Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் சிறிலங்கனா?. சிறிலங்கா துடுப்பாட்ட அணியை ஆதரிப்பது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2007ல் வெளியிடப்பட்ட காணொளி தற்பொழுது 2011க்கும் பொருந்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

slcricketnl2gu5.jpg

inthenameofbuddhaes1.jpg

இந்த கேள்விக்கே இடம் இல்லை. அருவருப்பான கேள்வி.

புலம் பெயர் தமிழரை பொறுத்த மட்டில் ஈழத்தமிழர்கள் ஒரு அரசியல் சுதந்திரம் பெறும் வரை சிரிலங்கா ஒரு எதிரி நாடு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை அப்படி சொன்னதில்லை.

அப்படி சொல்லவேண்டி வந்தால் மிகவும் வருத்தப்படுவேன். மனம் நோவேன்.

நான் ஒரு ஈழத்தமிழன்

எனது பக்கத்து நாடு சிறீலங்கா

தற்போது அது எமது விருப்பத்து மாறாக எம்மை ஆக்கிரமித்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நான் என் வாழ் நாளில் சிறீலங்கா அணியை ஆதரித்ததே இல்லை. மனதார எனக்குள் அந்த அணியை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றவும் இல்லை. இன்று அதற்கான தெளிவான காரணங்களை என்னால் காணவும் முடிகிறது.

ஒரு முறை யுனியில் கன்ரீனில் இருந்த ரீவியில் மச் போய் கொண்டிருந்த போது சிறீலங்கா வீரர் ஒருவர் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு கத்திட்டன். அருகில் இருந்த சிங்களவர்கள் அடிக்காத குறையாக ஒரு முறாய்ப்புப் பார்வை. நண்பர்கள் கூட இருந்ததால்.. தப்பிச்சிட்டன். :D:)

Edited by nedukkalapoovan

நல்ல காலம்.... நெடுக்ஸின் நண்பர்கள் அருகில் இருந்திராவிட்டால்....

யாழ்களம் நல்ல ஒரு கருத்தாளனை இழந்திருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்.... நெடுக்ஸின் நண்பர்கள் அருகில் இருந்திராவிட்டால்....

யாழ்களம் நல்ல ஒரு கருத்தாளனை இழந்திருக்கும். :D

சிங்கள யுனியில நாங்கள் புலிகள் (அப்படித்தான் சிங்களவர்கள் சொல்கிறார்கள்).. குறூப்பாத் தான் இருக்கிறது. அப்பதான் சிங்கத்தை குகைக்குள் சந்திக்க முடியும். ஆனால் எங்களைப் புலிகள் என்று சொல்லிக் கொண்டே பாடம் சம்பந்தமா டவுட்டு வந்தா மட்டும் சிங்கங்கள் விழுந்து விழுந்து உபசரிக்குங்கள். அதில் இரண்டு விதமான உபசரிப்பு உண்டு..!

ஒன்று.. புலிகளை நெருங்கி.. உளவு பார்ப்பது.

இரண்டு.. சாதாரண பாடப் புரிதலுக்கானது.

இப்படி எத்தனையோ அனுபவங்கள்... என்னை எழுதத் தூண்டியதில் இதுவும் அடங்கும். :D

சிங்கள தேசத்தில்..! ஒருபோதும் தாய் நாடு என்று சொல்லுற அளவுக்கு அங்க அப்படி ஒரு உணர்வை உணர முடியல்ல..! இதுதான் யதார்த்தம். ஆனால் நாரேன்பிட்டியில் இருந்த ஈபிடிபி காரங்கள்.. மயூரபதி அம்மனட்டும்.. கப்பம் கேட்டு அவங்கள் அங்கும் ஆதிக்கம் தான். ஏன்னா அவங்க சிங்களத்தின் குகையில் எலும்பு பொறுக்கிகள்.. இன்றும் அதே. அவங்களும் தமிழர்கள் தான் என்பதும் உண்மை. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

