Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் பதவிகளை இழந்தனர் சபை குழப்பிகள்!!!

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான உறுதியுரை எடுக்காதவர்கள் அனைவரும் தமது உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளதாக தெரியவருகிறது.

சனநாயக அணி என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசில் பிரிவினையை உருவாக்க முனைந்த கும்பலைச் சேர்ந்தவர்களே உறுப்புரிமையை இழந்துள்ளதாக அவர்களிற்கு துதிபாடும் தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

  • Replies 87
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Rudra faction ‘expels’ democrats of TGTE

[TamilNet, Sunday, 27 March 2011, 02:43 GMT]

The ‘speaker’ of the TGTE Assembly, Pon Balarajan, belonging to Rudrakumaran faction of the TGTE, sent letters on Saturday to elected members of the TGTE who identified themselves as Democrats that they were ‘expelled’ from the TGTE Assembly. This has happened despite Democrats members on Friday publicly reiterated an oath of allegiance to the concept of the TGTE and the Assembly. With pretext or without pretext, the Rudra faction in the TGTE has decided to ‘get rid of’ Democrats in order to move in a hurried way to materialize a pre-conceived agenda, sources close to Democrats alleged.

The public oath of the Democrats Friday and the letter sent to the Democrats by Mr. Pon Balarajan follows:

Press statement by TGTE Democrats on 25 March 2011

Oath of Allegiance by TGTE Democrats on 25 March 2011

Letter sent to TGTE Democrats by Pon Balarajan on 26 March 2011

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33726

----------------------

என்ன நடக்குது...??! சத்தியபிரமாணத்தை ஒரு தேதி குறிப்பிட்டு அந்த முறைக்கு எடுத்துக் கொள்ளுற பக்குவம் கூடவா இல்லை. ஏலவே நாடு கடந்த தமிழீழ அரசு காலக்கெடு விதித்திருந்தது. அதை மதிக்காம இறுதி நேரத்தில் அதுவும் பகிரங்க சத்திய பிரமாணம்.. அப்படின்னா.. என்ன அர்த்தம்...???! மக்களுக்கு புரியும் படியா செய்யுங்கோவன்...???! :rolleyes::unsure::o

ஒரு அரசுக் கட்டமைப்பு என்ற வகையில் நாடு கடந்த தமிழீழ அரசு காத்திரமாகவும் திடமாகவும் உறுதித் தன்மையோடும் சரியான நேர அட்டவணையோடும் முடிவெடுக்கவும் செயற்படவும் வேண்டும். அந்த வகையில் போதிய கால அவகாசங்களை அது வழங்கி இருக்கிறது. அதனை பயன்படுத்தாமல்.. குழப்படி பண்ணுறவர்கள்.. தயவுசெய்து.. மக்கள் விருப்பை உணர்ந்து செயற்படுங்கள்.. அல்லது விலகி இருங்கள். மக்களுக்கு அடுத்த தெரிவுக்கு இடமளியுங்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும்.... இவர்கள் இன்னும் சத்தியப் பிரமாணம் எடுக்கவில்லை என்றால்.... இவர்கள் அதில் ஏன் போட்டியிட்டவர்கள். நாடுகடந்த அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட வந்தவர்கள் போல் இவர்களின் செய்கை உள்ளது. இதனையே.... அவர்கள் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டிருந்தால்.... சத்தியப் பிரமாணம் எடுக்காமல்... ஒரு வருடம் இழுத்தடித்து இருந்திருந்ருப்பார்களா.....? தமிழன் எதைச் செய்தாலும் குழப்ப என்று ஒரு கூட்டமே அலையுது.

