Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் தமிழர்களை சோனியா வென்றுள்ளார்.

Featured Replies

பிரிட்டன் வாழ் தமிழர்களின் பிரதினிதிகளான உலக தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் சோனியா தனது கருத்தை கூறியுள்ளார். தாம் எப்போதும் தமிழர்பக்கம் என்றும் கூறியுள்ளார். தான் சிறிலங்காவில் நடந்த கொடுமைகளை வீடியோவில் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். சோனியாவின் இந்த கருத்தை உலக தமிழர் பேரவையினர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் பிரிட்டன் தமிழர்களை சோனியா வென்றுள்ளதாகவும் கூறியுள்ளது இந்திய ஊடகங்களான இந்து போன்ற பத்திரிகைகள்.. உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இது பற்றி கூறுகையில் தமது பிடியில் இருந்து சோனியா தப்பிக்க முடியவில்லையெனவும் தமது விருந்தினராக அவர் ஆக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

தேர்தல் நேரம் நெருங்குகின்றது. இந்த நேரத்தில் சோனியா உட்பட பல இந்திய தலைவர்கள் முண்டியடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். யாரையாவது தமிழர் தரப்பினை சந்தித்து கருவேப்பிலையாக பாவிப்போம் என்று.

சோனியாவையோ, கருணா நிதியையோ சந்திப்பவர்கள் இதனை உணர்ந்து செயற்படுவது நல்லது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

சுரேந்திரன் நீர் ஒண்டும் புடுங்கவேண்டாம் தமிழினவிரோதி சோணியாவிடம் சோரம்போன பின்பு உலகத்தமிழர்பேரவையின் பேச்சாளராக இருக்கும் தகுதியை இழக்கின்றீர்கள். கூடியவிரைவில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக விளக்கவும். இல்லாதுவிட்டால் தூக்கியெறியப்படுவீர்கள்.

கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கும்போது பிரித்தானிய தமிழர் அகிம்சைப் பயங்கரவாதிகளிடம் ஏமாந்து போகமாட்டார்கள் என்பது விளங்கும்.

ஜே. ஆர். பரிமாறிய ஒரு கோப்பை தேநீருக்காக தமிழ் மக்களை அடகு வைத்த ஈனப் பிறவி அமிர்தலிங்கம் போல் சுரேந்திரனும் மாறிவிடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுநிறுவனமான "ரா" தனது வளைகரத்தை இங்கிலாந்து மட்டுமல்ல உலகம்முழுமைக்கும் தமிழர்க்கெதிரான தனது சதித்திட்டங்களுடன் அங்கிங்கெண்ணாதபடி வளைத்துள்ளது. இதில் தற்போது தமிழநாட்டில் தனது தொழில்நுட்பத்துறையை அமைத்திருக்கும், புலம்பெயர்தேசத்தின் மக்களிடம் பெருவாரியான பணத்தினை வாரிச்சுறுட்டும் நிறுவனம், கடந்தகாலத்தில் வேறொரு பெயரில் இயங்கி தற்போது இன்னுமொரு பெயரில் இயங்கும் இணையத்தளம் (இது தற்போது பிரான்சில் வாழும் தமிழ் எழுத்தாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனக்கோள்விப்பட்டேன்) அத்துடன் யாழில் கருத்தெழுதும் சிலர் இவர்களால் இந்தியா வெள்ளைப்பசு எனும் பொருள்பட மௌ;ளமௌ;ள இந்தியாவுக்கு ஆதரவான நச்சுவிதை தூவப்படுகின்றது. புலம்பெயர் உறவுகளே இந்தியதேசம் தமிழர் விரோததேசம் எனும் கருத்திலிருந்து மாறாதிருங்கள். இவ்விடையத்தில் அப்படி உங்கள் மனதில் ஏதாவது மனமாற்றம் ஏற்படுமாகவிருந்தால் அம்மாற்றமே பாரதிபாடிய அக்கினிக்குஞசுக் கவிதைபோல் தமிழ்ச்சாதியை எரித்துவிடும். தனது வல்லரசுக் கனவுக்காகவும் பொருளாதாரஇ புவியியற்கேந்திர முக்கியத்துக்காகவும் தமிழர்விரோததேசமாம் இந்தியா எழுபதுகளிலேயே எம்மத்தியில் நச்சுப்பார்த்தனீயத்தை விதைக்க ஆரம்பித்துவிட்டது. எனது அன்பான சகோதரனே கவனமாக இரு. இந்தியக்காவடியாக யார்மாறினாலும் அவர் எவராக இருந்தாலும் அவர்களை எடுத்துத் தூர எறிந்துவிடு

