Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் கிராமமான காத்தான்குடியில் கட்டப் பஞ்சாயத்தா அல்லது தலிபான் தர்பாரா? ஆபாசப் படம் பார்த்த இரு பெண்களைத் தண்டிக்க முயன்றபோது பொலிஸாரால் காப்பாற்றப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-06-22 17:19:01]

பார்க்கக்கூடாத திரைப்படமொன்றைப் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இரு மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொதுமக்களுடனான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள மேற்படி இரு மாணவிகளும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நேற்று முன்தினம் பிற்பகல் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு பிரதேசத்துக்கு பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற இரு மாணவிகள், அங்கு ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விரு மாணவிகளையும் பின்தொடர்ந்துள்ள இளைஞர்கள் சிலர், 'நீங்கள் ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்தீர்கள் தானே?' என்று கூறி அவ்விரு மாணவிகளையும் பலவந்தமாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றி, காத்தான்குடியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்த மேலும் சிலர், அம்மாணவிகளிடம் நீங்கள் ஆபாசத் திரைப்படம் பார்த்தீர்கள் தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் நீங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களைத் தாக்கியும் உள்ளனர்.

அதன்பின் காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலகக் கட்டிடத்துக்கு மேற்படி இரு மாணவிகளும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுமார் 350பேர் கொண்ட பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி சம்மேளனத்தின் பிரதிநிதியொருவரிடம் அவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டு அம்மாணவிகள் செய்த தவறுக்காக அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டுள்ளனர்.

மேலும், குறித்த மாணவியர் இவ்வாறானதொரு தவறை புரிந்துள்ளார்கள் என்றும் அனைவரும் வந்து அவர்களின் முகத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் அனைவருக்கும் மேற்படி நபர்களினால் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், பொதுமக்களை அங்கிருந்து அகற்றுமாறு பள்ளிவாசல் சம்மேளனத்திடம் கோரியுள்ளனர். இருப்பினும் அதனை தங்களால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் அதிகாரத்தில் அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறியுள்ளது.

இதனையடுத்து பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் உடன் நடவடிக்கை எடுத்த நான், பிரதேசத்தை அண்டிய அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் சுமார் 150 பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தேன்.

லத்திகளுடன் அவ்விடத்துக்கு பொலிஸார் குவிந்ததைப் பார்த்த பிரதேசவாசிகள் தங்களைத் தாக்கவே பொலிஸார் வந்துள்ளனர் என்று எண்ணி அவ்விடத்திலிருந்து ஓடியதுடன் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதலையும் நடத்தினர்.

இருப்பினும் இச்சம்பவத்தால் பொலிஸார் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரதேசத்தின் நிலைமையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து குறித்த பள்ளிவாசல் சம்மேளனத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவிகளின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45296&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி சுத்த முஸ்லீம் பிரதேசம்.

அங்கு ஆபாச படத்தை போட்டுக்காட்டியவர் முஸ்லீம், அதனைப் பார்த்தது முஸ்லீம் பெண்கள்.

அந்த ஆபாச பிரதேசத்தில், நுளைந்து பார்க்க சிங்கள பொலிஸீக்கு என்ன தைரியம்.

முஸ்லீம் மக்களே, இனிமேல் அப்படி சிங்களவன் வந்தால்... ஆதிவாசிகள் போல் கல்லால் எறியாதீர்கள்.

நவீன ஆயுதங்களை பாவியுங்கள். புத்தி வந்த... காத்தான்குடி முஸ்லிம்கள் போல்... மற்ற முஸ்லிம்களும் ஓரணியில் பிரள வேண்டும்.

காரைநகரிலை பாக்காட்டி ஆமி அடிக்கிறான்.

காத்தாங்குடியிலை பாத்தால் பள்ளிவாசல்காறன் அடிக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரிலை பாக்காட்டி ஆமி அடிக்கிறான்.

காத்தாங்குடியிலை பாத்தால் பள்ளிவாசல்காறன் அடிக்கிறான்.