  • கருத்துக்கள உறவுகள்

போதிய அளவு கால அவகாசம் கொடுத்திருந்தார்கள்.பிரதமரே நல்லெண்ண அழைப்பையும் விடுத்திருந்தார்.எதனையும் மதிக்காமல் இருந்தவர்களுக்கு இது தேவை.ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்களின் மனமாற்றத்திற்காக ஒரு அரசு காத்திருக்காது.இவர்கள் குழப்பியடித்த காரணத்தினாலேதான் நா.க.அரச உருவாகி 1 வருடமாகியும் உருப்படியாக எதனையும் செய்ய முடியவில்லை.இப்படிக் குழப்பியடிப்பதற்காக மக்கள் இவர்களைத் தெரிவு செய்யவில்லை.உங்களுக்கு உருத்திரகுமாரனின் தலைமைத்துவம் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருக்கவேண்டும்.இதை விட்டு மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புக்குள் திட்டமிட்டு புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் குழப்ப வாதிகளை அமைப்புக்கள்(நா.க.அ) தொடர்ந்து வைத்திருப்பது.அமைப்பின் வளர்ச்சிக்கு குந்தகமாகும்.இதுவே ஒரு ஆயதப் போராட்ட அமைப்பாக இருக்குமாயின் தலைமைக்கு கட்டுப் படாதவர்களை இவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்க மாட்டார்கள்.சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக யாரோ ஒருவரின் தாளத்திற்கு ஆடுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதை மக்கள் விரும்பமாட்டார்கள்.தயவு செய்து ஒற்றுமையாகப் போராடுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள்.நா.க.அரசின் தலைவர் உருத்திரகுமார்.ஜனநாயக அணியின் தலைவர் யார்??????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியின் அரசவை உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்புஇ அது நிறைவேற்றப்பட்ட விதம் ஆகியவற்றில் ஜனநாயக ரீதியாக எழுந்த கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் கையாளும் அதேவேளைஇ அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கக் கட்டமைப்பின் செயற்பாடுகள் நல்லமுறையில் இடம்பெறவேண்டும் என்பதற்கான ஒத்துழைப்பை நாடு கடந்த அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கையின் முழுவடிவம்இ

நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி

வுசயளெயெவழையெட புழஎநசnஅநவெ ழக வுயஅடை நுநடயஅ - னுநஅழஉசயவள (வுபுவுநு-னுநஅழஉசயவள)

ஊடக அறிக்கை

Pசநளள ளவயவநஅநவெ

25 மார்ச் 2011

நாடுகடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியின்

அரசவை உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்புஇ அது நிறைவேற்றப்பட்ட விதம் ஆகியவற்றில் ஜனநாயக ரீதியாக எழுந்த கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் கையாளும் அதேவேளைஇ அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கக் கட்டமைப்பின் செயற்பாடுகள் நல்லமுறையில் இடம்பெறவேண்டும் என்பதற்கான ஒத்துழைப்பை நாடு கடந்த அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றோம்.

நா.க.த.அ அரசவையினாலும்இ எமது மக்களாலும் அங்கீகரிக்கப்படவேண்டிய யாப்பு குறித்த முக்கிய அடிப்படைகளைஇ அதற்குரிய வகையில் அடுத்த தேர்தலுக்கு முன்னர் அணுகுவோம் என்று எமது நிலைப்பாட்டை ஏற்கனவே கடந்த 06 மார்ச் 2011 அன்று nதிரிவித்திருந்தோம். அதுவரை ஜனநாயக அணியாகஇ கட்டுக்கோப்பான முறையில் நாடு கடந்த அரசாங்க அரசவைக்குள்ளிருந்தே செயற்படுவோம் என்ற எமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

ஒழுங்குமுறையாக நிறைவேற்றப்படாதஇ பல குறைபாடுகளையுடைய யாப்பினை ஏற்றுக்கொள்ளும்படி எம்மீது விடாப்பிடியான ஓர் அழுத்தத்தைப் பிரயோகிப்பது போலக் காட்டியவாறுஇ எம்மை அரசவையிலிருந்தே நிராகரிக்கும் நோக்கில் தொடர்ந்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் இந்நிலையில்இ நாம் நாடு கடந்த அரசாங்கத்தின்மீது தெளிவானதொரு சத்தியப்பிரமாணத்தை மேற்கொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம்.

எமது சத்தியப்பிரமாணத்தின் வாசகங்களின் பிரதியை இத்தோடு இணைத்துஇ அனைவருக்கும் தெளிவுபடுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மையோடு இதர அரசவைப் பிரதிநிதிகளுக்கும் எமது மக்களுக்கும் முன்வைக்கிறோம்.

