Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தீர்வு காண முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு அதிகாரத்தை தமிழர்களுக்கு அவ்வளவு சுலபமாக சிங்களம் கொடுத்துவிடாது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரத்தில் மாநிலக் காவல்துறை போன்றனவற்றை தவிர்த்து ஒரு வரைவையே யோசிக்கமுடியும். இதெல்லாம் கூட அமெரிக்காவோ ஐநா வோ விரும்பினால் கூட இந்திய மத்தியரசின் விருப்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஒரு இலக்கை நோக்கிய படிப்படியான முன்னேற்றத்திற்குப் பதிலாக ஒரேயடியாக தனியரசு என்ற சிந்தனைமுறையே இதற்கு பிரதான தடையாய் இருக்கும். புலம்பெயர் பூசுவாக்களின் தமிழ்த்தேசிய சிந்தனை நாடுகடந்த அரசு என்ற மேட்டுக்குடி அடயாளத்தேடல் குழுவாதம் போன்றன எப்போதும் தாயக மக்களுக்கான சிறு அதிகாரத்தை கூட கொடுக்க விரும்பாத சிங்களத்திற்கு உதவியாக இருக்கும். சிங்களம் தனது பேரினவாதத்தை நியாயப்படுத்த ஏதுவாக இருக்கும்.

நாடுகடந்த அரசு அவை பேரவை காங்கிரஸ் என்னும் பல்வேறு அமைப்புகள் புலத்தில் பெருகிக்கொண்டே இருக்கின்றது. தாயகம் குறித்த சிந்தனைக்கு இத்தனை அமைப்புகள் தேவையில்லை. இங்கே தேசியவாதம் தாயகம் என்ற போர்வையில் நடப்பது மேட்டுக்குடிகளின் அடயாளத்தேடல். தாயக மக்களின் நலன்சார்ந்து அவர்களின் நெருக்கடியான வாழ்வுக்கு தோழோடு தோழ்நிற்பதை தவிர்த்து அவர்களை விட்டு விலத்தி அவர்களுக்காக நாடு அமைப்பது அவர்களுக்காக தேசியம் கதைப்பது போன்ற கோமாளித்தனங்கள் எஞ்சிய மக்களை கருவறுப்பதற்கே வழிசெய்யும். இந்த அமைப்புக்களில் அங்கம் வகிப்பதில் இருந்தும் ஆதரவு கொடுப்பதில் இருந்தும் விலகி தாயக மக்களுடன் அவரவர் பாட்டில் தொடர்புகளை பேணுவது சிறந்தது. குழுவாததத்திற்கு துணைபோவது அடயாளத்தேடலுக்கு துணைபோவது எம் கண்களை எம் விரல்களால் குத்துவதற்கு சமனானது.

நாடுகடந்த அரசை வெறுப்பதில் செலவழியும் தங்களின் சக்தியில் ஒரு சிறுபகுதிதான் எங்களுக்கு வழி காட்ட முயற்சிக்கின்றது.

மக்களின் பெரும்பான்மை விருப்பம் பதிவு செய்யும் நிகழ்வுகளை இந்த அளவில் விமர்சனம் செய்வதே அறிவார்ந்த வினை இல்லை. அதுவும் மேட்டுக்குடித்தனம் என்ற சொல்லாடல் மிகவும் கண்டிக்கத்தக்கது. கூட்டிகுடித்தனம் செய்யும் கருணாவில் இருந்து, சங்கரிவரைக்க்கு மக்களின் பெரும்பான்மையை மதிக்கும் போக்கு அவர்களிடம் இருக்கின்றதா? இல்லை அவர்கள் கருத்துதான் பெரும்பான்மை என்ற தகுதிக்கு சொந்தமாகுமா?

இந்தியாவை மீறி எமக்கு ஒரு தீர்வு உண்டா?

திமுக விற்கு எப்படி "மக்கள் நல்ம்" என்பது தன் "குடும்பநலம்" என்றானதோ, அப்படியேதான் "மத்தியின் தேசநலம்" ஆட்சியாளரின் குடும்பநலம் என்றே ஆகின்றது. எனவே தன்னுடைய நாட்டுக்கே ஆகாத அந்த ஆட்சி எமக்கு வரம்தர நாம் என்ன விரதம் இருக்க வேண்டும்? இதற்கு இந்தியதேச நல்லுறவு இலாக்காவினர் நல்ல பதில் தருவார்களா?

  • Replies 63
  • Views 4.8k
  • Created
  • Last Reply

இவ்வளவு அதிகாரத்தை தமிழர்களுக்கு அவ்வளவு சுலபமாக சிங்களம் கொடுத்துவிடாது.

கிடத்தட்ட மகாபாரதம் போன்ற ஒரு, நாடு கேட்டு - ஊர் கேட்டு - நிலம் கேட்ட..., கதைதான்.

தமிழர் தரப்புக்கு, இன்று சிங்களம் போர்குற்றச்சாட்டுக்களை, இனவழிப்பு குற்றச்சாட்டுக்களை நிலையில், சிங்களம் அடிப்படை உரிமைகளை மறுப்பது எமக்கு சாதகமாகவே தெரிகின்றது.

உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரத்தில் மாநிலக் காவல்துறை போன்றனவற்றை தவிர்த்து ஒரு வரைவையே யோசிக்கமுடியும். இதெல்லாம் கூட அமெரிக்காவோ ஐநா வோ விரும்பினால் கூட இந்திய மத்தியரசின் விருப்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

சோவியத்யூனியன் மற்றும் யூகோசிலாவியா போன்ற முன்னை நாள் நாடுகள் கூட இந்தியாவை விட கூடுதல் அதிகாரம் தமது மாநிலங்களுக்கு கொடுத்திருந்தும் கூட அவை பிரிவினையை தடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

இதென்ன அநியாயமா இருக்கு.. :unsure: நாட்டைவிட்டு என்னைப் போன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்களே தவிர நாங்கள் ஒன்றும் சுற்றுலாவுக்கு இங்கே வரவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு எமது பூர்வீக உரிமைகளை இழந்தவர்களாவோம்? அப்படியானால் கப்பல்களில் யூதர்கள் இஸ்ரேல் நோக்கிச் சென்றதும் தவறுதானே..!

தாயக மக்களுக்கு தீர்வை ஒப்புக்கொள்வதில் எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதற்கு சிறிதளவும் குறையாத உரிமை எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இருக்கிறது. :rolleyes:

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

- தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஒரு தாயக மக்கள் அமைப்பு, சர்வதேச அங்கீகாரம் பெற்று சிங்கள அரசுடன் தமிழர் உரிமைகளை பற்றி பேசிவருகின்றது. அண்மையில் பிளேக் அவர்களை சந்தித்த பொழுது உலக தமிழர் பேரவை கூட்டணியின் பேச்சுவர்த்தைகளை மேற்கோள் கட்டி கதைத்திருந்தது.

- அதேவேளை கூட்டமைப்பும் புலம்பெயர் மக்கள், அவர்கள் அமைப்புக்கள் மூலமாகத்தான் பல முக்கிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடியதாக உள்ளது. அங்கு அவர்களுக்கு எந்த நேரமும் எமகாண்டம் உள்ளதே அடிப்படை உண்மை.

