Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் பதவிகளை இழந்தனர் சபை குழப்பிகள்!!!

Featured Replies

  • தொடங்கியவர்

யாப்பே பிழை என்று சொல்லிதான் அவர்கள் சத்திய பிரமாணம் எடுக்க மறுக்கிறார்கள், பிறகு அந்த யாப்பின்மீதே சத்தியபிரமானம் எடு என்றால் எப்படி எடுப்பது,

அப்ப ஏனுங்கோ காலக்கெடு முடியிற நேரத்திலை தங்கட ஊடகங்களில் மட்டும் அந்த சின்னப்புள்ளையளை அறிக்கைவிட்டு உறுதியுரை எடுத்தவை???

முதலில் இந்த யாப்பு உறுப்பினர்களினால் விவாதித்து ஏற்று கொள்ள பட்டதா? விவாதத்துக்காக உருவாக்க பட்ட அவைகளில் யாப்பை அங்கிகரிக்கும் அவையாக உருமுடித்தது எதற்காக?

உறுப்பினர்களால் விவாததிக்கப்பட்டுத்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சரத்தாக விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதே! இதில் சனநாயகப் பூச்சாண்டிகளும் வாக்களித்தனரே!

இறுதி வாக்கெடுப்பில் சனநாயகப் பூச்சாண்டிகள் பங்கெடுக்கவில்லை.

வெளிநடப்புச் செய்தவை.

ஏன் தெரியுமோ? யாப்பு பிடிக்காமல் இல்லை. ஒரு உறுப்பினர் மீதான அச்சுறுத்தல் ஒன்றைக் கண்டித்தே வெளிநடப்பு நடந்தது.

ஏதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றை அவையில் உள்ள உறுப்பினர்களின் ஆதரவு மட்டும்தான் கணக்கில் எடுக்கப்படும் (வெளியேறிச் சென்றவர்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.) அந்த வகையிலேயே யாப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.

யாப்பு மீதான விவாதமும் அதற்கான வாக்கெடுப்பும் நடாத்தப்படவே நாடு கடந்த தமிழீழ அரசிற்கான நாடாளுமன்ற அமர்வுகள் திட்டமிடப்பட்டு அவ்வாறே நடைபெற்றது.

விவாதம் நடைபெற்ற நாளில் யாப்பு அங்கிகரிக்கக்கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கோ??

இதற்குள் சோல்பரி யாப்பு இருப்பது போல், இந்த யாப்பை எழுதியவர் அதற்கு தனது பெயர்தான் வைக்க வேண்டும் என அடம்பிடித்தது வேறு நடந்தது, நல்லவேளை அதுவும் ஏற்கபட்டிருந்தால், கந்தசாமியின் யாப்பு என்றுதான் வந்து இருக்கும்(உண்மைபெயர் மறைக்கபட்டு இருக்கிறது)

ஏனப்பு சேம் சைட் கோல் போடுறீர்.???

யாப்பை எழுதியவர்கள் யார் தெரியுமோ?

நோர்வேயைச் சேர்ந்த முரளியும் கனடாவைச் சேர்ந்த திருச்செல்வமும்.

இவர்கள் இருவரும் உறுதியுரை எடுக்காதவர்கள் பட்டியலில். சனநாயக அணி எண்டு தங்களை அழைத்துக் கொள்ளும் ஆக்கள் இவை.

கந்தசாமிக்குப் பதில் முரளியா? திருச்செல்வமா?

பிரதமரை தெரிவு செய்வதற்கு, மூன்றில் ஒரு பங்கு போதுமாம், அகற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வேண்டுமாம், இது என்ன விதமான ஜனநாயகம், .

தலைமை அமைச்சரைத் தெரிவு செய்ய இரண்டில் ஒரு பங்கு பெரும்பான்மை தேவை. மூன்றில் ஒரு பங்கு என்பது உமது கற்பனை

தலைமை அமைச்சரைப் பதவியிறக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பது கொஞ்சம் உறுத்தலான விடயம்தான். இருந்தும் அவையில் இது பெரும் பான்மையுடன் உறுப்பினர்களால் ஏற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவரிடம் அதிகாரம் குவிக்க பட கூடாது என மூண்று துணைபிரதமர்கள் தேர்தெடுக்க பட வேண்டும் என்றால், தேர்தெடுக்க பட்ட பிரதமரே துணை பிரதமர்களையும் தேர்தெடுப்பார்களாம். அவரே செய்வார் என்றால் எதுக்கு மூன்று வேண்டும். சரி .

எதற்கு மூன்று வேண்டும்?? அதை யாப்பில் இணைத்தவர்கள் அதனைத் உருவாக்கியவர்கள். அரச அமைச்சரவையில் இருப்பவர்கள் தலைமை அமைச்சருடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படியென்றாலேயே முரண்பாடுகள் இல்லாமல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். மூன்று துணைத் தலைமை அமைச்சர்கள் தெரிவு என்பது நல்ல நோக்கு சனநாயகம் என்பதற்காக யாப்பில் இணைக்கப்படவில்லை. தமது ஆட்களை உள்ளே கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி. இதற்கான வாக்கெடுப்பில் இந்த சனநாயக பூச்சாண்டிகளும் பங்கு பற்றி எதிர்த்து வாக்களித்த பின்னரே நிறைவேற்றப்பட்டது. (3 துணை தலைமை அமைச்சர்கள் வேண்டும் என்பதற்கு 42 பேர் ஆதரவாகவும் 41 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

அவர்களைத் தலைமை அமைச்சர் தெரிவு செய்யும் உரிமை தலைமை அமைச்சரிடமா அல்லது அவையிடமா வழங்குவதற்கு என்ற வாக்கெடுப்பிற்கு தலைமை அமைச்சரின் தெரிவிற்கு ஆதராவக 46 பேரும் 41 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.)

வென்றவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் 20000வாக்கு எடுத்து இருப்பார் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர் வெறும் 100தான் எடுத்து இருப்பார், அவர்களை வெளியேற்றுவதான் மூலம் பெருமளவு மக்களை நாடுகடந்த அரசில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்பதுதான் எனது கருத்து, சரி பிழைகளை பேசி ஒன்றினைப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதுதான் எனது கருத்து, நான் சொன்னால் என்ன கேட்கவாபோறாங்கள். :D ஏன் ஒண்றினைக்க வேண்டும் என்றால் அவர்களும் பெருமளவிலான மக்களால் தெரிவு செய்ய பட்டவர்கள்தான்.

இறுதியாக சிறிலங்கா நாடாளுமன்றிற்காக நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் மக்களின் அதிக படியான விருப்பு வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர் பியசேன என்பவர்.

ஆனால் இவர் செய்தது என்ன? தேர்தல் முடிந்து சில காலத்திற்குள் அரச தரப்பிற்குத் தாவியது.

இவர் அரச தரப்பிற்கு தாவியதை வைத்து இவருக்கு வாக்களித்து இவரைத் தெரிவு செய்த மக்கள் அனைவரும் அரசிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

தனக்கு வாக்களித்த மக்களின் எதற்காக வாக்களித்தார்கள் என்பதை கவனத்திற் கொள்ளாது தனது சுயநலத்திற்காக அரச தரப்பிடம் அவர் சோரம் போய்விட்டார்.

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நடைபெற்றபோது எல்லோரும் ஒற்றுமையாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்து தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் மக்களின் விருப்பிற்கு மாறாகவே சனநாயக பூச்சாண்டி காட்டிக் கொள்பவர்கள் செயற்பட்டனர்.

தற்போதைய யாப்பினை ஒரு சிறந்த யாப்பாக தானே ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று நா.க.த.அரசிற்கான அவைத் தலைவர் பொன்.பாலராஜன் அவர்கள் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற கருத்தாடலில் தெரிவித்திருக்கிறார். ஆனால் யாப்பினைத் திருத்தியமைப்பதற்கான வாய்ப்புக்கள் அந்த யாப்பிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த வாய்ப்பினைப் திருத்தம் வேண்டும் என்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

யாப்பில் திருந்தங்களைச் செய்ய யாப்பே வாய்ப்பு வழங்கியிருக்கும்போது ஏன் இந்த சனநாயகப் பூச்சாண்டிகள் அதற்கு முயற்சிக்கவில்லை????

