Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

* போர்க்குற்றம் : சிறீலங்காவிற்கு சீனா – ரஸ்யா – இந்தியா உதவி செய்ய இனி வாய்ப்புக்கள் இல்லை.

Featured Replies

சர்வதேச சட்டத்தை சிங்களவரும், தமிழரும் இணைந்து மதிப்பதைத் தவிர புதிய உலகில் மாற்று வழிகள் இல்லை.

சீனாவும், ரஸ்யாவும் நமக்கு ஆதரவாக ஐ.நாவில் முழங்கும், அவர்களுக்குள்ள வீட்டோ அதிகாரத்தால் அதைத் தடுக்கும் என்று சிங்கள இனவாத அரசியல் சிந்தனையளர் கடந்த சில தினங்களாக முழங்கி வருகிறார்கள்.

ஆனால் ஐ.நாவின் அடுத்த கட்ட பணிகளுக்கான நிகழ்ச்சி நிரல்களை அவதானிக்கும்போது இந்தக் குரல்கள் கிணற்றுத் தவளைகளின் முழக்கம் போலவே தென்படுகின்றன. 21 ம் நூற்றாண்டின் உலக நகர்வை 20 ம் நூற்றாண்டு கோட்பாடுகளால் தீர்க்க முடியாது என்பதை இன்றைய உலகத் தலைவர்கள் அனைவரும் புரிந்துவிட்டார்கள், சிறீலங்காவைத் தவிர.

பிரான்சின் தலைமையில் உலகத்தின் புதிய அணி மாற்றம் ஒன்று மிக இரகசியமாக நடந்துவிட்டதையும், கிறீஸ்துவின் கடைசி இராப்போசனம் போல அதுவும் முக்கியமான விடயமே என்றும் சென்ற மாதம் இதே பகுதியில் எழுதியிருந்தோம்.

இன்று அதனுடைய சரியான தாக்கம் வெளியாகியுள்ளது.

தாக்கம் 01

நேற்று ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் உரையாற்றிய பிரான்சின் பிரதிநிதி கராட்அருட் கூறும்போது, பாலஸ்தீன தனியரசை பிரான்ஸ் பிரகடனம் செய்ய யோசித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே அமெரிக்கா இந்த விவகாரத்தில் இனி தலையிடாமல் விலகிக் கொள்ளும் என்ற கருத்து பாதுகாப்பு சபையில் உணர்த்தப்பட்டுள்ளது. பல புதிய நாடுகளும், புதிய தீர்வுகளும் வரப்போகின்றன. உலக நாடுகளின் பழைய உறுதிகளும், தோம்புகளும் திருத்தி எழுதப்படப்போகின்றன என்பதற்கு இது ஓர் அடையாளம்.

தாக்கம் 02

லிபியா மீதான ஐ.நாவின் பிரேரணை வந்தபோது சீனா, ரஸ்யா இரண்டும் கேணல் கடாபிக்கு சாதகமாக வீட்டோவை பயன்படுத்தவில்லை.

ரஸ்யா தனது எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும் என்று பிரதமர் புற்றின் கேட்டிருந்தார். அதனால் அவருக்கும் அதிபர் றிமிட்ஜி மிடேவ்விற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது புற்றின் தான் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். ஆக ரஸ்யா இனி புற்றினின் ரஸ்யா இல்லை.

ரஸ்யா இனிமேல் வீட்டோவை சமர்ப்பிக்கும் சிறீலங்காவை காப்பாற்றும் என்று கருத வாய்ப்பில்லை. காரணம் எண்ணெயை கப்பல் கப்பலாக வழங்கிய கடாபியையும், பணத்தை கெட்டியிறைத்த ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட்டையும், உயிர்போல நம்பியிருந்த சதாம் உசேன் தூக்கில் ஏற்றப்படும்வரையும் ரஸ்யா மௌனம் காத்தது. அது நம்பியவருக்கு உதவும் நாடல்ல.

தாக்கம் 03

இன்று வெள்ளி அதிகாலை 04.30 மணிக்கு பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க ஏவுகணைகள் ஐந்து ஏவப்பட்டு பாகிஸ்தானிய இராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த மார்ச் 17ம் திகதி ஏவப்பட்ட ஏவுகணையில் 39 பேர் மடிந்தது தெரிந்ததே.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக கம்போடியாவும் – தாய்லாந்தும் தமக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஐவர் கொல்லப்படுமளவுக்கு எல்லைப்புற மோதல்களை நடாத்தியுள்ளன.

இப்படி தெற்கு ஆசியாவின் ஓரப்புற சேலைகள் மெல்ல தீப்பற்ற ஆரம்பித்துவிட்டன. இதில் முதலில் பற்றப்போவது சிறீலங்கா பின் பர்மா, கம்போடியா, தாய்லாந்து என்று வரிசையாக கச்சேரிகள் நடக்கப் போவது தெரிகிறது..

தாக்கம் 04

கடந்த 1973ம் ஆண்டு ஐ.நாவின் சட்டத்தின் மீள்வரவு அமோகமாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐ.நாவால் வழங்கப்பட்ட அத்தனை அதிகாரங்களையும், நாடுகளை வைத்திருக்கும் ஆட்சியாளர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். இதற்கு சிறீலங்கா, யுகோசுலாவியா, வடக்கு ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, ஐவரிக்கோஸ்ட் என்ற நாடுகள் நல்ல உதாரணம். இவைகள் அனைத்தையும் பட்டியலிட்டால் அணிசேரா நாடுகள் என்ற தலைப்பு தானாக வெளிவரக் காணலாம். இந்த நாடுகளில் பல 1973ம் ஆண்டு ஐ.நா சட்டத்தை மதித்து நடக்கவில்லை.

அதிகாரம் படைத்த ஓர் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மக்களையே கொலை செய்தால் அது ஐ.நாவாலும், சர்வதேச சமுதாயத்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே என்பது ஐ.நாவின் உறுதியான கொள்கை. எகிப்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக் மீது நேற்று சுமார் 846 பொது மக்களை கொன்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்தனை 01

இந்த நான்கு நிகழ்வுகளையும் தொகுத்துப் பார்த்தால் புதிய உலக ஒழுங்கு போகும் போக்கில் சிறீலங்கா அரசு தனித்து விடப்படும். கடந்த 60 ஆண்டுகால இனவாத துஷ்பிரயோக ஆட்சிக்கான கொடுப்பனவுகளை அது கொடுக்க வேண்டிய பருவம் வந்துவிட்டதையே உணர முடிகிறது.

