Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழனுக்காக நீதி கேட்க மிஞ்சியுள்ளவை நாய்கள் மட்டுமே..?

Featured Replies

உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளையின் மரணம் தற்போது வடக்கில் என்ன நடக்கிறது என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு போயிருக்கிறது.

முற்காலங்களில் ஒரு பட்டி மன்றம் நடக்கும் இறந்தவர்களை எரிப்பது நல்லதா இல்லை புதைப்பது நல்லதா என்று.. சிறீலங்காவில் பிறந்திருந்தால் அவரை எரிப்பதே நல்லது என்று மாவீரர் புதைகுழிகள் தோண்டப்பட்ட பின்னர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பார்வதிப்பிள்ளையின் அஸ்தியை கிளறி எறிந்து, அதில் மூன்று சுடலை நாய்களையும் சுட்டு வீசியிருக்கிறார்கள் என்றால் எரிக்கவும் முடியாத அவலம் வந்துள்ளது என்பதே பதிலாகிறது.

நமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க உரிமை உண்டு, இறந்துபோன ஒருவருக்காக கட்டவுட் வைக்க உரிமையுண்டு என்று சொன்னவர்கள் எல்லாம் வாய்மூடி வாழ வேண்டும் என்ற எச்சரிக்கை இந்த நிகழ்வின் மூலம் விடப்பட்டுள்ளது. தமிழன் வாய்திறந்தால் அவன் தெரு நாயைப்போல சுடப்படுவான், அதைக் கேட்க இன்று உலகில் நாதியில்லை என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் தமிழர்கள் நாய்கள் போலச் சுடப்பட்டபோது உலகம் சும்மாதானே இருந்தது, இனி மட்டும் என்ன வாழப்போகிறது என்ற மமதை இந்தச் செயலில் தெரிகிறது.

அதோ எகிப்தில் மக்கள் மீது சுடுகிறார்கள் என்றும், இதோ லிபியாவில் 200 பேர் செத்துவிட்டார்கள் என்றும் ஓலமிடும் உலக மக்கள், ஐ.நா செயலர் யாவரும் ஈழத்தில் தமிழனுக்கு அவலம் நடந்தபோது உறைந்துதானே கிடந்தார்கள். ஓர் இலட்சம்பேர் வன்னியில் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் நடக்காதது போல செத்துக்கிடந்தது உலக சமுதாயம். உலகத்தில் உள்ள ஒரு நாயும் நமக்காக வராது என்ற உண்மை தெரிந்து ஈழத் தமிழனுக்காக நீதிகேட்க வந்தவை வல்வை ஊறணிச் சுடலையில் வாழ்ந்த மூன்று சுடலை நாய்களே. தமிழனுக்காக குரைத்த காரணத்தால் அவையும் சுடப்பட்டு பார்வதியம்மாவோடு எரிக்கப்பட்டுவிட்டன. நாயும் கேட்க நாதியில்லா இனம் என்ற நிலையில்தான் இன்றைய தமிழனின் அவல வாழ்வு இருக்கிறது என்ற உண்மையைப் பார்வதியம்மாவின் அஸ்த்தி ஐ.நா செயலர் பான் கி மூனுக்கு அழுத்தம் திருத்;தமாக சொல்லியுள்ளது.

நாயிற்கடையாய் கிடந்த அடியேர்க்கு அருளும் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே என்ற சிவபுராணப் பாடல் பார்வதி அம்மா சுடலையில் கிடந்தபோது கேட்டது. இப்போதோ சிவன் உறையும் சுடலையில் நாய்களே வாழ முடியாத நிலை வந்துள்ளது. தாயிற்சிறந்த தயாவான தத்துவன் வந்திருந்தாலும் அவனுக்கும் இதுதான் கெதி..!

புதுமாத்தளன் போருக்குப் பின்னர் தமிழன் வாழ்வு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கிறது என்பதே உண்மையாகும். இலங்கைத் தீவில் வாழும் தமிழர் இதுவரை எதையும் பெற்றுவிடவில்லை, ஒரு பிடி சாம்பலைக்கூட…

ஒரு பிடி சாம்பலுக்கே உரிமையில்லாத நிலைக்கு உலக சமுதாயத்தால் ஆளாக்கப்பட்ட ஈழத் தமிழன் இனி..

நாம் பான் கி மூனிடமும், பக்கத்து நாட்டு பாராளும் மன்னர்களிடமும் போவதற்கும், பெறுவதற்கும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

பார்வதி அம்மாவிற்காக போராடி உயிர் கொடுத்த மூன்று நன்றியுள்ள நாய்களுக்கு மட்டும் சிரந்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறோம்.. உறங்கிக் கிடக்கும் உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் மூன்று கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

வல்வையில் இருந்து ஒரு மானத்தமிழன்.

http://www.alaikal.com/news/?p=58332#more-58332

இனியாவது தமிழனுக்கு சுரணை வருகின்றதா என சிங்களவன் டெஸ்ட் பண்ணுகின்றான் போலிருக்கு?

வேறொரு திரியில் நுணாவிலான் கேள்வி ஒன்று தொடுத்திருந்தார்.அந்த திரியில் பதிலிடுவது அழகல்ல.

பாலு தேனும் ஓடுதென்று யாரும் எழதவில்லை.கடைசி இனம்தெரியாதநபர்களால் என்று அன்றாடம் நடந்த 5,6 கொலைகள் இன்று இல்லை.யுத்தம் இல்லை. அன்றாடம் இறந்த பொதுமக்கள் இழப்புகளும் போராளிகள் இழப்புகளும் வலிகளும் இல்லை.

யுத்தம் என்று ஒன்றுநடந்தால் அதற்கொருமுடிவு எப்போதோ உண்டு.அதில் இப்போ தோற்றவர்கள் தமிழர்கள் ஆகிவிட்டோம்

புலி அடித்தாலும் என்று சிங்களவன் பயந்திருந்த நிலை இன்று அறவே இல்லாததால் இலங்கை முழுவதும் உள்ள தமிழன் எது நடந்தாலும் பார்க்துக்கொண்டு இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டான்.

இப்படியும் ஒரு நிலமை வரலாம் என முன்னரே நாம் சிந்தித்திருக்கவேண்டும். தோல்வி ஏற்பட்டால் கூட சிங்களவன் அத்துமீறாமல் இருக்க நாலு நட்பு நாடுகளையாவது எமக்காக குரல் எழுப்ப உருவாக்கியிருக்கவேண்டும்.

