Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோக்கியோவை கழுவிச்சென்ற பெரும் சுனாமி இன்று அதிகாலை அனர்த்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு உதவியது என்பதற்காக ஜப்பானை எதிரியாகப் பார்த்தால் ஆகக் குறைந்தது 50 நாடுகளாவது எமது எதிரிகள் பட்டியலில் இருக்கும். என்னைப் பொறுத்தவரை அழித்தது ஸ்ரீ லங்கா, அழிக்க துணை நின்றது இந்தியா. இந்த இரண்டில் எது அழிந்தாலும் (தமிழீழத்தைத் தவிர்ந்த ஸ்ரீலங்கா, தமிழகத்தை தவிர்ந்த இந்தியா) நான் மகிழ்வேன். கொழும்பில் எனது உறவினர்கள் நண்பர்கள் இருந்தும் கூட ... ஏன் நானே அங்கு நின்றால் கூட எனது நிலை மாறாது.

  • Replies 90
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் அடுத்தவர்.... இப்படி தனது கருத்தும் உது தான் எண்டு போட்டு நடிகர் முரளியின் மரணத்துக்கு வருந்தினார் இங்கு

என்னப்பா இது?யப்பான் அழிவை பாக்க எனக்கு கவலை வரேல்லை எண்டு சொன்னதுஒரு தப்பா? :o

இஞ்சை ஒருத்தன் தன்ரை கருத்தை சொல்ல ஏலாதே? :rolleyes:

எனக்கு யப்பான் கூட நிண்டு கழுத்தறுத்தது பிடிக்கேல்லை அதாலைஎன்ரை கோபத்தை இப்பிடி காட்டினன்.

அதுக்காக மனிதாபிமானத்தப்பற்றி எனக்கு இஞ்சை ஒருத்தரும் பாடம் எடுக்க வேண்டாம்.

எவன் நல்லவன் எவன் கெட்டவன் எண்டு தெரியிற அளவுக்கு எனக்கு புத்தியும் இருக்கு வயதும் காணும். :)

Edited by குமாரசாமி

அவலங்களையே வாழ்க்கையாக்கி விட்ட நமக்கு ... இந்த அவலம் கவலையை அழிக்கவில்லை!!! ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் நிரந்தரமில்லை. சாவு ஒன்றைத் தவிர..!

இவ்வளவுகாலமும் மினைகட்டதெல்லாம் வீண்.......காசி, இராமேஸ்வரம் எண்டு திரிஞ்சிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பாத்தால் முழு உலகத்துக்கும் நாங்கள் எதிரி.எங்களுக்கு முழு உலகமும் எதிரி. :unsure: உருப்பட்ட மாதிரித்தான் :rolleyes:

- ஒரு தீவு கிட்டத்தட்ட எட்டு அடிகள் நகர்த்தப்பட்டுள்ளது

- இதுவரை 1000 பேர் மரணித்துள்ளதாக அறிவித்த ஜப்பானிய அதிகாரிகள் தற்போது சுமார் 88.000 பேரைக் காணவில்லை என்று அறிவித்துள்ளனர்.

- பாதிப்படைந்த பகுதிகளில் விசேட மீட்புப் பணிகள் அதிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கார்கள், கப்பல்கள், படகுகள், வள்ளங்கள், ரயில்வண்டி, வீடுகள் என்று ஏராளம் உடமைகளை நாசமாக்கியிருக்கிறது சுனாமி.

- இரண்டாவது உலக யுத்தத்தின்போது வீசப்பட்ட அணு குண்டுகளின் தாக்கம்போல ஜப்பானே தலைவிரி கோலமாகக் கிடக்கிறது. இது இவ்விதமிருக்க ஜப்பானின் பாரிய அணுசக்தி நிலையம் மூடப்பட்டு றேடியோ கதிர்கள் வீசாது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நில நடுக்கம் ஏற்பட்டபோது உண்டான நிகழ்வுகளை கைத்தொலைபேசிகளில் படம் பிடித்து இன்ரநெற்றில் பதிவு செய்துள்ளனர். ஏராளம் சிறு சிறு கிளிப்கள் இடம் பெற்றுள்ளன.

