Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எதிராகக் தமிழர்களைத் திருப்பிவிடும் சதி முயற்சியில் சிங்கள இனவெறியர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் மீண்டும் திடீரென கடந்த 15.02.2011 அன்று 18 இழுவைப் படகுகளுடன் 112 தமிழக மீனவர்களை சிங்கள வெறியர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன், மறுநாளே (16.02.2011) 27 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கடத்தப்பட்டு, அனைவரும் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக நாடு தழுவிய அளவில் உடனடிப் போராட்டத்தில் குதித்த நிலையிலும், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்ன நிலையிலும் இவற்றையெல்லாம் ஒருபொருட்டாக மதிக்காமல் அனைவரையும் சிறைப்படுத்தியுள்ளது சிங்கள இனவெறி அரசு. தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உறுதிமிக்க நடவடிக்கை எடுக்க இந்திய அரசு எத்தகைய முனைப்பும் காட்டவில்லை என்கிற நிலையே இதற்குக் காரணமாக உள்ளது.

கடந்த 1983லிருந்து இதுநாள் வரையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இந்திய அரசின் மெத்தனப் போக்கும், தமிழின விரோத நிலைப்பாடுமே சிங்கள இனவெறியர்கள் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளன. எனவே இந்திய அரசு தமது தமிழின விரோதப் போக்கைக் கைவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கும் இத்தகைய போக்குகள் தொடராமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வற்புறுத்துகிறோம்.

தமிழர்களுக்கு எதிராகக் தமிழர்களைத் திருப்பிவிடும் சதி முயற்சியில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபடுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருகின்றனர் என்கிற தவல்களை உறுதிப்படுத்தப்படுவதாகவும் தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. சிங்கள இனவெறியர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு இடங்கொடுக்காமல் தமிழினம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதை தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் உணர்ந்திட வேண்டும் என இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நாளை (18.02.2011) காலை 10 மணியளவில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48760

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகளாக தமிழ் பேரரசர்களால் கட்டிக் காக்கப் பட்டு வந்த தமிழக, ஈழ உறவு இந்த நூற்றாண்டில் எம் கண் முன்னே அழிய ஆரம்பித்திருப்பதற்கு முக்கிய காரணமே.... போலித்திராவிடம் பேசும் தற்போதைய தமிழக அரசியல் வாதிகளால்தான் ஏற்பட்டது. இனியாவது திருந்தி தமிழனுக்காக ஒற்றுமையாக குரல் கொடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். சும்மா பாராளுமன்ற கதிரைகளை நிரப்புவதற்காக அரசியல் மேடைப்பேச்சுக்கள் ஒரு பலனையும் தரப்போவதில்லை. முதலாவது மீனவன் கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட போதே தமிழக கட்சிகள் ஒற்றுமையாக செயல் பட்டு, டெல்லியை பணிய வைத்திருக்க வேண்டும். செய்யவில்லை... இன்று மீனவர் படுகொலை 500 ல் வந்து நிற்கின்றது.

குதிரை ஓடிப்போன பின் லாயத்தை பூட்டி பிரயோசனமில்லை.

பொறுப்பான ஒரு அறிக்கை...

பொறுப்பான ஒரு அறிக்கை...

அறிக்கை எல்லாம் நல்லா தான் இருக்க்கு, ஆனால் அறிக்கை விட்டவர் இருக்கும் இடம் தான் சந்தேகமாக இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிக்கை எல்லாம் நல்லா தான் இருக்க்கு, ஆனால் அறிக்கை விட்டவர் இருக்கும் இடம் தான் சந்தேகமாக இருக்கு.

அறிக்கை விடுகிற, கடிதம் எழுதுகிற இடம் தானே அதில என்ன குறை இருக்கு?

அறிக்கை எல்லாம் நல்லா தான் இருக்க்கு, ஆனால் அறிக்கை விட்டவர் இருக்கும் இடம் தான் சந்தேகமாக இருக்கு.

