Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல்

2011-02-04 01:06:28

பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர்.

இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்று வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறிப்பிட்ட ஆண் தனக்கு பெண் சகோதரங்கள் உள்ளதாகவும் அதற்காக சீதனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெற்ற அன்று அவருக்கு 35 லட்சம் சீதனம் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து அன்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த மாப்பிளையை அதிகாலையே காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரைத் தேடி அவரது இடத்திற்குச் சென்றுள்ளனர்.

பெற்றோர் மற்றும் சகோதரங்களுக்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆகவே எனது பக்கம் ஒருவரையும் கூட்டிக் கொண்டு வரமாட்டன் என்று கூறியே மாப்பிளை குறித்த பெண்னை ஏமாற்றியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

newjaffna.com

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளில் பல தணிக்கை செய்யபட்டுள்ளது. பத்திரிகை நாகரீகமோ என்னமோ தெரியல்லை...............

திருமணம் நடந்த இரவு என்று செய்தி மொட்டையாக உள்ளது.... முதலிரவுக்கு முன்பா பின்பா என்பது மூடிமறைக்கபட்டுள்ளது.

அதைவைத்தே செய்களை படிப்பவர்கள் இழப்புகளை இலகுவாக கணக்கு போடமுடியும்.

குடும்பத்தாருக்கு கலியாணத்தில் இஸ்டமில்லை பெண்ககோதரர்களுக்கு சீதனத்தில் இஸ்டம் என்பதை நம்பி திருமணத்தில் அன்று அவருடைய கையில் 35லட்சம் பணத்தை இலண்டனுக்கு படிக்கவந்த ஒரு மாணவி கொடுத்தால்......?

இதை ஏமாற்றம் என்று சுருக்கமாக கூறமுடியாது.

நானும் அந்த நபரை தேடுகிறேன்............... ஒரு பாராட்டு தெரிவிப்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில இவ்வளவு காசையும் வைச்சுக் கொண்டு ஒரு மாப்பிள்ளை எடுக்க முடியாமல் இருந்தவாவோ இவா..??! எங்கையோ இடிக்குதே...???!

35,00000 இலட்சம்.. கிட்டத்தட்ட 20,000 பவுண்ஸ். ஒரு வீடு வாங்கியிருலாம்..! அதை போய் எவனோ ஒருத்தனுக்கு கொடுக்கிற அளவுக்கு...?????! காதல் பைத்தியம். ம்ம்ம்.. :lol::D

முன்னர் சொல்லி இருந்தேன் பெட்டையளுக்கு நல்லவங்களை அடையாளம் காணவே தெரியாது என்று. எவனாவது முடிச்சவிக்கி.. பொறுக்கிகளுக்குப் பின்னால ஓடுங்கள். இதுகளைப் பார்த்து பாவப்படுறதா.. இல்ல.. வேதனைப்படுவதா..???! :D:)

இதில எதுக்கு பேஸ் புக்கை கூப்பிடுறீங்க. பேஸ் புக்கில ஏதேனும் விதி இருக்கா.. இங்கு காதலித்தால் பேஸ் புக் உங்களுக்கு உதவி செய்யும்.. கலியாணம் செய்து வைக்கும் என்று.

நீங்களா பேஸ் புக்கில போய் தேடிப் பிடிக்கிறது.. பிறகு ஏமாறிறது.. பிறகு பழியை பேஸ் புக்கில போடுறது. இதுவே புழைப்பா போச்சு. :D:)

Edited by nedukkalapoovan

... நானும் பேஸ்புக்கில் திரிகிறேன்!!! ஒன்று கூட அம்பிடிதில்லை!!!!!!!!!! <_<

பொடியனுக்கு பம்பர் றிக்கற் அடிச்சிருக்கு... :lol: :lol: :lol:

... நானும் பேஸ்புக்கில் திரிகிறேன்!!! ஒன்று கூட அம்பிடிதில்லை!!!!!!!!!! <_<

இப்ப இதை நீங்கள் குடிசைக்கைத்தொழிலாகப் பண்ணலாம்...முதலில்லா யாவாரம்..அடிச்சா அதிர்ஸ்ட லச்சுமி கூரையப்பிச்சுகொண்டெல்லோ வரும்... :D முயற்சியைக் கைவிடாதிங்க...

