Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் கைது; மன்மோகன் சிங்க கண்டனம், கனிமொழி ஆர்ப்பாட்டம்;

Featured Replies

தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தை இலங்கைக்குத் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பு இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதே வேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்திருப்பதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தாராம்.

தேர்தலிற்காக அரசியல் இந்திய அரசியல்வாதிகளின் மீனவர்களை வைத்து நடத்தும் உக்கிரதாண்டவம் என்று இதனை கூறலாம். மீனவர் கைதும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய அரசு தி.மு.க ஆகியோரது நடவடிக்கையினையும் பார்க்கும் போது இவர்களே மீனவர்களை கைது செய்ய திட்டமிட்டு நடாத்திய நாடகமோ என தோன்றுகின்றது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

எடேய் கருநாநிதிக்கு தெரியாத நாடகமா?

மெரினா கடற்கரையில் கட்டில் இரண்டு மனிசிமாரோடு போய் உண்ணாவிரதம் இருந்தவன்.

இரத்த தாண்டவம் நடக்கும் போது கூட நாடக மாடியவன். உலக தமிழ்னயே பேய்காட்டியவன்.

எட கனிமொழி ராஜபக்ச வுக்கு எதிராகவா? நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

கதை இப்படி போகுதா.............?

பிடிச்சுகொடுத்ததே இந்திய கடற்படைபோல் உள்ளது............. அல்லது கொஞ்ச தி;மு.க ஆதரவாளர்களை தாங்களகவே போய் தரையிறங்க சொன்னார்களா தெரியவில்லையே?

இதைதான் இராஜதந்திர அரசியல் என்பதோ?

முள்ளிவாய்க்கால் எத்தனையோ மேல்!

பொதுவாக எதிர்க்கட்சியினர் தான் ஆர்ப்பாட்டங்கள் செய்வர். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சியும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கின்றது? டெல்லியில் உள்ள பிரதமர் இன்னும் ஏன் கண்டனம் மட்டும் செய்கின்றரர்?

534 க்கும் மேலே மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்னும் நாடகமே ஆடுகின்றார்கள். எல்லாம் அரசியல் எதிலும் அரசியல். தமிழக, இந்திய அரசியல்.

இன்று அமெரிக்கா பிடித்த ஒரு சோமாலிய கடல் கொள்ளைக்காரனை 34 வருட சிறை என்ற தீர்ப்பவை வழங்கியது. அதை விட்டு ஒபாமா கண்டனமும் கிளிண்டன் ஆர்ப்பாட்டமும் செய்தால்?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி அம்மையார் ராஜபசவின் அடிவருடி என்பது அனைவரும் அறிந்த உண்மை....அப்புறம் ஏன்..இந்த ஆர்பாட்டம்...அதற்கும் கமிசனோ...ஏனம்மா ..உங்களுக்கு. எம்மீது இந்தகரிசனை.......உங்கள் பண ஆசைக்கு அளவே இல்லையா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சியில் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினால் யாரிடம் முறையிடுவது? இது என்ன கேவலம். நாங்களும் இருக்கின்றோம் என்று மக்களுக்குக்காட்டவா இந்த நாடகம். ஏதோ இந்தியக் கடற்படை எல்லையில் 24 மணி நேர ரோந்து என்று சொன்னார்கள். அதையும் மீறியா இது நடக்குது? ரோந்து நாடகத்தின் பின்தான் அதிக மீனவர்கள் சிறைபிடிக்கபபட்டார்கள். அPனவர் பிரச்சனையைப் பெரிசாக்காட்டி பின்னர் அதையெல்லாம் இராணுவம் போட்டு முடக்கிவிட்டோம் என்று ஒரு தேர்தல் பிரச்சார நாடகமா?

தமிழநாட்டு மன்னள் என்ன அந்தளவிற்கு ஏமாந்தவர்களா? வருகின்ற தேர்தலில் வாக்குகளை குவிக்க மீனவர் பிரச்சனை தான் முக்கியமான பங்கு வகிக்கும் போல இருக்கு.

ஏதொ நட்க்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வோட இருந்தால் ஒன்றும் பலிக்காது. அது தான் என்னண்டு தெரியல்ல. அவர்கள் விழப்படையாவிட்டால் அவர்கள் நிலைமை மிகவும் பாவகரமாகும்.

அத்துமீறிய தமிழக மீனவர்கள் கைதை பெரும் பிரச்சினையாக்கி, தமிழக தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., விஜயகாந்த், விஜய் எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் அரச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்யாத தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., விஜயகாந்த், விஜய் எல்லோரும் இப்போ ஆர்ப்பாட்டம் செய்வது எதற்காக? இந்த போலி நாடகம் எல்லாம்

தமிழக தேர்தலை முன்னிட்டு என்பதை சிறுவரும் விளங்கிக்கொள்வர்.