இப்ப பாருங்கோ நாங்கள் மீன்களை கூட அதுவும் சொந்த இனத்துக்கு விட்டுக்கொடுக்க மாட்டம் எண்டு அறிக்கை விடுகிற, அடிபடுகிற ஆக்கள்...! இப்படி எதையும் யாருக்கும் விட்டுக்கூட குடுக்காமல் எங்களுக்காக எல்லாரும் குரல் குடுக்க வேண்டும் எண்டு நினைக்கிறது அவ்வளவு நல்லதாய் பட இல்லை.... !

இந்த கேவலத்துக்கை ஒரு தமிழக தமிழன் முன் எடுக்க பலர் அங்கை தீக்குழிச்சு எங்கட பரதேசிகளுக்காக உயிரை குடுத்து இருக்கினம்... ஆனால் நாங்கள் கடலிலை ஓடுகிற மீனை கூட குடுக்க மாட்டம்.. ஏதோ நாங்கள் பிடிச்சு வைச்சு இருக்கிற மீன் எண்டாலும் பறவாய் இல்லை... !

இந்த வகையுக்கை தான் திருமாவும் வருகிறார்... நாங்கள் எதையுமே இளக்காமல் அவர் மட்டும் எங்களுக்கு சார்பாக எல்லாம் செய்ய வேணும் எண்டு நினைக்கிறது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை...

விசயம் இப்படி இருக்க நாங்கள் புலிகளின் இராஜதந்திரம் போதவில்லை எண்டு பேசுகிறோம்.. அப்படி பேசுகிறவை தான் தமிழக தமிழன் மீன் பிடிக்கிறது கூடாது என்கிறார்கள்...

திருமா எங்களுக்கு நண்பராக இருக்கிறாரோ இல்லையோ எதிரியாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்... அதுதான் இராஜதந்திரம்... அதாவது உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல்...!

இதை பற்றி மிக தெளிவாக சீமான் சொல்லி இருக்கிறார்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பாருங்கோ நாங்கள் மீன்களை கூட அதுவும் சொந்த இனத்துக்கு விட்டுக்கொடுக்க மாட்டம் எண்டு அறிக்கை விடுகிற, அடிபடுகிற ஆக்கள்...! இப்படி எதையும் யாருக்கும் விட்டுக்கூட குடுக்காமல் எங்களுக்காக எல்லாரும் குரல் குடுக்க வேண்டும் எண்டு நினைக்கிறது அவ்வளவு நல்லதாய் பட இல்லை.... !

இந்த கேவலத்துக்கை ஒரு தமிழக தமிழன் முன் எடுக்க பலர் அங்கை தீக்குழிச்சு எங்கட பரதேசிகளுக்காக உயிரை குடுத்து இருக்கினம்... ஆனால் நாங்கள் கடலிலை ஓடுகிற மீனை கூட குடுக்க மாட்டம்.. ஏதோ நாங்கள் பிடிச்சு வைச்சு இருக்கிற மீன் எண்டாலும் பறவாய் இல்லை... !

இழுவைப் படகு (ட்ராவ்லர்) பாவித்து மீனை ஆயிரக் கணக்கில் வாரிக் கொண்டு போவது தான் பிரச்சினை என்று இலங்கை மீனவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இன்னும் இழுவை வலை பாவிக்கும் வட பகுதி மீனவர்களுக்கு வாழ்வாதாரம் உண்மையிலேயே பாதிக்கப் படுகிறது.

மேலும், எங்கள் எல்லைக்குள் கிடைக்கிற மீன் வளத்தை எங்கள் வயிற்றுப் பாட்டுக்காக விட்டுத் தாருங்கள் என்று கேட்டால் அது எப்படி தமிழக உறவுகள் எங்களுக்காக குரல் கொடுப்பதோடு சம்பந்தப் படும் என்று நினைக்கிறீர்கள்?

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

சிங்களமும் இந்தியாவும் சண்டையில் ஈடுபடமாட்டா. தொப்புள்கொடி உறவுகள் இடையே பிரச்சனைகளை திட்டமிட்டு பெரிதாக்கல் நடக்கும். மேலே கூறப்பட்ட மாதிரி கூட்டணியினர், சீமான் போன்றோர் விளக்கமான அறிக்கைகளை விடுதல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தரும்.