நாடாளுமன்ற உறுப்பினருக்கான உறுதியுரையினை எடுத்துவிட்டு வாருங்கள். பிரச்சினைகளைப் பேசித்தீர்ப்போம் என அவைத் தலைவர் பொன். பாலராஜன் அவர்களால் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவரின் வேண்டுகோளை ஏற்று சிலர் உறுதியுரையை எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையிலேயே உறுப்பினர்கள் இருவாரத்தினுள் உறுதியுரையினை எடுக்கவேண்டும் அல்லாதுவிட்டால் தாங்களாகவே தமது உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாக கருதப்படுமென அவைத் தலைவரால் உறுப்பினர்களிற்கு பெப்ரவரி 24ம் நாள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளையோர்கள் மூவரை முன்னிறுத்தி சனநாயக அணி என்ற பெயரில் பிரிவினை மக்களின் விருப்பிற்கு மாறாக உருவாக்கப்பட்டது. எனினும் நல்லெண்ண நோக்கோடு உறுதியுரைக்கான காலக்கெடு மார்ச் 25ம் நாள் வரை நீட்டிக்கப்பட்டது.

எனினும் சனநாயக அணி எண்டு சொல்லிக் கொள்பவர்கள் மார்ச் 25ம் நாள் வரை அவைத் தலைவருக்கு தமது உறுதியுரையினை அறிவிக்கவில்லை. மாறாக 25ம் நாள் அன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஒரு உறுதியுரையையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே இவர்கள் தமது உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (இவ்வாறு பதவியிழந்த உறுப்பினர் ஒருவருக்கு அனுப்ப்பட்ட அஞ்சல் ஒன்றே தமிழ் நெட் இணைத் தளத்தில் உள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக நாடு கடந்த அரசோ அல்லது அவைத் தலைவரோ எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

  • Replies 87
  • Views 7.6k
  • Created
  • Last Reply

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் நீக்குவதற்க வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

ஆனால் இந்தக் கும்பலை இயக்கும் சிங்கள நெட் கனவானும் நந்கோபன் கூட்டமும் கோத்தபாயவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலைப்புலிகளை தடைசெய்விப்பதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் தேசியம் பேசிக் கொண்டே செய்தது.

விடுதலைப்புலிகளின் தடையை இறுக்குவதன் மூலம் அல்லது மீளக் கொண்டுவரும்படி செய்துவிட்டு தாங்கள் தான் விடுதலைப் புலிகளின் உண்மையான செயற்பாட்டாளர்கள் என்று காட்டிக் கொண்டு நாடுகடந்த அரசுக்குள் வந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே நாடுகடந்த அரசுக்குள்ளும் இருக்கிறாhர்கள் எனவே நாடுகடந்த அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அதை தடை செய்விப்பது தான் கோத்தபாயவின் சதித்திட்டமாகும்.

40 ஆயிரம் மாவிரர்கள் செய்த தியாகத்தின் அத்மபலம் இந்த நாசகார கும்பலை தோற்கடித்துவிட்டது

இனியாவது இவர்களின் பின்னால் நின்றவர்கள் நிற்பவர் இவர்களின் உண்மையான நோக்கத்தையும் உணாந்து இவர்களை ஓரங்கட்டிவிட்டு நாடுகடந்த அரசை பலப்படுத்த முன்வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

யாப்பே பிழை என்று சொல்லிதான் அவர்கள் சத்திய பிரமாணம் எடுக்க மறுக்கிறார்கள், பிறகு அந்த யாப்பின்மீதே சத்தியபிரமானம் எடு என்றால் எப்படி எடுப்பது, முதலில் இந்த யாப்பு உறுப்பினர்களினால் விவாதித்து ஏற்று கொள்ள பட்டதா? விவாதத்துக்காக உருவாக்க பட்ட அவைகளில் யாப்பை அங்கிகரிக்கும் அவையாக உருமுடித்தது எதற்காக? இதற்குள் சோல்பரி யாப்பு இருப்பது போல், இந்த யாப்பை எழுதியவர் அதற்கு தனது பெயர்தான் வைக்க வேண்டும் என அடம்பிடித்தது வேறு நடந்தது, நல்லவேளை அதுவும் ஏற்கபட்டிருந்தால், கந்தசாமியின் யாப்பு என்றுதான் வந்து இருக்கும்(உண்மைபெயர் மறைக்கபட்டு இருக்கிறது) பிரதமரை தெரிவு செய்வதற்கு, மூன்றில் ஒரு பங்கு போதுமாம், அகற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வேண்டுமாம், இது என்ன விதமான ஜனநாயகம், ஒருவரிடம் அதிகாரம் குவிக்க பட கூடாது என மூண்று துணைபிரதமர்கள் தேர்தெடுக்க பட வேண்டும் என்றால், தேர்தெடுக்க பட்ட பிரதமரே துணை பிரதமர்களையும் தேர்தெடுப்பார்களாம். அவரே செய்வார் என்றால் எதுக்கு மூன்று வேண்டும். சரி ஜேர்மனி சுவிஸ்,பிரான்சில் அவர் நியமித்த தேர்தல் ஆனையாளர்கள் யார் என்று பார்த்தால் இயக்கத்தில் இருந்து ஒழுங்காற்றல் நடவடிக்கைகாக தலைவரால் விலத்தி வைக்க பட்டவர்கள், மக்களின் பணத்தை சுற்ரியவர்களை இதற்கு நியமிக்க வேண்டிய தேள்வை என்ன? சரி இயக்க சாயல் வர கூடாது என்பதற்காக அவர் தன்னுடன் படித்தவர்கள், தனக்கு தெரிந்தவர்ளை நியமித்தார் என்றால் அவர்களது பின்மூலம், அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும். கடைசியில் அவர்கள் கூட வந்து நின்றது அனைத்துலக செயகத்திடம்தான் தேர்தலை நடத்தி தரும்படி. மக்களது தொடர்பு இருந்தால்தானே மக்கள் தேர்தல் நடத்த முடியும். மக்களை ஏய்தவர்கள் என்ன முகத்துடன் மக்கள் முன் செல்வார்கள், அவர்களை பற்றி தெரிந்தவர்களுக்கு, நாடுகடந்த அரசின் நம்பத்தன்மை அங்கே அடிபட்டு போகும்,

வென்றவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் 20000வாக்கு எடுத்து இருப்பார் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர் வெறும் 100தான் எடுத்து இருப்பார், அவர்களை வெளியேற்றுவதான் மூலம் பெருமளவு மக்களை நாடுகடந்த அரசில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்பதுதான் எனது கருத்து, சரி பிழைகளை பேசி ஒன்றினைப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதுதான் எனது கருத்து, நான் சொன்னால் என்ன கேட்கவாபோறாங்கள். :D ஏன் ஒண்றினைக்க வேண்டும் என்றால் அவர்களும் பெருமளவிலான மக்களால் தெரிவு செய்ய பட்டவர்கள்தான்.

சித்தன் உங்கள் கருத்து மிகவும் வேடிக்கைத் தனமாக இருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு நடவடிக்கைக் கட்டமைப்பு என்ற ரீதியில் தான் நோக்கப்பட வேண்டும். அது ஒரு முழுமையான அரச கட்டமைப்பு அல்ல. அரச கட்டமைப்பின் சாயல் அதற்கு கொடுக்கப்பட்டிருப்பதானது தமிழீழ தேசத்திற்கான ஒரு அரசை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை காட்டத்தான்.

ஒரு தேசத்திற்கான முழு அதிகார அரச கட்டமைப்புக்குக்கூட 3 பிரதமர்.. நாலு அறங்காவலர் வைக்கிறது.. உலகில் எந்த ஜனநாயக நடைமுறையின் கீழும் நிகழ்வில் இல்லை. வேண்டும் என்றால் அவை தமிழ் கோவில்களுக்கும் அங்கிருக்கும் ஜனநாயகத்துக்கும் பொருந்தலாம். நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கக் கூடிய தகமையில் உள்ள ஒருவரை இடைக்கால யாப்பு பிரதமராக தெரிவு செய்வது ஒரு அடையாளப் பதவியுடன்.. அந்த கட்டமைக்குரிய அதிகாரங்கள் கொண்ட ஒருவராக அவர் விளங்குவாரே அன்றி அவரே தமிழீழ அரசுக்கான பிரதமர் ஆகமாட்டார்.

