதுவதற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது..

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

cnn என்று இணைய முகவரி பதிஞ்சிட்டா எல்லாரும் சி என் என் ஆக முடியாது.

அதென்ன கொக்கரிக்கிறார் என்றால்..??!

அந்தப் பெண்மணி தேசிய தலைவர் பற்றியும் விடுதலைப்புலிகளின் நிர்வாக அமைப்புப் பற்றியும் போராட்டத்தின் நோக்கம் இலட்சியம் பற்றியும் அறிந்து உணர்ந்து எழுதுபவர்.

இன்று கொழும்பில் கூடிக் கும்மாளம் போடும் சிவத்தம்பி உட்பட பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த போது விடுதலைப்புலிகளுக்கு சிங் சாங் போட்டார்கள். கொழும்புக்குப் போனதும் சிங்கள அரசுக்கு சிங் சாங் போடுகிறார்கள்.

ஆனால் அருந்ததி ராய் உண்மையான ஜனநாயகவாதியாக தான் கண்டதை உணர்ந்ததை உண்மையை சொல்ல வேண்டிய இடத்தில் துணிந்து சொல்கிறார். அதனால் அவர் அடைந்த அவமானங்கள் பல. அவரை நோக்கி கொக்கரிக்கிறது என்று எழுத வெட்டி ஒட்டும் அல்லது மொழிபெயர்த்து மூலம் குறிப்பிடாமல் ஊடகம் நடத்துபவர்களுக்கு எங்கிருந்து உரிமை கிடைக்குதோ..???!

Edited by nedukkalapoovan

அருந்ததிராய் எப்போ இலங்கை போனார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருந்ததிராய் எப்போ இலங்கை போனார்?

அருந்ததிராய் அஸ்வரிராயா? என்ற கேள்வி வராதவரைக்கும் மகிழ்வடைகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததிராய் எப்போ இலங்கை போனார்?

நானும் நெடுக்ஸ் எழுதினதை வாசித்து போட்டு வந்து கேட்கலாம் என்டு இருந்தேன் "எப்ப தம்பி அருந்ததி ராய் ஊருக்குப் போனவர் என்டு" ஆனால் நான் தான் ஒரே தம்பியில் குறை பிடிக்கிறது என்டு கோபிக்க கூடாது அல்லவா அது தான் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன் :rolleyes: ...அருந்ததி ராயையும்,அனிதா பிரதாபையும் போட்டு குழப்பி உள்ளார்.

பொழுது போக்கு வாசித்தல் என்று போட்டிருகின்றீர்கள்.

அருந்ததிராயை பற்றி கேட்டால் என் அதற்குள் ஜ்ஸ்வர்ராயை கொண்டுவருகின்றீர்கள்.

சரியோ பிழையோ அருந்ததிராயை பற்றி ஜெயமோகனின் குறிப்பையும் முடிந்தால் படிக்கவும்.

புக்கர் பரிசு வென்ற "தெ கோட் ஒf ஸ்மால் திங்ஸ்" எனது கலச்சனில் ஒன்று.

எனது வாசிப்பு-பொழுது போக்கிற்கு இப்படி ஒரு வரைவிலக்கணம் இருக்கின்றதா? 'ஒரு நூலும் விடாமல் குடித்திருக்கின்றேன்' என்று மேலும் அது தங்கள் வாசிப்பில் இருந்த ஒன்றையும் கட்டாயம் சேர்த்து இருக்க வேண்டும் என்பதுவும். ஒருவன் தன்னுடைய செயல்களால் தனக்குரிய உண்மை இயல்பை பிறர் உணருவார்கள் என்றே எண்ண வேண்டும். தவிர தன் கோதிரம், தன் பதவி போன்றவற்றை அதற்கு பயன்படுத்துவது மிக மிஞ்சிய அற்பத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததிராய் எப்போ இலங்கை போனார்?