மீனவர்கள் விவகாரம் பாரிய மோதலுக்கு வழிவகுக்கலாம்: ஜே.வி.பி

இந்திய மீனவர்களை பருத்தித்துறையில் தடுத்து வைத்திருப்பதானது இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய மோதலுக்கு வழிவகுக்கலாம் என ஜே.வி.பி. இன்று எச்சரித்துள்ளது.

ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கூறுகையில், அரசாங்கம் இத்தகைய மோதலைத் தடுப்பதுடன் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/16679-2011-02-17-12-07-39.html

இப்ப பாருங்கோ நாங்கள் மீன்களை கூட அதுவும் சொந்த இனத்துக்கு விட்டுக்கொடுக்க மாட்டம் எண்டு அறிக்கை விடுகிற, அடிபடுகிற ஆக்கள்...! இப்படி எதையும் யாருக்கும் விட்டுக்கூட குடுக்காமல் எங்களுக்காக எல்லாரும் குரல் குடுக்க வேண்டும் எண்டு நினைக்கிறது அவ்வளவு நல்லதாய் பட இல்லை.... !

முல்லைத் தீவு பக்கம் சிங்களவர்கள் வந்து மீன் பிடித்து கொண்டு போவதால், தமிழர்கள் என்ற காரணத்தினால் தமிழகத்து மீனவர்கள் வந்து ட்ராவ்லர் போன்ற வசதியான படகுளில் வந்து ஆயிரக்கணக்காக மீன்களை பிடித்து கொண்டு போக அனுமதியுங்கள் என்று போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தன் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கும் ஒரு ஈழ மீனவனிடம் கேட்டல் அவர் என்ன சொல்வார் தயா? :(

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்கும் போது இத்தகைய சிக்கல் கிளப்படுவது வாடிக்கையாகிவிட்டது... இதில் உள்குத்து கட்டாயம் உள்ளது.

1)முதலில் எல்லை தாண்டும் மீன்வர்களை கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்திருக்கலாம்... ஆனால் சுட்டுதள்ளுவது எக்காரணம் கொண்டும் மனித தன்மையுள்ளவர்கள் ஏற்று கொள்ள கூடிய செயல் அல்ல..

2)ராமநாதபுரம் சம்ஸ்தானத்திற்கு சொந்தமான கச்ச தீவு திரும்ப மீட்கபடவேண்டும்.. அதுவே எல்லை கோடாக நிர்ணயக்கபடவேணும்..அப்பத்தான் கடலுக்கு ஏது எல்லை கில்லை என்ற பஞ்ச் டயலாக்ஸை நிறுத்த முடியும்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இழுவைப் படகு (ட்ராவ்லர்) பாவித்து மீனை ஆயிரக் கணக்கில் வாரிக் கொண்டு போவது தான் பிரச்சினை என்று இலங்கை மீனவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இன்னும் இழுவை வலை பாவிக்கும் வட பகுதி மீனவர்களுக்கு வாழ்வாதாரம் உண்மையிலேயே பாதிக்கப் படுகிறது.

மேலும், எங்கள் எல்லைக்குள் கிடைக்கிற மீன் வளத்தை எங்கள் வயிற்றுப் பாட்டுக்காக விட்டுத் தாருங்கள் என்று கேட்டால் அது எப்படி தமிழக உறவுகள் எங்களுக்காக குரல் கொடுப்பதோடு சம்பந்தப் படும் என்று நினைக்கிறீர்கள்?

ஜஸ்ரின்/ நிழலி

நீங்கள் சொல்வது போல மீன் வளம் சுறண்டப்படுவது அல்ல பிரச்சினை... வலைகள் இழுவைப்படுகுகளால் அறுக்கப்படுகின்றன எண்று ஆள்கடல் போய் மீன் பிடிக்கும் மீனவர்கள் சொல்லி இருக்கிறார்கள்... எல்லாமே லட்சங்கள் பெறுமானமுள்ள வலைகள் அவை...

மாரிகாலத்தின் முடிவில் கச்சான் காத்தும் கொண்டல் காத்தும் மாறி மாறி அடிக்கும்... கடல் நீரோட்டமும் மாறி மாறி இருக்கும்... இந்த காலத்தில் தமிழக மீனவர்கள் ஈழத்துக்கரைகளுக்கு வருவது ஒண்றும் புதிது இல்லை...!