சிந்தனை 02

ஐ.நாவின் இன்றைய போக்கை இந்தியாவும் எதிர்க்காது. முறைப்படி பார்த்தால் 1973ம் ஆண்டு சட்டத்தின் வரவில் அதிகம் பாதிக்கப்படவேண்டிய நாடுகள் இந்தியாவும், சீனாவுமே. இந்த உண்மையை இனியும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

சோனியா காந்தி சென்ற மாதம் இங்கிலாந்து வந்தபோது இந்தப் புதிய தகவல்களை இங்கிலாந்து பிரதமருடன் விவாதித்திருப்பார். ஈழத் தமிழருக்கான கவலைப் படுவதாக அவர் நாக்கினால் சொன்னாலும்கூட இனி அதை உள்ளத்தால் பேசவேண்டியதே கடைசி வழி.

சிந்தனை 03

சீனாவும் வல்லரசு என்ற நிலையில் இருந்து கடந்த மார்ச் மாதம் 11 ம் திகதி குப்புற வீழ்ந்திருக்கிறது. ஜப்பானில் புக்குசீமா அணு உலை வெடிப்பு ஜப்பானிய பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. அதுபோல 24 அணுசக்தி நிலையங்களை கட்டி வைத்திருக்கும் சீனா தனக்கான தூக்குக் கயிறே அதுதான் என்பதை புரிந்துள்ளது.

சீனா – ரஸ்யா – ஜேர்மனி போன்ற நாடுகள் தத்தமது அணுசக்தி நிலையங்களின் றீ ஆக்டரை உருக வைத்தால் – அல்லது அதற்கான நீர்க்குழாயை உடைத்தால் 24 மணி நேரங்களில் குப்புற விழுந்துவிடுவோம் என்பதை உணர்ந்துவிட்டன.

புக்குசீமா உடைவு ஜப்பானின் உடைவு மட்டுமல்ல, பல வல்லரசுகளின் உடைவே. ஆகவே அனைவருமே சர்வதேசத்தின் தாள லயத்திற்கு ஆடுவதைத் தவிர வேறு சதுராட்டங்கள் எதையும் போட முடியாது.

( இதற்கான தலைமை இரகசியம் தெரிந்த முதல் நாடு அமெரிக்கா அல்ல பிரான்ஸ்தான்.. இது பின்னர் பார்க்கப்பட வேண்டிய தனிக்கட்டுரை. )

இதேவேளை ஈழத் தமிழர்கள் தமது பக்கத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறீலங்கா அரசாங்கத்தைப் போலவே புலிகளும் பாரிய யுத்தக் குற்றங்களை புரிந்துள்ளார்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இதற்கான தார்மீகப் பொறுப்பை தமிழ் மக்கள் புறந்தள்ளி, சிங்களவர் மட்டுமே குற்றவாளிகள் என்று கூற முடியாது. அதற்கான இடம் ஐ.நா அறிக்கையில் இருப்பதாக தெரியவில்லை.

ஐ.தே.கவும், விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற இடதுசாரிகளும் விடும் மடைத்தனமான தவறுகளை நாமும் விடக்கூடாது.

ஐ.நாவின் 1973ம் ஆண்டு சட்டத்தை கையிலேந்தி வரும் இந்த சுனாமி அலை பழையவர்களை புறந்தள்ளி, இரத்தக்கறை படியாத கரங்கள் கொண்ட மக்கள் ஜனநாயகம் மலர உதவும் வாய்ப்புக்கள் உண்டு. தேர்தலில் மக்களே தமது தலைமைய தெரிவு செய்வர். அந்தத் தேர்தலில் இப்போதுள்ள பல கட்சிகள் போட்டியிட முடியாத நிலை வரும்..

இது ஒரு தூரப்பார்வை -

பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. சிறீலங்கா கண்களை இறுகி மூடாது சர்வதேச சட்டங்களை மதித்து ஒழுக வேண்டும். சீனாவும், ரஸ்யாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் மதில்மேற் பூனைகளே. அவை இன்றைய உலக நகர்வை ஏற்று அமைதியாகப் படுத்துவிட்டன. இந்த நாடுகள் அநீதிக்கான உதவியை வழங்கி உலகத்தை ஏமாற்றிய 20 ம் நூற்றாண்டும் முடிந்துவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த நாடுகள் செய்த செயலைப் பட்டியலிட்டால் இதன் அவசியத்தை உணர முடியும்..

சர்வதேச சட்டங்களையும், மாற்றங்களையும் ஏற்று வழிவிடாவிட்டால் தமிழராக இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும் இந்த உலகப்பேரலை அவர்களைத் தூக்கி வீசும்.

-அலைகள்-

  • கருத்துக்கள உறவுகள்

:( யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் மேலும் மனிதவுரிமை மீறல்க் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.

கட்டாயப்படுத்தி ஆட்களைச் சேர்த்தல், மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தது, தப்பியோட முனைந்த மக்கள் மேல் துப்பாகிப் பிரயோகம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை மக்களும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றைக்குப் புலிகளின் முக்கிய தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லாத தருணத்தில், வெளிநாடுகளில் புலிகளுக்காக பணம் சேர்த்தவர்கள், ஆலோசகர்களாக இயங்கியவர்கள் மீது போர்கூற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்று ஐ.நா வின் உதவிச் செயலாளர் நாசுக்காகக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. இதையே தான் ஐ.தே க வும், "அரசின் இந்த போர்க்குற்றச்சாட்டு அறிக்கையின் மீதான எதிர்ப்பால் புலிகளும் காப்பாற்றப்படப் போகின்றனர்" என்று கூறியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான நமது பதில் என்ன?? இலங்கையை தூக்கிலேற்றும்வரை நாம் இவற்றை ஆமென்று ஏற்றுகொள்வதுதான் வழியா?? அல்லது இவ்வாறு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க எம்மிடம் சான்றுகள் இருக்கின்றனவா??

புலிகளும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதைக் காட்டுவதற்கான சான்றுகளையும் இந்தக் குழுவினர் சேகரித்து வைத்திருக்கின்றனராம். அல் ஜசீராவில் வந்த ஒளிப்படமொன்றில், கடல் கரையொன்றினூடாக தப்பியோட முயலும் மக்கள் கூட்டத்தை மீண்டும் கலைப்பதற்கு புலிகளின் போராளியொருவர் பயமுறுத்தும் வகையில் அவர்களின் கால்களுக்கு அண்மையாக துப்பாகிப் பிரயோகம் செய்வது காட்டப்படுகிறது.இந்த ஒளிப்படம் சிங்கள வேவு விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் நிச்சயம் எமக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து.