- மேலும் தென் சூடானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவினைக்கான வாக்கெடுப்பு ஐ.நா.வால் மேகொள்ளப்பட்ட பொழுது அது அதன் புலம் பெயர் மக்களையும் உள்வாங்கியது.

மேற்குலகின் நலன்களையும் தமிழர் எமது நலன்களையும் ஒன்றிணைப்பதில் நாம் வெற்றி காணும்போது

எம் விருப்பப்படியே எமது பிரச்சினை தீர்க்கப்படும்...... மேற்குலகின் சக்தியை, ஐ நாவில் அதன் பலத்தை நாம் முதலில் புரிந்து கொண்டு நமக்கு சார்பாக முற்றுமுழுதாக செயலாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிச் செயலாற்றுவோமேயானால் மேற்கண்ட கேள்விக்கே அவசியமிருக்காது......

இந்திய காங்கிரசை நம்பவும் வேண்டாம்....எதிர்க்கவும் வேண்டாம்.....

தமிழீழம் அமைய வேண்டுமானால் இந்தியா விலகி இருக்க வேண்டும் இந்தியாவின் தலையீடு இருக்குமேயானால் அது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு மட்டுமே சாத்தியம்....

ஆரோக்கியமான கருத்து: " மேற்குலகின் சக்தியை, ஐ நாவில் அதன் பலத்தை நாம் முதலில் புரிந்து கொண்டு நமக்கு சார்பாக முற்றுமுழுதாக செயலாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிச் செயலாற்றுவோமேயானால் மேற்கண்ட கேள்விக்கே அவசியமிருக்காது......"

அதை செய்வதற்கு, கூட்டமைப்புடன் சேர்ந்து அதற்கு உதவியாக புலம்பெயர் அமைப்புக்களும் தமிழகமும் உதவ வேண்டும்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

புலத்தில் உள்ளவரின் குரல்வளைக்கும், ஈழத்தில் உள்ளவன் குரல்வளைக்கும் வித்தியாசம் என்ன?

ஈழத்தின் குரல்வளையை சிங்களப்பாசிசத்தின் அடக்குமுறை வடிகட்டுகின்றது. இங்கே முழுசுதந்திரம் இருக்கின்றது.

அடக்குமுறைக்குள் இருப்பவன் குரல் அவன் சொந்தம் இல்லை என்பது எமது அடிப்படை ஆகின்றது.

இல்லை அதுதான் நியாயம் என்று சொல்ல விளையும் உங்கள் முயற்சி சிங்களப் பாசிசத்திற்கு உதவி செய்கின்றமை உங்களுக்கே புரியவில்லையா?

ஈழத்தில் திருட்டுக்கு எதிராக சாட்சியாய் போனவன் கூட காணாமல் போகின்றான். இதே சூழ்நிலைக்குள் இன்னொருவன் "புலி பயங்கரவாதி என்கின்றான்" உங்களைப் போன்ற சிலர் உடனே ஈழத்தின் குரல்வளைக்கு முத்திரை குத்துகின்றார்கள் "புலியையும், ஈழத்தையும் வெறுப்பவர்களே ஈழத்த்வர்" என்று.

தாயகத்தை துறந்தவனுக்கு இருக்கின்ற உரிமையை விட கருணாக்கும், டக்ளஸுக்கும்தான் உரிமை அதிகமா?

தாயகத்தை துறப்பதால் உரிமை இல்லாமல் போகின்றது என்றால் தடைசெய்யவருவது என்ன கொம்பு முளைத்த உரிமையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பவாவது இந்தியா இலங்கையில் அமைதிக்கு ஆதரவு அளித்ததுண்டா? இறந்தகால வரலாற்றுகளைப்பிரட்டிப்புhருங்கள். சிங்களவன் விரும்பினாலும் இந்தியா ஒருபோதும் இணங்கமாட்டாது. தீர்வுக்கான பேச்சுகள் என்று பேசிக்கொண்டே இருக்கும். தமிழர்கள் சிங்களவலுடன் சேர்ந்து இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் இறங்கினால் இந்தியா தமிழனை மதிக்கும். ஆனால் இவர்களின் பசப்புக்கு செவிசாய்க்கக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வு எண்டு நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

//

தீர்வு என்று நாம் பேசுவது................. கோயில்களில் பூசை முடிந்தபின்பு கொடுப்பார்கள் அதைதான்!

மிகவும் அருமையான கேள்வி. நீங்கள் கேட்டதால் எந்த வியப்பும் இல்லை. ஆனால் அதை எழுதி கேட்பது கொஞ்சம் வியப்பானது அல்லவா???

இது...... இதுக்குத்தான்.. எல்லொரும் சேர்ந்து உங்களுக்கு தர்மஅடி போட்டார்கள்... இன்னும் திருந்துரமாதிரி தெரியவில்லை...

மண்டையில் கொஞ்சம் இருந்தால்.. தமிழர்களுக்கு ஒரு தீர்வு என்ன வெண்டு சொல்லுங்கோ பாப்பம்..?

சும்மா வானத்தில் ஏறி கோழி புடிக்கிறகதையெல்லாம் வேண்டாம்.. நடைமுறைக்கு சாத்திமான தீர்வு உங்களுக்கு தெரியுமா?..

பதில் தெரியாவிட்டால்.. மன்னிப்பு கேக்கவும்....

சுத்திச் சுருண்டு படுக்கின்ற சோம்பேறிக்கு நிமிந்து நிற்கிறவன் வானம்!

"நடைமுறைச் சாத்தியம்" எது என்ற அளவுகோல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமானது!

இது...... இதுக்குத்தான்.. எல்லொரும் சேர்ந்து உங்களுக்கு தர்மஅடி போட்டார்கள்... இன்னும் திருந்துரமாதிரி தெரியவில்லை...

என்ன பனங்காய் உங்கட சண்டித்தனம் வீரத்தை இபப்டியும் காட்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மேற்கத்திய நாடுகளில் இந்தியாவினைவிட சுதந்திரம் அதிகம் உள்ளது என்றே நினைக்கிறேன் தோழர்..

அங்கிட்டு உள்ள சிக்கல்களில் அங்க வரும் பஸ்களின் மீது கல்லெறி நடத்த முடிகிறதா?இங்க எவனும் கல்லெறிவதற்கே பயப்படுகிறான்..

ரெண்டு சுதந்திரம் யாருக்கு தேவை?ம்ம் கான்செப்ட் ஆர்த்த ஆவட்லேது.. இவ்வளவு உயிர்களை கொடுத்துள்ளீர்கள்... உங்களுக்குத்தான் முதல் கடமை உள்ளது.. அதற்காக அரசியல் அமைப்பு வகையில் ஏதாவது செய்யலாம்.. போக தமிழ்நாடால் செய்யமுடிந்தது .. மீண்டும் இவ்வாறான சூழ்நிலை வரும் இடத்து .. பட்டினியால் செத்தார்கள் என்ற நிலைபாடு இல்லாமல் செய்ய இயலும்.. அரசாங்கம் குடுக்கும் 1 ரூபாய் அரிசி அல்ல .. அவனவன் வீட்டில் விளைந்ததையே கொடுப்பான்.. போக உரிமைக்காகவேணும் இந்த குண்டு கட்டி வெடிப்பதெல்லாம் தமிழக்திற்கு புதுசு.. அதற்கு நீண்டகாலம் செல்ல வேணும்

நான்தான் உங்களை குழப்பிவிட்டுவிட்டேன்.................... மன்னிக்கணும்!