Edited by நெருப்பு நீலமேகம்

முழு லூசுகள்! என்னத்தைப் படிச்சு என்ன பிரயோசனம்? :rolleyes:

லண்டனில இவ்வளவு காசையும் வைச்சுக் கொண்டு ஒரு மாப்பிள்ளை எடுக்க முடியாமல் இருந்தவாவோ இவா..??! எங்கையோ இடிக்குதே...???!

லண்டன் ஆம்பிளைகள் கலியாணம் கட்ட மாட்டம் என்று ஒத்தைக் காலில் நின்றால் பெண்கள் வேறு என்ன செய்வது. :unsure:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாத்துகிற பெண்களைவிட ஏமாறும் பெண்கள்தான் விகிதாசாரத்தில் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

35லட்சம் பிளஸ் ஒரு முதல் இரவு..! :unsure: ச்சே என்ன ஒரு டீல்..! :wub:

முன்னர் சொல்லி இருந்தேன் பெட்டையளுக்கு நல்லவங்களை அடையாளம் காணவே தெரியாது என்று. எவனாவது முடிச்சவிக்கி.. பொறுக்கிகளுக்குப் பின்னால ஓடுங்கள். இதுகளைப் பார்த்து பாவப்படுறதா.. இல்ல.. வேதனைப்படுவதா..???! :D:)

கதையோடை கதையா தன்ர உபாதையையும் உள்ளே புகுத்தும் நெடுக்கின் எழுத்துப்பாணி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:

கதையோடை கதையா தன்ர உபாதையையும் உள்ளே புகுத்தும் நெடுக்கின் எழுத்துப்பாணி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..! :D:lol:

சரியான கண்டுபிடிப்பு... இதுக்கு ஒரு பச்சை குத்தாமல் என்னால் யாழைவிட்டுப்போக முடியவில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுகிறவன் எந்தப் பிளானும் இல்லாமல் இருப்பான், ஏமாத்துறவன்தான் பக்காவாய் பிளான் பண்ணி சுருட்டிட்டுப் போவான். :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டால் அந்தக் காசை வட்டிக்கு கொடுத்து விட்டு காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுவேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டால் அந்தக் காசை வட்டிக்கு கொடுத்து விட்டு காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுவேன் :)

வட்டிக்கு பணம் கொடுத்தால் காலை நீட்டிகொண்டா சாப்பிட வேண்டும்?

இது என்ன வில்லங்கமான விடயம் போல தெரியுது.....

நான் என்டால் அந்தக் காசை வட்டிக்கு கொடுத்து விட்டு காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுவேன் :)

எனக்கு வட்டிக்கு கொடுப்பது விருப்பமில்லை... வட்டிப்பணம் எப்போது நிலையில்லாதது... சத்தியமா நான் என்றால் இப்படி ஒரு பெடியனுக்கு கொடுத்திருக்கமாட்டன்... அவருக்கு சகோதரங்கள் இருந்தால் அவர் எல்லோ உழைத்துப்பார்க்கவேண்டும்... இவன் எல்லாம் ஒரு ஆம்பிளை இவனுக்கு எல்லாம் 35லட்சம் சீதனம்... பேசாமல் நெடுக்கலாபோவன் அண்ணா சொன்னமாதிரி ஒரு வீடு வாங்கிக்கொண்டு இருந்திருக்கலாம்.... :D

நான் என்டால் அந்தக் காசை வட்டிக்கு கொடுத்து விட்டு காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுவேன் :)

மன்னிக்கவும் வட்டி காசு வாழ்க்கையை அழிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

35லட்சம் பிளஸ் ஒரு முதல் இரவு..! :unsure: ச்சே என்ன ஒரு டீல்..! :wub:

கதையோடை கதையா தன்ர உபாதையையும் உள்ளே புகுத்தும் நெடுக்கின் எழுத்துப்பாணி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..! :D:lol:

நான் என்னை வைச்சு எழுதல்ல சார். ஊர் உலகத்தில என் கண் முன்ன நடக்கிறதுகளை வைச்சுத்தான் அப்படிச் சொன்னன். அதை நீங்க தவறா புரிஞ்சு கொண்டிருக்கீங்க என்று நினைக்கிறன். :D :D :)

சரியான கண்டுபிடிப்பு... இதுக்கு ஒரு பச்சை குத்தாமல் என்னால் யாழைவிட்டுப்போக முடியவில்லை.. :D