ஈழத்தில் காரைநகர், காரைதீவு என்று இரு தமிழ்ப் பிரதேசம் இருக்குது.

இது எங்கு நடந்ததது? பாக்காட்டி என்றால்... என்ன? மல்லை.

ஊரில் எங்கட இயக்கங்கள் ஆரம்ப காலங்களில் இதை விட மோசமாக நடந்தாக ஞாபகம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

36,37இயக்கங்களில் எந்தெந்த இயக்கம் என்று ஞாபகம் உள்ளத நிழலி ?

36,37இயக்கங்களில் எந்தெந்த இயக்கம் என்று ஞாபகம் உள்ளத நிழலி ?

எந்த இயக்கம் செய்யாமல் விட்டது ஒன்றை இரண்டை லிஸ்ட் இல் இருந்து நீக்குவதற்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த இயக்கம் செய்யாமல் விட்டது ஒன்றை இரண்டை லிஸ்ட் இல் இருந்து நீக்குவதற்கு?

இயக்கங்கள் அழிந்ததற்கு இதுவும் காரணமா?

விடுதலை புலிகளைத் தவிர மற்ற பல இயக்கங்கள் அழிந்ததர்ர்க்கு அவர்களின் மக்கள் அணுகு முறையே மிக முக்கிய காரணமாக இருந்தது.

கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் மிக ஆழமாக பதிந்துவிட்டது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழசிறி, காட்டுமிராண்டிக் கூட்டம்போல செயற்படும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கடைப்பிடிக்கும் காத்தான்குடிப் பிரதேச காட்டான்களது செயலை தடுத்து நிறுத்தியது சிங்களக் காவற்துறையோ அன்றேல் இஸரேலியக் காவற்துறையோ அது யாராகவிருந்தாலும் பாராட்டப்படக்கூடிய விடையமே. பாத்தான்குடி எப்போதோ காட்டான்குடியாக மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழசிறி, காட்டுமிராண்டிக் கூட்டம்போல செயற்படும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கடைப்பிடிக்கும் காத்தான்குடிப் பிரதேச காட்டான்களது செயலை தடுத்து நிறுத்தியது சிங்களக் காவற்துறையோ அன்றேல் இஸரேலியக் காவற்துறையோ அது யாராகவிருந்தாலும் பாராட்டப்படக்கூடிய விடையமே. பாத்தான்குடி எப்போதோ காட்டான்குடியாக மாறிவிட்டது.

எழுஞாயிறு,

பாத்தான்குடி என்னும் தமிழ்பிரதேசத்தை ஆக்கிரமித்த முஸ்லீம்கள் அதனை காத்தான்குடியாக மாற்றி முஸ்லீம் பிரதேசமாக்கிய வரலாறு எனக்குத் தெரியாது. அரேபியாவில் இருந்து..... மாடு வெட்ட வந்தவங்களுக்கு, இவ்வளவு கொழுப்பு கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் காரைநகர், காரைதீவு என்று இரு தமிழ்ப் பிரதேசம் இருக்குது.

இது எங்கு நடந்ததது? பாக்காட்டி என்றால்... என்ன? மல்லை.

பாக்காட்டி என்டால் பார்க்கா விட்டால் என்று அர்த்தம் என நினைக்கிறேன்

தலிபான்குடி என்று அழைப்பதே பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் எங்கட இயக்கங்கள் ஆரம்ப காலங்களில் இதை விட மோசமாக நடந்தாக ஞாபகம் :D

அதுக்குத்தான் இயக்கத்துக்குப் பயங்கரவாதிப் பட்டம்..! ஜனநாயகம், சுதந்திரம் பற்றி அறவே தெரியாதவர்கள்..! :rolleyes: அவர்களை அழித்தும் விட்டோம்..! :unsure:

அதேவகையில் இப்போது காத்தான்குடிக்காரரும் பயங்கரவாதிகள்..! :D

ஊரில் எங்கட இயக்கங்கள் ஆரம்ப காலங்களில் இதை விட மோசமாக நடந்தாக ஞாபகம்
இன்று எதிரி திட்டமிட்டே எம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சிதறடிக்கின்றான். இவற்றை தடுப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தற்சமயம் தாயகத்தில் இல்லை என்பது தான் ஒவ்வொரு தமிழனுக்கும் கவலையாக இருக்கிறது.