உங்களது கருத்தை மேற்கோள் காட்டி யாருக்கோ எழுதிய பதில் அது. நாம் புலம்பெயாந்த காரணத்தால் உண்மைகளை பேச கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள் சிலர். எமது வாயை மூடியடைக்கிறார்கள். தவிர சுதந்திரம் என்பது இங்கு நிறையவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது...... இதுக்குத்தான்.. எல்லொரும் சேர்ந்து உங்களுக்கு தர்மஅடி போட்டார்கள்... இன்னும் திருந்துரமாதிரி தெரியவில்லை...

மண்டையில் கொஞ்சம் இருந்தால்.. தமிழர்களுக்கு ஒரு தீர்வு என்ன வெண்டு சொல்லுங்கோ பாப்பம்..?

சும்மா வானத்தில் ஏறி கோழி புடிக்கிறகதையெல்லாம் வேண்டாம்.. நடைமுறைக்கு சாத்திமான தீர்வு உங்களுக்கு தெரியுமா?..

பதில் தெரியாவிட்டால்.. மன்னிப்பு கேக்கவும்....

நாங்கள் திருந்தி பிறந்தது ஆடவாடிதன காரர்களுக்கு வாய்பாகிவிட்டது. எமது முன்னோர்கள் எமை போதிய அளவு திருத்திவிட்டார்கள் நாம் திருந்தி இருந்ததால்தான் (உங்களை போன்ற) அரவேக்காட்டுகளால் அடிக்க முடிகிறது! அப்பாவிகளை போட்டு அடிப்பது என்பதும் அப்பாவிகளை கொன்று அச்சுறுத்துவது என்பதையும் திருந்தியவர்களால் செய்ய முடியாது.

(உங்களுக்கு அடிவிழுந்தது என்று அடிபோட்டவர் போல் எழுதியதால் (உங்களை போன்ற) என்று எழுத வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது)

புலத்தில் உள்ளவரின் குரல்வளைக்கும், ஈழத்தில் உள்ளவன் குரல்வளைக்கும் வித்தியாசம் என்ன?

ஈழத்தின் குரல்வளையை சிங்களப்பாசிசத்தின் அடக்குமுறை வடிகட்டுகின்றது. இங்கே முழுசுதந்திரம் இருக்கின்றது.

அடக்குமுறைக்குள் இருப்பவன் குரல் அவன் சொந்தம் இல்லை என்பது எமது அடிப்படை ஆகின்றது.

இல்லை அதுதான் நியாயம் என்று சொல்ல விளையும் உங்கள் முயற்சி சிங்களப் பாசிசத்திற்கு உதவி செய்கின்றமை உங்களுக்கே புரியவில்லையா?

ஈழத்தில் திருட்டுக்கு எதிராக சாட்சியாய் போனவன் கூட காணாமல் போகின்றான். இதே சூழ்நிலைக்குள் இன்னொருவன் "புலி பயங்கரவாதி என்கின்றான்" உங்களைப் போன்ற சிலர் உடனே ஈழத்தின் குரல்வளைக்கு முத்திரை குத்துகின்றார்கள் "புலியையும், ஈழத்தையும் வெறுப்பவர்களே ஈழத்த்வர்" என்று.

தாயகத்தை துறந்தவனுக்கு இருக்கின்ற உரிமையை விட கருணாக்கும், டக்ளஸுக்கும்தான் உரிமை அதிகமா?

தாயகத்தை துறப்பதால் உரிமை இல்லாமல் போகின்றது என்றால் தடைசெய்யவருவது என்ன கொம்பு முளைத்த உரிமையா?

இதென்ன அநியாயமா இருக்கு.. நாட்டைவிட்டு என்னைப் போன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்களே தவிர நாங்கள் ஒன்றும் சுற்றுலாவுக்கு இங்கே வரவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு எமது பூர்வீக உரிமைகளை இழந்தவர்களாவோம்? அப்படியானால் கப்பல்களில் யூதர்கள் இஸ்ரேல் நோக்கிச் சென்றதும் தவறுதானே..!

தாயக மக்களுக்கு தீர்வை ஒப்புக்கொள்வதில் எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதற்கு சிறிதளவும் குறையாத உரிமை எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இருக்கிறது

.

ஈழத்தில் உள்ளவரின் குரல்வளையை சிங்களம் வடிகட்டுகின்றது புலத்தில் உள்ளவரின் குரல்வளையை மையவாதம் வடிகட்டுகின்றது.

போரின் அவலத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றது. இதை நியாயப்படுத்த முடியாது. இன்று அதே அவலத்தை மையமாக வைத்து அடயாளப்போட்டி நடக்கின்றது. அவலம் பொதுவானது அடக்குமுறை பொதுவானது அதை எதிர்கொள்வதில் ஏன் இத்தனை குழுக்கள் அமைப்புகள் சிந்தனை முறைகள்? இவைகளின் பின்னணி என்னவென்றால் அடயளத்தேடலே. நீதி கேட்க வேண்டிய நிகழ்வுகளை நினைவு கூரலாக மாற்றுதல் அந் நிகழ்வுகளில் தத்தமது சுய அடயாளங்களை நிலைநிறுத்த முற்படுதல். தேசியவாதத்தை குத்தகைக்கு எடுத்தல் வாடகைக்கு எடுத்தல் சொந்தம் கொண்டாடுதல்.

யு+தர்களின் புலப்பெயர்வையும் எமது புலப்பெயர்வையும் ஒப்பிட முடியுமா என்பது பிரச்சனை. எம்மில் பொருளாதராத்தேவைகளின் நிமிர்த்தமான புலப்பெயர்வும் அந்நிய மோகம் சார்ந்த புலப்பெயர்வும் சிங்கள ஒடுக்குமுறையின் காரணங்களும் இணையப்பெற்ற ஒரு புலப்பெயர்வே எமது புலப்பெயர்வு. பூர்வீக உரிமை என்பதை விட தேவையே பிரதானமானது. தாயக மக்களின் வாழ்வாதாரம் பொருளாதராம் தாயக மண்ணைச் சார்ந்தது. அவர்கள் வாழ்வதற்கு தாயகம் தேவையானது. புலம்பெயர்ந்தவர்கள் மாற்றீடு ஒன்றை பெற்றுள்ளார்கள். தாயக மக்களின் தேவைகள் புலம்பெயர்ந்தவர்களின் பூர்வீக அடயாளப்பின்னணிக்கான தேடல். இவை இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. தாயக மக்களின் தேவைகள் சார்ந்த அரசியலுடன் நாம் இணையமுடியுமே தவிர எமது தேடல்களின் பின்னால் தாயக மக்கள் வரவேண்டும் என்பது முரணானது.