அதேபோல வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் அண்மைய ஏசியன் ட்ரிபியூன் செவ்வியும் நோக்கத்தக்கது. தீவிர புலி எதிர்ப்பு இணையத்தளத்தில் இது வந்துள்ளதால் இதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது.அதுமட்டுமல்லாமல், கனகரத்தினத்தின் மகன் இதுவரை ராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நிர்ப்பந்தத்தினால்த்தான் அவர் இவ்வாறு செவ்விகளையும், கருத்துக்களையும் கூறிவருவதாகவும் இன்னொரு செய்தி கூறுகிறது. இறுதிவரை புலிகளுடன் இருந்த ஒரே பாராளுமன்ற உறுப்பினரான இவர் தற்போது நடந்துகொள்ளும் விதம் முழுக்க முழுக்க நிர்ப்பந்தத்தினால்த்தான் என்றாலும், அவரால் மிகைப்படுத்துப்பட்டு கூறப்பட்ட செய்திகளிலும் உண்மைகள் இருக்கலாம். அவர் கூறியது போன்ற 600 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிலராவது கொல்லப்பட்டிருந்தால், அது தவறென்பதே எனது கருத்து.

இங்கு பலருக்கும் இது சங்கடமான விடயமென்பது எனக்குத் தெரியும். நாம்விட்ட பிழைகளை ஆராய்வதில் நாம் பின்னிற்கக் கூடாது. தொடர்ந்து எம்மைச் சரிப்படுத்திக் கொள்வதற்கு பிழைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மிக அவசியம்.

உங்கள் கருத்து என்ன??

ரகுநாதன்,

இவற்றை புலிகள் செய்தார்களா இல்லையா என்பதை ஆராயும் நேரம் இதுவல்ல. இலங்கை அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்பதை நிரூபித்து அதன் மூலம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழ ஒரு தீர்வு கிடைக்க முயல்வதே இன்றுள்ள எமக்கான தெரிவு. அத்துடன், புலிகள் பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள் என்பதையும் தப்பிப் போக நினைத்த மக்களை தண்டிக்க முயன்றார்கள் என்பதையும், மக்களை கவசமாக பயன்படுத்த முயன்றார்கள் என்பதையும் இனியும் மறைக்க முயல்வதும் அதற்காக எம் சக்திகளை செலவளிப்பதும் ஈற்றில் தோல்வியைத் தான் எமக்கு தரும், ஏனெனில் புலிகள் எப்படி (தலைமையின் உத்தரவின் கீழாகவா இல்லையா என்பதுக்கு அப்பால்) இறுதியில் நடந்து கொண்டார்கள் என்பது எம்மை விட வேறுயாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இன்று புலிகளின் தலைமை இல்லை, மிச்ச போராளிகள் கொல்லப்பட்டோ அல்லது சரணடைந்தோ விட்டனர். அவர்களின் வெளிநாட்டு முக்கியஸ்தர் கேபியும் இன்று கைதி. அரசியல் ஆலோசகர் அன்ரன் அண்ணையும் இல்லை. இனி யாரை புலிகளின் போர்க் குற்றதுக்காக தண்டிக்க போகின்றனர்? கோஷ்டி போட்டு பிரிந்து தமிழர் பலத்தை சிதைக்க முனையும் அல்லக்கை கோஷ்டிகளையா?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

அண்மைக்காலம் வரையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நாம் நம்பவில்லை. அப்படி நடந்திருக்காது என்றுதான் நான் பலருடனும் விவாதித்து வந்தேன். ஆனால் அவற்றில் சில உண்மை என்று அண்மையில் அறிந்துகொண்ட போது மிகவும் வேதனையாக இருந்தது. அதனைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். மற்றும்படி அவற்றைக் கிளறி இப்போது நடந்துவரும் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திருப்புவது எனது நோக்கமல்ல.

இவ்வாறான சில நடவடிக்கைகள்தான் சர்வதேசத்தில் எம்மைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் நான் நினைக்கிறேன். சரி அதை விடுங்கள், இப்போது அதுபற்றி பேசுவதற்குத் தருணமில்லை.

நீங்கள் சொல்லியது போல், இந்தப்போர்க்குற்ற விசாரணைகளின் வெற்றியென்பது எமக்கான விடுதலையைப் பெற்றுத்தருவதில்த்தான் தங்கியிருக்கிறது என்றே நானும் நினைக்கிறேன்.

நிழலி,

அண்மைக்காலம் வரையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நாம் நம்பவில்லை. அப்படி நடந்திருக்காது என்றுதான் நான் பலருடனும் விவாதித்து வந்தேன். ஆனால் அவற்றில் சில உண்மை என்று அண்மையில் அறிந்துகொண்ட போது மிகவும் வேதனையாக இருந்தது. அதனைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். மற்றும்படி அவற்றைக் கிளறி இப்போது நடந்துவரும் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திருப்புவது எனது நோக்கமல்ல.

இவ்வாறான சில நடவடிக்கைகள்தான் சர்வதேசத்தில் எம்மைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் நான் நினைக்கிறேன். சரி அதை விடுங்கள், இப்போது அதுபற்றி பேசுவதற்குத் தருணமில்லை.

நீங்கள் சொல்லியது போல், இந்தப்போர்க்குற்ற விசாரணைகளின் வெற்றியென்பது எமக்கான விடுதலையைப் பெற்றுத்தருவதில்த்தான் தங்கியிருக்கிறது என்றே நானும் நினைக்கிறேன்.

ரகு அந்த ஆள் சேர்ப்பு நேரம் போது வீடுகளில் மக்கள் கூரையோரம் கொட்டன் செருக்கி வைத்து இருந்தார்கள் ஆனால் இது எல்லாம் காலம் கடந்த கவலை.

அதை விட இன்னும் ஒரு உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை தயார் படுத்தி வைத்து இருங்கள்.

அது தலைவர் பற்றியது இல்லை மாறாக பிள்ளைப் பாசம் எங்கை வரை கொண்டு விட்டது என்பதை காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.

:( யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் மேலும் மனிதவுரிமை மீறல்க் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.

கட்டாயப்படுத்தி ஆட்களைச் சேர்த்தல், மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தது, தப்பியோட முனைந்த மக்கள் மேல் துப்பாகிப் பிரயோகம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை மக்களும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றைக்குப் புலிகளின் முக்கிய தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லாத தருணத்தில், வெளிநாடுகளில் புலிகளுக்காக பணம் சேர்த்தவர்கள், ஆலோசகர்களாக இயங்கியவர்கள் மீது போர்கூற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்று ஐ.நா வின் உதவிச் செயலாளர் நாசுக்காகக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. இதையே தான் ஐ.தே க வும், "அரசின் இந்த போர்க்குற்றச்சாட்டு அறிக்கையின் மீதான எதிர்ப்பால் புலிகளும் காப்பாற்றப்படப் போகின்றனர்" என்று கூறியிருக்கிறது.

இப்ப இது தேவை இல்லா அலட்டல்

ரகு அந்த ஆள் சேர்ப்பு நேரம் போது வீடுகளில் மக்கள் கூரையோரம் கொட்டன் செருக்கி வைத்து இருந்தார்கள் ஆனால் இது எல்லாம் காலம் கடந்த கவலை.

