Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகள். போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம், பையா... நீங்க சொன்னது ஞாபகமிருக்குது.

நாங்கள் தான் கருணாநிதியை நம்பி, ஏமாந்து விட்டோம்.

இனி. நான் அம்மா கட்சி தான்.

அம்மா என்றால்... அம்மா தான் பையா.

சிறியண்ணா.. எந்த முடிவாக இருந்தாலும் முடிவுகளை நிதானமாக ஆராய்ந்து எடுக்காமல் விடுவதே எங்கள் பிழைப்பா போச்சு. அதனால் தான் கருணாநிதியாலும் நாம் ஏமாற்றப் பட்டோம்.

இந்த அறிக்கை வரைபு வரவேற்கத்தக்க நல்ல அம்சங்களைக் கொண்டிருப்பது தொடர்பிலும் அதை சட்ட சபையில் நிறைவேற்றியது தொடர்பிலும் நிச்சயம் ஜெயலலிதா நன்றியுணர்வுடன் பார்க்கப்பட வேண்டியவர். அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்களின் பிரச்சனையின் தோற்றுவாய் இன்று நேற்றல்ல இலங்கையின் சுதந்திர காலம் தொடங்கி இருப்பது என்பதையும் தமிழர்கள் சம உரிமையுடன் சம அந்தஸ்துடன்.. சம பிரஜைகள் என்ற நிலையிலும் வாழ வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். தீவிரவாதத்தை அவர் வேறாக இனங்காட்டி இருக்கிறார். போர் குற்றவாளிகள் தண்டிக்குப்படும் வகையில் ஐநா அவர்களை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும்.. சிறீலங்கா அரசு தமிழ் மக்களோடு அரசியல் இணக்கப்பாட்டிற்கு வரவும் இந்திய அரசு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை வரவேற்கத்தக்க அம்சங்கள். இவற்றின் பால் நாமும் எமது அரசியல் சக்திகளும் புலம்பெயர் மக்களும் ஒருங்கிணைந்து பயணிப்பது நன்று.

இருந்தாலும் ஜெயலலிதா இந்த அறிவுக்களை திமுகவோடும் சோனியாவோடும் அரசியல் செய்ய பாவிக்கமாட்டார் என்பதில் எந்த நியாயமும் இல்லை. நிச்சயம் பாவிப்பார். அந்த வகையில் தனக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரசியல் அனுகூலம் கிடைக்கும் என்றால் அவர் இப்ப போல அப்பவும் சொல்வாரா என்பது கேள்விக்குரிய ஒன்று. அப்படி மாறா மட்டார் என்று நம்பிக் கொண்டிருப்பதிலும்.. அவரை அந்த நிலைக்குள் வர முடியாதபடிக்கு தமிழக மற்றும் ஏனைய தமிழ் தலைமைகள் அவருடனான அரசியல் மற்றும் பொருளியல் நெருகத்தை அதிகரிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள்.. பிரபாகரன்.. ராஜீவ் காந்தி.. இந்திய ஒருமைப்பாடு இவை தொடர்பான ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் அவரின் நாட்டு சட்டதிட்டதிற்கு அமைவாக இருக்கலாம் என்று கொண்டாலும்.. அவர் இந்த அறிக்கையில் நிறைய அடக்கி வாசித்திருக்கிறார். வன்னி போரில் ஐநா சுமத்திய அளவுக்கு.. விடுதலைப் புலிகள் மீது அதிக குற்றங்களை அவர் சுமத்தவில்லை. அந்த வகையில் அவரிடம் தமிழ் மக்களின் துயரின் பால் ஓர் உண்மையான அக்கறை பிறந்திருக்கிறது என்பதாக நாம் நம்பக் கூடியதாக இருந்தாலும் அதை முழுமையாக நம்பும் படி இல்லை. ஏனெனில்.. மீண்டும் இவரும் கருணாநிதி போன்று சகோதர யுத்தம் பற்றி பேசி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் உபயோகித்த இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழ தனி அரசு என்ற பதத்தை இங்கு வெட்டி விட்டுள்ளார். அதற்கு நீங்கள் இணைத்துள்ள வீடியோ சாட்சி. ஆக இந்த அறிக்கையில் உள்ள அனுகூலங்களை பற்றிக் கொண்டு நாமும் செயற்படும் அதேவேளை ஜெயலலிதாவை அணுகி அவரின் சில தவறான எண்ணப்பாடுகளை விலக்கும் வகையில் விளக்கங்களை அளிக்கவும் அதேவேளை அவரின் பரிந்துரைகளை நாமும் ஏற்று ஒரு நல்லிணக்க சூழலில் செயற்படும் போது அது நிச்சயம் இந்திய மத்திய ஆளும் அரசிற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் நெருக்கடிகளை வழங்குவதோடு.. புலிகளை முற்றாக அழித்ததன் பின் பலன் பற்றி சிங்களமும்.. உலகமும் சிந்திக்க முனைவதோடு தமிழர்களுக்கு எதையாவது கொடுத்து சரிக்கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர்களை இட்டு வரச் செய்யும். அதுவே ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தாலும் சந்தோசமே.

