Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த!

Posted by uknews On April 19th, 2011 at 12:20 pm / No Comments

இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும்; நடவடிக்கைகள் குறித்து தாம் அதிருப்தி கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து தாம் அவதானித்து வருவதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

saritham.com

  • கருத்துக்கள உறவுகள்

ம் எனக்கும் தான் கோவம் வருது. ஆனால் எளியவர்களின் கோபம் சபைக்கு ஏறாது.. :(

நான் அன்றிலிருந்து சொல்லி வருவது அதுதான் பன்னி கிரவுடை கிளியர் பண்ண தோழரின் வழிமுறை.. அதை செயல் படுத்தினால் உலகத்தின் மக்கள் தொகை + இயற்கை சீரழிவுகளில் இருந்து ஏனைய மக்களை உலகத்தினை இயற்க்கையை காப்பாற்றலாம் <_<

பன்னி பயல்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள்

E-mail: ingaf.itec@gmail.com. Mobile: +91 9810608689 or +91 9811050155 .

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

8718peacock_wrk1.jpg

மயிலே மயிலே என்றால் இறகு போடாது...

தம்புடு எவனும் அங்கு வெளிநாட்டில் இந்திய தூதரகத்தினை கல்லால் அடித்து அங்குள்ளவர்களை செருப்பால் அடித்து முடக்காதவரை .. விடிவு லேமு.. இவனுங்கள் செய்யறவனையும் விடமாட்டான் தானும் செய்யமாட்டான்.. அடித்து உதைத்தால் தான் நடுநிலைமையில் ஆவாது நிற்க வைக்கலாம்..

டிஸ்கி:

அப்ப தமிழ்நாட்டில் .. அப்புறம் என்ன வழக்கம் போல ஆர்பாட்டம்... உண்ணாவிரதம் .... தீக்குளிப்புத்தான்... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government’s plans

Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government’s plans to organize several activities against the UN Panel Report on Sri Lanka. TGTE will create an Expert Panel to counter Sri Lanka’s anti-UN report and will meet different governments to counter Sri Lanka’s propaganda against UN report.

New York, NY (PRWEB) April 19, 2011

Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government’s plans to organize several activities against the UN Panel Report on Sri Lanka. The leaked report was published in the news paper The Island.

TGTE will set up an expert panel to study the Sri Lanka’s anti-UN report and to produce a counter-report challenging Sri Lankan government’s findings. It will meet different Government’s to counter Sri Lankan government’s propaganda against the UN report. It will also campaign for the UN to refer Sri Lanka to the International Criminal Court’s Prosecutor as well to organize an international commission of Inquiry as suggested by the report.

According to Sri Lanka’s Sunday Times news paper, the Sri Lankan government is creating a panel to review the UN report and produce a white paper to counter the findings on the UN report and to brief countries in Asia, Africa and Latin America to solicit support for Sri Lanka. The Sri Lankan President Mahinda Rajapakse has urged his supporters to rally on May 1 st for an anti-UN rally in the capital Colombo.

This UN report corroborates what TGTE and others have been saying all along about the mass killing of Tamils. The report explicitly mentions war crimes and crimes against humanity. Sri Lankan government’s publicity stunt to white wash the Tamil killings has failed by the publication of this report said TGTE.

The report highlights rape, summary execution, enforced disappearances, widespread shelling, denial of food, and medicine and government’s attempts to intimidate and silence media. The Sri Lankan government’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) also came under strong criticism in this report. “LLRC is deeply flawed, does not meet international standards for an effective accountability mechanism….” said the report.

Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected body of the Tamil diaspora. It held elections in twelve countries to elect Members of Parliament. It drafted and adopted a Constitution, elected a Prime Minister, Speaker and a ten member Cabinet.

Contact Deluxon Morris (UK): Tel: +(44) 7940020758 or Email: warcrime (at)tgte(dot)org

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகள் எல்லாமே கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நாடுகள்.