ஏனுந்த கொலை வெறி உங்களுக்கு எல்லாம். இது மீண்டும் மீண்டும் எங்களை பெண்களுக்கு எதிராவே நடந்து கொள்ளத் தூண்டும். சொல்லிட்டன். :lol::D

நான் என்டால் அந்தக் காசை வட்டிக்கு கொடுத்து விட்டு காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடுவேன் :)

அடுத்தவரின்ர உழைப்பில நீங்கள் (வட்டி வசூலித்து) கால் நீட்டிக் கொண்டு இருந்து புறியாணி சாப்பிட்டாலும் எப்படி சீரணமாகும் ரதி? :huh::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிஞ்சு வட்டிக்கு காசுகுடுக்குற ஆக்களின்ரை குடும்பங்கள்,குழந்தைகுட்டிகள் நிம்மதியாக வாழ்ந்ததை இண்டுவரைக்கும் காணேல்லை.

இது அவையின்ரை தனிப்பட்ட விசயம்.

இருந்தாலும்....கஸ்ரத்திலை இருக்கிறவனிட்டை அறாவட்டி வசூலிச்ச சனங்களின்ரை குடும்பங்கள் இப்ப அழிஞ்சு சிதறிசீரழிஞ்சு போறதை கண்ணாலை பாக்க கொடுமையாய்க்கிடக்கு :(

சொந்த வீடென்ன?

புதுக்காரென்ன?

நெளிக்கிற நெளிப்பென்ன?

தட்டுமுடுக்கென்ன?

கையிலை,கழுத்திலை தொங்கவிட்டதை கிலுக்கி காட்டுற ரெக்னிக்கென்ன?

ஊரிலையும் தாங்கள் றோயல்பைமிலி மாதிரி வாழ்ந்தவையாம் :lol:

நீங்கள் எல்லோரும் ஏன் ரதி சொன்னதை தப்பா எடுக்கிறீங்க..அவ வங்கியிலை நிலையான வைப்பில இட்டு வாற வட்டிக்காசிலை கால நீட்டிக்கொண்டு சாப்பிடலாம் எண்டு சொல்லி இருப்பா இல்லை நிதி நிறுவனங்கள் அல்லது சேயார் மாக்கெற்றில முதலிட்டு வாற வட்டிக்காசை சொல்லி இருக்கலாம்..அப்படி வாற வட்டிக்காசிலை என்ன தப்பிருக்கு சொல்லுங்கோ..?அந்தப்பிள்ளையை கேக்காம ஆளாளுக்கு பொம்பிளைப்பிள்ளை எண்ட உடனை மட்டந்தட்ட நிக்கிறியள்...

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் ஏன் ரதி சொன்னதை தப்பா எடுக்கிறீங்க..அவ வங்கியிலை நிலையான வைப்பில இட்டு வாற வட்டிக்காசிலை கால நீட்டிக்கொண்டு சாப்பிடலாம் எண்டு சொல்லி இருப்பா இல்லை நிதி நிறுவனங்கள் அல்லது சேயார் மாக்கெற்றில முதலிட்டு வாற வட்டிக்காசை சொல்லி இருக்கலாம்..அப்படி வாற வட்டிக்காசிலை என்ன தப்பிருக்கு சொல்லுங்கோ..?அந்தப்பிள்ளையை கேக்காம ஆளாளுக்கு பொம்பிளைப்பிள்ளை எண்ட உடனை மட்டந்தட்ட நிக்கிறியள்...

ஊரில போல இங்கும் அடகு.. வட்டி.. சீட்டு.. வரி ஏய்ப்பு.. கொள்ளை விலைக்கு குட்டிக் குட்டி அறைகளை வாடகைக்கு விடுதல்.. ( வீட்டு உரிமையாளர் வாழத்தக்கதாக வீடுகளில் வாடகைக்கு ஆட்களை இருத்தக் கூடாது என்பது சட்டம். அதுமட்டுமன்றி அரசாங்க உதவிப் பணம் பெற்று வீடுகளுக்கு வாடகை கட்டிக் கொண்டு அந்த வீடுகளையும் சட்ட விரோதமாக வாடகைக்கு விடுகின்றனர்.) என்று எல்லா சட்ட விரோத பண புழக்கங்களையும் நம்மவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

1000 பவுணுக்கு 30 தொடக்கம் 50 பவுண் மாத வட்டி அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் நகைக்கடைகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் தங்கள் வயதான பெற்றோரை வயோதிபர் சமூக நிலையங்களுக்கு அனுப்பி அங்கு வரும் வயோதிபர்கள் மூலமும்.. நேரடியாக நண்பர்கள் மூலமும்.. இவற்றை செய்து வருகின்றனர்.

