Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

petfriendlycouples.jpg

கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவும் இருக்கனும்.

குழந்தைகளோட நாங்களும் சமனா நடந்துக்க சந்தர்ப்பம் அளிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். குழந்தைகளை காட்டி அட்வான்ரேஜ் எடுத்துக்கிற கேர்ள் பிரண்ட் வேணாம்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவரும் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும். அவாக்கு பிடிச்சதை அவா செய்யனும்.. எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்.. இருவரும் தாங்கள் தங்கள் ரேஸ்ருக்கு சமைச்சதை பரிமாறனும்.. சுவைக்கனும். அப்படி ஒரு கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். ஒரு செயலை பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பையும் சேமிப்பை கடந்து.. நம்மோடு எதிர்பார்ப்பில்லாம இயல்பா பங்கிட்டு என்ஜோய் பண்ணுற.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு அல்லது அதுக்கு மேல கார் வாங்கி ஓடிக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல நம்ம பங்களிப்பை ஈகோ இன்றி இயல்பாக அங்கீகரித்து அதிலும் கூட இருந்து என்ஜோய் பண்ணக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க கொலிடே போகக் கூப்பிட பெட்டியை தூக்கிற கேர்ள் வேணாம். எங்களுக்குப் போட்டியா தானும் தன்ர ரசனைக்கு ஏற்ப எங்களை கொலிடே கூட்டிக் கொண்டு போகக் கூடிய தற்சிந்தனை உள்ள கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க தப்புப் பண்ணினா தட்டிக் கேட்டு வழிகாட்டும் அதேவேளை அவா தப்புப் பண்ணினா நாங்க சொல்லுறதையும் கேட்டு எவருமே மனம் நோகாம வாழ நினைக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டில ஒரு பகுதியை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் இவன் அப்படி.. இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

தனக்குப் பிடிச்ச உடையில நாகரிகமாக இருக்கனும். அப்பப்ப எது பிடிக்கும் என்று கேட்டும் எங்களைக் கொண்டும் வாங்கி அதை அணிஞ்சு நிஜமாவே மகிழ்ந்தும் காட்டனும்.

தானும் சோம்பேறியா இல்லாமல்.. எங்களையும் சோம்பேறியாக்காத சிலிமான.. உடம்பை சிக்கென்று வைச்சிருக்கிற.. எங்களையும் வைச்சிருக்க தூண்டிற.. ஜிம்.. ஜாக்கிங்.. யோகா என்று செய்து.. இருக்கக் கூடிய.. அழகான கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிப்பு.. வேலை.. இதுக்கு மேலதிகமாக... ஏதேனும் சுவாரசியமா மாறுதலா மகிழ்ச்சிக்குரியதா.. செய்யக் கூடியவாவா இருக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.

இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு. :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்பட வேண்டாம் நெடுக்ஸ் உங்களுக்கு ஏற்ற பொண் சீக்கிரம் கிடைப்பார்...சீக்கிரம் திருமண பந்தத்தில் இணைய வாழ்த்துகள்.

நெடுக்கண்ணா நீங்கள் எழுதியதுலயே நான் ரசித்து படித்துக்கொண்ட கட்டுரை இதுதான்.... ...சரி என் சார்பாக உங்களுக்கு ஒரு பச்சை....என் காதலனும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நான் விரும்புவன்.... :)

அதுசரி கேள்பிரண்டே பிடிக்காது என்று சொல்லுவீர்கள் என்ன இப்படி ஒரு கட்டுரை.... :D

  • தொடங்கியவர்

இதென்ன கொடுமையா இருக்குது. நான் எங்க சொல்லி இருக்கன் கேர்ள் பிரண்ட் பிடிக்காது என்று.

கேர்ள் பிரண்ட் என்று உலாவும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளையும் பிடிக்காது. அவற்றை செய்பவர்களை அவர்களின் செயல்களை சமூகத்துக்கு இனம் காட்டனும் என்று தான் சொல்லுறன். அப்பதான் அவங்க திருந்த முயற்சிப்பாங்க.