சரி சிங்களவன் தான் எங்கள் எதிரி அப்படி செய்கின்றான்.நீங்கள் அமிர்தலிங்கத்திற்கு நாட்டில் ஒரு சிலைவைக்க விட்டிருப்பீர்களா? உண்ணவிரதமிருந்தவர்களுக்கு புரியாணி கொடுத்ததை மறந்துவிட்டீர்கள் போலிருக்கு.கனடாவில் அமிர்தலிங்கம் நினைவு கூட்டத்தில் பேசியவர் ஒருவர் கடைசி ஒரு சொட்டு கண்ணீர் விடவாவது எம்மை அனுமதியுங்கள் என்று அங்கு வந்திருந்த புலிக்குண்டர்களை பார்த்துக்கேட்டார்.

நேற்று சீ.எம்.ஆர் இல் ஒருவர் இவ்வளவு அநியாயங்கள் எங்களுக்கு நடக்கின்றது ஏன் இன்னமும் உலகம் எமக்காக குரல் எழுப்பவில்லை என்று.அதற்கு பதில் "நீங்கள் செய்த அநியாயங்களையும் அவர்கள் பார்த்தபடியால் தான்" என்பதுதான் பதில்.

குத்திக்காட்டுவதற்காக எழுதவில்லை அவர்கள் அந்த அடாவடித்தனங்களையெல்லாம் செய்யும் போது அவை பிழை என்று உங்களுக்கு ஏன் அப்போது விளங்காமல் போனது?

இன்றும் யுரோப்பிய யூனியன் தடை செய்கின்றதென்றால் எங்கோ பெரியபிழை இருக்கின்றதென்று விளங்கிக்கொள்ளுங்கள்.சும்மா இணயத்தில் வந்து எல்லோரையும் கேவலாமாக திட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை.சுய இன்பத்திற்கு வேண்டுமெனில் கருநாயே என திட்டிக்கொண்டே இருக்கலாம். சிலவேளை என்னையும் சேர்த்து.

அமிர்தலிங்கத்திற்கு நாட்டில் ஒரு சிலைவைக்க விட்டிருப்பீர்களா? உண்ணவிரதமிருந்தவர்களுக்கு புரியாணி கொடுத்ததை மறந்துவிட்டீர்கள் போலிருக்கு.கனடாவில் அமிர்தலிங்கம் நினைவு கூட்டத்தில் பேசியவர் ஒருவர் கடைசி ஒரு சொட்டு கண்ணீர் விடவாவது எம்மை அனுமதியுங்கள் என்று அங்கு வந்திருந்த புலிக்குண்டர்களை பார்த்துக்கேட்டார்.

நானும் உங்களை ஏதோ என்று நினைத்தேன் :wub: சிலைவைக்கும் அளவுக்கு என்னத்தை அமிர்தலிங்கம் செய்தார்?

நாயைப் போல் சுட கூடாது என்றால் சொல்லாம் நீங்கள் மனித உரிமையை மதிப்பவர் என்று ஆனால் அமிதலிங்கத்துக்கு சிலை வைக்க சொல்லும் அளவுக்கு தான் உங்கள் ஜனநாயகம் என்றால்?

அது தமிழருக்கு இல்லாமலே போகட்டும்ம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி இனம்தெரியாதநபர்களால் என்று அன்றாடம் நடந்த 5,6 கொலைகள் இன்று இல்லை.யுத்தம் இல்லை.

அப்பு இன்னும் மப்பிலிருந்து தெளியவில்லை ... :wub:

சசி,என்னை எதோ என்று நினைக்கவேண்டாம் சக மனிதனாக நினைத்தால் காணும்.

அமிர்தலிங்கம் தமிழினத்தின் தலைவராக இருந்தவர்,பிரபாகரனுக்கும் தலைவராக இருந்தவர்.எமது போராட்டம் ஆரம்பமாகியதற்கு அடி கோலியதே அவர்தான்.அவரால் முடிந்ததை தான் அவர் செய்தார்(இன்று கூட்டைப்பு செய்வதுபோல்).இந்தியா உதவிசெய்யும் என்று கடைசிவரை நம்பினார்.(இன்று சம்பந்தர் நம்புவது போல்).இந்தியா ஆயுதபோராட்டதிற்கு ஆயுதமும் களமும் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு மிதவாதியான அமிர்தலிங்கத்தையும் வைத்திருந்தது.பங்காளாதேசில் முத்திவாகினிக்கு நடந்தது தமக்கு நடந்து முஜிபிர் போல் அமிர் ஒருநேரம் வரலாம் என்றபயத்தில் தான் அமிரைப் புலிகள்போட்டார்கள்.

கடைசிவரை நாட்டில் இருந்தார் அது ஒன்றேபோதும்.எங்களைப்போல் ஓடிவந்து யாரோ பணத்தில் வயித்தை வளர்த்து தேசியம் பேசவில்லை.

அர்ஜுன்,

திரியின் கரு, பார்வதி அம்மாவின் சாம்பல் மீதான மிலேச்சத்தனமான அவமானப்படுத்தல் தொடர்பானது, அமிர்தலிங்கம் நல்லவரா கெட்டவரா என்பது அல்ல. திரியின் மையக் கருத்தை திசை திருப்ப வேண்டாம். அமிர்தலிங்கம் தொடர்பாக விவாதிக்க விருப்பம் என்றால் அரசியல் அலசல் பகுதியில் ஒரு திரியை ஆரம்பியுங்கள்

கள விதிகளின் படி, திரியின் போக்கை திசை திருப்புதல் தவறாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போல, இதே செய்தியுடன் இன்னுமொரு திரி இருந்கிறது. இரண்டிற்கும் பொதுவாக இதில் எழுதுகிறேன்.

முதலாவது, இந்த செயற்பாடு, சுடலையில், காடு ஆறுவதற்கு முன் சாம்பலை கலைத்ததுவும், அதற்குள் செத்த நாய்களை நாய்களை போட்டதும், ஒரு அருவருப்பான கண்டிக்கத்தக்க செயல். மனித குலத்திற்கே இழிவான செயல். அதை செய்தவர்கள் மனிதப்பிறவிகளே அல்ல.

அதை அவர்கள் என்னவிதமான காழ்புனர்வோடும், வெறுப்போடும், குரோததொடும் செய்திருந்தாலும் அவர்களை என்ன சொல்லி திட்டினாலும் தகும். அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் மனிதர்களே அல்ல.

ஆனால், அந்த செய்திக்காய், பிணத்துடன் 3 நாயை கிரபிசில் இணைத்து செய்தி போடுவார்கள், -இணைப்பை பார்க்கவும்., அந்த செய்தியை இணைப்பவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் கூறின மட்டைகளே. இப்படியான செய்திகளை இணைப்பதர்ற்கு இத்தகைய செய்தி தளங்களை தவிர்த்தால் நல்லம்.