ஜெயனந்தமூர்த்தி உள்ளிட்டவர்கள்.. சிறீலங்காவில் மக்கள் வாக்களிப்பில் பாராளுமன்றம் போய்.. அந்த மக்களின் விருப்புக்கு ஏற்பவா செயற்பட்டு கொண்டு இருக்கின்றனர். இல்லையே. அவர் வெளிநாட்டு பயணங்களை மக்களின் நலன் என்ற போர்வையில்.. அரச பணத்தில் செய்துவிட்டு அப்படியே அகதி அந்தஸ்து வாங்கிவிட்டார். கருணா பிள்ளையானால் ஆபத்து என்றது ஒரு சாட்டு. கருணா பிள்ளையானால் நிறைய ஆபத்துக்களை சந்தித்தவர்கள் இப்போதும் தாயகத்தில் இருக்கின்றனர். மக்களுக்கு பணிபுரிகின்றனர். தமிழ்நெட் ஜெயனந்தமூர்த்தி போன்றோரின் கருத்துக்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாடு கடந்த அரசுக்கும் அளிக்க வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தல் நடந்த போது இவர் நெடியவன் அணி.. அவர் காஸ்ரோ அணி.. என்று எவரும் சொல்லவும் இல்லை. அப்படி வெளிப்படையாகச் சொல்லி போட்டி இடவும் இல்லை. இட்டிருந்தால் அப்போதே மக்கள் இவர்களை நிராகரித்திருப்பர். அன்றைய கவலைக்குரிய சூழலில் மக்கள் தமது தமிழீழ தாகத்தை தீர்க்க ஒரு அமைப்பு வேண்டும் என்ற அவசியத்தை கருத்தில் கொண்டு வாக்களித்தனரே அன்றி வேறல்ல. ஜெயனந்தமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்ததால்.. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். ஆனால் அவர் அந்த நம்பிக்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கி இருக்கிறார். இப்படித்தான் மற்றவர்களும்.

மின்னல் குறிப்பிட்டது போல... இது ஒரு நிரந்தர யாப்பல்ல. இது ஒரு ஆரம்ப கட்ட இடைக்கால யாப்பு. எதிர்காலத்தில் யாப்பில் திருத்தங்கள் கொண்டு வர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி எமது அரச கட்டமைப்பு பற்றி மக்கள் தீர்ப்பும் அவசியம். வெறுமனவே ஜனநாயக அணி என்போர் மக்களுக்காக முடிவெடுக்க முடியாது. மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட்டே இறுதி அரச கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். ஜனநாயகம் என்பது மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் அல்ல. மக்கள் எந்தளவுக்கு ஒரு அரசில் பங்களிக்கிறார்கள் தங்கள் பிரதிநிதிகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதில் தான் உள்ளது. இதனை ஜனநாயக அணி என்ற குழப்படி கும்பல் உட்பட அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். தேர்தலில் கள்ள வாக்கு போட்டுவென்று விட்டு மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிய முடியாது. மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் தொடர்ந்து பாத்திரமாக இருக்கிறார்களா என்றும் நோக்க வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியை கொண்டிருக்கவில்லை. ஜனநாயக நாடு என்று சொல்லும் சிறீலங்காவில் கூட ஜனாதிபதியை யாரும் கேள்வி கேட்கவோ.. அகற்றவோ முடியாது. அவரே பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். மக்களுக்கு மட்டுமே அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியும். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால யாப்பில் பிரதமர் பிரதிநிதிகள் சபைக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் 3இல் இரண்டு பெரும்பான்மை கொண்டு அவரை அகற்றவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள் விரும்பாவிட்டாலும் 3 இல் இரண்டு பங்கு பிரதிநிதிகள் விரும்பினால் பிரதமரை அகற்றலாம். இது சில சமயங்களில் மக்களின் விருப்புக்கு மாறாக கூட நடக்கலாம். அந்த வகையில் மக்கள் சார்ப்பிலும் இந்த யாப்பு தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் இருக்கும். அதற்காக மக்கள் போர்க்கொடி உயர்த்தவில்லை. காரணம்.. மக்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. இன்றைய பலமுனை அழுத்தங்கள் மத்தியில் தமிழீழ உச்சரிப்பையே பலர் மறந்து வரும் நிலையில் தமிழீழ தேசம் சார்ந்து ஒரு அடையாள அதிகாரக் கட்டமைப்பை நிறுவி அதனை சர்வதேச அரங்கு அறிய இயக்குவதில் உள்ள சிரமத்தை. அந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.

எனவே அணி பிரிப்பு.. ஜனநாயகம் என்று... இப்படித்தான் 1990 இல் ஜனநாயக வழியில் மத்தியில் கூட்டாட்சி வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி என்று சொல்லி ஒருத்தர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்று ஒன்றை வைச்சு வீணை வாசிச்சார். இப்ப அது தந்தி அறுந்து.. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிலைக்குள் மடிந்து கிடக்கிறது. வடக்குக் கிழக்கு பிரிந்து கிடக்கிறது. சுயாட்சி.. வங்கக் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது. தயவுசெய்து நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் அதே கதியை உருவாக்காமல் விட்டாலே போதும்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை குழப்ப எவரையும் அதற்குள் வைத்திருக்க வேண்டியதில்லை என்பதில் மக்கள் அதன் பிரதமருக்கு சொல்ல தயாராகவே இருக்கின்றனர். காரணம் மக்களுக்கு தேவை.. தமிழீழ தாயகமே அன்றி.. 3 துணைப் பிரதமரும்.. பிரதமரை எப்படி தூக்கி எறியிறது.. எப்படி அதற்கு சண்டை போடுறது.. எப்படி நாலு அறங்காவலர் வைக்கிறது... எப்படி மிச்ச காசை சுருட்டிறது... எப்படி எதிரிக்கு வால் பிடிக்கிறது... என்பதல்ல தேவை..! இதய சுத்தி கொண்ட தாயக விடுதலையை எப்போதும் நேசிக்கும் பிரதிநிதிகளேயே.. பிரச்சனைகளை அறிவுபூர்வமாக கட்டமைப்பை பலவீனப்படுத்தாது அணுகும் பிரதிநிதிகளையே மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்புக்கு எதிரானவர்கள் தொடர்ந்து மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியாது.. ஜனநாயக உலகில்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் நீங்கள் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. யாழ்களத்திலும் தமிழ்த்தேசியவாதிகளே(சித்தன் உட்பட) அதிகம் பேர் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருடைய ஆசையும் தமிழினம் தனித்துவத்துடனும் கௌரவத்துவடனும் வாழ்வதற்கான தமிழீழத் தனியரசை அமைப்பதே.இந்தத் திரியில் கருத்து எழுதியவர்களில் 80 வீத்திற்கு அதிகமானவர்கள் உருத்திரகுமாரனின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் ; யாப்பினை ஏற்று சத்தியப் பிரமாணம் எடுக்காதவர்கள் பதவிகளை இழந்தது நியாயமானதே என்றே கருதுகிறார்கள்.(அவர்கள் பதவி இழந்ததுக்கு அவர்கள் சுயமாக இயங்காததே காரணம்.)உங்களுடைய நோக்கமும் எங்களுடைய நோக்கமும் ஒன்றேதான் .ஆக பெரும்பாலானவர் ஆதரிக்கும் ஒரு விடயத்திற்கு எதிராக ஏன் கருத்தெழுதுகிறீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.இது தான் உஙகள் ஜனநாயகமோ?(ஜனநாயக அணியினைச் சேர்ந்தவர்கள் பலர்(உங்களுக்கத் தெரிந்த வரையில்) மே 19 இற்கு முதல் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக கடுமையாகச் செயற்பட்ட காரணத்தினால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பதில் தவறில்லை.(ஆயுதம் எடுத்துப் போராடியவர்களே குத்துக்கரணம் அடித்திருக்கும் பொழுது இவர்கள் சாதாரணமானவர்கள்)ஆனால் அவர்களை .இயக்குபவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்களாக இல்லை என்பதும் யதார்தத்தக்கு மாறாக சிந்திக்கிறார்கள் என்பதும். கவலைக்குரியது.தற்போதைய நிலையில் நா.க. அரசை குழப்ப முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடியவர்கள் இல்லை.

இங்கு கருத்து எழுதியதில் அனேகர் நெடியவன் அணியினரை விலக்கியது நல்ல விஷயம் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

இன்றுள்ள அனேக தமிழ் ஊடகங்கள் இருப்பது நெடியவன் அணியினரின் கைகளில்.

அந்த ஊடகப் பரப்புரைகளை மீறி நாடு கடந்த தமிழீழ அரசால் எதிர்நீச்சல் போட முடியுமா? சந்தேகம்தான்.

என்னுடைய ஊகம், நாடு கடந்த தமிழீழ அரசு வேறு வழியில்லாமல் இவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள்.

தமிழ்நெட் ஜெயசந்திரன் மாத்திரமின்றி மற்றும் இன்றுள்ள அநேக தமிழ் ஊடகவியலாளர்கள் நெடியவன் அணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்களில்தான் இருக்கிறார்கள். தமிழ் நெட்டின் ஆங்கில மற்றும் தமிழ் (சேரமான்) கட்டுரைகள் நா.க.த.அரசை உலுக்கியெடுக்கும்.

ஊடகங்களின் வலிமை யாருக்குத் தெரிகிறதா இல்லையோ நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தெரியும்.

