Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதர் குல மாணிக்கங்கள்

Featured Replies

இனி ஒரு யுத்தமோ ஆயுதப்போராட்டமோ எக்காலத்திலும் வேண்டாம் !!

மனசு மிகக் கனக்குது முழுவதும் பார்க்கும் போது;

பெரும் எண்ணிக்கையில் செல்வந்தர்களாக வெளிநாடுகளில் நாமிருக்கையில் இன்னும் உயிருக்கு மிக ஆபத்தான வேலையைச் செய்து தான் தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு இவர்கள் இருப்பதே எம் போலித் தமிழ் தேசியவாதத்தின் அப்பட்டமான தோலுரிப்பைத்தான் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எமது எதிரிதான் தீர்மானிக்கிறான்!

இனி மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்துதான் இங்கிலாந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது என்று காங்கிரசு கட்டவிழ்த்த மாயஜாலம் காட்டினால். எமது வழியில் போராடலாம்.

ஆயுதபோராட்டம் வெல்லும் என்று புலிகள் ஒருபோதும் சொன்னதில்லை..............!!!!

1986ம் ஆண்டுகளிலேயே தீலீபன் ஊர் ஊராக ஒலிபெருக்கி மூலம் கத்தியது மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் என்றுதான்!

மக்கள் யுத்தம் என்ற மாபெரும் யுத்திதான் எமது தாயகம் மீட்கும் என்றே புலிகள் 1984ம் ஆண்டில் இருந்து திரும்ப திரும்ப சொன்னது.

எமது மக்களுக்கு.............. அடுத்தவீட்டுகாரன் போராடி ஈழம் கொண்டுவர வேண்டும் அவர்கள் அதில் உட்காந்து அப்படியே சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்..................................................... அது போதாது இடையிடையே புலிகளுக்கு அரசியல் பாடமும் எடுக்க வேண்டும். என்றிருந்த நிலையின் விளைவுகளே இன்றைய நாட்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மனது கனக்கின்றது!

ஆனால் மனது கனக்க வேண்டும் என்பதற்காகவே இது இங்கு இணைக்கப் பட்டுள்ளது!

யுத்தம் எப்போதும் கொடுமையானது. அதன் விளைவுகள் என்றும் கோரமானவை!

ஆனால் இந்தக் கொடுமைக்கு உண்மையான காரணம் வேறெங்கோ இருக்கின்றது!

அந்தக் காரணத்திற்காகவே இந்த யுத்தம் தேவைப் பட்டது!

அந்தத் தேவை தீர்க்கப் படாதவரை இந்த நிலை தொடரும்!.....

நான் சொன்னது நிறைய சுட்டு விட்டது போல...

திலீபன் அண்ணா சொன்னார்...சரி, ஆனால் அது நடந்ததா?

உங்களைப் போன்றும் என்னைப் போன்றும் மேற்கு நாடு ஓடி வந்தவர்கள் எல்லாரும் பாதுகாப்பாக ஓடி ஒளிய மக்கள் யுத்தம் என்ற 'மாபெரும்' யுத்தம் ஒன்றை நடத்த மிஞ்சிய மக்களைதானே கேட்டோம்

நாம் மீண்டும் நாடு நோக்கி ஓடவில்லை தானே

கூசவில்லை உங்களுக்கு எனக்கு கூசுவதுபோல்? அப்படி ஓடி வந்து ஒளிந்த பின்னும் இப்படி கதை வசனம் பேச உங்கள் மனசுக்கு கூசவில்லையா?

அப்படி ஒரு கூச்சமும் இல்லை என்றால் அறை கூவுங்கள் "எதிரிதான் நாம் எடுக்கும் ஆயுதத்தை தீர்மானிக்கின்றான் என"

அடுத்த வீட்டுக் காரன் போராடி எமக்கான விடுதலையை பெறட்டும் என்று தானே நானும் நீங்களும் ஓடி வந்தோம்? பின்பு எவரை யார் குற்றம் சொல்லுவது ?

நான் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வேணாம் என்று சொல்லும் போது வீரிட்டு எழும் உங்கள் வீர உணர்ச்சி, போராட்டம் நடக்கும் போதும் எழுந்து நாடு விட்டு ஓடி வந்து ஒளியாமல் போராடி இருந்தால் (அதாவது என்னைப் போல ஓடி வராமல்) இந்த தமிழ் ஈழ போராட்டமே தலை கீழாக மாறி இருக்கும்.

(இப்ப இங்கு மணி 3 , மிகுதி நாளைக்கு )

மனது கனக்கின்றது!

ஆனால் மனது கனக்க வேண்டும் என்பதற்காகவே இது இங்கு இணைக்கப் பட்டுள்ளது!