வங்கக்கடலில் யாழ் தீபகற்பம் முதல் அளம்பில் வரை ஈழத்து மீனவர்கள் நீண்டகாலமாக ஆயிரக்கணக்கில் இழுவைப்படகுகள் வைத்து மீன் பிடித்தவர்கள் தான்... அதனால் ஒண்றும் மீன் வளம் அழிந்து போய்விடவில்லை...! ஆனால் இண்று அரசாங்கத்தின் தடைகளால் 10 குதிரை வலுவுக்கும் கீழான வெளியிணைப்பு இயந்திரங்களை மட்டும் தான் பாவிக்க வேண்டும் எண்று அரசு கட்டளை போட்டு இருக்கிறது... விசயம் அப்படி இருக்க இந்திய மீன் பிடி இழுவைப்படகுகளால் வங்கக்கடலில் மீன் இல்லாமல் போய் விடும் எண்று சொல்லப்படுவது உண்மை இல்லை.... அப்படி எண்றால் சுனாமியின் பின் மீன்களே அங்கு இருந்து இருக்க கூடாது... அள்ளக்குறையாத செல்வம் உள்ள ஒரே இடம் கடல் மட்டும் தான்... இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன்... !

மற்றது நீங்கள் சொல்லும் கரைவலை எனப்படும் இழுவை வலைகள் கரையோரங்களில் பாவிக்கப்படுவன... ஆனால் ஆழம் குறைந்த கரைகளுக்கு இழுவைப்படகுகளால் மீன் பிடிக்க வர முடியாது... அதை வெளியிணைப்பு இயந்திரங்கள் உள்ள படகுகளால் மட்டும் தான் செய்ய முடியும்... கரைகளில் இழுவைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டுமானால் யாழ்ப்பாணம் தாண்டி வடமராட்ச்சி கிழக்கு முதல் புல் மோட்டை வரை சாத்தியம்... ஆனால் பிரச்சினை பருத்துறையிலும் , மாதகலிலும்... !

இழுவை படகுகள் ஈழத்து மீனவர்களில் வலைகளை அறுக்கிறார்கள்... இதுதான் இப்ப பிரச்சினை மீன் அல்ல... விலை கூடிய வலைகள் அதிலும் வளியல் வலை, நீர் வலை, டிஸ்கோ வலை எண்டு பல வலைகளை ஈழத்து மீனவர்கள் பாவிப்பார்கள்... அதில் விலை குறைந்த வளியல் வலைவியின் விலை 90 களில் 50,000 மேலை... இந்த வலைகளின் இழப்பு பெரியது... ஆனால் இந்த வலைகளை தமிழக மீனவர்கள் வேண்டும் எண்றே அறுக்கிறார்களா.? இதுதான் இப்போது இருக்கும் கேள்வி... எனது பதில் இல்லை... என்பது மட்டும் தான்...

இதை எனது அனுபவத்தை வைச்சு சொல்கிறேன்... மீன் பிடிக்க நீண்ட தூரம் வரும் தமிழக இழுவைப்படகு ஒண்றின் இயந்திரத்தினால் இயக்கப்படும் புறப்ளர் எனப்படும் விசிறியில் வலை ஒண்று சிக்கி இறுக்குமானால் படகால நகரமுடியாது... சுழியோடி வெட்டி எறிவதுக்குள் சீவன் போய் வரும்... சில வேளைகளில் வலைசிக்கி இறுகுவதால் இயந்திரம் கூட படுத்துவிடும்... விசயம் இப்படி இருக்க வலை போட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து யாரும் அந்தப்பக்கம் வரக்கூட மாட்டார்கள் என்பதுதான் உண்மை...

தீர்க்க கூடிய ஒரு பிரச்சினைக்கு ஆத்திரப்படுவதால் ஒண்றும் நன்மை ஆகிவிடாது, பகைமை அதிகரிப்பை தவிர... இதையும் தாண்டி நாங்கள் சிங்களவனாலும் இந்தியனாலும் பாவனைக்கு உகந்த கருவியாக்க படுவதையாவது தவித்துக்கொள்ளுங்கள்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:( யாழ்ப்பானத்தில் நடைபெற்ற தமிழக மீனவர் மீதான சுற்றி வளைப்புக் கைதை நியாயப்படுத்தும் எவரும் எரிகிற நெருப்பிற்கு எண்ணெய் வார்க்கிறீர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.