இதனால் நெடியவன் அணியைப் பகைத்துக்கொள்ள முன்வர மாட்டார்கள். இந்த அணியினர் மீண்டும் இணைத்துக்கொள்ளப் படுவார்கள். அல்லது இவர்களை நாம் விலத்தவில்லையே என்ற அறிவிப்பு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் நீங்கள் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. யாழ்களத்திலும் தமிழ்த்தேசியவாதிகளே(சித்தன் உட்பட) அதிகம் பேர் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருடைய ஆசையும் தமிழினம் தனித்துவத்துடனும் கௌரவத்துவடனும் வாழ்வதற்கான தமிழீழத் தனியரசை அமைப்பதே. இந்தத் திரியில் கருத்து எழுதியவர்களில் 80 வீத்திற்கு அதிகமானவர்கள் உருத்திரகுமாரனின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் யாப்பினை ஏற்று சத்தியப் பிரமாணம் எடுக்காதவர்கள் பதவிகளை இழந்தது நியாயமானதே என்றே கருதுகிறார்கள்.(அவர்கள் பதவி இழந்ததுக்கு அவர்கள் சுயமாக இயங்காததே காரணம்.)உங்களுடைய நோக்கமும் எங்களுடைய நோக்கமும் ஒன்றேதான் .ஆக பெரும்பாலானவர் ஆதரிக்கும் ஒரு விடயத்திற்கு எதிராக ஏன் கருத்தெழுதுகிறீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.இது தான் உஙகள் ஜனநாயகமோ?(ஜனநாயக அணியினைச் சேர்ந்தவர்கள் பலர்(உங்களுக்கத் தெரிந்த வரையில்) மே 19 இற்கு முதல் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக கடுமையாகச் செயற்பட்ட காரணத்தினால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பதில் தவறில்லை.(ஆயுதம் எடுத்துப் போராடியவர்களே குத்துக்கரணம் அடித்திருக்கும் பொழுது இவர்கள் சாதாரணமானவர்கள்)

ஆனால் அவர்களை .இயக்குபவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்களாக இல்லை என்பதும் யதார்தத்தக்கு மாறாக சிந்திக்கிறார்கள் என்பதும். கவலைக்குரியது. தற்போதைய நிலையில் நா.க. அரசை குழப்ப முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடியவர்கள் இல்லை.

இதில் 2 விடயங்களுக்கு விளக்கம் தரவிரும்புகின்றேன்

1 - ருத்திரகுமாரை நாடுகடந்த அரசின் முதல்வராக மட்டுமே ஏற்கின்றேன். தலைவராக அவர் நீண்டதூரம் உழைக்கவேண்டும்.

2 - முன்பு நாட்டுக்காக வேலை செய்தவர்களும் போராளிகளும் தமது இலட்சியத்திலிருந்து விலகிவிட்டதாக நான் கருதவில்லை. நாடுகடந்த அரசை நம்புகிறார்களில்லை. எனவே நாடுகடந்த அரசு என்கின்ற திட்டம் மக்களால் முன் வைக்கப்பட்டதால் அதிலிருந்து மட்டுமே விலகியிருக்க கேட்கின்றேன்.

இங்கு கருத்து எழுதியதில் அனேகர் நெடியவன் அணியினரை விலக்கியது நல்ல விஷயம் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

இன்றுள்ள அனேக தமிழ் ஊடகங்கள் இருப்பது நெடியவன் அணியினரின் கைகளில்.

அந்த ஊடகப் பரப்புரைகளை மீறி நாடு கடந்த தமிழீழ அரசால் எதிர்நீச்சல் போட முடியுமா? சந்தேகம்தான்.

என்னுடைய ஊகம், நாடு கடந்த தமிழீழ அரசு வேறு வழியில்லாமல் இவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள்.

தமிழ்நெட் ஜெயசந்திரன் மாத்திரமின்றி மற்றும் இன்றுள்ள அநேக தமிழ் ஊடகவியலாளர்கள் நெடியவன் அணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்களில்தான் இருக்கிறார்கள். தமிழ் நெட்டின் ஆங்கில மற்றும் தமிழ் (சேரமான்) கட்டுரைகள் நா.க.த.அரசை உலுக்கியெடுக்கும்.

ஊடகங்களின் வலிமை யாருக்குத் தெரிகிறதா இல்லையோ நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தெரியும்.

இதனால் நெடியவன் அணியைப் பகைத்துக்கொள்ள முன்வர மாட்டார்கள். இந்த அணியினர் மீண்டும் இணைத்துக்கொள்ளப் படுவார்கள். அல்லது இவர்களை நாம் விலத்தவில்லையே என்ற அறிவிப்பு வரும்.

தாயகத்திலிருக்கின்றேன். புலம் பெயர்நடவடிக்கைகள் எதுவும் தெரியாது என்று அறிமுகமான தங்களின் இந்த மாதிரியான கருத்துக்கள்......????????????????????

தாயகத்திலிருக்கின்றேன். புலம் பெயர்நடவடிக்கைகள் எதுவும் தெரியாது என்று அறிமுகமான தங்களின் இந்த மாதிரியான கருத்துக்கள்......????????????????????

தாயகத்தில் வசித்தாலும் நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் இதில் ஆர்வமுள்ள தமிழ் மக்கள் அனைவருக்மே தெரிந்த விடயங்கள்தானே. இதில் எந்த ரகசியமும் இல்லாமல் எல்லாமே வெளிப்படையாகவே அல்லவா இணையத்தில் அடித்துக் கொள்கிறார்கள். இந்தக் கோஷ்டி மோதல்கள் மிகச் பிரசித்தம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் நீங்கள் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. யாழ்களத்திலும் தமிழ்த்தேசியவாதிகளே(சித்தன் உட்பட) அதிகம் பேர் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருடைய ஆசையும் தமிழினம் தனித்துவத்துடனும் கௌரவத்துவடனும் வாழ்வதற்கான தமிழீழத் தனியரசை அமைப்பதே.இந்தத் திரியில் கருத்து எழுதியவர்களில் 80 வீத்திற்கு அதிகமானவர்கள் உருத்திரகுமாரனின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் ; யாப்பினை ஏற்று சத்தியப் பிரமாணம் எடுக்காதவர்கள் பதவிகளை இழந்தது நியாயமானதே என்றே கருதுகிறார்கள்.(அவர்கள் பதவி இழந்ததுக்கு அவர்கள் சுயமாக இயங்காததே காரணம்.)உங்களுடைய நோக்கமும் எங்களுடைய நோக்கமும் ஒன்றேதான் .ஆக பெரும்பாலானவர் ஆதரிக்கும் ஒரு விடயத்திற்கு எதிராக ஏன் கருத்தெழுதுகிறீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.இது தான் உஙகள் ஜனநாயகமோ?(ஜனநாயக அணியினைச் சேர்ந்தவர்கள் பலர்(உங்களுக்கத் தெரிந்த வரையில்) மே 19 இற்கு முதல் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக கடுமையாகச் செயற்பட்ட காரணத்தினால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பதில் தவறில்லை.(ஆயுதம் எடுத்துப் போராடியவர்களே குத்துக்கரணம் அடித்திருக்கும் பொழுது இவர்கள் சாதாரணமானவர்கள்)ஆனால் அவர்களை .இயக்குபவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்களாக இல்லை என்பதும் யதார்தத்தக்கு மாறாக சிந்திக்கிறார்கள் என்பதும். கவலைக்குரியது.தற்போதைய நிலையில் நா.க. அரசை குழப்ப முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடியவர்கள் இல்லை.