அதாவது,

இப்படி எம் மண்ணில் இன்று துயர் ஏந்தி பரிதவிக்கும் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பதிவுகளை இணைப்பது கூட ஒரு "நோக்கத்துக்காக" என்று சொல்ல வாறியள்

அப்பா இப்படி இணைக்காமல், அங்க உள்ள எல்லாரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு அணி வகுக்கின்றனர் என்றால் சந்தோசப் படுவீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு செகுசு வாழ்க்கை வாழ வந்துவிட்டு.. ஐயோ பரிதாபம் என்று நீலிக்கண்ணீர் விடும் பலர் எம்மத்தியில் குவிந்து கிடக்கிறார்கள்.

எமது தேசம்.. போரால் மட்டும் அழியவில்லை. வெளிநாட்டு மோகம் கொண்ட எம்மவர்களின் பேராசையாலும் தான் அழிந்தது.

எமது தேசம் எங்கும் கண்ணிவெடிகள்.. நிறைந்து கிடக்கின்றன. வயல் நிலங்கள்.. தோட்டங்கள்.. காடுகள் எங்கும் கண்ணிவெடி. அந்த வயல் நிலங்களும் தோட்டங்களும்.. குளக்கரைகளும் எம் மக்களின் வாழ்வாதாரங்கள். அவற்றை எங்கோ அங்கோலாவில் பிறந்தவன் வந்து கண்ணி வெடி அகற்றி துப்புறவு செய்கிறான்.. அல்ஜஜீரா அதை ஒளிபரப்புது. நாங்களும் தான் எத்தனை ஊடகம் வைச்சிருக்கிறம்.. எத்தனையோ செய்தி வருகுது வெடி பொருள் வெடித்து பலி.. காயம் என்று. அப்ப எல்லாம் எங்களுக்கு வராத கவலையை அல்ஜஜீரா வர வைத்திருப்பது.. உண்மையில் அல்ஜஜீராவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் எமது தாயக மக்கள் இந்த வெடிபொருட்களால் சந்திக்கும் இழப்புக்கள்.. குறித்து எந்த அக்கறையும்.. நம்மவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

கிளிநொச்சியை 1998 இல் மீட்ட பின்னர் விடுதலைப்புலிகளும் வெண்புறா அமைப்பும் பல ஆயிரம் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீளக் குடியமர்த்தினர். கண்ணிவெடிகள் எமது தாயக வளர்ச்சியில் ஒரு முட்டிக்கட்டையே..! அவற்றை மிகவும் பத்திரமாக அகற்ற வேண்டிய பொறுப்பும் எமக்குண்டு.

நாம் சர்வதேச அளவில் உதவிகளைப் பெற்று இப்படியான செயல்களையாவது செய்கிறோமா என்றால் இல்லை. ஐயோ பரிதாபம்.. நாங்க நல்லா இருக்கிறம்.. அவை கஸ்டப்படினம்.. என்று வெறும் பசப்புக்களே எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன. ஆக மிஞ்சிப் போனா ஆயுதப் போராட்டத்தை குறை பிடிக்க வேண்டியது. ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப்புலிகள்.. ஒரு பிரதேசத்தை ஒரு சில மாதங்களுக்குள் துப்பரவு செய்து மக்களை மீளக் குடியேற்றியதை பலர் வசதியாக மறந்து விட்டார்கள். வெண்புறா அமைப்பு செய்த பணியை பலர் வெகு இலகுவாக மறந்து விட்டார்கள். இன்று அந்த அமைப்புக்கள் தாயகத்தில் செயற்பட முடியாத நிலை. அவர்களை செயற்பட வைக்கக் கூட சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க.. யாரும் இல்லை...!

இதுதான் நாம்.. ஆயுதப் போராட்டத்திலும் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம். மற்றவன் எப்படியாவது வாழட்டும்.. நான் எப்படியாவது நல்லா வாழனும்.. அப்பப்ப அனுதாபியாக என்னை காட்டியும் கொள்ளனும்..! இப்படியான போலி எண்ணங்களை தோற்றங்களை முதலில் களைந்தெறிந்துவிட்டு.. சரியான செயற்திட்டங்களை வகுத்து அவற்றை தாயகம் நோக்கி கொண்டு செல்லுங்கள். அதுதான் தேவை..! முடியல்ல என்றால் செய்யுறவனை.. போராடுறவனை அதை சரிவரச் செய்யவிட்டிட்டு ஒதுங்கி இருந்து உங்க குழந்தை குட்டிகளை பார்த்துக்குங்க. அதுக்கேன்.. போராட்டத்தை.. தமிழ் தேசிய உணர்வை சபிக்கிறீங்களோ...????! பாதிக்கப்பட்ட மக்களே.. எமக்கேன் இந்தத் தோல்வி வந்தது என்று கவலைப்படுகிறார்களே அன்றி... அந்தக் கஸ்டத்திலும்... சந்தோசமாக வாழ வழி தேட முனைகிறார்களே அன்றி.. சபித்துக் கொண்டிருக்கவில்லை. அந்த மக்களின் மன உறுதியில் 1% கூட போரை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு ஓடி வந்தவர்களிடம் கிடையாது.

Edited by nedukkalapoovan

நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எமது எதிரிதான் தீர்மானிக்கிறான்!