- இந்த அணு ஆளை உற்பத்திக்கு வந்துள்ள ஆபத்து பல பூமியதிர்வு ஆபத்து உள்ள நாடுகளிலும் அவை பற்றிய பாதுகாப்பு மாற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

http://www.alaikal.com/news/?p=60505

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாமல் பொறுப்பற்ற வெறும் பார்வையாளராக, சிங்கள பயங்கரவாதிகளின் நீண்ட கால ஆதரவாளராக இருந்த யப்பானின் செயல்கள் மறக்க முடியாதவை.

எது எப்படியாயினும், யப்பனில் ஏற்பட்ட சுனாமி அழிவுக் கட்சிகளைப் பார்க்க, அதில் அள்ளுண்டு பல்லாயிரம் மக்கள் உயிர் இழந்திருப்பார்கள் என நினைக்கும் போது, மனதில் இயல்பாக எழும் கவலையும், அனுதாபமும் தான் மேலோங்கி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அழிவுகள் எல்லோருக்கும் பொதுவானவை. இதனை பழிவாங்கலாக கருதுவது மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டது. ஜப்பானியர்கள்.. என்ற அடையாளத்துக்கு அப்பால் அவர்கள் மனிதர்கள் என்று நோக்கப்படும் போது அழிவுகள் துன்பகரமானவை.

நாம் எமது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப முதலில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் நிரந்தரமில்லை. சாவு ஒன்றைத் தவிர..!

இவர்கள் அழிவில் மகிழ எனக்கு பலமான காரணமுண்டு. அவர்கள் எம்மை அழித்ததற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள்.

மனிதாபிமானம் காத்துத்தான் பின்னோக்கி பின்னோக்கி போய் அழிந்தோம். இனி நான் பயங்கரவாதியாகவே இருந்துவிட்டுப்போகின்றேன். நான் இப்படி எழுதியதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்ல தயாராக இருக்கின்றேன்.

ஆமாம்

சாவைத்தடுக்க முடியாது. அது தானாக வருவதாக இருந்தால்....?

எம் சாவைத்தடுத்திருக்க முடியாதா...?

அல்லது ஆமாம் போடும் போது எல்லாவற்றிற்கும்....???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மே பத்தொன்பதுக்குப் பின்பு இந்த மனிதாபிமானம் மண்ணாங்கட்டி இவைகளையெல்லாம் ஒருபக்கத்தில நான், ஓரங்கட்டி வைத்துவிட்டன். இப்போ எம்மை அழிக்க யார் கொள்ளியெடுத்துக் கொடுத்தார்களோ அன்றேல் வேடிக்கை பார்த்தார்களோ இல்லையேல் கண்டும் காணாதிருந்து இலாபநட்டக் கணக்குப் பார்த்தார்களே அவர்களது பக்கத்தில் விபரீதங்கள் நடந்து மனிதபிணங்கள் மலையாக விழும்போது ஆனந்தப்படுகிறேன் இதற்காக நான் மனநோயாளி என அடையாளப் படுத்தவேண்டாம். அப்படி இருந்தாலும் அதற்குக் காரணம் நாணோ எனது சமூகமோ இல்லை.

இவர்கள் அழிவில் மகிழ எனக்கு பலமான காரணமுண்டு. அவர்கள் எம்மை அழித்ததற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள்.

மனிதாபிமானம் காத்துத்தான் பின்னோக்கி பின்னோக்கி போய் அழிந்தோம். இனி நான் பயங்கரவாதியாகவே இருந்துவிட்டுப்போகின்றேன். நான் இப்படி எழுதியதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்ல தயாராக இருக்கின்றேன்.

ஆமாம்

சாவைத்தடுக்க முடியாது. அது தானாக வருவதாக இருந்தால்....?

எம் சாவைத்தடுத்திருக்க முடியாதா...?