'நான் என்றுமே 'சிறிலங்கா' கிரிகெட் அணியை ஆதரித்ததில்லை.சிறிலங்காவின் இரத்தம் தோய்ந்த கைகளை இந்த கிரிக்கெட் அணி பல தடவைகள் கழுவியிருக்கின்றது.இதில் விளையாடிய எல்லோரிடமும் இனத்துவேசம் தலை தூக்கி இருந்ததைப் பல தடவைகள் அவதானித்து இருக்கின்றேன்.சனத் ஜெயசூரிய,அர்ஜுனா ரணதுங்க ஆகியவர்கள் வெளிப்படையாகவே தங்கள் துவேசத்தைக் கக்கியிருக்கின்றார்கள். சில புலம்பெயர் தமிழர்கள் 'அடையாளமில்லாத' தங்களுக்கு ஒரு அடையாளம் தேடுபவர்கள், சிறி லங்கா கிரிக்கட் அணியை ஆதரிக்கின்றார்கள்.ஒரு விபச்சாரி பூவும் போட்டும் வைப்பது போல.

  • கருத்துக்கள உறவுகள்

சில புலம்பெயர் தமிழர்கள் 'அடையாளமில்லாத' தங்களுக்கு ஒரு அடையாளம் தேடுபவர்கள், சிறி லங்கா கிரிக்கட் அணியை ஆதரிக்கின்றார்கள்.ஒரு விபச்சாரி பூவும் போட்டும் வைப்பது போல.

வெளிநாடுகளிலும் வெளிநாட்டவர்கள் எங்களை கேட்பார்கள். எந்த அணிக்கு ஆதரவு என்று. நான் சிறீலங்காவுக்கு ஆதவளிப்பதில்லை என்பதையே சொல்லி இருக்கிறேன். சில முள்ளமாரித் தமிழர்கள் தான் அப்படி.. சிறீலங்கா கொடியை தூக்கிக்கிட்டு போர்த்துக்கிட்டு திரிகிறார்கள். :unsure::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-------

சிங்கள தேசத்தில்..! ஒருபோதும் தாய் நாடு என்று சொல்லுற அளவுக்கு அங்க அப்படி ஒரு உணர்வை உணர முடியல்ல..! இதுதான் யதார்த்தம். ஆனால் நாரேன்பிட்டியில் இருந்த ஈபிடிபி காரங்கள்.. மயூரபதி அம்மனட்டும்.. கப்பம் கேட்டு அவங்கள் அங்கும் ஆதிக்கம் தான். ஏன்னா அவங்க சிங்களத்தின் குகையில் எலும்பு பொறுக்கிகள்.. இன்றும் அதே. அவங்களும் தமிழர்கள் தான் என்பதும் உண்மை. :)

என்ன கேவலமோ.... இதுகளில் அநேகமானதுகள் கோயில்களில் தான்... தங்கள் சண்டித்தனத்தை காட்டுங்கள்.

அங்கு மட்டுமல்ல, இங்கும் அதே தான் நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

------

சில புலம்பெயர் தமிழர்கள் 'அடையாளமில்லாத' தங்களுக்கு ஒரு அடையாளம் தேடுபவர்கள், சிறி லங்கா கிரிக்கட் அணியை ஆதரிக்கின்றார்கள்.ஒரு விபச்சாரி பூவும் போட்டும் வைப்பது போல.

வெளிநாடுகளிலும் வெளிநாட்டவர்கள் எங்களை கேட்பார்கள். எந்த அணிக்கு ஆதரவு என்று. நான் சிறீலங்காவுக்கு ஆதவளிப்பதில்லை என்பதையே சொல்லி இருக்கிறேன். சில முள்ளமாரித் தமிழர்கள் தான் அப்படி.. சிறீலங்கா கொடியை தூக்கிக்கிட்டு போர்த்துக்கிட்டு திரிகிறார்கள். :unsure::(

அதிலும் வேடிக்கை என்ன வென்றால்....