மற்றது, அர்ஜுன்,

புலி அமிர்தலிங்கத்திக்கு வணக்கம் செய்யாத படியால், இன்று நடந்ததிற்கும், நீங்கள் ஓம் ஓம் சொல்லப் போகிறீர்களா? அல்லது அதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த போகிறீர்களா? இது தேனும் பாலும் கதை அல்ல, அங்கே ஒரு அவலம், செய்தவீட்டுக்கு போறாக்களை பாருங்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள், அவர்கள் கூட தலையை எங்கோ திருப்பி கொண்டு போறது மாதிரித்தான் எனக்கு தெரியுது. இந்த நிகழ்வை கூட ஒன்றுமே இல்லாதது போலத்தான்/ கட்டத்தான் பலரும் வெளிகிட்டவை, நான் இந்த செய்தி வந்தவுடன் இலங்கையில் உள்ள பத்திகை ஒன்றுக்கு பின்னூட்டம் எழுத தூக்கி போட்டார்கள், பிறகு அதைவிட பலரும் பல மாதிரி எழுதினவை. முதலில் பதிந்திருந்தேன், BBC கூட, செய்தி போடவில்லை, -மலேசிய வாசுதேவன் மறைவு பற்றி போட்ட பின்னர்தான், கன நேரத்துக்கு பிறகு போட்டவை, பிடித்த சிங்கள மீனவர்கள் வீடாததை பிரதானமாகவும், இதை ஒரு உப செய்தியாகவும் போட்டவை...பிறகு..இப்ப தொடர்ந்து போட்டிருக்கு, எல்லாம் -அவர் சொன்னார் , இவர் சொன்னார் என்கிற மாதிரி- இராணுவத்தினர் தடுத்தார்களாம்/ஆம் /////// என்கிற செய்தி...எல்லாம் முடித்ததிர்ற்கு பிறகு, இப்ப BBC இங்கிலீஷ்/ சிங்கள பகுதியில் போட்டிருகிறார்கள்.

நீட்டிக்கொண்டு போகாமல்,

இதை இந்தளவிர்ற்கும் செய்த அந்த ஊர் மக்கள் பெருமைக்குரியவர்கள்..இங்கே எங்களை மாதிரி இணைய வீரர் மாதிரி இருக்காமல் செய்து கட்டியதிர்ற்கு.

அதேநேரத்தில், இலங்கை அரசை மனம் போனபடி, திட்டுபவர்கள் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும், அது இப்பவும் நடந்தது இலங்கையில்தான்..இந்தியாவிலோ, நாடுகடந்த தமிழ் ஈழத்திலோ அல்லது டொராண்டோவிலோ அல்ல. நாங்கள் என்னதான் பக்/ பக் என்று கத்தினாலும் பிரச்சார ரீதியில் வெல்லப்போகிறது அவர்கள்தான் என்பதை உணர வேண்டும். பிரகாரனின் அம்மாவுக்கே வைத்தியம் பார்த்து ஈமை கிரிகை நடத்தினது நாங்கள்தான் என்றால் கேட்கத்தான் வேணும். ஏனெனில் அவர் காலமானது மகிந்தவின் "இறையாண்மை" உள்ள இடத்தில்.

முடிவாக,

அமிர்தலிங்கம் என்ன செய்த என்று கேட்டிருந்தார்கள், நாளைக்கு தமிழன் என்ற இனம் இலங்கை இருந்ததா என்ற கேள்விக்கு என்ன பதில் நீங்கள் தாயார்படுத்துகிறீர்களோ அதுவே இந்த கேள்விக்கான பதிலாக இருக்கம்.

- இந்த இடத்தில் சட்டென வந்த ஞாபகம், சோபாசக்தி எழுதின கதை ஒன்றுக்கு ( அவரைபற்றி பல திரிகள் / பின்னோட்டங்கள் சம காலத்தில் போவதால் ஞாபம் வந்தது) நான் நினைக்கிறன் கிருபன் போட்ட பதில்..அவர்( அந்த கதை நாயகன் ) டெலோ வில் இருந்த "இன்னார்".. அப்படியானவர்களையும் நாங்கள் துரோகிகள், அல்லது நினைவு கூரத்தகாவர்கள் என்றுதானே ஒதுக்கி வைத்துள்ளோம்..அந்தவகையில் உங்கள் கேள்வி - அமிர்தலிங்கத்தை பற்றி- பிழையான ஒன்றல்ல.

நேற்று சீ.எம்.ஆர் இல் ஒருவர் இவ்வளவு அநியாயங்கள் எங்களுக்கு நடக்கின்றது ஏன் இன்னமும் உலகம் எமக்காக குரல் எழுப்பவில்லை என்று.அதற்கு பதில் "நீங்கள் செய்த அநியாயங்களையும் அவர்கள் பார்த்தபடியால் தான்" என்பதுதான் பதில்.

குத்திக்காட்டுவதற்காக எழுதவில்லை அவர்கள் அந்த அடாவடித்தனங்களையெல்லாம் செய்யும் போது அவை பிழை என்று உங்களுக்கு ஏன் அப்போது விளங்காமல் போனது?

என்ன இப்ப சொல்ல வாறியள்... நாங்கள் பிழை விட்டதாலை அதை தொடர்ந்தும் விட்டதாலை உலகம் எங்களை அழிக்க முடிவெடுத்தது எண்டே...?? அப்படி எண்டால் சிங்களவர் பிழையே விட இல்லையோ... இல்லை சர்வதேசத்துக்கு நாங்கள் விட்ட பிழைகள் மட்டும் தான் தெரியுமோ...??? சிங்களவன் பிழையே விடாததாலை தான் அவனுக்கு சர்வதேசம் உதவி செய்தவை எண்டு சொல்ல வாறியளோ...??

கேள்வி கேட்டால் எப்பவும் பதில் சொல்ல உங்களுக்கு தெரிவதில்லை.... எண்டாலும் கேக்கிறதை நானும் விடுகிறதாக இல்லை... !

அண்ணை உங்களுக்கு ஒண்டு சொல்ல வேணும்... உங்களை விட பெரிய அரைவேக்காடுகளை எல்லாம் நாங்கள் பாத்திட்டம்....! <_<

சசி,என்னை எதோ என்று நினைக்கவேண்டாம் சக மனிதனாக நினைத்தால் காணும்.

அமிர்தலிங்கம் தமிழினத்தின் தலைவராக இருந்தவர்,பிரபாகரனுக்கும் தலைவராக இருந்தவர்.எமது போராட்டம் ஆரம்பமாகியதற்கு அடி கோலியதே அவர்தான்...

அமிர்தலிங்கம் ஆரம்பம் எண்டால் செல்வநாயகம் யாராம்....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே!இல்லாத இயக்கத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள் என்றால்.