இலண்டனில் இயங்கும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் எனும் அமைப்புஇ பிரித்தானியாவிலிருந்து தெரிவான பிரதிநிதிகளோடு கருத்துப்பரிமாற்றம் செய்யும் நோக்கோடு கலந்துரையாடலை நடாத்தியிருந்தது. இதில் மார்ச் 12ம் திகதியன்று பங்குகொண்டு எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினோம். சுமுகமான முறையில் மூடிய அறையில் சுயாதீன ஊடக சாட்சியங்கள் முன்னால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தோம்.

ஆயினும்இ இது தொடர்பான எதுவித சுமுகமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதுஇ மீண்டும் பின்புல சக்திகளின் தூண்டுதலுடன் “பிரிந்துசெல்பவர்கள்” என்பதான பாணியில் எம்மீது ஓர் ஊடகப் போர் நிகழ்த்தப்படுகிறது.

ஆனாலும்இ இவற்றுக்கும் அப்பால் நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியதைப்போலஇ எமது அணியின் நிறைவேற்று மையமும்இ ஆணை மையமும் எதுவிதமான முரண்பாடுகளையும் பகிரங்கப்படுத்திஇ எதிரியின் இலக்கு நோக்கிய செயற்பாடுகளுக்கு வகை செய்யாதுஇ பொறுமையாக தொடர்ந்தும் செயற்படுகிறோம் என்பதை எமது மக்களுக்கும்இ தமிழீழ விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைத் தளங்களுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

தமிழீழ விடுதலை நோக்கிய எமது போராட்டப் பாதையில்இ அதே இலக்குடன் பயணிக்கும் தேசியஇ சர்வதேச அமைப்புக்களை இணைத்தும்இ அவற்றுடன் இணைந்தும் எதுவித விட்டுக்கொடுப்பும்இ சமரசமும் அற்ற வகையில்இ இறைமையுள்ளஇ சுதந்திர தமிழீழ தனியரசை அமைக்கும்வரை நாம் தொடர்ந்து பயணிப்போம் என்பதையும் அறுதியிட்டுத் தெரிவிக்கின்றோம்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழீழம்! நாடு கடந்த தமிழீழ அரச கோட்பாடு மேலும் வளர்க!

இவ்வண்ணம்இ

வித்தியா ஜெயசங்கர் (ஜேர்மனி)இ

சசிதர் மகேஸ்வரன் (பிரித்தானியா)இ

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்)

நிறைவேற்றுமையம்

நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான எனது உறுதிமொழி

(சத்தியப்பிரமாணம்)

இறைமையுள்ள தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வகையில் புலம்பெயர் தமிழீழ மக்களால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான மக்கள் பிரதிநிதியாக ஜனநாயக ரீதியில் தெரிவாகியிருக்கும் நான்இ

தற்போது சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தமிழீழத் தாயகத்தை விடுதலை பெறச் செய்துஇ ஐக்கிய நாடுகள் சபையில் இன்று அங்கம் வகிக்கும் ஏனைய தேசிய அரசுகளைப் போல பூரண சுதந்திரமும் இறைமையும் கொண்ட தேசிய அரசாக தமிழீழத்தைப் பரிணமிக்கச் செய்வதற்கான தாயக மக்களின் ஜனநாயக ஆணையையும்இ இதற்காக ஆகுதியாகிய ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களினதும்இ மக்களதும் அளப்பரிய அர்ப்பணிப்புக்களையும் மனதில் இருத்திஇ

எமது தாயகத்தில் நடைபெற்றஇ தொடர்ந்தும் நடைபெறுகின்றஇ தமிழின அழிப்பின் நீண்ட வரலாற்றின் தார்ப்பரியத்தை சர்வதேச உலகுக்கு உணர்த்திஇ

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கும் என்னைத் தெரிவு செய்த எமது மக்களுக்கும் உண்மையாகவும்இ விசுவாசமாகவும் ஆக்கபூர்வமான முறையிலான செயற்பாடுகளில் பங்கேற்றுஇ எந்தச் சக்திகளும் எமது குறிக்கோளைத் திசைதிருப்பிஇ உள்ளக சுயநிர்ணயம் என்றோ அல்லது சிறிலங்கா அரசின் அரசியலமைப்புக்குள்ளோ குறுகச்செய்து எமது மக்களின் ஜனநாயக ஆணையை மறுதலிக்கும் வேறு வடிவங்களுக்குட்படுத்தும் அழுத்தங்களுக்குப் பலியாகாதுஇ

