Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தேர்தல் முடிவுகள் -அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

Featured Replies

இன்றைய தீர்ப்பைவிட நாளைய தீர்ப்பையே கருணாநிதி பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றார்.இன்றைய தீர்ப்பு கடைசிக்காலங்களில் அவர் ஓரளவு எதிர்பார்த்ததுதான்.நாளைய தீர்ப்பு வீட்டில பக்கத்தில படுக்கவும் வழியில்லாமல் பண்ணிவிடும்.

இதை எல்லாம் விட கருனாநிதியின் வீழ்ச்சியையும் அப்போது ரணிலை வீழ்த்தியபோதும் வந்த சந்தோசமும்.

மகிந்தா வந்தால் நேரடி எதிரி எனபது போல ஜெயா அம்மாவும் வந்து இருக்கிறார்கள். பார்கலாம்.

  • Replies 103
  • Views 8.1k
  • Created
  • Last Reply

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தீர்ப்பைவிட நாளைய தீர்ப்பையே கருணாநிதி பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றார்.இன்றைய தீர்ப்பு கடைசிக்காலங்களில் அவர் ஓரளவு எதிர்பார்த்ததுதான்.நாளைய தீர்ப்பு வீட்டில பக்கத்தில படுக்கவும் வழியில்லாமல் பண்ணிவிடும்.

ஒரு தீர்பு, இன்னொரு தீர்ப்பில் சங்கிலிக் கோர்வை-விளைவைக் கொண்டிருக்கின்றது அல்லவா! எனவே நிட்சயமாக தாத்தாவின் நித்திரை காலி. அவரைக் கண்மூட வைக்க இதுவே நோயாகப் போகின்றது!

இதை எல்லாம் விட கருனாநிதியின் வீழ்ச்சியையும் அப்போது ரணிலை வீழ்த்தியபோதும் வந்த சந்தோசமும்.

மகிந்தா வந்தால் நேரடி எதிரி எனபது போல ஜெயா அம்மாவும் வந்து இருக்கிறார்கள். பார்கலாம்.

தர இருந்ததை வாங்குகிறா காலம் என்று ஒன்று அப்பதான் எமக்கு இருந்தது. இப்ப அப்படி வாங்குகின்ற காலம் என்று ஒன்றில்லாத போது எமக்கு அந்தக் கவலையே வேண்டாம்! பாவம் செய்தவன் நாசப்படும் போது அதை இரசிக்கின்ற அளவிற்குத்தான் எமது கதி இன்று!

... ஜெயலாலிதாவின் வெற்றியை எவ்வாறு தமிழ்த்தேசியம் ... அணுகப்போகிறது/பயன்படுத்தப்போகிறது ....????? .... மீண்டும் ... மீண்டும் ... எம் நிகழ்ச்சி நிரலுக்கு வராதவர்களை நாம் ஒதுக்குவதா(இதுவரை காலமும் செய்தது)??? அல்லது அவரின் ஓட்டத்துக்கு ஏற்ப ஓடி நாம் அவரை எம் பக்கம் சாய்ப்பதா????? ...

.... இதுவரை காலமும் எமக்கு தமிழகத்தில் இருந்ததுகள் எல்லாம் மக்கள் செல்வாக்கற்ற உதிரிகள்(என்ன செய்வது அவர்கள் தான் ஆதரவளித்தார்கள் ... எம் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப))) ..... இனியாவது சரியான முடிபை எடுப்போம்!!!

... மீண்டும் மீண்டும் ... பழைய புராணங்கள் பாடி ... சீர்கெடுக்காமல், இராஜதந்திரமாக செயற்பட வேண்டிய காலமிது!!! ...

Tamil Nadu Election Results 2011: Congress wishes 'best' to Jayalalithaa on poll victory

NEW DELHI: The Congress Friday admitted to its election defeat by the AIADMK in Tamil Nadu and wished the best to J. Jayalalithaa, who is set to be the chief minister of the state for the third time.

"If Jayalalitha has taken her party to victory, she certainly deserves our best wishes and hope she will do a good job," Congress spokesperson Jayanthi Natarajan said.

Natarajan said the Congress that fought the polls jointly with the ruling DMK had "expected to do much much better" in Tamil Nadu.

"But we are certainly surprised at the leads that have been shown. We will introspect on it," she said.

Admitting that the graft issue had played a role in the election results, Natarajan said: "Nobody can possibly say corruption is a fake issue."

But she quickly added that the United Progressive Alliance (UPA) government did not shy away from taking action against graft accused even as the elections were approaching.