நேர்மையா உள்ள கேர்ள் பிரண்டுகளை ஏன் நாங்க குறை சொல்லனும். :D:)

தற்காலப் தமிழ்ப் பெண்களும் உங்களைப்போன்ற ஆண்களையே விரும்புகிறார்கள். மணம முடித்து இப்படி வாழ்பவர்களையும் தெரியும். நீங்கள் விரும்பிய மாதிரி ஒரு நல்ல கேர்ள் பிரண்ட் கிடைக்க வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

அதுசரி கேள்பிரண்டே பிடிக்காது என்று சொல்லுவீர்கள் என்ன இப்படி ஒரு கட்டுரை.... :D

யார் சொன்னது நெடுக்சிற்கு பெண்கள் பிடிக்காதென்று. அவருக்கு நல்ல மூக்கு முட்டின விருப்பம். பிடிக்காத மாதிரி சும்மா பாவனை காட்டிக்கொள்வார். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்காலப் தமிழ்ப் பெண்களும் உங்களைப்போன்ற ஆண்களையே விரும்புகிறார்கள். மணம முடித்து இப்படி வாழ்பவர்களையும் தெரியும். நீங்கள் விரும்பிய மாதிரி ஒரு நல்ல கேர்ள் பிரண்ட் கிடைக்க வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

யார் சொன்னது நெடுக்சிற்கு பெண்கள் பிடிக்காதென்று. அவருக்கு நல்ல மூக்கு முட்டின விருப்பம். பிடிக்காத மாதிரி சும்மா பாவனை காட்டிக்கொள்வார். :D

தற்காலத்தில்.. தமிழ் பெண்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி இன்றி எந்த முடிவுக்கும் வர முடியாது.

பெண்கள் மீது மூக்கு முட்டின விருப்பம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இயல்பான நல்ல மனிதர்கள் மீதுள்ள விரும்பம் மரியாதை மட்டுமே நல்ல நடத்தையுள்ள பெண்கள் மீதும் உண்டு. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், இப்படியான பெண் நண்பர் கிடைக்க நீங்கள் தொடர்ந்து தேடலில் இருக்க வேண்டும். படிப்போடு தேடலுக்கும் நிறைய நேரம் ஒதுக்கினால் தான் நீங்கள் நினைக்கும் கனவுக்கன்னியை அடைய முடியும்.வாழ்த்துக்கள். :):)

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்தில்.. தமிழ் பெண்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி இன்றி எந்த முடிவுக்கும் வர முடியாது.

பெண்கள் மீது மூக்கு முட்டின விருப்பம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இயல்பான நல்ல மனிதர்கள் மீதுள்ள விரும்பம் மரியாதை மட்டுமே நல்ல நடத்தையுள்ள பெண்கள் மீதும் உண்டு. :D:)

1.பல்லவி தொடங்கியாச்சோ..??? :rolleyes:

2.நீங்கள் சொல்வதையே திருப்பி பெண்களும் சொல்லலாம்... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கவனித்தேன்

கொஞ்ச நாளா நெடுக்கின் இதயம் டபக் டபக் என்று திசைமாறி அடிக்குது.

ஏதோ ஒரு அப்பாவி பெண்ணினது இதயம் வேரோடு அறுக்கப்படும் சத்தமா இது...........????? :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

யார் கண்டது குழந்தை குட்டிகளோடு வாழ்பவரோ ?வாழ்வில் நல்ல அனுபவ பட்ட தாத்தா மாதிரி ...அட்வைசு ........ :D

Edited by நிலாமதி

நானும் கவனித்தேன்

கொஞ்ச நாளா நெடுக்கின் இதயம் டபக் டபக் என்று திசைமாறி அடிக்குது.

ஏதோ ஒரு அப்பாவி பெண்ணினது இதயம் வேரோடு அறுக்கப்படும் சத்தமா இது...........????? :lol::D:D:D

:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கவனித்தேன்

கொஞ்ச நாளா நெடுக்கின் இதயம் டபக் டபக் என்று திசைமாறி அடிக்குது.

