Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார்

Posted by admin On March 17th, 2011 at 12:03 am / No Comments

தேசிய எழுச்சிப் பாடகர்கள் சாந்தன், சுகுமார் ஆகியோர் பாடிய ‘தேவாவின் கானங்கள்’ குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடக்கம் பெற்றது முதல் அதன் இறுதிக்காலம் வரையில் பலநூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியிருந்த தாயகத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன், சுகுமார் ஆகியோர் பிரதானமாகப் பாடிய பாடல்களை உள்ளடக்கியதாக ஈபிடிபியினரின் குறுவட்டு வெளிவந்திருக்கின்றது.

அமைச்சர் டக்கள் தேவானந்தா, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுவட்டினை வெளியிட்டுவைக்க, பாடகர்கள் சாந்தன், சுகுமார் உட்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருதுகளையும் வழங்கியிருக்கின்றார்.

வன்னிப் போர் தீவிரம் பெற்றிருந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் சுகுமார் அம்பலவன் பொற்கணைக் கிராமம் ஊடாக இராணுவ ஆக்கிரமிப்புப்பிரதேசத்தினைச் சென்று சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். ஆனாலும் அவர் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை.

பாடகர் சாந்தன் 2009ஆம் ஆண்டு மேமாதம் 18ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரின் தடுப்பு முகாமில் இருந்து கடந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார்.

தேசியத்தலைவர் அவர்களையும், கரும்புலிகளையும், மாவீரர்களையும் பாடியவர்கள் இன்று தமிழின அழிப்பில் துணைநின்ற டக்ளஸ் தேவானந்தாவைப் புழந்து பாடியிருப்பது தமிழ் மக்கள் மிகுந்த வருத்தத்தினைத் தோற்றுவித்திருக்கின்றது என்றார் இசைக்கலைஞர் ஒருவர்.

saritham.com

  • Replies 53
  • Views 4.9k
  • Created
  • Last Reply

கறுப்பி, இருக்கிற கஞ்சல், குப்பைகளை எல்லாம் இங்கு வெட்டி ஒட்டாதீர்!!!! ... அவன் பாவி இரண்டு பிள்ளைகளை மண்ணுக்கு மண்ணாக கொடுத்தவன் ... அவனை, அங்கு பாடச்சொன்னால், என்ன பாடமாட்டேன் என வீரமா, பேசமுடியும்????? ... அங்கு டக்லஸை என்ன கக்கூசுகளையும் போற்றிப் பாடசொன்னால், பாடத்தான் வேண்டும்!!! ... நாலு தமிழ் வசனம் எழுதினவுடன் ... செய்தி இணையங்கள்!!!!????????? <_<

  • கருத்துக்கள உறவுகள்

அவன் பாவி இரண்டு பிள்ளைகளை மண்ணுக்கு மண்ணாக கொடுத்தவன் ... அவனை, அங்கு பாடச்சொன்னால், என்ன பாடமாட்டேன் என வீரமா, பேசமுடியும்?????

சரியாக சொன்னீங்கள் நுணாவிலான்,

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்கள் நுணாவிலான்,

அதைச் சொன்னது நெல்லையன், புத்தன். 258.gif

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, இருக்கிற கஞ்சல், குப்பைகளை எல்லாம் இங்கு வெட்டி ஒட்டாதீர்!!!! ... அவன் பாவி இரண்டு பிள்ளைகளை மண்ணுக்கு மண்ணாக கொடுத்தவன் ... அவனை, அங்கு பாடச்சொன்னால், என்ன பாடமாட்டேன் என வீரமா, பேசமுடியும்????? ... அங்கு டக்லஸை என்ன கக்கூசுகளையும் போற்றிப் பாடசொன்னால், பாடத்தான் வேண்டும்!!! ... நாலு தமிழ் வசனம் எழுதினவுடன் ... செய்தி இணையங்கள்!!!!????????? <_<

அப்ப என்ன சொல்லவாறீங்க.. பிள்ளை செத்தால் என்ன.. நம்பி நின்ற போராளிகள் செத்தால் என்ன.. நம்பிய தலைவர் செத்தால் என்ன.. என் உயிரை காக்க.. நான் காட்டியும் கொடுப்பேன்.. என் பிள்ளைகளைக் கொன்ற.. எதிரியையும் வாழ்த்துவேன்.. பாடுவேன்.. என்றா...???!

புரியல்லையே.. இப்படி எல்லோரும் தங்கள் தங்கள் சுயநலனுக்காக போராட்டத்தை கையில் எடுத்துக் காட்டிக் கொடுத்திருந்தா.. இந்தப் போராட்டம் எப்பவோ செத்துப் போயிருக்கும். உந்த சாந்தனும்.. சுகுமாரும் உருவாகி இருக்கமாட்டார்கள். போராட்டம் அடையாளப்படுத்தியவர்கள்.. போராட்டத்தால் இனம் உணர செய்யப்பட்டவர்கள்.. அதையே அழிப்பது என்பது தங்களை உருவாக்கிய தாயின் கருவறையை குத்திக் கிழிப்பது போன்றது.. தாயையே தங்களின் வாழ்வுக்காக கொலை செய்வது போன்றது. இதுவும் ஒரு நியாயம் தானா.. இந்த உலகில்...சுயநலத்தின் முன் போராட்டம் என்ன.. விடுதலை என்ன...???! அதுவும் சரிதான். :rolleyes::unsure::(:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிணங்களுக்கு கூட கொடுமை செய்யும் எதிரி, கைதிகளுக்கு இளைக்கும் கொடுமை குறைவானதாகவா இருக்கும்? இந்த தகவலில் இருந்து ஆக அவர்கள் உயிருடன் வைத்திருக்கின்றார்கள் என்பதே எமக்கு ஆறுதல் தருவதாக இருக்கின்றது.

