Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ட மீன் தொட்டி..... பாகம் 2.. புதிய முயற்சி.. பக்கம் 6 இல் இருந்து.....

Featured Replies

  • தொடங்கியவர்

கிட்டடியில் வீடு மாறினேன்.. வீடு மாறின அலுப்பு முடிந்தவுடன், எனது மீன் தொட்டியை மாத்துவது எண்டு முடிவு..

அதுக்கான நேரமும் வந்து விட்டது..

புதிய தொட்டி ஊர் ஸ்டைலில் சொந்த தயாரிப்பு.. ஏனனில் ரெடிமேட் முழு கண்ணடி தொட்டியின் விலை £3000க்கு அதிகம்..

அளவு -

நீளம் - 8 அடி,

உயரம் - 3 அடி,

அகலம் - 2 அடி,

1,500 லீட்டர்...

வெப்பவலய மழைக்காட்டு வடிவமைப்பு... சாப்பட்டு அறையில் தயாரிப்பதாக முடிவு.. முழு கட்டுமானமும் பதிவு செய்யப்படும்..

(மனுசிக்கு விசியத்தின் தீவிரம் தெரியாது.. சும்மா ஒரு மீன் தொட்டியாக்கும் எண்டு நினைச்சு கொண்டிருக்கிறா.... :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: )

Edited by Panangkai

  • Replies 159
  • Views 19.9k
  • Created
  • Last Reply

செய்து முடிந்ததும், செயல்முறையையும் படங்களையும் இணையுங்கள்.

(மனுசிக்கு விசியத்தின் தீவிரம் தெரியாது.. சும்மா ஒரு மீன் தொட்டியாக்கும் எண்டு நினைச்சு கொண்டிருக்கிறா.... :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: )

:lol::D :D

  • தொடங்கியவர்

நிலகட்டுமானம்.. நிலப்பலகைகளை அகற்றிவிட்டு 2 அடி ஆழத்துக்கு கொங்கிரீட் போட்டேன்..

406710_3803807367967_1470827183_n.jpg

பனங்காய்,

பாரை, திரளி, ஒட்டி போன்ற மீன் வகைகளைத்தானே வளர்க்கப் போகிறீர்கள். சாப்பாட்டு அறை சமையலறைக்குப் பக்கத்தில் இருந்தால் வசதியாக இருக்கும். :D

சில காலத்துகு முன்னர் நானும் 'தொழில்நுட்ப' நீதியாக ஒரு சிறிய மீன்தொட்டியை அமைக்கத் திட்டம் தீட்டினேன். இதற்காகவே automaton கருவியொன்றை இயக்குவது பற்றி ஓரளவு அறியத் தொடங்கினேன் (இது தற்போது வேறொரு பாவனைக்கு உதவப் போகிறது). இதன் மூலம் நீரின் வெப்பநிலை, வெளிச்சம், சுத்திகரிப்பு போன்றவற்றை இலகுவாக்கலாம் என்று திட்டம் போட்டேன் :wub: . ஆனால் மீன் வளர்ப்பு பற்றி ஒன்றுமே தெரியாது. நேரம், பணநெருக்கடி ஆகிய காரணங்களால் கைவிட்டேன்.

  • தொடங்கியவர்

மேசை கட்டுமானம்..

7 நியுட்டன் அத்திவார தர கல்லுகள் உபயோகித்தேன்..

பலகையையும் கல்லையும் திரவ ஆணியின் மூலமும் 4 இஞ்ச் ஸ்குரூ மூலமும் இணைக்கப்பட்டுள்ளது..

409766_3803809288015_1848773723_n.jpg

531526_3803811528071_1064040881_n.jpg

208963_3803813248114_732564093_n.jpg

526519_3803815568172_2010302507_n.jpg

Edited by Panangkai

  • தொடங்கியவர்

செய்து முடிந்ததும், செயல்முறையையும் படங்களையும் இணையுங்கள்.