சுற்றி சுற்றி இந்தக் களத்தில் எனது கருத்தக்களின் நோக்கம் தாயக மக்களுக்கும் எமக்குமான இணைப்பை முதன்மைப்படுத்தியது. குழுக்களாக பல்வேறு அமைப்புகளாக பிரிவதற்கு எதிரானது. நீதி கேட்டலுக்கு ஆதரவானது நினைவு கூரல் என்ற போர்வையில் இயக்கப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடி அடயாளம் தேடுவதற்கு எதிரானது. தனியரசு என்ற கோட்பாட்டை படிப்படியாக எட்டவேண்டும் தாயக மக்கள் ஊடாக எட்டவேண்டும் அதனடிப்படையில் ந க அரசுக்கு எதிரானது. அமைப்புக்களில் பூசுவாக்களின் ஆதிக்கத்துக்கு எதிரானது. இஸ்லாமியத் தமிழர்களும் உள்ளடக்கியதே எமது தேசியவாதமாக இருக்கவேண்டும் மையவாதத்திற்கு எதிரானது. துரோகம் என்று எவரும் இல்லை. கருணா டக்ளஸ் என்ற எல்லேரும் தமிழர்களே நாம் எல்லோரும் ஓரினம்.

எப்பவாவது இந்தியா இலங்கையில் அமைதிக்கு ஆதரவு அளித்ததுண்டா? இறந்தகால வரலாற்றுகளைப்பிரட்டிப்புhருங்கள். சிங்களவன் விரும்பினாலும் இந்தியா ஒருபோதும் இணங்கமாட்டாது. தீர்வுக்கான பேச்சுகள் என்று பேசிக்கொண்டே இருக்கும். தமிழர்கள் சிங்களவலுடன் சேர்ந்து இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் இறங்கினால் இந்தியா தமிழனை மதிக்கும். ஆனால் இவர்களின் பசப்புக்கு செவிசாய்க்கக்கூடாது.

காலங்கள், நேரங்கள் ஒரே கோட்டில் பயணிப்பதில்லை. நிச்சயம் இந்தியா எமக்காக மனமுவந்து ஆதரவு தந்ததில்லை இதுவரை. ஆனால் இனியும் அப்படியே எப்பொழுதும் இருக்கும் என்றில்லை.

முன்னைய காலத்தை விட இன்று சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் நீண்ட நாள் இருப்பை, பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்தியுள்ளது. அதேவேளை மகிந்த அரசும் முள்ளிவாக்கால் போர்குற்ற காலங்களின் பின்னர் இந்தியாவை ஒதுக்கி சீனாவை அரவணைத்து வருகின்றது.

மேலே இந்த திரியின் தலைப்பில் கூறப்பட்டது போன்று ஒரு தமிழக கட்சி பெரும்பனமை பலத்துடன் வெற்றி பெற்று, முடிந்தவரை எமது பிரச்சனனைகளை மத்திய அரசுடன் கதைக்க உள்ளதாக கூறியுள்ளது. முன்னர் கிழக்கு பாகிஸ்தானை ஒரு வங்களாதேசம் ஆக்கிய இந்தியா மனமுவந்து எதாவது செய்யுமா என.

  • கருத்துக்கள உறவுகள்

யு+தர்களின் புலப்பெயர்வையும் எமது புலப்பெயர்வையும் ஒப்பிட முடியுமா என்பது பிரச்சனை. எம்மில் பொருளாதராத்தேவைகளின் நிமிர்த்தமான புலப்பெயர்வும் அந்நிய மோகம் சார்ந்த புலப்பெயர்வும் சிங்கள ஒடுக்குமுறையின் காரணங்களும் இணையப்பெற்ற ஒரு புலப்பெயர்வே எமது புலப்பெயர்வு. பூர்வீக உரிமை என்பதை விட தேவையே பிரதானமானது. தாயக மக்களின் வாழ்வாதாரம் பொருளாதராம் தாயக மண்ணைச் சார்ந்தது. அவர்கள் வாழ்வதற்கு தாயகம் தேவையானது. புலம்பெயர்ந்தவர்கள் மாற்றீடு ஒன்றை பெற்றுள்ளார்கள். தாயக மக்களின் தேவைகள் புலம்பெயர்ந்தவர்களின் பூர்வீக அடயாளப்பின்னணிக்கான தேடல். இவை இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. தாயக மக்களின் தேவைகள் சார்ந்த அரசியலுடன் நாம் இணையமுடியுமே தவிர எமது தேடல்களின் பின்னால் தாயக மக்கள் வரவேண்டும் என்பது முரணானது.

தாயகமக்களூக்குப் பின்னால் புலம்பெயர் மக்கள் செல்லவேண்டும் என்பதோ அல்லது மறுவளமாகவோ சிந்திப்பதே உண்மையான மையவாதம். எனக்கான தீர்வை நான் கோருகிறேன். அதற்கு எனக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கின்றன. நான் புலம்பெயர்ந்து வந்துவிட்டதால் எனக்கொரு தேசம் கிடைத்துவிட்டதாக அர்த்தம்கொள்ள முடியாது. அப்படிப் பார்த்தால் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் மறுவாழ்வு கிடைத்துவிட்டதால் இனிமேல் அவர்களுக்கு யாழில் உரிமையில்லை என்று சொல்வது போலாகும்.

எனது தேவை என் தாயகத்தில் எனக்கான உரிமை கிடைக்க வேண்டும். நான் விரும்பினால் அங்கு செல்ல எனக்கு உரிமை வேண்டும். எனக்கான அரசியல் உரிமையை நான் தேர்ந்தெடுத்து அதற்காக செயலாற்ற எனக்கு என்றும் உரிமை உண்டு.

யாழில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இஸ்லாமியத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஒன்றா? அவ்வாறு ஒப்படுவதே தவறு. அவர்கள் தமது சொந்த வாழ்வாதாரத்தை தேடி மீள தமது நிலங்களில் குடியேறுகின்றார்கள். அவர்கள் இலங்கைப் குடியுரிமை உடையவர்களே தவிர வேற்றுநாட்டு குடியுரிமைபெற்றவர்கள் இல்லை. அப்படி சிந்தித்தால் வன்னியில் இருந்து இராணுவப்பிடிக்குள் சென்றவர்களுக்கு வவுனியா தடுப்பு முகாமில் மறுவாழ்வு அளித்ததுபோலாகிவிடும்.

புலம்பெயர்வு பணமிருந்தவனாலேயே பெரும்பாலும் சாத்தியமாயிற்று. பெரும்பாலும் விருப்பப் பட்டே சாத்தியமாயிற்று. அகதிகள் என்ற அடிப்படையையே இந்த விருப்பு மற்றும் பொருளாதரா தேடல் சம்மந்தமான புலப்பெயர்வு துஸ்பிரயோகம் செய்துள்ளது. இது வர்க்க அடிப்படையிலான புலப்பெயர்வு அதே நேரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணப்பொருளாகின்றது. பெரும்பாலான வழக்குகள் இலங்கை அரசையும் புலிகளையும் குற்றம்சாட்டுகின்றது. தேசியவாதம் அவ் பதிவிலேயே தனது போலித்தனத்தை காட்டுகின்றது. பெரும்பாலனவர்கள் மேற்கு நாடுகளில் தமது வசதிவாய்புகளுடனான வாழ்வை துறந்து தாயகம் செல்லும் சிந்தனையில் இல்லை. அடிப்படை தேவை இல்லை.