மரணித்த போராளிகளை நிர்வாணப்படுத்துவது; துயிலும் இல்லங்களை அழிப்பது இவற்றால் எத்தகைய சுகத்தை சிங்களம் காணுகின்றதோ, அத்தகைய ஒன்றைத்தான் இவர்களைப் பாடவைத்தும் காண்கின்றது. இந்த நிலமைக்கு அவர்கள் சோரம் போய் விட்டார்கள் என்று எண்ணுவதுதான் அபத்தம்! அந்த வகைக்கு சிங்களவன் ஆட்சி யோக்கியம் உள்ளதல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் புரியல

புலிப்போராளிகள்

தளபதிகள்

பாடகர்கள்

நடிகர்கள்.........

இவர்களை விட்டால்

வேறு ஆட்களால் தமிழ் மக்களை வெல்லமுடியாதோ.....? :(

அப்ப என்ன சொல்லவாறீங்க.. பிள்ளை செத்தால் என்ன.. நம்பி நின்ற போராளிகள் செத்தால் என்ன.. நம்பிய தலைவர் செத்தால் என்ன.. என் உயிரை காக்க.. நான் காட்டியும் கொடுப்பேன்.. என் பிள்ளைகளைக் கொன்ற.. எதிரியையும் வாழ்த்துவேன்.. பாடுவேன்.. என்றா...???!

புரியல்லையே.. இப்படி எல்லோரும் தங்கள் தங்கள் சுயநலனுக்காக போராட்டத்தை கையில் எடுத்துக் காட்டிக் கொடுத்திருந்தா.. இந்தப் போராட்டம் எப்பவோ செத்துப் போயிருக்கும். உந்த சாந்தனும்.. சுகுமாரும் உருவாகி இருக்கமாட்டார்கள். போராட்டம் அடையாளப்படுத்தியவர்கள்.. போராட்டத்தால் இனம் உணர செய்யப்பட்டவர்கள்.. அதையே அழிப்பது என்பது தங்களை உருவாக்கிய தாயின் கருவறையை குத்திக் கிழிப்பது போன்றது.. தாயையே தங்களின் வாழ்வுக்காக கொலை செய்வது போன்றது. இதுவும் ஒரு நியாயம் தானா.. இந்த உலகில்...சுயநலத்தின் முன் போராட்டம் என்ன.. விடுதலை என்ன...???! அதுவும் சரிதான். :rolleyes::unsure::(:o

தலைவரே, ... சரி நீர் இங்கிருக்கிறீர், முழுத்தேசியவாதி, உமது குடும்பம், அங்குள்ளது அவர்களும் தேசியவாதிகள்!! ... அவர்களை தெருவில் இறங்கி அங்கு தமிழீழம்தான் தீர்வு என்று நாலு பேருடனாவது கதிக்க சொல்லும் பார்ப்பம்???? ... இல்லை நாளைக்கு டக்லசுகளும், சிங்களவனும் வலுக்கட்டாயமாக ஊர்வலம் ஒன்றுக்கு வர சொல்ல போகாமல் இருப்பார்களா???? இல்லை போகாது விட்டால் உயிருடன் இருப்பார்களா?????

... அங்கு எத்தனை ஆயிரம் மாவீரர் குடும்பங்கள் இருக்கிறார்கள், பல இலட்சம் மக்கள் இன்னும் தமிழ் தேசிய இலட்சியத்தை சுமந்தபடி இருக்கிறார்கள் ... அவர்கள் எல்லாம் வற்புறுத்தப்படும் போது, இல்லை என்று முரண்டு பிடித்தால் .... யாருக்கப்பா அழிவு????? அந்த அழிவை யாருமாவது கேட்பார்களா????

... அங்கு இன்றுள்ள நிலையை முதலில் உணர்வோம் ... அதில் இந்த மாவீரர் குடும்பங்களோ, போராளிகளோ எவ்வளவு அழுத்தங்களுக்கும், உயிராபத்துகளுக்கும் முன் வாழ்கிறார்கள் என்பதை அறிந்தாவது தெரிவோம் .... அவை தெரியின், அதன் பின் சவுண்டுகளை கண்டபடி விடாமல் ... அமத்தித்தான் விடவிடவேண்டும்!!!

.... என்ன செய்வது சரணாகதி அடைந்து விட்டோம் ... மீழும் வரை ... வேறு வழியில்லை ... எம் தாய்கத்தில் இருப்போருக்கு!!!!