இந்தியா - காஷ்மீர் மற்றும் மாவோயிஸ்டுக்கள் விடயமாக பலத்த மனித உரிமை மீறல்களை செய்து வருகிறது. இதனை மனித உரிமை அமைப்புக்கள் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளன.

மலேசியா - சிறுபான்மையினரின் உரிமைகளை சரியாக மதிக்காது மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்சியாக வெளிவரும் வகையில் செயற்படும் நாடாக மலேசியா விளங்குவதோடு கடாபி வரிசையில் ஆட்சி நிகழும் நாடாகவும் அது விளங்கிறது.

பாகிஸ்தான் - மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு மிக அண்மையில் உள்ளாகி இருந்ததோடு தலிபான்கள் என்ற போர்வையில் சொந்த மக்களை படுகொலையும் செய்து வருகிறது.

இந்தோனிசியா - மனித உரிமைகள் விடயத்தில் கிழக்கு தீமோரில் இருந்து அச்சே வரை மிக மோசமான மனித உரிமை மீறல்களை செய்த நாடு.

தென் ஆபிரிக்கா - கறுப்பின ஆட்சியில் மனித உரிமைகளை மதிப்பதில் முன்னேற்றம் இருந்தாலும்.. அதன் சிறீலங்காவின் போர் குற்றம் தொடர்பான இந்த நிலைப்பாடு தெளிவற்ற ஒன்றாக இருக்கிறது.

தென்னமெரிக்க நாடுகள்- தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் இவற்றின் மீது பதியப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமன்றி சீனா.. இந்தியா.. பிரேசில்.. ரஷ்சியா அடங்கிய கூட்டமைப்பு அண்மையில் கூடி லிபியா மீதான மேற்குலக தாக்குதலுக்கு தமது கட்டணத்தை பதிவு செய்தனர். லிபியாவில் கடாபியின் கொடுங்கோல் ஆட்சியை காந்திய தேசம் வரவேற்று நிற்பதுதான் அதன் பஞ்சசீலக் கொள்கை போலும்.

நேருவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அவரின் பஞ்சசீலக் கொள்கைக்கும் பஞ்சம் வைப்பதுதான் வேடிக்கை..! இந்தியா சீனா.. தமது பிராந்தியத்தில் மேற்குலகின் செல்வாக்கை தடுக்க சிறீலங்காவை பாதுகாக்க முனைகின்றன. சிங்களம் அதை தமக்கான கவசமாகப் பயன்படுத்தி வருகிறது.

இதனை மாற்றும் வகைக்கு.. ஐநாவின் இந்தக் குற்றச்சாட்டை சரியான வகையில் தமிழ் மக்கள் கையாள வேண்டும். நாம் மிகவும் தந்திரமாக இதனை செய்ய வேண்டும். சிறீலங்காவிற்கு இப்படியான ஒரு இராஜதந்திரத்தை வகுத்துக் கொடுத்தது.. லக்ஸ்மன் கதிர்காமர். ஆனால் அவரின் எதிர்பார்ப்பை விடுதலைப்புலிகள் போர்க்கள வெற்றிகளூடு தற்காலிகமாக பலவீனப்படுத்தி நின்றனர். இன்று அந்த நிலை இல்லை. முழுக்க முழுக்க நாம் எமது இராஜதந்திர நகர்வுகள் மூலமே இந்த சக்திகளை முறியடிக்க வேண்டும். அத்தோடு உலகத்தமிழினம்.. ஒன்றுபட்டு ஒற்றுமையாக நிற்க வேண்டும்.

தமிழக மக்களின் ஆதரவை நாம் நிரந்தரமாக திரட்டிக் கொண்டால் நமக்கு இன்னும் இன்னும் பலம் சேரும்.

Edited by nedukkalapoovan

இந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் குதியுங்கள், வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government’s plans

Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government’s plans to organize several activities against the UN Panel Report on Sri Lanka. TGTE will create an Expert Panel to counter Sri Lanka’s anti-UN report and will meet different governments to counter Sri Lanka’s propaganda against UN report.