அல்லது ஆமாம் போடும் போது எல்லாவற்றிற்கும்....???

விசுகு, எங்கள் விடுதலைப்போராட்டம் சிங்கள அரசுடன் தான் இருந்தது சிங்கள மக்களுடன் இல்லை.

எமது வீழ்ச்சிக்கு ஜப்பான் அரசும் ஒரு காரணமாய் இருக்கலாம்... அந்நாட்டு அரசு எடுக்கும் எல்லா முடிவிற்கும் அந்நாட்டு மக்கள் பொறுப்பேற்க முடியாது. விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களை இராணுவ மரியாதையுடன் புதைத்தவர்கள் எம் விடுதலை வேங்கைகள்.மனிதாபிமானத்தை எம் மறவர்கள் கற்று தந்துமா நீங்கள் இப்படி!!!?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, எங்கள் விடுதலைப்போராட்டம் சிங்கள அரசுடன் தான் இருந்தது சிங்கள மக்களுடன் இல்லை.

எமது வீழ்ச்சிக்கு ஜப்பான் அரசும் ஒரு காரணமாய் இருக்கலாம்... அந்நாட்டு அரசு எடுக்கும் எல்லா முடிவிற்கும் அந்நாட்டு மக்கள் பொறுப்பேற்க முடியாது. விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களை இராணுவ மரியாதையுடன் புதைத்தவர்கள் எம் விடுதலை வேங்கைகள். மனிதாபிமானத்தை எம் மறவர்கள் கற்று தந்துமா நீங்கள் இப்படி!!!?

ஐயா

அதனால்தான் அந்த மறவர்கள்தோற்றார்கள். மீண்டும் தோல்வியை நோக்கி என்னால் போகமுடியாது.

எனது கேள்விகளுக்கு தங்களிடம் பதில் இல்லையே.

மீண்டும் காலில் விழும்படி சொல்கிறீர்கள் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே ஒரு மூன்றாம் உலக நாட்டில் நடந்து இருந்தால் இலட்சக்கணக்கில் மக்கள் இறந்திருப்பார். ஜப்பானின் கட்டடக்கலை, தொழில்நுட்பம் அவர்களை பெருமளவில் காப்பற்றியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு, எங்கள் விடுதலைப்போராட்டம் சிங்கள அரசுடன் தான் இருந்தது சிங்கள மக்களுடன் இல்லை.

எமது வீழ்ச்சிக்கு ஜப்பான் அரசும் ஒரு காரணமாய் இருக்கலாம்... அந்நாட்டு அரசு எடுக்கும் எல்லா முடிவிற்கும் அந்நாட்டு மக்கள் பொறுப்பேற்க முடியாது. விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களை இராணுவ மரியாதையுடன் புதைத்தவர்கள் எம் விடுதலை வேங்கைகள்.மனிதாபிமானத்தை எம் மறவர்கள் கற்று தந்துமா நீங்கள் இப்படி!!!?

மே 18 உடன் தமிழனின் மனிதாபிமானம் மரனித்து விட்டது, உலகு நியாத்தின் பால் இயங்குகிறது என்று தலைவர் நினைத்துதான் தவறாகி விட்டது, இந்த ஒட்டு மொத்த உலகும் அனியாத்தின் பால்தான் இயங்குகிறது, வெளியில் மனிதாபிமானம் என்று கதைத்தாலும் ஜப்பானின் அழிவில் எவ்வளவு துட்டு பாக்கலாம் என்றுதான், உலகு உண்மையில் சிந்திக்கும், ஜப்பானும் அப்படித்தான் எமது பிரச்சினையிலும் பாத்தது, ஆகவே நாங்களும் வெளியில் உச்சு கொட்டி கொண்டு, மனதுக்குள் மேலும் ஆசியத்தட்டு பசிபிக் தட்டின்மேல் மேலும் மேலும் மோத வைரவருக்கு பொங்கல் வைத்து வேண்டுதல் செய்வோம், யகுசிஅக்கசியின் நாட்டில் ஏற்பட்ட பொருளாதர அழிவு திருப்தியை தந்தாலும் , அக்காசியின் பங்காளிகளின் மரணத்தின் தொகை திருப்தியைதரவில்லை. :lol: :lol: :lol: புத்தம்புது கார்களும், யகுசி அக்காசியின் பங்காளிகளும் தன்னியில் மிதந்து போவதை பாக்க காமடியாக இருக்கிறது. :lol:

50000ன் மக்களின் மரணங்களை மனதினில் சுமக்கும் எங்களுக்கு இந்த ஆறுதல் போதாது, எமதுமக்களின் மரணம் முக்கால்வாசி உலகுக்கு கூட தெரியாது, யப்பானில் மறைத்தவர்களின் மரணம் உலகு அறிய நடப்பதுதான் வேதனையானது. :(

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம்புது கார்களும், யகுசி அக்காசியின் பங்காளிகளும் தன்னியில் மிதந்து போவதை பாக்க காமடியாக இருக்கிறது. :lol:

அத்தனையும் உண்மை

நான் யகுசி அக்காசியை அதற்குள் தேடினேன்

தென் பட்டால் சொல்லுங்கோ...........

பொங்கல் என்ன பொங்கல் அதுக்கும் மேல....? :rolleyes::rolleyes::rolleyes:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒட்டு மொத்த உலகும் அனியாத்தின் பால்தான் இயங்குகிறது, வெளியில் மனிதாபிமானம் என்று கதைத்தாலும் ஜப்பானின் அழிவில் எவ்வளவு துட்டு பாக்கலாம் என்றுதான், உலகு உண்மையில் சிந்திக்கும், ஜப்பானும் அப்படித்தான் எமது பிரச்சினையிலும் பாத்தது, ஆகவே நாங்களும் வெளியில் உச்சு கொட்டி கொண்டு, மனதுக்குள் மேலும் ஆசியத்தட்டு பசிபிக் தட்டின்மேல் மேலும் மேலும் மோத வைரவருக்கு பொங்கல் வைத்து வேண்டுதல் செய்வோம், யகுசிஅக்கசியின் நாட்டில் ஏற்பட்ட பொருளாதர அழிவு திருப்தியை தந்தாலும் , அக்காசியின் பங்காளிகளின் மரணத்தின் தொகை திருப்தியைதரவில்லை. :lol: :lol: :lol: புத்தம்புது கார்களும், யகுசி அக்காசியின் பங்காளிகளும் தன்னியில் மிதந்து போவதை பாக்க காமடியாக இருக்கிறது. :lol:

:lol: :lol: :lol:

- The radiation leaking from a troubled nuclear reactor north of Tokyo is decreasing after an explosion blew the roof off the facility, Japan's government spokesman said, amid fears of a meltdown one day after Japan was struck by a massive earthquake and tsunami.

- புக்குசீமாவில் வெடித்துள்ள அணு பூமி அதிர்வை அடுத்து மூடப்பட்டது. ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சூடான குழாய்களை குளிர்படுத்த மின்சாரம் இல்லாததால் டீசல் இயந்திரம் பாவிக்கப்பட வேண்டி இருந்தது. அதுவும் செயல் இழக்கப்பட்டு இருந்ததால் மின்கலங்கள் மூலமே சாத்தியமானது.

- றேடியோ கதிர் வீச்சு அந்த மண்டபத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருந்தால் ஆபத்தில்லை அந்தக் கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் தடிப்பானவை கசிவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் கூறியுள்ளனர். மேலும் நடைபெற்றிருப்பது அணுக்கசிவல்ல வெடிவிபத்து என்பதைப் புரிந்தால் அனைத்துப் பாதுகாப்புக்களுமே பயனற்றவை என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஒரு பக்கம் ஆறு மைல் அளவுக்கும் மறுபக்கம் பத்து மைல் அளவுக்கும் மக்கள் வெளியேற்ற ப்பட்டுள்ளனர்

- Earthquake’s Toll Could Rise to More Than 1,300

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/fears-of-meltdown-calm-after-explosion-at-japanese-nuclear-plant/article1939779/

http://www.alaikal.com/news/?p=60570

http://www.nytimes.com/2011/03/13/world/asia/13japan.html?_r=1&hp

2005ஆம் ஆண்டு “சுப்பர் மூன்” நெருங்கி வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் சுனாமி ஏற்பட்டது

.