இனி மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்துதான் இங்கிலாந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது என்று காங்கிரசு கட்டவிழ்த்த மாயஜாலம் காட்டினால். எமது வழியில் போராடலாம்.

ஆயுதபோராட்டம் வெல்லும் என்று புலிகள் ஒருபோதும் சொன்னதில்லை..............!!!!

1986ம் ஆண்டுகளிலேயே தீலீபன் ஊர் ஊராக ஒலிபெருக்கி மூலம் கத்தியது மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் என்றுதான்!

மக்கள் யுத்தம் என்ற மாபெரும் யுத்திதான் எமது தாயகம் மீட்கும் என்றே புலிகள் 1984ம் ஆண்டில் இருந்து திரும்ப திரும்ப சொன்னது.

எமது மக்களுக்கு.............. அடுத்தவீட்டுகாரன் போராடி ஈழம் கொண்டுவர வேண்டும் அவர்கள் அதில் உட்காந்து அப்படியே சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்..................................................... அது போதாது இடையிடையே புலிகளுக்கு அரசியல் பாடமும் எடுக்க வேண்டும். என்றிருந்த நிலையின் விளைவுகளே இன்றைய நாட்கள்!

மீண்டும் மீண்டும் வாசிக்கும் போதுதான் இந்த மகா தத்துவத்தின் உள்ளர்த்தம் புரிந்தது. ஊரில் இருந்து இன்றும் திலீபன் அண்ணாவின் கனவை நனவாக்க ஆசைப்படும் உங்களின் எழுத்தின் மகிமை புரிந்தது

அற்புதம் !!

நீங்கள் இதனை திலீபன் அண்ணா சொல்லிய எம் ஈழத் தேசத்தில் இருந்து சொல்லுவதால் மெய் சிலிர்த்து பதில் எழுதாமல் விடுகின்றேன்

நன்றி வணக்கம்

மனது கனக்கின்றது!

ஆனால் மனது கனக்க வேண்டும் என்பதற்காகவே இது இங்கு இணைக்கப் பட்டுள்ளது!

யுத்தம் எப்போதும் கொடுமையானது. அதன் விளைவுகள் என்றும் கோரமானவை!

ஆனால் இந்தக் கொடுமைக்கு உண்மையான காரணம் வேறெங்கோ இருக்கின்றது!

அந்தக் காரணத்திற்காகவே இந்த யுத்தம் தேவைப் பட்டது!

அந்தத் தேவை தீர்க்கப் படாதவரை இந்த நிலை தொடரும்!.....

அதாவது,

இப்படி எம் மண்ணில் இன்று துயர் ஏந்தி பரிதவிக்கும் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பதிவுகளை இணைப்பது கூட ஒரு "நோக்கத்துக்காக" என்று சொல்ல வாறியள்

இப்படி இணைக்காமல், அங்க உள்ள எல்லாரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு அணி வகுக்கின்றனர் என்றால் சந்தோசப் படுவீர்களா ?

யுத்தத்தை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு செகுசு வாழ்க்கை வாழ வந்துவிட்டு.. ஐயோ பரிதாபம் என்று நீலிக்கண்ணீர் விடும் பலர் எம்மத்தியில் குவிந்து கிடக்கிறார்கள்.

எமது தேசம்.. போரால் மட்டும் அழியவில்லை. வெளிநாட்டு மோகம் கொண்ட எம்மவர்களின் பேராசையாலும் தான் அழிந்தது.

எமது தேசம் எங்கும் கண்ணிவெடிகள்.. நிறைந்து கிடக்கின்றன. வயல் நிலங்கள்.. தோட்டங்கள்.. காடுகள் எங்கும் கண்ணிவெடி. அந்த வயல் நிலங்களும் தோட்டங்களும்.. குளக்கரைகளும் எம் மக்களின் வாழ்வாதாரங்கள். அவற்றை எங்கோ அங்கோலாவில் பிறந்தவன் வந்து கண்ணி வெடி அகற்றி துப்புறவு செய்கிறான்.. அல்ஜஜீரா அதை ஒளிபரப்புது. நாங்களும் தான் எத்தனை ஊடகம் வைச்சிருக்கிறம்.. எத்தனையோ செய்தி வருகுது வெடி பொருள் வெடித்து பலி.. காயம் என்று. அப்ப எல்லாம் எங்களுக்கு வராத கவலையை அல்ஜஜீரா வர வைத்திருப்பது.. உண்மையில் அல்ஜஜீராவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் எமது தாயக மக்கள் இந்த வெடிபொருட்களால் சந்திக்கும் இழப்புக்கள்.. குறித்து எந்த அக்கறையும்.. நம்மவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

கிளிநொச்சியை 1998 இல் மீட்ட பின்னர் விடுதலைப்புலிகளும் வெண்புறா அமைப்பும் பல ஆயிரம் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீளக் குடியமர்த்தினர். கண்ணிவெடிகள் எமது தாயக வளர்ச்சியில் ஒரு முட்டிக்கட்டையே..! அவற்றை மிகவும் பத்திரமாக அகற்ற வேண்டிய பொறுப்பும் எமக்குண்டு.