மற்றும்படி நாம் எவர் தொடர்பிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதோடு எமக்கான தனி வழிகளிலும் சமாந்திரமாக பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எமது நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அம்சங்கள்.. சீமான் அண்ணனின் எழுச்சி.. வை கோ அண்ணனின் தேர்தல் புறக்கணிப்பு போன்ற காரணிகளும் எமக்கு அவசியம். அவற்றின் விளைவுகளும் இதில் இருக்கின்றன. எனவே எமக்கான பிரத்தியேக வழிகளில் நாம் முன்னெடுக்கும் முனைப்புக்களோடு இவற்றையும் இணைத்துக் கொள்ளக் கூடியவற்றில் இணைத்துக் கொண்டு சமாந்திரமாக பயணிக்கும் போதே ஏமாற்றங்களை தவிர்த்து பெற வேண்டியதைப் பெறலாம்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்..! அதை நாம் நல்ல வழியில் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் காவு கொண்ட உயிர்களுக்கு அதனை சமர்ப்பிக்க வேண்டியதே எமது கடமை..! உணர்ச்சி வசப்படுவதும்.. அரசியல் ஜால்ரா அடிப்பதும் அல்ல.. எமது இனத்தின் விடிவுக்கு அவசியமானவை.

Edited by nedukkalapoovan

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புக்கள் ஜெயலலிதா அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லுறவைப் பேண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபைத்தீர்மானம்.. வரவேற்கத்தக்கதொரு நடவடிக்கை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வரின் தெளிவான அதே சமயம் விரைவான செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள்..! :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதை செய்தால் அவரை ஈழத்தமிழர் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதடை கொண'டு வருவதால் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படப்; போவதில்லை. அங்குள்ள தமிழர்கள் இப்பொழுது என்ன தேனும் பாலுமா சாப்பிட்டுக்கொண்'டு இருக்கிறார்கள்.

புலவர்..

இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம், இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளது; தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே.. அதாவது ஐநா நிபுணர் அறிக்கைக்கு இது மேலும் வலுச்சேர்க்கிறது. ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு, அதுவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாட்டின் அங்கம் இத்தகைய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது தமிழர் வாழ்வில் நிச்சயம் ஒரு முன்னேற்றப் படிக்கல்தானே..! :rolleyes:

பொருளாதாரத்தடை என்பது ஒரு குறைந்தபட்ச நடவடிக்கை.. ஆனால் அது சொல்லும் செய்திதான் முக்கியம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, வரவேற்கின்றேன், தொடர்ந்தும் ஒற்றுமையாக அதரவாக செயல் ஆற்றவும்.

TN seeks economic sanctions

Wednesday, 08 June 2011 13:49

Tamil Nadu Assembly today adopted a unanimous resolution seeking imposition of economic sanctions against Sri Lanka by India on issues concerning Tamils in the island nation, including alleged human rights violations.