சர்வதேச ரீதியிலான அனைத்துச் சக்திகளும் எமது இலக்கின் தார்மீகத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் எமது இலக்கிற்கேற்ற இராஜதந்திரத்துடன் செயற்பட்டுஇ அதற்கேற்ற வகையில் தாயகத்துடனும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் இருக்கும் தமிழ்த் தேசியச் சக்திகளுடனும் நட்பைப் பேணிஇ எந்தவித பதவியையோஇ அதிகாரத்தையோ எதிர்பார்க்கும் மனநிலைக்கு உட்படாதுஇ இரண்டாம் தலைமுறையை முன்னிலைப்படுத்திஇ முதலாம் தலைமுறையின் பல்வகைப் பலத்தையும் அதன்பின் அணிதிரட்டி தேச எல்லைகள் தாண்டிய எமது பரவுகையின் பலத்தை அடித்தளமாக வைத்துச் செயற்படுவேன் என்று இத்தால் எமது தேசியத் தலைவரின் இலட்சிய உறுதியின்மேல் ஆணையிட்டு தமிழ் மக்களாகிய உங்கள் முன்னால் உறுதிமொழி செய்கின்றேன்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் !

நன்றி-பதிவு

ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்த மக்கள பிரதிநிதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழி சபை குழப்பிகள்! சபாஷ்!! மகாத்மா காந்திகூட ஒத்துழையாமை மூலமே தமது போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பிரதிநிதிகள் செய்வதும் கிட்டத்தட்ட அதைத்தான் என்பதைப் புரிந்துகொண்டால் இதில் முரண்பாடுகள் ஏதும் தோன்றாது. இந்த ஜனநாயக அணியில் மக்களால் விரும்பப்படும் அவர்களால் வாக்களிக்கப்பட்டு உறுப்பினர்களான பலர் இருப்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அணி பலப்படுகின்றது என்ற உண்மையைக் கண்டு அஞ்சி எடுக்கப்பட்ட அவசர முடிவு இது என்பதையே தேசிய ஊடகம் தமிழ் நெட்டின் கருத்து சுட்டிக்காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜனநாயக அணியில் மக்களால் விரும்பப்படும் அவர்களால் வாக்களிக்கப்பட்டு உறுப்பினர்களான பலர் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

ஐயா

தங்களது சில கருத்துக்களில் நா. க.அரசின் தற்போதைய நடவடிக்கைகளை கண்டிக்கும் தன்மை காணப்படுகிறது. இதனால் சில விளக்கங்களை எதிர்பார்க்கின்றேன்.

மக்கள் இவர்களைத்தெரிவு செய்தது எதற்காக?

அதற்கு இவர்கள் உடன்பட்டார்களா இல்லையா?

உடன்பட்டு வந்திருந்தால் அதற்குள் சென்று சத்தியப்பிரமாணம்ஏன் செய்யவில்லை?

ஒரு பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அதே பாராளுமன்றத்துக்கு எதிராக இன்னொரு பாராளுமன்றத்தை தோற்றுவிக்க முடியுமா?

அப்படி தோற்றுவித்தால் முதல் பாராளுமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும்?

மக்களவை மற்றும் அணிகளுக்கு பல வேலைத்திட்டங்கள்இருக்கும்போதும் அத்துடன் மக்களுடனான பல தொடர்பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் இதற்குள்ளும் தாங்கள்தான் இருக்கவேண்டும் என்பதன் சூத்திரமென்ன?

நாம் பல நாடுகளால் தடைசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் இதை உடைத்து செயற்பட இது போன்ற ஒரு திட்டத்தை மக்கள் வேறு வழிகளில்செயற்படுத்தி முயற்சிக்க அனுமதிப்பதில் இவர்களுக்கு ஏன் முடியாதிருக்கின்றது?