அவரவருக்கு அவரவர் பூர்வீக தாயகத்தின் மீதான உரிமை என்பது தேவை சார்ந்தது. புலப்பெயர்வின் போது இந்த உரிமைகள் பெரிதாக தெரியவில்லை. பொருளாதார மேம்பாட்டை மையமாக வைத்து உரிமைகள் பின்தள்ளப்பட்டது. இன்று தேவைசார்ந்த அன்றி விருப்பு சார்ந்து உரிமை பேசப்படுகின்றது. அதை மறுதலிப்பதற்கு எனக்கு உரிமை இல்லை ஆனால் எமது விருப்புச் சார்ந்த உரிமைக்குரல் தாயக மக்களின் தேவை சார்ந்த உரிமைக்குரலை விட பலமானது இல்லை என்பதை தெளிவாக சொல்ல முடியும். ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் செயற்பாடுகள் அமைவதே ஆக்கபூர்வமான விழைவைத்தரும். சிங்களம் மாநில அளவிலான தீர்வை முன்வைப்பதை தேவை சார்ந்த தாயக மக்கள் எதிர்பார்க்கையில் அது போதாது தனி அரசுதான் வேண்டும் என்று புலம்பெயர்ந்த விருப்பு சார்ந்த எதிர்பார்ப்பிருந்தால் இரண்டும் இல்லாத நிலை ஏற்படலாம். தேவை சார்ந்து உரிமைகளை படிப்படியாக பெற்றுக்கொள்வதே நடைமுறைக்கு ஒத்துவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதரவோடு ஒரு தீர்வு வருமா என்பது கேள்விக்குறிதான். இந்தியா ஒருபோதுமே எம்மை ஆதரிக்கப்போவதில்லை. அதன் எதிர்ப்பு இல்லாமலிருந்தாலே போதும், நாம் எதையாவது முயற்சிக்கலாம். ஆனால் அப்படிச் சும்மாயிருக்க அதன் பிராந்திய ஏகாதிபத்தியவாதக் கனவு ஒரு போதுமே இடம் கொடாது என்பதுதான் உண்மை.

ஜெயா இப்போது ஆட்சிக்கு வந்துவிட்டார். அவர் எமக்கு ஈழம் எடுத்துத்தருவார் என்று நாம் எதிர்பார்த்தால் அது அவரது பிழையல்ல. 2009 தேர்தலில்தான் முதன்முறையாக அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். அதுகூட கருநானிதியை எப்படியாவது தோற்கடிக்க வேன்டும் என்கிற இறுதிநேர அஸ்த்திரமாகப் பாவிக்கப்பட்டதே ஒழிய உணர்வினால் வரவில்லை. ஆனால் கருணாநிதியின் பணம் எல்லாவற்ரையும் அடித்துச் சென்றுவிட்டது. ஆனால் இம்முறை அந்தப் பனத்தால் பாதாளம் பாயமுடியவில்லை, ஆகவே கருணாநிதியின் துன்பம் தாங்க இயலாத வாக்களர்கள் அவரைத் திரத்த ஜெயாவுக்கு வாக்குப் போட்டுள்ளனர்.

கருணாநிதியும் காங்கிரஸும் தோற்கவேண்டுமென்று எதிர்பார்த்தோமேயன்றி ஜெயாவிடம் மட்டற்ற அதிகாரம் போய்ச் சேரவேன்டும் என்று நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையாகவே ஆணவமும், திமிரும் பிடித்த அவரிடம் 204 இடங்களைக் கொடுத்துவிட்டு அழகு பார்த்துக்கொண்டிருக்கிறோம், பத்திரகாளியானால் அதோகதிதான்.

சோனியாவுடன் அவர் சேருவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். திமுகவை அழிக்க எந்தப்பேயுடனும் கூட்டுச்சேர அவர் தயார் என்பதுதான் உண்மை. இதில் தமிழர் நலன் என்பது எங்கே இருக்கிறதென்பது எமக்குத் தெரியாது.

தனது வீழ்ந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்த ஸ்பெக்ரம் ஊழலை சோனியா கையிலெடுத்து திமுகாவை ஒதுக்கப் போகிறார், ஜெயாவுக்கும் தேவை அதுதான். ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன்.

அவர் எங்களுக்காகக் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, எதிராகச் செய்ற்படாமல் இருந்தாலே போதும்.

முன்னர் புலிகளும் அவர்களது போராட்டமும் இருந்தது. ஆகவே அதைச் சாட்டியே எம்மை எதிர்த்து வந்தார். இப்போது எதை வைத்து எதிர்க்கப்போகிறார் என்பதை இனித்தான் யோசிக்க வேண்டும்.

சிலவேளை தீவிரவாதம், புலிகள் என்று திமுகவை முற்றாக ஒழித்துவிட அவர் தனது பழைய ஆயுத்தத்தையே மீண்டு தூசி தட்டி எடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உதவியுடன் தீர்வு வருமென்று நான் நம்பவில்லை! அப்படியாயின் எமது பிரச்சனை எப்போதோ தீர்க்கப் பட்டிருக்கும்!

இந்தியா முதுகெலும்பு உள்ள நாடாக இருந்திருந்தால் மற்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு இருக்க வேண்டிய தேவை வந்திருக்காது!

இந்தியா முற்றாக விலகவும் மாட்டாது! இந்தியாவை விலக்கி மற்ற நாடுகள் உள்ளே வரவும் தயக்கம் காட்டும்!

நிலைமை தனது கையை விட்டுப் போகின்றது என்று இந்தியா உணரும் கட்டத்தில் எமக்குத் தீர்வு சாத்தியமாகலாம்!

அந்த நிலைக்கு இந்தியாவைக் கொண்டு செல்வது, போர்க்குற்ற அறிக்கை எவ்வாறு கையாளப் படப் போகின்றது என்பதிலேய தங்கியுள்ளது!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான வரலாற்று விவாதம் நான் மிகுந்த ஆர்வத்தோடு வாசிக்கிறேன். எல்லா தரப்பு அவிப்பிராயங்கலையும் அறிய ஆவல். யாழுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சிங்களவர்களே நிம்மதியாக வாழமுடியாது ...இதுதான் யதார்த்தம்...60வருடத்திற்க்கு மேலாக இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற இந்தியாவின் சூழ்ச்சி இப்ப வெற்றியளித்துள்ளது

வா எண்டால் வா... நில் எண்டால் நில்... போ எண்டால் போ...

இதைத்தவிர வேறு எந்த பேச்சுக்களிலும் சிங்களம் எம்முடன் ஈடுபடாது...

ஒருபேச்சுக்கு இலங்கமீது பொருளாதாரதடை கொண்டுவந்து ஏற்றுமதியையும் தடைசெய்து.... அதிகாரப்பகிர்வுக்கு வழிசெய்தாலும்..

வா எண்டால் வா... நில் எண்டால் நில்... போ எண்டால் போ...

இந்தசொல்லு கேக்காவிட்டல் தெண்டினவன் கதை அதோ கதைதான்..

எமக்கு என்ன தேவையெண்டால்...