80வீதத்தினர் உருத்திர குமாரை தலைமையை ஏற்று கொண்டார்கள் என்பதற்காக நானும் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, தேசியத்தலைவரை தவிர யாரையும் என்னால் தலைவராக ஏற்றுகொள்ள முடியாது, அவரை கூட மக்கள் எடுத்த எடுப்பில் நம்பவில்லை, பல சோதனைகளை கடந்து, நெருப்பில் போட்டு காச்சிய போதும் அவர் பசும் பொன்னாகத்தான் வெளியே வந்தார், அதன் பின்னர்தான் ஒட்டு மொத்த தமிழினமும் அவரை தேசிய தலைவராக ஏற்று கொண்டது, அப்படி பட்ட ஒருவரைதான் நாம் தேடுகிறோம்,

உருத்திர குமார் விடயத்தில் எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது. அவரது நம்பகத்தன்மை கேபி சம்பந்தபட்டது, கேபி கைது செய்யபட்டிருந்தால் அவரை கேபி நியமித்ததில் பிரச்சினை இராது, ஒருவேளை கேபியே சரன் அடைந்து இருந்தால், நிலைமையை யோசித்து பாருங்கள், அவர் எவ்வளவுகாலம் சிறீலங்கா அரசுடன் தொடர்பில் இருந்திருப்பார், நாம் மே 18 பின்னர்தான் நாடுகடந்த அரசு பற்றியே சிந்திக்க தலைபட்டு இருப்போம், அரசு அப்படி இராது, புலிகளை வெல்ல முடியாது என்று நாம் நம்பிகொண்டு இருந்த காலத்திலேயே, இயக்கம் அழிக்கபட்ட பின்னர் புலம்பெயர்தமிழரின் அடுத்தகட்டநடவடிக்கை பற்றி திட்டம் போடத்தொடங்கி இருக்கும். அந்த நிலைமையில் உருத்திர குமாரிடம் கொண்டு போய் எல்லா அதிகாரத்தையும் கொடுப்பது சரி இல்லை என்றே நான் நினைகிறேன், இன்னொரு அரசியல் முள்ளிவாய்காலை எதிர்கொள்ளும் நிலை மக்களிடம் இல்லை, மீண்டும் மீண்டும் முதலில் இருந்து வர முடியாது, அதனால் வருபவர்பற்றி அவரது நம்பிக்கைதன்மைபற்றி யோசிக்கிறோம், 2005 இலேயே கேபியை தனக்கு தெரியும் என்று கோத்தபாய சொல்லியது, உருத்திர குமார் ஜேர்மனி,பிரான்ஸ்,சுவிசில் நியமித்த தேர்தல் ஆனையாளர் பற்றிய தன்மைகள், எல்லாம் மக்களை யோசிக்க வைக்கிறது. அவர் உண்மையானவராக இருக்க வேண்டும் என்பதே எமது வேண்டுதல்.அவர் உண்மையானவராக இருந்து அவர் பின் இருப்பவரகள் எல்லாம் கருனா போன்றும், மாத்தையா போன்று இருந்தாலும், அவரல் கூட ஒன்றும் செய்யமுடியாது, அந்த மாயாவிகள் பற்றி பலத்த சந்தேகம் இருக்கிறது, அந்த மாயாவிகளில் ஒருவர்தான் யாப்பு நிரைவேற்றும் அவையில், "புலிகளை விச ஊசி போட்டு கொல்ல வேண்டும்" என்ற, வரலாற்று முக்கியம் வாய்ந்த வார்த்தையை உதிர்தவர், அப்ப இவர்கள் யார் என்ற பலத்த சந்தேகம் எமக்கு இருக்கிறது. இவர்கள் உருத்திர குமாரை ஆட்டுவிக்கிறார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது, எடுத்த எடுப்பில் அனைவரையும் நம்பி கடைசியில் கொட்டாவிவிட எம்மால் முடியாது. உருவாவதை நம்பிக்கை உடையதாக உருவாக்க வேண்டும் என்பதே எமது கவலை.

இப்போது வெளியேற்றம் பற்றியதாக வந்த தகவல் பலருக்கு சந்தோசத்தை கொடுத்து இருந்தாலும் எமக்கு அப்படி இருக்க வில்லை, யாருக்கு சந்தோசத்தை கொடுத்து இருக்கும்? நாடுகடந்த அரசு உடைய வேண்டும் என்று நினைப்பவருக்கு சந்தோசத்தை கொடுக்கும், உருத்துர குமாரை ஆட்டிவைக்கும் மாயாவிகளுக்கு சந்தோசத்தை கொடுத்து இருக்கும், தோற்றவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்து இருக்கும், எமக்கு இவர்கள் எல்லாம் ஒன்றினைந்து மிக பெரும் சக்தியாக எழுந்து நிற்க வேண்டும் என்ற அவாமட்டுமே எஞ்சி நிற்கிறது.

தமிழ்கவி இரண்டு உதாரணங்களை இங்கு தந்தார், லண்டனில் மகிந்தாவை துரத்தியதும், மாவீரர் நிகழ்வுகள் மிக எழுச்சியுடன் புலம்பெயர் நாடுகளில் நடைபெறுவது பற்றியும், ஆனல் ஒன்றை மறந்து விட்டார் அவ்நிகழ்வுகளின் பின்னால் இங்கு வெளிற்றபட்டவர்களே இருக்கிறார்கள் என்பதை.

மின்னல் சொன்னார் யாப்பில் சில நெருடல்கள் இருகின்றன என்று, நெருடல்களை நீக்க முயற்சி செய்யாது அதன்மீது அதை ஏற்று சத்திய பிரமாணம் எடு என்பது என்ன வித ஜனநாயகம்?

நெடுக்காலபோவான் சொன்னது போல தன்னுடன் சேர்ந்து இயங்க பிரமரே துனைபிரதமர்களை தேர்தெடுப்பதுதான் நல்லது என்று, ஆனால் துணை பிரதமர்களை நியமிப்பதே பிரதமர் தவறான வழியில் போனால் அவரை காட்டுபடுத்தவே, கட்டுபடுத்துபவர்களே அவர்களது ஆட்களாக இருந்தால் யார் பிரதமரை கட்டு படுத்துவார்கள், ஒரு வேளை எமது தேசிதலைவருக்கு இது பொருந்திவரலாம், உருத்துர குமார் அந்த நம்பிக்கையை பெற இன்னமும் உழைக்க வேண்டி இருக்கிறது, அதுவரை எம்மால் நம்ப முடியாது, தலையை விட்டு விட்டு வலை பிடிக்க எம்மால் முடியாது.

எது எப்படி இருப்பினும் இன்னொரு முறை ஏமாறுவது இல்லை என்பதிலும், இன்னொரு அரசியல் முள்ளிவாய்காலை சந்திப்பது இல்லைஎன்றும் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்,

உன்மையான செயல் வீரர்கள் பின்னெ அணிதிரள மக்கள் காத்து இருக்கிறார்கள், அவர்களுடன் ஓரத்தில் இந்த சித்தனும்.

...நா.க.அரசிடமிருந்து ... பல கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் சரியாக வரவில்லை, நாம் எமக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்பதற்காக நா.க.அரசை ஆதரிக்கிறோம் என்பதற்காக, அவர்களும் தங்களது கடமையில் இருந்து நழுவக்கூடாது!!! .. இப்போதெல்லாம் எழுப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் இவர்களிடம் இருந்து வர வேண்டும்!!!!!

அதற்கு மேல் ... இரு கும்பல்கள் ... முன்னால் கும்பல்கள் ... இவ்விரு அணிகளிலும் ... குழப்பங்களை விளைவிக்கின்றார்கள் ..

1) நெடியவன் தலைமையிலான முன்னால் காஸ்ரோக்கள்

2) சர்வே, செல்வின், மனோ போன்ற முன்னால் கேபிகள்.

... இந்த இரு கும்பல்களும் வெளியேற்றப்பட வேண்டும்!!!!

..... நெடியவன் அன்ட் கும்பல் எந்த அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்துகிறதோ, அதஏ அளவிற்கு சர்வே/செல்வின்/மனே போன்ற மர்ம மனிதர்கள்(இவர்கள் இன்றும் யாருடம் தொடர்பு என்று ஒருவரும் அறியோம்) இவ்வமைப்பை தம் கட்டுப்பாட்டில் கொணர முயல்கிறார்க்ள்!!! ... இது தடுக்கப்பட வேண்டும்!!!! ... நெடிடியவன் கும்பலின் அட்டகாசத்துக்கோ/இடையூறுகளுக்கு எதிராக இன்று சில ஊடகங்கள், ... குறிப்பாக GTV, ஐ.பி.சி போன்றன பகிரங்கமாக நா.க.அ இற்கு ஆதரவளிக்கிறார்கள். ஆனால் இந்த நா.க.அ இல் சர்வே/செல்வின்/மனோ போன்ற மர்ம மனிதர்களின் பின்னணிகளையும் இவர்கள் வெளிக்கொணர வேண்டும்!!!! ... இல்லையேல் இது நா.க.அரசின் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிக மிக பாதிப்பாக அமையும்!!!!

... உண்மைகள் வெளிக்கொணர தயங்கக்கூடாது ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலிருக்கின்றேன். புலம் பெயர்நடவடிக்கைகள் எதுவும் தெரியாது என்று அறிமுகமான தங்களின் இந்த மாதிரியான கருத்துக்கள்......????????????????????

இதையேதான் நானும் நினைச்சன்..! :wub::D

நெல்லைய்யன், எங்களுக்குள் இதுவரை இருந்த கோஷ்ட்டிகளும் அதனால் ஏற்பட்ட காட்டிக்கொடுப்புகளும், துரோகத்தனங்களும் போதும். இனியாவது ஒரு தனிப் பலமான அமைப்பு வேண்டும். ஜனநாயகப் பாதை என்று சொல்லி நடக்கவிருக்கும் நல்ல விடயங்களையும் கோஷ்ட்டி போட்டுக் குழப்ப வேண்டாம்.