This is not a war on terror. It is a racist war on all Tamils

http://www.guardian.co.uk/commentisfree/2009/apr/01/sri-lanka-india-tamil-tigers

http://www.youtube.com/watch?v=LeW4isYOA7A

பிபிசி -

Arundhati Roy: "Colossal humanitarian tragedy"

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28875

Arundhati Roy joins call to boycott Lanka literary festival

http://www.indianexpress.com/news/arundhati-roy-joins-call-to-boycott-lanka-literary-festival/740208/

நான் சிறியவனாக இருந்த போது 1990 இல் இந்திய சஞ்சிகையான புரன்லைன் மகஜீனில் இவரின் விஜயம் ஒன்று குறித்து வாசித்ததாக ஞாபகம். அதுபற்றிய உறுதிப்படுத்தல்களை என்னால் எடுக்க முடியாதுள்ளது.

அந்த வகையில்.. குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

ஆனால் சர்வதேச விருதுகளைப் பெற்ற இவர் சர்வதேசத்தின் அபிமானம் பெற்ற இவர் சொல்லும் கூற்றுங்கள் விசேடமாகக் கணிக்கப்படும் நிலை இருக்கிறது. ஆனால் அவர் கூறி இருப்பதை கொக்கரிப்பதாக எழுதுவதற்கு குறிப்பிட்ட தமிழ் ஊடகம் என்று சொல்லும் ஊடகத்துக்கு என்ன உரிமை உண்டு என்பது எனக்குப் புரியவில்லை.

அருந்ததி ராய் போன்றவர்களை சிங்களவர்கள் போல சிங்களத்துக்கு மறைமுகமாக அதரவளிக்கும் தமிழர்களும் விரும்பாது இருக்கக் கூடும். ஆனால் அவர் எமது அவலங்கள் போராட்டங்கள் தொடர்பில் உண்மையின் பால் நின்று கருத்துரைத்திருப்பது எப்போதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

நிச்சயமாக புலிகளை கொல்லலாம்.. தமிழ் மக்களைக் கொல்லக் கூடாது (30,000 போராளிகளும் 200,000 மக்களும் கொல்லப்பட்டது தெரிந்து கொண்டும் இன்றும்.. புனிதத்துவ சன நாய் அகம் பேசும் துரோகிகள் ஒருபோதும் புலிகளை தமிழ் மக்களின் குழந்தைகளாக காணப் போவதில்லை. ஆனால் உண்மை அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பது தான். அதைச் சொல்வது தான் ஜனநாயகம். :)

Edited by nedukkalapoovan

cnn என்று இணைய முகவரி பதிஞ்சிட்டா எல்லாரும் சி என் என் ஆக முடியாது.

அதென்ன கொக்கரிக்கிறார் என்றால்..??!

அந்தப் பெண்மணி தேசிய தலைவர் பற்றியும் விடுதலைப்புலிகளின் நிர்வாக அமைப்புப் பற்றியும் நேரடியாக வந்து கண்டு உணர்ந்து எழுதியவர்.

இன்று கொழும்பில் கூடிக் கும்மாளம் போடும் சிவத்தம்பி உட்பட பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த போது விடுதலைப்புலிகளுக்கு சிங் சாங் போட்டார்கள். கொழும்புக்குப் போனதும் சிங்கள அரசுக்கு சிங் சாங் போடுகிறார்கள்.

ஆனால் அருந்ததி ராய் உண்மையான ஜனநாயகவாதியாக தான் கண்டதை உணர்ந்ததை உண்மையை சொல்ல வேண்டிய இடத்தில் துணிந்து சொல்கிறார். அதனால் அவர் அடைந்த அவமானங்கள் பல. அவரை நோக்கி கொக்கரிக்கிறது என்று எழுத வெட்டி ஒட்டும் அல்லது மொழிபெயர்த்து மூலம் குறிப்பிடாமல் ஊடகம் நடத்துபவர்களுக்கு எங்கிருந்து உரிமை கிடைக்குதோ..???!

அருந்ததி ராய் அவர்களின் கருத்து யாருக்குப் பிடிக்காமல் இருக்குமோ அவர்களின் இடத்தில் இருந்துதான் இந்தத் தளம் வருகிறது.

அவரின் வேண்டுகோள் இவர்களிற்குக் கொக்கரிப்பது போல் தெரிகிறதென்றால் இவர்களின் பின்னணி என்னவென்பது வெளிப்படையாகத் தெரிகிறதே!

தாங்களாகவே மெல்ல மெல்ல தமது முகமூடிகளை இவ்வாறான எழுத்துக்கள் மூலம் கழற்றுகிறார்கள்.