Edited by Elugnajiru

அரோகரா அரோகரா..... யாழ்களத்தில் பொழுதுபோக்கிற்காக தமிழ்த்தேசியத்தை எடுத்து என்று குப்பை கொட்டும் வீரவான்களும் இப்போ ... "துரோகி" ... பட்டமளிப்பில் ...!!!!! ... போச்சடா போச்சு!!!! .... கொஞ்சக்காலமாக இல்லாத இப்பட்டமளிப்பு ... இங்கு யாழில் தொடங்கப்பட்டு விட்டதோ????????

.... அவனுக்கு விலை போனான்???? இவர்களுக்கு விலை போனான்??? அப்படி செயற்படுகிறார்கள்???? ..... ஆமா கேட்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் .... இங்கிருந்து பகுதி நேர குப்பை கொட்டும் வீரவான்கள், நாட்டுக்குப் போய் ... ஆயுதத்தையும் தூக்கி வீர விளையாட்டை காட்டுங்கோவேன்???? அதை விடுத்து ...!!!!!!!

சரி ஒருதரோடையும் கதைக்க வேண்டாம்!!!!!!!!!!!!! ..... பேசவும் வேண்டாம்!!!!!! ... இந்தியா பயங்கரவாதி??? அமெரிக்கா பெரிய பயங்கரவாதி????? ரஷ்யா, சீனாவை கேட்கவே வேண்டாம்!!!! ... யாரோடை கிலுக்கப் போகிறீர்கள்?????????? பேச்சுவார்த்தை, உறவுகள் வைக்க வேண்டாம் என்றால் ... என்னை செய்யும் நோக்கம்????????? அது சரி அங்கு கட்டவே கோமணமும் இல்லை, ... அம்மணமாக நிற்கிறார்கள்????

.... நீங்களோ இங்கிருந்து வாய்ச்சவடால்களும், வீரவசனங்களும் ..... நாறுகிறது!!!! ... நிறுத்துங்கள், தயவுசெய்து!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுநிறுவனமான "ரா" தனது வளைகரத்தை இங்கிலாந்து மட்டுமல்ல உலகம்முழுமைக்கும் தமிழர்க்கெதிரான தனது சதித்திட்டங்களுடன் அங்கிங்கெண்ணாதபடி வளைத்துள்ளது. இதில் தற்போது தமிழநாட்டில் தனது தொழில்நுட்பத்துறையை அமைத்திருக்கும், புலம்பெயர்தேசத்தின் மக்களிடம் பெருவாரியான பணத்தினை வாரிச்சுறுட்டும் நிறுவனம், கடந்தகாலத்தில் வேறொரு பெயரில் இயங்கி தற்போது இன்னுமொரு பெயரில் இயங்கும் இணையத்தளம் (இது தற்போது பிரான்சில் வாழும் தமிழ் எழுத்தாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனக்கோள்விப்பட்டேன்) அத்துடன் யாழில் கருத்தெழுதும் சிலர் இவர்களால் இந்தியா வெள்ளைப்பசு எனும் பொருள்பட மௌ;ளமௌ;ள இந்தியாவுக்கு ஆதரவான நச்சுவிதை தூவப்படுகின்றது. புலம்பெயர் உறவுகளே இந்தியதேசம் தமிழர் விரோததேசம் எனும் கருத்திலிருந்து மாறாதிருங்கள். இவ்விடையத்தில் அப்படி உங்கள் மனதில் ஏதாவது மனமாற்றம் ஏற்படுமாகவிருந்தால் அம்மாற்றமே பாரதிபாடிய அக்கினிக்குஞசுக் கவிதைபோல் தமிழ்ச்சாதியை எரித்துவிடும். தனது வல்லரசுக் கனவுக்காகவும் பொருளாதாரஇ புவியியற்கேந்திர முக்கியத்துக்காகவும் தமிழர்விரோததேசமாம் இந்தியா எழுபதுகளிலேயே எம்மத்தியில் நச்சுப்பார்த்தனீயத்தை விதைக்க ஆரம்பித்துவிட்டது. எனது அன்பான சகோதரனே கவனமாக இரு. இந்தியக்காவடியாக யார்மாறினாலும் அவர் எவராக இருந்தாலும் அவர்களை எடுத்துத் தூர எறிந்துவிடு