Edited by Nellaiyan

நான் சாந்தன் இருக்கும் நிலமையில் இருந்தால் டக்ளஸ் என்ன, கருணா கக்கூஸ் இருந்து விட்டு நாக்கால் துடைக்கச் சொன்னாலும் செய்வன்

நெடுக்ஸ் மாதிரி நல்ல பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு ஆண்டாண்டு காலமாக படிக்கிற ஆட்களுக்கு வெறும் சத்தம் மட்டும்தான் போட முடியும்

நீங்கள் என்ன சொல்லவாறீங்கண்ணே.... செத்தவை செத்ததுதான். இருக்கிறவை எப்படியாவது பிழைச்சுப் போங்க என்ற வாதத்தை அதுவும் நீங்கள் என்றோ எடுத்த முடிவை மற்றவர்களும் இன்று எடுக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கருத்தெழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மாவீரர்களோ.. போராளிகளோ.. ஆதரவாளர்களோ.. தமிழ் மக்களோ கொல்லப்பட வேண்டும் என்பதோ.. தேசம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகை அல்ல. நீங்கள் சிலர் உங்களின் நலனுக்காகக் காட்டிக் கொடுக்க கொல்லப்படுவதும்.. போராளிகள் தான் நீங்கள் நேற்றுவரை உறவாடிய மக்கள் தான். நீங்கள் தப்பிப்பிழைக்க.. பாட்டுபாடினால்.. பாட மறுப்பவன் கொல்லப்படுவான். அதேவேளை எல்லோரும் ஒருமித்து பாட மறுத்தால்.. நிச்சயம் எல்லோரையும் எதிரி கொல்லமாட்டான். அப்படி கொல்லப்பட்டாலும்.. அதற்கு அவன் பதில் சொல்லியாக வேண்டிய அவசியம் எழும். ஆனால் நீங்கள் காட்டிக்கொடுக்க ஓரிருவராய் அவன் கொன்று தள்ள.. அவை மூடிமறைக்கப்பட்டு படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டும் விடும்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போதும்.. இதே ஒட்டுக்குழுக்கள் இதே பாணி ஆயுத அரசியல் செய்தன. அப்போது பாடசாலை மாணவர்கள் ஒருமித்து காட்டிய எதிர்ப்பை அடுத்து பாடசாலைகளில் வாலாட்டுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

சரணடைந்த போராளிகள் மக்களில் பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏன்..?????! அவர்களை சரணடையச் சொன்னவர்கள்.. அவர்களை பாதுகாக்கத்தவறியதுதான்..??! நோர்வே சொன்னது.. இந்தியா சொன்னது.. அமெரிக்கா சொன்னது.. ஐநா சொன்னது.. நீங்கள் தமிழர்கள் எவராவது சரணடையும் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி ஒரு போராட்டமாவது நடத்தி இருக்கிறீர்களா..???????????! ஆனால் காட்டிக் கொடுத்து இன்னொரு போராளியை அழித்து நீ வாழலாம்.. கொல்லும் எதிரியை வாழ்த்தி.. அவனிடம் உயிர் பிச்சை பெறுவது இனத்துக்கு விமோசனம்.. என்றெல்லாம் எங்களால் கதைக்க முடிகிறது.ஆனால் அதை செய்யாமல்.. இறந்தவன்.. இறந்தவள்.. பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்..??!

சரணடைந்த போராளிகள்.. மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து சர்வதேச சமூகம் மட்டுமல்ல.. தமிழர்களே தவறி நிற்கின்றனர். நின்று கொண்டு இன்று எம்மை அழித்த எதிரியையே வாழ்த்தி.. அவனுக்கு பாவ மன்னிப்பும் அளிக்கின்றனர். இதன் மூலம் எமது இனத்துக்கு முழு சவக்குழி தானே தோண்டப்படுகிறது..???! அதை நீங்கள் எப்போது உணரப் போகிறீர்கள். சிங்களவன்.. ஒன்றுப்பட்டு நின்ற மக்களை கூறுபோட்டு சிறுகச் சிறுக அழிக்கிறான். நீங்களோ.. அதை உணராதவர்களாக.. மக்களே நீங்கள் பிரிந்து பிரிந்து போய் எப்படியோ தப்புக்கள் என்கிறீர்கள்.

இறுவெட்டை வெளியிட்டாயிற்று. நாளை இந்த சாந்தனோ சுகுமாரோ.. ஈபிடிபியால் கொல்லப்பட்டு விட்டால்.. என்ன செய்வீர்கள்..????! இப்போது மட்டும் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விட்டதா என்ன..???! உண்மையான பாதுகாப்பை அளிக்க வேண்டிய சர்வதேசமும்.. ஐநாவும் கைகட்டி வேடிக்கை பார்க்க.. நீங்களோ.. உறங்கிக் கொண்டு.. கண்ணை மூடிக் கொண்டு.. காட்டிக் கொடு எப்படியோ பிழைச்சுப் போ எங்கிறீர்கள்... இப்படியான காரணங்களால் தான் போர் ஓய்ந்தும் இன்றும் பலர் காணாமலும்.. கொல்லப்பட்டும் கொண்டிருக்கின்றனர்.