எங்களது கவனயீர்ப்பு நிகழ்வுகளோ, போராட்டங்களோ வெளிநாடுகளில் நடக்கும் போது....

புலிக் கொடியை கொண்டு போகக் கூடாது என்று சொல்லும், முள்ளமாரித் தமிழர்களும் இவர்களில் அடக்கம்.

ஆனால்.... சிங்களக் கொடியை ரோசமில்லாமல்.... போத்துக் கொண்டு, விளையாட்டு வேறை, அரசியல் வேறை என்று தத்துவம் கதைக்குங்கள். :(

ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் குடியேறி அங்கு பிரஜாவுரிமை பெறுபவர்கள்... அவர்களுக்கு விருப்பமோ இல்லையோ...ஸ்ரீலங்காவின் பிரஜாவுரிமையை இழந்துவிடுகிறார்கள். புலம்பெயர்ந்தபின் வெளிநாட்டுப் இன்னமும் பிரஜாவுரிமை பெறாதவர்கள் தமது ஸ்ரீலங்கா கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போது என்ன எழுதப்பட்டிருப்பதன்கீழ் கையொப்பமிட்டுப் புதுப்பிக்கிறார்கள் என்பதை அந்த விண்ணப்பப்படிவத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரட்டைப் பிரஜாவுரிமை விண்ணப்பத்தில் கையொப்பம் இடுமிடத்துக்கு மேலுள்ள வாசகங்களும் அவைதான். இந்த நிலையில் ஸ்ரீலங்கனா என்ற கேள்விக்கே இடமில்லையே! இல்லாத ஒன்றை நான் அப்படி இல்லைத்தானே என்று ஏன் அவ்வப்போது கேட்கவேண்டும்?

இந்து சமுத்திர தீவில் வசிக்கும்.. ஒரு கூட்டம் மக்களின் சுயவிருப்பின்றி அவர்களை சிறீலங்கன் என்பதாக அடையாளம் காட்டுதல் தவறு. சிறீலங்கா ஜனநாயகத்தை மதிக்கும் நாடென்றால்.. சிறீலங்காவிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் ஐநா மத்தியஸ்தத்தோடு சுயாதீன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி எத்தனை சதவீதம் தமிழ் மக்கள் சிறீலங்காவோடு இணைந்திருக்க விரும்புகிறார்கள்.. எத்தனை சதவீதம் மக்கள் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள்.. சிறீலங்கன் என்பதற்கு மாற்றீடாக தமிழீழ மக்கள் என்ற அடையாளத்தை கொண்டிருக்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க முன் வரட்டும் பார்க்கலாம்.

சும்மா பொய் சொல்லி.. பிச்சை எடுத்த ஆயுதங்களை குண்டுகளைக் கொட்டி இராணுவ ஆக்கிரமிப்பை செய்து.. ஒரு இன மக்களை அடிமைப்படுத்தி வைச்சுக் கொண்டு சிறீலங்கன் என்று அச்சிடப்பட்ட தாள்களில் கையெழுத்து வாங்குவதால் மட்டும் அந்த மக்கள் சிறீலங்கன் ஆகிவிட முடியாது. மக்கள் தம்மை இயல்பாக சிறீலங்கனாக அடையாளப்படுத்த வேண்டும். அதுதான் அந்த தேசத்துக்கு மக்கள் அளிக்கும் கெளரவம். ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோரிடம் அந்த எண்ணமே இல்லை. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிரிக்கட் பார்க்கிறதையே பெரும்பாலும் விட்டிட்டன்..! :(