அதை விட இன்னும் ஒரு உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை தயார் படுத்தி வைத்து இருங்கள்.

அது தலைவர் பற்றியது இல்லை மாறாக பிள்ளைப் பாசம் எங்கை வரை கொண்டு விட்டது என்பதை காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.

இப்ப இது தேவை இல்லா அலட்டல் :(

இப்ப இது தேவை இல்லா அலட்டல்

இப்ப இது தேவை இல்லா அலட்டல் :(

அப்போ கட்டாய ஆள் சேர்ப்பு நடக்கும் போது அலட்டி இருக்க வேண்டுமா?

Edited by வினித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தரப்பு மட்டும் விடும் பிழைகளால் இந்தனை அழிவில் வந்திருக்கும் என்பது சாத்தியமற்றது. ஒன்றை பார்க்கவேண்டும் இங்கே உள்ள இணையங்கள் தனியே அல்லது கூடுதலாக வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு வந்த நடேசன் முதலானோர் கொல்லப்படததே பாரிய மனித உரிமை மீறல் என்று பேசியிருந்தார்கள் , ஆனால் இன்று அதையும் விட பல குற்றங்கள் பதியப்பட்டுள்ளன. இங்கே புலிகளின் மீதும் குற்றங்கள் பதியபட்ட நிலையில், நாங்களும் சிங்களவர்கள் மாதிரி, இது புலிகளின் பினாமிகளிடம் பணம் வாங்கி தயாரின்த்த அறிக்கை என்பது போல, இது சிங்களவரிடம் பணம் வாங்கி தயாரின்த்த அறிக்கை என இந்த அறிக்கையை பலவீனப்படுத்தாமல்..அதில் கூறப்பட்டவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஏன் ஐ.நா. நாசூக்காக புலிகள் மீதும் போர்குற்ற ஆதாரங்கள் உள்ளது என்ற செய்தியை சொல்ல வேண்டும்?

சிங்களம் ஒற்றுமையாக தம்மை எதிர்ப்பதை ஐ. நா. விரும்பாதிருக்கலாம். அதற்கு புலிகளை இழுப்பதன் மூலம் சிங்களத்தில் ஒரு பகுதியினரை சமாதானப்படுத்துவதற்காக இதை செய்திருக்கலாம். இங்கே "குற்றம் என்ன?" என்பதை வலியுறுத்தவும்; அதன் அடிப்படியில் குற்றம் செய்த அனைவரும் குற்றவாளிகள் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது ஐ.நா. வால்.

ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக புலிகள் அமைப்பை இந்தியா, மேற்குலகம் (ஐ.நா.? ) என்பன தடை செய்துள்ளன. ஐ.நா. சரத்துக்களின் அடிப்படியில் ஒரு அங்கத்துவ நாடு (புலிகள் அல்ல) மீறியுள்ளது என்பதை முதன்மைபடுத்துவதாக தெரிகின்றது. அதையே நாமும் முன்னிலைப்படுத்தல் வேண்டும். அதன் மூலம் மட்டுமே புலிகள் ஒரு நாசி அரசுக்கு, எதிராக விடுதலை வேண்டி போராடிய அமைப்பு என்பது நிரூபிக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

அண்மைக்காலம் வரையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நாம் நம்பவில்லை. அப்படி நடந்திருக்காது என்றுதான் நான் பலருடனும் விவாதித்து வந்தேன். ஆனால் அவற்றில் சில உண்மை என்று அண்மையில் அறிந்துகொண்ட போது மிகவும் வேதனையாக இருந்தது. அதனைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். மற்றும்படி அவற்றைக் கிளறி இப்போது நடந்துவரும் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திருப்புவது எனது நோக்கமல்ல.

இவ்வாறான சில நடவடிக்கைகள்தான் சர்வதேசத்தில் எம்மைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் நான் நினைக்கிறேன். சரி அதை விடுங்கள், இப்போது அதுபற்றி பேசுவதற்குத் தருணமில்லை.

நீங்கள் சொல்லியது போல், இந்தப்போர்க்குற்ற விசாரணைகளின் வெற்றியென்பது எமக்கான விடுதலையைப் பெற்றுத்தருவதில்த்தான் தங்கியிருக்கிறது என்றே நானும் நினைக்கிறேன்.

நாங்களும் மிக நல்ல உண்மைவாதிகளாக இந்த சுத்துமாத்து உலகத்துக்கு காட்ட முயன்று எம் தலை மீது நாமே மண் அள்ளிப்போடுவோம்.

இலங்கை மீதான போர்க்குற்ற அழுத்தம் என்பது இலங்கையை தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கான மேற்குலகின் அழுத்தம் இன்றி தமிழர்கள் மீதான கரிசனை இல்லை.இந்த அழுத்தத்திற்கு பின்னால் இந்தியாவின் நலன்கள் ஒளிந்திருக்கலாம். படுகொலைகளை நிகழ்துவதற்கு தோழோடு தோழ்நின்று அனைத்து ஆதரவையும் வழங்கியவர்களே இன்று போர்க்குற்றம் என்றொரு விசயத்தை முன்னெடுக்கின்றனர். இதைக் குறிப்பிடக்காரணம் ஒட்டுமொத்த மக்களும் அழிந்துபோக சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்காது என்ற அறியாமையாலும் சிந்தனையாலும் போராட்டம் அழிந்துபோனது.

இலங்கை அரசு நடத்தியது பயங்கரவாதத்துக்கு எதிரான போர். அந்த அடிப்படையிலேயே அனைத்து ஆதரவும் வழங்கப்பட்டது. படுகொலைகளை நிறுத்து என்ற அனைத்துவிதக் கவனயீர்ப்பும் அலட்சியப்படுத்தப்பட்டது. இன்று அரபுநாடுகள் மீதான கரிசனையில் ஒரு வீதம் கூட இந்த மேற்குநாடுகள் எம்மீது காட்டவில்லை என்பதற்கு ஒரே காரணம் பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற அடிப்படை. எமது தேசியவாதத்தை இந்த பயங்கரவாதம் என்ற முடிச்சில் இருந்து அவிழ்த்து நிலைநிறுத்த எம்மால் முடிந்திருக்கவில்லை. இப்போதும் அதே நிலைதான். எமது தேசியவாதம் என்பது பயங்கரவாதம் என்ற சிறைக்குள் அடைபட்டிருக்கின்றது. இந்த நிலையில் புலிகள் மீதும் போர்க்குற்றம் சுமத்துவது என்பது இலங்கை அரசு மீதான போர்க்குற்றத்தை வலிமையற்றதாக்கிவிடும். மேற்குலகின் நலன்களுக்கு ஏதுவாக இலங்கை செல்லும் போது இலங்கை அரசின் போரக்குற்றத்திற்கு புலிகள் கராணம்காட்டப்பட்டு இலங்கை அரசு நழுவிவிடும். நடப்பது இலங்கை அரசுக்கும் மேற்குலக நலன்களுக்கும் இடையிலான போர்க்குற்றத்தை மையமாக வைத்து பேரம் பேசுதல் ஆகும்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்தப் பேரம் பேசுதல் சிக்கலுக்கு உள்ளாகும் போது தமிழர்களுக்கு அது சாதகமாக அமையலாம். ஆனால் அந்தச் சாதகத்தை பயன்படுத்தக்கூடிய நிலையில் தமிழர்கள் ஒரு பொதுக் கருத்தியலுக்குள் இல்லை என்ற நிலையில் எல்லாமே சிக்கலானதாகவே இருக்கின்றது.