New York, NY (PRWEB) April 19, 2011

Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government’s plans to organize several activities against the UN Panel Report on Sri Lanka. The leaked report was published in the news paper The Island.

TGTE will set up an expert panel to study the Sri Lanka’s anti-UN report and to produce a counter-report challenging Sri Lankan government’s findings. It will meet different Government’s to counter Sri Lankan government’s propaganda against the UN report. It will also campaign for the UN to refer Sri Lanka to the International Criminal Court’s Prosecutor as well to organize an international commission of Inquiry as suggested by the report.

According to Sri Lanka’s Sunday Times news paper, the Sri Lankan government is creating a panel to review the UN report and produce a white paper to counter the findings on the UN report and to brief countries in Asia, Africa and Latin America to solicit support for Sri Lanka. The Sri Lankan President Mahinda Rajapakse has urged his supporters to rally on May 1 st for an anti-UN rally in the capital Colombo.

This UN report corroborates what TGTE and others have been saying all along about the mass killing of Tamils. The report explicitly mentions war crimes and crimes against humanity. Sri Lankan government’s publicity stunt to white wash the Tamil killings has failed by the publication of this report said TGTE.

The report highlights rape, summary execution, enforced disappearances, widespread shelling, denial of food, and medicine and government’s attempts to intimidate and silence media. The Sri Lankan government’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) also came under strong criticism in this report. “LLRC is deeply flawed, does not meet international standards for an effective accountability mechanism….” said the report.

Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected body of the Tamil diaspora. It held elections in twelve countries to elect Members of Parliament. It drafted and adopted a Constitution, elected a Prime Minister, Speaker and a ten member Cabinet.

Contact Deluxon Morris (UK): Tel: +(44) 7940020758 or Email: warcrime (at)tgte(dot)org

நல்ல முயற்சி. நாம் எதிரியையும் அவனுக்கு துணை நின்றவர்களையும் அவர்களின் நிகழ்கால.. எதிர்கால சதிகளையும் முறியடிக்கக் கூடிய வலுவான இராஜதந்திரக் கட்டமைப்பை நிறுவி வைத்திருக்க வேண்டும். இன்று நடப்பது இராஜதந்திர யுத்தம். நாம் எம்மை இதற்கு தயார் செய்யாமல் எனியும் இருப்போமானால்.. போர்க்களத்தில் மட்டுமல்ல.. இராஜதந்திர ரீதியிலும்.. அரசியல் ரீதிலும் நாம் தோல்விகளை சந்திக்க வேண்டி வருவதோடு தெற்காசியாவில் எமது இனத்தின் இருப்பு கேள்விக்குரியதாகி விடும்.

சிங்களத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை, முக்கியமாக நாட்டுக்குள்ளே, கொடுப்பது கூட இராசதந்திர நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும்.

- 'மகிந்தா குடும்பம்' - இதை அகற்றுவதுதான் நாட்டுக்கு இன்றைய நிலைமையில் நல்லது என்றொரு அலையை சிங்கள மத்தியில் உருவாக்கப்படல் வேண்டும்

- ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குள் இருக்கும் புகையை ஊதிவிடல் வேண்டும்

- பொருளாதார நெருக்கடிகள் சடுதியாக ஏற்படல் வேண்டும்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒன்றை மட்டும் தயவு செய்து கவனியுங்கள். இந்த நாடுகள் அணி சேரா நாடுகள் அல்ல. இவை எமது இனத்தை அழிக்க ஒன்று சேர்ந்த நாடுகள்.அதிகமாக மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளும் இவை தான். இவை ஒன்றின் முதுகை மற்றவை சொறிந்து கொள்வது, தாங்களும் இந்த அணி சேரா நாடுகளின் அமைப்பில் அங்கத்தவர்கள் என்று காட்டுவதற்காக.ஒரே அணியில் சேர்ந்துள்ள இந்த நாடுகள், தங்கள் தலைவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், தங்கள் குற்றங்களை மறைக்கவும் ஒரே அணியில் திரண்டுள்ளன!!!