...நா.க.அரசிடமிருந்து ... பல கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் சரியாக வரவில்லை, நாம் எமக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்பதற்காக நா.க.அரசை ஆதரிக்கிறோம் என்பதற்காக, அவர்களும் தங்களது கடமையில் இருந்து நழுவக்கூடாது!!! .. இப்போதெல்லாம் எழுப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் இவர்களிடம் இருந்து வர வேண்டும்!!!!!

அதற்கு மேல் ... இரு கும்பல்கள் ... முன்னால் கும்பல்கள் ... இவ்விரு அணிகளிலும் ... குழப்பங்களை விளைவிக்கின்றார்கள் ..

1) நெடியவன் தலைமையிலான முன்னால் காஸ்ரோக்கள்

2) சர்வே, செல்வின், மனோ போன்ற முன்னால் கேபிகள்.

... இந்த இரு கும்பல்களும் வெளியேற்றப்பட வேண்டும்!!!!

..... நெடியவன் அன்ட் கும்பல் எந்த அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்துகிறதோ, அதஏ அளவிற்கு சர்வே/செல்வின்/மனே போன்ற மர்ம மனிதர்கள்(இவர்கள் இன்றும் யாருடம் தொடர்பு என்று ஒருவரும் அறியோம்) இவ்வமைப்பை தம் கட்டுப்பாட்டில் கொணர முயல்கிறார்க்ள்!!! ... இது தடுக்கப்பட வேண்டும்!!!! ... நெடிடியவன் கும்பலின் அட்டகாசத்துக்கோ/இடையூறுகளுக்கு எதிராக இன்று சில ஊடகங்கள், ... குறிப்பாக GTV, ஐ.பி.சி போன்றன பகிரங்கமாக நா.க.அ இற்கு ஆதரவளிக்கிறார்கள். ஆனால் இந்த நா.க.அ இல் சர்வே/செல்வின்/மனோ போன்ற மர்ம மனிதர்களின் பின்னணிகளையும் இவர்கள் வெளிக்கொணர வேண்டும்!!!! ... இல்லையேல் இது நா.க.அரசின் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிக மிக பாதிப்பாக அமையும்!!!!

... உண்மைகள் வெளிக்கொணர தயங்கக்கூடாது ...

ஏன், ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் தேவை???? ... அதுதான் சர்வதேசம் எதிர்பார்க்கிறது ... தவறாக சென்றால் சுட்டிக்காட்டவும் முடியும் ... என்பவைகளுக்கு மேலாக, இன்றும் இக்கட்டமைப்பின் பின் நிற்கும் பலரின் உண்மை முகங்கள் எம் எவருக்கும் தெரியாது!!! ... நானும் உங்களை போல் ஓரமைப்பு உருவாகி பலத்துடன் முன்னெடுக்க வேண்டும் என கூறியவன்.நம்பியவன்!!! ... ஆனால் நடப்பைவைகள் தொடர்பாக இன்னும் எம்மவெருக்கும் உண்மை நிலைமைகள் தெரியவில்லை???? இன்னும் எங்கெல்லாம் ஊடுருவல்கள் உள்ளன என்று புரியவில்லை?????..... தற்போது நினைக்கிறேன் ... நாம் எமக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அவதிப்படுகிறோமோ என்று!!!!!!!!?????????? ... பல விவாதங்கள் நடக்க வேண்டும் ... பல கேள்விகளுக்கு பதில்கள் தெரிய வேண்டும் ... அவைகளை புறம் தள்ளி வைத்து விட்டு ஓட முற்பட்டு விட்டோமோ என ... சிலருடன் உரையாடியதன் பின் நினைக்கத் தோன்றுகிறது!!!

இன்று இக்குழப்பங்களை விளைவிக்கும் நெடியவன் கும்பல் கள்ளர்கள் என்றால், அதன் அடுத்த அணியில் மறைமுகமாக இயங்கும் சர்வே/செல்வின்/மனோ போன்றவர்கள் பச்சைக்கள்ளர்கள்!!!!!!!! ..... இதில் ஒருவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை!!!!!!!!!

Edited by Nellaiyan

1) நெடியவன் தலைமையிலான முன்னால் காஸ்ரோக்கள்

2) சர்வேஇ செல்வின்இ மனோ போன்ற முன்னால் கேபிகள்.

இந்த முன்னால் கேபிகள் சரியாக இருந்து இருந்தால்

பின்னால் வந்த முன்னால்கள் புலத்திற்கு அனுப்பவேண்டிய தேவை தலைமைக்கு ஏற்பட்டிருக்காது.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

யாப்பே பிழை என்று சொல்லிதான் அவர்கள் சத்திய பிரமாணம் எடுக்க மறுக்கிறார்கள், பிறகு அந்த யாப்பின்மீதே சத்தியபிரமானம் எடு என்றால் எப்படி எடுப்பது, முதலில் இந்த யாப்பு உறுப்பினர்களினால் விவாதித்து ஏற்று கொள்ள பட்டதா? விவாதத்துக்காக உருவாக்க பட்ட அவைகளில் யாப்பை அங்கிகரிக்கும் அவையாக உருமுடித்தது எதற்காக? இதற்குள் சோல்பரி யாப்பு இருப்பது போல், இந்த யாப்பை எழுதியவர் அதற்கு தனது பெயர்தான் வைக்க வேண்டும் என அடம்பிடித்தது வேறு நடந்தது, நல்லவேளை அதுவும் ஏற்கபட்டிருந்தால், கந்தசாமியின் யாப்பு என்றுதான் வந்து இருக்கும்(உண்மைபெயர் மறைக்கபட்டு இருக்கிறது) பிரதமரை தெரிவு செய்வதற்கு, மூன்றில் ஒரு பங்கு போதுமாம், அகற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வேண்டுமாம், இது என்ன விதமான ஜனநாயகம், ஒருவரிடம் அதிகாரம் குவிக்க பட கூடாது என மூண்று துணைபிரதமர்கள் தேர்தெடுக்க பட வேண்டும் என்றால், தேர்தெடுக்க பட்ட பிரதமரே துணை பிரதமர்களையும் தேர்தெடுப்பார்களாம். அவரே செய்வார் என்றால் எதுக்கு மூன்று வேண்டும். சரி ஜேர்மனி சுவிஸ்,பிரான்சில் அவர் நியமித்த தேர்தல் ஆனையாளர்கள் யார் என்று பார்த்தால் இயக்கத்தில் இருந்து ஒழுங்காற்றல் நடவடிக்கைகாக தலைவரால் விலத்தி வைக்க பட்டவர்கள், மக்களின் பணத்தை சுற்ரியவர்களை இதற்கு நியமிக்க வேண்டிய தேள்வை என்ன? சரி இயக்க சாயல் வர கூடாது என்பதற்காக அவர் தன்னுடன் படித்தவர்கள், தனக்கு தெரிந்தவர்ளை நியமித்தார் என்றால் அவர்களது பின்மூலம், அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும். கடைசியில் அவர்கள் கூட வந்து நின்றது அனைத்துலக செயகத்திடம்தான் தேர்தலை நடத்தி தரும்படி. மக்களது தொடர்பு இருந்தால்தானே மக்கள் தேர்தல் நடத்த முடியும். மக்களை ஏய்தவர்கள் என்ன முகத்துடன் மக்கள் முன் செல்வார்கள், அவர்களை பற்றி தெரிந்தவர்களுக்கு, நாடுகடந்த அரசின் நம்பத்தன்மை அங்கே அடிபட்டு போகும்,

வென்றவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் 20000வாக்கு எடுத்து இருப்பார் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர் வெறும் 100தான் எடுத்து இருப்பார், அவர்களை வெளியேற்றுவதான் மூலம் பெருமளவு மக்களை நாடுகடந்த அரசில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்பதுதான் எனது கருத்து, சரி பிழைகளை பேசி ஒன்றினைப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதுதான் எனது கருத்து, நான் சொன்னால் என்ன கேட்கவாபோறாங்கள். :D ஏன் ஒண்றினைக்க வேண்டும் என்றால் அவர்களும் பெருமளவிலான மக்களால் தெரிவு செய்ய பட்டவர்கள்தான்.