"It is the UPA that has always taken transparent and visible action against corruption, as a result of which a DMK minister is today in jail even though elections were round the corner and senior DMK leaders have been interrogated," she said.

She was referring to DMK's A. Raja, the former IT and communications minister and Kanimozhi, DMK supremo M. Karunanidhi, for their alleged involvement in the 2G spectrum scam.

Raja has been arrested for allegedly selling scarce telephony waves at throwaway prices to private firms.

Kanimozhi has been named by the CBI as a co-accused in the case. Her bail plea will be heard by a court here Saturday.

Economictime

Edited by Small Point

ஜெயலலிதாவின் வெற்றியை யாரும் கொண்டாடியதாக தெரியவில்லை,கறுணாநிதியின் தோல்வியைத்தான் கொண்டாடுகின்றார்கள்-பேஸ்புக்கில் வாசித்தது.

உண்மையும் கூட.

வெற்றிபெற்றவர்களுக்கும் சீமானுக்கும் வாழ்த்துக்கள் சொல்வதுடன் நின்றுவிடாது எமக்கான அரசியலை எப்படி நகர்த்துவது என்றே நாம் சிந்திக்கவேண்டும்.

கருணாநிதி தி.மு.க தலைவராக வந்தததே துரோக அரசியலால்தான்.அது இன்றுவரை தொடர்ந்தது.அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அதற்கு நாங்கள் என்ன செய்யலாம் என சிந்திப்பது நல்லது.(சன்,கலைஞர் டீ.வீக்கள்,சன் தயாரிப்பு படங்கள்)

தமிழக தேர்தல் முடிவுகள் மிகவும் இனிப்பாக இருக்கின்றது. ஜெயின் வெற்றியை விட, கொலைஞரின் தோல்வியைக் கண்டு மனம் ஆனந்தக் கூத்தாடுகின்றது

ஆனால்,

பிற மாநிலங்களில் (மேற்கு வங்கம், கேரளா ஆகியவற்றில் காங்கிரஸ் ஈட்டி வரும் வெற்றியும் புதுச்சேரியில் திமுக + காங் வெற்றியும் இன்னும் இந்திய அளவில் காங்கிரஸ் மிகப் பலமாக இருக்கின்ற எனும் கசப்பான உண்மையையும் பறைசாற்றுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் தோல்வி முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முன்னர் வந்திருக்கவேண்டும். அவர் அந்த நேரத்தில் முதல்வராக இருந்தது தமிழர்களுக்குப் பெரிய பாதிப்பில் முடிந்தது.

கருணாநிதியின் தோல்வியால் மிக்க சந்தோஷம் அடைவதோடு, ஜெயலலிதா முதல்வராக வந்து தாயகத்தில் தமிழர்களை ஓரளவு நிம்மதியாக இருக்க உதவுவார் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி அதிமுக கூட்டணிக்கே வந்திருக்கின்றது!!

காங்கிரஸ் வேட்பாளர் ஹம்சா வென்றாரா?

அதிமுகவின் வெற்றிக்கு மதிமுக வின் புறக்கணிப்பும் காரணம்

வைகோ தனது கட்சி நலனைக்கருதாது ஆட்சிமாற்றத்தை விரும்பியதால் தான் புறக்கணித்திருந்தார்.

இனி நடக்கவேண்டியது திமுக காங்கிரஸ் சண்டைபிடிச்சு ஒருவர் காலை ஒருவர் வார வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

50,249 வாக்கு வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கலைஞர் போட்டியிடுகிறார். அவர் 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுகவின் வெற்றிக்கு மதிமுக வின் புறக்கணிப்பும் காரணம்

வைகோ தனது கட்சி நலனைக்கருதாது ஆட்சிமாற்றத்தை விரும்பியதால் தான் புறக்கணித்திருந்தார்.

இனி நடக்கவேண்டியது திமுக காங்கிரஸ் சண்டைபிடிச்சு ஒருவர் காலை ஒருவர் வார வேண்டும்.

அது உரிய நேரத்தில் ஆர்ம்பிக்கப்படும். நேரடியாக ஒளிபரப்ப முடியாமைக்கு வருந்துகிறோம்.

ஜெயலலிதாவின் வெற்றியை யாரும் கொண்டாடியதாக தெரியவில்லை,கறுணாநிதியின் தோல்வியைத்தான் கொண்டாடுகின்றார்கள்-பேஸ்புக்கில் வாசித்தது.

உண்மையும் கூட.

வெற்றிபெற்றவர்களுக்கும் சீமானுக்கும் வாழ்த்துக்கள் சொல்வதுடன் நின்றுவிடாது எமக்கான அரசியலை எப்படி நகர்த்துவது என்றே நாம் சிந்திக்கவேண்டும்.

