Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகம் என்பது ஆபத்தா? பாலுறவு ஆராய்ச்சி

Featured Replies

அதிகம் என்பது ஆபத்தா?

'அந்த' விஷய ஆராய்ச்சி

''இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது!'' - 'பராசக்தி’ வசனத்தைப்போல விசித்திரமான விவகாரம் ஒன்று உலகையே குலுக்கி இருக்கிறது. 'கட்டுக்கடங்காத செக்ஸ் உணர்வு குற்றமா... இல்லை உணர்வுகளின் தூண்டுதலா?’ என்பதுதான் அந்தப் பட்டிமன்றம்.

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் மாடலிங் பயிற்சியாளருமான நீல் மெலின்கோவிச் 58 வயதிலும் தீராத செக்ஸ் வெறியர். இது குறித்து அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியபோது, 'நான் என்ன செய்வேன்... எனக்குள் தூண்டப்படும் உணர்வுகள் என்னை அப்படி இயக்குகின்றன!’ என்றார் அதிரடியாக. 'வாரத்துக்கு ஏழு முறை வரை உறவுகொண்டால், அது நார்மல். அதற்கு மேலும் உறவுகளுக்கு உந்தப்பட்டால், அது செக்ஸ் அடிமைத்தனம்!’ என அமெரிக்க உளவியல் அமைப்பு ஒன்று அறிவிக்க, இந்தப் பட்டிமன்ற விவகாரம் மேலும் சூடாகி இருக்கிறது.

இது குறித்து மனநல மருத்துவர் செந்தில்வேலன் விளக்கமாகவே பேசினார்... ''மது, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவற்றுக்கு அடிமையாக இருப்பது இயற்கைக்கு சம்பந்தம் இல்லாத, மனிதனுக்குத் தேவை இல்லாத விஷயம். ஆனால், செக்ஸ் அப்படி அல்ல. தினசரி வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதற்காக, எத்தனை முறை உறவுகொள்வது நல்லது, எது கெட்டது என்பதை எல்லாம் வரையறுத்துச் சொல்ல முடியாது. செக்ஸ் என்பது ஒரு விதப் பசி. அது

மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சிலருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால், போதும். ஆனால், வேறு ஒருவருக்கு இட்லி, பூரி, பொங்கல் என்று வயிறுமுட்ட வெட்டினால்தான் போதும் என்கிற உணர்வு பிறக்கும். அடிப்படை உடல்கூறு விஷயங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். நாடித்துடிப்பு 72 முறை இருக்க வேண்டும். ஆனால், எல்லோருக்கும் 72 என்பது இருக்காது. அதனால்தான் 60 முதல் 100 வரை இருந்தால் நார்மல் என்று கூறுவோம். 59-ஆக இருந்தாலும், 101-ஆக இருந்தாலும் நார்மல் இல்லை. அதேபோல எத்தனை முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது நல்லது என்பதை இதுவரை யாரும் வரையறுத்துச் சொல்லவில்லை.

செக்ஸ் மேற்கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்போதுதான், அது அடிமைத்தனமாக மாறுகிறது. செக்ஸ் என்பது மனதும் மனதும் இணைந்து மேற்கொள்ளப்படுவது. அதைத் தாண்டிப் போய், 'வாழ்க்கை முழுக்க எப்போதுமே செக்ஸால் நிரம்பி வழியவேண்டும்!’ என எண்ணுவதைத்தான் செக்ஸ் அடிமைத்தனம் என்கிறோம். இத்தகைய நிலையைத் தொடர்ந்தால், குடும்பம், மரியாதை, தொழில், பணம், உடல், குணம் என பலவும் அடிபட்டுப் போய்விடும்.

செக்ஸ் அடிக்ஷன் என்பது பிறவியில் வருவது என்று நிரூபிக்க முடியவில்லை. 'வாய்ப்பு’தான் ஒருவனை செக்ஸ் நோக்கித் திருப்புகிறது. அடிப்படையாக, மனித குலத்தின் பொதுவான குணம் இது. 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நாமாக கொண்டுவந்த விதிமுறைதானே தவிர, பயாலஜிக்கலாகக் கிடையாது. விலங்கு உணர்ச்சி என்பது மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பம் இல்லாத வரை மிகவும் நல்லவர்களாக இருக்கும் சிலர்கூட, சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பு செய்வார்கள்.