எம்மிடம் மகிந்தர் கூட்டத்தை தண்டிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கின்றது. மகிந்தர் சிங்களப் பேரினவாதத்தில் ஒரு சிறு அங்கம் மட்டுமே. எமது விடுதலை என்பது மகிந்தனை தண்டிப்பதால் வந்துவிடும் என்பது அபத்தம். இந்த போர்க்குற்றத்தை மையமாகவைத்து எமது தேசிய விடுதலைப்போரட்டத்தை எம்மால் நிலை நிறுத்த முடியுமானால் அது எமது விடுதலைக்கு ஒரு படிக்கல்லாக அமையும். ஆனால் இங்கே தேசியவாதமே பயங்கரவாதச் சிறைக்குள் இருக்கின்றது. உள்ளக முரண்பாட்டுக்குள் சிதைவுற்று சீரளிந்துபோய் இருக்கின்றது. தமிழர்கள் வேறுபாடுகளை களைந்து ஒரு பொதுக் கருத்தினுள் வரமுடியாத வக்கற்ற நிலையில் இருக்கின்றது. தேசியம் குறித்த சிந்தனை முறை மிகக் குறுகிய வட்டத்துள் சுழன்றுகொண்டிருக்கின்றது. ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களின் பிரதிநிதிகளிடையே ஒரு தொடர்பாடல் கூட அற்ற நிலையில் உள்ளது. சிங்களப் பேரினவாதத்தை மையமாக வைத்து தமிழ்த்தேசியம் குறித்த ஒரு பொதுக் கருத்தை கூட எம்மால் கட்டியெழுப்ப முடியவில்லை. இந் நிலையில் சிங்களத்திற்கும் மேற்குலக நாடுகளுக்கு இடையே அல்லது இந்தியாவுக்கு இடையே ஒரு முரண்பாட்டின் அடிப்படையில் தமிழர்களை அவர்கள் பயன்படுத்த முனையும்போது அதற்கான தகுதியுடையவர்களாகவேனும் எம்மால் வளரமுடியவில்லை என்பது மாபெரும் துயரம்.

புலிசார் புலம்பெயர் குழுக்களுக்கு மக்கள் பற்றிருந்தால்…? : அஜித்

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கை உலகின் குறித்துக் காட்டத்தக்க பல அரசியல் தளங்களில் ஈழத் தமிழர் போராட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மனிதாபிமானிகள், சமூக உணர்வு மிக்கோர் போன்ற பலர் இன்று ஈழப் போராட்டத்தையும் அதன் ஊற்றுமூலமாக அமைந்த அவலத்தையும் திரும்பிப் பார்க்கிறார்கள். ஈழத்தில் பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்படவில்லை மாறாக மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை உலக மக்களின் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்வதற்கான வெளியை இது உருவாக்கியுள்ளது.

அழிவுகளை தடுப்பதற்கான இடைவெளியாக இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இலங்கை அரசின் பாசிச சர்வாதிகாரம் குறித்த உலகளாவிய பொது அபிப்பிராயத்தை உருவாக்கவும் அதனூடாக இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வழங்கவும் நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரச உளவுத்துறையினதும் அரச துணைக் குழுக்களதும் கொலைக் களமாக மாற்றமடைந்துள்ள வடக்கு கிழக்கில் குறைந்தபட்ச ஜனநாயக வெளியை ஏற்படுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அரசியல் சக்திகள் அறிக்கையையைப் பயன்படுத்திக் கொள்வார்களானால் அழிவுகளை மட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கலாம்.

ஆக, தாம் வாழ்ந்த தேசத்தின் மீதும் மக்கள் மீதும் பற்றுள்ள ஒவ்வொருவரும் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசிற்கு எதிராகப் பயன்படுத்தத் தவறின் ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியையும் அதன் பின்னால் அணிதிரளும் பேரினவாதிகளையும் மிக நீண்ட காலத்திற்கு அழிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.

வெளியாகியுள்ள யுத்தக் குற்றங்கள் குறித்த அறிக்கையின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரசின் கோர முகத்தைக் கண்டுகொள்ளும் அதே வேளை புலிகளின் யுத்தக் குற்றங்களும் சுட்டிக்காட்டுள்ளப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். இலங்கை அரசு தன் மீதான குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கும் அதே வழிமுறையில் புலி சார் அமைப்புக்கள் புலிகளின் மீதான குற்றங்களை நிராகரிக்குமானால் அதன் எதிர்விளைவுகள் மக்கள் சார்ந்ததாக அமையாது. இரண்டு யுத்தக் குற்றவாளிகளுக்கு இடையேயான பிரசாரப் போர் போன்றே அது கருதப்படும்.

ஆக, அறிக்கையைப் பெறுமானமுடையதாக உள் வாங்கிக் கொள்ள வேண்டியதும், அதன் பெறுமானங்களை மக்கள் சார்பானதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு மனிதனதும் பொறுப்பு.

இந்த நிலையில் புலி சார் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை,ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் தமிழர் பேரவைகள், உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், சர்வதேசச் செயலகம், தலைமைச் செயலகம் போன்ற அனைத்தும் மூன்று பிரதான விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

1. புலிகள் என்ற அடையாளத்தைத் தொடர்ச்சியாகப் பேணுதல் குறித்து மறு பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

2. தமது கடந்தகால அரசியல் குறித்த வெளிப்படையான சுய விமர்சனத்தை முன்வைத்தல்.

3. தொடர்ச்சியான வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்ற அரசியலை முன்னெடுத்தல்.