நாம் சர்வதேச அளவில் உதவிகளைப் பெற்று இப்படியான செயல்களையாவது செய்கிறோமா என்றால் இல்லை. ஐயோ பரிதாபம்.. நாங்க நல்லா இருக்கிறம்.. அவை கஸ்டப்படினம்.. என்று வெறும் பசப்புக்களே எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன. ஆக மிஞ்சிப் போனா ஆயுதப் போராட்டத்தை குறை பிடிக்க வேண்டியது. ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப்புலிகள்.. ஒரு பிரதேசத்தை ஒரு சில மாதங்களுக்குள் துப்பரவு செய்து மக்களை மீளக் குடியேற்றியதை பலர் வசதியாக மறந்து விட்டார்கள். வெண்புறா அமைப்பு செய்த பணியை பலர் வெகு இலகுவாக மறந்து விட்டார்கள். இன்று அந்த அமைப்புக்கள் தாயகத்தில் செயற்பட முடியாத நிலை. அவர்களை செயற்பட வைக்கக் கூட சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க.. யாரும் இல்லை...!

இதுதான் நாம்.. ஆயுதப் போராட்டத்திலும் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம். மற்றவன் எப்படியாவது வாழட்டும்.. நான் எப்படியாவது நல்லா வாழனும்.. அப்பப்ப அனுதாபியாக என்னை காட்டியும் கொள்ளனும்..! இப்படியான போலி எண்ணங்களை தோற்றங்களை முதலில் களைந்தெறிந்துவிட்டு.. சரியான செயற்திட்டங்களை வகுத்து அவற்றை தாயகம் நோக்கி கொண்டு செல்லுங்கள். அதுதான் தேவை..! முடியல்ல என்றால் செய்யுறவனை.. போராடுறவனை அதை சரிவரச் செய்யவிட்டிட்டு ஒதுங்கி இருந்து உங்க குழந்தை குட்டிகளை பார்த்துக்குங்க. அதுக்கேன்.. போராட்டத்தை.. தமிழ் தேசிய உணர்வை சபிக்கிறீங்களோ...????! பாதிக்கப்பட்ட மக்களே.. எமக்கேன் இந்தத் தோல்வி வந்தது என்று கவலைப்படுகிறார்களே அன்றி... அந்தக் கஸ்டத்திலும்... சந்தோசமாக வாழ வழி தேட முனைகிறார்களே அன்றி.. சபித்துக் கொண்டிருக்கவில்லை. அந்த மக்களின் மன உறுதியில் 1% கூட போரை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு ஓடி வந்தவர்களிடம் கிடையாது.

ஊரில் இருந்து எழுதும் நெடுக்ஸ் இன் (அதாவது எம்மைப் போல் வெளி நாடுக்கு ஓடி வராத) கருத்துக்கு ஒரு பச்சை புள்ளி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் !!

நீங்கள் இதனை திலீபன் அண்ணா சொல்லிய எம் ஈழத் தேசத்தில் இருந்து சொல்லுவதால் மெய் சிலிர்த்து பதில் எழுதாமல் விடுகின்றேன்

நன்றி வணக்கம்

அதாவது,

இப்படி எம் மண்ணில் இன்று துயர் ஏந்தி பரிதவிக்கும் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பதிவுகளை இணைப்பது கூட ஒரு "நோக்கத்துக்காக" என்று சொல்ல வாறியள்

இப்படி இணைக்காமல், அங்க உள்ள எல்லாரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு அணி வகுக்கின்றனர் என்றால் சந்தோசப் படுவீர்களா ?

ஊரில் இருந்து எழுதும் நெடுக்ஸ் இன் (அதாவது எம்மைப் போல் வெளி நாடுக்கு ஓடி வராத) கருத்துக்கு ஒரு பச்சை புள்ளி

நான் இதை புலத்தில் இருந்து சொல்வதுதான் தவறானது...................???

ஈழத்தில் இருந்து சொன்னவர்கள் இன்று கண்ணிவெடிகளுக்குள்ளும் காந்தகங்களின் நெருப்புக்குள்ளும் புதையுண்டு போய்விட்டார்கள் இந்த ஆயிரங்களில் ஒரு துளியாக நானும் புதையுண்டு போயிருந்தால் அப்படி என்ன மாற்றம் வந்திருக்கும்??

நான் சாகவில்லை............... செத்தவர்கள் வந்து ஏதும் சொல்ல போவதுமில்லை.

போராட்டம் தேவையில்லை என்று யார்தான் சொல்லவில்லை???

யுத்தம் கொடியது என்று கத்தி கதறிதானே நாங்கள் கரைசேர்ந்தோம்.

கண்ணிவெடிகளை அகற்றிவிட்டால்..............?? கண்ணிவெடிக்காகவா தமிழர்கள் ஈழத்தில் போராடதொடங்கினார்கள்???