எமது பிரதேசங்களை இன்னொரு நாட்டு இராணுவம் நிர்வாகிப்பது..

அந்தக்காலகட்டத்தில்.. எமது அரசியல்சக்தியை கட்டியெழுப்புவது..

மற்றவர்களுக்கு பிரச்சினைகள் கொடுப்பதன் மூலம் எமது பிரச்சினைகளை தீர்க்க முயற்ச்சிசெய்வது...

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சிங்களவர்களே நிம்மதியாக வாழமுடியாது ...இதுதான் யதார்த்தம்...60வருடத்திற்க்கு மேலாக இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற இந்தியாவின் சூழ்ச்சி இப்ப வெற்றியளித்துள்ளது

இலங்கைக்கு புலிகள் மூலம் பிரச்சினை கொடுப்பதன்மூலம் தனக்குத்தேவையனதை சாதிக்க முயற்ச்சி செய்த இந்தியாவுக்கு... சைனா இலங்கை மூலமாக் ஆப்பு வைத்திருக்கிறது...

இதனால்தான் சொல்கிறேன்.. இந்தியா நேரடியாக கால் வைக்காமல் இலங்கையில் ஒன்டு சாதிக்க முடியாது. அப்படி ஏதாவது செய்ய வெளிக்கிட்டாலும் சம்பல் அடி விழுவது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இஸ்லாமியத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஒன்றா? அவ்வாறு ஒப்படுவதே தவறு. அவர்கள் தமது சொந்த வாழ்வாதாரத்தை தேடி மீள தமது நிலங்களில் குடியேறுகின்றார்கள். அவர்கள் இலங்கைப் குடியுரிமை உடையவர்களே தவிர வேற்றுநாட்டு குடியுரிமைபெற்றவர்கள் இல்லை. அப்படி சிந்தித்தால் வன்னியில் இருந்து இராணுவப்பிடிக்குள் சென்றவர்களுக்கு வவுனியா தடுப்பு முகாமில் மறுவாழ்வு அளித்ததுபோலாகிவிடும்.

புலம்பெயர்வு பணமிருந்தவனாலேயே பெரும்பாலும் சாத்தியமாயிற்று. பெரும்பாலும் விருப்பப் பட்டே சாத்தியமாயிற்று. அகதிகள் என்ற அடிப்படையையே இந்த விருப்பு மற்றும் பொருளாதரா தேடல் சம்மந்தமான புலப்பெயர்வு துஸ்பிரயோகம் செய்துள்ளது. இது வர்க்க அடிப்படையிலான புலப்பெயர்வு அதே நேரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணப்பொருளாகின்றது. பெரும்பாலான வழக்குகள் இலங்கை அரசையும் புலிகளையும் குற்றம்சாட்டுகின்றது. தேசியவாதம் அவ் பதிவிலேயே தனது போலித்தனத்தை காட்டுகின்றது. பெரும்பாலனவர்கள் மேற்கு நாடுகளில் தமது வசதிவாய்புகளுடனான வாழ்வை துறந்து தாயகம் செல்லும் சிந்தனையில் இல்லை. அடிப்படை தேவை இல்லை.

அவரவருக்கு அவரவர் பூர்வீக தாயகத்தின் மீதான உரிமை என்பது தேவை சார்ந்தது. புலப்பெயர்வின் போது இந்த உரிமைகள் பெரிதாக தெரியவில்லை. பொருளாதார மேம்பாட்டை மையமாக வைத்து உரிமைகள் பின்தள்ளப்பட்டது. இன்று தேவைசார்ந்த அன்றி விருப்பு சார்ந்து உரிமை பேசப்படுகின்றது. அதை மறுதலிப்பதற்கு எனக்கு உரிமை இல்லை ஆனால் எமது விருப்புச் சார்ந்த உரிமைக்குரல் தாயக மக்களின் தேவை சார்ந்த உரிமைக்குரலை விட பலமானது இல்லை என்பதை தெளிவாக சொல்ல முடியும். ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் செயற்பாடுகள் அமைவதே ஆக்கபூர்வமான விழைவைத்தரும். சிங்களம் மாநில அளவிலான தீர்வை முன்வைப்பதை தேவை சார்ந்த தாயக மக்கள் எதிர்பார்க்கையில் அது போதாது தனி அரசுதான் வேண்டும் என்று புலம்பெயர்ந்த விருப்பு சார்ந்த எதிர்பார்ப்பிருந்தால் இரண்டும் இல்லாத நிலை ஏற்படலாம். தேவை சார்ந்து உரிமைகளை படிப்படியாக பெற்றுக்கொள்வதே நடைமுறைக்கு ஒத்துவரும்.

உங்கள் விவாதங்களில் பணத்தின் தேவையே ஒரு இனத்தின் தேவை என்பதுபோல் எழுதப்படுகின்றது. இது ஏற்புடையதல்ல.

அப்படிப் பார்க்கும் பட்சத்தில், ஒரு பேச்சுக்கு, சிங்கள அரசு தமிழ்ப் பிரதேசங்கள் முழுவதையும் பொருளாதார ரீதியில் முன்னேற்றிவிட்டு தமிழ்மக்களை இரண்டாந்தரப் பிரசைகளாக நடத்தினால் அது ஏற்புடையது என்றாகிவிடும்.

ஒரு இடப்பெயர்வையோ, ஒரு மனித உரிமை மீறலையோ, ஒரு ஆபத்தான சூழ்நிலையையோ எதிர்நோக்காத ஒரு புலம்பெயர் தமிழன் இருக்க மாட்டான். புலப்பெயர்வுக்கு அத்தகைய ஒரு காரணமே போதுமானது. ஏனெனில் இறைமைபெற்ற ஒரு சுதந்திர அரசு தன் பிரசை ஒருவரைக் காக்கத் தவறியது என்றாகிவிடுகிறது. புலம்பெயர்ந்தபின் பணமீட்டுவது என்பது அவரவரைப் பொறுத்தது.

இதனைத்தொடர்ந்து சில கேள்விகளும் எழுகின்றன.

1) பெற்றோருடன் புலம்பெயர்ந்த ஒரு சிறுமியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் புலம்பெயர்நாட்டில் படித்து வளர்ந்து சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்குள்ள குளிர், பனி, சுற்றியுள்ள இனமக்கள், இனத்துவேசங்களைக் கவனிக்கும்போது அவர் தாயக வாழ்வை, அங்குள்ள தன் நண்பிகளை, அயலவரை, உறவினர்களை நினைத்து மனமுடைவாராக இருந்தால், அந்தச் சிறுமியின் நிலை என்ன? இடப்பெயர்வு அவர் குற்றமல்லவே. அவருக்குத் தாயகத்தின் தீர்வில் ஏதாவது சொல்லும் உரிமை இப்போது உள்ளதா?