முதலில், புலிகளின் கொடி, சின்னம், அடையாளம் போன்றன தொடர்ச்சியாகப் பேணப்படுமானால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் யுத்தக் குற்றங்களையும் நாம் பேணிக்கொள்கிறோம் என உலக மக்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுவதாக அமையும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த குறியீடுகள் அடையாளங்களுக்கு அப்பால் அழிவிலிருந்து பாதுகாத்தலே இன்றைய பிரதான பிரச்சனையாக அமைந்திருக்கிறது. குழுவாதம்; அதிலிருந்து வெளிப்படும் குறுகிய நலன்கள் போன்ற இன்னொரன்ன புலம் பெயர் புலிசார் அமைப்புக்களின் நலன்கள் அவர்களுக்கு அன்னியமானது.

இரண்டாவதாக, புலிசார் அமைப்புக்கள் தம்மை வெளிப்படையாகச் சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தவறின் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளும் யுத்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தியே இனம்காணப்படும். இலங்கை அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கும் இவர்களுக்கும் வேறுபாட்டைப் பிரித்தறிய உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளுக்கு இவ்விமரசனம் பயன்படும். விமர்சனங்கள் அழிந்துபோவதற்காக அல்ல, செழுமைப்படுவதற்கே பயன்படுகின்றன.

மூன்றாவதாக, சுய விமர்சனத்தினூடான வெளிப்படைத் தன்மை உருவாகுமானால், தொடர்ச்சியான புலம் பெயர் அரசியலை அது மேலும் வலுவடையச் செய்ய்யும்.

இவை அனைத்தையும் புலி சார் அமைப்புக்கள் கருத்தில் கொள்வார்களானால்,

1. அவர்கள் குறுகிய குழுவாதத்திற்காக அன்றி மக்களின் நலன்களுக்காகவே போராடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உருவாகும்.

2. இலங்கை அரசும் அதன் ஆதரவுக் குழுக்களும் புலம்பெயர் அமைப்புக்களை நோக்கி விரலை நீட்டி “நீங்கள் இன்னும் குற்றவாளிகள் ” என்று கூற முடியாத நிலை உருவாகும்.

3. நிபுணர் குழுவின் அறிக்கையை உலகின் முன்னால் கறைபடியாத கரங்களோடு கொண்டு செல்ல முடியும்.

4. வன் முறை யுத்தமாக மட்டுமே கருதப்பட்ட போராட்டம் செழுமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்பாட்டு முன் நகர்த்தப்படும்; வளர்ச்சி பெறும்.

5. இனவாதமாகக் கருதப்பட்ட போராட்டம், புதிய சிந்தனைத் தளத்தில் முன்னேசெல்லும்.

6. சிங்கள மக்கள் மத்தியிலும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலும் ஆரோக்கியமான உரையாடல் வெளியும் அதனூடாக ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிரான இணைவும் உருவாகும்.

7. தேசியத்தைப் பயனபடுத்தி அரசியல் களத்தில் வியாபாரிகளாக உலாவும் பலர் வெளிச்சத்திற்கு வருவார்கள்.

குறுகிய தேசிய வாதத்தையும் அதன் வழியேயான அடையாளத்தையும் தமது அரசியலாகக் கொண்ட புலிசார் அமைப்புகள் தம்மை புதிய அரசியலை நோக்கிச் செலுத்துவதற்கான சோதனக் களமக இத்னைக் கருதிக்கொள்ளலாம். இன்னும், குறுங் குழுவாதமா அன்றி மக்கள் நலனா பிரதானமானது என்ற வினாவிற்கான விடையை அவர்களிடமிருந்தே எதிர்பார்க்க வேண்டும். மீண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

http://inioru.com/?p=20911

  • கருத்துக்கள உறவுகள்

------

எம்மிடம் மகிந்தர் கூட்டத்தை தண்டிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கின்றது. மகிந்தர் சிங்களப் பேரினவாதத்தில் ஒரு சிறு அங்கம் மட்டுமே. எமது விடுதலை என்பது மகிந்தனை தண்டிப்பதால் வந்துவிடும் என்பது அபத்தம்.

-----

buddhist_monks_protest1.jpgAPTOPIX%20Sri%20Lanka%20Monks%20Fast135115--500x380.jpgsri-lanka-monk-protest-bg.jpgmonk.jpg80bbbca828155feb0a6bc0638b996b10.jpg

சிங்களப் பேரினவாதத்தின் ஆணிவேரே..... இவர்கள் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

:( புலிகளின் பங்களிப்பில்லாத தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கும் என்று எனக்குப் படவில்லை. தமிழரின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக புலிகளின் பங்களிப்பிற்கு நிகராக இதுவரை வேறு எவரும் செயற்படவில்லை என்பதும் இனிமேலும் எவரும் அப்படித் தோன்றப்போவதில்லை என்பதும் யதார்த்தம். எமது விடுதலைப் போராட்டம் புலிகள் எனும் ராணுவ பலத்தினால் பெரும்பகுதி கட்டப்பட்ட ஒரு கட்டடம்.

அக்கட்டிடத்தின் அத்திவாரமே புலிகள்தான். ஆகவே அத்திவாரத்தின்மேல்த்தான் எமது விடுதலைக்கான மீதிக் கட்டுமானங்கள் கட்டுப்படல் வேண்டும், முடியும்.

அத்திவாரத்தை நிராகரித்து வெறும் காற்றில் கட்டிடம் எழுப்பலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் கூட்டத்தை தண்டிப்பது என்பது ஒரு தனிமனிதக் குழுமத்தைத் தண்டிப்பது என்பதல்ல.. இலங்கை மக்களால் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாலும் அவரது அரசவையினாலும் அதே நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு ஆபத்து விளைவிக்க முடிகிறது என்பதே இதன் உள்ளடக்கமாகும். இங்கு இலங்கைத் தீவின் ஆட்சிப் பொறிமுறையே கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. எமது விடுதலையின் நியாயத்தன்மையும் இவ்விடத்தில் உணர்த்தப்படுகிறது. :rolleyes:

... கடந்த காலங்களில், குறிப்பாக வன்னியில் புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் குற்றச்சாட்டுக்கு ...

* வன்னியில் சிறுவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ..

* பல பொதுமக்கள் புலிகளினாலேயே கொல்லப்பட்டமை ...

* போன்றன ...

.... இனி நாம் பதிலளிக்க முற்படுவது, இனி அதற்கான பதில்களை தேடுவது ... காலத்தை விரயமாக்கும் செயலும், சிங்களம் அதனுள் மறைய நாமே வழி கோலுவதுமாகவே அமையும்.

கடந்த வன்னிப்போர் இறுதிக்காலங்களில் புலிகளினால் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையா??????? ... நாம் இல்லை என்பது, நாம் எம்மை ஏமாற்றுவது மட்டுமல்ல, அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களின் உறவினர்கள், நண்பர்களையும் எதிரியின் முகாமில் தொடர்ந்திருக்க, நாமே கொண்டு சென்று விடுவதாக அமையும்.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து, .... எதிரி பலவற்றை ஆதாரங்கள் என எம்மை நோக்கி கொட்டிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட பலரும் கதை கதையாக சொல்லவும் .. இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதில்களை/உண்மைகளை நாம் தேட முற்படவில்லை, மறுத்தோம், துரோகத்தனம் என்றோம்!!!