அங்கே இல்லாதவைகளை கற்பனையில் காட்ட தேவையில்லை...................

ஆனால் கற்பனையில் உள்ள தேசத்தை உருவாக்க வேண்டிய தேவை எம்மைவிட அங்குள்ளவர்களுக்கே அதிகம் உள்ளது. கிளைகள் சிதறினால் நாளை புதிய கிளைகள் துளிர்விடலாம் வேரோடு அறுபடுவெதன்பதை புரிந்தால்தான் அதை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளதை உணரலாம்.

ஒரு பிள்ளையின் ஈமகிரிகைகள் நடந்துகொண்டிருக்கும்போதே................. அவனுடைய சகோதரியும் இன்றைய அடிபாட்டில் இறந்துவிட்டாள் என்பதை எப்படி சொல்வது என்று வந்த புலிகள் விழுங்கியும்...... விழுங்காமலும் சொன்ன கதைகள் என்பது ஈழத்தில் எத்தனை வீட்டீல் நடந்தது???

அது நடக்கும்போதே எத்தனை வீடுகளில் பூப்புனிதநீராட்டு சிறப்பாக நடந்தது??

கூட்டிகழித்தால் 20 க்கும் 80க்கும் இடையில்தான் நாம் நிற்போம்..................... இந்நிலையை மாற்றி 80க்கும் 20க்கும் என்றாவது சிந்திப்பதே ஆக்கபூர்மானது.

தோற்கடிக்கபடுமுன்னரே தோல்வியை ஒப்புகொள்வது மனிதனுக்கு மரணத்திலும் விட இழப்பானது. எல்லோரும் கரையேறவேண்டும் என்பதே எமது அவா. அவருடைய துன்பத்தை காட்டி அடுத்தவனையும் அச்சமூட்டுவது எதிரி செய்ய வேண்டியது....................... அவர்கள்தான் அதை திறம்பட இங்கே யாழ்களத்திலும் செய்கிறார்கள்..................... எங்களால் வக்காளத்து வாங்க முடியவில்லை அவ்வளவே!

"ஊர் கூடினால் தேர் இழுக்கலாம";

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் வாசிக்கும் போதுதான் இந்த மகா தத்துவத்தின் உள்ளர்த்தம் புரிந்தது. ஊரில் இருந்து இன்றும் திலீபன் அண்ணாவின் கனவை நனவாக்க ஆசைப்படும் உங்களின் எழுத்தின் மகிமை புரிந்தது

அற்புதம் !!

நீங்கள் இதனை திலீபன் அண்ணா சொல்லிய எம் ஈழத் தேசத்தில் இருந்து சொல்லுவதால் மெய் சிலிர்த்து பதில் எழுதாமல் விடுகின்றேன்

நன்றி வணக்கம்

அதாவது,

இப்படி எம் மண்ணில் இன்று துயர் ஏந்தி பரிதவிக்கும் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பதிவுகளை இணைப்பது கூட ஒரு "நோக்கத்துக்காக" என்று சொல்ல வாறியள்

இப்படி இணைக்காமல், அங்க உள்ள எல்லாரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு அணி வகுக்கின்றனர் என்றால் சந்தோசப் படுவீர்களா ?

ஊரில் இருந்து எழுதும் நெடுக்ஸ் இன் (அதாவது எம்மைப் போல் வெளி நாடுக்கு ஓடி வராத) கருத்துக்கு ஒரு பச்சை புள்ளி

ஊரில் இருந்து புலம் பெயாந்தோம் என்ற ஒரு தவறை வைத்து ஒரு சரித்திரத்தையே தவறாக்கும் உங்கள் தத்துவம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. புலத்தில் இருந்தவர்களிடம் இருந்து பணத்தை சேர்த்துதான் புலிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இறுதிகாலத்தில் கூட எத்தனை பேர் வீதிக்கு வந்தார்கள்??? என்பதை புரிதலின் ஊடாகவே நாம் இனி பயணிக்க முடியும்.

போராடினால் இறந்துவிடுவீர்கள் துன்பம் வரும் போய் கூட்டாக தற்கொலை செய்யுங்கள் எனும் உங்கள் தத்துவம் எனக்கு முழுதாக புரியவில்லை. 20வீதமானவர்களின் முதுகில் ஏறி 80வீதமானவர்கள் பயணித்தார்கள் என்பதே உண்மை. இன்று புலத்தில் இருந்து இலட்சம் வரை வங்கிகடன் எடுத்துகொடுத்துவிட்டு வாழ்வை தொலைத்தவர்கள் இல்லையா???? அவர்களையும் ஒடி வந்தவர் ஒடி வந்தவர் என்றால் யார் ஒடாது நின்றார்??? எமது போராட்டமே சுட்டுபோட்டு ஒடுவதில்தானே தொடங்கியது......................... நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்பது பொருட்டல்ல என்ன செய்தோம் என்பதே விடயம்.