  • தொடங்கியவர்

தமிழ் நாட்டில் தேர்தல் முடியும் வரை இந்த நாடகம் தொடரும் ஆனால் ஆறுதல் செய்தி என்னவென்றால் இனி மீனவர்கள் கொல்லப்படமாட்டார்கள் தேர்தல் முடியும் வரை. ஏனென்றால் காங்கிரஸ்- தி. மு.க இனரின் மீனவர் பிரச்சினை நாடகத்தில் மீனவர் கொல்லப்படும் காட்சி இனி தேர்தல் முடியும் வரை இல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் குறைகளை தெய்வத்திடம் முறையிடுவார்கள்.................... தெய்வமே கலங்கி நின்றால்??

கலைஞரின் கனிமொழியே கலங்கி நின்றால்.............. தமிழ்நாட்டு மக்கள் யாரிடம்தான் போவார்களோ?

திரும்ப திரும்ப சினிமாகரானை ஆட்சியேற்றிய பாவத்திற்கு இந்த நடிப்பையெல்லாம் தமிழகமக்கள் பார்த்தே ஆகவேண்டும்.

மூன்று நாளைக்குள் மன்மோகன் சிங்கின் இரண்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரண்டாவது செய்தியில்.. நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் சீரியஸ் ஆக இருக்க போகின்றோம். என கூறியுள்ளார். மன்மோகன் இப்பிடி அவசரப்பட்டது முள்ளிவாய்க்கால் காலத்தில் கூட இல்லையே.. தமிழ் நாட்டு தேர்தலோ அல்லது வேறு ஏதும் உள்ளதோ தெரியவில்லை.

We take a very serious view on fishermen issue – Manmohan Singh

PM Manmohan Singh on Wednesday came down heavily on Sri Lanka over the detention of 118 Indian fishermen by the Lankan authorities. In his interaction with television journalists, Singh said that this kind of behaviour was not acceptable among neighbouring countries.

“I have been told that about 118 fishermen have been taken into custody. We are taking up this matter with the Sri Lankan government. We take a very serious view. I think only earlier this month, the foreign secretary made a strong demarche…this kind of behaviour is not acceptable among neighbouring countries,’’ said Singh.

The Prime Minister was responding to a question about the fishermen being apprehended by the Sri Lankan authorities on Tuesday after they allegedly crossed over into their waters. The arrest comes close on the heels of the killing of two Indian fishermen allegedly by the Sri Lankan Navy.

External affairs minister SM Krishna had on February 1 said use of force against Indian fishermen should be part of the history and asked Sri Lanka to take a decision that will not upset the bilateral ties, Times of India reports.

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர்

இந்த போராட்டத்தில் கனிமொழியும் கைது செய்யப் பட்டதால்....

அவருக்கு சிறை சென்ற செம்மல் என்னும் பட்டம் வழங்கப் படுகின்றது.

பிறகென்ன சீமானுக்கு வேலை இனி இல்லை அவரை வீட்டுக்கு அனுப்பி வையுங்கோ....!

போர் உக்கிடமாய் நடந்த போது கனிமொழியை இப்பிடி கண்டது... இப்பதான் திரும்ப காணக்கிடைக்குது...

ஒருவேளை அப்பவும் தேர்தல் இப்பவும் தேர்தல் எண்டதாலையோ.... எது எப்படி எண்டாலும் தேர்தல் நேரங்களிலையாவது தமிழ் மக்கள் நினைவுக்கு வாறார்களே....

ஓவ்வொரு நாளும் தேர்தல் வந்தால் நல்லாருக்குமுங்கோ...

மூன்று நாளைக்குள் மன்மோகன் சிங்கின் இரண்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரண்டாவது செய்தியில்.. நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் சீரியஸ் ஆக இருக்க போகின்றோம். என கூறியுள்ளார். மன்மோகன் இப்பிடி அவசரப்பட்டது முள்ளிவாய்க்கால் காலத்தில் கூட இல்லையே.. தமிழ் நாட்டு தேர்தலோ அல்லது வேறு ஏதும் உள்ளதோ தெரியவில்லை.

வேறை ஒண்டு தான் காரணம்... <_< அதுக்காக தமிழ் மக்கள் மீது அன்பு பொத்துக்கொண்டு வந்திட்டுது எண்டு நினைக்காதீர்கள்....