கட்டாயம்.. பீத்துவது எமது குலப்பழக்கம்... :lol:

சில காலத்துகு முன்னர் நானும் 'தொழில்நுட்ப' நீதியாக ஒரு சிறிய மீன்தொட்டியை அமைக்கத் திட்டம் தீட்டினேன். இதற்காகவே automaton கருவியொன்றை இயக்குவது பற்றி ஓரளவு அறியத் தொடங்கினேன் (இது தற்போது வேறொரு பாவனைக்கு உதவப் போகிறது). இதன் மூலம் நீரின் வெப்பநிலை, வெளிச்சம், சுத்திகரிப்பு போன்றவற்றை இலகுவாக்கலாம் என்று திட்டம் போட்டேன் :wub: . ஆனால் மீன் வளர்ப்பு பற்றி ஒன்றுமே தெரியாது. நேரம், பணநெருக்கடி ஆகிய காரணங்களால் கைவிட்டேன்.

நானும் கணனி மூலம்தான் மீன் தொட்டியின் சீதோஷணத்தை கைய்யாளுவேன்.. ஏதவது பிரச்சினை எண்டால்.. போனுக்கு செய்தி வரும், என்ன பிரச்சினை எண்டு.. இது இலகு..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

Superb

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நண்பர் வீட்டில் மீன் தொட்டி பார்த்தேன். பெரிய தடாகம் போலவும் அழகாகவும் உள்ளது. ஒவ்வொரு மீனின் விலையும் சுமார் 500 பவுன்கள் வரை..! மலேசியாவில் இருந்து தருவித்ததாகச் சொன்னார். அவரும் வெப்ப வலைய மழைக்காட்டு சீதோஸ்ன நிலைக்குரிய மீன்களே வளர்க்கிறார். பராமரிப்புச் செல்வும் அதிகம். அவற்றின் உணவு விசேடமானவை. புழுக்களும் பூச்சிகளுமாம்..!

மீன் வளர்ப்பு ஒரு அழகுக் கலை என்றாலும்... பொழுதுபோக்கு அம்சத்திற்கு இவ்வளவு செலவு செய்வது சிறந்ததா என்பது என் மனதில் கேள்வியாகவே தொக்கு நின்றது. ஆனால் ஓசியில் மீன் தொட்டியின் மீன்களின் அழகை ரசித்தேன்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

எனக்கும் வீட்டில் மீன், நாய் வளர்க்க விருப்பம் ஆனால் மகளுக்கும், கனவருக்கும் விருப்பமில்லை.பெரும்பான்மை வாக்குகள் விருப்பமில்லை என்பதால் கைவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய்,

பாரை, திரளி, ஒட்டி போன்ற மீன் வகைகளைத்தானே வளர்க்கப் போகிறீர்கள். சாப்பாட்டு அறை சமையலறைக்குப் பக்கத்தில் இருந்தால் வசதியாக இருக்கும். :D

:D :D

இணையவன் அண்ணாக்கும் காமடி வருமோ? :rolleyes:

வெட்டிக்கொத்துறவருக்கும் காமடி வரும் னு சொல்லிட்டிங்களே அண்ணா. :)

நீங்கள் இப்படி எழுதி பார்க்க வேண்டும் என்று ஆசை.. :):icon_idea:

நாங்களெல்லாம் போத்தில்லையும்,பொலித்தீன் பாக்கிலைலையும் மீன் வளத்த ஆக்கள்.

கிணத்துக்குள்ளை இருக்கும் பேத்தை மீன்கள்,ஜப்பான்,மொறிஸ் மீனை எல்லாம் வளத்தனாங்களாக்கும்... :D:lol:

பனங்காய், 7 N அத்திவாரக் கல் சரி, அதுக்கு மேலே போட்டிருக்கும் பலகை OSB (இங்கு அப்படித்தான் சொல்வார்கள்) வகையைச் சார்ந்தது. ஈரப் பதனைத் தாங்கும். ஆனால் காலப் போக்கில் வளையக் கூடியது. 1.5 கன மீற்றர் நீரின் பழு - பலகை ஒரு சதுர மீற்றருக்குத் தாங்கக் கூடிய நியூட்டன் அளவு ஆகியவற்றை எவ்வாறு கணக்கிட்டீர்கள் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

பலகைக்கும் மீன் தொட்டியின் கீழ் அமுக்கசக்திக்கும் தொடர்பில்லை.. Osb board, கூஷன் போல தான் இங்கு உப்யோகிக்கப்படுகிறது.. முதல் அடுக்கு particle board, இரண்டாம் அடுக்கு OSB மூண்டாம் அடுக்கு hard wood slabs, நாலம் அடுக்கு OSB. ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் 2mm திரவ ஆணீ பூச்சு..