2) நான் அண்மையில் சுவிஸ் சென்றபோது சில குடும்பங்களைக் கண்டேன். கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளாக அவர்கள் சுவிசில் உள்ளார்கள். ஆனால் தொடர்ச்சியான பொருளாதார விருத்தியைக் காட்டமுடியாத காரணத்தினால் (தாயக உறவுகளைக் கவனித்தமை, அவர்களின் திருமணச் செலவுகள், சொந்த வியாபாரத்தில் நட்டம் போன்ற காரணங்கள்) அவர்களுக்கு சுவிஸ் புத்தகம் இல்லை. வெறு எங்கும் செல்லமுடியாத நிலை. அருகில் உள்ள லண்டனுக்குக்கூட செல்லமுடியாது. ஆனால் பணவசதி ஓரளவுக்கு இருக்கிறது. இவர்கள் நிலை என்ன? தாயகம் குறித்து இவர்களுக்கு ஏதாவது கருத்துக்கூறும் உரிமை உள்ளதா?

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ஈழத்தில் உள்ளவரின் குரல்வளையை சிங்களம் வடிகட்டுகின்றது புலத்தில் உள்ளவரின் குரல்வளையை மையவாதம் வடிகட்டுகின்றது.

புலிகள் காலத்தில், சிங்களம் புலத்தின் குரலை புலியின் குரலாக கற்பிதம் செய்தது.

இப்போதோ கோணல் வாதங்கள், மையவாதம் என்று கற்பிதம் செய்கின்றது.

இந்த வரையறை செய்யும் தகமையை எந்த அடிப்படையில் பெற்றிருக்கின்றீக்ள்?

.

போரின் அவலத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றது. இதை நியாயப்படுத்த முடியாது. இன்று அதே அவலத்தை மையமாக வைத்து அடயாளப்போட்டி நடக்கின்றது. அவலம் பொதுவானது அடக்குமுறை பொதுவானது அதை எதிர்கொள்வதில் ஏன் இத்தனை குழுக்கள் அமைப்புகள் சிந்தனை முறைகள்? இவைகளின் பின்னணி என்னவென்றால் அடயளத்தேடலே. நீதி கேட்க வேண்டிய நிகழ்வுகளை நினைவு கூரலாக மாற்றுதல் அந் நிகழ்வுகளில் தத்தமது சுய அடயாளங்களை நிலைநிறுத்த முற்படுதல். தேசியவாதத்தை குத்தகைக்கு எடுத்தல் வாடகைக்கு எடுத்தல் சொந்தம் கொண்டாடுதல்.

யு+தர்களின் புலப்பெயர்வையும் எமது புலப்பெயர்வையும் ஒப்பிட முடியுமா என்பது பிரச்சனை. எம்மில் பொருளாதராத்தேவைகளின் நிமிர்த்தமான புலப்பெயர்வும் அந்நிய மோகம் சார்ந்த புலப்பெயர்வும் சிங்கள ஒடுக்குமுறையின் காரணங்களும் இணையப்பெற்ற ஒரு புலப்பெயர்வே எமது புலப்பெயர்வு. பூர்வீக உரிமை என்பதை விட தேவையே பிரதானமானது. தாயக மக்களின் வாழ்வாதாரம் பொருளாதராம் தாயக மண்ணைச் சார்ந்தது. அவர்கள் வாழ்வதற்கு தாயகம் தேவையானது. புலம்பெயர்ந்தவர்கள் மாற்றீடு ஒன்றை பெற்றுள்ளார்கள். தாயக மக்களின் தேவைகள் புலம்பெயர்ந்தவர்களின் பூர்வீக அடயாளப்பின்னணிக்கான தேடல். இவை இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. தாயக மக்களின் தேவைகள் சார்ந்த அரசியலுடன் நாம் இணையமுடியுமே தவிர எமது தேடல்களின் பின்னால் தாயக மக்கள் வரவேண்டும் என்பது முரணானது.

சுற்றி சுற்றி இந்தக் களத்தில் எனது கருத்தக்களின் நோக்கம் தாயக மக்களுக்கும் எமக்குமான இணைப்பை முதன்மைப்படுத்தியது. குழுக்களாக பல்வேறு அமைப்புகளாக பிரிவதற்கு எதிரானது. நீதி கேட்டலுக்கு ஆதரவானது நினைவு கூரல் என்ற போர்வையில் இயக்கப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடி அடயாளம் தேடுவதற்கு எதிரானது. தனியரசு என்ற கோட்பாட்டை படிப்படியாக எட்டவேண்டும் தாயக மக்கள் ஊடாக எட்டவேண்டும் அதனடிப்படையில் ந க அரசுக்கு எதிரானது. அமைப்புக்களில் பூசுவாக்களின் ஆதிக்கத்துக்கு எதிரானது. இஸ்லாமியத் தமிழர்களும் உள்ளடக்கியதே எமது தேசியவாதமாக இருக்கவேண்டும் மையவாதத்திற்கு எதிரானது. துரோகம் என்று எவரும் இல்லை. கருணா டக்ளஸ் என்ற எல்லேரும் தமிழர்களே நாம் எல்லோரும் ஓரினம்.

நீதி கேட்டலுக்கு ஆதரவானது நினைவு கூரல் என்ற போர்வையில் இயக்கப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடி அடயாளம் தேடுவதற்கு எதிரானது.

கருணா டக்ளஸ் என்ற எல்லேரும் தமிழர்களே நாம் எல்லோரும் ஓரினம்.

பரதநாட்டியம் வரை நுண்ணாய்வு செய்த தங்கள் "வினை" ஏன் கருணாவும் தமிழன் தான் என்று குத்துமதிப்பாய்வு செய்கின்றது. பிடித்தவன் உடைத்தால் மண்குடம், பிடிக்காதவன் உடைத்தால் பொன் குடம் என்ற பாணியில் குற்றச்சாட்டுக்கள் கற்பிதம் செய்யப்படுவதாகவே நான் உணர்கின்றேன்.

தமிழன் என்றால், 'நல்லவன்', குற்றம் செய்யாதவன் என்ற அடிப்படை ஏதும் உண்டா?

எனவே தமிழன் என்பதற்காக எமது விடுவு நோக்கிய பயணத்திற்கு கழுத்தறுப்புக்களையும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற எண்னமும் நயவஞ்சகாமானதே. எதிரியால் உருவாக்கப்படும் கருணா, சங்கரி போன்ற உறுப்புக்கள் நூறுவீதம் எதிரியின் தேவையை மட்டும் சுமப்பவர்கள். ஒரு வேளை இவர்கள் இல்லை என்றால் இன்னும் எத்தனையோ போர் இவர்கள் இடத்திற்கு கொண்டுவருவது எதிரியானவனுக்கு ஒரு சிரமமே அல்ல. வெறும் எதிரியின் தயவுதான் இவர்களுக்கு எல்லாம். ஆனால் மக்கள் சக்தி என்ற ஒன்று இருந்தால் அவனை நாம் கையாள வேண்டிய பொறுப்பு எமக்கு அவசியமானது. அப்படி அல்லாத நிலையில் உள்ள இவர்களை அநுசரிக்க வேண்டும் என்று கூறுவது, எமது முயற்சியை தற்கொலை செய்யச் சொல்லுவதற்கு சம்மானது!

குற்றச்சாட்டுகளின் தராத தரம் சாட்டுகின்றவன் தேவையின் இலக்கையும் ஓரளவு வெளிப்படுதத்தக்கதே.

அந்த வகையில் நாடுகடந்த அரசு மீதான உங்களின் புகாரில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்!