பொறுங்கோ மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போலி நாடகம் எல்லாம்

தமிழக தேர்தலை முன்னிட்டு என்பதை சிறுவரும் விளங்கிக்கொள்வர்.

ஆனால் தமிழகத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பால்குடிமாறாப் பச்சைக் குழந்தைகள்..! :rolleyes: நாடகம் நல்ல ஓட்டு வேட்டையில்தான் முடியும்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dinamani.com/edition/photoonStory.aspx?SectionName=photoon&artid=377569&SectionID=220&MainSectionID=220&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D

ஸ்பெக்ட்ரம் ராணி தன்னின்ட ஆசை நாயகனுக்காக எடுத்திருக்கும் புதிய அரிதாரமான "கடல் காவல் ராணி" அரிதாரம் தான் இங்கிட்டு பேமஸு.. ஊடகதுறை அவசியத்தை இப்பவாது தோழர்கள் உணர்ந்து கொள்ளவேணும். இந்த இன்ஸ்டால் மெண்டு.. வைக்கோ வின்ட இமயம் தொலைக்காட்சிக்கு இடையூறு வராமல் பார்த்து கொள்ளவேணும்.உண்மையில் ஒருவகையில் இந்த வே... பாராட்ட வேண்டும் கட்டிய பத்தினியின் ஆக்சன் கிளாஸ் கூட இந்த அளவுக்கு கணவருக்காக இருக்குமா என்பது சந்தேகமே...(கட்சி மீட்டிங்கில் குறுகுறு என்று "தமிழ்படம் காமெடி ஸ்டையிலில்" வாட்ட சாட்டமான ஆண்களை தூக்குவது தனிவகை)மற்றும்படி யார் எங்க போனா எனக்கு என்ன? :(

டிஸ்கி:

நானும் ஜெயிலுக்கு போறேன் போறேன்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கிருஸ்ணாவின் வேண்டுதலும் இலங்கையின் நிராகரிப்பும்

இலங்கையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாட்டு அரசும் நட்புறவு முறையில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு பீரிஸ் மற்றும் மஹிந்த ஆகியோர் நேரடியாக பதிலளிக்கவில்லை மாறாக மீன்பிடி அமைச்சர் மூலம் ஊடகவாயிலாக பதிலளிக்கையில் இந்திய மீனவர்கள் சட்டப்படி விசாரிக்கப்பட்டு அதன் படியே நடவடிக்கை எடுகப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் காங்கிரஸ் இற்கு பெரும் தர்மசங்கடமாக உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் இற்கும் தி மு க வினரிற்கும் இலங்கை அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பினை வழங்கியது. அதாவது முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பாவிக்காது விடுவதாக கூறி, போர் நிறுத்தம் ஒன்றையும் செய்வதாக சாடை காட்டி காங்கிரஸ், தி மு க வினருக்கு மஹிந்த ஒத்துழைத்தார்.

ஆனால் இம்முறையும் அதே பாணியில் மீனவர் பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த இதற்கு ஒத்துழைப்பு வழங்குவாரா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

My link

சிங் ஒன்றும் சிங்கமல்ல.

... இனிவரும் நாட்களில் கருணாநிதி அன்ட் குடும்பத்தினால், இப்பிரட்சனை பெரும் பூதாகராமாக்கப்படலாம்??? ... இன்றைய நிலையில் கலைஞரின் குடும்பத்தினருக்கு அது தேவையான ஒன்று!!! ... ஸ்பெக்ரம் ஊழலில் கனிமொழியின் கோடிகளை திசை திருப்ப, இது உதவப்போகிறது!!!!! ... கனிமொழியின் அண்மைக்கால நண்பர் நெருங்கிய அத்தியடி குத்தியாரும் தான் கனிமொழியுடன் தொடர்பாடியதாக கூறியிருக்கிறார்!!!!

மூன்று நாளைக்குள் மன்மோகன் சிங்கின் இரண்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரண்டாவது செய்தியில்.. நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் சீரியஸ் ஆக இருக்க போகின்றோம். என கூறியுள்ளார். மன்மோகன் இப்பிடி அவசரப்பட்டது முள்ளிவாய்க்கால் காலத்தில் கூட இல்லையே.. தமிழ் நாட்டு தேர்தலோ அல்லது வேறு ஏதும் உள்ளதோ தெரியவில்லை.

இது இந்திய - சிங்கள அரச, ரோ பயங்கரவாதிகளின் கூட்டு சதிமுயற்சி என்பது மன்மோகனின் அறிக்கைகளில் இருந்து புலனாகிறது. தயாராக இருந்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.