இன்றும் யுரோப்பிய யூனியன் தடை செய்கின்றதென்றால் எங்கோ பெரியபிழை இருக்கின்றதென்று விளங்கிக்கொள்ளுங்கள்.
  • தொடங்கியவர்

நேற்று சீ.எம்.ஆர் இல் ஒருவர் இவ்வளவு அநியாயங்கள் எங்களுக்கு நடக்கின்றது ஏன் இன்னமும் உலகம் எமக்காக குரல் எழுப்பவில்லை என்று.அதற்கு பதில் "நீங்கள் செய்த அநியாயங்களையும் அவர்கள் பார்த்தபடியால் தான்" என்பதுதான் பதில்.

குத்திக்காட்டுவதற்காக எழுதவில்லை அவர்கள் அந்த அடாவடித்தனங்களையெல்லாம் செய்யும் போது அவை பிழை என்று உங்களுக்கு ஏன் அப்போது விளங்காமல் போனது?

இன்றும் யுரோப்பிய யூனியன் தடை செய்கின்றதென்றால் எங்கோ பெரியபிழை இருக்கின்றதென்று விளங்கிக்கொள்ளுங்கள்.சும்மா இணயத்தில் வந்து எல்லோரையும் கேவலாமாக திட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை.சுய இன்பத்திற்கு வேண்டுமெனில் கருநாயே என திட்டிக்கொண்டே இருக்கலாம். சிலவேளை என்னையும் சேர்த்து.

உலக நீதி என்பது தன் தன் நலன்களை வைத்தே வரையப்படுகின்றது. உதாரணத்திற்கு எம்மை "பயங்கரவாதிகள்" என சொல்லி தடை செய்பவர்களை நாமும் அவர்கள் தர்மத்தின் பக்கம் அவர்கள் தலை வைத்தே நித்திரை கொள்பவர்கள் என நம்புவது புத்திசாலித்தனமாகாது. ஏனெனில் இன்று மத்தியகிழக்கில் மக்கள் சாத்வீக ரீதியில் மேற்குலத்தால் ஆதரிக்கப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுகிறார்கள். அவர்களில் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றார்கள். இதிலும் மேற்குலத்துக்கு "தனக்கு என்ன இலாபம்?" என்பதே தேடலாக உள்ளது.

அதற்காக எம்மை தடை செய்தவர்களை நாம் உதாசீனம் செய்யவேண்டும் எனப்பொருள் படலாகாது.

இந்தியா, சீனா, மேற்குலக நாடுகள் இன்று நண்பர்கள், சந்தைகள், தமது பாதுகாப்பு என தேடுகிறார்கள். எமது விடுதலை, உரிமைகள் அவர்களின் தேடுதல்களுடன் இராசதந்திர சாணக்கியத்துடன் நகர்த்தப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தினரின் புத்தி குறைவால் வாழுகிறது தமிழருக்கு எதிரான நஞ்சு!

அப்பட்டமான பொய்களை அப்படியே விட்டுவிட்டு. பொய்களுக்கு ஆதாரம் கேட்டு எழுதியது நீக்கபட்டுள்ளது.........

நீங்கள் பெரிய நடுநிலமைவாதியவோ நாகரீகவாதியாகவோ இருங்கள். ஆனால் ஆதாரம் அற்ற பொய்களுக்குள்ளும் அவதுறுகளுக்கும் இடையில் நாகரீகமும் களவிதியும் எங்கே உள்ளது என்று சற்று சுட்டிகாட்டினால் எமது நேரத்தை வீணாக செலவு செய்யாது வேறு ஏதாவதற்கு பயன்படுத்தலாம்.

தலைப்பிபை திசைதிருப்பி எடுத்த புலிவாந்தி அப்படியே உள்ளது.............

சிங்களவன் தமிழரை அடித்து உதைத்து கொன்றுகுவித்து தனது அதிகாரத்தை ஆடாவடிதனத்தையும் நிலைநிறுத்தினான்.........

இதில் யார் தமிழரோடு நின்றார்கள்? யார் தமிழருக்காக உழைத்தார்களோ அவர்கள் எல்லோரும் சிங்களவனின் எதிரியாகியே நின்றார்கள் சிங்களனால் கொலையுண்டும்போனார்கள்.

இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையில் உள்ளது என்றால்? இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்றா அதன்பொருள்?

ஜனநாயகம் உள்ளதாக காட்ட செய்யும் ஒரு கண்துடைப்பே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இந்த கூத்தமைப்பு இல்லாதுபோனால் தமிழனுக்கு பல நன்மையுண்டு.............. இருந்தால் தீமைமட்டுமே உண்டு இந்தியாவும் சிங்களவனும் தங்களது தங்களது போலிஜநாயக நாடகத்தை அரங்கேற்றவே இந்த கூத்தமைப்பை மேடையேற்றுகிறார்கள். இரண்டுகட்ட பேச்சுவார்தை;தைகளும் வெற்றிகரமாக முடிந்ததாம்.............. 20தாவது பேச்சுவார்ததையும் வெற்றிகரமாகவே முடியும் இதில் சந்தேகபட என்ன இருக்கிறது? ஆனால் இதானால் தமிழனுக்கு ஏதும் நன்மையுண்டா? ஏதாவது நன்மை இதுவரையில் இருந்திருந்தால் அதை சுட்டிகாட்டி எனது கருத்தை நீக்குங்கள். வாந்திகளை வாழவைத்துகொண்டு................... பொய்களை நோக்கி வைக்கும் கருத்துகளை நீங்ககுவதால் எந்த நாகரீகமும் நிலைநாட்டபடபோவதில்லை.

அமிர்தலிங்கம் தமிழருக்காக (1983- சுடப்பட்ட திகதிவரை) செய்த ஒரு சுயநலமில்லாத செயலை உங்களால் சுட்டடிகாட்ட முடிந்தால் எழுதுங்கள் வாசித்து அறிய நாங்களும் ஆவலாக உள்ளோம்............. அவருக்கு அஞ்சலி செய்தால் நாங்களும் வருகிறோம். இந்தியாவின் அனைத்து நச்சு வேலைகளுக்கும் துணையாக இருந்தமையால்தால் சிங்களவன் தனது பொலிஸ்சையும் காவலுக்கு வைத்து காவல் காத்துவந்தான். திம்பு பேச்சுவார்தையில் போராட்ட விடுதலை இயக்கங்களும் இந்த அரசியல்வாதிகளும் ஒருமித்த குரலாக ஓரே கோட்டில் நின்றார்கள் தனது அரசியல் காய்நகர்த்தலுக்கு இது பெரும் இடியாக இருக்கும் என்று அறிந்த இந்தியா அமிர்தலிங்கத்தை தனது வலைக்குள் அன்றே விழுத்திவிட்டது........ அன்றிலிருந்து சாகும்வரை இந்தியாவின் அடிவருடியாக இருந்துகொண்டு செய்தவைகள் ஏராளம். புளட் இயகத்தை மாலைதீவை பிடிக்க அனுப்புவது பின்பு அதற்காகவே அவர்களை கைது செய்வது என்பதெல்லாம் இவரோடு கலந்து ஆலோசித்தே இந்தியா நிறைவேற்றியது.