congrats.gif

தோழரின் கருத்து 100% சரி ஈழ தோழ்ரகள் உசாரக இருக்கவேண்டிய தருணம் இது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்களுள்ளவர்கள் கூட( கள தோழர்கள்)எதாவது அஞ்சு பத்து என நாட்டுக்கு(தமிழீழம்) கொடுத்திருப்பார்கள்.. ஆனா இந்த டெல்லி வலாக்கள் 2050-3050 லும் இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல்.. அதிகாரம்... என பேசிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் கொன்றேதான் இருப்பார்கள் ..குரைக்கிற நாய் வேட்டை பிடிக்காது.. :lol:

டிஸ்கி:

அந்த திருக்குறள் ஏனோ நினைவுக்கு வரல (அதிகாரம் வறுமை என நினைக்கிறேன்) .. பெற்ற தாயாக இருந்தாலும் பல மகன்கள் தனிகுடித்தனம் போய்விட்ட பின்பு செல்வந்தமகன் வீட்டில் தான் விரும்பி தங்களுவாளாம்.. சோ இப்ப தேவைபடுவது நாட்டுபற்றூடாகிய செல்வந்தர்கள் + அறிவியல் வலிமை...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் இருந்தால், எந்தக் காலத்திலும் இந்தியாவை நம்ப வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:)

கிந்திய விசுவாசிகள் இந்த (தமிழ்+ கிந்தியா) பாடலை கேட்டு ஆத்மா சாந்தி கொள்ளுக.. :)

...... முதலாம், இரண்டாம் உலக யுத்ததின் போது அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டுப்படைகள் யப்பான், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளை நாசம் செய்தன. அதிலும் யப்பானில் பல ஆயிரம் மக்களை அணுகுண்டு மூலம் அமெரிக்க கொன்றொழித்தது, அமெரிக்கா செய்து விட்டது என்பதற்காக யப்பான், ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகள் வாழ்நாள் பூராவும் அமெரிக்காவை எதிரியாக்கி செயற்பட்டிருந்தால் ... இன்று உலகின் பொருளாதார வல்லரசுகளாக ஜேர்மனி, யப்பான் வந்திருக்க முடியுமா????

நாம் மட்டும் இந்தியாவிற்கு, வாழ்நாள் எதிரிகளாக இருக்க வேண்டும்??????!!!!! ... அதுவும் நாம் மிக பலம் பொருந்தியவர்கள்????? ... ஆனால் இப்போ கோவனம் கூட கட்டும் நிலையில் நாம் இல்லை!!!!!!!

இலங்கைக்கு நாசம் செய்த இந்தியாவை எவ்வாறு ஜே.ஆர் வீழ்த்தினான்???? ... நண்பர்களாக இருந்த எம்மை மோத விட்டி கூத்துப் பார்த்தான்!! ... ஏன், நாம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அதனை செய்யக் கூடாது?????????

.... என்ன உலகில் யூதனுக்கு அடுத்த மூளையுடையவன் ஈழத்தமிழனோ????????? ..........

கண்ணுக்கு நேர பார்த்து 11 நிமிடங்கள் பேசினாவாம்,ஆனபடியால் உண்மையான அக்கறை தமிழர்கள் மீது உள்ளதாம்.