இன்றைக்கு தமிழகத்துத் தமிழனையும், ஈழத்துத் தமிழனையும் மோதவிடுவதால் யாருக்கு லாபம் என்று புரிந்துகொண்டால் இந்தப் பிரச்சனைக்கு இடமிருக்காது. தமிழகமும் எம்மைக் கைவிட்டால், இந்திய - சிங்கள அரக்கர்களின் எம்மீதான இனக்கொலை தங்கு தடையின்றி நடைபெறும். இன்றுவரை இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் வெளிப்படையாகவேனும் அடக்கி வாசிக்கக் காரணமே தமிழகத்துத் தமிழன் எம்மீது வைத்திருக்கும் இரக்கம்தான். அது எப்போது தொலைந்து இல்லாமல் போகிறதோ அன்றைக்கே நாங்கள் அநாதைகள் ஆகிவிடுவோம். ஐய்யோ எங்களைக் காப்பற்றுங்கள் என்று கெஞ்சுவதற்குக் கூட எங்களுக்கு நாதியிருக்காது. சிறுகச் சிறுக சீமான் போன்றவர்களால் கட்டியெழுப்பப்பட்டு வரும் ஈழத்தமிழர் மீதான இரக்கத்தை தயவுசெய்து உங்கள் மோட்டுத்தனமான நடவடிக்கைகளாலும், அறிக்கைகளாலும் அழித்து விடாதீர்கள்.

இவ்வளவு காலமும் சிங்கள ஆக்கிரமிப்பினுள் யாழ்ப்பாணத்தில் வாழவில்லையா, அப்போதுமட்டும் எங்கே போயிருந்தது இந்த ஆத்திரமும், கோபமும்?? உங்கள் வலைகளை அறுக்கிறார்கள் என்றால் அதை உரிய முறையில் தெரிவியுங்கள். அதை விட்டுக் கள்வர்களைப்போல அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டு பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களிடமே போய்த் தஞ்சம் கேட்பீர்கள்?? சிங்களவன் செய்யவேன்டியதை நீங்களே செய்வதால் சிங்களவனிடம் நல்ல பிள்ளை என்று பெயர்தான் வாங்கமுடியும், ஆனால் தமிழகத்துத் தமிழனை நிரந்தரமாகவே எதிரியாக்கி விடுகிறீர்கள்.

இந்தச் சமூகத்தில் பிறந்ததற்காக நான் உண்மையாகவே வேதனைப்படுகிறேன். இறைவா, நாங்கள் எப்போதுதான் திருந்தப் போகிறோம்??

  • கருத்துக்கள உறவுகள்

தயா..

அள்ள அள்ளக் குறையாதது மீன்வளம் என்பது ஏற்புடையது அல்ல. கனடாவின் அட்லாண்டிக் கடலிலும், அலாஸ்காவிலும் மீன்வளத்தை பெருமளவுக்கு இல்லாமல் போகச் செய்தவர்கள் மீனவர்களே. இப்போது அங்கு அரசுகள் சட்டங்கள் மூலம் மீன் வளத்தைப் பெருக்கிக்கொண்டு வருகின்றன.

சிலவகையான மீன்களை / நண்டுகளை பிடிக்கும்போது அவற்றில் பெண்கள் / குழந்தைகளை :lol: மீண்டும் கடலில் விட்டுவிடுகிறார்கள். கரைக்குக் கொண்டுவந்தால் அபராதம், மீன்பிடி உரிம ரத்து என்று சந்திக்க வேண்டி வரும்..! :rolleyes::unsure:

இழுவை படகு மீன் பிடிகளுக்கும் நீங்கள் சொல்லும் அத்திலாண்டிக் கடலில் மீன் பிடிக்கும் கப்பல்கள் (ஒலியலை )சோணர், GPS போண்ற அதி முன்னேறிய தொழில் நுட்பம் கொண்ட கப்பல்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றன... கூட்டமாக வரும் மீன் இனங்களை சோணர்கள் மூலமும் செய்கோள் படங்கள் மூலமும் கண்டுபிடித்து ஒலி அதிர்வு அலைகளை செலுத்தி மயக்கமடைய செய்து வலைகள் போட்டு அள்ளுவதால் குஞ்சு குறுமானகள் எல்லாம் செத்து போவது உண்மைதான்...