இதுக்கு மேல் 1" ரெஜிபோம்..

மீன் தொட்டியின் அடிப்பாகம் 2" மரீன் பிளை பலகை அதுக்கு மேல் 5mm தொக்கையில் 2x 600GSM பைபெர்கிளாஸ்...

வளைய சான்ஸ் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

நிலகட்டுமானம்.. நிலப்பலகைகளை அகற்றிவிட்டு 2 அடி ஆழத்துக்கு கொங்கிரீட் போட்டேன்..

406710_3803807367967_1470827183_n.jpg

படத்தைப் பார்த்ததும், ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன், பனங்காய்!

மின்சார சுவிச்சைப் பார்த்தும், அவுஸ்திரேலியன் மாதிரிக் கிடந்தது!

பின்பு உத்துப் பார்த்ததில், அது லண்டன் பக்கம் போலக் கிடக்கு!

அப்பாடா, என்று ஒரு ஆறுதல்! :D

எங்கள் வீட்டிலும் மீனைத் தவிர மிச்சமெல்லாம் உண்டு!

உங்கட பூனை, மீன்களைப் பார்த்து வீணி வடிச்சே, அதற்கு நா வறண்டு போகப் போகின்றது!

தொடர்ந்து செய் முறையை, இணையுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு DIY. எனக்கும் DIY கல் செய்வது பிடிக்கும்.அண்மையில் கொஞ்சம் paving செய்தேன். நேரப் பற்றாக்குறை பல விடயங்களை பின்னுக்குத் தள்ளி விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நில, மேசை கட்டுமானம் பற்றிய வழிமுறை நன்றாய் இருக்கு. மீன்களை பார்க்கும் ஆவலில்...... காத்திருக்கிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பெட்டி கட்டுதல்? ஒவ்வொரு இஞ்சிக்கும் ஒரு ஸ்குரு, 5 இஞ்சி ஸ்குரு, பலகைகள் திரவ ஆணி மூலமும் இணைக்கப்பட்டுள்ளது..

319442_3810329291011_1131829816_n.jpg

185889_3810332811099_126336342_n.jpg

553482_3810333971128_377300447_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில் வீடு மாறினேன்.. வீடு மாறின அலுப்பு முடிந்தவுடன், எனது மீன் தொட்டியை மாத்துவது எண்டு முடிவு..

அதுக்கான நேரமும் வந்து விட்டது..

புதிய தொட்டி ஊர் ஸ்டைலில் சொந்த தயாரிப்பு.. ஏனனில் ரெடிமேட் முழு கண்ணடி தொட்டியின் விலை £3000க்கு அதிகம்..

அளவு -

நீளம் - 8 அடி,

உயரம் - 3 அடி,

அகலம் - 2 அடி,

1,500 லீட்டர்...

வெப்பவலய மழைக்காட்டு வடிவமைப்பு... சாப்பட்டு அறையில் தயாரிப்பதாக முடிவு.. முழு கட்டுமானமும் பதிவு செய்யப்படும்..

(மனுசிக்கு விசியத்தின் தீவிரம் தெரியாது.. சும்மா ஒரு மீன் தொட்டியாக்கும் எண்டு நினைச்சு கொண்டிருக்கிறா.... :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: )

சாப்பாட்டு அறைக்குள்... ஒரு குளத்தையே.. கட்டுகின்றீர்கள் பனங்காய்.

வாசிக்க நல்லாயிருக்கு..... :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

கட்டடம் அல்லது பாலம் கட்டும்போது அவை வளர்ந்து வருவதைப் பார்க்க ஒரு மகிழ்ச்சி வரும்..! அதுபோலத்தான் இதுவும்..!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பனங்காய்.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் கனடாப்பக்கம் வந்தால் சொல்லுங்கள் உங்களைக் கொண்டு என்வீட்டிலும் மீன் தொட்டி கட்டலாம் என்று எண்ணுகின்றேன் :)

  • தொடங்கியவர்

நில, மேசை கட்டுமானம் பற்றிய வழிமுறை நன்றாய் இருக்கு. மீன்களை பார்க்கும் ஆவலில்...... காத்திருக்கிறேன்.