யாழில் இருக்கும் ஒருசிலரைத்தவிர மற்றயவர்கள் சோனியாவிடமோ,மகிந்தாவிடமோ போகத்ததயார் போலுள்ளது.

யாழில் உள்ளவர்களை ஒருத்தரும் கணக்கில் எடுக்கவில்லைபோலிருக்கு?

நெல்லையனும் இப்ப கொஞ்சம் சிந்திக்க துவங்கிவிட்டர் போலுள்ளது.இப்படி எல்லோரும் சிந்திக்க தொடங்கினால் எமது பிரச்சனை தீர்ந்துவிடும்.

இல்லை இன்னமும் குரைத்துக்கொண்டே இருப்பம் என்றால் ஒருவரும் எம்மை கண்டுகொள்ளபோவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகளை சொல்லாமல்...................... நீண்ட வசனங்கள் வாழ்க்கைக்கு உதவாது.

மாற்றங்கள் கனிந்து வருகையில் கோபத்தையும் வெறுப்பையும் ஒருபக்கம் தள்ளிவைத்து விட்டு ஒரு அரசியல் தீர்வை பெறுவது வரலாற்று தேவை.

உலக மாற்றங்கள் ( அரபு உலகம்), சீனாவின் சிங்கள நெருக்கம் என்பன சோனியாவுக்கும் அடுத்த தலைமுறை காங்கிரசுக்கும் தமது கொள்கைகளில் மாற்றங்கள் வந்தால் மட்டுமே தாமும் பிழைக்கமுடியும் என்பதை உணர்த்த தொடங்கியுள்ளன எனவும் பார்க்கலாம்.

பல புலம்பெயர் தமிழ் மக்கள் தமது நாடுகளில் இன்று அரசியல் செல்வாக்கை பெற்று அதன் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். இல்லை, வரும் சிங்களத்திற்கு எதிரான மனித உரிமை, யுத்த குற்றங்களில் இருந்து தன்னை அந்நியப்படுத்த முயலலாம். தமிழகத்தில் இன்றும் ஈழத்தமிழர்கள் மீது இந்திய மத்திய அரசு செய்த, உதவிய படுகொலைகளை மக்கள் மறக்காமல் இருப்பது ஒரு தலையிடி எனக்கருதலாம்.

இன்று உலகில் அதிகளில் ஆயுதங்களை வாங்கும் பல்லின மக்களை கொண்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கொண்ட அரசு பல நெருக்கடிகளுக்கு இன்றும் நாளையும் வெற்றிகரமாக முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. காஸ்மீர், அஸாம் உட்பட நக்சலைட்டுக்கள் என பல பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாமல் உள்ளன. இதை விட வளரும் பொருளாதாரம் பல சமச்சீர் அற்ற நிலையை உருவாக்கி அதன்மூலம் வேறு நெருக்கடிகளையும் தரலாம்.

இன்று நாம் சிங்களம் , சீனா , மேற்குலகம், இந்தியா என எல்லா தரப்புகளிடமும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள பிளவுகள் மூலம் எமது காய்களை நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுக்கு நேர பார்த்து 11 நிமிடங்கள் பேசினாவாம்,ஆனபடியால் உண்மையான அக்கறை தமிழர்கள் மீது உள்ளதாம்.

யாழில் இருக்கும் ஒருசிலரைத்தவிர மற்றயவர்கள் சோனியாவிடமோ,மகிந்தாவிடமோ போகத்ததயார் போலுள்ளது.

யாழில் உள்ளவர்களை ஒருத்தரும் கணக்கில் எடுக்கவில்லைபோலிருக்கு?

நெல்லையனும் இப்ப கொஞ்சம் சிந்திக்க துவங்கிவிட்டர் போலுள்ளது.இப்படி எல்லோரும் சிந்திக்க தொடங்கினால் எமது பிரச்சனை தீர்ந்துவிடும்.

இல்லை இன்னமும் குரைத்துக்கொண்டே இருப்பம் என்றால் ஒருவரும் எம்மை கண்டுகொள்ளபோவதில்லை.