ஈழத்தின் வட கடலில் முன்னரான காலங்கள் இதற்க்கு ஒப்பான டைனமற் தாக்குதல் மூலம் மீன் பிடிப்பார்கள் அது இப்போது இதே காரணத்தான் தடை செய்யப்பட்டு இருக்கின்றது...

முருகை கற்களும் கடற் தாவரங்களும் கொண்ட சதுப்பு கடலான வட கடலில் பெரிய இனத்து மீன்கள் எல்லாம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்க அதுக்கான காலங்களில் வருவது வழமை... அதை பிடிக்க மீனவர்கள் வருவதும் வழமை... ஆனால் முட்டைகளுக்கும் குஞ்சுகளுக்கும் சேதம் விளைவிக்க கூடாது என்பதும் உண்மை...

Edited by தயா

இந்திய கடல் எல்லைக்குள் மீன் வளம் நன்றாக வற்றி விட்டது என்றுதான் சொல்லப்படுகின்றது (நூறு கோடி சனத்தொகை!).

எம்முடைய கடல் எல்லைக்குள் போர் காரணமாக மீன் பிடி பாதிக்கப்பட்டதால் மீன் வளம் பெருகி இருக்கிறது.

இன்னும் சில நாட்களில் இந்த சம்பவம் பெரிதாகப் பேசப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

இழுவை படகு மீன் பிடிகளுக்கும் நீங்கள் சொல்லும் அத்திலாண்டிக் கடலில் மீன் பிடிக்கும் கப்பல்கள் (ஒலியலை )சோணர், GPS போண்ற அதி முன்னேறிய தொழில் நுட்பம் கொண்ட கப்பல்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றன... கூட்டமாக வரும் மீன் இனங்களை சோணர்கள் மூலமும் செய்கோள் படங்கள் மூலமும் கண்டுபிடித்து ஒலி அதிர்வு அலைகளை செலுத்தி மயக்கமடைய செய்து வலைகள் போட்டு அள்ளுவதால் குஞ்சு குறுமானகள் எல்லாம் செத்து போவது உண்மைதான்...

வட கடலில் முன்னரான காலங்கள் இதற்க்கு ஒப்பான டைனமற் தாக்குதல் மூலம் மீன் பிடிப்பார்கள் அது இப்போது இதே காரணத்தான் தடை செய்யப்பட்டு இருக்கின்றது...

சரியான கருத்து. ஆனால் சண்டைகள் ஓய்ந்த நிலையில் இப்படியான தொழில்நுட்பங்களைப் பின்வரும் காலங்களில் பயன்படுத்த முயலக்கூடும். :unsure:

Alaskan King crab fishing... :D

http://www.youtube.com/watch?v=LcfE8qaErPs

புலம்பெயர் நாடுகளில் உள்ள மீன் மொத்த / சில்லறை வியாபாரிகள் ஒரு அமைப்பை/நிறுவனத்தை உருவாக்கி,

அதன் மூலம் தாயக மக்களுக்கு மீன்பிடிக்க நவீன தொழில்நுட்பம், காப்புறுதி, பிள்ளைகளுக்கு படிப்பு /மருத்துவ வசதி என பதரப்புபட்ட வசதிகளையும் செய்து இறக்குமதி செய்வது பற்றி வழிவகைகளையும் ஆராயலாம்.

ஜஸ்ரின்/ நிழலி

நீங்கள் சொல்வது போல மீன் வளம் சுறண்டப்படுவது அல்ல பிரச்சினை... வலைகள் இழுவைப்படுகுகளால் அறுக்கப்படுகின்றன எண்று ஆள்கடல் போய் மீன் பிடிக்கும் மீனவர்கள் சொல்லி இருக்கிறார்கள்... எல்லாமே லட்சங்கள் பெறுமானமுள்ள வலைகள் அவை...