எங்கள் அழிவை வேடிக்கை பார்த்தவர்களும், பங்காளிகளும் அழியும் போது கவலைப் படுவதற்கு நாங்கள் புத்தனோ இயேசுவோ அல்ல.

அரசாங்கத்தை மக்கள் தான் தெரிவு செய்தார்கள். அவ்வரசாங்கங்களின் முடிவில் மக்களுக்கும் பங்குண்டு.

எமது வலியை அவர்களும் அறியட்டும்.

கவலை அழிவு காணாது என்பதே. மரண ஓலம் இன்னும் பல இடங்களில் கேட்க வேண்டும். அந்த ஓலத்தில் எம்முறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும்.

83 கலவரத்தில் மேற்கு நாட்டுத் தூதரகங்கள் விட்ட அறிக்கை தான் எமது அறிக்கையும்.

"நிலமையை உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்"

என்னடா... உங்க பொடலங்கா மனிதாபிமானம்?

லிபியாவுல நடந்துட்டு வர்ற மக்கள் புரட்சியால அதிபர் கடாபி மக்கள் மேல ராணுவத்தையும்,தன்னோட அல்லக்கைகளையும் ஏவிவிட்டு அவங்கள துவம்சம் பண்ணிகிட்டிருக்காரு..,இதுக்கு உலக நாடுங்கள் பலதும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பிச்சாச்சு. சுவிட்சர்லாந்து நாடு ஒருபடி முன்னாடி போயி முதல்ஆளா அந்த நாட்டு மேல பொருளாதாரத்தடை விதிச்சது.பின்னாடியே பிரான்ஸ்,பிரிட்டன்ன்னு அந்த வகையறா நாடுகள் எல்லாமும் லிபியா மேல பொருளாதாரத்தடை விதிக்க வரிஞ்சி கெட்டிக்கிட்டு க்யூவ்ல நிக்கிறாங்க..,அடடா...என்னமா நம்ம தலைவருங்க மனிதாபிமானத்தோட இருக்காங்கன்னு நமக்கெல்லாம் ஒரே பூரிப்பு போங்க...

லிபியாவுல சொந்த நாட்டு ராணுவம் பறந்து பறந்து சாதாரண குண்டு போட்டதுக்கே முண்டியடிச்சிக்கிட்டு வக்காலத்து வாங்க முன்னாடி வர்றீகளே..? இலங்கையில ஒரு மனுஷகறி சாப்புடுற ஒரு பண்ணாட,“பூசணிக்காத் தலையன், தவளவாயன் ராஜபக்ஷே”ன்னு ஒரு கொடுங்கோலன் சொந்த நாட்டு மக்கள் மேல “தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை” கொத்து கொத்தா போட்டு திரும்பின பக்கமெல்லாம் பிணக்குவியல்களை உங்க வீட்டு டிவிஸ்க்ரீன்லேயே உங்க எல்லாரையும் பாக்க வெச்சானே..? அப்பெல்லாம் எங்கடா போச்சி உங்க மனிதாபிமானம்?