வங்கிகளில் மிகக் குறைந்த வட்டி வீதமே வைப்புக்களுக்கு வழங்கப்படுகிறது.

உருப்படியா செய்யனும் என்றால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது நல்லம். ஆனால் அதில் எல்லாம் மிணக்கடக் கூடிய பொறுமையோ.. நுட்பமோ நம்மபவர்களிடம் குறைவு. தங்கள் இனத்திடமே தாங்கள் சுரண்டி வாழும் நிலையில் தான் இவர்கள் எங்கு போனாலும் வாழ்கின்றனர். இவர்களிடம் இவ்வளவு வட்டிக்கு காசு வாங்க தமிழர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை.

தமிழ் தொலைக்காட்சிகளில் நகை அடகு மற்றும் சீட்டுக்கு விளம்பரம் செய்கிறார்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் அல்லது அந்தந்த நாட்டு மொழிகளில் இவை போன்ற விளம்பரங்களை நான் இதுவரை காணவே இல்லை..! :D:)

நெருப்பு, 20, 000 பவுண்சை வங்கியில் வட்டிக்குப் போட்டால்....

காலை நீட்டிக்கொண்டு பாண் சாப்பிடுற அளவுக்குத்தான் வட்டி கிடைக்கும்.smiley2356.gif

ஊரில போல இங்கும் அடகு.. வட்டி.. சீட்டு.. வரி ஏய்ப்பு.. கொள்ளை விலைக்கு குட்டிக் குட்டி அறைகளை வாடகைக்கு விடுதல்.. ( வீட்டு உரிமையாளர் வாழத்தக்கதாக வீடுகளில் வாடகைக்கு ஆட்களை இருத்தக் கூடாது என்பது சட்டம். அதுமட்டுமன்றி அரசாங்க உதவிப் பணம் பெற்று வீடுகளுக்கு வாடகை கட்டிக் கொண்டு அந்த வீடுகளையும் சட்ட விரோதமாக வாடகைக்கு விடுகின்றனர்.) என்று எல்லா சட்ட விரோத பண புழக்கங்களையும் நம்மவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

1000 பவுணுக்கு 30 தொடக்கம் 50 பவுண் மாத வட்டி அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் நகைக்கடைகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் தங்கள் வயதான பெற்றோரை வயோதிபர் சமூக நிலையங்களுக்கு அனுப்பி அங்கு வரும் வயோதிபர்கள் மூலமும்.. நேரடியாக நண்பர்கள் மூலமும்.. இவற்றை செய்து வருகின்றனர்.

வங்கிகளில் மிகக் குறைந்த வட்டி வீதமே வைப்புக்களுக்கு வழங்கப்படுகிறது.

உருப்படியா செய்யனும் என்றால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது நல்லம். ஆனால் அதில் எல்லாம் மிணக்கடக் கூடிய பொறுமையோ.. நுட்பமோ நம்மபவர்களிடம் குறைவு. தங்கள் இனத்திடமே தாங்கள் சுரண்டி வாழும் நிலையில் தான் இவர்கள் எங்கு போனாலும் வாழ்கின்றனர். இவர்களிடம் இவ்வளவு வட்டிக்கு காசு வாங்க தமிழர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை.

தமிழ் தொலைக்காட்சிகளில் நகை அடகு மற்றும் சீட்டுக்கு விளம்பரம் செய்கிறார்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் அல்லது அந்தந்த நாட்டு மொழிகளில் இவை போன்ற விளம்பரங்களை நான் இதுவரை காணவே இல்லை..! :D:)