சொறிலங்கா, இந்தியா தோற்குது எண்டால் அந்த ஆட்டங்களை மட்டும் பார்ப்பன்..! :D

இந்து சமுத்திர தீவில் வசிக்கும்.. ஒரு கூட்டம் மக்களின் சுயவிருப்பின்றி அவர்களை சிறீலங்கன் என்பதாக அடையாளம் காட்டுதல் தவறு. சிறீலங்கா ஜனநாயகத்தை மதிக்கும் நாடென்றால்.. சிறீலங்காவிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் ஐநா மத்தியஸ்தத்தோடு சுயாதீன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி எத்தனை சதவீதம் தமிழ் மக்கள் சிறீலங்காவோடு இணைந்திருக்க விரும்புகிறார்கள்.. எத்தனை சதவீதம் மக்கள் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள்.. சிறீலங்கன் என்பதற்கு மாற்றீடாக தமிழீழ மக்கள் என்ற அடையாளத்தை கொண்டிருக்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க முன் வரட்டும் பார்க்கலாம்.

சும்மா பொய் சொல்லி.. பிச்சை எடுத்த ஆயுதங்களை குண்டுகளைக் கொட்டி இராணுவ ஆக்கிரமிப்பை செய்து.. ஒரு இன மக்களை அடிமைப்படுத்தி வைச்சுக் கொண்டு சிறீலங்கன் என்று அச்சிடப்பட்ட தாள்களில் கையெழுத்து வாங்குவதால் மட்டும் அந்த மக்கள் சிறீலங்கன் ஆகிவிட முடியாது. மக்கள் தம்மை இயல்பாக சிறீலங்கனாக அடையாளப்படுத்த வேண்டும். அதுதான் அந்த தேசத்துக்கு மக்கள் அளிக்கும் கெளரவம். ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோரிடம் அந்த எண்ணமே இல்லை. :)

நான் சொல்லவருவது... வெளிநாடுகளில் இருப்பவர்களில் விருப்பமில்லாதவர்கள் ஸ்ரீலங்கன் இல்லை! அவ்வளவுதான். விண்ணப்பப்படிவத்தில் கையொப்பமிட யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. தேவையானவர்கள் தாமாக சுய விருப்புடனே நேரில் சென்று விண்ணப்பப்படிவத்தை நிரப்பிக் கொடுத்து அதற்குக் கட்டணமும் கொடுக்கிறார்கள்.

Edited by Raja Senthooran

தமிழர்கள் சிறீலங்கன் என்று தம்மை அழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இலங்காபுரி என்பதுதான் இராமாயண காலப் பெயர். தமிழர்களின் தேசமாக அது விளங்கியதற்கு அது சான்று. சிறீ திணிப்பை மேற்கொண்ட பண்டாரநாயக்கா வழியில்.. சிறீலங்கா என்று இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்கியதன் அடையாளமே சிறீலங்கன். தமிழர்களிடம் எழுதி வாங்கினாலும் தமிழர்கள் சிறீலங்கன் அல்ல என்பதுதான் யதார்த்தம். வரலாற்றியல் உண்மை.

விண்ணப்பங்களில் வேறு தெரிவுகள் இல்லை. சிறீலங்கன் என்று அடையாளப்படுத்த விரும்பாத மக்களுக்கு தெரிவு இல்லை. மக்கள் தமது வரலாற்றியல் பாரம்பரியப்படி தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சிங்கள ஆதிக்கத்துக்குள் இருக்கும் சிறீலங்காவில் விண்ணப்பப் படிவங்களின் அடிப்படையில் தெரிவுகள் அமைக்கப்பட வேண்டும். இதனை சிங்கள சமூகம் ஏற்றுக் கொள்ள இதய சுத்தியோடு முன்வர வேண்டும். சிறீலங்கன் என்ற கட்டாய அடையாளப்படுத்தலை சிறீலங்கா கைவிட வேண்டும். சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது போன்றதே இதுவும். :)

நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.... ஸ்ரீலங்கன் இல்லை!

நான் கேட்டிருப்பது ஏன் இவ்வளவுக்குப் பின்னரும் கிரிக்கட் போட்டி வரும்போது நான் ஸ்ரீலங்கனா என்ற கேள்வி வருகிறது என்பதைத்தான்!