போராட்டத்தின் வடிவத்தை நாம் விரும்பாவிட்டாலும் மாற்றவேண்டியது காலத்தினதும் தற்போதைய உலகஅரங்கினதும் கட்டாயம்........... வடிவத்தை மாற்ற முடியுமே தவிர. போராடாதீர்கள் என்பதும் துன்பங்களை காட்டி அச்சுறுத்துவது என்பதும் எதிரி 70ம் ஆண்டளவிலேயே செய்ய தொடங்கியது..................................... இதை புதிதாக நாம் யாருக்கு செய்து காட்டுவது???

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது,

இப்படி எம் மண்ணில் இன்று துயர் ஏந்தி பரிதவிக்கும் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பதிவுகளை இணைப்பது கூட ஒரு "நோக்கத்துக்காக" என்று சொல்ல வாறியள்

இப்படி இணைக்காமல், அங்க உள்ள எல்லாரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு அணி வகுக்கின்றனர் என்றால் சந்தோசப் படுவீர்களா ?

அந்தச் சந்தோசப் படும் காலம் எல்லாம் முடிந்து விட்டது!

எந்தக் காரணத்துக்காக இந்த யுத்தம் நடை பெற்றது என்பதை நாம் மறந்து விட்டோம்!

இது இவர்கள் செய்ய வேண்டிய வேலையே அல்ல, எதற்காக இவர்களைக் கொண்டு செய்விக்கின்றார்கள்?

இதனால் சிங்களம் ஒரு 'குரூர திருப்தி' அடைகின்றது!

சிங்களப் பெண்களைச் சிங்களம் எதற்காக இங்கு வேலைக்கு அமர்த்தவில்லை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

இப்படியான ஆபத்தான தொழில்களின் இவர்களை ஈடு படுத்துவதே, ஒரு வகையில் மனித உரிமை மீறல் தான்!

இப்படியான சம்பவங்கள் நடை பெறக் கூடாது என்பதற்காகவே ' எமது தலைவிதியை' நாமே தீர்மானிக்க வேண்டும் என்பதற்காகத் தான் மக்களும் போராளிகளும் செத்து மடிந்தார்கள்!

இவர்கள் இந்த வேலையை வேறு வழியின்றித் தான் செய்கின்றார்கள்! வீடியோவை முழுவதும் பாருங்கள்.

அல் ஜசீரா இதை உலகத்துக்குக் காட்டுகின்றது! அதன் சேவைக்கு மறு கருத்து இல்லை. உலகம் இதை அறிய வேண்டும்!

சிங்களத்தின் நோக்கம் எங்களை அடிமைகளாக நடத்துவது'

அதை உலகத்தின் கண்களுக்குக் கொண்டு செல்வது புத்திசாலித்தனம்!!!

இதை இணக்க வேண்டாமென்று சொல்லவில்லை! தாரளமாக இணையுங்கள்!

எமது இனத்தின் விமோசனத்திற்காக!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

மனசு கணக்கிறது...நாம் என்ன தான் இங்கே இருந்து கொண்டு காசு அனுப்பினாலும் அவர்களுக்கு என ஒரு தொழில்,வருமானம் இல்லா விட்டால் அவர்கள் திரும்பவும் இந்த வேலைக்கே போவார்கள்...அவர்களுக்கு என வேற தொழில் அமைத்துக் கொடுத்தாலும் வேறு யாரோ ஒருவர் இந்த வேலைக்கு வரத் தானே பார்ப்பார்கள்... அடுத்தது அவர்கள் துணிந்து இந்த வேலைக்குப் போகா விட்டால் யார் இந்த வேலையை செய்வது?...யாரோ ஒருவர் இந்த வேலையை செய்தால் தானே மீள் குடியேற்றம் என்பது சாத்தியமாகும்...ஆனால் மீண்டும் வேண்டாம் இன்னொரு யுத்தம் அப்படி ஒரு நிலை தோன்றுமாயின் அது மக்கள் எழுச்சியாய் தான் இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மௌனமாக மிக மௌனமாக யுத்தம் தொடர்ந்தும் நடக்கிறது.

மக்கள் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு அதன்மூலம் தக்கவைக்கப்படக் கூடிய அபிவிருத்தியை நாம் காணாவிட்டால் இதுபோன்ற வேலைகளையே இனிவரும் காலங்களிலும் எம்மக்கள் செய்ய நேரிடும்..! :blink:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏன் இந்த கவலை?

எதற்காக இந்த பரிதாபம்?

மனிதாபிமானம் வாழும் நாட்டில் வாழ்கின்றீர்கள்?

உயிருக்கோ உடலுக்கோ எதுவித பயமுமில்லை?

நேரம் இருந்தால் இரண்டாவது மூன்றாவது வேலைக்குப்போங்கள்

பணம் சேகரியுங்கள்

உல்லாசமாக வாழுங்கள்

உங்களுக்கு ஏன் இந்த மண்ணில் உள்ளோர் மீதான பற்று?

வாழத்தெரியாதவர்கள்?

பிழைக்கத்தெரியாதவர்கள்?

போங்கள்

போய் உருப்படும் வழிகளைப்பாருங்கள்?