அடடா! தமிழனின் தோல்வியில் சோறு தின்றவர்கள், ஏனடா தோற்றாய் என்று வருந்துகின்றார்களாம். இன்னும் ஒரு படி மேலே போய் வெற்றிக்கு வழிகாட்டுகின்றார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! தமிழனின் தோல்வியில் சோறு தின்றவர்கள், ஏனடா தோற்றாய் என்று வருந்துகின்றார்களாம். இன்னும் ஒரு படி மேலே போய் வெற்றிக்கு வழிகாட்டுகின்றார்களாம்.

53624575.jpg

98743864.jpg

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

...... முதலாம், இரண்டாம் உலக யுத்ததின் போது அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டுப்படைகள் யப்பான், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளை நாசம் செய்தன. அதிலும் யப்பானில் பல ஆயிரம் மக்களை அணுகுண்டு மூலம் அமெரிக்க கொன்றொழித்தது, அமெரிக்கா செய்து விட்டது என்பதற்காக யப்பான், ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகள் வாழ்நாள் பூராவும் அமெரிக்காவை எதிரியாக்கி செயற்பட்டிருந்தால் ... இன்று உலகின் பொருளாதார வல்லரசுகளாக ஜேர்மனி, யப்பான் வந்திருக்க முடியுமா????

நாம் மட்டும் இந்தியாவிற்கு, வாழ்நாள் எதிரிகளாக இருக்க வேண்டும்??????!!!!! ... அதுவும் நாம் மிக பலம் பொருந்தியவர்கள்????? ... ஆனால் இப்போ கோவனம் கூட கட்டும் நிலையில் நாம் இல்லை!!!!!!!

இலங்கைக்கு நாசம் செய்த இந்தியாவை எவ்வாறு ஜே.ஆர் வீழ்த்தினான்???? ... நண்பர்களாக இருந்த எம்மை மோத விட்டி கூத்துப் பார்த்தான்!! ... ஏன், நாம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, அதனை செய்யக் கூடாது?????????

.... என்ன உலகில் யூதனுக்கு அடுத்த மூளையுடையவன் ஈழத்தமிழனோ????????? ..........

உங்களுடைய உதாரணங்கள் வேறு வேறு துருவம் கொண்டவை.

முதாலாழித்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக யப்பானையும் ஜேர்மனியையும் தடவவேண்டிய நிலமை அமெரிக்காவிற்கு வந்தது என்பதுதான் உண்மை. வ்றீ ரேட் வ்றீ ரேட் (Free Trade)என்று சொல்லிகொண்டிருந்த அமெரிக்கா இப்போ சீனாவுக்கு வ்ரீ ரேட் என்றால் வ்ரீ ரேட் இல்லை என்று சொல்கின்றது ( இது உண்மையிலேயே ஒபாமா சீனா பிரதமருக்கு சொன்னது அதை தமிழில் மொழிபெயர்த்தால் கிட்டதட்ட இப்படிதான் இருக்கும்) ஆக சீனா கேட்பது அப்ப அது என்ன ரே(றே)ட் என்று?

கொமினிசயத்தை கடைபிடித்த சீனா உரிய நேரத்தில் எப்படி அதை கைகழுவியது எப்படி உயர்நிலைக்கு வளர்ந்தது என்பது நாம் படிக்க வேண்டிய ஒரு பாடம்.

ஆனால் இந்தியாவோடு கூடி கூலாவுவது என்பது பிராந்திய தந்திரோபாய அரசியல் ஆகாது. அப்படி ஆவதென்றால் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழவேண்டும்......... ஆக கூடியது ஒன்றுமில்லை இந்தியா முன்னேறவேண்டும் என்று சிந்திக்க கூடிய ஒரு இந்தியன் பிரதமர் ஆனலே போதும் ஆனால் அது ஆகுமா? நாய்வாலை நிமிர்த்தலாமா என்பதுதான் பலருடைய கேள்வி.