போர் ஓய்ந்து சிறீலங்கா படையினரிடம் சரணடைந்த பின் கொல்லப்பட்ட மக்கள் போராளிகள் ஆதாரவாளர் தொகை முள்ளிவாய்க்காலில் நேரடிச் சமரில் கொல்லப்பட்டதை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அதை எல்லாம் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல்.. நாம் தனி மனிதர்களால் அதை செய்ய முடியாது.. ஆனால் ஒட்டு மொத்த மக்களும் குரல் கொடுத்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கும்..??! அல்லது வெளி உலகிற்கு இப்படி ஒன்று நடக்கப் போகிறது என்றாவது தெரிந்திருக்கும்.

இன்று லிபியப் படைகள் போராளிகளை துடைத்தழித்து முன்னேறிச் செல்லும் நிலையில் பெரும் மனித அவலம் நிகழப் போகிறது என்ற குரலோடு.. அமெரிக்க இராணுவத் தலையீடு முன்மொழியப்பட்டுள்ளது. காரணம் கடாபியை எதிர்த்த மக்களை போராளிகளை காக்க வேண்டும் என்ற குரலை உலகெங்கும் வாழும் லிபிய மக்கள் எழுப்பி இருப்பதுதான்.

ஆனால் நாமோ முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று தலையில் துண்டை போட்டு உட்கார்ந்து கொண்டதுதான். எதிரியோ அதன் பின்னர் தான் பல நூறு போராளிகளை மக்களை சித்திரவதை செய்து கொன்று குவித்துள்ளான். அவர்கள் மீது காட்டாத அக்கறை சாந்தன் மீதும் சுகுமாரும் மீது வருவதை இட்டு மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் சொந்த மக்களைக் கொன்ற எதிரியை வாழ்த்தி.. தப்பிப் பிழைக்கும் இக்கட்டை எண்ணும் போது.. எமது நிலைகளை எண்ணி வேதனைதான் பட முடிகிறதே அன்றி.. வேறு செய்ய முடியவில்லை. இப்படி ஆளாளுக்கு காட்டிக் கொடுத்தாவது அந்த மாண்டு போன போராளிகளும் மக்களும் தப்பி இருந்தால் நானும் இதனை இன்று முழுமையாக வாழ்த்தி வரவேற்றிருப்பேன். ஆனால் அவர்களை இனமானம்.. விடுதலை பேசி கொன்றுவிட்டு.. இவர்களை காட்டிக் கொடுப்பின் மூலமாவது தப்பிக்கச் சொல்லும் சந்தர்ப்பவாதத்தை நினைக்கும் போது இரத்தக் கண்ணீரே வருகிறது. எமது இயலாமைகள் காட்டிக் கொடுப்பை கூட ஆதரிக்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டுள்ளது. கொன்றவனையே வாழ்த்தி ஆதரிக்கும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அதுதான் வேதனை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாந்தன் இருக்கும் நிலமையில் இருந்தால் டக்ளஸ் என்ன, கருணா கக்கூஸ் இருந்து விட்டு நாக்கால் துடைக்கச் சொன்னாலும் செய்வன்

நெடுக்ஸ் மாதிரி நல்ல பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு ஆண்டாண்டு காலமாக படிக்கிற ஆட்களுக்கு வெறும் சத்தம் மட்டும்தான் போட முடியும்

ஒரு மட்டுறுத்தினராக இருந்து கொண்டு கருத்தாளர் மீதான பதிலாக இது வந்திருப்பது கவலை அளிக்கிறது. எங்களின் பின்னணி.. தேவை.. இவற்றோடு சம்பந்தப்பட்டுத்தான் படிப்போ.. வேலையோ.. இடம்பெயர்வோ அமைகிறது. அதை இட்டு முழுமையாக தெரியாமல்.. அல்லது அறியாமல்.. கருத்தாளர்கள் மீதான அவதூறு கருத்துக்களை எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

சாந்தன்.. சுகுமார் நிலை.. அவர்களின் தனிப்பட்ட ஒன்று என்ற நிலைக்கு அப்பால் அது இனம் சார்ந்த ஒன்று. வெறும் பாடகர்களாக அவர்கள் எவரையும் வாழ்த்திப் பாடலாம். ஆனால் அவர்களை விடுதலைப் பாடலை பாடியவர்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி வைத்துக் கொண்டு பார்க்கப்படுகின்ற போது.. அல்லது காட்டுகின்ற போது.. அது இனம் சார்ந்த நிலை ஆகும். அந்த வகையில் அந்த இனம் சார்ந்து நமக்கும் கருத்தெழுத உரிமை உண்டு. அதற்கு பதில் அளியுங்கோ. தனிப்பட்ட நெடுக்ஸை பற்றி அறியாமல் கருத்தெழுதுவது தவறு.

சாந்தன்.. சுகுமார் தயாமாஸ்டர் மட்டும் தானா காட்டிக் கொடுத்தாலும்.. வாழ முடியும்.. அப்போ இசைபிரியாக்கள்.. ஏன் இப்படி ஒரு சிங்கள நடனத்தை ஆடி தம்மை தற்காத்துக் கொள்ள முடியவில்லை..?????! ஏன் அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை..??????! :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர்;

விதண்டாவாதம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.

கொஞ்சம் யதார்த்தமாக சிந்திக்க பழகும்.

எல்லாம் தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டுமாம்.....