Edited by விசுகு

இவர்களுக்கு நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எப்பொதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும் சிங்கள அரசாங்கம் தமக்கு எதிரான பலமான சக்தியாக நாடு கடந்த அரசாங்கத்தையே கணித்துச் செயற்படுவதையும் தமிழ் மக்கள் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதையும் கண்டு அவசர அவசரமாகக் குழுக்களை அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.

பின்னரும் நாடு கடந்த அரசின் தலைமைப் பதவியையும் அதிகார மையத்தையும் கைப்பற்றும் நோக்கில் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டனர். ஆனாலும் சுயமாகச் சிந்திக்க முடியாத உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்தக் 'குழு'வின் அங்கத்தவர்களால் அது இயலாமல் போனதும் புதிதாக ஜனநாயகம் பேசத் தலைப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினரிடம் ஒரு வேண்டுகோள்!

தமிழ் மக்களுக்காகவே போராடி இன்று வதை முகாம்களில் அல்லல் படுகின்ற இளைஞர் யுவதிகளைப் பற்றியோ அல்லது தமிழ் மண்ணில் நிகழும் கொடுமைகள் பற்றியோ பேசுவதற்கு நேரமில்லாத நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும் உடமைகளையும் தாயகத்தில் அல்லலுறும் அப்பாவித் தமிழ் மக்களிடம் வழங்கி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்தியுங்கள்.

கருத்துவேறுபாடுகள் கொள்கைவேறுபாடுகளை மறந்து மக்களை, இன்றைய அவர்களின் நிலைமையை மனத்தில் கொண்டு, மாவீரர்களை-போராளிகளை நினைவில் கொண்டு, சத்தியப்பிரமாணம் எடுத்து உள்ளிருந்து போராடுதல் அழகு.

மாறாக வெளியில் இருந்து சாணி பூசுவதும் குறுக்கே இழுப்பதும் ஒட்டுமொத்த தமிழனத்தையும் சிங்ககளவனின் வேலைகளை இலகுவாக்கும் செயல்களே.

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியப் பிரமாணம் எடுக்காதவரையில் இவர்கள் நாடுகடந்த அரசவைக்குள் அங்கமே அல்லர்.. கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவைக்குள் நுழைந்து ஜனநாயக வழியில் காரியமாற்றியிருக்க வேண்டும். உள்ளிருந்து மாற்றமுடியாது போனால் தங்கள் பதவிகளைத் துறந்து ஏன் எதற்காக என்பதை மக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து வெளியே நின்றுகொண்டு இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவது குழப்பியடிக்கும் வேலையே. :unsure:

இவர்களை வெளியேற்றிய செயல் நல்ல நடவடிக்கைதான். :rolleyes:

ஐயா

தங்களது சில கருத்துக்களில் நா. க.அரசின் தற்போதைய நடவடிக்கைகளை கண்டிக்கும் தன்மை காணப்படுகிறது. இதனால் சில விளக்கங்களை எதிர்பார்க்கின்றேன்.

மக்கள் இவர்களைத்தெரிவு செய்தது எதற்காக?

அதற்கு இவர்கள் உடன்பட்டார்களா இல்லையா?

உடன்பட்டு வந்திருந்தால் அதற்குள் சென்று சத்தியப்பிரமாணம்ஏன் செய்யவில்லை?

ஒரு பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அதே பாராளுமன்றத்துக்கு எதிராக இன்னொரு பாராளுமன்றத்தை தோற்றுவிக்க முடியுமா?

அப்படி தோற்றுவித்தால் முதல் பாராளுமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும்?

மக்களவை மற்றும் அணிகளுக்கு பல வேலைத்திட்டங்கள்இருக்கும்போதும் அத்துடன் மக்களுடனான பல தொடர்பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் இதற்குள்ளும் தாங்கள்தான் இருக்கவேண்டும் என்பதன் சூத்திரமென்ன?

நாம் பல நாடுகளால் தடைசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் இதை உடைத்து செயற்பட இது போன்ற ஒரு திட்டத்தை மக்கள் வேறு வழிகளில்செயற்படுத்தி முயற்சிக்க அனுமதிப்பதில் இவர்களுக்கு ஏன் முடியாதிருக்கின்றது?

வணக்கம் திரு விசுகு

நான் கூறவருவது ஜனநாயகக் குழு எனப்படும் இந்தக் குழு செய்வது சரி என்பதையோ அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கவோ அல்ல.