பல பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டால் மட்டுமே செக்ஸ் அடிக்ட் என்று கூற முடியாது. தன் மனைவியையே பாடாய்படுத்துபவர்கள் நிறையப் பேர் உள்ளனர். என்னிடம் ஆலோசனை பெற வந்த ஒருவர், தன் மனைவி காய்ச்சலில் இருந்தால்கூட தினமும் நான்கு தடவை உறவுக்காகப் பாடாய்ப்படுத்துவாராம். மற்றபடி அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. கன்ட்ரோல் செய்ய முடியாததும் ஒரு அடிக்ஷன்தான்.

சிலருக்கு மனச்சிதைவு நோய், மன எழுச்சி நோய் போன்றவற்றால், செக்ஸ் மூடு அதிகமாக இருக்கும். அந்த வியாதி சரியானால், அந்த எண்ணமும் போய்விடும். மூளை பாதிப்பு உள்ளவர்களும் 'அந்த’ விஷயத்தில் கட்டுப்பாடு அற்ற வெறித்தனத்தோடு இருப்பார்கள்.

செக்ஸ் விஷயத்தில் எதையும் வரையறுத்துச் சொல்ல முடியாது. 'அளவோடு செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்’ என என்னதான் வலியுறுத்திச் சொன்னாலும், சூழ்நிலைகள் அதிகப்படியான செக்ஸுக்கு வித்திடுகின்றன.

செக்ஸ் ரீதியான பிரச்னைகள் நம் சமுதாயத்தில் எப்போதுமே இலைமறைக் காயாகத்தான் இருக்கும். ஆனால், சமீப காலமாக மேலை நாடுகளைப்போல அந்த விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. நாகரிகமும் பண்பாட்டு வளர்ச்சியும்தான் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. விலங்குகளின் குணங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்துவது நாகரிக வளர்ச்சிதான். தன்னை ஆள்பவனால் உலகை ஆள முடியும்.

பெற்றோர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களையும் நெறிமுறைகளையும் சொல்லி வளர்க்கும்போது, இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும் முடியும்... தடுக்கவும் முடியும்!''

- பா.பிரவீன்குமார்

vikatan

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் நாம் அறிந்துகொள்வது யாதெனில்..... :rolleyes:

நிழலிக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. எவராவது ஆலோசனை சொல்லவும். உமி மூட்டை தூக்கமுடியும் வரை போட்டுத்தாக்குங்கள் என்று. :wub::wub::wub::lol:

  • தொடங்கியவர்

இத்தால் நாம் அறிந்துகொள்வது யாதெனில்..... :rolleyes:

நிழலிக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. எவராவது ஆலோசனை சொல்லவும். உமி மூட்டை தூக்கமுடியும் வரை போட்டுத்தாக்குங்கள் என்று. :wub::wub::wub::lol:

என்னைப் புகழாதீங்கோ...கூச்சமாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கடடுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல்....

இது மனிதனுக்கு மனிதன்

வாழ்க்கை

இடம்

குழந்தைகளின் அளவு அல்லது வயது

கணவன், மனைவியின் வயது

வேலை நேரங்கள் மற்றும் செய்யும் வேலையின் தன்மை

இருவரது உடல்நிலை என............. பலவித காரணங்களால் மாறுபடும்.

எனது அனுபவத்தில் எழுதுவது என்றால் இதற்கெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை.

களைத்ததும் இல்லை. சளைத்ததும் இல்லை. வயதை நினைத்ததுமில்லை. அது தெரிந்ததும் இல்லை. :wub:

ஆனால் ஒரு குறிப்பிட்டவயது பொறுப்புக்கள் மற்றும் வீட்டில் மக்களின் நடமாட்டம் அதிகரிக்க இது சிறிது மறந்து அவர்கள் எல்லோருடனும் சேர்ந்திருந்து பலவிடயங்களையும்பேசுவது அதிகமாவதால் இது கொஞ்சம் குறைவடைந்துவிடும். தற்போது இது என் நிலை. ஆனால் இனி மக்கள் ஒவ்வொருவராக வெளிக்கிடத்தொடங்க எனக்கும்...............???

இதற்கு மேல் எழுதினால் திரியைத்தொடங்கியவரே வெட்டும் நிலையை அவருக்கு ஏற்படுத்தவிரும்பவில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவம் பசியும் கிட்டதட்ட ஒன்றுதான்.இதுக்கு கட்டுப்பாடு போடக்கூடாது்.சமையல்காரரும் சாப்பாடும் ஒன்றாக இருந்தாலும் பரிமாறுவதில் ரசனையும் மாறுதலும் இருந்தால்.சொல்லி வேலை இல்லை. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

..எனது அனுபவத்தில் எழுதுவது என்றால் இதற்கெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை.