எலும்பு இல்லாத நாக்கால எதுவும் பேசலாம். அனுபவிச்சால் தான் கஷ்டம் புரியும்.

ஒரு மட்டுறுத்தினராக இருந்து கொண்டு கருத்தாளர் மீதான பதிலாக இது வந்திருப்பது கவலை அளிக்கிறது. எங்களின் பின்னணி.. தேவை.. இவற்றோடு சம்பந்தப்பட்டுத்தான் படிப்போ.. வேலையோ.. இடம்பெயர்வோ அமைகிறது. அதை இட்டு முழுமையாக தெரியாமல்.. அல்லது அறியாமல்.. கருத்தாளர்கள் மீதான அவதூறு கருத்துக்களை எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களின் பின்னணி பற்றி நீங்கள் தொடர்ந்து யாழில் தெரிவித்து வருகின்ற "ஆண்டாண்டு காலமாக லண்டனில் இருந்து படித்து வருகின்றீர்கள்" என்ற கருத்தை தான் எழுதினேன். நீங்கள் என்னத்துக்கா வந்தீர்கள், என்னத்துக்காக படிக்கின்றீர்கள் என்பதுக்கு அப்பால், நீங்கள் இன்று பாதுகாப்பாக லண்டனில் இருக்கின்றீர்கள். அதை தொடர்ந்தும் யாழில் தெரிவித்து வருகின்றீர்கள். எனக்கு மட்டுமல்ல இங்கு யாழில் கருத்தெழுதும் அநேகமானவருக்கு இது நீங்கள் சொல்லித்தான் தெரியும். மட்டுறுத்துனராக இருந்து கொண்டு இதை தெரிந்து எழுதுகின்றேன் என்று சொல்வது என் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் அழுவாச்சி தனமாக சொல்வது போன்று இருக்கு. உங்களால் இவ்வளவு தான் உங்கள் பக்க நியாயத்தை கூற முடிகின்றது

என் கருத்தில் மாற்றம் இல்லை. சாந்தன் என்னைப் போலவோ அல்லது உங்களைப் போலவோ வெளிநாட்டுக்கு ஓடி வந்தவர் அல்ல. இயக்கம் ஆட்பற்றாக் குறையால் அவதியுறும் போது படிக்கின்றேன் என்று ஓடி வந்தவரும் இல்லை. இறுதி வரைக்கும் தலைவருடன் துணை நின்று ஈற்றில் சரணடைந்தவர். அவரின் இன்றைய நிலையை பற்றி கேள்வி கேட்கக் கூட எனக்கோ உங்களுக்கோ அருகதை இல்லை. அப்படி இருக்கு என்று நீங்கள் எண்ணுவது கூட இறுதி வரைக்கும் புலிகளில் இருந்து சரணடைந்து, இன்று வாழ்வை இழந்து தவிக்கும் போராளிகள் அனைவரையும் கேவலமாக்கும் எண்ணம் தான்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பின்னணி.. தேவை.. இவற்றோடு சம்பந்தப்பட்டுத்தான் படிப்போ.. வேலையோ.. இடம்பெயர்வோ அமைகிறது. அதை இட்டு முழுமையாக தெரியாமல்.. அல்லது அறியாமல்.. கருத்தாளர்கள் மீதான அவதூறு கருத்துக்களை எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுடைய நிலையை நீங்கள் இங்கு நியாயப்படுத்த முடிகிறது. சாந்தன், சுகுமார் ஆகியவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாத காரணத்தால் நீங்கள் அவர்கள் மீதான அவதூறு கருத்துகள் எழுதுவதை தவிர்த்திருக்க வேண்டும்.

சாந்தன்.. சுகுமார் நிலை.. அவர்களின் தனிப்பட்ட ஒன்று என்ற நிலைக்கு அப்பால் அது இனம் சார்ந்த ஒன்று. வெறும் பாடகர்களாக அவர்கள் எவரையும் வாழ்த்திப் பாடலாம். ஆனால் அவர்களை விடுதலைப் பாடலை பாடியவர்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி வைத்துக் கொண்டு பார்க்கப்படுகின்ற போது.. அல்லது காட்டுகின்ற போது.. அது இனம் சார்ந்த நிலை ஆகும். அந்த வகையில் அந்த இனம் சார்ந்து நமக்கும் கருத்தெழுத உரிமை உண்டு. அதற்கு பதில் அளியுங்கோ. தனிப்பட்ட நெடுக்ஸை பற்றி அறியாமல் கருத்தெழுதுவது தவறு.

யாழ் களத்தில் தமிழ்மக்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் அதில் சம்பந்தப்பட்டவர்களை நீண்டகாலமாக விமரிசனம் செய்பவர் என்ற வகையில் பார்க்கிற போது உங்கள் இருப்பும், கருத்துகளும் முரண்படுகிறபோது, அதுவும் போலித்தனமான மக்கள் கரிசனை வெளிப்படுகிற போது அது மக்களின் விமரிசனத்துக்கு உள்ளாகும் பொதுவாழ்வு பற்றியதாகிறது; தனிப்பட்ட நெடுக்கர் பற்றியதாகாது.