நான் கூறவருவது இது ஒரு ஜனநாயக நடைமுறை என்பதைத்தான். அதாவது சத்தியப்பிரமாணம் செய்யாது விடுவதைப்பற்றி மாத்திரமே நான் கூறுகிறேன்.

ஒருவர் ஒரு தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் சத்தியப்பிரமாணம் செய்ய மறுப்பதற்கு அவருக்கு ஜனநாயக ரீதியில் உரிமையுண்டு. இப்படியாக சத்தியப்பிரமாணம் செய்ய மறுக்கும் நபரை non-juror என்று கூறுவார்கள். வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அதிக தொலைவு போவானேன்... 1983ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் எம்.பி.க்கள் இலங்கையின் 6வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்துத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இறுதியில் 20ம் திகதி ஒக்டோபர் 1983ல் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டிய கால எல்லையின் இறுதித் தினத்தன்று அவர்களது நாடாளுமன்றப் பதவிகள் இலங்கை அரசால் பறிக்கப்பட்டன. இது ஒரு ஜனநாயகச் செயல்முறையே.

நான் சொல்லவருவது இந்தச் செயல்முறை தவறு என்று எழுதக்கூடாது என்பதைத்தான்.

அதேநேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய மறுப்பதால் தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதுடன் அவர்களது உறுப்பினர்ப் பதவியின் ஆயுட்காலம் முடிவுக்கு வரும் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டே இந்த நடைமுறையில் இறங்கியிருக்க வேண்டும் என்பது யதார்த்தம். தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய மாத்திரமே non-juror என்ற இந்த நடைமுறை. அது தவறல்ல. எதிர்ப்பைப் பதிவு செய்தபின் அவர்களுக்கும் சம்மந்தப்பட்ட அமைப்புக்குமிடையே எந்தத் தொடர்பும் இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை இழந்தவர்களின் பெயர்கள்:

வித்தியா ஜெயசங்கர் (ஜேர்மனி)

சசிதர் மகேஸ்வரன் (பிரித்தானியா)

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்)

தமிழ்நெட் இணையதளம் இவர்களை வைத்து காமடி பண்றதை இவர்கள் உணர்வதாக தெரியவில்லை.

இவர்களை ஜனநாயக அணியென்றும் மற்றவர்களை உருத்திரா அணியென்றும் சித்தரித்து நா.க.த அரசில்

பிரிவினையை ஏற்படுத்த முனைகிறார்கள். இந்த உயிருள்ள கைப்பொம்மைகளைத் தட்டிக் கேட்கும் உரிமை

சம்பந்தப்பட்ட நாடுகளான ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் நாட்டிலிருந்து இவர்களை தெரிவு செய்து

அனுப்பிய தமிழ் மக்களுக்கு உண்டு.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநpதிகள் என்ற அந்தஸ்த்தை இழந்தவர்களின் பெயர்கள்:

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்)

தமிழ்நெட் இணையதளம் இவர்களை வைத்து காமடி பண்றதை இவர்கள் உணர்வதாக தெரியவில்லை.

இவர்களை ஜனநாயக அணியென்றும் மற்றவர்களை உருத்திரா அணியென்றும் சித்தரித்து நா.க.த அரசில்

பிரிவினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இந்த உயிருள்ள கைப்பொம்மைகளைத் தட்டிக் கேட்கும் உரிமை

சம்பந்தப்பட்ட நாடுகளான பிரான்ஸ் நாட்டிலிருந்து இவர்களை தெரிவு செய்து அனுப்பிய தமிழ் மக்களுக்கு உண்டு .

எனது எதிர்ப்பை பலமாக முன்வைத்துள்ளேன். அது தொடரும்.

நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை இழந்தவர்களின் பெயர்கள்:

வித்தியா ஜெயசங்கர் (ஜேர்மனி)

சசிதர் மகேஸ்வரன் (பிரித்தானியா)

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்)

தமிழ்நெட் இணையதளம் இவர்களை வைத்து காமடி பண்றதை இவர்கள் உணர்வதாக தெரியவில்லை.