அங்குள்ள மக்கள் எவருடன் இருந்தாலென்ன?

எவன் அவர்களை ஆண்டாலென்ன?

யோசித்து யோசித்து வந்த இடத்தில்அனாதையாய் மண்டையைப்போடாதீர்கள்..................................................??????????????????????? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதிருந்து தேசியத்தை குத்தகைக்கு எடுத்தனீங்கள் சொல்லவேயில்லை...நாங்கள் உங்கள மாதிரி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு ஏசி அறையில் இருந்து கொண்டு காசை தூக்கிப் போட்டு போய் சண்டை போடு என அங்கிருப்பவர்களை அனுப்பவில்லை...அங்கு தற்போது என்ன நட‌க்கிறதை வைத்துக் கொண்டு தான் கருத்து எழுதினேன்...கானொலியைப் பாருங்கள் அந்தப் பெண்கள் யுத்தத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று நான் சொன்னதில் என்ன தப்பு? இது தானே தற்போது அங்கு நட‌க்கிறது...ஒரு,இர‌ண்டு பேருக்கு செலவுக்கு மாதம்,மாதம் காசு அனுப்புவதை விட‌வும்[அதுக்காக நான் ஒருத்தருக்கும் மாதம்,மாதம் உதவி செய்ய வேண்டாம் என சொல்லவில்லை.] இசைக் கலைஞன் எழுதின மாதிரி ஒரு அபிவிருத்தி திட்டம் தான் தற்போது தேவை

மக்கள் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு அதன்மூலம் தக்கவைக்கப்படக் கூடிய அபிவிருத்தியை நாம் காணாவிட்டால் இதுபோன்ற வேலைகளையே இனிவரும் காலங்களிலும் எம்மக்கள் செய்ய நேரிடும்..! :blink:

இது உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எழுதியதையும்

அதற்கு ரதி எழுதிய பதிலையும் வாசித்தால் புரியும்

தமிழன் எங்கு நிற்கின்றான் என்று.

எழுதியதை வாசிக்கவோ

கிரகிக்கவோ முன் பதிலடி கொடுக்கவேண்டும் என்ற மனநிலையிலுள்ள ஒரு இனம் ஒற்றுமையாக சிந்திக்குமா? போராடுமா? மக்கள்புரட்சி நடைபெறுமா? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

ஒ...மன்னிக்கவும் அண்ணா நீங்கள் உங்கள் பொதுவான கருத்தை எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன் என்டாலும் உதவி செய்பவர்கள் 2,3 வேலை செய்து தொட‌ர்ந்தும் உதவி செய்து கொண்டே இருப்பார்கள்,இருக்கிறார்கள்

  • தொடங்கியவர்

பார்த்தவுடன் மனது கனத்தது உடனே இணைத்துவிட்டேன்.காலை எழும்பி யாழைப்பார்த்தால் இணைப்பைகாணோம்.இப்போதுதான் பார்த்தேன் இணைப்பு இங்குஇருக்கின்றது.நன்றி.

எதிலும் பிழைபிடித்து,எப்போதுமே உண்மையை ஒப்புக்கொள்ளமாட்டாத தான் பிடித்தமுயலுக்கு மூன்றுகால் எனும் ஒரு நிலைக்கு தமிழினம் வந்துவிட்டது.அதில் இருந்து மீண்டெழுவதில் தான் எமது வெற்றியே இருக்கின்றது.

இன்றும் திண்ணையில் கூட எனது பெயரை இழுத்து ஏளனம் நடக்கின்றது.(முதலில் சபை நாகரீகம் கற்றுக்கொள்ளுங்கள்) நீங்கள் தமிழனை வைத்து பிழைப்பு நடாத்துவதை நாங்கள் எழுதி தடுத்துவிடுவம் என்ற பயம் வேறொன்றுமில்லை.கேவலம் இங்கு கனடாவில் முள்ளிவாய்க்கால் அவலம் யார் நடாத்துவது,எங்கு நடாத்துவது என அடிபடுகின்றார்கள் அமைப்பாளர்கள்.இவர்களை நம்பித்தான் போராட்டத்தை கொடுத்துவிட்டு போனார்களாம்.

திலீபன் கண்டது கனவு.கனவை நனவாக்கியிருக்க வேண்டுமெ ஒழிய ஓடிவந்து அதற்கொரு நியாயம் கற்பிக்ககூடாது.

நானும் சிலவருடங்களில் ஓடிவந்தேன்.இருந்து பிரயோசனம் என்று தெரிந்தவுடன்.முடிந்தளவு புலியில் விமர்சனம் பல இடங்களிலும் வைத்தேன் மாறுவார்களென்று.இன்றும் என்றோ ஒரு நாள் நாட்டிற்கு போய் மீண்டும் அதே அகதிகளுக்கான வேலைகளை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மௌனமாக மிக மௌனமாக யுத்தம் தொடர்ந்தும் நடக்கிறது.