ஏதோ ஒரு அப்பாவி பெண்ணினது இதயம் வேரோடு அறுக்கப்படும் சத்தமா இது...........????? :lol::D:D:D

இதுக்கு போய் பச்சை குத்தாமல் விடலாமா???? :)

நெனைச்சேன் என்ன தான் மனுசன் ஹோர்மோன் அது இது என்று சொன்னாலும்,

இதுல சிக்காமலா போயிடுவான்னு நெனைச்சேன் மனுசன் சிக்கிட்டாரா?? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஜீவா

உங்களுக்கு தெரியுமோ தெரியாது ஜீவா

இரக்கப்பட்டும் காதல் வாறதுண்டு :wub:

இந்தாள் இப்படி மூக்கால அழுது அழுது திரியிறத பார்த்திட்டு...........

ஒரு அப்பாவி பெண் மனமிரங்கிட்டுது என்று நான் அந்த அப்பாவிக்காக அழுதுகிட்டிருக்கேனப்பா..... :lol::D:D

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.

இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு. :):D

இந்த எதிர்பார்ப்புக்களே எம்மை கல்யாணத்தின் பின் சோர்வடைய வைக்கின்றன

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்............

ரொம்ப் ரொம்ப் கஷ்டம்.............இப்படியே இருக்க வேண்டியது தான். :D :

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் நல்ல கற்பனை வளம் இருக்குது.. இப்படியான மாற்றர்களில. :lol:

நான் ஒரு கேர்ள் பிரண்டு இப்படியா இருந்தா பிடிக்கும் என்று தான் எழுதி இருக்கனே தவிர.. எனக்கு கேர்ள் பிரண்டு வேணும் என்று எழுதல்லைப்பா.

கிடைக்கிறது எப்பன்னாலும் கிடைக்கும். கிடைக்காதது.. எப்ப என்றாலும் கிடைக்காது. கிடைக்கல்லன்னாலும் நான் வருத்தப்படமாட்டன். ஏன்னா எனக்கென்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை என்னால அமைச்சுக்க முடியும். அதற்காக பிறரை நம்பி இருக்கமாட்டன். ஏன்னா நான் சுந்தர பூமியில் வாழும் சுதந்திர மனிதன். :D:lol:

நானும் கவனித்தேன்

கொஞ்ச நாளா நெடுக்கின் இதயம் டபக் டபக் என்று திசைமாறி அடிக்குது.

ஏதோ ஒரு அப்பாவி பெண்ணினது இதயம் வேரோடு அறுக்கப்படும் சத்தமா இது...........????? :lol::D

நிச்சயமா விசுகு அண்ணா.. ஒருவர் இன்னொருவர் மேல இரக்கப்பட்டு வாறது அன்பும் இல்ல.. பாசமும் இல்ல. அது மனிதாபிமானம். சக மனிதன் என்ற அடிப்படையில் பிறப்பது. அதை காதல் கலியாணம் என்ற நடைமுறைகளுக்க வைச்சு கொச்சைப்படுத்தக் கூடாது. அதை நீங்க தவறிச் செய்தாலும் நான் செய்யமாட்டன். தவிச்ச முயல் அடிக்கிற அளவுக்கு நான் கோழையும் கிடையாது. :D:)

யார் கண்டது குழந்தை குட்டிகளோடு வாழ்பவரோ ?வாழ்வில் நல்ல அனுபவ பட்ட தாத்தா மாதிரி ...அட்வைசு ........ :D

தப்பு. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாலே போதும்.. பல அனுபவங்களை நாங்கள் அறிவாக்கிக் கொள்ள முடியும். நாங்களே அனுபவிக்கனும் என்ற தேவை இல்லை. கிராமமாகியுள்ள இந்த உலகில்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஜீவா

உங்களுக்கு தெரியுமோ தெரியாது ஜீவா

இரக்கப்பட்டும் காதல் வாறதுண்டு :wub:

இந்தாள் இப்படி மூக்கால அழுது அழுது திரியிறத பார்த்திட்டு...........