கருணாநிதி தி.மு.க தலைவராக வந்தததே துரோக அரசியலால்தான்.அது இன்றுவரை தொடர்ந்தது.அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அதற்கு நாங்கள் என்ன செய்யலாம் என சிந்திப்பது நல்லது.(சன்,கலைஞர் டீ.வீக்கள்,சன் தயாரிப்பு படங்கள்)

ஜெயலலிதாவுக்கு ஏதும் சொல்ல விரும்பிறிங்களோ?

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

கடையநல்லூர்: பீட்டர் அல்போன்ஸ் தோல்வி

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் 64,708 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியன் 80,794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

16,086 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ் வேட்பாளர் ஹம்சா வென்றாரா?

நீங்கள் ஹசன் அலியை கூறுகிறேர்கள் என்று நினைக்கிறன். ஒரு மணி நேரத்துக்கு முன் வரை இவன் முன்னிலையில் இருந்தான். மனது கவலையாக இருந்தது. இப்பொழுது இவன் தோல்வி என்று பார்த்ததுக்கு பிறகு தான் மனது அறுதல் அடைந்தது.

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா வெற்றி

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, 15757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜவாஹிருல்லா (மநேமக) 65,831

ஹசன்அலி (காங்கிரஸ்)- 50,074

வித்தியாசம் - 15,757

நீங்கள் ஹசன் அலியை கூறுகிறேர்கள் என்று நினைக்கிறன். ஒரு மணி நேரத்துக்கு முன் வரை இவன் முன்னிலையில் இருந்தான். மனது கவலையாக இருந்தது. இப்பொழுது இவன் தோல்வி என்று பார்த்ததுக்கு பிறகு தான் மனது அறுதல் அடைந்தது.

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா வெற்றி

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, 15757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜவாஹிருல்லா (மநேமக) 65,831

ஹசன்அலி (காங்கிரஸ்)- 50,074

வித்தியாசம் - 15,757

ஆம், இவரைத்தான் கேட்டிருந்தேன். இவர் ஒரு சிங்கள நண்பன், எமக்கு எதிராக பல வேலைகளை நிறைவேற்றியவன்.

தோற்றத்தில் மகிழ்ச்சி.

தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது… எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. அஸ்ஸாமில் காங்கிரசே எதிர்பார்க்காத வெற்றி கிடைத்திருக்கிறது. மே. வங்கத்தில் எல்லாரும் எதிர்பார்த்தது போல மம்தா பானர்ஜிக்கு மூன்றில் இரண்டு பங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. புதுவையில் ரங்கசாமி – அ.தி.மு.க கூட்டணி மயிரிழை வெற்றியும், கேரளத்தில் காங்கிரசு கூட்டணி இரண்டு தொகுதிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இதில் மேற்கு வங்கம் குறித்து தனிச்சிறப்பான கட்டுரை விரைவில் வெளியிடுகிறோம். இங்கு தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து மட்டும் பார்க்கலாம்.

தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.

இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.

தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.

இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.

இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை என்பதை இங்கே வலியுறுத்தி சொல்கிறோம்.

தி.மு.கவின் மீது மக்களுக்கு இருந்த அளவு கடந்த கோபமே இப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தத் தேர்தலில் ஜெயா தோற்று தி.மு.க வெற்றி பெற்றிருந்தால், முழு தமிழகத்தையும் மொட்டையடித்திருப்பார்கள். அதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஆக மொத்தம் அ.தி.மு.கவின் வெற்றி என்பது எதிர்மறையில் கிடைத்த ஒன்றாகும். அதில் அவர்களது சொந்த பங்கு எதுவும் இருக்கவில்லை.