சாந்தன்.. சுகுமார் தயாமாஸ்டர் மட்டும் தானா காட்டிக் கொடுத்தாலும்.. வாழ முடியும்.. அப்போ இசைபிரியாக்கள்.. ஏன் இப்படி ஒரு சிங்கள நடனத்தை ஆடி தம்மை தற்காத்துக் கொள்ள முடியவில்லை..?????!

பரிதாபமாக மரணத்தை தழுவிய அந்த பெண்ணை இங்கு இப்படி விமரிசிக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது? இசைப்பிரியாவுக்கு சிங்கள நடனம் ஆடினால் கொல்லாமல் விடுவதாக சிங்கள கொலைகார இராணுவம் சொல்லியிருந்ததா? அப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருந்தால், அது எடுக்கப்பட்டிருக்காது என்று எப்படி சொல்ல முடிகிறது?

ஏன் அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை..?

இதை கொலைகார சிங்கள இராணுவத்திடம் கேளுங்கள். யாழ் களத்தில் ஏன் கேட்கிறீர்கள்? எங்கள் உறவுகள் அங்கு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் நான் உறவுகளை இழந்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பின்னணி பற்றி நீங்கள் தொடர்ந்து யாழில் தெரிவித்து வருகின்ற "ஆண்டாண்டு காலமாக லண்டனில் இருந்து படித்து வருகின்றீர்கள்" என்ற கருத்தை தான் எழுதினேன். நீங்கள் என்னத்துக்கா வந்தீர்கள், என்னத்துக்காக படிக்கின்றீர்கள் என்பதுக்கு அப்பால், நீங்கள் இன்று பாதுகாப்பாக லண்டனில் இருக்கின்றீர்கள். அதை தொடர்ந்தும் யாழில் தெரிவித்து வருகின்றீர்கள். எனக்கு மட்டுமல்ல இங்கு யாழில் கருத்தெழுதும் அநேகமானவருக்கு இது நீங்கள் சொல்லித்தான் தெரியும். மட்டுறுத்துனராக இருந்து கொண்டு இதை தெரிந்து எழுதுகின்றேன் என்று சொல்வது என் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் அழுவாச்சி தனமாக சொல்வது போன்று இருக்கு. உங்களால் இவ்வளவு தான் உங்கள் பக்க நியாயத்தை கூற முடிகின்றது

என் கருத்தில் மாற்றம் இல்லை. சாந்தன் என்னைப் போலவோ அல்லது உங்களைப் போலவோ வெளிநாட்டுக்கு ஓடி வந்தவர் அல்ல. இயக்கம் ஆட்பற்றாக் குறையால் அவதியுறும் போது படிக்கின்றேன் என்று ஓடி வந்தவரும் இல்லை. இறுதி வரைக்கும் தலைவருடன் துணை நின்று ஈற்றில் சரணடைந்தவர். அவரின் இன்றைய நிலையை பற்றி கேள்வி கேட்கக் கூட எனக்கோ உங்களுக்கோ அருகதை இல்லை. அப்படி இருக்கு என்று நீங்கள் எண்ணம் கூட இறுதி வரைக்கும் புலிகளில் இருந்து சரணடைந்து, இன்று வாழ்வை இழந்து தவிக்கும் போராளிகள் அனைவரையும் கேவலமாக்கும் எண்ணம் தான்

பாதுகாப்பாக... ஆண்டாண்டு காலம்.. இப்படியான பதங்களை நான் எந்தப் பதிவிலும் குறிப்பிடவில்லை. லண்டனில் பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் தற்துணிந்து எழுதுகிறீர்கள். அதேபோல் ஆண்டாண்டு காலம் படிப்பு என்பதும் உங்களின் கணிப்பு. அதற்கு மேல் இத்தலைப்பு மாவீரரைப் பாடிய வாயால்... டக்கிளஸை புகழ்ந்து பாடிய சாந்தன்.. சுகுமார் பற்றியதே.. நெடுக்ஸ் என்ற கருத்தாளன் பற்றியதல்ல..!

சாந்தன்.. இடைத்தங்கல் முகாமில் இருந்த போது கே பியின் ஏற்பாட்டில் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டிருந்தவர். அதில் தான் இசைக்குழு அமைக்க உதவி கோரி இருந்தவர். எத்தனையோ முன்னாள் போராளிகள் அரசியல்.. துணைக்குழு.. அரச படை ஒத்துழைப்பு இன்றி... தமது குடும்பங்களோடு இணைவதில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்.. அவர்களை மீட்பது யார்.. டக்கிளஸா.. சாந்தனா..?? சரணடைந்து விடுவிக்கப்பட்ட பின்னும் தேடி வேட்டை ஆடப்படுபவர்களை காப்பது யார்..??? சாந்தன் டக்கிளஸை மகிந்தவை வாழ்த்திப் பாடுவது அதை செய்யுமா..??!! அப்படி செய்தால் நன்று. அதற்கு கடவுள் அருள் புரியட்டும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டக்ள்ஸ் என்ன மகிந்தா அழுத்தம் கொடுத்தாலும் இது போன்றே நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இஞ்சை இருக்கிறவனைப்பற்றி புறணிபாடோணும்.

இல்லாட்டி

அங்கை இருக்கிறவனைப்பற்றி புறணிபாடோணும்.

