Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

Featured Replies

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைட் என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின் கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத் தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத் தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காது வலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத் தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் 6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக் கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றை யும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 9. வெங்காயத்தை சமை த்து உண்ண உடல் வெப்ப நிலை சமநிலை ஆகும். மூலச் சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற் றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குண மாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங் காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். 16. வெங்காய இரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண் டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயத்தில் குறைவான கொழுப்புச் சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத் தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது

. 22. வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் வெங் காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண் ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும். 25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 27. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும். 30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும். 31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். 41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். 42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். 43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து

நன்றி வீரகேசரி

http://www.mangayarkesari.com/mangai/results.asp?key_c=226

வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

விளக்கு எண்ணை என்றால் ,மண்னனையோ? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு எண்ணை என்றால் ,மண்னனையோ? :D :D

குத்து விளக்குக்கு, நீங்கள் மண்ணெண்ணையா விடுறனீங்கள்?

தேங்காய் எண்ணை தான், விளக்கெண்ணை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஸ்ரீ .............நல்லெண்ணெய் ( எள்ளெண்ணை) தான் விளக்கெண்ணை . :D ........யாராவது தெளிவுபடுத்துங்கள

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஸ்ரீ .............நல்லெண்ணெய் ( எள்ளெண்ணை) தான் விளக்கெண்ணை . :D ........யாராவது தெளிவுபடுத்துங்கள

நிலமதி அக்கா, நல்லெண்ணை ஒரு போத்தில் என்ன விலை தெரியுமா?

அதை விட்டும், யாராவது விளக்கு எரிப்பார்களா?

இதிலிருந்து, நீங்கள் கடையிலை போய் பொருட்கள் வாங்குவதில்லைப் போல் தெரிகிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

Castor oil ( விளக்கெண்ணெய் )

விளக்கெண்ணெய்

எடுக்கப் பயன்படும் “ஆமணக்கு” எனும் தாவரம், இந்தியாவில் பரவலாக எல்லாப்

பாகங்களிலும் எண்ணெய்க்காகப் பயிரிடப்படுகிறது. உடலிற்கு குளிர்ச்சியைத்

தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து

வடித்தெடுக்கப்படுகிறது.

வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த

நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும்,

கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது. குடல்

சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது.

பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய்

பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய்

எடுக்கப்படுகிறது. இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.

மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள்

சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும்.

இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக

வளர்க்கப்படுகிறது.

ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன.

வித்துகளை

உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப்

பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு

நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு

எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து சேர்த்து

அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய்

எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும்,

வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக

மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.

வித்தின்

ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய்

நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள்

எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து

சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு,

நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும்.

மருத்துவ குணம் நிறைந்த

விளக்கெண்ணெய் அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது. கேசத்

துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத்

தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள்

வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.

விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.

விளக்கெண்ணெய்

உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும்.

உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும்.

குழந்தைகளுக்கும்,

பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த

மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை

பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.

பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.

அழகுக்கூடும்…

_________________

castor oil...seeds post-5124-0-02084200-1301926055_thumb.jppost-5124-0-78484200-1301926083_thumb.jp

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

விளக்கு எண்ணை என்றால் ,மண்னனையோ? :D :D

மண்ணெண்ணைக்கு எப்பிடி ராசா,விளங்கேல :lol::lol::lol::lol:

சரியான போட்டி.நிலாமதியக்காவிற்கு ரோசம் வந்திட்டிது போல.ஆமணக்கு விதையில் இருந்து எடுக்கும் எண்ணை தான் விளக்கெண்ணை.

  • தொடங்கியவர்

நிலமதி அக்கா, நல்லெண்ணை ஒரு போத்தில் என்ன விலை தெரியுமா?

அதை விட்டும், யாராவது விளக்கு எரிப்பார்களா?

இதிலிருந்து, நீங்கள் கடையிலை போய் பொருட்கள் வாங்குவதில்லைப் போல் தெரிகிறது. :D

[/quote

ஆனாலும் பாருங்கோ நாங்கள் இல்லாத பேரைச் சொல்லி " சுத்தமான திறம் ஆனைக்கோட்டை நல்லெண்ணை" எண்டு விக்கிறேலை கண்டியளோ :lol::lol::lol::lol::lol:

இங்கு கனபேர் சரியான விளக்குஎண்ணைகள் போலக் கிடக்கு. விளக்கு பற்ற வைக்க தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய், லாம்பெண்ணை, பெற்றோல் எல்லாம் பாவிக்கலாம். :D

குத்து விளக்குக்கு, நீங்கள் மண்ணெண்ணையா விடுறனீங்கள்?

தேங்காய் எண்ணை தான், விளக்கெண்ணை.

விளக்கெண்னை பற்றி விளக்கம் சொன்னதுக்கு நன்றி.