சொல்லப்போனால் வைகோவை வெளியேற்றியது, கூட்டணியினரை அவமதிக்கும் வண்ணம் வேட்பாளர் பட்டியலை முந்தி வெளியிட்டது போன்றவற்றால் கெட்ட பெயரைத்தான் அக்கட்சி சம்பாதித்திருந்தது. இருப்பினும் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அவலத்தில் ‘புரட்சித் தலைவி’ மீண்டும் ஆட்சி அமைக்க வருகிறார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரசின் தோல்வி அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், பா.ம.க, வி.சி அனைவரும் மண்ணைக் கவ்வியிருக்கிருக்கிறார்கள். இந்த காரியவாதிகள் தோற்றார்கள் என்று மகிழ்ச்சியடைய முடியாதபடி தே.மு.தி.க எனும் காரியவாதிக் கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அதாவது இதுதான் எதிர்க்கட்சியாம். அந்த வகையில் தி.மு.கவை எதிர்க்கட்சி என்ற தகுதியில் வைப்பதற்கு கூட மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்தத் தோல்வி அப்பாவி உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்குமே அன்றி அதே அளவு அதிர்ச்சி தி.மு.க தலைவர்களுக்கு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளூர் அளவில் அனைத்து தொழில், காண்ட்ராக்டுகளும் அ.தி.மு.கவினருக்கும் கொடுக்கப்பட்டு நடந்தது போல இந்த ஆட்சியிலும் உள்ளூர் தி.மு.க தலைவர்களை அ.தி.மு.கவினர் கவனிப்பார்கள். அந்த வகையில் தி.மு.க தலைவர்களது தொழில்கள் செவ்வனே நடைபெறும். தி.மு.க அமைச்சர்களெல்லாம் தேவையான கப்பத்தை ஜெயா கும்பலுக்கு கட்டி விட்டு தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்.

அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.

கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் போலீசின் நேரடி அதிகார ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.

மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

நன்றி-வினவு

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, 1,05,328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த் 63,480 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டட பாஜக வேட்பாளர் 2017 வாக்குகள் பெற்றுள்ளார். இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் 1221 வாக்குகள் பெற்றுள்ளது.

ஆலங்குளம்: பூங்கோதை ஆலடி அருணா தோல்வி

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா 77,799 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 78,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

299 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றர்

ஆம், இவரைத்தான் கேட்டிருந்தேன். இவர் ஒரு சிங்கள நண்பன், எமக்கு எதிராக பல வேலைகளை நிறைவேற்றியவன்.

தோற்றத்தில் மகிழ்ச்சி.

ஹசன் அலி சிங்களவன், ஜவாஹிருல்லா எங்களவன் என்று நாம் தமிழர் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரையாற்றிய போது கூட்டம் ஆர்ப்பரித்ததாம்.... ஹசன் அலி வென்று விட்டான் என்ற செய்தி வேதனை அளித்தது ...தனது தொகுதி மீனவர்களை கொன்றவர்களோடு குலாவியவன். மண் கவ்வியது மிக்க மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

அல்லகைக்களுக்கு ஆப்பு .. எனக்கு சிப்பு சிப்பாக வருது...

IMG_0001.jpg

IMG_0002.jpg

21.gif21.gif

நன்றி சவுக்கு

தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது… எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !

மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

மக்கள் ஒரு ஆணையை கொடுத்துள்ளார்கள். அதை அம்மா நிறைவேற்றாவிடின் என்ன நடக்கும்? என தெளிவாகவும் கூறியுள்ளனர்.

அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் பலதும் நடக்கலாம். ஒருவேளை தி.மு. க. அழிந்தாலும் அழியலாம்.

தி.மு.க. என்ற குடும்ப கட்சியின் தலையான கருணாநிதி அவர்கள் உயிர் துறக்கலாம். அதன் மூலம் யார் தலைவர் என்ற ஒரு பிரச்சனை உருவெடுத்து கட்சியை இல்லாமல் போகச்செய்துவிடலாம்

தொடரும் ஊழல் விசாரணைகளும் மக்கள் மத்தியில் ஒரு நிரந்தர வெறுப்பை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

அப்படி அம்மா ஏமாற்றினால் அது மீண்டும் தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக அமையுமா? இல்லை இன்னொரு ( நாம் தமிழர் இயக்கம் ? ) மூன்றாம் கட்சிக்கு வழிகோலுமா? என்பதை காலம் சொல்லும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் வெற்றி

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 68,784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி 65,965 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2,819 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.......???????????????

  • கருத்துக்கள உறவுகள்

தேமுதிக வெற்றி பெற்ற தொகுதிகள்

தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.

ரிஷிவந்தியம், எழும்பூர், விருகம்பாக்கம், ஆலந்தூர், சோளிங்கர், திருத்தணி, செங்கம், கெங்கவல்லி, தருமபுரி, திட்டக்குடி, பண்ருட்டி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, ஆரணி, மேட்டூர், பேராவூரணி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, சேலம் வடக்கு, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, திருக்கோவிலூர், திருவெறும்பூர், திருப்பரங்குன்றம், விருதுநகர், ராதாபுரம், சூலூர், ஈரோடு கிழக்கு, மதுரை மத்தியிலும் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

திமுக வெற்றி பெற்ற தொகுதிகள்

திருவாரூர், சேப்பாக்கம், மன்னார்குடி, கும்பகோணம், கம்பம், திருவாடானை, அரவக்குறிச்சி, லால்குடி, குன்னம், காட்பாடி, வேப்பனஹள்ளி, திருவிடைமருதூர், குன்னூர், பாளையங்கோட்டை, திருச்சுழி, திருச்செந்தூர், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால முதல்வர் அண்ணன் புரட்சித் தலைவர் கப்டன் விஜயகாந்த வாழ்க.......