ஏன்? எதற்காக? எப்படி? இவர்கள் செய்தார்கள்?????????

முள்ளிவாய்க்கால் இறுதிக்காலங்களில் புலிகளினால் நடத்தப்பட்டதாக இன்று குற்றச்சாட்டப்படும் மனித உரிமை மீறல்களை புரிந்தது புலிகளின் அரசியல் பிரிவு என்று அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். இவ்வரசியல் அமைப்பை சார்ந்த தங்கன், எளிலன், இளம்பருதி, தமிழினி, பாப்பா போன்றவர்கள் தான் இவைகளை முன்னின்று செயற்படுத்தினர்.

அறிந்தவரை ... முதன் முதலில் தன் பிள்ளையை கட்டாய ஆட்சேர்ப்புக்கு விட மறுத்த தகப்பனாரை பிள்ளையின் முன் சுட்டுக் கொன்றதே தங்கன் என்று கூறுகிறார்கள். சிறுமிகளை கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்து அவர்களுக்கு மொட்டை அடித்தது(இனம் காண்பதற்கு) போன்றவற்றில் எளிலன் ஈடுபட்டாராம், இறுதி நாட்களிலும் பல பெற்றொர்கள் தாக்கப்பட்டு பிள்ளைகளை இழுத்துச் சென்ற செயல்களில் பாப்பா முதலிடத்திலாம், தப்பிச் செல்லும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யச்சொல்லி காவலரன் போராளிகளுக்கு உத்தரவு இட்டது இளம்பருதியாம், இவர்களுக்கு போட்டி போட்டு தமிழினி செயற்பட்டாராம்!

இப்படியாக இறுதிக்காலங்களில் அட்டகாசம் புரிந்த பலர், யுத்தம் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னமே சரனடைந்தரராம், தங்கன் உட்பட சிலருக்கு மாலை கூட போட்டு அழைத்துச் சென்றதாக கூறுகிறார்கள். இன்று அவர்களில் பலர் சிறிலங்கா புலனாய்வுத்துறையில் இணைந்து செயற்படுகின்றனராம். கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று வந்த பலர் பாப்பா அங்கிருந்து செயற்படுவதாக கூறுகிறார்கள். வவுனியா அகதி முகாங்களில் மறைந்திருந்த பல போராளிகளை பிடித்துச் சென்றது இளம்பருதி, தமிழினி என்கிறார்கள்.

.... சர்வதேச வல்லரசுகளினால் கூட மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்ட ஓர் சிறிய அமைப்பு ... அவர்களின் பாஷையில் ஓர் பாரிய பயங்கரவாத அமைப்பு! ... நீண்ட கால யுதத நிறுத்தத்தில் ... உள்ளில் இருந்த கட்டமைப்புகளுக்குள் அதிகாரப்போட்டிகள் ... பலரின், பல முக்கியஸ்தகர்களின், அதுவும் இறுதிக்காலங்களில் கண்காணிப்பில்லாத, எல்லோரையும் கண்காணிக்க முடியாத தென்னிலங்கை பயணங்களும், மேற்குலக பயணங்களும் ... பலர் பல விதமாக விரிக்கப்பட்ட வலைகளில், பலவிதமாக வீழ்ந்தனர்.

ஒரு புறம் உள்ளிருந்தே காட்டிக்கொடுப்புகள், விலைபோன தளபதிகளினால் யுத்தத்தை சரியாக வழி நடத்தாமை, போன்றன நடைபெற்றுக் கொண்டிருக்கையில், .... புலத்தில் இருந்து இக்காலங்களில் உள்நுளைக்கப்பட்ட மர்ம மனிதர்கள் தங்கள் கைவரிசைகளை சிறப்பாக காட்டிக் கொண்டிருந்தனராம் ...

... விலை போகாத ஒரு அமைப்பை, யுத்த நிறுத்த காலங்களில், புலத்தில் கூறு போட்டு சந்தையில் விற்றார்கள். புலத்தில் ஆயிரம் பவுண்கள் கொடுத்தால் கொடுத்தவர் தேசியத்தின் விசுவாசி என்றார்கள், ஐயாயிரம் கொடுத்தால் புலத்து தலைப் பூசாரியும் அவரை தொடர்பு கொன்டு, நாடு செல்லுங்கள், நாங்கள் சொல்கிறோம், உங்களை வடிவாக கவணிப்பார்கள் என்றார்கள். மாறாக ஐம்பதினாயிரம் கொடுத்தால் அங்கெ செங்கம்பள வரவேற்கழிப்பட்டு, தலைவரையும் சென்று சந்திக்க வாய்ப்பழித்தார்கள்!! ... என்ன பல மில்லியன்கள் கொடுத்து எதிரி வாங்கிய ஆயுதங்கள் செய்ய்த்தவறியதை, சில ஆயிரங்களின் ஊடு புலத்திலிருந்து இவர்களினூடே உள்நுளைந்து செய்தான் எதிரி!!! ..

... அதுவும் இறுதிக்காலங்களில் கட்டமைப்புகள் உடைந்து போக, எல்லாவற்றையும் கவனிக்க முடியாத சூழ்நிலையில் தலைமை!!! ... இன்னும் இரண்டாம் நிலை தலைமைகள் இவர்களினால் தந்திரமாக ஏமாற்றப்பட்டனரோ??? அல்லது இவர்களின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலைமை???... அங்கு எல்லாம் முடியும் தறுவாயில் இதை இறுதியாக செய்து பார்ப்போம் என்ற நிலைமையோ???? அங்கு அடைபட்டிருக்கும் மக்கள் நாள் தோறும் கொத்துக்கொத்தாக சிங்களத்தினால் பலி எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்களின் கோபங்களை/வெறுப்பை புலிகள் மீது திருப்ப எதிரி இவர்களை பாவித்தான்.

ஆனால் இவ்வாறு எதிரின் வலையில் வீழ்ந்து, அவனால் பாவிக்கப்பட்ட பலர், அவனாலேயே பின் படுகொலை செய்யப்பட்டோ அல்லது எங்கு என்று அறிய முடியாத நிலைக்கு சென்று விட்டார்கள்.

இன்று நாமும் சிலுவை சுமக்க வேண்டிய நிலையில் ... அச்சிலுவை அங்குள்ள எம்மக்களின் விடிவிற்கு ....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் ஒரு பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. நெல்லை அண்ணை சொல்வதுபோல அதை ஆராய்வதுகூட எமது நேரத்தை விரயம் செய்வது போன்றது.