இன்னும் பல தேசியம், நடுநிலை எண்ட முகமூடிகளுடன் இயங்குகின்றன. நாம் தான் அவர்கள் யார் என்பதை உணரவேண்டும்.

This is not a war on terror. It is a racist war on all Tamils

நான் சிறியவனாக இருந்த போது 1990 இல் இந்திய சஞ்சிகையான புரன்லைன் மகஜீனில் இவரின் விஜயம் ஒன்று குறித்து வாசித்ததாக ஞாபகம். அதுபற்றிய உறுதிப்படுத்தல்களை என்னால் எடுக்க முடியாதுள்ளது.

அந்த வகையில்.. குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

அது இவரல்ல... அனிதா பிரதாப், முன்னர் Frontline இல் பணியாற்றியவர்..இப்போது சர்வதேச ஊடகங்களில் பணியாற்றுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

அது இவரல்ல... அனிதா பிரதாப், முன்னர் Frontline இல் பணியாற்றியவர்..இப்போது சர்வதேச ஊடகங்களில் பணியாற்றுகின்றார்

நன்றி நிழலி. தவறை திருத்திக் கொள்கிறேன். :)

அனி பிரதாப் புரொண்லைனில் வேலை செய்யவில்லை.டி.பி.எஸ் ஜெயராஜ் தான் வேலை செய்தார்.

அனிதாப் பிரதாப் இன்டியன் எக்ஸ்பிரசில் வேலை செய்து பின்னர் இன்டியா டுடே இல் பல வருடங்கள் வேலை செய்தார்.அப்போது புலிகள் அனுராதபுர தாக்குதல் செய்த போது அதைபற்றி விரிவாக ஒருகட்டுரை எழுதினார்.இவ்வளவு தமிழர்களும் அழிந்ந்துகொண்டிருக்கும் போதும் சிங்கள பொதுமக்கள் மத்தியில் எதுவித தாக்கமும் இல்லை அதை அவர்களும் உண்ரவைக்க வேண்டும் என்று ரோ வால் சோல்லப்பட அதைநடாத்தியவர்கள் தான் புலிகள்.

இவர் பின்னர் அமெரிக்க டைம்ஸ்,சீ,என்,என் இலும் வேலை செய்தார்.

அருந்ததிராய் சிங்கள அரசை வன்மையாக கண்டித்தாலும் புலிகளையும் கண்டிக்க தவறவில்லை.

A Nobel laureate was among a group of prominent writers who pulled out of an upcoming literary festival in Sri Lanka on Friday to protest in favour of free speech.

Organizers said Turkish novelist Ferit Orhan Pamuk, who won the 2006 Nobel Prize in Literature, and 2006 Man Booker Prize winner Kiran Desai, were no longer attending this month's Galle Literary Festival in Galle, a popular tourist destination south of the capital Colombo.

http://www.monstersandcritics.com/news/southasia/news/article_1613574.php/Authors-boycott-Sri-Lankan-festival-in-human-rights-protest

Pamuk, Desai pull out of Sri Lanka literary festival

Prize-winning novelists Orhan Pamuk and Kiran Desai have pulled out of Sri Lanka's main literary festival. The couple are currently at Jaipur literature festival in India and were due to go on to Galle, in southern Sri Lanka, for the event next week.

Noam Chomsky, Arundhati Roy and Ken Loach are among those backing a boycott.

http://www.bbc.co.uk/news/world-south-asia-12249305

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33448

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏப்ரல் 2009 ; நானும் கணவரும் இந்தியாவிலிருந்து லண்டன் திரும்பும் வழியில் விமானத்தில் டைம் ஒப் இந்திய பத்திரிகையில் அருந்ததி ராயின் கட்டுரையை தற்செயலாக படிக்க நேர்ந்தது. தமிழருக்காக குரல் கொடுக்க தவறியதற்காக ஊடகங்களையும் அரசுகளையும் இந்தியாவையும் குறை கூறி எழுதியிருந்தார், தன்னையும் சேர்த்து.

அந்த பத்திரிகை பிரதி இன்றும் என்னிடம் உள்ளது. பிரபாகரன் இருப்பாரானால் இன்றும் இருபத்தைந்து வருடங்களுக்கு போராடும் மனவலிமை அவரிடம் உள்ளது என்று மே 19 பின்பு இனொரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

Pamuk, Desai pull out of Sri Lanka literary festival

Prize-winning novelists Orhan Pamuk and Kiran Desai have pulled out of Sri Lanka's main literary festival.