களைத்ததும் இல்லை. சளைத்ததும் இல்லை. வயதை நினைத்ததுமில்லை. அது தெரிந்ததும் இல்லை. :wub:

ஆனால் ஒரு குறிப்பிட்டவயது பொறுப்புக்கள் மற்றும் வீட்டில் மக்களின் நடமாட்டம் அதிகரிக்க இது சிறிது மறந்து அவர்கள் எல்லோருடனும் சேர்ந்திருந்து பலவிடயங்களையும்பேசுவது அதிகமாவதால் இது கொஞ்சம் குறைவடைந்துவிடும். தற்போது இது என் நிலை. ஆனால் இனி மக்கள் ஒவ்வொருவராக வெளிக்கிடத்தொடங்க எனக்கும்...............???

ஆளைப் பார்த்தா அப்படி தெரியலையே, விசு..? :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பார்த்தா அப்படி தெரியலையே, விசு..? :):lol:

இது ஒரு விடயம்தான் சார்

இந்த உலகில் ஆளைப்பார்த்து கணக்கு போடமுடியாதது. :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் ஆளைப்பார்த்து கணக்கு போடமுடியாதது.

என்றும் இளைமை கொலுவிருக்கும் 'தாசனை' மடத்துவெளி முருகனும், கலட்டி பிள்ளையாரும் காக்கக் கடவ. :)

ஈ லோகத்தில எவ்வுருனு நம்ப லேது!

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் இளைமை கொலுவிருக்கும் 'தாசனை' மடத்துவெளி முருகனும், கலட்டி பிள்ளையாரும் காக்கக் கடவ. :)

ஈ லோகத்தில எவ்வுருனு நம்ப லேது!

எப்படி ஐயா

நானே மறந்துவிட்ட இடங்களை தாங்கள்..........???

உண்மையை சொல்லாவிடடால் தலை வெடித்து சுக்கு நூறாகட்டும்.... :lol::D:D

இது ஒரு விடயம்தான் சார்

இந்த உலகில் ஆளைப்பார்த்து கணக்கு போடமுடியாதது. :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களையும் நெறிமுறைகளையும் சொல்லி வளர்க்கும்போது, இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும் முடியும்... தடுக்கவும் முடியும்!''

பெற்றோர்களின் ஆலோசனை கேட்டால் செக்ஸ் கூடாது என்றுதானே சொல்லுவினம்,இந்த விசயத்திலமட்டும் பெற்றொரிடம் ஆலோசனை கேட்க கூடாது :D:D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களின் ஆலோசனை கேட்டால் செக்ஸ் கூடாது என்றுதானே சொல்லுவினம்,இந்த விசயத்திலமட்டும் பெற்றொரிடம் ஆலோசனை கேட்க கூடாது :D:D

:D:D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கயடா தமிழ்சிறி அண்ணையை காணேலை எண்டு நினைச்சன் வந்திட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் என்பது ஆபத்தானது???

கிட்டதட்ட இப்படி தமிழில் பொருள்தர கூடிய ஒரு ஆங்கில கட்டுரையை நேற்று வாசித்தேன். அதைதான் இங்கே போட்டுள்ளார்கள் என்றே வந்தேன் ஆனால் இது பாலியல் விடயமக உள்ளது. இதில் எப்படி வயதுவராத நான் எழுதுவது என்றொரு தயக்கம். நான் வாசித்த கட்டுரை உணவு சம்மந்தபட்டது இன்று கொழுத்த உடல்பருமனை கொன்றவர்கள் வாழும் நாடாக அமெரிக்கா மாறிகொண்டிருக்கினற்து. அவர்களை பாராமரிக்க அரசு திணறியடிக்கின்றது உண்டு கொழுத்துவிட்டு அப்படியே படுத்துவிடுவார்கள் பின்பு மூத்தாவிற்கு கூட்டிபோக ஒருவன் குளிப்பாட்ட ஒருவன் என்று எல்லா வேலைக்கும் ஒருவனை சம்பளம் கொடுத்து அமர்த்த வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. இதுவே இப்போது சிறுதுளிகளாக இந்தியாவில் நடக்கிறது அதனால் அதை யாரும் பொருள்படுத்தவில்லை.......... அதாவது சீனி நிறைந்த சிற்றுண்டிகளுக்கு அடிமையாக்கி காசுபார்ப்பது இந்திய ரீவிகளில் இப்போது அதற்கே கோடிபணம் கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள் கோடிகொடுக்க கூடிய அளவில் அவர்களிடமே பணம் உள்ளது. அத்தோடு மேலைநாட்டு வாழ்க்கை முறைக்கு அவர்களை பயிற்றுவிக்கிறார்கள் உள்ளுர் சந்தைகளை புறக்கணித்து சாப்பிங் மோல்களில் சமையல் சாமான்களை வாங்கி சமைக்கிறார்கள்.............. சீனி ( ) வருத்தம் பின்னொரு நாளில் இந்திய அரசால் முகம் கொடுக்க முடியாத அளவிற்கு விரிந்து நிற்கும்.