லிபரேசன் ஓபரேசன் என்று நாசாகரி படைகொண்டுவந்து எங்கள் மீது குண்டுகளை கொட்டியபோதெல்லாம் இந்த அமிர்தலிங்கமும் அவரதது அடிவருடிகளும் எங்குபோனீர்கள்? ஆம் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்துகொண்டு இருந்தீர்கள்?

புலிகள் அப்படி இருக்கவில்லை........... தங்களுக்கு அப்பாற்பட்ட தற்கொடைக்கு தங்களை தயார்செய்து மில்லர் நெல்லியடியில் வெடித்தபோது. லிபரேசன் ஒபரேசனுக்கு ஓய்வு வந்தது.................. அதை தொடர்ந்து பணிந்த சிங்களம் இந்திய ஸ்ரீலங்கா பேச்சுவார்தையை தொடங்கியபோது. உங்களால் முடிந்ததை செய்துகொண்டு இருந்திருக்கலாமே??? இப்ப மட்டும் முதலாவது கதிரை அவர்களுக்கு வேண்டும்? ஏனெனில் அதில் அவர்களது சொத்திழப்போ உயிர் இழப்போ ஏதும் இல்லை.......

சாவது நாமும் புலிகளும்........... இடையில் ஏதும் இடைவெளி வந்தால் நீங்கள் பிரதிநிதிகள்? சாகும்போது மட்டும் சிங்களவின் பொலிஸையும் காவலுக்கு வைத்துகொண்டு உங்களால் முடிந்தளவில் நித்திரையும் செய்துகொண்டு இருந்துவிட்டு.......... நாங்கள் கொஞ்சம் மூச்சுவிட முகத்தை தூக்கும்போது மட்டும் நீங்கள் எங்ளுக்கு தலைவர்கள்? எங்களது தலைவர்களாக இருந்திருந்தால் சிங்களவன் உங்களை அல்லவா முதலில் தீர்த்து கட்டியிருக்க வேண்டும்?

இந்திய சிங்கள கூலிபடைகளுடன் கூடி பாலியல் வல்லுறவுகளையும் களவுகளைம் செய்துகொண்டு திரிந்த ஒரு காவாலி கூட்டத்திற்கு தலைவனாக இருக்க டக்ளசிற்கு எந்த தகுதியும் இல்லை என்று புலிகள் ஒருபோதும் சொன்தில்லையே? தமிழ் மக்கள் சொன்னதாகவும் நாம் அறியவில்லை. காட்டேறிகள் தமது தலைவரை தெரிவுசெய்வதில் எமக்கு எந்த வில்லங்கமும் இல்லை.

ஆனால் எமது தலைவனை தெரிவு செய்வது என்பது எங்களுடைய தேர்வு................ இனத்தின் தலைவனை எடுத்து செல்வது வரலாறு. அதை நானும் நீங்களும் செய்யமுடியாது........... அதை இனத்தின் வரலாறு பதிவு செய்கிறது செய்தும் உள்ளது. வாந்திகளால் வாழுவோரை தலைவர் என்று எங்களுக்குள் ஒரு திணிப்பை ஏன் திணிக்கிறீர்கள்? அவர்களை வாந்திகாளால்தான் வாழவைக்க முடியும் என்பது உங்களுக்கே தெரிந்த பின்தான் எந்த அடியும் இல்லாத முடியும் இல்லாதவைகளை வந்து கொட்டிவிட்டு போகின்றீர்கள்.

தலைவர் எதையாவது கிழித்திருந்தால் அதை எழுதுவேண்டாம் என்று நாம் சொல்லவில்லையே............ செய்தார் செய்தார் என்று மட்டும் எழுத வேண்டாம் என்றும். அவர் என்ன செய்தார் என்று நாம் கேட்கும்போது அதை வெட்hதீர்கள் என்றும் மட்டுறுத்தினர்களையும் பணிவோடும் நாகரீகமான முறையிலும் கேட்டுகொள்கிறேன்.

நான் எதை எழுதி என்ன ஆகபோகிறது? உங்களுடைய அறிவுக்கு எட்டியதைதானே நீங்களும் செய்ய முடியும் என்ற நிலைமைதான் என்றால்................. அரிவாளை தூக்கி போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியின் புத்திக் கூர்மைக்கு.... பாராட்டுக்கள். :)

ஆ கடவுளே!!! திரியத் திசை திருப்பியத்தற்கு இரண்டு பச்சை புள்ளிகளா? :huh::rolleyes: அடிக்கடி அவர் இடும் பதிவிற்கு இரண்டு பச்சை புள்ளிகள் உடனே விழுகிறது... இரண்டு நிழல்களுடன் இருப்பவரோ... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

திரியின் கரு, பார்வதி அம்மாவின் சாம்பல் மீதான மிலேச்சத்தனமான அவமானப்படுத்தல் தொடர்பானது, அமிர்தலிங்கம் நல்லவரா கெட்டவரா என்பது அல்ல. திரியின் மையக் கருத்தை திசை திருப்ப வேண்டாம். அமிர்தலிங்கம் தொடர்பாக விவாதிக்க விருப்பம் என்றால் அரசியல் அலசல் பகுதியில் ஒரு திரியை ஆரம்பியுங்கள்

கள விதிகளின் படி, திரியின் போக்கை திசை திருப்புதல் தவறாகும்

ஆ கடவுளே!!! திரியத் திசை திருப்பியத்தற்கு இரண்டு பச்சை புள்ளிகளா? :huh::rolleyes: அடிக்கடி அவர் இடும் பதிவிற்கு இரண்டு பச்சை புள்ளிகள் உடனே விழுகிறது... இரண்டு நிழல்களுடன் இருப்பவரோ... :unsure:

நிழலி சொல்வதும், சரி குட்டி.

அர்ஜூன் அமிர்தலிங்கத்தைப் பற்ரியோ... அவரின் மனைவி மங்கயல்கரசி பற்ரிக் கதைப்பெதென்றால்,,,,,,

தனித் தலைப்பு.... எடுக்கட்டும். பிச்சுக் கொண்டு போகும்.

நிழலி சொல்வதும், சரி குட்டி.