The couple are currently at Jaipur literature festival in India and were due to go on to Galle, in southern Sri Lanka, for the event next week.

The Galle Literary Festival says they are now unable to attend because of Indian re-entry visa regulations.

Some rights groups have urged authors to boycott the event because of Sri Lanka's restrictions on free speech.

Reporters Without Borders said it was "highly disturbing that literature is being celebrated in this manner in a land where cartoonists, journalists, writers and dissident voices are so often victimized by the current government."

Noam Chomsky, Arundhati Roy and Ken Loach are among those backing a boycott.

But there is no indication that the campaign had anything to do with the withdrawal by Nobel laureate Mr Pamuk or his Indian partner Ms Desai, a Booker prize winner.

Organisers say they were unable to resolve difficulties with India over the tourist visa restrictions, under which Mr Pamuk would be unable to re-enter the country within two months.

Free speech

"I am very sorry for and frustrated about this decision… I looked forward to seeing the beauties of Sri Lanka very much," the Turkish author is said to have written.

Ms Desai's missive apparently said: "Nobody could be sadder than me. I love Sri Lanka and had a super time the last time I was in Galle."

Rights groups say at least 17 journalists and media workers have been killed in Sri Lanka in the last decade, and others have been threatened, imprisoned or fled the country.

But the founder of the Galle festival Geoffrey Dobbs says the event is important as a platform for free speech.

"The Festival is one of the few forums in the country which actively promote lively and spirited discussions," he said. "We want this to continue... and we will always welcome any writers and journalists to use the festival as a platform to air these issues."

http://www.bbc.co.uk/news/world-south-asia-12249305

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனி பிரதாப் புரொண்லைனில் வேலை செய்யவில்லை.டி.பி.எஸ் ஜெயராஜ் தான் வேலை செய்தார்.

அனிதாப் பிரதாப் இன்டியன் எக்ஸ்பிரசில் வேலை செய்து பின்னர் இன்டியா டுடே இல் பல வருடங்கள் வேலை செய்தார்.அப்போது புலிகள் அனுராதபுர தாக்குதல் செய்த போது அதைபற்றி விரிவாக ஒருகட்டுரை எழுதினார்.இவ்வளவு தமிழர்களும் அழிந்ந்துகொண்டிருக்கும் போதும் சிங்கள பொதுமக்கள் மத்தியில் எதுவித தாக்கமும் இல்லை அதை அவர்களும் உண்ரவைக்க வேண்டும் என்று ரோ வால் சோல்லப்பட அதைநடாத்தியவர்கள் தான் புலிகள்.

இவர் பின்னர் அமெரிக்க டைம்ஸ்,சீ,என்,என் இலும் வேலை செய்தார்.

அருந்ததிராய் சிங்கள அரசை வன்மையாக கண்டித்தாலும் புலிகளையும் கண்டிக்க தவறவில்லை.

அர்யுனின் செவிப்பறை மேல் மேடை போட்டு, புலிகளிடம் இதை சொனார்கள், அதை அவர்கள் செய்தார்கள்.

தான் வெளிப்படுத்தும் கருத்துக்களில் உண்மை தெளிவாக வெளிப்பட வேண்டும் என்று அக்கறை இருப்பவன், தன்னுடைய மந்திர சக்தியை ஆதாரப்படுத்தி கருத்துக்களை முன்வைக்கமாட்டான். அடுத்தவன் நம்புவானா என்ற கவலையே சிறிதும் இல்லாதவன் "நான் பார்த்தனான்." "நான் கேட்டனான்." என்ற வார்த்தைகளே அவன் பந்திகளை நிரப்பும்.

தமிழீழம் எப்படி ஈழத் தமிழர்களுடையதோ, அப்படியே காஷ்மீரும் காஷ்மீரிகளது தாயகம் தான்.யாரடா தேசத்துரோகி..

பன்னாட்டு கம்பெனிகளுக்கு தேசத்தை கூறு போட்டு விற்பனை செய்பவர்களா.. எதிர்த்து குரல் கொடுப்பவர்களா....