The resolution moved by Chief Minister Jayalalithaa also wanted India to press the United Nations to declare as “war criminals” those who committed alleged crimes during the conflict in Sri Lanka.

Ms. Jayalalithaa said only economic sanctions would “rein in” Sri Lanka, which she said, “did not heed the global opinion when it came to the Tamils issue”.

“If India and other countries impose sanctions, Sri Lanka has to listen to what we say”, she said replying to the debate on the resolution.

She said there were allegations about Sri Lanka committing human rights violations and preventing humanitarian aids from reaching the suffering Tamils, the issues which prompted her to move the resolution.

The Chief Minister said Tamils had been struggling against being treated as “second class citizens in their own country” even after Sri Lanka got independence from the British.

She, however, said terrorism had crept in the name of Tamil Eelam which had even resulted in fratricide.

She recalled that after the assassination of Rajiv Gandhi in 1991 on Tamil soil, the sympathy here towards LTTE had turned into an anger against them.

Ms. Jayalalithaa said it was on her insistence that the Centre had first banned LTTE in India in 1992.

She also recalled that it was her government in 2002 which passed a resolution in the assembly demanding the arrest and extradition of slain LTTE leader V Prabhakaran in connection with Rajiv Gandhi’s assassination.

Taking a dig at her party’s main rival the DMK, she said that it failed to do anything for the welfare of Sri Lankan Tamils and took potshots at party president M Karunanidhi for organising a fast as Chief Minister demanding ceasefire after having “breakfast and calling it off later in the day”.

She alleged that he had betrayed the Tamils by announcing that a ceasefire was on which made scores of people to come out from the bunkers but they were killed in aerial bombings.

Ms. Jayalalithaa said she did not intend to level charges against DMK but insisted that it was “selfish nature and helplessness of the previous DMK regime” which resulted in the death of Tamils. PTI

http://www.dailymirror.lk/news/11818-tn-assembly-seeks-economic-sanctions.html

http://www.hindustantimes.com/india-news/chennai/Eco-sanctions-against-Lanka-demanded/Article1-707080.aspx

http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=372369&catid=36

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2087239.ece

http://news.outlookindia.com/GenericErrorPage.htm?aspxerrorpath=/item.aspx

தமிழக முதல்வராக ஜெயலலிதா வந்துவுடன் தொடக்கம் தொடர்ச்சியாக பல அழுத்தங்களை கொடுத்து வருகிறார் ... நன்றிகள் ... இவை தொடரப்பட வேண்டும்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"இதை காலம்கடந்து உணர்ந்த தி மு க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா மிகவும் சக்திவாய்ந்த அதே நேரத்தில் சொன்னதை செய்யக்கூடிய அரசியல்வாதி , விரைவான செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நன்றிகள். சட்டசபைக்கு வாழ்த்துக்கள், இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.

முதலமைச்சுக்கு பல எதிர்ப்புக்கள் இருந்தும் ( சோ போன்றவர்கள்? ) அவர் இதை செய்ய முனைந்துள்ளார்:

"Political observers in Chennai say that while an anti-Eezham Tamil faction of her advisors tries to dissuade her from intervening in ‘foreign affairs’ there are others who believe Tamils in the island could still be made into Sri Lankans, try to make her committed only to the war crimes investigation but not for Eezham Tamil independence." http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34041

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிசில் இருந்து தி.மு.க வை தனிமைப்படுத்த ஜெ நடத்தும் மிகபெரிய கூத்து இது...........இதுவே மத்திய அரசுக்கு தி.மு.க 10 ம் திகதி ஆதரவை வாபஸ் பெற இருக்கிறது ஜெ அறிக்கை விடுவார் மத்திய அரசுக்கு நாங்கள் நிபந்தனை இல்;லாத ஆதரவை கொடுப்பம் எண்டு......2014 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசை எதிர்த்து அரசியல் நடத்தபோவதில்லை ஆக மொத்ததில் பணங்கள் கோடி கோடியாக கைமாறும் போதும் சோ போன்ற ஆலோசகர்கள் இருக்கும் போதும்....மத்திய மந்திரி பதவிகள் தேடிவரும் போதும் இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாம் காணாமல் போய்விடும்..சோ அம்மா காங்கிரஸ் அரசை தன் வழிக்கு கொண்டுவர ஆடும் நாடகம் காட்சி 1 இது.

ஆனாலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்ற பட்ட இந்த தீhமானத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பலராலும் ஏமாற்றப்பட்ட இனம்.அதால சந்தேகத்துடன் கூடிய நன்றிகள். :unsure:

தமிழக முதல்வருக்கு புலம் பெயர் தமிழர்கள் மகத்தான பாராட்டு

தென்னாசியாவில் சிறீலங்கா நடாத்திய இனவாத ஆட்சிக்கு சாவுமணி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது..

இத்தனைக்கும் காரணமான தமிழக முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு எமது மகத்தான வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கும் எமது மகத்தான வாழ்த்துக்கள்.

இந்தப் பிரேணையை ஏகமனதாக ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழக சட்டசபையின் இந்தத் தீர்மானத்தை ஒரு மாநில அரசின் தீர்மானமென இனியும் கருதிவிட முடியாது. மத்திய அரசைவிட ஐ.நாவும், ஐரோப்பிய ஒன்றியமும், உலக சமுதாயமும், அமெரிக்காவும் இந்தத் தீர்மானத்தைப்பார்க்கும். ஐ.நா செயலர் பான் கி மூன் துணிச்சலான நடவடிக்கை எடுக்க இதுவே போதுமான முடிவாகும்.

ஏழு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி இனி ஐ.நா அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. அதைவிட முக்கியம் ஏழு கோடி தமிழருக்கு எதிராக சீனாவும், ரஸ்யாவும் நிற்கப்போகிறதா என்பதும் அடுத்த கேள்வியாகும். உலகத் தமிழினம் வரலாற்றில் முதல் தடவையாக ஒன்றுபட்டுள்ளது. அந்த ஒற்றுமைக்கு தலைமைதாங்கியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கரங்களை அனைவரும் பலப்படுத்த வேண்டும்.

வாழ்க தமிழக முதல்வர்..!

வாழ்க தமிழக மக்கள்..!!

http://www.alaikal.com/news/?p=73234

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், on 08 June 2011 - 10:06 AM, said:

பொருளாதடை கொண'டு வருவதால் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படப்; போவதில்லை. அங்குள்ள தமிழர்கள் இப்பொழுது என்ன தேனும் பாலுமா சாப்பிட்டுக்கொண்'டு இருக்கிறார்கள்.

புலவர்..

இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம், இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளது; தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே.. அதாவது ஐநா நிபுணர் அறிக்கைக்கு இது மேலும் வலுச்சேர்க்கிறது. ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு, அதுவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாட்டின் அங்கம் இத்தகைய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது தமிழர் வாழ்வில் நிச்சயம் ஒரு முன்னேற்றப் படிக்கல்தானே..!

பொருளாதாரத்தடை என்பது ஒரு குறைந்தபட்ச நடவடிக்கை.. ஆனால் அது சொல்லும் செய்திதான் முக்கியம்..!

நான் எழுதியதை நீங்கள் தப்பாக விளங்கிக் கொண்டீர்கள் போலிருக்கிறது.பொருளாதாரத் தடை தமிழர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.ஏனெனில் சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைக்க முகம் கொடுத்தவர்கள் தமிழர்கள்.ஆகவே இந்தத் தடை சிங்களவர்களையே கடுமையாகப் பாதிக்கும். அதை விட 6கோடி தமிழர்களின் உணர்வுகள் முதல் முறையாக உலகுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.இந்தத் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அது கொண்டு வரப்பட்ட காலமும் முக்கியமான காலகட்டமாகும்.ஜெயலலிதா ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அவரை இந்த விடயத்தில் உறுதியாக நிற்க தமிழுணர்வாளர்கள் தூண்ட வேண்டும்.எப்படியும் சோ இந்ததூம் போன்றவர்கள் அவரின்நிலைப்பாட்டை மாற்ற சதிவேலைகளில் ஈடுபடுவார்கள்.