விடுதலைப்புலிகள் பெண்களைப் போராளிகளாக்கி ஆபத்துக்குள் தள்ளி விடுகிறார்கள் என்று அறிக்கை விட்ட ராதிகா குமாரசாமிகள் தான் குறட்டை விட்டு உறங்குகிறார்கள் என்றால்...

அக்கா.. உங்களைப் போன்ற பெண்களின் உரிமைகள் பற்றி பேசுபவர்களாவது.. ஒரு அமைப்பை உருவாக்கி.. இந்தப் பெண்களை போதிய பயிற்சிகள்.. போதிய பாதுகாப்பு உபகரணங்கள்.. வாகனங்கள் இன்றி.. ஆபத்து மிக்க பணியில் ஈடுபடுத்தி இருப்பது பற்றி சர்வதேச பெண்கள் அமைப்புக்களுக்கு.. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு ஆதார அறிக்கையை சமர்ப்பிக்கலாமே..??!

2009 மே க்குப் பின்னர் எமது பெண்கள் பாலியல் ரீதியிலும்.. படுகொலை ரீதியிலும் பல சொல்லனா கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் சர்வதேச பெண்கள் அமைப்புக்களுக்கு ஆதார அறிக்கைகள் சமர்ப்பித்து அவர்கள் மீதான கொடுமைகளுக்கு நீதி வழங்கக் கேட்டதாகத் தெரியவில்லை. ஐநா போர்குற்ற விசாரணை அறிக்கை கூட தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு இலக்காக்கி கொல்லப்பட்டுள்ளதை. இதை இட்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் எந்த ஒரு பெண்கள் அமைப்பும் கரிசணை காட்டியதாக தெரியவில்லை. ஒரு சர்வதேசக் கவன ஈர்ப்பை இது தொடர்பில் செய்ததாகவும் தெரியவில்லை. அல்லது அறியக் கூடியதாக அப்படி எதுவும் நிகழ்ந்தாதவும் இல்லை. ஏன்....????????????????????

எல்லாருமே எங்களோட... பெண்களைப் பற்றி சும்மா வீம்புக்கு வீரம் கதைக்கத்தானா சரி...??????! :(:o:unsure:

எங்களுக்குள் பெண்கள் அமைப்பு எங்கிருக்கிறது?

ஒரு அமைப்பை உருவாக்குவதா?

எவ்வளவு கஸ்டப்பட்டு ஒன்று உருவாக்கப்பட்டது..... இப்போது காணாமல் போக்கடிக்கப்பட்டு அரசியல் தளங்களாக மாற்றப்பட்டு சுயத்தை இழந்துவிட்டது. இந்தப் புலம்பெயர்ந்த போக்கிரிக்கூட்டத்தின் குழுமச்சண்டைகள் தீராதவரை ஒருபெண்கள் அமைப்பை உருவாக்குவது என்பது கல்லில் நார் உரிப்பதற்குச் சமமானது. எத்தனை முயற்சிகள் எத்தனை தடவைகள் தொடர்ச்சியான தோல்விகள் இவையெல்லாம் சேர்ந்து நானே இப்படியானவற்றிலிருந்து ஒதுங்கி செல்ல வழிவகுத்துவிட்டன. இருப்பினும் என்னுடைய இயங்குதளம் தன்னுடைய சுயத்தை இழக்காமல் தொடர்ந்தும் பயணிக்கும் என்பதைத் தவிர வேறு எந்த வினையாற்றலிலும் கனமாகச் சாதிக்கும் என்று கூறக்கூடிய நம்பிக்கையை இழந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்று சொல்கிறீர்கள் மகிழ்ச்சி........

காய்க்கிற மரம் கல்லெறிபட வேண்டும் இது நியதி. ஒரு ஆன காரியத்தை ஆக்குவதென்றால் எளிதானதொன்றல்ல. 30 வருடம் புலிகள் என்ற அமைப்பை தமிழனை வைத்து அவர்கள் எப்படி கட்டிகாத்தார்கள் என்பது அதிசயமானது. இந்த போராட்டத்தில் நாம் இருந்த நல்லவைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். இனிஒன்றை கட்டுவதென்பது நீங்கள் சொல்வதுபோல கல்லிலே நார் உரிப்பதுதான் ஆனால் முயற்சி என்ற ஒன்றை முயலாமலே விடுவதுதான் தவறானது. நீங்கள் நாலு நல்லவிடயம் செய்துவிட்டால்போது தூற்ற என்றே பிறந்ததுகள் தங்களது வேலையை தொடங்கிவிடுவார்கள்................. புலிகள் மீது சுமத்ததாத பழியையா உங்கள் மீது சுமத்த போகிறார்கள்?? எங்கிருந்தும் விலகுவோம் என்பதை இனமான துடிப்புள்ளவர்கள் தயவு செய்து மறந்துவிடுங்கள் எங்கெல்லாம் இணையலாமோ அங்கெல்லாம் இணைந்திடுவோம் என்பதே................. உங்களை மரணம் தேடிவரும்போது கொஞ்சம் ஆறதலாக கண்ணை மூட வழிசமைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.