இவர்களை ஜனநாயக அணியென்றும் மற்றவர்களை உருத்திரா அணியென்றும் சித்தரித்து நா.க.த அரசில்

பிரிவினையை ஏற்படுத்த முனைகிறார்கள். இந்த உயிருள்ள கைப்பொம்மைகளைத் தட்டிக் கேட்கும் உரிமை

சம்பந்தப்பட்ட நாடுகளான ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் நாட்டிலிருந்து இவர்களை தெரிவு செய்து

அனுப்பிய தமிழ் மக்களுக்கு உண்டு.

இதுதான் மிகச் சரியான கருத்து. இவர்களை அந்த 3 நாடுகளிலும் இருந்து வாக்களித்து உறுப்பினராக்கிவிட்ட மக்கள்தான் காரணம் கேட்க வேண்டும். அங்கிருக்கும் மக்களால் அவர்களை நிச்சயம் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கும். தம்மால் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு அங்கு வசிக்கும் மக்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள் என ஊகிக்கலாம்!

ஒரு பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி மக்கள் ஒருவரை தெரிவு செய்தாலும், அவர் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு இணங்கியே ஆகவேண்டும். அந்த சட்டதிட்டங்களை அவர் மீறும் பொழுது அவர் மீது நடவடிக்கை எடுக்க பாராளுமன்றத்திற்கு முழு உரிமை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நா.க.த அரசின் சத்தியப்பிரமாண நகல் தரவிறக்கம்

http://www.4shared.com/document/Gdiz6fOw/Sathiyapiramanam.html

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

நா.க.த.அரசின் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஐரோப்பிய நாடொன்றிலுள்ள தேர்தல் பிரிவொன்றில் முக்கிய பொறுப்பு ஒன்று எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது என்ற முறையில் வேட்பாளர் பெயர் தாக்கல் செய்வது சம்பந்தமான சில திருத்தங்களைச் செய்ய வேண்டி நானெடுத்த முயற்சிகள் அங்கு முற்கூட்டியே தமிழ் தேசியத்திற்கு எதிரான அணியினர் சில புல்லுருவிகளை களமிறக்கி தேர்தல் ஆணையத்தில் செயற்படவைத்திருந்த காரணத்தால் கைகூடவில்லை. உதாரணமாக வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் விண்ணப்பப் படிவத்திலேயே ஒரு உறுதிமொழியை எடுத்து அப்போது இருந்த மதியுரைக்குழுவின் இறுதி அறிக்கையில் வழக்கப்பட்டீருந்த கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று கையெழுத்திட்டு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று நான் முன்வைத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உறுதி மொழி எடுக்காமல் வெளியில் இருந்து கூக்குரல் இட்டதை தவிர வேறேதும் செய்யவில்லை.வட அமெரிக்காவில் இவர்கள் ஒரு குழுவாக உள்ளே நுழைந்து பதவியை பிடிக்க மிகுந்த பிரயாசை பட்டார்கள்.முயற்சி தோல்வியடையவே உறுதி மொழி எடுக்காமல் நேரத்தை வீணடித்தார்கள். இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏன் வெளிநடப்பு செய்கிறோம் என்ற விளக்கமும் கொடுக்கப்படவில்லை..பாராளுமன்றத்தில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளை வெளியில் கதைத்து கேலிக்கூத்தாக்கி விட்டார்கள்.இனி பதவியில் இருந்து மக்களுக்கு ஒன்றும் செய்யப்போவதும் இல்லை.தானாக பதவி விலகி மற்றவர்களுக்கு முன்னுருமை கொடுக்கவும் இல்லை.ஆகவே பதவியை விலக்கி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர்களை இணைப்பது தான் ஆக்க பூர்வமானது.

... ...

Edited by Nellaiyan

........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணாக ஒருவருடகாலத்தை வீணாக்கி விடார்கள். இவர்களை வெளியே போடுவதே நல்லது. எம தமிழ் மக்களை பொறுத்தவரை தற்கால சூழ்நிலையில் ஒருவருடம் என்பது பத்து வருடத்திற்கு சமன். நாடுகடந்த அரசு மிக விரைவாக செயல்பட வேண்டும். மக்கள் நிறையவே ஆதரவும் உதவியும் வழங்க தயாராக உள்ளார்கள்.