மாரிகாலத்தின் முடிவில் கச்சான் காத்தும் கொண்டல் காத்தும் மாறி மாறி அடிக்கும்... கடல் நீரோட்டமும் மாறி மாறி இருக்கும்... இந்த காலத்தில் தமிழக மீனவர்கள் ஈழத்துக்கரைகளுக்கு வருவது ஒண்றும் புதிது இல்லை...!

வங்கக்கடலில் யாழ் தீபகற்பம் முதல் அளம்பில் வரை ஈழத்து மீனவர்கள் நீண்டகாலமாக ஆயிரக்கணக்கில் இழுவைப்படகுகள் வைத்து மீன் பிடித்தவர்கள் தான்... அதனால் ஒண்றும் மீன் வளம் அழிந்து போய்விடவில்லை...! ஆனால் இண்று அரசாங்கத்தின் தடைகளால் 10 குதிரை வலுவுக்கும் கீழான வெளியிணைப்பு இயந்திரங்களை மட்டும் தான் பாவிக்க வேண்டும் எண்று அரசு கட்டளை போட்டு இருக்கிறது... விசயம் அப்படி இருக்க இந்திய மீன் பிடி இழுவைப்படகுகளால் வங்கக்கடலில் மீன் இல்லாமல் போய் விடும் எண்று சொல்லப்படுவது உண்மை இல்லை.... அப்படி எண்றால் சுனாமியின் பின் மீன்களே அங்கு இருந்து இருக்க கூடாது... அள்ளக்குறையாத செல்வம் உள்ள ஒரே இடம் கடல் மட்டும் தான்... இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன்... !

மற்றது நீங்கள் சொல்லும் கரைவலை எனப்படும் இழுவை வலைகள் கரையோரங்களில் பாவிக்கப்படுவன... ஆனால் ஆழம் குறைந்த கரைகளுக்கு இழுவைப்படகுகளால் மீன் பிடிக்க வர முடியாது... அதை வெளியிணைப்பு இயந்திரங்கள் உள்ள படகுகளால் மட்டும் தான் செய்ய முடியும்... கரைகளில் இழுவைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டுமானால் யாழ்ப்பாணம் தாண்டி வடமராட்ச்சி கிழக்கு முதல் புல் மோட்டை வரை சாத்தியம்... ஆனால் பிரச்சினை பருத்துறையிலும் , மாதகலிலும்... !

இழுவை படகுகள் ஈழத்து மீனவர்களில் வலைகளை அறுக்கிறார்கள்... இதுதான் இப்ப பிரச்சினை மீன் அல்ல... விலை கூடிய வலைகள் அதிலும் வளியல் வலை, நீர் வலை, டிஸ்கோ வலை எண்டு பல வலைகளை ஈழத்து மீனவர்கள் பாவிப்பார்கள்... அதில் விலை குறைந்த வளியல் வலைவியின் விலை 90 களில் 50,000 மேலை... இந்த வலைகளின் இழப்பு பெரியது... ஆனால் இந்த வலைகளை தமிழக மீனவர்கள் வேண்டும் எண்றே அறுக்கிறார்களா.? இதுதான் இப்போது இருக்கும் கேள்வி... எனது பதில் இல்லை... என்பது மட்டும் தான்...

இதை எனது அனுபவத்தை வைச்சு சொல்கிறேன்... மீன் பிடிக்க நீண்ட தூரம் வரும் தமிழக இழுவைப்படகு ஒண்றின் இயந்திரத்தினால் இயக்கப்படும் புறப்ளர் எனப்படும் விசிறியில் வலை ஒண்று சிக்கி இறுக்குமானால் படகால நகரமுடியாது... சுழியோடி வெட்டி எறிவதுக்குள் சீவன் போய் வரும்... சில வேளைகளில் வலைசிக்கி இறுகுவதால் இயந்திரம் கூட படுத்துவிடும்... விசயம் இப்படி இருக்க வலை போட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து யாரும் அந்தப்பக்கம் வரக்கூட மாட்டார்கள் என்பதுதான் உண்மை...