தங்கபாலு??????????????????எங்கை எபப்டி நிலமை அவரின்/...

இப்ப பாருங்கோ கொஞ்ச நாளில் காங்கிரஸ் திமுகா பெரிய சண்டை பிடிப்பார்கள்.

ஜெயலலிதாவோடு கூட்டு சேரகூட வாய்ப்புண்டு...................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது… எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !

தேர்தல் முடிவை பற்றி சுருக்கமாகவும் விளக்கமாகவும் எழுதுவதென்றால்..............

இதைவிட வேறுவிதமாக எழுதவே முடியாது!

கருணாநிதியின் அருவெருக்க தக்க குடும்ப அரசியலுக்கு ஒரு முற்று புள்ளியை வைத்தாலும்..............???

அடிதடி செய்து அமைச்சர்கள் ஆனவர்களிடம்தான் ஆட்சியை ஓப்படைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழக மக்கள் என்பதே உண்மை நிலை.

கருணாநிதியின் ஆட்சி ஊழல்கள் உலகளாவிய ரீதியில் இருந்ததால் பல வெளிநாட்டு கொம்பனிகள் தமது கிளைகளை தமிழகத்தில் திறந்து பொதுவான சுரண்டல்களை தொடர்ந்தாலும் சில வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. அம்மாவின் அமைச்சர்கள் உள்ளுர் ரவுடிகள் அவர்களுக்கு உள்ளுர் முட்டைகளில் மோசடி பாலிலே தண்ணிகலப்பது இவைகளை விட வேறேதும் தெரியாது ஆக ஏழைகளுக்கு பெருத்த பாதிப்பு என்பது நிற்சயமானது................. அவர்களுடைய வேதனைகளோ சோதனைகளோ பத்திரிகைகளையும் அதிகம் போய்சேராது என்பது அதைவிட துர்பாக்கியமானது.

கருணாநிதியைபோல்.............. இந்த அம்மாவையும் அரசியலில் இருந்து அகற்றும் நாள் வந்தபின்தான்................ இரண்டு கட்சிக்கும் சேராத ஒரு துடிப்புள்ள இளைஞனை தமிழகம் பெற்றால்தான் விடிவுண்டு. உலகமயமாதல் என்பது எமக்கு தீங்கைமட்டுமே தரகூடிய பொருள்களை கூட எமது மனம்கவரும் வகையில் விளம்பரம் செய்து மகிழ்சியுடன் எங்களை வாங்க வைக்கின்றது............. ஆக இனி வரும் தமிழக முதல்வருடைய ஆட்சி தமிழகத்தில் இருந்தாலும் செயற்பாடு தமிழகத்திற்கு வெளியிலேயே அதிகம் தேவை உலகசந்தைகளில் போட்டி தமிழக உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்........

புலம்பெயர்ந்த தமிழர்கள் கூட.............. தமக்க தேவையான மரக்கறி மீன் வகைகளை தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்............. இலங்கையில் இருந்து செய்வதால் அந்த பணம் சிங்கள காடைகளை அடைகின்றது. இதில் இந்தியாவிற்கு சிறிது தொகை போனாலும் நியாயவிலையில் நேரடிகொள்வனவு செய்தால் எமது சகோதர உறவுகளுக்கு எமது உழைப்பு சென்றடைய வாய்ப்பு இருக்கின்றது..............

பண்டமாற்றங்கள்போல்................ புலம்பெயர்தமிழர்கள் கொம்பியூட்டர் போன்ற நிறுவனங்களை நிறுவினால்.............. அதற்கு வேலை ஆட்களை தமிழகத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியாயிலான தயாரிப்பு கொம்பனிகளை நிறுவினால் தமிழகத்தை தமது சந்தையாக கொள்ளலாம்.

ஆடம்பர செலவுகளை கொஞ்சம் குறைத்து ஒரு பகுதியை தமிழக ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதென்பது இன்றை காலத்தில் மிக முக்கியமானதொன்று. ஈழத்தில் உறவுகள் கஸ்டபடுகின்றார்கள்தான்........... ஆனால் ஒரு வேளை உணவிற்கு எத்தனையோ சிறுவர்கள் அங்கே கையேந்தி நிற்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

தொலைநோக்கு சிந்தனைகளே நாளையாவது எம்மை மீட்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.