யாப்பை எழுதிய வித்துவான் தான் பிரிவதற்கு தலைமை தாங்குபவர்.உலகின் முதல் பெண் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கட்சியில் யாழ்.அருளம்பலத்துடன் வேலை செய்தவராம். அவரின் Resume ஐ யாழில் பிரசுரிக்க விரும்பவில்லை. :lol:

என்ன பிரச்சனை எனினும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு சிறு வயதினரை வைத்து யூரியூப்பில் அறிக்கை விடுவது கேவலமாக தெரியவில்லையோ இவர்களுக்கு?.ஏன் இவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நேரடியாக தாங்கள் ஏன் வெளி நடப்பு வருடக்கணக்காக செய்கிறோம் என சொல்ல முடியவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை...இவர்களையே ஒன்றிணைக்க உருத்திரக்குமாரால் கூட முடியாது உள்ளது...இனி மேல் தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் எதற்கு வீணாக்கப்பட்டது.

இனி ஒருவர் மீது ஒருவர் குறைசொல்லாமல் அவரவர் வழியில் மக்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, on 28 March 2011 - 10:47 AM, said:

தாயகத்திலிருக்கின்றேன். புலம் பெயர்நடவடிக்கைகள் எதுவும் தெரியாது என்று அறிமுகமான தங்களின் இந்த மாதிரியான கருத்துக்கள்......????????????????????

இதையேதான் நானும் நினைச்சன்..!

அவரின் எழுத்துக்கள் தாயகத்தில் இருப்பவரைப் போலல்லாது புலத்தில் இருப்பவர் போலவே எனக்கும் தென்பட்டது.இன்னும் எத்தனை பேர் எங்களை மாதிரி நினைச்சினமோ?

சித்தர் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே எமது அவா.அது கை கூடாத பொழுது குழப்புவர்கள் ஒதுங்கி இருப்பதையே நாம் விரும்புகிறோம்.

தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்பதனாலேயே உருத்திரகுமாரை நம்புகிறோம். அவர் உண்மையானவர்தானா என்பதை காலம்தான் நமக்கு உணர்த்த வேண்டும்.

சரி... தொழில்நுட்பம் வளர்ந்துள்ள மேலை நாடு ஒன்றில் இருந்து எழுதுகிறீர்கள். ஒருவர் எழுதுவது எந்த நாட்டிலிருந்து என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும் என்ற விஷயம் தெரியாதா? அடப்பாவமே! அதையாவது யாரையாவது விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Edited by Raja Senthooran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்கவி இரண்டு உதாரணங்களை இங்கு தந்தார், லண்டனில் மகிந்தாவை துரத்தியதும், மாவீரர் நிகழ்வுகள் மிக எழுச்சியுடன் புலம்பெயர் நாடுகளில் நடைபெறுவது பற்றியும், ஆனல் ஒன்றை மறந்து விட்டார் அவ்நிகழ்வுகளின் பின்னால் இங்கு வெளிற்றபட்டவர்களே இருக்கிறார்கள் என்பதை.

எது எப்படி இருப்பினும் இன்னொரு முறை ஏமாறுவது இல்லை என்பதிலும், இன்னொரு அரசியல் முள்ளிவாய்காலை சந்திப்பது இல்லைஎன்றும் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்,

உன்மையான செயல் வீரர்கள் பின்னெ அணிதிரள மக்கள் காத்து இருக்கிறார்கள், அவர்களுடன் ஓரத்தில் இந்த சித்தனும்.

சித்தன்

நான் நீங்கள் குறிப்பிட்டதை மறக்கவில்லை, ஆனால் நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்களா? அதாவது முள்ளிவாய்க்கால் போராட காலத்துக்கு முந்தைய லணடன் ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் ஓர் அம்மணி அவரின் பெயர்கூட ஞாபகம் இல்லை, மிகத்தீவிரமாக முன்வரிசையில் நின்று கண்டனப் பதாதைகளை ஏந்தி உரத்த குரலில் கோஷங்களை எழுப்பி, அங்கு சேரும் மக்களையும் உற்சாகப்படுத்தி, வீதியே அதிரும் வண்ணம் போராட்டம் செய்த அந்த அம்மணியைப் பார்த்து இவவைப்போல தமிழ் பற்றுள்ள சிலர் இருந்ததாலே எங்களுக்கு எப்பவோ விடிவு கிடைத்திருக்கும் என்று எண்ணவைத்த அந்த அம்மணி, இறுதிக்கட்ட யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் யாழில் நின்றதை மறந்துவிட்டீர்களா?

அவ ஆரம்பத்திலிருந்தே அமைச்சரின் ஆளா அல்லது ராஜபக்க்ஷவின் பணமும் ராஜபோகமும் அவவை மாற்றியதா என்று இன்றுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாத நினையில், சமீபத்தியப் போராட்டங்களில் முனனின்று நடத்தியவர்கள் மாறியிருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? முன்பை விட தற்போது மிக அதிகளவில் இலங்கை அரசின் உளவுத்துறையும் பணமும் எவ்வளவு புகுந்து விளையாடுகிறது என்பதும் தெரியும் தானே !

நாடு கடந்த தமிழீழ அரசினை உடைக்கவும் அவர்களுக்கெதெரிரான பொய்ப்பரப்புரைகளை இலங்கை அரசு செய்வதிலிருந்தே நா .த. அரசின் உண்மைத்தன்மை புலப்படுகிறது அல்லவா !

உங்களின் தேசியப்பற்று, அதனால் ஏமாந்துவிடக்கூடாதே என்னும் கவலை புரிகிறது. மக்களுக்கெதிரான எந்தச் சக்தியாக இருந்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் யாராக இருந்தாலும் துரத்தியடிக்கப்படுவார்கள் என்பதை மனதில்கொண்டு எங்களை நாங்கள் பலப்படுத்துவோம்....

யாப்பை எழுதிய வித்துவான் தான் பிரிவதற்கு தலைமை தாங்குபவர்.உலகின் முதல் பெண் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கட்சியில் யாழ்.அருளம்பலத்துடன் வேலை செய்தவராம். அவரின் Resume ஐ யாழில் பிரசுரிக்க விரும்பவில்லை. :lol:

என்ன பிரச்சனை எனினும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு சிறு வயதினரை வைத்து யூரியூப்பில் அறிக்கை விடுவது கேவலமாக தெரியவில்லையோ இவர்களுக்கு?.ஏன் இவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நேரடியாக தாங்கள் ஏன் வெளி நடப்பு வருடக்கணக்காக செய்கிறோம் என சொல்ல முடியவில்லை??

என்னைப் பொறுத்தவரை யாப்பு ஒரு சாட்டு.இவர்கள் நினைத்தது தங்களுக்கு (அனைத்துலகம்)ஏதாவது பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள் கிடைக்காது என்று தெரிந்ததும் என்ன செய்வார்கள் பாவம்.மற்றைய உறுப்பினர்கள் இவையெல்லாம் தெரியாமலா கையெழுத்து வைத்தார்கள். இந்த 29 பேர்கள் மட்டும் தான் அனைத்துலகத்தின் கீழ் மக்களின் பணத்தில் குளிர்காய்ந்தவர்கள்.மற்றவர்கள் தங்கள் சொந்த உழைப்பைப் பயன் படுத்தி வந்தார்கள்.வியர்வை சிந்தி உழைத்தால் தான் கஸ்டநஷ்டம் தெரியும்.இவர்களுக்கு எங்கே.........

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. கடைசி நேரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து உள்ளே திரும்பவும் போய்விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

இவர்களுக்கு வாக்களித்தவர்கள், இனியாவது இவர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்பது எனது விருப்பம். இவர்களைப் பார்க்குமிடங்களிலெல்லாம் கேள்விகளால் துளைத்தெடுக்கவேண்டும். செய்வர்களா எமது மக்கள்??????????????

யார் எவர் என்று தெரியாமலேயே வாக்களிக்கும் இடத்திற்கு வெளியே நின்று "தேசியத்திற்காக" நிற்பவர்கள் ஐந்து பேருக்கு வாக்களியுங்கள் என்று தந்த பெயர்ப்பட்டியலைப் பார்த்துவிட்டு வாக்களித்தவர்கள் எவரைப் போய்க் கேள்வி கேட்கமுடியும்?

இந்தக் கூத்திற்கு எல்லாம் இனிப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றேன்!

பதவி இழந்தவர்கள்.

கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன,; திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம்.

பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா

ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம்.

பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந்

நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம்,

டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன்

அவுஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன்

இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்

http://www.tamilwin.com/view.php?202IBJ30eRjQM4ebiGpBcbdF92Eddc8292bc41pG3e42oQj2023PLc32

Edited by Subiththiran

... எம்மில் சிலர் இங்குள்ள சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்களாம் ... அப்போது விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து குறிப்பிடுகையில் ... புலத்தில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அமைப்புகளின் செயற்பாடுகளும் இத்தடைக்கு ஓர் காரணமாக அமைந்து விட்டது ... என்று கூறினாராம் ... அவை எவை ...