நன்றி.

மீன்கள் சேர்க்கத்தொடங்கி விட்டேன்..

மாட்டு இதயம், ரத்தப்புழு, உள்ளி, கீரை, சிப்பிசதை, றால் எல்லத்தையும் ஒண்டாய் அரைத்து கொழுக்க வைக்கும் முயற்ச்சியில் நடக்கிறது..

Superb

ta mate..

எனக்கும் வீட்டில் மீன், நாய் வளர்க்க விருப்பம் ஆனால் மகளுக்கும், கனவருக்கும் விருப்பமில்லை.பெரும்பான்மை வாக்குகள் விருப்பமில்லை என்பதால் கைவிட்டேன்.

எங்கள் வீட்டிலும் கிட்டத்தட்ட அப்படித்தான்.. பேச்சுவார்த்தை சரிப்பட்டுவரவில்லை.. இறுத்தியில் பயங்கரவாதம் முலமாகவே ஒப்புதல் பெறமுடிந்தது..

நல்ல ஒரு DIY. எனக்கும் DIY கல் செய்வது பிடிக்கும்.அண்மையில் கொஞ்சம் paving செய்தேன். நேரப் பற்றாக்குறை பல விடயங்களை பின்னுக்குத் தள்ளி விடுகின்றது.

நான் எப்படியும் பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்கி விடுவதுண்டு,, இல்லாட்டி மனிசருக்கு விசர் புடிச்சு விடும்..

கட்டடம் அல்லது பாலம் கட்டும்போது அவை வளர்ந்து வருவதைப் பார்க்க ஒரு மகிழ்ச்சி வரும்..! அதுபோலத்தான் இதுவும்..!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பனங்காய்.

உண்மை.. ஒரு எண்ணம் உருவம் பெறுவதை பார்க்க ஆர்வமாக இருக்கும்..

சாப்பாட்டு அறைக்குள்... ஒரு குளத்தையே.. கட்டுகின்றீர்கள் பனங்காய்.

வாசிக்க நல்லாயிருக்கு..... :icon_idea::)

இதை சொல்லுகிறீர்கள்.. இங்கிலாந்தில் ஒருவர் வைத்திருக்கும் தொட்டியின் அளவு 50,000 லீட்டர்,, கூகிளின் பாருங்கள்..

கட்டுமானத் தொழில் நுட்பத்தை அறிய ஆவலாய் உள்ளது. கட்டி முடிந்த பின்தான் சில சந்தேகங்கள் தீரும். கட்டம் கட்டமாகப் படங்களை இணையுங்கள்.

  • தொடங்கியவர்

கட்டுமானத் தொழில் நுட்பத்தை அறிய ஆவலாய் உள்ளது. கட்டி முடிந்த பின்தான் சில சந்தேகங்கள் தீரும். கட்டம் கட்டமாகப் படங்களை இணையுங்கள்.

நிச்சயமாக..

  • தொடங்கியவர்

கட்டுமானம்.. எல்லா மூலையும் 3x2 இஞ்சி பலகையால் பலப்படுத்தப்பட்டுள்ளது..

484593_3827610683035_602597485_n.jpg

553590_3827612483080_394804428_n.jpg

376241_3832003192845_720865995_n.jpg

527215_3832005672907_2027685596_n.jpg

486580_3832007992965_1108825524_n.jpg

527185_3832009993015_1992899818_n.jpg

கிட்டத்தட்ட ஆயிரம் ஸ்குருக்கள்...

  • தொடங்கியவர்

பனங்காய் கனடாப்பக்கம் வந்தால் சொல்லுங்கள் உங்களைக் கொண்டு என்வீட்டிலும் மீன் தொட்டி கட்டலாம் என்று எண்ணுகின்றேன் :)

டிக்கெட்டும்.. சிலவுக்கு கொஞ்சம் அஞ்சு பத்து தந்தால்.. நாளைக்கே வரத்தயார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.