தீர்மானம் பாராடுக்குரியது, அதனை நடைமுறைப் படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்... :)

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்

... சொல்லுக்கும், செயலுக்கும் ... யாரும் கற்பனை பண்ணி பார்த்திருக்கவில்லை ... தொடர்ச்சியாக ... வாழ்த்த வார்த்தைகள் இல்லை!!!

... நிச்சயமாக தமிழக முதல்வரின் செயற்பாடுகள் ... இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழின விரோத கொள்கையை மாற்றும் ...

மிகவும் வரலாற்றுச்சிறப்பு மிக்க விடயம் மீண்டும் தமிழரின் வாழ்வில் உதயமாகியிருக்கிறது,மதிப்புக்குரிய தமிழர் திலகம் அமரர் எம் ஜி ஆரின் நினைவுகளை அம்மையார் ஞாபகப்படுத்தி விட்டார். நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை

அன்றொரு நாள் நான் எழுதினேன் எம் வானில் மீண்டும் சூரியன் உதயமாகிவிட்டான்.இப்பொழுது கொஞ்சம் மேலெழுந்து ஒளியை வழங்க ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள் வசந்தகால ஒளியை நாம் பெறுவோம் என்பது உறுதியாகிவிட்டது.

post-7765-0-48069800-1307570839_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதை நீங்கள் தப்பாக விளங்கிக் கொண்டீர்கள் போலிருக்கிறது.பொருளாதாரத் தடை தமிழர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.ஏனெனில் சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைக்க முகம் கொடுத்தவர்கள் தமிழர்கள்.ஆகவே இந்தத் தடை சிங்களவர்களையே கடுமையாகப் பாதிக்கும். அதை விட 6கோடி தமிழர்களின் உணர்வுகள் முதல் முறையாக உலகுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.இந்தத் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அது கொண்டு வரப்பட்ட காலமும் முக்கியமான காலகட்டமாகும்.ஜெயலலிதா ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அவரை இந்த விடயத்தில் உறுதியாக நிற்க தமிழுணர்வாளர்கள் தூண்ட வேண்டும்.எப்படியும் சோ இந்ததூம் போன்றவர்கள் அவரின்நிலைப்பாட்டை மாற்ற சதிவேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஹிஹி.. தவறாக விளங்கிவிட்டேன்..! விளக்கத்துக்கு நன்றிகள் புலவர்..! :D

தமிழக அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.தவித்து நிற்கும் ஈழத்தமிழருக்கு ஒரு தளத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த ஆதரவு நிலைப்பாடு தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சிஐஏ விற்கும் ஜெயாக்காவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..........

இந்தியாவை பிளவுபடுத்த அமெரிக்கா விரும்பினால் அதன் முக்கிய காயாக நகர்த்தபட இருப்பவர் ஜெயாக்காவே. தற்போதைய ஐநா போர் விசாரணையை எந்த தளத்திற்கு எடுத்து செல்வது என்பதில் அமெரிக்கா இன்னமும் ஒரு சரியான நிலைபாட்டை எடுக்கவில்லை என்பது அமெரிக்க அதிகரி பிளேக்கின் பேட்டிகளில் காண கூடியதாக இருக்கிறது. இவ்வளவு காலமும் இது ஒரு உள்வீட்டு விவகாரமாகவே இருந்தது.....

ஆதாவது அமெரிக்காவிற்கான தெற்காசிய பிரதிநதிகளின் கருத்துக்களுக்கு உள்பட்டே அமெரிக்க முடிவுகள் எடுக்கபட்டுகொண்டிருந்தன....... தற்போது அவர்களுடைய தாக்கம் இருந்தாலும் விடயம் அவர்களையும் தாண்டி அமெரிக்க அதிகரிகளை சென்றடைய கூடியதாக பிரகாசமாகிவிட்டதனால்....... இனி நல்ல பாம்பு வேடம் இட வேண்டிய கட்டாயம் பலருக்கும் உண்டு.