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

அமிர்தம் என்பது அற்பமானது அதுவே அளவோடு இருந்தாலே இனிப்பானது என்றே எமது முன்னோர் சொல்லி தந்துள்ளார்கள்.....

அது அளவை கடக்கும்போது கூடாது என்று அவர்கள் கணிப்பிடவில்லை........... நஞ்சு ஆளை கொன்றுவிடும் என்றே சொல்லிதந்துள்ளார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டிய ஒரு கடமை எம்மிடம் உள்ளது.

அளவு கடந்த பாலியல் உடல்ரீதியாக உடனடி கெடுதலை கொடுக்காவிட்டாலும் அதற்கு அடிமையாக்கிவிடும். பாலியலுக்கு அடிமையானவன் மூளையில் சதா கெட்ட சிந்தனைகளே இருக்கும் அவனால் எந்த நல்லதையும் பின்னாளில் செய்ய முடியாதிருக்கும். அதே சிந்தனை இல்லாதவராக வாழ்க்கை துணையமைந்தால் பிரிவு நிற்சயம். குடம்பம் இராண்டாகும்............. பணம் விரயமாகும்......... வீதிவாழ்க்கையே எட்ட கூடியதாக அமையும். அளவோடு இருந்தால் அது இனிப்பாக இருக்கும் அதையே தொழிலாக கொண்டால் கசப்பாகவே இருக்கும்.

அருமையான கருத்து

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்...சா...என்ன தன்னடக்கம்? ஒரு மரியாதை இப்பிடியெல்லோ பிள்ளையள் இருக்கோணும்.

இஞ்சை என்ரயளும் இருக்குதுகள்.................... :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கயடா தமிழ்சிறி அண்ணையை காணேலை எண்டு நினைச்சன் வந்திட்டார்

வாதவூரான்,

இந்தச் செய்தியை நிழலி இணைத்த 13ம் திகதிலிருந்து பார்த்துக் கொண்டு வந்தனான்.

இப்படியான தலைப்புகளில் கருத்து எழுதினால்... எனது இமேஜ் பழுதாகிவிடும் :o என்று... பல்லைக் கடிச்சுக் கொண்டு பேசாமல் இருந்தன்.

ஆனால் இரண்டு நாளைக்கு மேலை மனம் கேட்க மாட்டன் எண்டிட்டுது.

அதுக்குள்ளை நீங்களும் முத்திரை குத்திப் போட்டியள். :D

ஹ்ம்ம்..... முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான்,

இந்தச் செய்தியை நிழலி இணைத்த 13ம் திகதிலிருந்து பார்த்துக் கொண்டு வந்தனான்.

இப்படியான தலைப்புகளில் கருத்து எழுதினால்... எனது இமேஜ் பழுதாகிவிடும் :o என்று... பல்லைக் கடிச்சுக் கொண்டு பேசாமல் இருந்தன்.

ஆனால் இரண்டு நாளைக்கு மேலை மனம் கேட்க மாட்டன் எண்டிட்டுது.அதுக்குள்ளை நீங்களும் முத்திரை குத்திப் போட்டியள். :D

ஹ்ம்ம்..... முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு.... :lol:

மனிதரில் 2 வகை

ஒன்று சிறி மாதிரி

இன்னொன்று என்னை மாதிரி

நமக்கு இந்த பொறுமையெல்லாம் கிடையாது.

போட்டுத்தாக்கிவிட்டுத்தான் மற்ற வேலை..... :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானிச்சிட்டு தான் விசுகு அண்ணாவை இழுக்கேலை இதுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.