நெடுக்கால போவான் லண்டனே..? அப்பிடியே இப்பத்தே நிலவரத்தை அச்சொட்டா சொல்லி இருக்கிறீங்கள்..1000 பவுன்ஸிற்கு நாசமாய்ப்போவார் 40,50 பவுன்ஸ் எடுக்குறாங்கள்..நானும் ஒரு அவசரத்துக்கு காசு மாறி வட்டிகட்டினான் ஒருக்கா..அதவிட இந்த ரூம் வாடகைக்கு விடுற கொடுமை பெருங்கொடுமை..பொக்ஸ் ரூமெண்டு சொல்லி லண்டன் வந்த புதிசிலை நானும் இருந்தனான்..அப்பப்பா யெயில் ரூம் மாதிரி கட்டிவச்சிட்டு 250/300 பவுன்ஸ் எடுத்தவங்கள்..நான் நினைக்கிறன் இந்தக்கொடுமையெல்லாம் லண்டனிலதான் நடக்குதென்டு..பிரான்ஸ் சுவிஸ் கனடாப்பக்கம் வட்டிக்கு காசு விடுறது இருக்கலாம் ஆனால் இந்த ரூம் பிரச்சினை இருக்காது எண்டு நினைக்கிறன்..பாவம் ஸ்டுடன்ட் விசாவிலை வாற பொடியள்..புல் ரைம் வேலையும் செய்யேலாது இந்த நாசாமாய்ப்போவாருக்கு எட்டுக்கு நாலடி ரூமுக்கு அறாக்காசும் கட்டோனும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லோரும் ஏன் ரதி சொன்னதை தப்பா எடுக்கிறீங்க..அவ வங்கியிலை நிலையான வைப்பில இட்டு வாற வட்டிக்காசிலை கால நீட்டிக்கொண்டு சாப்பிடலாம் எண்டு சொல்லி இருப்பா இல்லை நிதி நிறுவனங்கள் அல்லது சேயார் மாக்கெற்றில முதலிட்டு வாற வட்டிக்காசை சொல்லி இருக்கலாம்..அப்படி வாற வட்டிக்காசிலை என்ன தப்பிருக்கு சொல்லுங்கோ..?அந்தப்பிள்ளையை கேக்காம ஆளாளுக்கு பொம்பிளைப்பிள்ளை எண்ட உடனை மட்டந்தட்ட நிக்கிறியள்...

வட்டிக்கு குடுக்குறதும் தப்பில்லை?

வட்டிக்கு வாங்குறதும் தப்பில்லை?

நாங்கள் பாங்கிலை லோன் எடுத்தாலும் வட்டிதான்!

ஆனால்

அவசரத்துக்கு இவையளுட்டை வட்டிக்கு காசுவாங்கினால்??????

துலைஞ்சுது போ..... :o:( :( :(

இவையளை கண்ட இடத்திலை சலூட் அடிக்கிறமாதிரி நிண்டு கதைக்கோணும்.

பொது இடங்களிலை(கலியாணவீடு,சாமத்தியவீடு,பிறந்தாள்கொண்டாட்டம்) இவயள் வட்டிக்கு காசுவாங்கினவையை தனியாய் கூப்பிட்டு சிநேகிதபூர்வமாய் கதைப்பினமாம்.(என்ன போனமாத வட்டிக்காசு இன்னும் வரேல்லை)

அவை எங்கடை ரெலிபோன் நம்பருக்கு தங்கடை கான்போனாலை ஒருக்கால் றிங் பண்ணிப்போட்டு விடுவினமாம்.

அந்த கான்போன் நம்பருக்கு நாங்கள் திருப்பியெடுத்து வட்டிவிவரம்,ஊர்விவரம்,நாட்டுவிவரம் எல்லாம் எங்கடை காசிலைதான் கதைக்கோணும்.

அதோடை அவையின்ரை வீட்டுதேவையளுக்கு காரும் ஓடவேண்டிக்கிடக்குதாமெல்லே :(

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு கொடுப்பவர்கள் எல்லாம் நியாயமில்லாத வட்டிக்கா கொடுக்கிறார்கள்? நியாய வட்டிக்கு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்(நானும் அப்படி நியாய வட்டிக்கு தான் கொடுப்பேன்.)...அவரச தேவைக்கு வருபவர்களுக்கு உடனே பணம் கொடுத்து உதவுகிறார்கள்.அவர்கள் வட்டிக்கு கொடுக்காமல் சும்மா கடனாய் கொடுத்தால் குறித்த நேரத்தில் கடன் வாங்குபவர்கள் திருப்பி கொடுப்பார்களா சொல்லுங்கள் பார்ப்போம்.

நல்ல காலம் சிவப்பு புள்ளி இல்லை இருந்திருந்தால் சகாரா அக்காவுக்கு அடுத்ததாக எனக்கு தான் கூட சிகப்பு விழுந்திருக்கும் :lol::D என்னவோ இப்பவே அந்த காசை வட்டிக்கு கொடுத்து விட்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிற மாதிரி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.