ஊடகம் என்பது பல விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். ஒரு சில இணையதளங்களை சொந்த லாபங்களுக்காக நடத்துபவர்களும், ஒருசில கட்டுரைகளை வரைபவர்கள் எல்லாம் ஊடகவியலார்கள் ஆகிவிட முடியாது. ஊடகம் ஊடகவியலார் என்பவர்கள் சமூகத்தின் மக்களின் காவல் நாய்கள் (Watchdog) . நடுநிலையாக செய்திகளை எடுத்து மக்களுக்கு சொல்லுவதே அவர்களின் கடமை, மக்கள் எது சரி பிழை என்று முடிவு எடுப்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Journalism_ethics_and_standards

Journalism ethics and standards

Journalism ethics and standards comprise principles of ethics and of good practice as applicable to the specific challenges faced by journalists. Historically and currently, this subset of media ethics is widely known to journalists as their professional "code of ethics" or the "canons of journalism".[1] The basic codes and canons commonly appear in statements drafted by both professional journalism associations and individual print, broadcast, and online news organizations.

While various existing codes have some differences, most share common elements including the principles of — truthfulness, accuracy, objectivity, impartiality, fairness and public accountability — as these apply to the acquisition of newsworthy information and its subsequent dissemination to the public

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் மேலாக.....

நாடு கடந்த அரசு என்று ஒன்று இருந்தால் அது பலமானதாக ஒரு அணியாக ஒருமித்த குரலில் பேசுவதாக மட்டுமே இருக்கவேண்டும். கட்சி சார்பற்று தனமனித சார்பற்று தமிழ் மக்களின் விடுதலை பற்றி மட்டுமே அது பேசவேண்டும்.

இதில் இரண்டாவது அணி என்று ஒருவர் சிந்திக்கின்றார் என்றால்....?

அவர் முதலாவதையும் தமிழரது இலட்சியப்பயணத்தையும் கேள்விக்குறி ஆக்குகின்றார் என்றே அர்த்தம். அதன் விளைவுகளை அவர் அறிந்தே செய்கின்றார்.

இங்கு நாடுகடந்த அரசை ஆதரித்து எழுதும் அனைவரும் தமிழீழத்தையும் தலைவரையும் மாவீரர்களையும் நேசித்தவர்கள் நேசிப்பவர்கள்.

எனவே இந்த குழிபறிப்புக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழத்தையும் தலைவரையும் மாவீரர்களையும் உதாசீனப்படுத்துகிறார்கள் அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றே அர்த்தம்.

அதன் விளைவுகளை அவர்களுக்கு நாம் எடுத்துச்சொல்லவேண்டும். விலகியிருக்க, உபத்திரவம் தராமலிருக்க, தடைகளைப்போடாதிருக்க,...................... எச்சரிக்கவேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசியம் எங்களுக்கு ஒரு பலமான அமைப்பு அதைக்குழப்ப எத்தனிக்கிறவர்கள் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள். அல்லது உங்களால் செயலாற்ற முடிந்த பக்கங்களை வலுப்படுத்துங்கள். அவற்றை விட்டுவிட்டு மற்றவர் பாதையில் குறுக்கே நின்று பலவீனப்படுத்தாதீர்கள். நாடு கடந்த தமிழீழ அரசை பலவீனப்படுத்தி யாரும் தமிழருக்கு வலிமையைச் சேர்க்கமுடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் மட்டுமல்ல அதனைக் கொண்டியக்கும் மற்றையோரிலும் மிகுந்த அபிமானம் இருக்கிறது. இக்கருத்தை அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாழக்கிழமைதான் நாடுகடந்தஅரசின் பிரதமரால் வந்து சேருங்கள் ஒன்றாக உழைப்போம் என்று அறிக்கைவந்தது. ஆனால் ஞாயிறே அதாவது 3 நாளில் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுகிறது. அப்படியாயின் விடுக்கப்பட்டது வரவேற்கவா? அல்லது அவர்கள் மாறுவதற்க அவகாசம் கொடுக்கக்கூடாது என்று முன்பே முடிவு எடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதா?

பார்த்தால் சந்தேகமாத்தான் கிடக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.