உலகத்தைப் பொறுத்தவரையில், புலிகள் அழிந்துவிட்டார்கள் அல்லது சரணடைந்துவிட்டார்கள் அல்லது சரணடைந்து பின்னர் கொல்லப்பட்டு விட்டார்கள். புலிகள்மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை சர்வதேசம் விசாரிக்கலாம். போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இருக்கிறார்கள். சரணடைந்த போராளிகளும் இருக்கிறார்கள். இதனால் எமக்கு பாதகம் என்று ஒன்றும் இல்லை. ஏனெனில் புலிகளின் தலைமை என்பது இப்போது இல்லை என்பது சிறீலங்காவினால் உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. தண்டிப்பதற்கு அங்கே யாருமில்லை. :unsure:

மாறாக போர்க்குற்றத்துக்கான முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ள சிங்களத் தலைமை இன்றும் அப்படியே இருக்கிறது. இவர்களைத் தண்டிப்பதில்தான் எமது விடுதலையும் தங்கியுள்ளது. :rolleyes:

:( புலிகளின் பங்களிப்பில்லாத தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கும் என்று எனக்குப் படவில்லை. தமிழரின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக புலிகளின் பங்களிப்பிற்கு நிகராக இதுவரை வேறு எவரும் செயற்படவில்லை என்பதும் இனிமேலும் எவரும் அப்படித் தோன்றப்போவதில்லை என்பதும் யதார்த்தம். எமது விடுதலைப் போராட்டம் புலிகள் எனும் ராணுவ பலத்தினால் பெரும்பகுதி கட்டப்பட்ட ஒரு கட்டடம்.

அக்கட்டிடத்தின் அத்திவாரமே புலிகள்தான். ஆகவே அத்திவாரத்தின்மேல்த்தான் எமது விடுதலைக்கான மீதிக் கட்டுமானங்கள் கட்டுப்படல் வேண்டும், முடியும்.

அத்திவாரத்தை நிராகரித்து வெறும் காற்றில் கட்டிடம் எழுப்பலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

உண்மைதான். புலிகள் போன்று பல தியாகங்களால் கட்டி எழுப்ப பட்ட பலமான அமைப்பை போல இனிவரும் காலத்தில் யாருமே எதிர்பாக்க முடியாது.

விடுதலைப் புலிகளின்மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் ஏற்கனவே போர்க்காலங்களிலும் சுமத்தப் பட்டிருந்தன. புலிகளைப் பயப்கரவாதிகளாகச் சித்தரிக்க இக் குற்றங்கள் போதுமானதாக இருந்தால் அதைவிடப் பாரதூரமான மனித இனத்துக்கு எதிரான செயல்களைச் சிங்களம் செய்துள்ளது. ஆனால் போர்க்காலங்களிலும் சிங்களம் செய்த இன அழிப்பினை இவை கண்டிக்கவில்லை.

புலிகளின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் ஒரு பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. நெல்லை அண்ணை சொல்வதுபோல அதை ஆராய்வதுகூட எமது நேரத்தை விரயம் செய்வது போன்றது.

உலகத்தைப் பொறுத்தவரையில், புலிகள் அழிந்துவிட்டார்கள் அல்லது சரணடைந்துவிட்டார்கள் அல்லது சரணடைந்து பின்னர் கொல்லப்பட்டு விட்டார்கள். புலிகள்மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை சர்வதேசம் விசாரிக்கலாம். போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இருக்கிறார்கள். சரணடைந்த போராளிகளும் இருக்கிறார்கள். இதனால் எமக்கு பாதகம் என்று ஒன்றும் இல்லை. ஏனெனில் புலிகளின் தலைமை என்பது இப்போது இல்லை என்பது சிறீலங்காவினால் உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. தண்டிப்பதற்கு அங்கே யாருமில்லை. :unsure:

மாறாக போர்க்குற்றத்துக்கான முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ள சிங்களத் தலைமை இன்றும் அப்படியே இருக்கிறது. இவர்களைத் தண்டிப்பதில்தான் எமது விடுதலையும் தங்கியுள்ளது. :rolleyes:

சரியான கருத்து

சிங்கள ஊதுகுழலான த ஐலன்ட், இப்படி சொல்கிறது

GL to phone Ban to reiterate SL’s position - Strong support for SL from Russia and China

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23750

ஆனால் இப்படி தமிழ்நெற் சொல்கிறது!! ...

Chinese envoy stays away from Peiris briefing on UN report

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33853

:blink:

சிங்கள ஊதுகுழலான த ஐலன்ட், இப்படி சொல்கிறது

GL to phone Ban to reiterate SL’s position - Strong support for SL from Russia and China

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23750

ஆனால் இப்படி தமிழ்நெற் சொல்கிறது!! ...

Chinese envoy stays away from Peiris briefing on UN report

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33853

:blink:

Why didn’t Chinese envoy come?

[ Sunday Times ][ Apr 24 05:44 GMT ]

The Chinese Ambassador Yang Xiuping was a notable absentee when External Affairs Minister G.L. Peiris briefed heads of diplomatic missions in Colombo last Thursday regarding the Government’s stance on the report of the UN Panel. While a ministry official confirmed that an invitation was sent to the Chinese Ambassador and was followed up by a call to confirm it was received, the ambassador was not present at the meeting.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்தாடல் திசை மாறிச்செல்ல நான் காரணமாக இருந்து விட்டேன் போலிருக்கிறது. நான் எழுதியது வேதனையிலும், ஆதங்கத்திலும்தான். அதைக்கூட அண்மையில்த்தான் அறிந்துகொண்டேன். மிகவும் வருத்தப்பட்டேன்.

சிலவேளை இறுதிக்காலத்தில் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு என்ன நடக்கும் என்பதற்கு 2009 மே 18 இன் ஈழம் ஒரு சான்று.

எமது தற்போதைய மீள்சிந்தனைகளும், அசைபோடல்களும், பழையன கிளறலும் எமக்கு இன்னுமின்னும் அழிவையே தருமன்றி எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. சிங்களத்தின் போர்க்குற்றங்களின் வீரியத்தைக் குறைப்பதற்கு நாமே வழிசமைத்துக் கொடுப்பதுபோலாகி விடக்கூடாது.

சிங்களத்தின் போர்க்குற்றம் எனும் பெரிய கோட்டினருகே நாமும் எமது தேவையற்ற விமர்சனங்களால் இன்னுமொரு அதைவிடப் பெரிய கோட்டைக் கீற முனையக்கூடாது.

தொடர்ந்தும் சிங்களத்தின் போர்க்குற்ற விசாரணைகளை உலக மயப்படுத்த உழைப்போம்.

அனைவருக்கும் நன்றி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.