ஒட்டு மொத்தத்திலை நான் சொல்லுறதும் சரி,நான் செய்யுறதும் சரி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இஞ்சை இருக்கிறவனைப்பற்றி புறணிபாடோணும்.

இல்லாட்டி

அங்கை இருக்கிறவனைப்பற்றி புறணிபாடோணும்.

ஒட்டு மொத்தத்திலை நான் சொல்லுறதும் சரி,நான் செய்யுறதும் சரி

:):D

இந்த தேசிய பாடகர்களை மீண்டும் சுதந்திர மண்ணில் பாடக்கூடிய நிலைமையை கொண்டுவர உழைப்பதில் எங்கள் கவனம் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை கொலைகார சிங்கள இராணுவத்திடம் கேளுங்கள். யாழ் களத்தில் ஏன் கேட்கிறீர்கள்? எங்கள் உறவுகள் அங்கு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் நான் உறவுகளை இழந்திருக்கிறேன்.

சிங்கள இராணுவத்தை நம்ப முடியாததால் தானே ஆயுதப் போராட்டம் செய்தோம். அந்த ஆயுதப் போராட்டத்தில் காட்டிக் கொடுப்புகளுக்காக உயிர்விட்டவர்கள் பலர். அதனால் சம்பாதிக்கப்பட்ட எதிரிகள் பலர். ஏன்.. தாயக விடுதலை என்ற ஒன்றை நெஞ்சிருத்திப் போராடியதால் தான்.

இந்திய இராணுவத்தையே நம்பி சரணடைய சந்தர்ப்பம் அளிக்கப்படாத நிலையில் சிங்கள இராணுவத்தை நம்பி சரணடைதல் என்பது ஒரு தெரிவாக இருந்திருக்க முடியாது..! அதன் பின்னணியில் இருந்த சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள்.. உலகத்தமிழர்கள் சரணடைதல் என்ற நிலை தோன்றிய போது சர்வதேச கவனத்திற்கு போராளிகளின் மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தாததே இன்று சாந்தன் போன்றவர்கள்.. போர்க்குற்றவாளிகளை புகழ்ந்து பாட.. அதனை ஆதங்கத்தோடு ஆதரிக்கும் பலவீனமான நிலையில் எம்மை நிறுத்தி இருக்கிறது.

இதன் மூலம் போர் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்.. போராடி மாண்டவர்கள்.. சித்திரவதைப்பட்டு மாண்டவர்கள் மறக்கப்படுகிறார்கள்..! இதில் நீங்கள் நியாயத்தை நிறுவிக் கொண்டால் உங்கள் போன்றோறோடு வேறு நியாயத்தை தெரிவாக்குவது கடினம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தை நம்ப முடியாததால் தானே ஆயுதப் போராட்டம் செய்தோம்.

அந்த ஆயுதப் போராட்டத்தில் காட்டிக் கொடுப்புகளுக்காக உயிர்விட்டவர்கள் பலர். அதனால் சம்பாதிக்கப்பட்ட எதிரிகள் பலர். ஏன்.. தாயக விடுதலை என்ற ஒன்றை நெஞ்சிருத்திப் போராடியதால் தான்.

இந்திய இராணுவத்தையே நம்பி சரணடைய சந்தர்ப்பம் அளிக்கப்படாத நிலையில் சிங்கள இராணுவத்தை நம்பி சரணடைதல் என்பது ஒரு தெரிவாக இருந்திருக்க முடியாது..! அதன் பின்னணியில் இருந்த சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள்.. உலகத்தமிழர்கள் சரணடைதல் என்ற நிலை தோன்றிய போது சர்வதேச கவனத்திற்கு போராளிகளின் மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தாததே இன்று சாந்தன் போன்றவர்கள்.. போர்க்குற்றவாளிகளை புகழ்ந்து பாட.. அதனை ஆதங்கத்தோடு ஆதரிக்கும் பலவீனமான நிலையில் எம்மை நிறுத்தி இருக்கிறது.

இதன் மூலம் போர் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்.. போராடி மாண்டவர்கள்.. சித்திரவதைப்பட்டு மாண்டவர்கள் மறக்கப்படுகிறார்கள்..! இதில் நீங்கள் நியாயத்தை நிறுவிக் கொண்டால் உங்கள் போன்றோறோடு வேறு நியாயத்தை தெரிவாக்குவது கடினம்.

உங்கள் ஆதங்கமும் ஏக்கமும் தவிப்பும் நியாயமானது. அதேநிலைதான் எமதும்.

ஆனால் நடமுறை என்று வரும்போது அந்த இடத்தில் என்னை எனது பிள்ளைகளை எனது மனைவியை நிறுத்திப்பார்ப்பதுதான் நான் முதலாவதாக செய்யும் விமர்சனம். அதனால்தான் இதற்கு எனது பதில் மௌனம்.

இதை எல்லாவற்றையும் தாண்டியவர்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள் எம்முள். அவர்கள் எம்மைவிட மேலானவர்கள் என்று மட்டுமே என்னால் தற்போதைக்கு சொல்லமுடியும்.