தீர்க்க கூடிய ஒரு பிரச்சினைக்கு ஆத்திரப்படுவதால் ஒண்றும் நன்மை ஆகிவிடாது, பகைமை அதிகரிப்பை தவிர... இதையும் தாண்டி நாங்கள் சிங்களவனாலும் இந்தியனாலும் பாவனைக்கு உகந்த கருவியாக்க படுவதையாவது தவித்துக்கொள்ளுங்கள்... !

விளக்கத்துக்கு நன்றி தயா

  • கருத்துக்கள உறவுகள்

:( யாழ்ப்பானத்தில் நடைபெற்ற தமிழக மீனவர் மீதான சுற்றி வளைப்புக் கைதை நியாயப்படுத்தும் எவரும் எரிகிற நெருப்பிற்கு எண்ணெய் வார்க்கிறீர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.

இன்றைக்கு தமிழகத்துத் தமிழனையும், ஈழத்துத் தமிழனையும் மோதவிடுவதால் யாருக்கு லாபம் என்று புரிந்துகொண்டால் இந்தப் பிரச்சனைக்கு இடமிருக்காது. தமிழகமும் எம்மைக் கைவிட்டால், இந்திய - சிங்கள அரக்கர்களின் எம்மீதான இனக்கொலை தங்கு தடையின்றி நடைபெறும். இன்றுவரை இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் வெளிப்படையாகவேனும் அடக்கி வாசிக்கக் காரணமே தமிழகத்துத் தமிழன் எம்மீது வைத்திருக்கும் இரக்கம்தான். அது எப்போது தொலைந்து இல்லாமல் போகிறதோ அன்றைக்கே நாங்கள் அநாதைகள் ஆகிவிடுவோம். ஐய்யோ எங்களைக் காப்பற்றுங்கள் என்று கெஞ்சுவதற்குக் கூட எங்களுக்கு நாதியிருக்காது. சிறுகச் சிறுக சீமான் போன்றவர்களால் கட்டியெழுப்பப்பட்டு வரும் ஈழத்தமிழர் மீதான இரக்கத்தை தயவுசெய்து உங்கள் மோட்டுத்தனமான நடவடிக்கைகளாலும், அறிக்கைகளாலும் அழித்து விடாதீர்கள்.

இவ்வளவு காலமும் சிங்கள ஆக்கிரமிப்பினுள் யாழ்ப்பாணத்தில் வாழவில்லையா, அப்போதுமட்டும் எங்கே போயிருந்தது இந்த ஆத்திரமும், கோபமும்?? உங்கள் வலைகளை அறுக்கிறார்கள் என்றால் அதை உரிய முறையில் தெரிவியுங்கள். அதை விட்டுக் கள்வர்களைப்போல அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டு பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களிடமே போய்த் தஞ்சம் கேட்பீர்கள்?? சிங்களவன் செய்யவேன்டியதை நீங்களே செய்வதால் சிங்களவனிடம் நல்ல பிள்ளை என்று பெயர்தான் வாங்கமுடியும், ஆனால் தமிழகத்துத் தமிழனை நிரந்தரமாகவே எதிரியாக்கி விடுகிறீர்கள்.

இந்தச் சமூகத்தில் பிறந்ததற்காக நான் உண்மையாகவே வேதனைப்படுகிறேன். இறைவா, நாங்கள் எப்போதுதான் திருந்தப் போகிறோம்??

சிங்கள மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் கூட்டம் போட்டு ஒப்பந்தம் எல்லாம் செய்தாங்களாமே தமிழ் நாட்டில? தெரியாதா உங்களுக்கு? இதை விட எங்க போய் சொல்றது வலை அறுக்கிறத? ஐ.நா விலயா? நாங்கள் கேட்பதெல்லாம் வயிற்றுப் பிழைப்பை எங்கள் ஈழ ஆதரவுக்கு விலையாக்காதேங்கோ எண்டு தான். உங்கட ஆதரவுக்கு அது தான் விலையெண்டால் இந்த தவிச்ச முயல் அடிக்கிற deal எங்களுக்கு வேண்டாம் என்கிறோம்! அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.