இந்தியாவின் ஒரு பகுதிதான் ஈழம் ஆக இந்தியாவோடு உறவாடுவதில் ஒன்றுமில்லை ஆனால் அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். அதுதான் வில்லங்கமான விடயம். இதை எந்த அளவிற்கு நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பது உங்கள் புரிதலை பொறுத்தது. (சோனியா இத்தாலி நாட்டை சோந்தவள் என்பதால் அப்படி எழுதவில்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீபீசியில் அவரது பேட்டியை கேட்ட போதே நினைத்தேன் வசமாகமாட்ட போறார் என்று, நாங்கள் என்ன கேட்டோம், அவர் என்ன சொன்னார், இந்தியா வன்னியில் என்ன செய்தது என்பதோடு நிறுத்தி இருந்தால், அவரது வேலை முடிந்து இருக்கும், சோனியாவின் கண்ணில் அது தெரிந்தது, காதில் இது தெரிந்தது, மூக்கில் உது தெரிந்தது என்று மனோதத்துவ, உளவியல் ஆளராக மாறபோக வீண் சந்தேகம் வரும் என்று, அதுவும் இந்திய உளவுதுறையான றோவின் கட்டுபாட்டில் இருக்கும் பீபீசிதமிழுக்கு அள்ளி விட்டு இருகிறார், காங்கிரசை ஒட்டு மொத்தமாக வீழ்த்தவேனும் என தமிழகம் பொங்கி நிற்கும் நேரத்தில் உது எல்லாம் அதிகம், காங்கிரஸ் ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கும் கட்சி, 90 இல் தமதுகட்சியின் தலைவரின் பின்பக்கத்தை மட்டும் போஸ்ரரில் அடித்து, ஆட்சி பிடித்த கட்சி. உந்த சின்ன பிட்டையே போட்டு போட்டு பெரிசாக்கி போடுவாங்கள். காங்கிரசிற்கு எதிராக விழ போகும் வாக்குகள் பிரிந்து விடுமோ என்ற ஜயத்தில் முன்றாவது கூட்டனி அமைக்காமல் அமைதிகாக்கும் வைகோ போன்றவர்களின் பொறுப்பில் சிறிதாவது இருக்க வேண்டாமோ :D

சோனியா காந்தியுடன் மட்டுமல்லை சிறீலங்கா அரசாங்கத்துடனும் இரகசிய பேச்சுவார்ததை நடத்தப்படுகிறது இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் நோர்வே இருக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் “சிங்கள நெட்”கூடாரத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.மா.. பேரவைகள் நாடுகடந்த அரசாங்கத்தின் ஜனநாயக அணி என்பவற்றின் உருவாக்கம் உருத்திராவை கேபியோடு சம்பந்தப்படுத்தி சேறடிப்பது இவையெல்லாம் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு கீழேயே அதாவது கொத்துபாயாவின் நடைபெறுகின்றன.

இன்னும் பல இரகசியங்கள் விரைவில் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வரும்;.

சிறீலங்கா அரசு மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் போர் குற்றம் புரிந்தார்கள் என்று ஜநா நிபுணர் குழு தீர்பளிக்கும் போது மே 18 ஐ போர்குற்றநாள் என்று பிரகனப்படுத்தியதன் பின்னணியும் வெளிச்சத்துக்கு வரும்

துயரநாட்கள் நினைவு நாட்கள் அல்லது இனப்படுகொலை நாள் என்று பிரகடனப்படுத்த வேண்டியதை போர் குற்ற நாள் என்று பிரகடனப்படுத்தியதன் பின்னணி என்ன என்று ஒவ்வொரு வரும் கேட்டுப்பார்த்தால் இந்த சதிவலை எங்கே இருக்கிறது என்பது சுலபமாக அடையாளம் காணலாம்

  • தொடங்கியவர்

மாற்றங்கள் கனிந்து வருகையில் கோபத்தையும் வெறுப்பையும் ஒருபக்கம் தள்ளிவைத்து விட்டு ஒரு அரசியல் தீர்வை பெறுவது வரலாற்று தேவை.

உலக மாற்றங்கள் ( அரபு உலகம்), சீனாவின் சிங்கள நெருக்கம் என்பன சோனியாவுக்கும் அடுத்த தலைமுறை காங்கிரசுக்கும் தமது கொள்கைகளில் மாற்றங்கள் வந்தால் மட்டுமே தாமும் பிழைக்கமுடியும் என்பதை உணர்த்த தொடங்கியுள்ளன எனவும் பார்க்கலாம்.