அய்யா ஐ.நா சபையோட கண்ணியவான்களே..? ரெண்டு லிபியத்தூதர்கள் கெட்டி,புடிச்சி உங்க முன்னாடி கண்ணீர் வடிச்சாங்கன்னு லிபியா மேல பொருளாதாரத்தடை, ராணுவ நடவடிக்கை, கடாபி உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை, அவங்களோட சொத்து முடக்கம், லிபியா மீது விமானம் பறக்க தடை, சர்வதேச கோர்ட்டில் கடாபியை கொண்டு வந்து நிறுத்துறதுன்னு அட்ட டைம்ல பல தீர்மானங்களை ஒரே தீர்மானமா போடுறீங்களே...? அன்னைக்கு இலங்கையில கொஞ்சம்கூட ஈவு.இரக்கமில்லாம தமிழனா பொறந்த ஒரே குத்தத்துக்காக பிஞ்சி குழந்தைங்க,வயசான பெரியவங்க,கை,கால் விளங்காதவகன்னு ஒருஆள் பாக்கிவிடாம இருக்குற எல்லாரையும் குழிதோண்டி சாமாதி ஆக்கினானே ‘தவளவாயன்’ ராஜபக்ஷே அவன குற்றவாளிக் கூட்டுல கூட நிறுத்த வேணாம்,அட்லிஸ்ட் ஒரு கிளிக்கூண்டுல லயாவது நிருத்தினிங்களா..?அப்ப எங்கடா போச்சி உங்க மனிதாபிமானம்?

உலகத்துல பல நாடுகள்ல இருக்குற தமிழர்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து இலங்கை தூதரகங்கள் முன்னாடி ஆரப்பாட்டம்,உண்ணாவிரதம்னு அவ்ளோ ஏன் ஐ.நா சபை வாசலுக்கே போயி போராட்டம் நடத்தினாங்களே..? அப்போ அவங்கள உள்ள கூப்புட வேணாம், அட்லிஸ்ட் அவங்க சொல்ற பிரச்சனையை காத்து குடுத்தாவது கேட்டீங்களா..?இல்லையே..? மாறா அவங்கள போலீஸ வெச்சி வெறட்டிதானே அடிச்சீங்க...? அப்போ எங்கடா போச்சி உங்க மனிதாபிமானம்?

உலகத்துக்கெல்லாம் நாயம்,தர்மம் பேசுற அமெரிக்க சனாதிபதி ஒபாமா சாமி...,உண்மையிலேயே உங்களோட மனிதாபிமானத்தோட வண்டவாளம் இப்போதான் வெட்ட வெளிச்சமாயிருக்கு. அன்னைக்கு நீங்க அமெரிக்காவுக்கே அதிபரா பதவி ஏத்தப்போ “ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துல பொறந்த ஒருத்தர்,ஒரு கருப்பினத்துல பொறந்த ஒருத்தர் வெள்ளக்காரைங்க நாட்டுக்கே அதிபரா வர்றாருன்னு கேள்விப்பட்டப்போ நாங்கெல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டோம். சாதி,மதம், இனம், மொழி பாக்காத ஒருத்தர் அமெரிக்காவுக்கு அதிபரா வர்றாருன்னு நாங்கெல்லாம் உங்க பதவியேற்பு விழாவ கண் கொட்டாமா வீட்டு டிவி முன்னாடி உக்காந்து உங்க பதவியேற்பு விழாவ பார்த்து ரசிச்சோம். ஆனா அதெல்லாம் தப்புதான்னு இப்போதானே தெரியுது.

என்னதான் பன்னிக்குட்டியை குளிப்பாட்டி நடுவீட்ல உட்டாலும் அது திரும்பவும் சாக்கடையில தான் போயி உருளும்கிற மாதிரி நான் பொறப்பால ஆப்ரிக்காக்காரனா இருந்தாலும் குணத்தால அமெரிக்ககாரன்தான்னு கன்பார்ம் பண்ணிட்ட சாமி...போதும்டா சாமி என்னடா நீங்களும் உங்க பொடலங்கா மனிதாபிமானமும்..?

http://tamilnanbargal.com/tamil-blogs/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

.

எங்கள் அழிவை வேடிக்கை பார்த்தவர்களும், பங்காளிகளும் அழியும் போது கவலைப் படுவதற்கு நாங்கள் புத்தனோ இயேசுவோ அல்ல.

அரசாங்கத்தை மக்கள் தான் தெரிவு செய்தார்கள். அவ்வரசாங்கங்களின் முடிவில் மக்களுக்கும் பங்குண்டு.