அர்ஜூன் அமிர்தலிங்கத்தைப் பற்ரியோ... அவரின் மனைவி மங்கயல்கரசி பற்ரிக் கதைப்பெதென்றால்,,,,,,

தனித் தலைப்பு.... எடுக்கட்டும். பிச்சுக் கொண்டு போகும்.

சிறி அண்ண நிழலி சொன்னதில் பிழை இல்லை!

இரண்டு பச்சை புள்ளிகள் அடிக்கடி அதுவும் உடனே விழுவதால் அவர் இரண்டு நிழல்களுடன் இருப்பாரோ என்று தான் கேட்டேன் :D இங்கே நிழலியை நான் ஏதும் சொல்லவில்லை :)

மருதங்கேணியின் புத்திக் கூர்மைக்கு.... பாராட்டுக்கள். :)

சர்வதேசத்தின் நடவடிக்கைகளுக்கு முற்று முழுதாக எமது போராட்டத்தை நடாத்தியவர்கள்தான் முழுக்க காரணம் என கூறுவது முட்டாள்தனமானது. அடுத்ததாக விடுதலைப்புலிகள் செய்த சில விடயங்களுக்க்காக அதற்கு எதிராக செயற்பட்டோர், கருத்துக்கூறியோர், நடவடிக்கை எடுத்தோர் மிக மிக அதிகம் பேர். கண்ணை மூடிக்கொண்டு புலிகளை தட்டி கேட்கமுடியவில்லை, புலிகள் இருக்கும்போது ஒன்னுமே செய்ய முடிய இல்ல என்று சொல்பவர்கள் போராட்டகாலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எத்தனை பேர், கொலை, சித்திரவதை தொடக்கம் அனைத்து விடயங்களையும் செய்தார்கள்.

விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது வேறு விடயம் புலிகள் செய்த அனியாயத்திற்காகத்தான் தடைசெய்தார்கள் என்றால் ஏன் தடை செய்த கையோடு ஒருவரையும் பிடிக்காமல் இப்போ தடவி தடவி பிடிக்கவேண்டும்.

செயற்படத்தெரியாதவர்கள், சோம்பேறிகள், மற்றவர்களை ஏவிவிட்டு புதினம் பார்ப்பவர்கள், கருத்து சுதந்திரம் என்ற பேரில் மற்றவர்களை எள்ளி நகையாடுபவர்கள், சுதந்திரத்திற்காக பத்து காசோ, ஓர் குடும்ப உறுப்பினர்களையோ இழக்க விரும்பாதவர்கள், பதவி ஆசை பிடித்தவர்கள், எல்லாருக்கும் கிடைத்திருக்கின்ற அரிய சொத்து புலிகள்தான்.

இன்னும் 100 வருடங்கள் சென்றாலும் எல்லாவற்றுக்கும் புலிகள்தான் காரணம் என்று சொல்லிக்கொண்டு தம்மை பாதுகாக்க முற்படுவதும். தமது முன்னேற்றத்திற்கு தேவை என்றால் புலிகளுடன் ஒட்டு என்று காட்டுவதும் தான் நடக்கும்.

இதனைத்தவிர வேறொன்றும் நடக்காது. ஏதாவது நல்லா நடந்தால் இராசதந்திரம், பிசகினால் புலிகளால்தான் வந்தது. நல்லா இருக்கும் நாடகங்கள்.

இணையத்தில் கத்துகின்றவர்கள் எல்லோரும் கூடி ஒரு மைதானத்தில் முடிந்தால் ஜனனாயக் முறைப்படி ஒரு முடிவிற்கு வரமாட்டார்கள். ஒன்றை கூடி உருப்படியாக செய்யமாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் எத்தனை பேர் வெட்டுறன் வீழ்த்துறன் என்று வீரவசனம் பேசினர், ஜனனயகம் பற்றி விளக்கவுரைகள் கொடுத்தனர், இராஜதந்திரம் பற்றி பட்டிமன்றம் நடத்தினர்.

சில மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் (இணையமும் நடத்துகின்றார்கள்) முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு சில அறக்கட்டளைகளை ஆரம்பித்தார்கள். இரண்டு வருடமாகியும் என்ன செய்ய முடிந்தது. அவர்கள் கதைத்ததில் ஒரு வீதம் செய்ய முடிந்ததா?

ஏன் நாட்டில் புலியால ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் புலி இலாத நேரம் என்ன செய்தார்கள்? புலி இருந்தபோது இந்தியா மேற்கு நாடுகள் கூட்டமைப்பினை கூப்பிட்டு கதைத்தார்கள் , சிங்கள அரசும் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதை அப்போ... ஆனால் இப்போ

மாதக்கணக்காக, வருடக்கணக்காக சர்வதேசத்தை கூட சந்திக்க முடியவில்லை. தூதர்களைக்கூட சந்திக்க முடியவில்லையே ஏன்?

புலிகள் இருக்கும் போது அழைப்பு விட்ட சர்வதேசம் இப்போ ஏன் கூட்டமைப்பினை முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் கூப்பிடவில்லை?

ஜனனாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டவர்களை புலிகள் கதைக்க விடுவதில்லை என கூறிய ஐரோப்பிஒய ஒன்றியம்.. ஏன் இப்போ அழைப்பதில்லை யார் கூட்டமைப்பினை தடுக்கின்றார்கள்? ஏன் அழைக்கவில்லை?

ஒருவர் இல்லாத போது அல்லது ஒருவர் பலயீனமானபோது, அல்லது கேட்கிறதிற்கு நாதியற்று இருக்கும் போது அவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு தப்பி செல்வது தனிப்பட்ட ம்,மனிதர்களில் இருந்து உலகம் வரை ஓர் வியாதியாக உள்ளது. அதுதான் இப்போ நடக்கின்றது.

அதற்கு தமிழர்களாகிய நாமும் சேர்ந்து வாசிப்பதுதான் மனவேதனை.

கொழும்பில் ஒரு குண்டுவெடித்து கிரிக்கெட் நடக்காது போயிருந்தால், அல்லது இலங்கையில் புலிகள் ஓர் தாக்குதல் நடத்தினால்... இந்த உலகம் எப்படி மாறும் என்பதனை நீங்கள் அறிவீர்கள்..

எல்லாமே தலைகீழாக போகும். இதுதான் யதார்த்தம். சர்வதேசம் தமது இயலாத்தனத்தை காட்டுவதற்கும் தம்மை நியாயப்படுத்திக்கொண்டு இலங்கையில் வியாபாரம் செய்யவும் புலிகள் மீது அவப்பழியை சுமத்தி தமிழர்களை ஏமற்றப்பார்க்கின்றது.

சிங்களமும் அதைத்தானே செய்கின்றது.