பல புலம்பெயர் தமிழ் மக்கள் தமது நாடுகளில் இன்று அரசியல் செல்வாக்கை பெற்று அதன் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். இல்லை, வரும் சிங்களத்திற்கு எதிரான மனித உரிமை, யுத்த குற்றங்களில் இருந்து தன்னை அந்நியப்படுத்த முயலலாம். தமிழகத்தில் இன்றும் ஈழத்தமிழர்கள் மீது இந்திய மத்திய அரசு செய்த, உதவிய படுகொலைகளை மக்கள் மறக்காமல் இருப்பது ஒரு தலையிடி எனக்கருதலாம்.

இன்று உலகில் அதிகளில் ஆயுதங்களை வாங்கும் பல்லின மக்களை கொண்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கொண்ட அரசு பல நெருக்கடிகளுக்கு இன்றும் நாளையும் வெற்றிகரமாக முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. காஸ்மீர், அஸாம் உட்பட நக்சலைட்டுக்கள் என பல பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாமல் உள்ளன. இதை விட வளரும் பொருளாதாரம் பல சமச்சீர் அற்ற நிலையை உருவாக்கி அதன்மூலம் வேறு நெருக்கடிகளையும் தரலாம்.

இன்று நாம் சிங்களம் , சீனா , மேற்குலகம், இந்தியா என எல்லா தரப்புகளிடமும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள பிளவுகள் மூலம் எமது காய்களை நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.

அண்ணே அங்க சோனியாவிற்கு அப்படி ஒன்றும் உணர்த்த இல்லை. தமிழகத்தில் காங்கிரஸை வலுப்பெ|ற வைக்க இப்படி சில் தேவைகள் இருக்கின்றன. அங்க மஹிந்தவிடம் போய் எலெக்சனுக்காக எதையாவது செய்யுங்கோ என கேட்க பயம் அதனால புலம்பெயர் மக்களிடம் இப்படி விளையாடலாம் என்பதே சோனியாவின் திட்டம். தயவு செய்து தமிழ் நாட்டு தேர்தல் முடியும் வரையாவது புலம்பெயர் மக்கள் கொஞ்சம் உசாராக இருப்பது நல்லது.

உமை, ... தமிழ்நாட்டு தேர்தல் முடிந்தால் ... என்ன நடக்கப் போகிறது??????????? ........... இன்று கருணாநிதி மீது நாம் எறியும் வசைகள் ஜெயலலிதா மீது மாறப்போகிறது , அவ்வளவுதான்!!!!! ... மற்றும்படி ஏதாவது ....???? ... அங்கு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன ... எமக்கு சாதகமான ஏதாவது வரவா போகிறது????????????

னெல்லையன்,

அவர்கள் தமிழ் நாட்டுத் தேர்தலை மையமாக வைத்தே இந்த சந்திப்பை ஒழுங்குபடுதினார்கள்.இந்திய ஆளும் வர்க்கத்த்தின் நலங்களும் ஈழத் தமிழரின் நலங்களும் என்றுமே ஒன்றாக இருந்தில்லை இனியும் இருக்கப் போவத்தில்லை.காலம் காலமாக அவர்களே எம்மை அழிக்கின்ரனர், அழித்துவருகின்றனர்.இதனை நாம் இத்தனைக்குப் பின்னரும் புரிந்து கொள்ளாவிட்டால் எம்மை எவராலுமே காப்பாற்ற முடியாது.உந்த கடைக்கண் பார்வை நட்பு அரசியல் எல்லாம் இல்லாத ஒன்று.அரசியல் என்பது நலன்களில் அடிப்படையில் நடப்பத்து என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

இந்தச் சந்திப்பு அதன் பின்னர் வந்த சுரேனின் பேட்டி எல்லவற்றிற்கும் எனது காண்டனத்தை நான் பிடிஎfஉக்குத் தெரியப் படுத்தி உள்ளேன்.இது சம்பந்தமாக பகிரங்கமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.இல்லாவிட்டால் இனி நாம் பிடிஎfஉக்காக இனி வேலை செய்யப் போவத்தில்லை.அரசியற் தெளிவற்றவர்கள் தம்மை முன் நிறுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் இறங்குவதை நாம் அனுமதிக்கப் போவத்தில்லை.பிடிஎf என்னும் அமைப்பு இவ்வாறானவர்களில் நடவடிக்கையால் அதன் பலத்தை இழக்கவே நேரிடும்.