ஒரு அப்பாவி பெண் மனமிரங்கிட்டுது என்று நான் அந்த அப்பாவிக்காக அழுதுகிட்டிருக்கேனப்பா..... :lol::D:D

இந்த எதிர்பார்ப்புக்களே எம்மை கல்யாணத்தின் பின் சோர்வடைய வைக்கின்றன

ஏன் அண்ணா இது முடியாது என எழுதியுள்ளீர்கள்...தற்போதைய காலப்பகுதியில் மாற்றம் அடைந்து வரும் நாகரீக உலகில் ஆண்களும் சரி,பெண்களும் தங்கள் வாழ்க்கை துணையும்,வாழ்க்க்கையும் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று ஒரு வித எதிர் பார்ப்பிலே இருக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் பழகிப் பார்த்து இருவரது ரசனையும் ஒத்து வந்தால் திருமணம் செய்கிறார்கள்...இதில் நெடுக்ஸ் தனக்கு வரப் போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என எழுதியுள்ளார் அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற பெண் அமைந்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார் ஆனால் என்ன நூணாவிலான் சொன்ன மாதிரி அவர் மினக் கெட வேண்டும்.

எல்லாருக்கும் நல்ல கற்பனை வளம் இருக்குது.. இப்படியான மாற்றர்களில. :lol:

நான் ஒரு கேர்ள் பிரண்டு இப்படியா இருந்தா பிடிக்கும் என்று தான் எழுதி இருக்கனே தவிர.. எனக்கு கேர்ள் பிரண்டு வேணும் என்று எழுதல்லைப்பா.

கிடைக்கிறது எப்பன்னாலும் கிடைக்கும். கிடைக்காதது.. எப்ப என்றாலும் கிடைக்காது. கிடைக்கல்லன்னாலும் நான் வருத்தப்படமாட்டன். ஏன்னா எனக்கென்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை என்னால அமைச்சுக்க முடியும். அதற்காக பிறரை நம்பி இருக்கமாட்டன். ஏன்னா நான் சுந்தர பூமியில் வாழும் சுதந்திர மனிதன். :D:lol:

நிச்சயமா விசுகு அண்ணா.. ஒருவர் இன்னொருவர் மேல இரக்கப்பட்டு வாறது அன்பும் இல்ல.. பாசமும் இல்ல. அது மனிதாபிமானம். சக மனிதன் என்ற அடிப்படையில் பிறப்பது. அதை காதல் கலியாணம் என்ற நடைமுறைகளுக்க வைச்சு கொச்சைப்படுத்தக் கூடாது. அதை நீங்க தவறிச் செய்தாலும் நான் செய்யமாட்டன். தவிச்ச முயல் அடிக்கிற அளவுக்கு நான் கோழையும் கிடையாது. :D:)

)

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த் தெரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த் தெரியவில்லை.

எதக்கா ஓவர். இதெல்லாம் சாதாரணம். :lol::D

petfriendlycouples.jpg

....

நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.

.....

எல்லாருக்கும் நல்ல கற்பனை வளம் இருக்குது.. இப்படியான மாற்றர்களில. :lol:

நான் ஒரு கேர்ள் பிரண்டு இப்படியா இருந்தா பிடிக்கும் என்று தான் எழுதி இருக்கனே தவிர.. எனக்கு கேர்ள் பிரண்டு வேணும் என்று எழுதல்லைப்பா.

...

தலைப்பு, உள்ளடக்கம் எல்லாம் போதுவாகன கருத்துகளாகத் தான் இருக்கு ஒன்றைத் தவிர...

படிப்பு சம்பந்தமான கருத்து- அந்த வரிகளை வாசிக்கும் போது நீங்கள் உங்களின் மனதில்உங்களுக்கென தோன்றியதை எழுதியது மாதிரித் தான் எனக்கு விளங்குகிறது. (ஒரு வேளை அது பிழையாகக் கூட இருக்கலாம், பிழை என்றால் குறை நினைக்கக் கூடாது!)

எல்லாமே சிறப்பாக உள்ள மனிதர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரிலும் ஏதேனும் ஒரு கெட்டித்தனம்/ குறைகள் இருக்கும். இதுவே யதார்த்தம்! இப்படியான ஒரு girl friend கிடைப்பது கொஞ்சம் (சரி... ^_^ சரியான) கஷ்டம். நேரம் எடுத்து தேடித் பாருங்கள் அப்படி கிடைத்தால் சந்தோசம். கிடைக்க மனமார்ந்த்த வாழ்த்துக்கள்!! :)

ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் இதில் ஓரளவு தகுதிகள் உள்ளவரை நீங்கள் சந்திக்கும் போது உங்களின் மீதி எதிர் பார்ப்பை தெரிவித்து, அதே போல் அந்தப் பக்கத்திலிருக்கும் எதிர்பார்ப்பையும் அறிந்து நீங்களும் செயல் படுத்தினால் குறுகிய காலத்தில் இருவரும் நீங்கள் நினைக்கும் நிலையை அடையலாம் என நினைக்கிறேன்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் பொதுவாகத் தான் தலைப்பை போட்டு கருத்துக்களையும் சேர்த்தீர்கள் என்றால் :rolleyes: இரண்டு மரங்கள் சேர்ந்து தோப்பாகி நெரிசலாகிறதை விட தனிமரமாக இருக்கிறது கூட அழகாகத் தான் இருக்கும்! :)

நன்றி குட்டி. நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழிகாட்டல்களை எழுதும் ஒருவர். அந்த வகையில் உங்கள் இந்தக் கருத்தில் உள்ள நல்ல விடயங்களை உள்வாங்கிக் கொள்வதில் பிரச்சனை ஏதும் இல்லை.

இந்தத் தலைப்பு பொதுவானதாக இருந்தாலும்.. கேர்ள் பிரண்ட் பிடிச்சாப் பிறகு.. திருமணம் முடிச்சாப் பிறகு படிப்புக்கு முழுக்குப் போடுற அல்லது திருமணம் வரை அதுக்காகவே படிக்கிறவை.. அதையும் கடந்து படிப்பை தொடருனும்.. சமூகத்துக்கு உகந்த கல்வியை கற்கனும்.. அதன் பயனை தாம் எங்கு வாழ்ந்தாலும் அந்தச் சூழலில் உள்ள சமூகங்களுக்கு கொடுக்க முயல வேண்டும் என்ற கருத்தை உள்வாங்கும் பொருட்டு நியாயமான ஒரு தேவையை அதில் சேர்த்திருக்கிறேன். அவ்வளவும் தான். என்னளவில் நான் அதை கடைப்பிடிப்பதில் பிரச்சனை இல்லை. சமூகத்திற்கும் அதை செய்தியாக்க அப்படி சேர்த்துக் கொண்டேன். :) :)

உங்கள் கருத்திற்கு நன்றி :)

கனவுக்கும் நிஜத்திற்கும் இடைவெளி அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேணும் வேணும் நெடுக்குக்கு ஒரு கேர்ள் பிரண்ட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேணும் வேணும் நெடுக்குக்கு ஒரு கேர்ள் பிரண்ட்

இந்தப் பாட்டின் அர்த்தம் என்ன.. இதில எல்லாரும் கேர்ள் பிரண்ட் தேடினம் என்றா. நான் ஒரு பொதுப்படையா எனக்குள்ள தோன்றிய எண்ணத்தை மட்டுமே எழுதினன். எனக்கென்று இதைவிட விசேசமான எண்ணங்கள் நிறைய இருக்கு. அதுகளை எங்கட தனித்துவம் கருதி வெளியிட முடியாது தானே கறுப்பி. :D:)

கனவுக்கும் நிஜத்திற்கும் இடைவெளி அதிகம்.

நிஜத்தை நினைத்து கனவை தொலைக்கனும் என்ற அவசியமும் இல்லைத் தானே. :D:)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் உங்களுக்கு அவசியமில்லாவிட்டாலும்......

வருங்கால இளையவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையக்கூடிய குறிப்பு

smiley-face-dots_lg.jpg

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் உங்களுக்கு அவசியமில்லாவிட்டாலும்......

வருங்கால இளையவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையக்கூடிய குறிப்பு

smiley-face-dots_lg.jpg

எனக்குப் பயன்படாட்டிலும் பிறருக்காவது என் எண்ணங்கள் பயன்படட்டும் என்று தான் இங்கு எழுதினேன். நீங்கள் சொல்லாவிட்டாலும்.. எனக்கு என் கனவே போதும். என் கனவோடு ஒட்டி வர மனிதர்கள் இந்த உலகில் இல்லை என்பதை நான் பிறக்கும் போதே உணர்ந்து விட்டேன். :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.