எமது வலியை அவர்களும் அறியட்டும்.

கவலை அழிவு காணாது என்பதே. மரண ஓலம் இன்னும் பல இடங்களில் கேட்க வேண்டும். அந்த ஓலத்தில் எம்முறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும்.

83 கலவரத்தில் மேற்கு நாட்டுத் தூதரகங்கள் விட்ட அறிக்கை தான் எமது அறிக்கையும்.

"நிலமையை உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்"

"நிலமையை உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்"

அது!!!!!!

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

மனிதநேயம் என்பது கூட உலக நலன்கள் சார்ந்த அரசியல். எல்லா வல்லரசுகளும் தம்மை மனிதநேய காந்தியாகவும் மக்கள் ஆட்சியின் (ஜனநாயகத்தின்) அறங்காவலனாகவும் காட்ட விரும்புகிறது. நாமும் பலம் பலவீனங்களுக்கு அமைய அதே பாணியை செய்து எமது அலுவலை முடிக்க வேண்டும்.

இன்று உலகத்தமிழினத்திற்கு ஜப்பான் தேவை, அதைவிட ஜப்பானின் சிங்கள ஆதரவை பிரிக்க வேண்டிய தேவை உள்ளது.

இதற்கு எமது அமைப்புக்கள் உட்பட தனிப்பட்ட ரீதியில் எம்மால் முடிந்த இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

- எமது மக்கள் சார்பாக ஜப்பானிய அரசுக்கு ஆறுதல் தெரிவித்தல்

- தனிப்பட்ட கடிதங்கள் ஜப்பானிய ராஜதந்திரிகளுக்கு எழுதல்

- வேறு உதவிகளை செய்தல்

ஜப்பானிய பிரதான தீவு 8 அடி தூரம் நகர்வு"

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தனிhல் ஜப்பானின் பிரதான தீவு அதன் அச்சில் 8 அடி (2.4மீற்றர்) தூரம் நகர்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் அளவையியல் திணைக்களளைத்தைச் சேர்ந்த பூகற்பவியலாளர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலியிலுள்ள பூகோள பௌதிகவியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவகத்தின் தகவல்களின்படி நேற்று ஏற்பட்ட 8.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் பூமி அதன் அச்சில் சுமார் 4 அங்குலம் (10 சென்றிமீற்றர்) நகர்ந்துள்ளது.

ஜப்பானின் கிழக்குக் கரையோரத்திற்கு அண்மையில் ஏற்பட்ட இப்பூகம்பத்தினாலும் அதன் விளைவான சுனாமியினாலும் சுமார் 1000 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 30 அடி உயரமான சுனாமி அலை வீசியதால் ஜப்பானின் பல நகரங்களில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோமீற்றர் நீளமும் 160 கிலோமீற்றர் அகலமும் கொண்ட பகுதியில் பகுதியில் பிளவு முறிவு ஏற்பட்டதால் இப்பூகம்பம் நிகழ்ந்தது. இதனால் மேற்படி புவிதட்டு பகுதி 18 மீற்றர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 140 வருடங்களில் ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் இதுவாகும்.

வலிமையைப் பொறுத்தவரை,  2004 ஆம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் இறப்பதற்கு காரணமான இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நேற்று ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும் ஏறத்தாழ சமனானது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இந்தோனேஷிய பூகம்பம் 9.1 ரிச்டர்அளவுடையதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/17928--8-.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011 05:13

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசுபிக் கடலை அண்டிய சுமார் 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா, நியூசிலாந்து தைவான், பெரு, சிலி அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார்.

இதேவேளை ஹவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்று இந்தோனேசியா நியூசிலாந்து ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 900 வரையிலானோர் இறந்ததாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்ட போதும்....

10, 000 வரையிலானவர்களைக் காணவில்லை. சுனாமி நடந்த இரண்டு நாட்களின் பின்னும் அவர்களை கண்டு பிடிக்க முடியாததால்.....

இறந்தோர் தொகை 11, 000 ஆக இருக்கலாம் என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.