76025_1453435062204_1423116401_31104126_6312426_n.jpg

மீண்டும் வாசித்தல் எனது பொழுதுபோக்கு என்று வாசிக்காமலே பதில் எழுதுகின்றீர்கள்.84 ஆண்டு இந்தியா டுடேயில் அனிதாப்பிரதாப் எழுதிய கட்டுரையை .படிக்கவும்.

ஒன்றுமே அறியாமல் துவக்கை தூக்கி சுட்டதன் விளைவுதான் இவ்வளவும்.

அப்ப என்னத்துக்கு நீங்கள் துவக்கை தூக்கினீங்கள்.....??

கழுதைக்கு மேலை பயணம் போன அப்பரும் மகனை கதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களோ.....?? அப்படி தான் நீங்கள்... மற்றவை என்ன சொல்லுகினம் எண்டதுக்காகவே வாழும் கூட்டம்...

உங்களுக்கு எது நல்லது எண்டதை எப்பவும் பார்க்க முடியாதவை....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வாசித்தல் எனது பொழுதுபோக்கு என்று வாசிக்காமலே பதில் எழுதுகின்றீர்கள்.84 ஆண்டு இந்தியா டுடேயில் அனிதாப்பிரதாப் எழுதிய கட்டுரையை .படிக்கவும்.

ஒன்றுமே அறியாமல் துவக்கை தூக்கி சுட்டதன் விளைவுதான் இவ்வளவும்.

அர்யுன், நீர் பதிந்து கொண்டிருக்கும், ஒவ்வொரு பதிவும் உமது சிந்தனாசக்தியின் உயரத்தை வெளிச்சப்படுத்துகின்றது.

1. அருந்ததிராயை அறியாதவன், அரசியல் ஞானம் 'சூனியம்' என்கின்றது ஒன்று.

2. சிறுவர் இருவர் சண்டை செய்யும் போது, ஒருவன் வாயால் அடுத்தவனை மிரட்டிக் கொண்டிருப்பான், கையால் சொல்லும் வலி உள்ளவனுக்கு வாயின் பயன்பாடு ஏன் வேண்டப் போகின்றது? இதேபோல் விவாதத்தை வெல்ல அதற்குரிய ஒழுங்கில் மட்டும் போ."எனக்கு அறிவுக் கொம்பு உள்ளது," "நீங்கள் செக்கு மாடுகள்." இவற்றை எந்த செக்குமாறுகள் விரும்பினாலும் அவை அவர்களின் வசனமாகும், "எனவே நான் சொல்கின்றேன். இரண்டு வருடங்களில் இவை இப்படித்தான் நடக்கும்" என்ற தோரணை மேற்கோள்கள் ஒன்றும் நல்லபதிவன் தொடாத வகையாகும்.

3. புத்தகப் படிப்பின் பயன் தனி. அவை ஒரு போதும் மதிப்பெண்களாக பயன்பட அல்ல?

Edited by தேவன்

3. புத்தகப் படிப்பின் பயன் தனி. அவை ஒரு போதும் மதிப்பெண்களாக பயன்பட அல்ல?

கடலுக்கை நீத்த போற பலர் முந்தி தண்ணீக்கை கால் கூட வைச்சு இருக்காதவை எல்லாம் நீச்சல் புத்தக்கத்தை படிச்சு போட்டு போய் முதல் தடவையே மைல்கணக்கிலை நீந்துறவை எண்டு சொன்னாலும் சொல்லுவினம்...

அருந்ததி ராய் அவர்களின் கருத்து யாருக்குப் பிடிக்காமல் இருக்குமோ அவர்களின் இடத்தில் இருந்துதான் இந்தத் தளம் வருகிறது.

அவரின் வேண்டுகோள் இவர்களிற்குக் கொக்கரிப்பது போல் தெரிகிறதென்றால் இவர்களின் பின்னணி என்னவென்பது வெளிப்படையாகத் தெரிகிறதே!

தாங்களாகவே மெல்ல மெல்ல தமது முகமூடிகளை இவ்வாறான எழுத்துக்கள் மூலம் கழற்றுகிறார்கள்.

இன்னும் பல தேசியம், நடுநிலை எண்ட முகமூடிகளுடன் இயங்குகின்றன. நாம் தான் அவர்கள் யார் என்பதை உணரவேண்டும்.

உண்மை!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.