சரி எனக்கு இப்ப தெரியும் விளக்ககெண்ணை

  • தொடங்கியவர்

இங்கு கனபேர் சரியான விளக்குஎண்ணைகள் போலக் கிடக்கு. விளக்கு பற்ற வைக்க தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய், லாம்பெண்ணை, பெற்றோல் எல்லாம் பாவிக்கலாம். :D

எல்லாம் சரி ராசா லாம்பெண்ணை பெற்றோல் எல்லாம் எரிபற்று நிலை கூடவே நீங்கள் விளக்கு கொளுத்தப் போறியளோ இல்லை வீட்டைக் கொளுத்தப் போறியளோ

அதெல்லாம் சரி... :rolleyes: எங்கடையாக்கள் சொல்லுறது போல வெங்காயத்தின்ர ஒரு தனி சிறப்பை இங்கே காண இல்லை... அது என்ன என்று கண்டு பிடிச்சு சரியா சொல்லுறவையளுக்கு ஒரு சாக்கு சிவப்பு வெங்காயம் பரிசாக வழங்கப்படும். ^_^:D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமணக்கிலை கை வைச்சால் விந்துவிருத்தியாகாது கவனமடோய் !!!! அது ஒரு நஞ்சு சாமானப்பா......விளக்கெண்ணைக்கும் மருந்துக்கும் தான் அது சரி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கனபேர் சரியான விளக்குஎண்ணைகள் போலக் கிடக்கு. விளக்கு பற்ற வைக்க தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய், லாம்பெண்ணை, பெற்றோல் எல்லாம் பாவிக்கலாம். :D

ஓ......உங்கடை வீட்டிலை இருக்கிற பெற்றோல்மாக்சை சொல்லுறியளாக்கும்......

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி... :rolleyes: எங்கடையாக்கள் சொல்லுறது போல வெங்காயத்தின்ர ஒரு தனி சிறப்பை இங்கே காண இல்லை... அது என்ன என்று கண்டு பிடிச்சு சரியா சொல்லுறவையளுக்கு ஒரு சாக்கு சிவப்பு வெங்காயம் பரிசாக வழங்கப்படும். ^_^:D:lol:

சின்ன வெங்காயம் விந்து விருத்தியை அதிகரிக்கும்.

காலையில் எழுந்தவுடன் மூன்று சின்ன வெங்காயயத்தை, மென்று சாப்பிட்டால் .........,

மிச்சம் வேண்டாமப்பா.....

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வெங்காயம் விந்து விருத்தியை அதிகரிக்கும்.

காலையில் எழுந்தவுடன் மூன்று சின்ன வெங்காயயத்தை, மென்று சாப்பிட்டால் .........,

மிச்சம் வேண்டாமப்பா.....

தமிழ் சிறி, மூன்று சின்ன வெங்காயத்தோட 'முந்தானை முடிச்சு' படத்திலை வாறமாதிரி முருங்கை இலை வறையும், முருங்கைக் காய்க் குழம்பும் சேர்த்துச் சாப்பிடுங்கோ! வளரிற பிள்ளையளுக்கு உடம்புக்கு நல்லதாம்.'விக்கிலீக்ஸ்' வெளியிட்ட தகவல்.

சின்ன வெங்காயம் விந்து விருத்தியை அதிகரிக்கும்.

காலையில் எழுந்தவுடன் மூன்று சின்ன வெங்காயயத்தை, மென்று சாப்பிட்டால் .........,

மிச்சம் வேண்டாமப்பா.....

காலையிலேயே வெங்காயம் சாப்பிட்டால், அந்த மணத்திற்கு யாரையா பக்கத்தில வருவாள்? :(

என்ன சும்மா விருத்தி செய்து அதை வங்கியிலா போட்டு வைப்பது? :blink:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காலையிலேயே வெங்காயம் சாப்பிட்டால், அந்த மணத்திற்கு யாரையா பக்கத்தில வருவாள்? :(

என்ன சும்மா விருத்தி செய்து அதை வங்கியிலா போட்டு வைப்பது? :blink:

வங்கியிலை போட்டு வைச்சால் பின்னடிக்கு உதவும் ராசா

சின்ன வெங்காயம் விந்து விருத்தியை அதிகரிக்கும்.

காலையில் எழுந்தவுடன் மூன்று சின்ன வெங்காயயத்தை, மென்று சாப்பிட்டால் .........,

மிச்சம் வேண்டாமப்பா.....

SuperStock_1889R-35932.jpg

small_red_onion.jpg

SHALLOT%20ONIONS.jpg

சண்டை பிடிக்காமல் ஆளுக்கொன்றா பகிர்ந்து எடுங்கோ.... :lol::D

SuperStock_1889R-35932.jpg

small_red_onion.jpg

SHALLOT%20ONIONS.jpg

சண்டை பிடிக்காமல் ஆளுக்கொன்றா பகிர்ந்து எடுங்கோ.... :lol::D

குட்டி,

சிறி சொன்னது சின்ன வெங்காயம். இங்கு நீங்கள் இணைத்துள்ளது பம்பாய் வெங்காயம் என நினைக்கிறேன். இதை சாப்பிட்டால் வேறு ஏதும் விருத்தியாகுமோ தெரியாது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

z_page-12-Jaffna01.jpg

வெங்காயம் பெரிசாய் இருந்தால்.... அதனால், நீங்கள் எதிர்பார்க்கும் பலன் குறைவு. :D:lol:

வெங்காயம் பெரிசாய் இருந்தால்.... அதனால், நீங்கள் எதிர்பார்க்கும் பலன் குறைவு. :D:lol:

சிறி உங்கட கதையை கேட்டு வீட்டில் ஒரு பெரிய சின்ன வெங்காயத் தோட்டமே போட்டுள்ளேன். இன்னும் ஒரு நாலு மாதத்தால் தெரியவரும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி உங்கட கதையை கேட்டு வீட்டில் ஒரு பெரிய சின்ன வெங்காயத் தோட்டமே போட்டுள்ளேன். இன்னும் ஒரு நாலு மாதத்தால் தெரியவரும். :lol:

:D:D:lol:

எந்தத் தலைப்புக்குப் போனாலும் இந்த விசயத்தைக் கொண்டு வந்து புகுத்துகிறீர்கள். இதாலை யாழுக்கு வராமல் இருக்க முடியுதில்லை. :lol::lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.