ஒரு கொலை நடக்கிறது. நான் அதைச் செய்யவில்லை. நான் சும்மா என்பாட்டுக்குப் போகலாமே... ஏன் பொலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே போய் நின்றுகொண்டு நான் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று வாரத்துக்கொருமுறை சொல்ல வேண்டும்?

Edited by Raja Senthooran

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.... ஸ்ரீலங்கன் இல்லை!

நான் கேட்டிருப்பது ஏன் இவ்வளவுக்குப் பின்னரும் கிரிக்கட் போட்டி வரும்போது நான் ஸ்ரீலங்கனா என்ற கேள்வி வருகிறது என்பதைத்தான்!

ஏன் என்றால் இன்னும் சிங்களவன் கட்டாயப்படுத்தி தமிழர்களை சிறீலங்கனாகக் காட்டி வருவதால்.. இந்தக் கேள்வியும் எழுகிறது. சிங்களம் அதையெல்லாம் நிறுத்திவிட்டு.. தென்பகுதியோடு தன்ர ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

நாங்கள் சிறிலங்கனா?.

... உதனை மறந்து.எம்மை அவன் மறக்கச்செய்து 30 வருடங்கள் கடந்தோடி விட்டது ... இன்று வரை யார் எதிராக விளையாடினாலும் அவர்களுக்கு ஆதரவு!!! ... ஆனால் ...

... நாம் விளையாட்டை விளையாட்டாக எடுக்க வேண்டும் ... அவன் அதனை பாவிக்கப்பார்க்கிறான் .... தள்ளியே நிற்போம்!! இன்று எமக்கு தலை போகும் பிரட்சனை நூறு இருக்க இந்த விளையாட்டு அதற்குள் நூற்றொன்றாக்கத் தேவையில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

//நாங்கள் சிறிலங்கனா//

ஏன் ஏப்ரல் 2ஆம் திகதி இதைப் பற்றி ஆராய்ந்திருக்கலாமே

இந்த போட்டிகள் நடக்கும் போது நான் ஊரில் இருந்திருந்தேன்.யார் வீட்டை பார்த்தாலும் கிரிக்கட் மட்ச் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். யாழ்ப்பாணத்தார் தான் இப்படி அவர்கள் போரினாலோ,ஒன்றினாலுமோ பாதிக்கப்படவில்லை எனப் பார்த்தால் வன்னியிலும் இதே நிலை தான்.

//நாங்கள் சிறிலங்கனா//

. யாழ்ப்பாணத்தார் தான் இப்படி அவர்கள் போரினாலோ,ஒன்றினாலுமோ பாதிக்கப்படவில்லை எனப் பார்த்தால் வன்னியிலும் இதே நிலை தான்.

இது ஒன்றே போதும் உங்கள் அரசியலை புரிந்து கொள்ள

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றே போதும் உங்கள் அரசியலை புரிந்து கொள்ள

நன்றி

நிழலி இதில் என்ன அரசியல் இருக்குது என சொல்வீர்களா?...ஏன் நீங்கள் மட்டக்களப்பு மக்களை மட்டக்களப்பார் என சொல்வதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இதில் என்ன அரசியல் இருக்குது என சொல்வீர்களா?...ஏன் நீங்கள் மட்டக்களப்பு மக்களை மட்டக்களப்பார் என சொல்வதில்லையா ?

நிச்சயமாக இல்லை

இது முதலாவது படி

அதையே கடைப்பிடிக்காவிடில்............???

1996 இல் உலகக் கிண்ணத்தை வென்ற பொழுது அதன் வெற்றியைக் கொண்டாட திருமலையில் ஸ்ரீலங்கா படைகள் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன்.

வட கிழக்கு இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான் போராடினார்கள். ஒவ்வொருவரும் வேறு வேறு காலங்களில் கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். கடைசியாக அதிகமாக அனுபவித்தவர்கள் வன்னி மக்கள்.

Edited by thappili

நாங்கள் சிறிலங்கனா?.

PROUD TO BE A SRILANKAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.