தமிழ்னாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப் பட வேண்டுயது அவசியம்.அதற்க்கு நான் சீமானுக்கு உதவுவதை விட்டு விட்டு காங்கிரசுக்கு உதவிக் கொண்டிருக்கிறோம்.இது தான் எமது அரசியல் சீர்கேடு.எதை எதை எபோது செய்வது என்று தெரியாது எதிரிகளின் வலையில் தொடர்ந்தும் விழுந்து கொண்டு இருக்கிறோம்.

உண்மைதான்

இந்தியாவையே சுருட்டிக்கொண்டிருக்கும் சோனியா தமிழருக்காகவா ஏதும் செய்யப்போகின்றார். இப்போதைக்கு சோனியா - மஹிந்தா ஆட்சியை புறக்கணிப்பதே நல்லது.

ஏன் சோனியா இந்த கால கட்டத்தில் ஒரு புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதியை சந்தித்தார் என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. பலரும் தமிழக தேர்தல் தான் காரணமாக இருக்கலாம் என எதிர்வு கூறுகிறார்கள். காங்கிரசின் பலவீனமான நிலையும், தமிழக உறவுகளின் ஆறாத இந்தியாவின் ஈழத்தமிழருக்கு எதிரான துரோகமும், அவர்களை தமிழர் தரப்புடன் பேச வைத்திருக்கலாம். அத்துடன், தமிழக கட்சிகளுடன் இணைந்து கூட ஈழத்தமிழர் சார்பாக ஒரு அறிக்கையை விட்டிருக்கலாம். அப்படியும் நடந்ததாக தெரியவில்லை. ஏன் சோனியாவால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் சில நகர்வுகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது? உலகத்தமிழர் பேரவை சந்திப்பின் மூலம் தமிழக தேர்தலில் வாக்குகளை வெல்லலாமா? என்ற கேள்விகள் எழுகின்றன

இன்று இந்தியாவின் நீண்ட கால தலையிடியாக இருப்பது சீனா. சீனாவின் நகர்வுகளில் அதிருப்தி அடைந்துள்ள இந்தியா, தாயகத்தில் உள்ள தமிழ் கட்சிகள் மூலம் செய்யமுடியாத ஒன்றினை புலம்பெயர் தமிழர்கள் ஊடாக செய்ய முனைந்திருக்குமா?

இல்லை இந்தியாவின் ஐ.நா.வின் நிரந்தர பாதுகாப்பு குழுவின் அங்கத்துவத்திற்கு ஆதரவு சேர்க்கும் முயற்சியின் அங்கமாக, தனது கைகளில் பதிந்துள்ள போர்க்குற்ற ஆதாரங்களை, எதிர்வலைகளை குறைக்கும் நோக்கத்துடன் சந்தித்திருக்கலாமா?

இல்லை ஏன் நாடு கடந்த தமிழீழ அரசுடன் கதைக்காமல் ( அவர்களுக்கு தமிழகத்திலும் பிரதிநிதிகள் உள்ளனர்) உலகத்தமிழர் பேரவையுடன் சோனியா கதைத்தார்? அண்மையில் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு இருந்தால் மட்டுமே மேற்குலகம் எமக்காக எதுவும் செய்யலாம் என கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இல்லை வேறு ஏதும் காரணமாக இருக்கலாமா? காரணம் எதுவாக இருந்தாலும் உலகத்தமிழர் பேரவையின் அடுத்த நகர்வுகள் மூலம் அந்த காரணங்கள் ஓரளவுக்கு வெளிப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.