* புலத்தில் இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வன்முறைகள்

* இவர்களால் புரியப்பட்ட கொலைகள்

* மிரட்டல்கள்

* கட்டாய பணப்பறிப்புகள்

* ... என்பது போன்ற பல விடயங்கள் ...

... இன்று இவைகளை தனியே காஸ்ரோவின் நெடியவன் கோஷ்டி மீது போட்டு, அதற்கு முற்பட்ட கேபியின் கும்பல்கள் தப்பி விட முயல்கின்றன. உண்மையில் இந்த வன்முறை கலாச்சாரத்தை ஏற்படுத்தையே இந்த கேபியின் கும்பல்களே!!! .... புலத்தில் ஆரம்ப காலம் முதல் இந்த வன்முறைகள் மட்டுமல்லாது, நிதி மோசடிகளை நடத்தியவர்கள் இவர்களே!!! .... இவர்களின் காலங்களில்தான் பல நிதி மோசடிகள், பலர் நிதிகளுடன் தப்பியோடினார்கள்(சுவிஸ் முரளி உட்பட ... யாரும் இதனை மறுப்பார்களா???), வன்முறைகள், புலத்தில் ஆயுத கலாச்சாராம், கொலைகள் என பற்பலவற்றை இவர்கள் அரங்கேற்றி விட்டு, இன்று தப்பி விட முயல்கிறார்கள்.

இந்தக்கலாச்சாரங்களை புலத்தில் ஏற்படுத்துவதற்கு முன்னனியில் நின்றவர்கள் இன்று நாடு கடந்த அரசின் குழப்பங்களுக்கு காரணமாக ஒர் அணியாக நிற்கிறார்கள். பிரான்ஸ் மனோ/ நோர்வே சர்வே/ செல்வின் போன்றவர்கள் இன்று சில ஊடகங்களையும் தம் கைவசம் கொண்டு வந்து சில பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் .... இன்று இதற்கு ஐ.பி.சி, GTV போன்றன பாவிக்கப்படுகின்றன ... . இவர்கள் மறைமுகமாக நாடு கடந்த அரசை கைப்பற்ற முயல்கிறார்கள்!!!

நாம் எமக்கு உறுதியான ஓர் அமைப்பு புலத்தில் தேவை எனபதற்காகவே நாடு கடந்த அரசை ஆதரிக்க முன்வந்தோம்! ... ஆனால் இந்த அணியில் முகமூடூடிகளாக நின்று கொண்டு குழப்பம் புரியும் இந்த மனோ/சர்வே/செல்வின் போன்றவர்களின் உண்மையான பின்னணிகள் வெளிக்கொணர வேண்டும். இவர்கள் ஏன் பின்னணியில் நின்று இந்த குழப்ப வேலைகளை ஏற்படுத்துகிறார்கள்??? இவர்களின் பின்னணியில் யார் உள்ளார்கள்??? இவர்கள் முள்ளிவாய்க்காலின் கடைசி காலங்களில் செய்தவைகள் எவைகள்??? இவர்கள் தாம் ஒதுங்குகிறோம் என்று ஒதுங்கியவர்கள் ஏன் இன்று மீண்டும்?????

... நாம் நாடு கடந்த அரசுக்கு ஆதரவளிக்கிறோம் ... உருத்திரகுமார் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் ... பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்!!! ... ஆனால் நாம் ஓர் அமைப்புப்தான் என இனியும் ஆதரவளிக்க முடியாது!! .. பல அமைப்புகள் செயற்படட்டும், ஓர் இலக்கை நோக்கி!!!! ... கடந்த கால அனுபவம் போதுமானது!!!!!!!!!!

Edited by Nellaiyan

இந்தக்கலாச்சாரங்களை புலத்தில் ஏற்படுத்துவதற்கு முன்னனியில் நின்றவர்கள் இன்று நாடு கடந்த அரசின் குழப்பங்களுக்கு காரணமாக ஒர் அணியாக நிற்கிறார்கள். பிரான்ஸ் மனோஃ நோர்வே சர்வேஃ செல்வின் போன்றவர்கள் இன்று சில ஊடகங்களையும் தம் கைவசம் கொண்டு வந்து சில பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் .... இன்று இதற்கு ஐ.பி.சிஇ புவுஏ போன்றன பாவிக்கப்படுகின்றன ... . இவர்கள் மறைமுகமாக நாடு கடந்த அரசை கைப்பற்ற முயல்கிறார்கள்!!!

நாம் எமக்கு உறுதியான ஓர் அமைப்பு புலத்தில் தேவை எனபதற்காகவே நாடு கடந்த அரசை ஆதரிக்க முன்வந்தோம்! ... ஆனால் இந்த அணியில் முகமூடூடிகளாக நின்று கொண்டு குழப்பம் புரியும் இந்த மனோஃசர்வேஃசெல்வின் போன்றவர்களின் உண்மையான பின்னணிகள் வெளிக்கொணர வேண்டும். இவர்கள் ஏன் பின்னணியில் நின்று இந்த குழப்ப வேலைகளை ஏற்படுத்துகிறார்கள்??? இவர்களின் பின்னணியில் யார் உள்ளார்கள்??? இவர்கள் முள்ளிவாய்க்காலின் கடைசி காலங்களில் செய்தவைகள் எவைகள்??? இவர்கள் தாம் ஒதுங்குகிறோம் என்று ஒதுங்கியவர்கள் ஏன் இன்று மீண்டும்?????

... நாம் நாடு கடந்த அரசுக்கு ஆதரவளிக்கிறோம் ... உருத்திரகுமார் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் ... பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்!!! ... ஆனால் நாம் ஓர் அமைப்பிப்புதான் என இனியும் ஆதரவளிக்க முடியாது!! .. பல அமைப்புகள் செயற்படட்டும்இ ஓர் இலக்கை நோக்கி!!!! ... கடந்த கால அனுபவம் போதுமானது!!!!!!!!!!

நெல்லையான், உள்ளிருக்கும் விடயத்தை பதிவு செய்தமைக்கு தலைவணங்குகின்றேன்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று இவைகளை தனியே காஸ்ரோவின் நெடியவன் கோஷ்டி மீது போட்டு, அதற்கு முற்பட்ட கேபியின் கும்பல்கள் தப்பி விட முயல்கின்றன. உண்மையில் இந்த வன்முறை கலாச்சாரத்தை ஏற்படுத்தையே இந்த கேபியின் கும்பல்களே!!! .... புலத்தில் ஆரம்ப காலம் முதல் இந்த வன்முறைகள் மட்டுமல்லாது, நிதி மோசடிகளை நடத்தியவர்கள் இவர்களே!!! .... இவர்களின் காலங்களில்தான் பல நிதி மோசடிகள், பலர் நிதிகளுடன் தப்பியோடினார்கள்(சுவிஸ் முரளி உட்பட ... யாரும் இதனை மறுப்பார்களா???), வன்முறைகள், புலத்தில் ஆயுத கலாச்சாராம், கொலைகள் என பற்பலவற்றை இவர்கள் அரங்கேற்றி விட்டு, இன்று தப்பி விட முயல்கிறார்கள்.

இந்தக்கலாச்சாரங்களை புலத்தில் ஏற்படுத்துவதற்கு முன்னனியில் நின்றவர்கள் இன்று நாடு கடந்த அரசின் குழப்பங்களுக்கு காரணமாக ஒர் அணியாக நிற்கிறார்கள். பிரான்ஸ் மனோ/ நோர்வே சர்வே/ செல்வின் போன்றவர்கள் இன்று சில ஊடகங்களையும் தம் கைவசம் கொண்டு வந்து சில பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் .... இன்று இதற்கு ஐ.பி.சி, GTV போன்றன பாவிக்கப்படுகின்றன ... . இவர்கள் மறைமுகமாக நாடு கடந்த அரசை கைப்பற்ற முயல்கிறார்கள்!!!

அன்புள்ள நெல்லியான்,

நாங்கள் சாதாரண மனிதர்கள். ஜன நாயகத்தின் உயிர் நாடிகளின் ஒன்று 'தணிக்கை செய்யப்படாத செய்திகள்'. மக்கள் இவற்றைப் பாவித்து தங்கள் முடிவை எடுப்பார்கள்.எங்களுக்குத் தெரியாத பல 'உள்வீட்டுத் தகவல்கள்' உங்களிடம் உள்ளன போல் உள்ளது.உங்களுக்குத் தனிப்பட்ட முறையின் ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில்,உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உண்மைகள் நீண்ட நாட்கள் உறங்குவதில்லை.செய்வீர்களா? ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.