இப்படியே இன்னமும் 10 வருடங்கள் போனால் நீங்கள் சொல்வதுதான் நடக்கப்போகின்றது.வெளிநாட்டில் உள்ளவர்கள் மாத்திரம் மாவீரர்களை பற்றி கதைத்துக்கொண்டிருப்பார்கள்.நாட்டில் உள்ளவர்கள் யார் அவர்கள் என்று கேட்பார்கள். ஏன் சிலவேளை டக்கிளஸோ அல்லது அவர் போலொருவரோ தான் தமிழனின் மாண்புமிகுவும் ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே இன்னமும் 10 வருடங்கள் போனால் நீங்கள் சொல்வதுதான் நடக்கப்போகின்றது.

வெளிநாட்டில் உள்ளவர்கள் மாத்திரம் மாவீரர்களை பற்றி கதைத்துக்கொண்டிருப்பார்கள்.

நாட்டில் உள்ளவர்கள் யார் அவர்கள் என்று கேட்பார்கள்.

ஏன் சிலவேளை டக்கிளஸோ அல்லது அவர் போலொருவரோ தான் தமிழனின் மாண்புமிகுவும் ஆகலாம்.

தங்களைப்போல் சுதந்திரம் பற்றி அறிந்தவனல்ல நான். ஆனால் எவரும் அது புலமாக இருந்தாலும் தாயகமாக இருந்தாலும் ஏன் சாந்தனாக இருந்தாலும் எமக்கு நடந்த கொடுமைகளை மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. நீங்கள் முடிந்தால் சாந்தனை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துவிட்டுவிட்டு இதே கேள்வியைக்கேளுங்கள். தயவு செய்து எமது சுதந்திர தாகத்தையும் எதிரியினால் எமக்கு ஏற்படுத்தப்பட்ட அநியாயங்களையும் மறந்துவாழுவோம் என்ற தங்களது பார்வையையாவது மாற்றுங்கள்.

சுதந்திர தாகமும்,எதிரி யாரென்றும் தெரியாவிட்டால் போராடபோயிருக்கமாட்டோம்.

போனபின்னர் தான் தெரிந்தது இவர்களுக்கு முதல் எதிரியைவிட எதிரியை யார் அழிப்பது என்ற போட்டிதான் முக்கியம் என்று. இங்கு கருத்து எழுதும் பலரும் மாற்று இயக்கங்கள் பற்றி எழுதும் கருத்துக்களை வாசிக்துக்கொண்டுதான் வருகின்றேன்.

எவருக்கும் தமது சறைவல் தான் முதல் முக்கியம்.புலிகள் எந்த தேவைக்காக பிரேமதாசாவிடம் போனார்களோ அதே காரணத்திற்காகத்தான் மற்றவர்களும் போனார்கள்.

சிங்கள அரசுகளுடன் சேர்ந்தபடியால் தான் அழித்தோம் என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமன்.

சிங்கள அரசுக்கெதிராக போராடப்போனவர்கள் புலிகளால் அழிக்கபடத்தொடங்கும் போது அவர்களுக்கு அரசைவிட புலிகளே முதல் எதிரி ஆகிவிட்டார்கள்.தமது இருப்பு தான் இங்கு முதன்மை பெறுகின்றது.உங்கள் கருத்துக்களின் படி புலி அவர்களை கொல்லவர அவர்கள் தமது உயிரை விட்டிருக்கவேண்டும் என்பதுபோல் உள்ளது.இதைத்தான் இப்போ இந்த புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிப்போராளிகளுக்கும் சொல்லுகின்றார்கள் அரசிடம் சரணடையாமல் அவர்கள் உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று.இதே புலிப்போராளிகள் தான் இன்று மாற்று இயக்கதவர்களை விட அரசுடன் நிற்கின்றார்கள்.ஏதோ புலிகளென்றால் வானத்தில் இருந்து வந்தவர்கள் மாதிரி கதைகள் அளந்தது காணும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

பப்பாவில் ஏற்றி பலி கொடுத்தது காணும்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட் வள வளன்னு பேசாம இப்பவே கிளம்புங்கப்பா,,,முன்னர் மதுரையில் ஆள்சேர்தார்கள் ...அப்போ போஸ்டர் ஒட்டி கொண்டிருந்த சிவகங்கை நண்பன் எல்லாம் உயரம் பத்தவில்லை என்று திருப்பி அனுப்பிவிடார்கள் (அவன் இன்று கத்தாரில் உயர்ந்த பணியில் இருக்கான்)......போக..இப்போ (...) சேர்க்கிறார்கள் ... போக ஒற்றுமை என்பது லேது ?

போராட விருப்பமுள்ளவர்கள் ஆட்டிலெறி அண்டார்க்டிகா எறி.. என விருப்பமுள்ளவர்கள் சேரவேணும்.. சும்மா .. வேலையில்லாதவன் பொண்டாட்டி தலைய செரத்த் கதையாக ,,, தினமும் புலிகள் அப்படி செய்திருக்கலாம் இப்படி நொப்பி இருக்கலாம் என கதையளக்கபடாது..:D களம் இப்போது மாற்று கருத்து மாணிக்கங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.. அவர்களும் மனிதர்கள்தான் தவறுகள் செய்வது ஜகஜம் என புரிந்து கொண்டு மறப்போம் மன்னிப்போம் என புலிகளை மறந்துவிட்டு தங்கள் திறமைய சென்று காட்டுக :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.