பணம் கொள்ளையடிக்கப் படுகின்றது என்ன கவலையை அதை தடுத்து நிறுத்துவதற்கு மட்டும் உபயோகிக்க வேண்டும். தவிர ஒன்றையுமே செய்யாமல் விடுவதற்கு அல்ல உபயோகிப்பது.

இப்படிப் பட்ட குற்றச் சாட்டுக்கள் எப்போதும் தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் அதை எதிரியின் தேவைகளுக்கு உதவி ஆக்காதீர்கள். பொறுப்பான முறையில் அவற்றை வெளிப்படுத்துங்கள். அப்படி வெளிப்படுத்தப்படும் உங்கள் பொறுப்புணர்வைப் பார்த்து நாமும் உங்களோடு கைகோர்ப்போம்!

நாடுகடந்த அரசு அவை பேரவை காங்கிரஸ் என்னும் பல்வேறு அமைப்புகள் புலத்தில் பெருகிக்கொண்டே இருக்கின்றது. தாயகம் குறித்த சிந்தனைக்கு இத்தனை அமைப்புகள் தேவையில்லை. இங்கே தேசியவாதம் தாயகம் என்ற போர்வையில் நடப்பது மேட்டுக்குடிகளின் அடயாளத்தேடல். தாயக மக்களின் நலன்சார்ந்து அவர்களின் நெருக்கடியான வாழ்வுக்கு தோழோடு தோழ்நிற்பதை தவிர்த்து அவர்களை விட்டு விலத்தி அவர்களுக்காக நாடு அமைப்பது அவர்களுக்காக தேசியம் கதைப்பது போன்ற கோமாளித்தனங்கள் எஞ்சிய மக்களை கருவறுப்பதற்கே வழிசெய்யும். இந்த அமைப்புக்களில் அங்கம் வகிப்பதில் இருந்தும் ஆதரவு கொடுப்பதில் இருந்தும் விலகி தாயக மக்களுடன் அவரவர் பாட்டில் தொடர்புகளை பேணுவது சிறந்தது. குழுவாததத்திற்கு துணைபோவது அடயாளத்தேடலுக்கு துணைபோவது எம் கண்களை எம் விரல்களால் குத்துவதற்கு சமனானது.

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

புளிச்சுப்போன மாற்றுக்கருத்துகள்!!!! ....... உதை வாழ்நாள் பூராக "ஈ, பீ, தேனிக்களில்" கொட்டிக்கொண்டிருந்தார்கள் ... சிங்களத்தை குளிரச்செய்யவோ? அல்லது ஏவலிலோ??? ... இன்று யாழிலும்!!!

ஆமா .... உரிமை தேவை, கதைக்கவோ??? கேட்கவோ? ஆன நிலையிலா மக்கள் தாயகத்தில் இருக்கிறார்கள்?????? .... இல்லை அதை கேட்க, கதைக்க சிங்களம், அம்மக்களை விட்டு விடுவான்?????

....சரி அங்குதான் மக்கள் தீர்மானிக்க வேண்டும்? அதற்கான சூழ்நிலையும் இருக்கிறது? ... என்றால் ... ஒரு தென் சூடானில் நடைபெற்ற வாக்களிப்பை அங்கு நீங்கள்(சுகன்) போன்றவர்கள் முன்னின்று நடத்தலாமே???????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நாம் விரும்பிய தீர்வை ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளாது.இந்தியாவின் முயற்சியின் மூலம் ஏற்படும் எந்த ஓரு தீர்வும்' தமிழர் பிரச்சனையைத் தீர்க்க மாட்டாது என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எமது பிரச்சனையில் தலையிட்ட இந்தியாவின் நடவடிக்கைகளை அனுபவபூர்வமாக அறிந்தவர்கள் .நாங்கள். 40 ஆயிரம் தமிழர்களின் உயிர்கள் பறிபோவதைப் பார்த்து இரசித்துக்கொண்டு அதற்குத் துணை போன இந்தியா எமக்கு உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.தமிழ் நாட்டில் உருவாகும் ஒரு எழுச்சி அதற்கு உதவலாம்.ஆனால் இந்தியத் தேசியவாத்திலும் சினிமா கிரிக்கெட் என்ற போதையிலும் இருக்கும் மக்கள் விழித்தெழுவதற்குள். ஈழத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே அற்றுப் போயிருக்கும்.இன்றைய நிலையில் மேற்குலகுக்கு(அமெரிக்காவுக்கு) எந்த ஒரு விட்டுக் கொடுப்பையும் செய்து எமது தேவையப் பூர்த்தி செய்தலே விவேகமானது.அமெரிக்காவை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்பது கொசோவா மொன்ரநீக்குரோ போன்றவற்றின் விடுதலையில் ஆனானப்பட்ட ரஸ்யா(அவற்றின் அயல்நாடு) எதிர்த்தும் ஓன்றும் பண்ண முடியவில்லை. ஆகவே அமெரிக்கா மூலமான ஒரு தீpர்வு வரும் பொழுது இந்தியா எட்டாப் பழம் புளிக்கும் என்ற மன நிலையோடு வேண்டா வெறுப்பாக ஓத்துக் கொள்ளத்தான் வேண்டும்.ஆகவே மேற்கு உலகின் நலன்களோடு எமது நலன்களை ஓன்று படுத்துவதே இஸ்ரேல் போல ஈழம் அமைப்பதற்கு வழி.

தாயக மக்களின் தேவை விருப்பு என்பது 1977 ஆண்டு வாக்கெடுப்பு மூலம் உலகிற்குச் சொல்லப்பட்டு விட்டது. அதன் பின்னரே மக்கள் புலம் பெயர இடம்பெயர நேரிட்டது.இதே தேவையை இன்று புலத்தில் வலியுறுத்தக் கூடிய சுதந்திரம் இருக்கிறது.அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.தாயகத்தில் உள்ள மக்களின் வாய்கள் ப+ட்டப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குரலாகவே புலத்து மக்களின் குரல் ஒலிக்கிறது.தாயகத்து மக்களின் விருப்பு என்ன என்று அறிய வேண்டுமாயின் இராணுவ நெருக்குவாரங்கள் அற்ற நிலையில் சர்வதேசத்தின் முன்னிலையில் ஒர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடுவதே ஏற்றுக்கொள்ளத் தக்கது.இதற்கு சுகன் தயாரா?

... இங்கு எம்மில் தோன்றியிருக்கும் புத்திஜீவிகள்(?) கூறுகிறார்கள் ... அங்குள்ள மக்கள்தான் தங்கள் தலைவிதியை தீர்மாணிக்க வேண்டும் என்று ...

-ஆமா ... உந்த வட்டுக்கோட்டைத்தீர்மானம், 77ல் நடந்த தேர்தலில் கூட்டணிக்கு தனித்தமிழீழத்துக்கான அங்கீகரிப்பு ... பின்னுக்கு நடந்தவற்றை விடுங்கள், ஒருவேளை ஆயுதமுனையில் நடந்ததாக கூறினாலும் .... எல்லாம் புலத்திலுள்ள மக்களா செய்தார்கள்???? ....

... அவற்றுக்கு மேல் ... அங்குள்ள மக்கள் தீர்மாணித்தால் ... சிங்களம் தரவா போகிறது?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.