எடுத்ததற்கெல்லாம் புலி புலி என்று சொல்வதனை நிறுத்துங்கள். அல்லது ஒரே அடியாக நீங்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என தப்பிவந்ததுகள், சிறைக்குள்ள இருக்குறதுகள் எல்லாவற்றுக்கும் தண்டனை வாங்கி குடுத்து பழியை தீர்த்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் ஓர் முடிவிற்கு வாருங்கள்.

பிரபாகரன் மீதும், சிலர்மீதும்தான் எங்களுக்கு கோவம் என்ற பெயரில் இயக்கத்தையும் மாவீரர்களையும் நெடுக கேவலபப்டுத்தாதீர்கள். ஆத்திரம் இருந்தால் அவர்களை கொல்லுங்கள் அதுக்கு கூட கழுத்து நீட்ட போராளிகள் தயாராக இருக்கின்றார்கள்.

தன் தாய் நாட்டிற்காக எதையும் தர தயாராக இருக்கின்றேன் என இன்னமும் சிறையில் இருக்கின்றவர்கள், தப்பி வந்தவர்கள் சொல்கின்றார்களே ஏன்? விடுதலைப்புலிகள் சார்பாக நாம் வழக்காட வருகின்றோம். தவறு இருந்தால் சர்வதேசங்களின் சட்டவிதிகளின் படி தண்டியுங்கள் என்று தம்மை அர்ப்பணிக்க தயாராக எத்தனையோ போராளிகள் சிறை செல்ல தயாராக இருக்கின்ரார்களே ஏன்?

இனையத்தில் புளிச்சல் ஏவறை விட்டு பேசுபவர்களுக்காக அல்ல. எங்களால், எங்கள் மாவீரர்கள் பேரால், எங்கள் தலைவர் பேரால், எங்கள் இயக்கத்தின் பேரால் தமிழ் மக்களது போராட்டம் தடைப்படக்கூடாது என்பதற்காக.

எங்களை சாட்டி எம் மக்களை சர்வதேசம் பின்னடிக்க கூடாது என்பதற்காக..

இன்று கூட உலக தமிழர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என கூறினால் அதனை என்னவிதப்பட்டாவது செய்வோம் என நூற்றுக்கனக்கான போராளிகள் இருக்கின்றார்கள்.

இணையத்தில் வருகின்ற சுடு சொற்களாலும், இழி சொற்களாலும் அவர்கள் வேதனைப்படவில்லை. அவர்கள் என்ன சொல்கின்ரார்கள் தெரியுமா?

சனம் பாவம் அப்படித்தான் கதைக்குங்கள் எவ்வளவோ எதிர்ப்பார்ப்போட சனம் இருந்ததுகள் ஆத்திரம் வரும்தானே.. இப்படித்தான் அந்த போராளிகள் தமக்குள் பேசிக்கொள்கின்ரார்கள்.

ஆனால் நாங்கள்...

மீண்டும் மீண்டும் அவர்களை காயப்படுத்துகின்றோம் சிங்களவனை விட, இந்தியனை விட வெளினாட்டவனை விட.. நாம் நாவினால் சுடுகின்றோம்.

சொல்லால் அடிப்பது இலகு ஆனால் முடிந்தால்.. உங்கள் செயற்பாட்டினால் அவர்களை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதனை நிரூபியுங்கள்.

(எழுத்துவழு, சொல்வழு ஆகியவற்றுக்கு மன்னிக்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண நிழலி சொன்னதில் பிழை இல்லை!

இரண்டு பச்சை புள்ளிகள் அடிக்கடி அதுவும் உடனே விழுவதால் அவர் இரண்டு நிழல்களுடன் இருப்பாரோ என்று தான் கேட்டேன் :D இங்கே நிழலியை நான் ஏதும் சொல்லவில்லை :)

இப்ப, விளங்கிவிட்டது குட்டி. :D

1987 அக்டோபர் மாதம் ஒன்றில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 16 பேருடன் கடல்புறா இந்தியா நோக்கி போகிறது. சாமாதான காலம் என்று அசட்டையாக நடந்த புலிகளின் தொலைதொடர்பாடல்களை ஒட்டு கேட்ட சிங்கள கடற்படை வழிமறிக்கிறது. கை துப்பாக்கிகளையும் மூன்று ஏகே ரக துப்பாக்கிகளையும் தவிர வேறேதும் இல்லை. சரண் அடையுங்கள் என்று தலைமியிடம் இருந்து செய்தி போகின்றது. புலேந்திரன் திட்டவட்டமாக மறுக்கிறார் குப்பி அடியுங்கள் என்று சொல்லுங்கள் ஆனால் கைது செய்ய எங்களால் அனுமதிக்க முடியாது என்று அடம் பிடிக்கிறார். சாமாதானத்தை புலிகள்தான் குழப்பினார்கள் என்ற அவப்பெயர் எங்களுக்கு வராது தடுப்பதென்றால் கைதுசெய்ய அனுமதிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட உயர்மட்டம் சொல்கிறது.

அந்த வீரர்கள் கைதுசெய்ய அனுமதிகொடுக்கிறார்கள்.............

பின்பு புலிகள் கேட்டதெல்லாம் இந்திய இராணுவம் அவர்களை பொறுப்பெடுக்க வேண்டும் என்தே மத்தியஸ்தம் வகித்து அமைதிகாப்தென்ற பெயரில் வந்த இந்தியாவை மத்தியஸ்தம் செய்யுமாறே கேட்டார்கள்.............

அதன்பிறகும் அதற்கு முன்பும் நடந்த கொடுமைகளை புலிகள் சொல்ல தேவையில்லை...........

அப்போதைய இந்திய இராணுவ அதிகாரி கரிகரனே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தமிழ் ஈழமே தமது இலக்கு என்று வாழ்ந்தும் காட்டினார்கள் அவர்கள் இறந்தும் காட்டினார்கள்.

இது இடையில வந்ததுகள்............. தங்களாலே முடிந்ததை தாங்கள் செய்தோம் என்று தாம் மட்டும்தான் எழுத முடியுமாம். அதையே நாம் எழுதினால் அது அது தப்பு. நாமும் அதைதானே சொல்கிறோம் உங்களால் எது முடிந்ததோ அதையே நீங்கள் செய்தீர்கள் செய்துகொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் புலிகள் என்ன செய்தார்கள் என்று எங்களுக்கு ஆப்பிரிக்கா காரனுக்கு வகுப்பெடுப்பதுபோல் எடுக்காதீர்கள்.