தமிழர்களை கொலைசெய்ததில் ஐநாவிற்கும் பெரும் பங்குண்டு......

ருவாண்டா படுகொலையை கிட்டதட்ட ஐநா ஆதாரித்தது போன்றே ஐநாவின் அன்றைய நடவடிக்கைகள் இருந்ததென்பதை பலரும் சுட்டிகாட்டினார்கள் அவ்வாறானதொரு குற்றசாட்டை மறைப்பதற்காவெனிலும் தமிழர் படுகொலைவிவகாரத்தில் குறைந்தபட்சம் ஒரு வழக்கையாவது செய்துவிடலாம் என்பது சில ஐநா அதிகாரிகளின் எண்ணமமக இருக்கலாம். ஆனால் வழக்கென்று வந்துவிட்டால் ஆதாரங்கள் நிருபிக்கபடும் இடத்து தண்டனைகளையும் வழங்க வேண்டி வரலாம் என்பது யாரும் அறிந்ததே.

இதில் கொலைசெய்ததற்காக மெடல் வாங்கிய சிலர் பிடித்துகொடுத்ததிற்கும் மெடல் வாங்க போகிறார்கள் என்பது திண்ணம்.

வழக்கு தொடரபட்டு ஒரு நீதி கிடைக்குமெனில் இதில் முக்கிய பங்கு தனக்கிருப்பதாக் தமிழகத்தில் ஈழத்திற்கு சார்பாக அடிக்கும் காற்றை தனது பக்கம் சாய்க்கலாம் என்பது ஜெயாக்காவிற்கு கிடைத்த நல்ல யோசனையாக இருக்கலாம்.

தவிர றோ திட்டமிட்டு செய்த கொலையால் இந்தியா மீது தமிழர்கள் வைத்திருக்கும் அவமதிப்பை கழுவுவதற்கு ஜெயாக்காவின் தற்போதைய நகர்வுகளின் ஆலோசகர்களாக றோவும் இருக்கலாம்.

எது எப்படியோ சட்டரீதியாக எமது பாதைகளுக்கு அவர்கள் செப்பன் இடுகிறார்கள்............. எமது பயணத்தை துரிதமாக்க வேண்டியது ஈழதமிழர்களாகி நாங்களே. நகராது அதே இடத்தில் நின்றுகொண்டு அவரையும் இவரையும் புகழுவதாலோ தூற்றுவதாலோ ஆவதற்கு ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்துக்கு நன்றியம்மா

இதன் நன்மைதீமைகளுக்கு அப்பால் மறைப்பதற்காக அல்லது அழிந்துவிடுவதற்காக முயற்சி செய்து மெல்ல மெல்ல எதிரிக்கு சார்பாக தெளிவாகிவரும் ஒரு குளத்துக்குள் பெரும் பாறாங்கல்லைத்தூக்கி போட்டுள்ளார் ஜெயலலிதா அவர்கள். இதன் தாக்கம் பல பக்கத்தாலும் பெரும் எடுப்பில் எம்மை வெளியில் கொண்டுவரும். அவர் உணர்கிறாரோ இல்லையே தமிழக மக்களின் பெறுமதி மிகமிக அதிகம். உதாரணமாக பிரான்சின் மக்கள் தொகையும் தமிழகத்தின் மக்கள் தொகையும் சமனானவை.

அடுத்து ஜெலலிதாவின் கனவு இந்தியாவை ஆளுவது. அதற்கு இந்திரா காங்கிரசை அவர் அழிக்கணும் அல்லது பின்னுக்கு தள்ளணும். அதற்கும் இந்த தீர்மானம் வழிசமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்ககு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் ஜெயை சந்திக்க இருக்கிறாராம்...அநேகமாக அவருக்கு எச்சரிக்கை விடபடலாம்....இல்லது மத'திய அரசில் பதவிகள் தரபடலாம் என கூறபடலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.