  • கருத்துக்கள உறவுகள்

தோலுரிக்கப் போகும் ஐ.நா அறிக்கை - தர்மசங்கடத்தில் இந்தியா

போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது தொடர்பான ஆதாரங்களை, இந்த வாரத்தில் ஐ.நா. அறிக்கையாக வெளியிடுகிறது என்ற பரபரப்பு தகவலால் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மற்றொரு சான்று கிடைத்துள்ளதை ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’என்ற இணையம் கடந்த வாரம் வெளியிட்டது.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பொதுமக்களின் சடலங்களைத் தெளிவாகக் காட்டமுடியவில்லை என்றும் அந்த இணையம் வேதனைப்பட்டுள்ளது.எனினும்,புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என்றும் ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது செயற்கைக்கோள் மூலம் யுத்த நிலவரங்களை சேகரித்துள்ளார். இதன் மூலம் வன்னியில் ஏற்கெனவே பொதுமக்கள் ஒன்றுகூடிய இடங்கள்,வீரர்கள் ஓய்வெடுத்த இல்லங்கள், பொதுக்கட்டடங்கள்,பொதுமக்களின் பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றின் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியதை உறுதி செய்திருக்கிறார்.

இந்நிலையில்,அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில், “இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 70 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இலங்கை அரசின் முகாம்களில் இருந்த 13ஆயிரத்து 113 பேர் காணாமல் போனார்கள்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கருத்தரங்கில் அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி காருண்யன் அருள்நாதன் பேசுகையில், “2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆயிரம் தமிழர்களும், மே மாதம் மட்டும் 25 ஆயிரம் தமிழர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே,புலிகள் தலைமை தயாரித்த கேசட்டைத் தேடும் வேட்டையும் துவங்கியிருக்கிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் புலிகளின் தலைமையால், ‘அறிவித்தல் வீடியோ’ ஒன்று அவசர, அவசரமாகத் தயாரிக்கப்பட்டது. இறுதிப் போரில் புலிகள் பின்னடைவை எட்டிய நிலையில்,ஆனந்தபுர போருக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பல அதிர்ச்சியான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளதாம்.

புலம்பெயர் நாடுகளில் யார்,யார் தலைமை ஏற்க வேண்டும், நிதித்துறைக்கு யார் பொறுப்பு,மற்றும் நாடு வாரியாகப் பிரித்து, யாரெல்லாம் புலிகளுக்காக இயங்கலாம் போன்ற பல விஷயங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக அதில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புலிகள் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை உணர்ந்து,தங்கள் இயக்கத்தின் எதிர்கால செயல் வடிவம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பல விஷயங்கள் அதில் விளக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த வீடியோவை எடுத்ததாகச் சொல்லப்படும், நம்பிக்கைக்குரிய போராளி ஒருவர் இது குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு அது அனுப்பப்பட இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

‘கணினி வீடியோ கோப்புக்கு மாற்றப்பட்டு வெளி நாட்டிற்கு அனுப்பப்பட்டதா? இல்லை... அதை கணினிக்கு மாற்றும் முன்னரே போர் முடிவுக்கு வந்ததா? என்று எனக்குத் தெரியவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார். அப்படி அது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதனை சுயநலம் கருதி சிலர் மறைத்து வைத்திருக்கலாம். அல்லது அதனை வெளிநாட்டுக்கு இணையம் மூலம் அனுப்பும் முன்னர் இதன் முழுப்பகுதியும் ராணுவத்தின் கைக்கு வந்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைமை அடுத்த போராட்டத்தை எவ்வாறு முன் நகர்த்துவது, பொறுப்பாளர்களாக, செயற்பாட்டாளராக, இணைப்பாளராக மற்றும் நிதிப் பொறுப்பாளராக எவர், எவர் இருக்கவேண்டும் என்பதனை நாடுவாரியாகப் பிரித்து அறிவித்துள்ளனர்.