அதில் உறவுகளை கொடுத்தவனுக்கே தெரியும் விடுதலையின் விலைகள். அம்ஸர்டாம் மும்பாய் டெல்லி என்று விலைமாதருடன் திரிந்தவர்கள் விடுதலைபற்றி எமக்கு விளக்க என்ன இருக்கிறது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் ஒரு செய்தி வந்திருந்தது, வடமராச்சியில் ஒரு மாணவன் டெங்கு நோய் வந்து இறந்தார் என. பின்னர் வந்த இன்னுமொரு இணைப்பொன்றில் வடமாகாண சுகராத அதிபர்/ அத்தியட்சகர் சொன்னவர், அது டெங்கு அல்ல- செப்டிக் சோக் அல்லது செப்டிசெமியா என .....அந்த நேரத்தில் அதை வாசித்திருந்தாலும், அதற்கு பதில் எழுத விரும்பவில்லை/ அல்லது நேரமில்லை....சொல்ல வருவது என்னவென்றால் செப்டிக் சோக்/ செப்டிசெமியா என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்..இந்த புதிய சொற்கள் என்னத்திர்ற்கு இப்ப உதவுது என்றால் , முந்தி ஆக்கள் சொல்லுவினம் " வருந்தம் பிடிபடுகுதில்ல, மாறி மாறி டெஸ்ட்கள் செயினம், x ரே எடுக்கினம், கட் ஸ்கேன் எடுக்கினம், டாக்டர்மார், நேர்ஸ்மார் தங்களால முடிந்தா எல்லாம் செயினம் ஆனால் ஒண்டும் பிடிபடுகுதில்லை" அந்த நிலைகளை -டாக்டர்மார் தலையை பிச்சுகொண்டிருக்க ஒரு நிலைமைதான் செப்டிக்சோக்

இதனால் என்ன பயன் என்றால், எனக்கு தெரிந்த வகையில் ஆக்களுக்கு சொல்லாம்,இப்படி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடலாம்..-மற்றது செப்டிக் சோக் என்று தெரிந்த பிறகு அதற்க்கு என்று வகைபடுத்தப்பட்ட டெஸ்ட், சிகிச்சை முறைகளை செய்யலாம்..ஆள் தப்பினால், அவருக்கு நிமோனியா வந்து அது செப்டிசெமியா ஆக்கி ICU வைத்திருந்து ஆள் இப்பத்தான் வந்திருக்கிறார் என்று சொல்லலாம், இல்லாட்டி , அவருக்கு செப்டிசீமியா ஆக்கி ICU 4 நாள் வைத்திருந்த பிறகு ஆள் செத்து போனார் என்றும் சொல்லாம்.

ஏன் இந்த கதை எழுதினால் என்றால், அண்மையில் ஒரு "பெரிய":) வைத்தியர் ஒருவருடன் கதைக்கும் போது சொன்ன கதையே இது. அவர் சொன்னார், இந்த நேரத்திலும், மருத்துவத்தில் "பெரிய கிரே ஹோலேஸ்" இருக்குது . we still have large areas of grey holes in medicine but what we know, how to name them with fancy names . :) Good doctor or bad doctor or good treatment or bad treatment will determine by how we handle those grey holes

இந்த "கிரே ஏரியா" எல்லா இடத்திலும் வரும், எல்லா தொழிலிலும் வரும், எல்லாருடைய வாழ்க்கையிலும் வரும், ஒரு சின்ன வியாபாரத்திலும் வரும், 50 கிரிகெட் மாட்சிலும் வரும், ஒரு இனத்தின் போரடத்திலும் வரும். அதை நாங்கள் என்னவென்று நகர்த்துகிறோம் என்பதில்தான் எங்களது நீண்டகால விளைவுகள் வரும். இதை சொல்லுவதால், அல்லது சொல்லுவதர்ற்கு பெரிய அறிவாளியாக இருக்க தேவையில்லை.:(

இது பார்வதி அம்மாவின் சாம்பலில் வெளிக்கிட்டு புலியையும் அமிர்தலிங்கத்தையும் - திட்டுவதிலும் வாழ்வதிலும் போவதுதான் ஒரு இனமாக நாங்கள் எவ்வாறு அந்த கிரே ஏரியாவை நாசமாக்குகிறோம் என்பதர்ற்கு சிறந்த உதாரணம்.

இது தொடர்பாக வந்த இன்னுமொரு திரியில், இன்னுமொருவர் எழுதியது போல

சிங்களவன் எவ்வளவுதான் ஒற்றுமைப்பட வைத்தாலும் இணையாத இனம் என்றால் நாம்தான் சுபம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் எவ்வளவுதான் ஒற்றுமைப்பட வைத்தாலும் இணையாத இனம் என்றால் நாம்தான் சுபம்.

டக்ளஸ் கூட இந்த வசனத்தைச் சொல்லித்தான் தமிழர்களை நோகின்றாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசி,என்னை எதோ என்று நினைக்கவேண்டாம் சக மனிதனாக நினைத்தால் காணும்.

அமிர்தலிங்கம் தமிழினத்தின் தலைவராக இருந்தவர்,பிரபாகரனுக்கும் தலைவராக இருந்தவர்.எமது போராட்டம் ஆரம்பமாகியதற்கு அடி கோலியதே அவர்தான்.அவரால் முடிந்ததை தான் அவர் செய்தார்(இன்று கூட்டைப்பு செய்வதுபோல்).இந்தியா உதவிசெய்யும் என்று கடைசிவரை நம்பினார்.(இன்று சம்பந்தர் நம்புவது போல்).இந்தியா ஆயுதபோராட்டதிற்கு ஆயுதமும் களமும் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு மிதவாதியான அமிர்தலிங்கத்தையும் வைத்திருந்தது.பங்காளாதேசில் முத்திவாகினிக்கு நடந்தது தமக்கு நடந்து முஜிபிர் போல் அமிர் ஒருநேரம் வரலாம் என்றபயத்தில் தான் அமிரைப் புலிகள்போட்டார்கள்.

கடைசிவரை நாட்டில் இருந்தார் அது ஒன்றேபோதும்.எங்களைப்போல் ஓடிவந்து யாரோ பணத்தில் வயித்தை வளர்த்து தேசியம் பேசவில்லை.

அர்யுன், ஏனய இயக்கங்கள் தடை செய்யப்பட்டதும் இதே நோக்கத்தில் என்றே சொல்லி இருக்கலாமே ஏன் சொல்ல வில்லை? சிங்களத்தின் கால்லில் போய் அவர்கள் வீழ்ந்ததைக் கேட்டுவிடுவோம் என்ற பயமா?

பிரபாகரன் திருமணம் செய்தது குற்றம், உமா சிங்களத்துக்கு சேவகம் செய்தது எதார்த்தம். என்ற வகையில் கருத்தளப்பவரின் கருத்தியல் அரசியல் பாடம் எமக்கு படிப்பிப்பதை நினைக்க வருத்தமாக இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.