முஸ்லிம் பிரதேசத்தில் ஆபாசப்படம் பார்க்கப்பட்டதாகச் செய்தியில் கூறப்படவில்லை. அது மட்டக்களப்புப் பிரதேசத்தில் எங்கேயோ ஒரு இடத்தில் பார்த்ததைத்தான் செய்தியாகச் சொல்கிறது. எந்த விடயமும் சட்டபூர்வமாக்கப்பட்டால் அது தவறாகத் தெரியாது. இலங்கையில் அந்த விடயம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாததினால் ஆபாசப்படத்தைப் பார்ப்பது குற்றமே.

இஸ்லாமியர்கள் இதில் கூறப்பட்டது போன்றுதான் தங்கள் மதத்தவரைத் தண்டிக்கின்றார்கள். தவறான விடயத்தையும் அதைச் செய்பவரையும் அம்பலப்படுத்தும்போது குற்றச் செயல்கள் குறைவதற்கும் நிகழாமைக்கும் வாய்ப்புகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில், செவ்வாய்க்கிழமை , காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் பள்ளிப் பெண்கள், தனியார் இணைய மையம் ஒன்றில் ஆபாச படத்தைப்பார்த்ததாகக் கூறி, காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள் வந்தன.

இது குறித்து காவல்துறைக்காகப் பேசவல்ல அதிகாரி ப்ரஷாந்த் ஜெயக்கொடி அவர்களைத் தொடர்பு கொண்டு பிபிசி தமிழோசை கேட்டபோது, அவர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மட்டக்களப்பு காவலர்கள் மீட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், வழக்கு ஒன்று பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களைத் தேடிவருவதாகவும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் நடந்த இச்சம்பவம்குறித்து, காத்தான்குடியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத் துணை அமைச்சருமான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களைத் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தப் பிரச்சினையில்

உண்மையில் பெண்கள் தாக்கப்பட்டார்களா என்பது தனக்குத் தெரியாது, ஆனால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இந்த பெண்களிடம் கேள்விகள் கேட்டதாகவும், இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தாம் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உண்மையில் பெண்கள் அந்த மாதிரி காரியங்களில் ஈடுபட்டாலும், அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது, காவல்துறை அதிகாரிகள்தானே தவிர மற்றவர்கள் அல்ல, தனி நபர்கள் இந்த விஷயத்தில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையாகப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/06/110623_kathankudi.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பிலை நானும் கொஞ்சக்காலம்.......

அதுவும் முஸ்லீம் குடும்பங்களோடை கொஞ்சம் நெருக்கம்......அதோடை அப்ப எனக்கு சின்னவயது மீசையும் அப்பதான் அரும்பினது......

நான் என்ன சொல்ல வாறனெண்டால்..............

அப்ப எனக்கு பத்தொன்பது காஜியார்ரை அவவுக்கு........அதெல்லாம் ஒரு கனாக்காலம்.....தேன் குழலென்ன....வட்டலப்பமென்ன :wub:

அப்ப எனக்கு பத்தொன்பது காஜியார்ரை அவவுக்கு........அதெல்லாம் ஒரு கனாக்காலம்.....தேன் குழலென்ன....வட்டலப்பமென்ன :wub:

ஆ..............................................

...................................................

சாமி அண்ணை!

எப்ப அந்த கனாக்காலம்?

அப்பவோ ......இப்பவோ?

பக்கத்திலை யாரும் இருந்தால் கேட்டு பாருங்கோ கிள்ளொண்டு தருவினமோ எண்டு.

போத்தல்களைத் ஒருக்கால் தள்ளி வைச்சுப் போட்டு படுத்து எழும்பியும் பாருங்கோ

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.