தமக்கு நம்பிக்கைக்கு உரியவர்களின் பெயரையும், போராட்டத்தை முன்னெடுக்க ஏற்றவர்களையும் அவர்கள் முன்மொழிந்துள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் சென்றால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால் அந்த வீடியோ கேசட் தற்போது எங்கு உள்ளது என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இது சிங்கள ராணுவத்தின் கைகளுக்குச் சென்றிருந்தால், புலிகளுக்கு நம்பிக்கையானவர் யார், யார் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் மேலும் சூடு ஏற்படுத்தும் வகையில் இலங்கை போர் குறித்து ஆய்வு செய்துள்ள ஐ.நா. நிபுணர் குழு இருநூற்று இருபது பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்திருக்கிறது அதில், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச தன்னாட்சி பெற்ற ஆணைக்குழு ஒன்றை ஐ.நா.நியமிக்க வேண்டும் என ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விஷயங்களே காணப்படுகிறதாம்.

இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக சற்று மௌனம் காப்பது நல்லது என இலங்கை அரசு கருதுவதாகவும், எது நடந்தாலும் அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்போம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அரசு வட்டாரங்களில் பேசப்படுவதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். ஐ.நா.வின் அறிக்கை ஒருவாரத்துக்குள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இலங்கை ராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா கடந்த புதன்கிழமை பேசுகையில், “இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் நிதி உதவிகளைப் பயன்படுத்தி புதிய ராணுவ வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளோம்’என்று கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது ஐ.நா.ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்குப் பாதகமாக வெளிவரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை உலகத் தமிழர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

- குமுதம் ரிப்போட்டர்

எனக்கென்னவோ எல்லாத்தையும் வாசிக்க தலையை சுத்துது.

எனக்கு தெரிந்த அறிவிற்கு அமெரிக்காவை மட்டும் நாம் முடிந்த மட்டும் இந்த விசயத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கப்பண்ணினால் அனைத்து விடயங்களும் எமக்கு சாதகமாக அமையும்.

இந்த அறிக்கையும் இதனால் தமிழன் பெறக்கூடிய நன்மையும் நாளை எனக்கு தெரிந்ததை விரிவாக எழுதுகின்றேன்

இவரும் இப்படிச் சொல்லி தூபம் போடுகிறர்கள்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் 600 சிவிலியன்களை கொன்றொழித்தனர்: முன்னாள் எம்.பி. கனகரத்தினம்

இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 600 சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கொன்றொழித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் குற்றம் சாட்டுகின்றார்.ஆசியன் ட்ரிபியூன் ஆங்கில இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரையும் படுகொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிவிலியன்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட போதே தான் அதனைக்கண்டதாகவும், விசாரித்துப் பார்த்தபோது அவர்கள் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இரகசியப் பொலிசார் நான்காம் மாடியில் தன்னைத் தடுத்து வைத்து விசாரித்த போது தான் இந்த விபரங்களை குறிப்பிட்டிருந்த போதிலும் அவர்கள் அது தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

http://news.lankasri.com/view.php?222IBJ300jjQA4eeGGprcbb992Wddd2293bccppG3e44QQj3023LLc32

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கும் தமிழர்கள் தெளிவான செய்தியைக் கொடுக்க வேண்டும். அரபு நாடுகளுக்கிடையில் அமெரிக்க நலன் பேணும் இஸ்ரேல் போல் இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கிடையில் அமெரிக்க சார்பான நாடாக நாங்கள் அவர்களுக்குத் தேவை என்ற விதத்தில் இராஜதந்திர ரீதியில் அவர்களை எங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.மேலும் லிபியா மீதான நடவடிக்கைக்கு மேற்குறித்த சிறிலங்கா சார்பான ஆதரவளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.அமெரிக்காiயும் பிரித்தானியாவையும் எங்கள் பக்கம் திருப்பினால் எங்கள் வெற்றியை யாராலும் முறியடிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.